PDA

View Full Version : வெண்பா எழுதுவது எப்படி?



ஷீ-நிசி
12-04-2007, 05:37 AM
வெண்பா எழுத வேண்டும் என்று என் மனதின் ஓரத்தில் ஆசை உள்ளது..
அதன் சூட்சுமமும் ஓரளவிற்கு அறிந்துள்ளேன்..

வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் விளக்கமாக
சொல்லிகொடுங்களேன்...

திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை என்று அறிந்திருக்கிறேன்..

உங்கள் விளக்கங்களும் வெண்பாக்களும் தாருங்கள்..

இணையத்திலிருந்து கீதா என்பவர் எழுதின சில வெண்பாக்கள்
நன்றி கீதா...
http://geeths.info/archives/category/venba-muyarchi/

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.

விளக்கம்:
தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

வெண்பாவின் சூட்சுமம்... நான் அறிந்தவரையில்...

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.

முதல் இரண்டு அடியில்
ஒரே உச்சரிப்பை உடைய வார்த்தைகள் மூன்று இடத்திலும்
அடுத்த இரண்டு அடியின் தொடக்கத்தில்
ஒரே உச்சரிப்பை உடைய இரண்டு வார்த்தைகள் வருகின்றன..

எல்லா வெண்பாக்களையும் நான் ஆராய்ந்த வரையில் இம்முறையிலேயே அமைந்துள்ளன..

ஆனால் இலக்கணப்படி எப்படி எனறு தெரியவில்லை.

வெண்பாவின் வகைகள்..

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
சவலை வெண்பா

வெண்பா முயற்சியில் சூட்சுமம் தெரியாமலே பல வருடங்களுக்கு முன்பாய் எழுதிய ஒன்று...


விழிநீர் இரவெல்லாம் தலையணை நனைக்க
வலியோடு உறங்குகிறேன் நிலவே - சில இரவுகள் மட்டும்
உமிழ்நீர் தலையணை நனைக்க உறங்குகிறேன், உன்
இதழ்கள் அன்றெல்லாம் என்னைக் கண்டு புன்னகைத்திருந்திருக்கும்...

நிச்சயம் ஏகப்பட்ட குறைகள் இதிலே இருக்கும்...

கவிதைகளில் வெண்பா எழுதுவது மிகவும் ரசனையான ஒன்று...

வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் இன்னும் விளக்கமாக
சொல்லிகொடுங்கள் நண்பர்களே!

leomohan
12-04-2007, 06:31 AM
நல்ல பகுதி ஷீ வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்தேன்.

sriram
12-04-2007, 12:55 PM
மா முன் நிரை
விளம் முன் நேர்
காய் முன் நேர்

வர வேண்டும்.
-------------------------------------
இது பூக்கட்டுவது போல. வார்தைகளிக்(சீர்) கட்டுவது.
சங்கிலி பொல பிணைத்து கொண்டு செல்ல வேண்டும்.
-------------------------------------------
சேர்கின்ற நேன் நேர் நேர் =தே மாங் காய்
மாசுகளை நேர் நிரை நேர் =கூ விளங் காய்.

நிலை சீர்= காய் சீர்.(தே மாங் காய்)
வரும் சீர் முதல் அசை =நேர்.

எனவே காய் முன் நேர்
------------------------------------
மாசுகளை நேர் நிரை நேர் =கூ விளங் காய்
தன்னுடனே நேர் நிரை நேர்=கூ விளங் காய்.
நிலை சீர்= காய் சீர்.(கூ மாங் காய்)
வரும் சீர் முதல் அசை =நேர்
எனவே காய் முன் நேர்

---------------------------------
இன்னும் விளக்கமாக கொடுக்க ஆசை. நேரம் கிடைக்கும்போது பதிக்கிறேன்.

பாரதி
12-04-2007, 06:10 PM
அன்பு நண்பரே,
இப்போது உங்களுக்குத் தோன்றியதைப்போல எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெண்பா பற்றி அறிந்து கொள்ளத் தோன்றியது. அப்போது திரட்டிய சில விசயங்களை திஸ்கி மன்றத்தில் பதிவு செய்தேன். அவற்றை இப்போது உங்கள் பார்வைக்காக ஒருங்குறியில் தருகிறேன். பெரிய பதிவு என்பதால் தனித்தனி பதிவுகளாக இடுகிறேன். உங்களுக்கு பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி.

பாரதி
12-04-2007, 06:29 PM
வெண்பா ஓர் அறிமுகம் - பூர்வபீடிகை

புலவர்க்கு வெண்பா புலி என்று ஒருத்தர் கதை அடிச்சாலும் அடிச்சார். வெண்பா என்றால் ஏதோ, யாராலும் திருத்தமான வடிவத்தில் எழுத முடியாத ஒன்றைப் போலவும், இந்தக் காலத்து - அதான், கணினி, இணையம் இன்ன பிற - தேவைகளுக்கு ஈடு கொடுக்க இந்த வடிவத்தால் முடியவே முடியாது என்று அடம் பிடித்தும், அப்படி எழுதினால் யாருக்கும் புரியாது என்றும், அதெல்லாம் வெறும் மாட்டு வாகட சாஸ்திரம் எழுதத்தான் லாயக்கு என்றும் ஒரு பெரிய கும்பலே ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறது.

வெண்பாவைக் கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி, எழுதுபவன் அயோக்கியன், படிப்பவன் முட்டாள் என்று வெண்தாடி வைத்த, வைக்காத பெருங்கவிக்கோக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு முழு தலைமுறைக்கே வெண்பாவைப் பற்றி எதுவும் தெரியாமல் போய்விட்டது.

வெண்பா மிக அழகான, சுருக்கமான வடிவம். நறுக்கென்று சொல்வதற்குத் தோதானது. கட்டுப்பாடு மிகக் குறைவு. நாலு லைன்தான் எழுத வேண்டும் என்று கட்டுப்பாடே கிடையாது. இரண்டடியில் எழுதலாம். (ஒண்ணே முக்காலடி என்பதெல்லாம் சும்மா. ஜோக்கு. இரண்டடி என்பதுதான் technically correct. திருக்குறள் ஒண்ணேமுக்காலடி என்றால், பிறகு நாலடியாரை மூணேமுக்கால் அடியார் என்று அழைக்க வேண்டியிருக்கும்.)

மூன்றடியில் எழுதலாம். நான்கடியா, ஆறா. ஐந்தில்தான் நிறுத்துவேன் என்கிறீர்களா? ம்! தாராளமாக. ஆறு முதல் பன்னிரண்டு அடியில்தான் எனக்கு வரும் என்கிறீர்களா? பேஷ். நன்றாகச் செய்யலாம். இல்லை, அதெல்லாம் போதாது என்றால், பதின்மூன்றில் ஆரம்பித்து, ஆயிரமும் அதற்கு மேலும் அடிகள் கொண்டதாகச் செய்யலாம். ஒரு விஷயம் தெரியுமா? பாரதியின் குயில் பாட்டு முழுக்க முழுக்க வெண்டளைதான். கலிவெண்பா என்றே சொல்லிவிடலாம்.

வெண்பாவில், 'திடீரென்று இன்னிக்கு முடிவெடுத்து நாங்க ரெண்டுபேரும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் போயிட்டு வரப்போறோம்' என்ற செய்தியிலிருந்து எதை வேண்டுமானலும் சொல்ல முடியும். அந்தப் பாட்டைத்தான் பாருங்களேன்:

இன்று திடீரென்(று) எடுத்த முடிவதனால்
ஒன்றாகச் செல்கின்றோம் உள்வெளிக்குள் - கன்றாக
அண்ணா மலைரமணர் ஆசிரமம் போய்வந்து
வெண்பா வடிக்கலாம் வா.

நான் எழுதினதுதான். நண்பனோடு (கல்லா மாவில் வந்தே அதே நண்பனோடு) ரமாணஸ்ரமம் போய்விட்டு வருகிறேன் என்ற சிம்பிள் செய்தி.

பட்டணம் முழுக்க விரவியிருக்கும் பட்டன் பால் கறக்கும் இயந்திரத்தைப் பற்றி ஒன்று:

கனைக்காது, கண்டபடி மேய்ந்தெங்கும் கன்றை
நினைந்தெதையும் சேறு நிறைத்து - வனைக்காது
தொட்டாலே போதுமுங்கள் தூக்குக் குவளையெல்லாம்
பட்டன் கறந்திடும் பால்.

நகரத்தில் குப்பை பொறுக்கியும், ஷு பாலிஷ் போட்டும் திரியும் சின்னப் பையன்களைப் பற்றி (சின்னப் பெண் குழந்தைகள் இப்படித் திரிந்தால் கொதித்தெழுவார்கள். ஆம்பளப் பசங்க என்றால் கண்ணெடுத்துப் பார்க்கவும் ஆளிருக்காது.)

குப்பை பொறுக்கும்கை கோணி சுமக்கும்கை
கப்பு கழுவும்கை கைவலிக்க - உப்பிட்ட
வேர்க்கடலை சுண்டல் மிளகுவடை விற்கின்ற
கார்துடைக்கும் பிஞ்சுகளின் கை.

இன்னொரு குட்டிப் பையனைப் பற்றி:
சட்டைத் துணியால் தரைபெருக்கிக் கால்தொட்டும்
எட்டிப்போ என்பதுவே ஏச்சு.

வெண்பாவால் பளிச்சென்று சொல்ல முடியாத ஒன்று கிடையவே கிடையாது. முத்தொள்ளாயிரம் (அதற்கு முன்னும்?) தொடங்கி, வெண்பாவின் வீச்சைப் பார்க்கலாம். நளவெண்பாவில் நளினமாக நடப்பதைப் பார்க்கலாம். காளமேகத்தின் வாயில் புகுந்து விளையாடியிருப்பதைக் காணலாம்.

இன்றும், சரியானபடி உபயோகிக்க ஆள் கிடைத்தால் தகத்தகாயமாகச் சுடர அது காத்திருக்கிறது. இன்றைய இளைய தலைமுறை அது ஏதோ டைனாசர் என்று நினைத்துக் கொள்கிறது. கவிதைக்கு வரைவிலக்கணம் கிடையாது என்று சொன்னால், ஒரு புத்தகப் புழு, 'ஆமாமாம். மரபுக் கவிதையா எழுதுகிறோம்? அதுதான் செத்துப் போய்விட்டதே, புதுக்கவிதைக்கு வரைவிலக்கணம் கிடையாதுதான்' என்று சொல்கிறது. ஏதோ வீரியமிழந்த ஒன்று என இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, இவர்கள் மனத்தில் ஒரு ஒவ்வாமையை விதைத்து, இவர்களை அதன் சுக அனுபவத்திலிருந்து எட்டி நிற்க வைத்திருக்கும் என் தலைமுறையே இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

நகரம் நானூறு என்று நானும் மத்தளராயரும் ஆரம்பித்தோம். நானூறு வெண்பாக்களில் நகரக் காட்சிகளைப் பிடிப்பது என்று திட்டம். முடங்கி
நிற்கிறது. தொடர்வோம். முடிப்போம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். வெண்பாவை எளிய முறையில் அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு யோசனை. நிறைய பேர் சொல்லிவிட்டார்கள்.

டாக்டர் வாஞ்சிநாதன், யாப்பறிஞன் என்று ஒரு வெண்பா வழிகாட்டியே Python உபயோகித்து எழுதினார். வெண்பாவில் எங்கெங்கே தப்பு, எதெது ரைட்டு என்று கம்ப்யூட்டர் சொல்லிவிடும். ஆனாலும் நமக்கென்று ஒரு வழி இருக்கிறதில்லையா? (ஆமாமாம். ஊருக்கெல்லாம் ஒரு வழி. ஒன்றரைக் கண்ணனுக்கு....;-)) அடிப்படையில் ஆரம்பித்து, பகுதி பகுதியாக இந்த தேசிங்குராஜன் குதிரையை வசக்குவோம், வறீங்களா? நேர்- நிரை-நிரை உன்-தலை-யெலாம் நரை என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒன்று. குறைஞ்சபட்சம் பத்து கையாவது 'ஓ' போட்டால்தான் அடுத்த அடி
எடுத்து வைப்பேன் என்று என் குதிரை சொல்கிறது. ஆரம்பிக்கலாம் என்றால் சொல்லுங்கள். லெடஸ் ப்ளே என்று சித்தப்பா கணக்கா கிளம்பி விடுகிறேன். (ராம் தூங்கறாரா, முழிச்சிட்டுருக்கிறாரா பாரு... அட பாருய்யான்னா...அதான், ஆறு தூங்குதா முழிச்சிட்டு இருக்கான்னு பாக்க உபயோகப்படுத்தின அதே கொ. கட்டையைக் கொண்டுதான்....)

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

ஒரு பின்னறிவிப்பு: ரொம்ப மொழிச் சுத்தம் பார்க்கிறவர்கள் தயவுசெய்து இந்தக் கட்டுரைத் தொடரை (அதாவது அப்படி ஒன்று ஆரம்பித்தால்) படிக்க வேண்டாம். இது டேக்கிடீசி பாலிசி (ஜீவன் சுரக்சாவைத் தந்தவர்களிடமிருந்து இன்னொரு பாலிசி??)ஆசாமிகளுக்கும், இந்தக் காலப்பசங்களுக்கும். எம் பாசை எப்படி வேணுமானாலும் உருமாறும். கபர்தார். மற்றவர்களுக்கு. இது நம்ம ஏரியா. பாடப் புத்தகத்தில் படித்த யாப்பிலக்கணத்தை விட்டுவிடுவோம். நமக்கென்று ஒரு கோண வழி இருக்கில்லையா, அந்த வழியா போவோம்.

(அன்பு நண்பர்களே....
நான் பார்த்த ஒரு சில தளங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு வலைப்பூவின் சில பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன். இதன் முடிவில் நீங்கள்தான் எனக்கு உதவப் போகிறீர்கள்...!)

பாரதி
12-04-2007, 06:48 PM
வெண்பா ஓர் அறிமுகம் - 'ஆறாம்திணை' கட்டுரை

பார்க் பெஞ்சில் புதுக்கவிஞர் புதுக்கூத்தன் உட்கார்ந்திருந்தார். மரபை உடைத்துக் கொண்டு மளமளவெனப் பெருகும் கவிதையைத் துண்டில்
முடியலாமா இல்லையெனில் தூக்கி ஜோல்னாவில் போட்டுக் கொள்ளலாமா என்று தீர்மானிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த போது வினாயக மூர்த்தி வந்தார். பேசும்போதே வெண்பாவாகக் கொட்டும்.

இவரும் புதுக்கவிதைப் புதுக்கூத்தனும் நண்பர்கள். நெடுநாள் நண்பர்கள் என்பதைக் கூட மரபுவழி நண்பர்கள் என்பார் வினாயக மூர்த்தி. புதுக்கூத்தனுக்கோ மரபு என்பதே கெட்ட வார்த்தை. மரபு, சிந்தனை ஓட்டத்தைத் தடுக்கிறது என்பது அவருடைய பிடிவாதமான வாதம். பக்கவாதம். (ஒரு பக்கமான வாதம் என்றேன்.)வி. மூர்த்தி மரபுதான் இயற்கையான வழி. அதை மீறுபவர்கள் இயற்கையை மீறுகிறார்கள் என்பார்.

ரெண்டு லைன் முன்னே சொன்ன மாதிரி, சாதாரணமாகப் பேசுவதற்கே வெண்பாதான் இவருக்கு. ரொம்ப நாட்களாக புதுக்கூத்தனைத் தேடிக்கொண்டிருந்தார். இன்று அவரைப் பார்த்ததும் தலைகால் புரியவில்லை.

"வசமா மாட்டிக்கிட்டியா? இன்னிக்கு என்னத் தாண்டிப் போயிருவியான்னு பாத்துர்ரேன்" என்று சந்தோஷமாகக் குரல் எழுப்பினார். புதுக்கவிஞர் யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, "என்னா, உள்ற கவிதை ஓடிக்கிட்டுருக்கா?" என்றவாறு ஒரு வெண்பாவை விட்டெறிந்தார்.

யோசித்துக் கொண்டு யுகமுழுதும் நின்றாலும்
வாசிக்க ஓர்வார்த்தை வந்திடுமோ - நீசிக்க
வேண்டிக் கிடந்தேன் விழுந்தாய்நான் இன்றுனக்குத்
தாண்ட முடியாத் தடை.

பு. கூத்தனுக்குப் புர்ரென்று வந்தது. "ம்க்கும். குன்னக்குடி வைத்யநாதனாட்டம் பேசறதையெல்லாம் பாடிப்புட்டா கவிதையாக்கும். நல்லா நறுக்குன்னு சொல்ல முடியுமாடா ஒங்க மரபுல?"

பார்த்தார் விமூ. இது அவருடைய தன்மானம் பற்றிய சமாச்சாரம். "நறுக்கிப்புடுவேன் நறுக்கி" என்றார்.

நறுக்கென்று சொல்லணுமா? நாலுவரிப் பாட்டில்
நறுக்காத வார்த்தை நடக்கும் - நறுக்கில்
நறுக்காக நான்சொல்லும் பாட்டுன்வால் ஒட்ட
நறுக்கும்பார் நல்லா நறுக்கு.

நல்லா நறுக்குன்னு சொல்ல முடியுமா என்று கேட்ட பு. கூத்தனின் கேள்வியைக் கடைசியில் வைத்து வெண்பாவை முடித்தார். "அதென்ன நறுக்கில் நறுக்காக" என்றார் புதுசு. "நறுக்குன்னா, ஓலை நறுக்கு. அதுக்கு அடுத்த நறுக்கு நறுக்கா எழுதற நறுக்கு" என்றார் விமூ. புதுசு உற்சாகமானார்.

"அதான கேட்டேன். ஓலை நறுக்கில எழுதற காலம் போயிடுச்சுனாலும் ஒங்களுக்கு இன்னும் அந்தப் புத்தி போகல பாரு. இப்ப ஏதுடா ஓலை?"

"காகிதத் துணுக்கக் கூட நறுக்குன்னு சொல்லலாம். அவ்வளவு ஏன்? கம்ப்யூட்டர்ல file -ன்னு சொல்லுவாங்க பாரு, அதக்கூட நறுக்குன்னு சொல்லலாம். பல நறுக்குகள் ஒண்ணா சேந்திருக்கிற directory-யைக் கோப்புன்னு சொல்லலாம். இப்பல்லாம் fileஐத்தானே கோப்புன்னு சொல்றாங்கன்னு பாக்குறியா? எனக்கென்னவோ directoryக்குத்தான் அது பொருத்தமாயிருக்கும்னு படுது"

"நீ வுட்றது ரீல் இல்ல. கேபிள் ட்ரம்." என்றார் புதுசு. "இன்னும் வெண்பாவக் கட்டிட்டு ஏண்டா அழறீங்க? காலம் எவ்வளவோ மாறியாச்சு. கம்ப்யூட்டர் உலக வலைப் பின்னல் காலம் இது. எனக்கு கிடச்சது ஜக்கார்டு என்று சி. மணி எழுதியிருக்கார். படிச்சிருக்கியா?ரெண்டாயிரம் வருஷமா ஒரு வடிவத்தை வச்சு ஜல்லியடிச்சிட்டிருக்கீங்க. இன்னிக்கு சூழல் எவ்வளவோ மாறியிருக்கு. அதைச் சொல்ல முடியுமாடா ஒங்க மரபுல?"

காலங்கள் மாறிக் கணிப்பொறிகள் வந்தாலும்
மூலந்தான் மாறிடுமோ முற்றிலுமே - காலத்தால்
பேசுவது மாறியதா பெண்தேடல் மாறியதா
ஏசுவது மாறியதா இன்று.

எத்தனைக் காலம் மாறினாலும் மனுசப் பயலுக்குப் பேச வேணும். அந்த மரபு மாறாது. பெண் தேட வேணும். அந்த மரபும் மாறாது. அட கெடக்குதுன்னா நாலு வார்த்த ஏசாம இருக்க முடியுதா? அந்த மரபாச்சும் மாறிச்சான்னா அதுவும் .இல்ல. என்னிக்கு வரைக்கும் இதெல்லாம் மாறாதோ அன்னிக்கு வரைக்கும் மரபும் வடிவமும் மாற வேண்டியதில்ல.

புதுக்கூத்தன் இதற்கெல்லாம் மசிகிற ஆளில்லை. "மரபுல சொல்ல முடியல்லன்னு தானே பெரியவங்கள்ளாம் வடிவத்த விட்டாங்க? இப்போ நம்ம ஞானக்கூத்தன் இருக்காரே அவர் சொல்றார். "எனக்கும் தமிழ்தான் மூச்சு. ஆனால் பிறர்மேல் அதை விடமாட்டேன்"-னு. இந்த மாதிரி சின்னதா சொல்ல மரபு லாயக்கில்லைன்றது என் அபிப்பிராயம்."

"தமிழென்றன் மூச்செனினும் சற்றும் பிறன்மேல்
உமிழாத நாகரீகம் உண்டு." என்றார் விமூ.

"மூச்சு, விடறதா இல்ல உமிழறதா?' ஒரு point பிடித்துவிட்ட உற்சாகம் புதுசுக்கு.

"அப்படியும் சொல்லலாம். சொல்லப்போனா உமிழ்தல் என்ற வார்த்தை அருவறுப்பை நினைவு படுத்துவதால் இதுவும் பொருத்தம்தான். நீங்க சொன்னா புது முயற்சி. நான் சொன்னா இலக்கணத்துக்கான எதுகைத் தவிப்பா?" இது வினாயக மூர்த்தி.

"கடசி ரெண்டு வார்த்தைய வீணடிச்சிட்ட".

"வார்த்தை இல்லடா மண்டு. சீர்."

"ஏதோ ஒண்ணு. அப்ப நீ ஞானக்கூத்தன விடப் பெரியாளுன்ற?"

"சத்தியமா இல்லை. மரபுலயும் சொல்ல முடியும்னு சொல்றன். அவ்வளவுதான்."

கையிலிருந்த விண்நாயகன் பத்திரிக்கையைப் புரட்டினார் புதுசு. இடைப்பாடி ஜெ. மாணிக்ஸ் எழுதி அந்தப் பத்திரிக்கை பரிசளித்திருந்த ஒரு கவிதையைப் படித்தார்.

உன்
பாதக் கொலுசைக்
கழற்றிவிடு
இல்லாவிட்டால்
நீ நடக்கும்போது
தவறித் தவறி விழுகிறது
என்
மனசு..

"இப்ப இத வெண்பால சொல்லணுன்ற. அவ்வளவுதானே"

"அவ்ளோதான்"

உன்நடையின் கிண்கிணுப்பில் உள்ளம் தவறுவதால்
சொன்னேன் கொலுசணிந்து துள்ளி நடக்காதே
இன்றே அதனை எடு.

"அதுசரி. எப்போவும் நாலு லைன் சொல்லுவ. மூணோட நிறுத்திட்ட? அப்பறம் ஒரு கோடு போட்டு வருமே - அத்தயும் காணும்?"

"வெண்பாவை ரெண்டு அடில ஆரம்பிச்சு எத்தனை அடி வேணும்னாலும் எழுதலாம். ஒவ்வொரு அடியளவுக்கும் ஒரு பேர் உண்டு. அதாக்கும் இப்ப நான் சொன்னது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. அப்பறம் கோடு போட்டு எழுதறத்துக்குப் பேரு தனிச்சொல். அது ஒண்ணாவது ரெண்டாவது அடிக்கு எதுகையா இருக்கும். ஒனக்கெல்லாம் தமிழெங்கே விளங்கப் போவுது? எதுகைனா rhyme இல்ல rhyme அது. அப்படித் தனிச்சொல் ரெண்டாவது அடில வரணும். வராமயும் இருக்கலாம்.. வந்தா நேரிசை வெண்பா. வராட்டி இன்னிசை வெண்பா."

"அடப்போடா. அந்த எழவு வந்தாக்க கவிதையின் புனிதமே கெட்டுப்போயிடும்னு எவ்வளவு கவனமா கையாண்டுக்கிட்டிருக்கோம். ரைமாம் ரைமு"

"தம்பி, ஒண்ணு சொல்றன் கேட்டுக்க. எதுகையும் மோனையும் இயல்பா வருவது. கடைத்தெருவுக்குப் போய்ப்பாரு. காய்கறி விக்கிறவன் கூட
ஒரு தாள லயத்தோடத்தான் கத்துவான். தாளக் கணக்குப் பண்ணிப் பாத்தியானா அவன் கூவுற ரெண்டு லைனும் காலப் பிரமாணத்துல ஒண்ணாத்தான் இருக்கும். இல்லன்னா மொதல் வரிக்கு ரெண்டாம் வரி பாதியளவா இருக்கும். எவ்வேர் சில்ல்வேர் பாத்ரம் சாமய்ங்-னு விக்கிறவன் கூவும்போது கவனி. எவ்வேஎர்-னு அளபெடுப்பான்."
"
இத்தப் பார்ரா டைனாசர். அள்ளபெடையாமே. அது என்ன extinct பிராணி?" கேலியாக அளபெடையில் புதுவிதமான அளபெடுத்தார் புதுசு.

"அளபெடை இன்னும் ஜீவிச்சுக்கிட்டுத்தான் இருக்கு. இத்தப் பாக்க ஜுராசிக் பார்க் போக வேணாம். 'ரொம்ப நீளம்' என்பதைக் கதை எழுதறவங்க எப்படி எழுதறாங்க? நீஈஈஈளம் அப்படின்னுதானே? அளபெடைன்றது அதுதான். அப்போல்லாம் நீஇளம் என்று எழுதினாங்க. இப்ப இப்புடி. எழுதற விதம்தான் மாறியிருக்கு. அளபெடை அப்படியேதான் இருக்கு. பாத்ரக்காரனுக்கு வா. எவர்சில்வர் ஒருபாதி கூவல். பாத்திரம் சாமான் மறுபாதி. எவர்சில்வர் நாலு மாத்திரை. பாத்திரம் சாமான் எட்டு மாத்திரை. முன்னத விடப் பின்னது நீளமாயிருக்கறதுனாலதான் கொஞ்சம் நீட்டி முழக்கி 'எவ்வேர் சில்ல்வேர்' - ஆறு மாத்திர - கொஞ்சம் தட்டிக் கொட்டி 'பாத்ரம் சாமய்ங்' - ஆறு மாத்திர."

"மாத்திரைன்னா?"

"ம்ம்ம் க்ரோஸின். மெட்டாஸின். You are my sin" அலுத்துக் கொண்ட வெண்பா விமூ தொடர்ந்தார். "அது ஓரெழுத்து ஒலிக்கிற கால அளவுடா. கண் சிமிட்ற நேரம். கை சொடுக்கற நேரம்."

"அப்போ கடத் தெருவுல கூவறவங்கல்லாம் கர்நாடக சங்கீதக் கடல்னு சொல்ற"

"அது இசை உணர்வுடா. இயல்பா ஒவ்வொரு மனுசனுக்கும் உள்ள இருப்பது. அவன் கணக்குப் போட்டு சொல்றதில்ல. சொல்லிப் பாத்தா நல்லா இருக்கான்னு மட்டும்தான் பாக்கறான். கணக்குப் போட்டுக் காட்டுறது சும்மா proofக்குதான். அது போகட்டும். நீ என்ன சொன்ன? கடத் தெருவுல கூவறவங்கல்லாம் கர்நாடக சங்கீதக் கடல். ஒன்ன அறியாம மூணு எடத்துல மோனை விழுந்திருக்கு. 'க'வுல ஆரம்பிக்கிற வார்த்தையா தேர்ந்தெடுத்தா பேசினே? எப்புடி வந்தது? அதைத்தான் சொல்றேன். மரபுன்றது இயற்கையானது. அதை வரவிடாம கவனமா பாத்துப் பாத்து ஒதுக்கறீங்க பாரு அதுதான் இயற்கைக்கு மாறானது."

"அதாவது மரபுக் கவிதை எழுதறவனெல்லாம் காய்கறிச் சந்தையிலே கூவுறவன்னு ஒத்துக்கற."

"இல்லை. கடைவீதியிலே கூவுறவனே தாளக் கணக்குப் பிசகாம சொல்றான்னா, கவிதை எழுதறவன் எவ்வளவு எச்சரிக்கையா இருக்கணும் பாத்துக்கோன்னு சொல்றேன்."

விமூ தொடர்ந்தார். "புதுக் கவிதை தப்புன்னு சொல்ல வரலே. மரபுக் கவிதையில் கவிதையே இல்லேன்னு சொல்றீங்க பாரு, அதத்தான் தப்புன்னு சொல்றேன். நிறுத்திப் படிக்க வேண்டிய இடங்களை வரியை ஒடச்சுக் காட்றீங்க புதுக் கவிதைல. அதையே புரிஞ்சுக்காம எழுதிக் குவிக்கிற கவிஞர் பெருமக்கள் கவனத்துக்கு இதைச் சொல்றேன். ஒங்க பிதாமகர் ஞானக்கூத்தனையே எடுத்துப்போம். வகுப்புக்கு வரும் எலும்புக் கூடுன்னு ஒண்ணு எழுதியிருக்கார்.

மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்
பார்த்திருக்க மாட்டீர்கள்
மன்னார்சாமி
ஆணியிலே அதைப்பொருத்து பயப்படாமல் - ன்னு. ஒடிச்சு ஒடிச்சுப் போட்டிருப்பார்.

இதையே:

மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்
பார்த்திருக்க மாட்டீர்கள் மன்னார் சாமி
ஆணியிலே அதைப்பொருத்து பயப்ப டாமல்
ஒருவர்பின் ஒருவராகப் பார்க்க வேண்டும்
ஏணியைப்போல் இருந்திருப்பான் ஆற டிக்குக்
குறைவில்லை இதுகபாலம் மார்புக் கூடு
போணிசெய்த பெருங்கைகள் கைகால் மூட்டு
பூரான்போல் முதுகெலும்பு சிரிக்கும் பற்கள்

இப்படி எழுதினா எண்சீர் விருத்தம். கொஞ்சம் பயமுறுத்தறாப் போல சொன்னா எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஒவ்வொரு அடியி
லும் கடைசி ரெண்டு சீர் தேமா தேமா இல்லாட்டி புளிமா தேமான்னு எண்சீர்விருத்த இலக்கணம் முழுக்கப் பயிலுகிறது. எல்லா அடிகளிலும்
எதுகை தப்பாம இருக்கிறது. மரபுன்றது இவ்வளவுதாண்டா. பயப்படாத."

"அப்ப நானும் வெண்பா எழுதலான்ற."

"தாராளமா. நானிருக்கேன். இல்லாட்டி forumhum.com/tlit - ன்ற வலைமனைக்குப் போ. அங்கே yAppuilakkaNam - scratch padன்னு ஒரு சரவைப் பலகை இஇருக்கு. வெண்பாவைப் போல ஒலிக்கிறா மாதிரி எதுனாச்சும் ஜூட் காட்டினன்னா, ஆளுக்கு ஒரு ஃபீடிங் பாட்டிலக் கையில எடுத்துக்கிட்டு ஒன்னத் தொரத்தோ தொரத்துன்னு தொரத்தி ஒன்ன வெண்பா எழுத வச்சிட்டுத்தான் மறு காரியம் பாக்குறதுன்னு சில பெருசுங்க காத்துக்கிட்டு இருக்கும்.."

"இன்னொண்ணு. வெண்பான்றது மரபு வடிவங்கள்ள height of excellence. நீ வெண்பாதான் எழுதணுன்றது இல்ல. விருத்தம், சிந்து இப்படி எவ்வளவோ இருக்கு. forumhubல பாத்தியானா marabupaa -
miscellaneous categories, Asiriyappa அப்படின்னு பல இழைகள் இருக்கு. நெறய பேர் எழுதறாங்க. பாத்து, படிச்சு பழகிக்கிட்டேன்னா எல்லாம் சுலபம்தான். ஒண்ணு. மனுசன் பேசறது மூச்சுவிடறா மாதிரின்னா மரபுப்பா எழுதறது ப்ராணாயாமம் பண்ற மாதிரி. மூச்சை சீராவும், கால அளவோடும் விடற கலை."

"பாக்கலாம்" எழுந்து கொண்டார் புதுக்கூத்தன். "எங்கடா என் செருப்பு?" அலறினார். பக்கத்தில் கழற்றி விட்டு விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்த போது எவனோ லவட்டிக் கொண்டு போய்விட்டான்.

"செருப்புக்கும் உண்டே திருட்டு" என்று வெண்பா ஈற்றடியைத் தூக்கிப்போட்டார் வினாயக மூர்த்தி.

"அறுப்புக்கும் உண்டே லிமிட்டு" என்று பதிலடி தந்தார் புதுக் கவிதை.

"ஒன்ன அறியாம நீயே ஓர் ஈற்றடி சொல்லிட்ட பாரு. அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி." என்று சிரித்தார் வெண்பா வினாயக மூர்த்தி.

பாரதி
12-04-2007, 06:57 PM
வெண்பா ஓர் அறிமுகம் - பகுதி 1 -ஆசார வாசல்
---------------------------------------------
எங்கள் ஊரில் சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்று ஒருவர் இருந்தார். கணிதத்தில் எம். ஏ. முடித்து, ஹோமியோபதிமருத்துவராக வாழ்க்கை
நடத்தி, கிருஷ்ண பக்தி ஒன்றே வாழ்வாக இருந்தவர். நங்கநல்லூரில் உத்தர குருவாயூரப்பன் கோவில் என்று ஒன்று ஏற்பட்டதே அவரால்தான்.அவருடைய பெயரால், உத்தர குருவாயூரப்பன் கோவிலில் ஒரு மண்டபம் இருக்கிறது.

நான் படித்துக் கொண்டிருந்த காலம் அது. நங்கநல்லூர் அப்போது ரொம்பவும் சின்ன ஊர். இத்தனைக் கோவில்கள் அப்போது கிடையாது.
குருவாயூரப்பன் கோவிலே குருத்தும் விடாத கனவாகத்தான் இருந்தது. ஏரிக்குள் ஒரு கிரவுண்ட் நிலத்தை வைத்துக் கொண்டு, கோவில் எழுப்பத் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாற்பது வெட்டிக்கவிஞனுகள் நங்கநல்லூரில் இருந்தோம். அந்தச் சமயத்தில், இலக்கிய வட்டம் என்று ஒன்று தொடங்கி, மாதாமாதம் கவியரங்குகள் நடத்தி, பெரிய பெரிய கவிஞர்கள் எல்லாம் வந்திருந்து தலைமை தாங்கி நடத்திக் கொடுத்து... எல்லாம் எங்களுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தன. புலமைப்பித்தன், சுரதா, கொத்தமங்கலம் சுப்பு எல்லாம் தலைமை தாங்கியிருக்கிறார்கள்.

கவிப்பேரரசர் எங்கள் கூட நின்று கவிதை படித்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில், யாப்பில் கொஞ்சம் வேலை காட்டுவேன் என்பதால் எனக்கு ஒரு பீடம் இருந்தது. 'புலவர்' என்றுதான் கூப்பிடுவார்கள். நெருக்கமான நண்பன் என்றால் 'டேய் புளூரே' என்பான். மிகக் கடினமான வகை என்று கருதப்படும் சித்திரகவியும் எழுதியிருந்தேன் அப்போது.

ஒரு நாள் என்னைக் கூப்பிட்டனுப்பியிருந்தார் சாஸ்திரிகள். 'என்னடா, கவிதையெல்லாம் எழுதுவாயாமே?'

'ஆமாம் மாமா.'

'அதில்லடா. வெண்பாவெல்லாம் எழுதறன்னு சொன்னா. நிஜமா?'

'எழுதுவேன். கொஞ்சம் கொஞ்சம்.'

'எப்படி? பாதிப் பாதியா?' சிரித்தார். 'சரி. ஒண்ணு பண்ணு. நீ ஃப்ரீயா இருக்கும் போதெல்லாம்இங்க வா. எனக்குத் தமிழ்ல யாப்பு கத்துக் குடு. நான் பதிலுக்கு உனக்கு சம்ஸ்கிருதம் கத்துக் குடுக்கிறேன்.'

ஏற்றுக் கொண்டேன். நான் அவரிடம் சம்ஸ்கிருதம் படித்து ஒண்ணும் கிழிக்கவில்லை. நன்றாகத்தான் சொல்லிக் கொடுத்தார். எனக்கு அப்போது இருந்த தமிழ் வெறி வேறெந்த மொழியையும் மதிக்காமல் இருந்தது. ஆங்கிலம் ஒன்றைத் தவிர. கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன். நல்ல சந்தர்ப்பம் போனது. முதல் நாள் யாப்பு வகுப்பு நடத்தினேன். அசை, சீர், தளை என்றெல்லாம் சொன்னேன். அவர் மஹா பண்டிதர். சின்னப்பையன் என்று நினைக்காமல் கவனமாகக் கேட்டுக் கொண்டார். அப்போது எழுபதைத் தாண்டியிருந்தது அவருக்கு. அச்சத்தோடுதான் அவரிடம்
பேசினேன்.

நேர், நிரை என்றால் என்ன என்பதைச் சொல்லி,
நேர்நேர் தேமா, நிரைநேர் புளிமா என்று தொடர்ந்து,
நேர்நேர்நேர்நேர் தேமாந்தண்பூ,
நிரைநேர்நேர்நேர் புளிமாந்தண்பூ,
நேர்நேர்நேர்நிரை தேமாந்தண்நிழல்,
நிரைநிரைநிரைநிரை கருவிளநறுநிழல்

என்றெல்லாம் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டார்.கடைசியாக ஒன்று கேட்டார்.

'எல்லாம் சரி. அதென்ன நேர்நேர் தேமாங்கற? நான் தோமாங்கறேனே! தப்பா? நேர்நேர் தேமா, நிரைநேர் கமலா, நேர்நிரைநேர்நேர் பங்க
ஜவல்லி, நிரைநிரைநேர்நேர் அபீதகுஜாம்பாள்.... என்ன தப்பு?' சிரிக்கிறார்.

விக்கித்துப் போனது. எவ்வளவு தூரம் யோசிக்காமல் நெட்டுருப் போட்டிருக்கிறோம் என்பது உறைத்தது. சின்னசங்கரன் கதையில் ஆம்ரோதனாசாரியார் என்றொரு பாத்திரம். 'திருவாய் மொழிப் பிரபந்தம் முழுவதையும் பாராமல் குட்டியுருவாய்ச் சொல்லக் கூடியவர்' என்ற பெரிய தகுதி உண்டு அவருக்கு. தொல்காப்பியம் முத்திருளு கவுண்டனிடம் மாட்டிக்கொண்டு முழியாய் முழிப்பார். அந்த மாதிரி ஆயிப் போச்சே நம்ம நிலைமை என்றுவிழித்தேன்.

'இல்லடா, தேமா, புளிமா அப்படிங்கறீயே, அதுக்கெல்லாம் என்ன significance? அப்படித்தான் சொல்லியாகணுமா, அதுக்கு ஏதானும் காரணம் இருக்கா, மாத்திச் சொன்னா கெட்டுப் போகுமா?'
கேள்வியைக் கொஞ்சம் எளிமைப்படுத்தினார்.

ஆமா, இல்ல? (எல்லே, சிரிக்காதீருயா... ஆமா. கமா.இல்ல.) இன்று அவரை மனத்தில் இருத்தி நமஸ்கரிக்கிறேன். அன்று அப்படிக் கேட்டிராவிட்டால், யோசித்திருக்கவே போவதில்லை. நன்றாக ஒப்பிக்கக் கூடிய மாணவனுக்கும் கிராமபோனுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டான் பாரதி. கிராமபோனாய்ப் போயிருக்க வேண்டியவனை அந்தக் கேள்விகள்தாம் திசை திருப்பின.

அடிப்படைகளைக் கொஞ்சம் பார்க்கலாமா?

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

(கட்டுரைக்கு வந்த விமர்சனப் பதிவுகள் இதோ: இவையும் சுவாரஸ்யம் என்பதால் இத்துடன் இணைக்கிறேன்.)
கண்டிப்பாய்த் தொடங்குங்கள் ஹரிகிருஷ்ணன். சந்தோஷமான விஷயம். தேவையானதும் கூட. பத்துபேர் ஓ போட்டால்தான் தொடங்குவேன் என்று பிடிவாதம் பிடித்தால் வெவ்வேறு பெயர்களில் புதிதாய் மின்னஞ்சல் திறந்து ஓ போடவேண்டியிருக்கும்.)

இன்றே தொடங்கும் இலக்கணம் பின்பயனாய்
நன்றே எழுதுவேன்வெண் பா

சும்மா ஒரு முயற்சி ஹரிகிருஷ்ணன். முயற்சியிலேயே மரியாதைக்குறைவாய் தொடங்கும் என்று கட்டளையிடுகிறானே என நினைக்காதீர்கள். தொடங்கிடுக என்று எழுதினால் மரியாதை இடிக்காது ஆனால் தளை இடிக்கிறது.

உங்கள் கட்டுரைக்காய் காத்திருக்கும்
பிரசன்னா
------------------------------------------------------
ஏதோ ஒரு பேட்டியில் யாரோ ஒருவர் சொல்லக்கேட்டேன். தமிழில் பிரிக்கமுடியாத ஒரே ஒரு வார்த்தை அதிபட்சம் ஐந்து முதல் ஏழு எ
ழுத்துக்களால் ஆனது என்று. தேமாந்தண்நிழல் அல்லது கருவிளநறுநிழலால் ஆன பிரிக்கமுடியாத வார்த்தை கொண்ட ஒரு கவிதை ஏதாவது சொல்லமுடியுமா? இது உங்கள் கட்டுரைக்கு ஏதாவது தடை ஏற்படுத்துமானால் விட்டுவிடவும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

Quote:
'எல்லாம் சரி. அதென்ன நேர்நேர் தேமாங்கற? நான் தோமாங்கறேனே! தப்பா? நேர்நேர் தேமா, நிரைநேர் கமலா, நேர்நிரைநேர்நேர் பங்க
ஜவல்லி, நிரைநிரைநேர்நேர் அபீதகுஜாம்பாள்.... என்ன தப்பு?' சிரிக்கிறார்.

கிட்டத்தட்ட இதே ரீதியில் நானும் ஒருகேள்வி கேட்டேன், நான் பத்தாவது படிக்கும்போது. அதிகப்பிரசங்கி என்று என் தலையில் கொட்டினார்

என் வகுப்பு ஆசிரியர். அதிகப்பிரசங்கியை அலகிட்டுக்கொண்டும் அழுதுகொண்டும் அமர்ந்தேன் நான்.

பிரசன்னா
--------------------------------------------------------------
திரு ஹரி கிருஷ்ணன்..
ஒரு குறள்.

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்.

இதில் இரண்டாம் சீர் கருவிளங்காய் ஆனால் மூன்றாம் சீர் நிரையசையில் தொடங்கி இருக்கிறது. எப்படி? இதுவும் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அலகிட்ட குறள். பதினைந்து வருடங்கள் முடிந்தும் பதில் கிடைக்கவில்லை. யாரோ ஒரு ஆசிரியர் அது குற்றியலிகரம் என்றதாய் நினைவு. அதற்கு நான் அவரிடம் குற்றியலிகரம் என்றால் மட்டும் ஏன் விதிவிலக்கு? வேறேனும் குறள்கள் அல்லது வெண்பாக்களில் இது போன்ற பயன்பாடு இருக்கிறதா? என்று கேட்ட கேள்விகளால் முதல் கேள்விக்கு பதில் சொன்னதே தவறு என்ற முறையில் முறைத்துவிட்டு போய்விட்டார். அதனால் உங்களிடம் விடுகிறேன் இக்குறளை. குற்றியலிகரம் என்றால் மட்டும் ஏன் ஸ்பெஷல் அந்தஸ்து? விளக்கவும். இப்போது இல்லையெனினும் பின்னெப்போதாவதாவது.

அன்புடன்
பிரசன்னா

பாரதி
12-04-2007, 07:07 PM
வெண்பா ஓர் அறிமுகம் - பகுதி 2

நாதம், ஸ்வரம், நேர்நேர் நிரைநேர்...

தொலைக்காட்சியில் ஒரு பேட்டி. இசை விமரிசகர் சுப்புடுவை எழுத்தாளர் இந்துமதி கேள்வி கேட்கிறார். 'நீங்க அவரோட பாட்டு நன்னால்ல, இவரோட பாட்டு நன்னால்ல என்றெல்லாம் சொல்வது அவ்வளவு சரியாப் படல. எதுலதான் இசை இல்ல?மரத்துலேந்து உதிர்ந்து காத்துல விழற இலையில் கூட இசை இருக்கு' என்றார்.

ஒரு கணம் தயங்கினார். 'நான் ஒரு ரைட்ருங்கறத்துனால இதெல்லாம் எனக்குத் தெரியறதோ என்னமோ' என்று சேர்த்துக் கொண்டார்.

சுப்புடுவின் பதில் என்ன என்று பார்ப்பதில்லை இப்போதைய நோக்கம். அதை விட்டுவிடலாம். அவர்கள் சொன்னதுமாதிரி, உதிர்ந்து விழும் இலையில் இசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதை உணர்வதற்கு 'ரைட்டர்'ஆக இருக்க வேண்டியதில்லை. என்னைப் போல ராங்கர் (wronger) ஆக இருந்தால் கூடப் போதும். 'மரத்திலிருந்து விழும் இலையில் இசையா? யோவ்! எங்கப்பன் எட்டாயிரம் செலவழிச்சு எந்தக் காலத்துலயோ என் காதுல தொண்டி குத்திட்டான்' என்று சிலர் சொல்லலாம். 'ஆமாம். இருக்கு. எனக்குக் கேட்டிருக்கு' என்றும் சிலர் சொல்லலாம். கொஞ்சம் யோசித்தால் ஒன்று விளங்கும். இசை, அந்த இலையில் இல்லை. அதன் அசைவில் இருக்கிறது. காற்றின் உடம்பில் ஆடியாடி, உருண்டு புரண்டு, பக்கவாட்டில் மிதந்து, மேலேறி, கீழிறங்கி இலை பூமியை அடைவதற்குள் ஒரு சின்ன கச்சேரி நடந்து முடிந்துவிடுகிறது. அதாவது, அதன் அசைவில் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு இருக்கிறது. கொஞ்சம் இறுக்கம் தளர்ந்த ஒழுங்கு. கால கதிக்கு ஓரளவு கட்டுப்பட்ட இயக்கம். அங்கே இருக்கிறது சாவி. காலகதிக்குக் கட்டுப்பட்ட ஓர் இயக்கம். அந்த இயக்கத்தைத் தீர்மானிப்பது காற்றின் அப்போதைய வேகம்.

There is sweet music here that softer falls
Than petals from blown roses on the grass,
Or night dews on still waters between walls
Of shadowy granite, in a gleaming pass;
Music that gentlier on the spirit lies,
Than tir'd eyelids on tir'd eyes
என்றான் டென்னிசன். (Lotos Eaters)

களைத்த கண்களின் மேல்
படியும்
கனத்த இமைகளைப் போல்
கவியும் இசை.....
பனிபடர்ந்த புல்வெளியின் மீது உதிர்ந்த ரோஜா இதழ்கள் வீழ்வதிலும், கண்ணிமை கனத்துப் போய், களைத்திருக்கும் கண்களை மெதுவாக, மிக மெதுவாக மூடுவதிலும் இசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கொஞ்சம் யோசித்தால், அங்கெல்லாம் கூட இசை என்பது அந்தந்தப் பொருள்களில் இல்லை; அவற்றின் அசைவில் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

இந்த மென்மையான இயக்கம், இசையின் பல்வேறுபட்ட வடிவங்களில் ஒன்றே ஒன்றுதான். ஆழமான கிணற்றில் பித்தளைக்குடம் விழும்போதும், அமைதியான ஏரிக்குள் தவளை குதிக்கும் போதும், தொடர்ந்து, இரைக்க இரைக்கக் கரை நோக்கி ஓடி வந்த அலைகள், அன்பாக ஒரு முறை வருடியோ, ஆக்ரோஷமாக ஒரு முறை அறைந்து விட்டோ, புறப்பட்ட இடம் நோக்கித் திரும்ப ஓடுகின்ற போதும், கருமேகத்தில் சூல் கொண்டு, கடலுக்குள் நிலை கொண்டு, 'கடல் வண்ணன்! பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே!' என்றதைப் போல் பிறந்த கடலகத்தைக் கலக்கி, அலைகளை ஆகாயம் நோக்கி எழுப்பி, கரையை நோக்கித் தன் கர்ப்பத்தைப் பிளந்து "ஓ" என்ற குரலோடு காற்று தரைமேல் வெடிப்பதும் இசைதான்.

மனிதனின் பல்வேறுபட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது இசை. அந்த இசை வடிவத்தில் மொழி குழையும் போது கவிதை எட்டிப்பார்க்கிறது.
உற்சாகமாகப் பாடுவதற்கும், வெறி கொண்டு ஆடுவதற்கும், மனத்தில் இருக்கும் ரணங்களை எடுத்துச் சொல்வதற்கும், கண்ணீரைப் பங்கு போட்டுக் கொள்ளவும் இசையோடு மொழி சேர்ந்து வருகிறது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாவம். ஒவ்வொரு உணர்வு. ஒவ்வொரு வேகம். ஒவ்வொரு காலப் பிரமாணம்.

இந்த இசைக்கென்று ஒரு மொழி உண்டு. அளவுகோல் உண்டு. ஷட்ஜமம், பஞ்சமம், மத்யமம் (இராம. கி. என் தமிழிசை அறிவீனத்தை மன்னிக்க வேண்டும்) என்றெல்லாம் அளவுகோல்கள். இன்னும் பல நுட்பமான வழிகளால் இசை அளந்தறியப்படுகிறது.
இசை ஸ்வரங்களால் இயங்குகிறது. மொழி, சொற்களால் இயங்குகிறது. சொல் என்பது அடிப்படையில் ஒலிதானே? ஒலியால் உலகத்தைச் சுட்டும் ஒரு குறியீடுதானே மொழி என்பது? இந்த இரண்டும் ஒரு புள்ளியில் குவிய வேண்டும் என்றால், அதற்கு, பொதுவான ஓர் அளவுகோல் தேவைப்படுகிறதல்லவா? இசையின் கனம் என்ன என்றறிந்து, அதற்குள் மொழியைக் குழைக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு சொல்லின் கனபரிமாணத்தையும், ஒலி அளவையும் அளந்து பார்க்க வேண்டியிருக்கிறதல்லவா? (அப்படி ஏதும் அளந்து பார்க்க வேண்டியதில்லாமல், உணர்வு நிலையிலிருந்தே இதைச் செய்ய முடியும். அது வேறு நிலை. அதற்குள் நாம் இப்போது போகவில்லை. ஆனால், அப்படிச் செய்ய முடியும் என்பதையும் மறுக்கவில்லை.)

'தனன னான தனன னான தானா' என்று குண்டு குண்டு கண்களை உருட்டிக் கொண்டு கமலஹாசனுக்குச் சவால் விடும் ஸ்ரீதேவியைப் பார்த்திருக்கிறீர்கள். ஒரு கணம் தயங்குவார் கமல். கொஞ்சம் சங்கடமாக, தொண்டைக்குள் 'தனன னான தனன னான தானா' என்று முணுமுணுத்துக் கொள்வார்.

அதன் பிறகு, 'யுரேகா!' என்ற தொனியில் 'நதியிலாடும் படகு போல கண்கள்' என்று கூவுவார். 'சப்பாஷ்' என்று பூரித்துப் போவார் ஸ்ரீதேவி.

'தனன னான தனன னான தானா' ஒன்றும் அத்தனைக் கடினமான சந்தமில்லை, சங்கடப்படவதற்கு. 'பொடியப் போட்டு பெருத்துப் போன மூக்கு' என்றோ, 'பொகையி லையால் உதுந்து போன பல்லு' என்றோ கூட இந்தச் சந்தத்தை இட்டு நிரப்பலாம்.

இந்த இசையின் நீளத்தை, அது மேலே கீழே துள்ளும் உயரத்தை, வளைந்து நெளிந்து செல்லும் போக்கை, கால அளவைக் கணக்கிட்டுப் பார்க்க மொழிக்கு உண்டான கருவிதான் யாப்பு. அதில் ஓர் அங்கம்தான் நேர் என்பதும் நிரை என்பதும் Basic tools.

'தனன னான தனன னான தானா' என்பதை மொழியில் எப்படி அளப்போம்? 'தனன னான தனன னான தானா'வை மொழியின் கருவியைக் கொண்டு அலகிட்டுப் பாருங்கள். 'நதியி லாடும் படகு போல கண்கள்' என்ற தொடரை மொழியின் கருவியைக் கொண்டு அலகிட்டுப் பாருங்கள்.

Measure them both, with the same tool. ஒரே ஒரு விடைதான் கிடைக்கும். நிரைநேர் நேர்நேர் நிரைநேர் நேர்நேர் நேர்நேர்.

'அண்ணாச்சி, நீங்க சொல்ற தேமா, புளிமா, நிரை சீர் அப்படிங்கற மாதிரியான வார்த்தைங்க ஒரு அட்சரம் கூட தெரியாத என்ன மாதிரி எல்கேஜி பசங்களும் இருக்கோம். அதுலேந்து ஆரம்பிங்கண்ணா...' என்று பிரகாஷ் எழுதியிருக்கிறார் (மடல்களில் தேடாதீர்கள். தனிமடலில் சொன்னது.)

இப்போது, நேர், நிரைக்குத் தயாராகலாமா?

அன்புடன்
ஹரி கிருஷ்ணன்

(பதிவுக்கு வந்த சில சுவாரஸ்யமான விமர்சன பதில்கள்)
வெண்பா வாத்தியாருக்கு,

நீங்கள் சொன்ன, தனன னான தனன னான தான வையும் நிரைநேர் நேர்நேர் கணக்கையும் ஒரு அரைமணி நேரம் முட்டி பார்த்தேன். லேசாக புரிகிறமாதிரி இருக்கிறது. அதாவது சட்னு சொல்ல முடிஞ்சா, அது நிரை, கொஞ்சம் போல இழுத்தாலோ இல்ல வளைச்சாலோ அது நிரை. இங்கிலிஸ்ல, சிலபிள் அப்படின்னுவாங்களே, அது மாதிரியா இது? ஆனாலும், இதுல ஒரு சிக்கல் இருக்கு. இது மாதிரி ஒரு விஷயம் எனக்கு சட்னு புரிஞ்சா, பெரும்பாலும் தப்பாத்தான் இருக்கும். இப்ப, நான் என்ன பண்றேன், நீங்க அடுத்த பகுதி எழுதற வரைக்கும் வெயிட் பண்றேன்.
--------------------------------------------------------------
'தனன னான தனன னான தானா' என்று குண்டு குண்டு கண்களை உருட்டிக் கொண்டு கமலஹாசனுக்குச் சவால் விடும் ஸ்ரீதேவியைப் பார்த்திருக்கிறீர்கள். ஒரு கணம் தயங்குவார் கமல். கொஞ்சம் சங்கடமாக,தொண்டைக்குள் 'தனன னான தனன னான தானா' என்று முணுமுணுத்துக் கொள்வ்ஆர். அதன் பிறகு, 'யுரேகா!'என்ற தொனியில் 'நதியி லாடும் படகு போல கண்கள்' என்று கூவுவார். 'சப்பாஷ்' என்று பூரித்துப்போவார் ஸ்ரீதேவி.

அந்த வரி ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள் என்பதாய் எனக்கு நினைவு. இதற்கும் நீங்கள் சொல்ல வந்தவிஷயத்திற்கும் சம்பந்தமில்லையெனினும் சொன்னேன்.

முக்கண்ணன் பிள்ளை முருகன் துணையடும்
முக்காலக் கன்னி மொழியின் துணையடும்
வெண்பா வுனைவென் றிடுவேனே யல்லாது
கண்ணை இமைக்கா யிமை.

இது நான் இன்று செய்த மைசூர்பா. வாயில் வழுக்கிக்கொண்டு ஓடியதா அல்லது தொண்டை அடைத்துக்கொண்டதா எனப் பார்த்துச் சொல்லவும்.(முக்காலக் கன்னி தமிழின் என்று எழுதலாம் என்று நினைத்தேன். முக்காலம் என்று வருவதால் மோனையாய் மொழி வரட்டும் என்று எழுதிவிட்டேன். எது சரி?)

தளை தட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தவறுகளைக் கணிக்க முடிகிறது. அது என்ன சீர் தட்டுதல்?இப்போதுதான் ஆரம்ப பாடத்தில் இருக்கிறோம் என்றாலும் என்னால் பொறுமையாய் இருக்க முடியவில்லை.

அப்புறம் சார்.. இந்தக் கடைசி பெஞ்ச் ஆளுங்க என்னை வெளிய வந்தா அடிக்கிறேங்கிறாங்க? என்ன செய்ய? அவங்களைப்பத்தியும் ஒரு
வெண்பா பாடட்டுமா?

பாரதி
12-04-2007, 07:21 PM
வெண்பா ஓர் அறிமுகம் - பகுதி 3 மாத்திரை நோக்கி ஒரு யாத்திரை
=============================================================

கையோடு கைசேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களே(ன்)

இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறீர்கள். வாணி ஜெயராம் பாடினதா?மறந்துவிட்டது. எந்தப் படம், எப்போது வந்தது, யார் பாடினது எல்லாம் மறந்துவிட்டது. துள்ளும் இசையோடு, இளமையான எண்ணத்தோடு இந்த வரிகள் மட்டும் நினைவில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

எழுதியிருக்கும் போது சுவையில்லாமல், bland ஆக இருக்கின்ற இந்த வரிகள், பாடும் போது எவ்வளவு உணர்ச்சிக்கலவையாக வந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். எப்படிப் பாடுவார்?கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்க்கலாமா?

கையோடு கைசேர்க்கும் கா...லங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களே(ன்)
கா இடைவெளி லங்களே என்று ஒரு சொல்லை இரண்டு துணுக்குகளாகப் பிரிக்கிறார். கவனித்திருப்பீர்கள். ஏன் அப்படிப் பிரிக்க வேண்டும்?

காலங்களே என்று ஏன் சேர்த்துப் பாடக்கூடாது? 'அப்படிப் பாடினாத்தான் சரியா வரது' என்று சங்கீதக்காரர்கள் சொல்வார்கள். அவர்களால் இசையை மொழியின் பதத்துக்கு மாற்றித் தரமுடியவில்லை. அதற்கான கருவிகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் பெரும்பாலும் காரணம். அவர்களிடத்தில் கருவிகள் இல்லாமல் இல்லை. அந்தக் கருவிகளை இசைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்வார்கள். எதை இசைக்கிறார்களோ அதற்குப் பயன்படுத்த மாட்டார்கள்; தயங்குவார்கள். ஓரிடத்தில் பயின்றதை இன்னோரிடத்தில் பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வமும், முனைப்பும் இல்லாமல் போவதும் ஒரு காரணம்தான்.
கொஞ்சம் கணக்குப் போட்டுப் பார்த்தால் காரணம் புரியும். கா....லங்களேவுக்கு மட்டுமில்லாமல் கையோடு என்று நீட்டுவதற்கும் காரணம் புரியும்.

இசை என்பது என்ன? ஏன் அது இனிமையாக இருக்கிறது?ஒழுங்கற்றதாக இருப்பதை ஓசை என்கிறோம். ஒழுங்கோடு வருவதை இசை என்கிறோம். இது கொஞ்சம் பண்டிதத்தனமாக இருக்கிறது. இப்படிச் சொல்லலாமா? 'ஒரு தாளக்கட்டுக்குள்ளே பொருந்தி நடந்தால், கேட்பதற்குச் சுகமாக இருக்கிறது.' சொல்லலாம் போலத்தான் இருக்கிறது. ஆனால், சரியாகப் புரியவில்லை. சரி. தாளக்கட்டு என்றால் என்ன? 'ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் ஒலிக்கும் ஒலி வடிவம்' என்று சொல்லலாம், இல்லையா?

கொஞ்சம் வேறு மாதிரி சொல்லிப் பார்ப்போமா? பிரபுதேவா ஆடுகிறார். கொக்கு மாதிரி கையை வைத்துக்கொண்டு,

ஜிங்கு சிக்கா சிக்கா - நான்
ஜொள்ளு விடும் கொக்கா
என்று தொப்பையாம்பிகையைக் கேட்கிறார். இதில், 'ஜிங்கு சிக்கா சிக்கா' ஒரு துண்டு. அடுத்த துண்டு, 'ஜொள்ளு விடும் கொக்கா'. இந்த
இரண்டு துணுக்குகளும் கால அளவால் ஒரே நீளத்தை உடையவை.('நான்' என்று ஒரு துண்டு இருக்கிறது. அதனை ஒரு கோடு போட்டு எழுதியிருக்கிறேன். கவனித்திருப்பீர்கள். அதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம். சம அளவு கால நீளம் உடைய இரண்டு வரிகளுக்கு நடுவில், அதிகப்படியாக, ஆனால் இடைஞ்சல் இல்லாமல் வருகின்ற ஒரு துண்டு. இதைத்தான் தனிச்சொல் என்று சொல்கிறோம். அது பத்தாங் கிளாசில் படிக்க வேண்டும். இப்போதுதான் ஒண்ணாங்கிளாசில் இருக்கிறோம்.)

கால அளவால் ஒரே நீளமா? அப்படியென்றால்? எப்படி ஒரே நீளம் என்று சொல்லமுடியும் என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லையா?குறில், நெடில் என்றால் நமக்குத் தெரியும். 'அ' குறில். 'ஆ' நெடில். 'க' குறில் 'கா' நெடில். குறில் ஒலியைக் குறிக்கும் எழுத்தைக் குற்றெழுத்து என்று சொல்கிறோம். மற்றதை நெட்டெழுத்து என்று சொல்கிறோம். இதில் குற்றெழுத்து ஒலிக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தை ஒரு மாத்திரை என்று சொல்கிறோம். நெட்டெழுத்து ஒலிக்க இரண்டு மாத்திரை காலம் தேவைப்படுகிறது. (நான் ரொம்ப மேற்போக்காகச் சொல்கிறேன். Fine tuning எப்போது தேவையோ அப்போது முழு விவரங்களைப் பார்ப்போம்.)

குறிலும் இல்லாமல், நெடிலும் இல்லாமல் ஒர் இனம் இருக்கிறது. 'பொட்டுவைத்த முகமோ' என்று தலைக்கு மேல் பொட்டு வைத்திருக்கும் எழுத்துகள். மெய் எழுத்து என்றும், ஒற்றெழுத்து என்றும் சொல்கிறோம், இல்லையா? அவை அரை மாத்திரை காலம் ஒலிப்பவை. ஆனால், சொற்களில் அவற்றை உச்சரிக்கும் போது தேவைப்படும் காலம் அதற்கும் கீழானதே. டெசிமல் கணக்கில் பாதிக்குக் கீழே இருந்தால் என்ன பண்ணுவோம்? விட்டு விடுவோம் இல்லையா? அது போலத்தான் இங்கேயும். அவற்றைக்
கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை.

இப்போது கணக்குப் போடலாம். (ஜிங்கு சிக்கா சிக்காவை எல்லாம் கணக்குப் போட்டுப் பாக்க வேணும் என்றால் சிரிப்பாகத்தான் இருக்கும். பொருளே இல்லாத, ஆனால், இசைக்குள் கச்சிதமாக அடங்கியிருக்கும் இந்த வரி கூட, கணக்குக்குக் கட்டுப்பட்டதுதான்.)
நம்முடைய மாத்திரைக் கணக்குப் படி, இந்த வரியைக் கலைத்துப் போட்டுக் கூட்டுகிறேன்.

ஜி - ஒரு மாத்திரை; ங் - கணக்கில்லை; கு - ஒரு மாத்திரை; சி - ஒரு மாத்திரை; க் - கணக்கில்லை; கா - இரண்டு மாத்திரை; சி - ஒரு மாத்திரை; க் - கணக்கில்லை; கா - இரண்டு மாத்திரை. ஆக மொத்தம், இந்த ஒரு வரி ஒலிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எட்டு மாத்திரைப்போது. இது முதல் சுழற்சி. புரியாட்டி தமிழ்ல சொல்றேன். முதல் சைக்கிள்.

அடுத்த சுழல் என்ன? ஜொள்ளு விடும் கொக்கா. கணக்குப் போடுங்கள். ஏழு மாத்திரை. இடம் கொஞ்ச்சம் குறைகிறது, இல்லையா? பாடும் போது கவனியுங்கள். ஜொள்ள்ளு விடும் என்று கொஞ்சம் அழுத்திப் பாடுவார். ஒரு துளிப்போற இடம் விடுவார். கொக்கா என்று கேட்பார். குறைகிற இந்த ஒரு மாத்திரை காலத்துக்கு அட்ஜஸ்மென்ட். இசையில் இந்த சரிக்கட்டுதல் வேறு வேறு மாதிரிசெய்யப்படும்.

'தேடிப் பாத்தேன் காந்தியத்தான் காணும்' என்று ஆடுவார் கமல். 'தேடிப் பாத்தேன்' முதல் சுழற்சி. 'காந்தியத்தான் காணும்' அடுத்த சுழற்சி. முதல் சுழற்சிக்கு ஏழு மாத்திரை. அடுத்ததற்கு ஒன்பது மாத்திரை. சாதாரணமாக, இந்த இடத்தில் 'தே..டிப் பாத்தேன்' என்று நீட்டிச் சரிகட்டுவார்கள். கமல் எப்போதும் போலவே 'தேடிப் பாத்தேன்' என்றே பாடுவார். எப்படி என்பதே புரியாது. அதே போலப் பாட முயற்சித்தால், பயிற்சிஇல்லாதர்களும், விஷயம் தெரியாதவர்களும் 'என்னவோ பண்றான், என்னன்னு புரியல' என்று விழித்துக் கொண்டிருப்பார்கள். கவனிப்பவர்களுக்குத் தெரியும். கமல், முதல் சுழற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னால் அரை வினாடி சும்மா இருக்கிறார் என்பது கூர்ந்து கவனித்தால்தான் தெரியும். லலிதா ராயர் இதை 'சமத்துக்கு ஒரு இடம் தள்ளி எடுப்பது' என்பார். ஒரு இடம்
தள்ளி எடுப்பது, இரண்டு இடம் தள்ளி எடுப்பது என்பதெல்லாம் இசையில் முடியும். ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு blank விட வேண்டும் என்பதை எழுத்தில் காட்ட முடியாது. எழுத்தில் வரும்போது இந்தச் சரிக்கட்டலை வேறு மாதிரி பண்ண வேண்டியிருக்கிறது.
அப்படி முதல் துணுக்கை அட்ஜஸ்ட் பண்ணியாகி விட்டது. இரண்டாவது துணுக்கில் பார்த்தால் 'காந்தியத்தான்' சொல்லும்போது சற்றே அவசரப்படுவதைக் கவனிக்கலாம். மீதி ஒரு மாத்திரை காலத்தை சரிக்கட்டுகிறார்.

'கையோடு கைசேர்க்கும் காலங்களே'வுக்கு வரலாமா?
மூன்று துண்டுகள் இருக்கின்றன இந்த வரியில். பாடுகின்ற விதத்தில் இல்லாமல், எழுதுகின்ற விதத்தில் பார்க்கலாம். கையோடு. நான்கு மாத்திரை. கைசேர்க்கும். நான்கு மாத்திரை. காலங்களே. ஆறு மாத்திரை. மூன்றாவது துண்டில் இரண்டு மாத்திரை காலம் அதிகமாக இருக்கிறது. கைசேர்க்கும்கா என்று சேர்த்துச் சொல்லுவோம். எவ்வளவு காலம்? ஆறு மாத்திரை. இப்போது லங்களே யில் மிச்சம் இருப்பது நான்கு மாத்திரை. குறைகின்ற இரண்டு மாத்திரை காலம்தான் அந்த பாஸ். அப்படியானால் முதல் துண்டில் நான்கு மாத்திரைதானே இருக்கிறது? கவனித்தால் ஒன்று தெரியும். 'கையோஒஒடு' என்று நீட்டுவார். ஒவ்வொரு துண்டும் ஆறு மாத்திரை காலம் உடையதாக ஆகிவிடும் மாயம் நிகழ்கிறது. இப்படி நீட்டுவதைத்தான் கவிதையில் 'அளபெடுத்தல்' என்கிறோம். இன்னிசை அளபெடை, இசை நிரை அளபெடை என்றெல்லாம் அவற்றுக்கு உட்பிரிவுகள் உண்டு.
கா பாஸ் லங்களே? வகையுளி என்ற கணக்கில் வரும். பெயர்களை மட்டும் இப்போதைக்குத் தெரிந்து கொள்வோம். அவற்றை விரிவாகப் பின்னால் பார்க்கலாம்.

முதல் வரியில் கா லங்களே என்று உடைக்க வேண்டி வந்தது. அடுத்த வரியில் பாடுங்களே என்று ஆறு மாத்திரை காலம் ஒலிக்கும் சொல்லை
உடைக்காமல் பாடுவது எப்படி? கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ரொம்ப புரியாவிட்டால் கவலைப் பட வேண்டாம். பாடல் ஒலிக்கும் போது, இந்தக் குறிப்பைக் கையில் வைத்துக்கொண்டு கவனிக்கலாம். ஒரு ஐந்தாறு பாடல்களை இப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டால், எல்லாமே வெள்ளிடை மலை. உள்ளங்கை நெல்லிக்கனி. தெற்றென விளங்கா நிற்கும்.

மரபுக் கவிதையில் வார்த்தைகளை உடைத்துப் போடுவது ஏன் என்பதற்குக் காரணம் இப்போது கொஞ்சம் புரிந்திருக்கும். ஆனால், கவிதைக்கு என்று சொற்களின் கால அளவை நிர்ணயிப்பதற்கென்று வேறு ஒரு வழியைக் கையாளுகிறோம். அசை என்று அதைத்தான் சொல்கிறோம்.

மாத்திரை என்றால் ஒரு மாதிரி புரிகிறதா? அடுத்த யாத்திரை அசை. அசை என்றால் நம்ம பிரகாஷ் மிகச்சரியாகச் சொன்னது மாதிரி சிலபிள்
தான். ஆங்கிலத்தில் அசை பிரிப்பதை விட, தமிழில் அசை பிரிப்பது மிக எளிது. ஆங்கிலத்தில் prosody எனப்படும் கவிதை இலக்கணத்தில்
இதைச் செய்வது கொஞ்சம் சிக்கலானது. Twinkle twinkle little star என்று நாமெல்லாம் நர்சரியில் படித்த முதல் பாடலின் சந்தத்துக்கு octosyllabic iambic penta meter என்று பெயர். எட்டு அசைகளைக் கொண்டது.

ட்வின் க்கிள் ட்வின்
க்கிள் லீடீல் ஸ்டாஆ என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த சந்தம் தமிழிலும் இருக்கிறது. அறுசீர் விருத்தம் என்று பெயர். அதில் ஒரு
வகையில் இந்த சந்தம் பயிலும். அறுசீரில் முதல் மூன்று சீர்கள் (அதாவது பாதி அடி), ஆங்கிலத்தில் ஆக்டோசிலபிக் ஐயாம்பிக் பென்டாமீட்டரின் முழு அடி நீளத்துக்குச் சமம். பெயரில் எட்டு அசைகள் என்றாலும் சில அடிகளில் ஏழு அசைகள் வரும். அங்கே கவிதை இலக்கணம் வேறு மாதிரியானது. இங்கே வேறு மாதிரியானது. தமிழில் அசை பிரிப்பது மிகச் சுலபம். அதை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன்.

இன்னொன்று வெண்பாவுக்கும் மேற்படி சமாச்சாரங்களுக்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. அப்படியானால் இவை ஏன் என்று கேட்பீர்கள். நேரடித் தொடர்பு இல்லை என்றுதான் சொன்னேன். சுற்றி வளைத்த தொடர்பு உண்டு. நாம் இப்போது வெண்பா எழுதுவது எப்படி என்று பார்க்கவில்லை. வெண்பா என்றால் என்ன என்பதைத்தான் பார்க்கிறோம். அதன் அடிப்படையான விஷயங்கள் இவை. வெண்பாவுக்கு மட்டுமல்ல; ஆசிரியப்பா, விருத்தம், சந்த விருத்தம், வண்ண விருத்தம், கட்டளைப் பா என்று எல்லா வகைக்கும் இவைதான் அடிப்படை. Building blocks.

அன்புடன்
ஹரி கிருஷ்ணன்

பின் குறிப்பு:
நண்பர்களே... இதுவரை கொடுத்த பகுதிகள் அனைத்தும் http://venbaa.blogspot.com/ (http://venbaa.blogspot.com/) என்கிற வலைப்பூவிலிருந்து எடுத்து கோர்க்கப்பட்டது. மிக அருமையான விசயங்களை எளிதில் புரிந்து கொள்ளும் அளவிற்கு சிறப்பாக தந்திருக்கும் ஆசிரியர் ஹரிகிருஷ்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி.

இப்போது விசயத்துக்கு வருகிறேன். இவ்வளவு அருமையான வலைப்பூ கடைசியாக ஏப்ரல் 6, 2003.ல் வந்திருக்கிறது. அதற்குப்பின் இல்லை. இதை மன்ற நண்பர்கள் யாராவது தொடர இயலுமா..?

பாரதி
12-04-2007, 07:26 PM
ஒரு நண்பரின் கேள்விக்கான ஆசிரியரின் பதில்

தமிழில் பிரிக்கமுடியாத ஒரே ஒரு வார்த்தை அதிகபட்சம் ஐந்து முதல் எழு எழுத்துக்களால் ஆனது என்று. தேமாந்தண்நிழல் அல்லது கருவிள
நறுநிழலால் ஆன பிரிக்கமுடியாத வார்த்தை கொண்ட ஒரு கவிதை ஏதாவது சொல்லமுடியுமா?

- பிரசன்னா.

வார்த்தை வேறு. சீர் வேறு. அதை அப்புறம் பார்க்கலாம். நாற்சீர்களால் அமைந்த பாடல்கள் அவ்வளவு அதிகமில்லை. இப்போது வெண்பாவை
மட்டும் பார்க்கப் போகிறோம். இங்கே அதிகபட்சம் மூன்று சீர்கள்தாம் வரும். நாற்சீருக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால், நெய்க்கு அலைவா
னேன்? நீரே இருக்கிறீர்!

ஒன்று வேண்டுமானால் உடனடியாகச் செய்யலாம். நரசிம்மத்தைப் பற்றி எழுத ஆரம்பித்துப் பாதியில் நிற்கிறது ஒன்று. இதைப் பாருங்கள்.

கருவிடு வெறிபடு பொறிவர திரிதரு
கதமுறு முளமொரு கதிரென எரிதர
கனகனு நெறுநெறு நெறுவென எயிறது
கடிபட கரதல மெதிரெதி ரிடிதர நகைதானோர்
கருகிடு பொறிபடு எரிவரு புகைவிடு
கனமுறு முகிலிடு வெடியென யிடியுற
கடகட கடவென கடலெழு மலையென
கதிரது கருகிட கடலுட லருகிட வெறியேறி

இதில் 'நகைதானோர்' மற்றும் 'வெறியேறி' ஆகிய இரண்டையும் தவிர மற்றவை எல்லாம் கருவிளம். பதினாறு சீர் விருத்தம். இதையே எண்சீராக்கினால், இப்படி அமையும்:

கருவிடுவெறிபடு பொறிவரதிரிதரு கதமுறுமுளமொரு கதிரெனஎரிதர
கனகனுநெறுநெறு நெறுவெனஎயிறது கடிபடகரதல மெதிரெதிரிடிதர நகைதானோர்
கருகிடுபொறிபடு எரிவருபுகைவிடு கனமுறுமுகிலிடு வெடியெனயிடியுற
கடகடகடவென கடலெழுமலையென கதிரதுகருகிட கடலுடலருகிட வெறியேறி

கருவிளம் கருவிளம் என்று இருப்பதைக் காட்டிலும் இப்படிப் போடும்போது படித்தால் மூச்சு முட்டும். படித்துப் படித்துப் பழகினால் ஒழிய, வாய்விட்டுப் படிக்க முடியாமல் போகும். பதினாறு சீராகப் பிரித்துப் போடும் போதும் அப்படித்தான் ஆகும். ஆனால் சிறுசிறு துண்டுகளாக இருப்பதால் கொஞ்சம் எளிதாகும். கடைசிச் சீரை மூன்று சீராக வைத்து ஒரு ப்ரேக் கொடுப்பதால் சின்ன relief கிடைக்கும்.
இவை வண்ண விருத்தங்கள் என்ற வகையில் போகும். இப்போது வேண்டாம். குழம்பும்.

இன்றே தொடங்கும் இலக்கணம் பின்பயனாய்
நன்றே எழுதுவேன்வெண் பா

இலக்கண சுத்தமாக இருக்கிறது. முதல்நிலை தாண்டியாகிவிட்டது. 'எழுதுவேன்வெண்' சொல்லிப் பாருங்கள். நாக்கு தடுக்குகிறது இல்லையா? எங்கே நிற்கிறது? வேன்வெண், அங்கே. ஏன்? ஒரேமாதிரி ஒலி. ஒன்று நெடில், இன்னொன்று குறில். எழுதுவேன் என்பதை வேறு எப்படிச் சொல்லலாம்? யோசிக்க வேண்டும். ஒரு மாதிரிதரட்டுமா? 'நன்றேவெண் பாவடிப்பேன் நான்.' வெண்பா வடித்தல். 'நன்றாகும் வெண்பா நயந்து.' நன்று என்ற எதுகையை மாற்றிப் போட்டால்? 'வென்றிதரும் வெண்பா விரைந்து'. பண்டிதத்தனமாக இருந்தால் பரவாயில்லை. நாலு விதமாய் மாற்றிமாற்றிப் போட்டுப் பாருங்கள்.
விருத்தத்தில் எழுதிக் கொண்டிருந்தான் பாரதி. 'வள்ளுவன்' என்று நினைத்தான். அவனை அறியாமல் குறள் வடிவத்தில் தானாக அமைந்தது.

வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்டதமிழ் நாடு.

அலகிட்டுப் பாருங்கள். குறள் வெண்பா மிகச் சரியாக நிற்கும். பழகப் பழக, இந்தப் புலிமேல் சவாரி செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் இறங்கக் கூடிய புலிமுதுகு சவாரி. நமக்கெல்லாம் சவாரி மட்டும்தான் செய்ய முடியும். பாரதியிடம் அந்தப் புலிவால்குழைத்து, காலடியில் படுத்து, அவன் காலை நக்கிக் கொண்டிருந்தது. பாரதியின் வெண்பாக்களை எடுத்து அலகிட்டுப் பாருங்கள்.

வையகத்துக் கில்லை மனமே நினக்குநலம்
செய்யக் கருதியிது செப்புவேன் - பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையும் காக்குமெனும்
சொல்லால் அழியும் துயர்.

சொல்லுகின்ற கருத்தைப் பிறகு பார்க்கலாம். வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். எங்காவது தடுக்குகிறதா? இடறுகிறதா? சொல் இரண்டாகப் பிளந்திருக்கிறதா? (வகையுளி என்று சொல்வார்கள். பிறகு பார்க்கலாம்.) இஷ்ஷ்க் என்று வழுக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா.

நல்ல ஆரம்பம். வாழ்த்துகள்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

ஷீ-நிசி
13-04-2007, 05:27 AM
பாரதி அவர்களே, மிகவும் நன்றி..
எத்தனை எளிமையான வகையில், படிக்க சிறிதும் சலிப்பு ஏற்படாத வண்ணம் தொடுத்திருக்கிறார்கள்... பழைய தொகுப்பை ஒருங்குறியில் இணைத்து தந்ததற்கு மிக்க நன்றி...

தொடர்ந்து தாருங்கள்..

இளசு
13-04-2007, 06:07 AM
பாரதி

மிக பயனுள்ள பதிவுகளைத் திரட்டி (மீண்டும்) தந்தமைக்கு மிக்க நன்றி..

முதல் மூன்று பதிவுகளை இன்று வாசித்தேன்..

நடை கொஞ்சம் எளிதாய், இடைச்செருகல் நகைச்சுவையுடன்... நன்றாக உள்ளது..

முழுதும் வாசிக்கத் தூண்டுவதே இத்தொகுப்பின் வெற்றி..

வாசித்து, நான் வெண்பாவும் எழுதிவிட்டால் இதன் படைப்பாளிக்கு
முழு வெற்றி.. (ஆனால் மன்றத்து நண்பர்களுக்கு அவஸ்தை!!!!!)

படைத்தவருக்குப் பாராட்டுகள்...

இளசு
13-04-2007, 06:09 AM
-------------------------------------
இது பூக்கட்டுவது போல. வார்தைகள்(சீர்) கட்டுவது.
சங்கிலி போல பிணைத்து கொண்டு செல்ல வேண்டும்.
-------------------------------------------

---------------------------------
இன்னும் விளக்கமாக கொடுக்க ஆசை. நேரம் கிடைக்கும்போது பதிக்கிறேன்.

நன்றி ஸ்ரீராம்..

நீங்கள் சின்னச் சின்ன பாடங்கள் சொல்லி
அங்கங்கே எங்களை பயிற்சியாய் பாக்கள் எழுதச்சொல்லி
ஒரு 'மெய்நிகர்' வகுப்பு எடுக்கலாம்..

அதற்கான நேரம் உங்களுக்கு அமைய விரும்பி, வாழ்த்துகிறேன்..

leomohan
13-04-2007, 08:35 AM
நன்றி ஸ்ரீராம்..

நீங்கள் சின்னச் சின்ன பாடங்கள் சொல்லி
அங்கங்கே எங்களை பயிற்சியாய் பாக்கள் எழுதச்சொல்லி
ஒரு 'மெய்நிகர்' வகுப்பு எடுக்கலாம்..

அதற்கான நேரம் உங்களுக்கு அமைய விரும்பி, வாழ்த்துகிறேன்..

இது நல்ல யோசனை. வெண்பா க்ளாஸில் முன் பெஞ்சில் நோட்டு புத்தகத்துடன் பென்சிலுடன் நான் ரெடி. ரப்பரும் தேவை. தயாராக கொண்டு வந்திருக்கிறேன்.

leomohan
13-04-2007, 08:36 AM
மிக்க நன்றி பாரதி. படித்துவிட்டு கேள்விகளுடன் உங்கள் முன் விரைவில்.

ஆதவா
13-04-2007, 10:35 AM
ஷீ! முதலில் நன்றியும் பாராட்டுக்களும்... வெண்பா பற்றி அறிய அழகான வாய்ப்பு.. இன்றுதான் கவனித்தேன்./ ஒரு பக்கம் இளசு போட்டுத்தாக்குகிறார்... இங்கே வெண்பா வேறு.... நானும் பா வகையில் ஓரிரு கவிகள் எழுதியிருக்கிறேன்... தேடிப்பிடிக்கிறேன். இல்லையென்றால் புதிய கவி எழுதுகிறேன்.

விழிநீர் இரவெல்லாம் தலையணை நனைக்க
வலியோடு உறங்குகிறேன் நிலவே - சில இரவுகள் மட்டும்
உமிழ்நீர் தலையணை நனைக்க உறங்குகிறேன், உன்
இதழ்கள் அன்றெல்லாம் என்னைக் கண்டு புன்னகைத்திருந்திருக்கும்...



உங்கள் செய்யுளில் பாவுக்குண்டான அறிகுறிகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை கலிப்பா அல்லது வஞ்சிப்பா வகையீல் சற்று ஒத்துப் போகலாம். எனக்கு ஆசிரியப்பாவும் வெண்பாவும் மட்டுமே தெரியும் (தெரியும்னா எழுதத் தெரியாது :D ஏதோ!!!! )

முதலில் சீர் அடுத்து தளை ஆக எல்லாமே தவறுதான் என்றாலும் கவிப்பொருளை நான் குறிப்பிடவில்லை...

புன்னகைத்திருந்திருக்கும்... இவ்வளவு நீளமான சீர் இல்லவே இல்லை.


எனக்கு வெண்பா நடத்தியவர் கோவிந்தராசன். அவரின் வேகத்திற்கு எவராலும் ஈடுகொடுக்க முடியாது. அந்த அளவுக்கு சீர் பிரித்து சொல்லுவார்... அதற்கு திறமை வேண்டும்...

------------------------------------------------------

போகட்டும். எனக்கு விநாயகர் நாண்மனி மாலை பார்த்துதான் பா எழுதவேண்டும் என்று ஆசை வந்தது. உபயம் : சுப்ரமணியபாரதி.

வெகு நாட்கள் இலக்கண புத்தங்கள் படித்து மண்டையில் ஒன்றுமே ஏறவில்லை.. ஏதோ மாத்திரை என்கிறார்கள். மருந்து என்கிறார்கள்.. எல்லாமே கசப்பாக இருக்க, எப்படித்தான் புலவர்கள் பா எழுதுகிறார்களோ என்று ஏங்கியிருக்கிறேன்...

முன்பு கொடி கொண்டனை என்று எழுதினேனே! அதென்ன சும்மாவா? கொடி என்ற வார்த்தை நிறைய வரவேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்து ஆசிரியப்பாவில் எழுத முயன்று ஒரு காகிதத்தைஎடுத்தேன்..

எப்போழ்தும் போல கவிதையாக எழுதி பின் தளைகளைக் கொண்டு ஒட்டப் பார்த்து, வார்த்தை விட்டுப்போய் கடைசியில் ஒரு மணிநேரம் அல்லது ஒன்றரைமணிநேரம் கழித்துதான் எழுத முடிந்தது.. அப்படியே இன்னும் சில முயன்றேன்.... அதில் சற்றே வெற்றி, கால் மணிநேரத்தில் குறள்வெண்பா எழுதும் அளவிற்கு முன்னேற்றம் ...

பொறுங்கள் உங்களுக்காக ஒன்றூ எழுதிக்கொடுக்கிறேன். தளை தட்டினால் என்னை தப்பாகக் கொள்ளவேண்டாம்....

பா : குறள்வெண்பா

ஆதவன் எழுதினான் பார்இக் கவிகள்
மோதவோ ஆளுண்டா மன்றம்.

(பத்துநிமிடம் :::icon_shades: ) தவறு இருக்காது என்றே நினைக்கிறேன்,. கடைசி சீரில்தான் எனக்கு சந்தேகம்... பா அறிந்த பாவலர்கள் திருத்துவார்கள் என்று நினைக்கிறேன்....
------------------------------------------------------------

leomohan
13-04-2007, 10:42 AM
ஜாம்பவான்கள் புகுந்து விளையாடுகிறார்களே.

ஆதவா
13-04-2007, 10:56 AM
அய்யோ!! யாரைச் சொல்லுகிறீர்கள்??? நானா?/

கிடையாதுங்க...

ஆதவா
13-04-2007, 11:06 AM
மோகன்... நீங்கள் சொன்ன ஐந்தாம் நிமிடம்... அடுத்த குறள்வெண்பா தயார்....

மோகன் எழுதுவதெல் லாம்சரி - நீயுமிங்கே
தேகஞ் சிலிர்க்கக் கேள்

leomohan
13-04-2007, 11:07 AM
மோகன்... நீங்கள் சொன்ன ஐந்தாம் நிமிடம்... அடுத்த குறள்வெண்பா தயார்....

மோகன் எழுதுவதெல் லாம்சரி - நீயுமிங்கே
தேகஞ் சிலிர்க்கக் கேள்

அவசியம் ஆதவா.

paarthiban
13-04-2007, 11:10 AM
ஷீநிசி அவர்கள் கேட்க பாரதி அண்ணா கொடுக்க ச்ரீராம் அவர்கள் சேர ஆதவா அவர்கள் பாட்டு எழுத . கலக்குறாங்க எல்லாரும். கைதட்ட நான் இருக்கேன்.

ஆதவா
13-04-2007, 11:16 AM
பார்த்திபன் நண்பரே! நீங்கள் எழுதிய வற்றுக்கு
பார்புகழும் நன்றி இதோ!!


இதுவும் வெண்பாதான்...தவறு இருந்தால் மன்னிக்க..

ஷீ-நிசி
13-04-2007, 11:19 AM
நன்றி ஆதவா.. நான் எழுதியதில் தவறு இருக்கும் என்று 100% தெரிந்ததே...

கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்.. பா கவிஞர்களே கற்றுத்தாருங்கள்.. நானும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. விரைவில் இலக்கணங்களை தருகிறேன்...

நண்பர் ஸ்ரீராம் அவர்களெ, தொடர்ந்து தாருங்கள் உங்கள் விளக்கங்களையும்..

paarthiban
13-04-2007, 11:19 AM
அதுக்குள்ள ஒரு வெண்பாவா ஆதவா?அதிச்ய திறமைசாலி நீங்களய்யா.
வணங்குகிறேன்.

ஆதவா
13-04-2007, 11:27 AM
அதெல்லாம் ஒன்னுமில்லீங்க.. சும்மா வந்தது. எழுதினேன். எனக்கென்னவோ எழுத எழுத சுலபமாகிவிடும்போலத் தெரிகிறது...

இனி அடுத்து ஆசிரியப்பா கலிப்பா, வஞ்சிப்பா போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்..

ஷீ-நிசி
13-04-2007, 11:40 AM
ஆதவா இது வெண்பா முயற்சி.. சீர் தளை என்ன எங்கே என்று சொல்லுங்கள்...

பழகின நாட்கள் ஒவ்வொன்றும்
அழகிய நாட்கள் என்றென்றும் -இளகிய
மனந்தானடி என்னுள்ளம் நாளை பிறந்திடும்
தினந்தானடி என் வாழ்வின் கடைசி தினம்!

ஆதவா
13-04-2007, 11:56 AM
ஆதவா இது வெண்பா முயற்சி.. சீர் தளை என்ன எங்கே என்று சொல்லுங்கள்...

பழகின நாட்கள் ஒவ்வொன்றும்
அழகிய நாட்கள் என்றென்றும் -இளகிய
மனந்தானடி என்னுள்ளம் நாளை பிறந்திடும்
தினந்தானடி என் வாழ்வின் கடைசி தினம்!

பாராட்டுக்கள் உங்களின் முதல் முயற்சிக்கு...

உங்கள் தவறுகளை இங்கே பட்டியலிடுகிறேன்...


முதல் வரியில் நான்கு சீர்கள் இருக்கவேண்டும்.. கடைசி வரியில் மூன்று வரிகள் இருக்கவேண்டும்..
பழ கின - நிரைநிரை - புளிமா - மாமுன்நிரை அடுத்த சீரில் வரவேண்டும்.. ஆனால் வந்ததோ நேர் (நாட் கள் - நேர்நேர்- தேமா)
இம்மாதிரி நிறைய இடங்களில் தளை தட்டுகிறது...------------------------------------------------------
வெண்பாவுக்கு எளிய வழி ஒன்று சொல்லுகிறேன்...


கூடுமானவரை இரு அசைகள் மட்டுமே இருக்குமாறு வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்..
வெண்பாவில் தாரக மந்திரமே மாமுன்நிரை , காய்முன்நேர், விளமுன்நேர்.. இதை மனப்பாடமாக வைத்திருக்கவேண்டும்..
ஒரு சீரில் நிரையில் தொடங்கி நேரசையாக முடிந்திருந்தால் அல்லது நேரில் தொடங்கி நேராக முடிந்திருந்தால் அது மா வகை (தேமா, புளிமா)
ஒரு சீரில் எந்த அசை தொடங்கினாலும் அது நிரையாக முடிந்திருந்தால் அது விளம் வகை (கருவிளம் கூவிளம்)
வெண்பாவில் கனி வருக்கூடாது. ஆக, காய் வந்தால் அடுத்த சீர் நிச்சயமாக குறில் எழுத்தோ, குறில் ஒற்றோ, நெடி தனியோ அல்லது நெடிலுடன் ஒற்றோ தொடங்கும் வார்த்தை கொண்டு ஆரம்பிக்க வேண்டும்...
பல செய்யுள்கள் எழுதினால் சீக்கிரமே பழகிவிடும்...

ராஜா
13-04-2007, 12:01 PM
வணக்கம் நண்பர்களே..!

நான் கேட்கப்போவது இந்தத் திரிக்கு தொடர்பில்லாதது என் அறிவேன்..
எனினும் இங்கு புலவர்கள் அமைவு இருப்பதால் இதைப் பதிகிறேன்..

கண்ணி கார்நறுங் கொன்றை;
காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே;
சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று;
அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று;
அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று;
அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

ஐயா, மேற்கண்ட புறநானூற்று பாடலுக்கு அர்த்தமென்ன?

ஆதவா
13-04-2007, 12:10 PM
இது புறநானூறு பாடல் மாதிரி தெரியவில்ல்லை... சீர்மிகுந்து சில இடங்களில் இருக்கிறது...
ஏதோ காதல் பாடல்??? விளக்கம் சரிவரத் தெரியமாட்டேங்குது...

ராஜா
14-04-2007, 04:03 AM
நன்றி ஆதவா...!

இது புறநானூற்றுப் பாடல் தான்.. அதுவும் காதல் பாடல் அல்ல..

சிவனைப் பற்றிய பாடல்..

கீழே பாருங்கள்...

பொறநானூறு கானா 1:
கடுவுளக் கண்டுக்கலீன்னா கலீஜாப் பூடுவீங்கோ
------------------------------------------
சங்கத் தமிழ்ல கூவுனது - பாரதம் பாடிய பெருந்தேவனார்
சென்னத் தமிய்ல கூவுறது - பாரதக் கூத்துக் கட்ன பெருங்கபாலியார்

கூவுறது ஆரப் பத்தி - சிவபெருமான்

0 0 0

தல மேலயும்
மஞ்சா சோறு கீற
நெஞ்சு மேலயும்
வெச்சினு கீற கொன்னப் பூ மால.

நீயோ குந்தினு கீற காள மாடு மேல - அந்த
காள மாடோ குந்தினு கீது ஒங்கொடி மேல.

கபால்னு ஒன்ஸ் எப்பான் எ டைமு
வெசத்த அள்ளிக் குட்ச்ச பாரு,
கபாலத்துக்குக் கீய கயுத்துக்கு மேல
கறயாக் கீதுபா நீ வெசங்குட்ச்ச அடியாளம்
அத்த பொகயறாங்க அய்யமாரு அல்லாரும்.

ஒடம்புல பொஞ்சாதிக்கு குட்த்த
பிப்டி பெர்செண்ட் ரைட்டு,
நீயு செய்யுறது அல்லாமே ரைட்டு.

நெத்தியில ஒளி வுடுதுபா
தம்மாத்தூண்டு பெற நெலா - அத்த
சுத்தி நின்னு பாடுதுங்கோ
பதினெட்டு பேரு பூதகணங்கோ.

தண்ணி வத்திப் போவாத கெமெண்டலமும்
தவம் பண்ணி தவம் பண்ணி வளத்த தாடியுமா
சோக்கா கீற எஞ்சாமியே,
மண்ணு ஒலகத்துல பொறப்பெடுத்து
மண்ணாப் போற பொறவிக்கெல்லாம்
நீயு தாம்பா காவக்காரன்..!

0 0 0

சுருக்கமான பொழிப்புரை: தலையிலும் மார்பிலும் அணிந்திருப்பது கொன்றை மலர் மாலை. ஊர்தியாக விளங்குவது காளை. கொடியில் காணப்படுவதும் அக்காளையே. கழுத்திலே நச்சு அருந்திய கறை தென்படுகிறது. அதனை அந்தணர் அனைவரும் போற்றுவர். உமையொரு பாதியாகச் சில சமயம் காட்சி தரும் உருவம். நெற்றியில் பிறை நிலா. அதனைப் பதினெண் கணங்கள் போற்றுவர். நீர் குறையாத கமண்டலமும், கடுமையான தவத்தின் அறிகுறியாக விளங்கும் சடை முடியும் கொண்டவரே அனைத்து உயிர்களுக்கும் காவல்.

ஷீ-நிசி
14-04-2007, 04:29 PM
நன்றி ஆதவா, புட்டு, புட்டு வச்சதுக்கு..

இலக்கணம் அறியாமல் வெண்பா எழுத ஆசைப்படுதலே கூடாது.. இணையத்தில் உலாவி, சிலவற்றை நான் கற்றுக்கொண்டேன், அதை என்னுடைய ஸ்டைலில் இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்..


வெண்பா எழுதறதுக்கு கண்டிப்பாக தமிழ் இலக்கணம் அவசியம்...

இலக்கணம் என்றால் பாகற்காய் போல கசப்பது நமக்கு இயல்பே, என்ன பன்றது இந்த வெண்பா ஆசை விட்டுத் தொலைய மாட்டுதே, இலக்கணம் என்றாலே இந்த தேமா, புளிமா அப்புறம் எல்லா மாவையும் நாம் கண்டிப்பாக கற்றுக்கொண்டே ஆகவேண்டும்.. எளிமையாக நான் தர முயற்சிக்கிறேன்..

செய்யுள் என்றாலே இந்த ஆறும் முக்கயமுங்க. என்ன ஆறுனா..

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை...

கண், காது, மூக்கு, வாய், கை, கால், எப்படி இந்த ஆறும் மனிதனுக்கு முக்கியமோ, செய்யுளுக்கு அந்த ஆறும் முக்கியம்..

அப்படியே அந்த ஆறும் மனசில ஏத்திக்கங்க...கஸ்டமா ஃபீல் பன்றீங்களா..சரி சிம்பிளா.. எழுத்தசை, சீர்தளை, அடிதொடை.. இப்ப சுலபமாச்சா.. ஒன்னும் பயப்படாதீங்க, இந்த ஆறையும் மூளையில ஒரு ஓரமா வச்சிக்கோங்க....


ஒவ்வொன்னா பார்ப்போம்..

1. எழுத்து

குறில், நெடில், ஒற்று..

தமிழில் இருக்கும் 247 (சரிதானுங்களா) எழுத்துகள் எதை எடுத்தாலும் இந்த 3 க்குள்ளே அடங்கிடும்..

குறில் - சவுண்ட் சின்னதா வருதா அது குறில்,
உதாரணம்: க, கி, கு, கெ (நீங்களே உச்சரித்துப் பாருங்க)

நெடில் - சவுண்ட் பெரிசா வருதா அது நெடில்,
உதாரணம்: கா, கீ, கூ, கே (நீங்களே உச்சரித்துப் பாருங்க)

ஒற்று- இது பொம்பளை மாதிரிங்க.. பொட்டு விட்டுக்குனு வரும்
உதாரணம்: க்ங்ச்ஞ்ட்ண்த்ந்ப்ம்ய்ர்ல்வ்ழ்ள்ற்ன் அவ்ளோதான்.

குறில், நெடில், ஒற்று, புரிஞ்சிடுச்சிங்களா..

சரி, ஒரு சின்ன சோதனை...

அம்மா - இதுல எத்தனை குறில், நெடில், ஒற்று இருக்குன்னு சொல்லுங்க..







சரியா சொல்லிட்டீங்க..

1 குறில், 1 ஒற்று, 1 நெடில்,

அ - குறில், ம் - ஒற்று, மா - நெடில்

எப்படி இருக்குதுனு சொல்லுங்க. மேற்கொண்டு தொடர முயற்சிக்கிறேன்..

இளசு
14-04-2007, 04:44 PM
ஆஹா எனக்குத் தகுந்த எளிய பாடத்தில் தொடங்கிய ஷீ-நிசிக்கு நன்றி..

தொடருங்கள் ஷீ-நிசி...

முடிவில் ஒரு வெண்பா என்னை எழுத வைப்பீர்கள் என நம்பிக்கை வந்துவிட்டது..

ஷீ-நிசி
15-04-2007, 10:40 AM
நன்றி இளசு! மற்ற நண்பர்களின் ஆர்வம் எப்படி இருக்குதுன்னு பார்க்கலாம்..

ஷீ-நிசி
15-04-2007, 10:48 AM
நல்ல பகுதி ஷீ வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்தேன்.

நன்றி மோகன்.. தொடர்ந்து வருகை புரியுங்கள்..

ஷீ-நிசி
17-04-2007, 04:29 PM
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை...

பாடம் -1 ல்
எழுத்துனா என்னன்னு பார்த்தோம்...

குறில், நெடில், ஒற்று...

-------------------------

சரி.. பாடம் 2

அடுத்தது அசைன்னா என்னன்னு பார்க்கலாமா சகோதார, சகோதரிகளே!

அசைன்னா, அங்கிட்டி, இங்கிட்டு அசைறது இல்ல....
இலக்கண அசை... புரியுதா.. விவரமா இருக்கனும்...

அசைன்னா அது இரண்டு வகைப்படும்...

நேரசை, நிரையசை..

நேரசை -னா என்ன? கல், மண், புல், வில்....

எப்படி இதை நீ நேரசைனு சொல்லலாம் என்று நீங்க.. கேட்கலாம்..

முதல் பாடத்தில் அம்மா வில் எத்தனை குறில், நெடில், ஒற்று என்று சுலபத்தில் கண்டுபிடித்தீர்கள்...

கல்.. இதில் 1 குறில், 1 ஒற்று..
மண்.. இதிலும் 1 குறில், 1 ஒற்று..
புல்.. இதிலும் 1 குறில், 1 ஒற்று..
வில்.. இதிலும் 1 குறில், 1 ஒற்று..

அதாவது, குறில், குறிலுடன் ஒற்று இணைந்து வரும் வார்த்தைகள் எல்லாம் நேரசை என்று அழைக்கபடும்...

உதாரணம்.. வில் என்பதில் வி - என்பது, குறில், ல் - என்பது ஒற்று

அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே..

புள்ளைங்களா, பாடம் எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

இந்தா வரேன்...

ஆதவா
17-04-2007, 04:40 PM
அருமையான பாடம்.... எளிமையாக புரியும்படி போகிறது...

அசை... நாம் வாயசைத்தலில் கண்டுபிடிக்கலாம்.

செய்திட்டான் - இதை நாம் வாயசைத்துச் சொல்லும் போது

செய் திட் டான் - என்றுதான் வரும்... நன்றாக இந்த சொல்லைச் சொல்லிப் பாருங்கள்... வேறெந்த சொல்லும் இதேமாதிரிதான்...

கல் - ஒரு வாய் அசைவு
கால் - ஒரு வாய் அசைவு

நிற்க - இரண்டு வாய் அசைவு (நிற்+க)

நிறைய சொற்களைச் சொல்லிப் பழகினாலே அசைகள் அருமையாக வந்துவிடும்.. பா எழுதுதல் எளிதாகும்.

ஷீ-நிசி
17-04-2007, 04:45 PM
அருமையான பாடம்.... எளிமையாக புரியும்படி போகிறது...

அசை... நாம் வாயசைத்தலில் கண்டுபிடிக்கலாம்.

செய்திட்டான் - இதை நாம் வாயசைத்துச் சொல்லும் போது

செய் திட் டான் - என்றுதான் வரும்... நன்றாக இந்த சொல்லைச் சொல்லிப் பாருங்கள்... வேறெந்த சொல்லும் இதேமாதிரிதான்...

கல் - ஒரு வாய் அசைவு
கால் - ஒரு வாய் அசைவு

நிற்க - இரண்டு வாய் அசைவு (நிற்+க)

நிறைய சொற்களைச் சொல்லிப் பழகினாலே அசைகள் அருமையாக வந்துவிடும்.. பா எழுதுதல் எளிதாகும்.


அசைக்கு மேலதிக விளக்கம் அளித்த ஆதவாவிற்கு நன்றி... அப்பு இங்கிட்டும் கொஞ்சம் தலைய தவறாம காட்டுங்கப்பு...

ஆதவா
17-04-2007, 04:48 PM
நிச்சயமாக....

பா ஏதாவது எழுதினீர்களா?... பாவில் ஒரு கவி எழுதியிருக்கிறேனே படித்தீர்களா?

ஆறா ரணம் - செவிகள்

ஷீ-நிசி
17-04-2007, 04:52 PM
இல்லையே! பார்க்கவில்லையே!...

பார்க்கிறேன் ஆதவா! நான் ஏதும் இன்னும் எழுதவில்லை (தெரிந்தால்தானே எழுதறது) கற்றுக்கொண்டே கற்றுகொடுத்துக்கொண்டிருக்கிறேன்...

இளசு
17-04-2007, 06:22 PM
அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே..

...

சின்னதம்பி : கைப்புள்ள கையில இலக்கணத்தை எடுத்துட்டு கிளம்பிட்டார்ல...
எத்தனை பாட்டு கெளம்பப்போகுதோ தெரியலியே...

ஷீ-நிசி என்கிற கைப்புள்ள : இப்படி உசுப்பி உசுப்பியே ஒடம்ப ரணகளமாக்கிப்புடறாங்களே.....
ஆதவா, இன்னுமா இந்த மன்ற சனங்க நம்ம இலக்கணத் திரிபக்கம் வராங்க?

ஷீ-நிசி
18-04-2007, 03:25 AM
சின்னதம்பி : கைப்புள்ள கையில இலக்கணத்தை எடுத்துட்டு கிளம்பிட்டார்ல...
எத்தனை பாட்டு கெளம்பப்போகுதோ தெரியலியே...

ஷீ-நிசி என்கிற கைப்புள்ள : இப்படி உசுப்பி உசுப்பியே ஒடம்ப ரணகளமாக்கிப்புடறாங்களே.....
ஆதவா, இன்னுமா இந்த மன்ற சனங்க நம்ம இலக்கணத் திரிபக்கம் வராங்க?

ஆஹா! கெளம்பிட்டாங்கய்யா! கெளம்பிட்டாங்க....

ஷீ-நிசி
18-04-2007, 04:35 PM
ஆ! புள்ளைங்களா ரெடியா...

போன தபா, நேரசை ல, குறில், குறிலுடன் ஒற்று இணைந்து வரும் வார்த்தைகள் எல்லாம் நேரசை என்று அழைக்கப்படும் என்று பார்த்தோம்..

அதுமட்டுமில்ல,

நெடில் நெடிலுடன் இணைந்து வரும் வார்த்தைகளும் நேரசை என்று அழைக்கப்படும்.. புரியுதா...

சரி, உதாரணத்திற்கு வருவோம்...

கால்.. இதில் 1 நெடில், 1 ஒற்று..
மான்.. இதிலும் 1 நெடில், 1 ஒற்று..

நேரசை அவ்வளவுதான், ரொம்ப சுலபமா இருக்கு இல்லைங்களா
(இனிமேல்தானே இருக்கு ஆப்பு)

அசை இருவகைப்படும்,

1. நேரசை, 2. நிரையசை

1. நேரசை எனப்படுவது,

குறில் (க), குறில்+ஒற்று = குறிலொற்று (கா+ல்)

நெடில் (மா), நெடில்+ஒற்று = நெடிலொற்று (மா+ன்)

கழுத்து இன்னாமா வலிக்குதுபா...

நாளைக்கு பார்க்கலாமா.. ராசங்களா, பாடம் நல்லாருக்கா, இல்லையானு சொல்லுங்க, போரடிச்சா விட்டுடலாம்..

ஆதவா
18-04-2007, 04:39 PM
பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் போல.... பாடங்கள் எளிமையாக செல்லுகிறது/// தொடருங்கள்... மெதுவாகப் போனாலே பிடித்துவிடலாம்.....

இளசு
18-04-2007, 07:20 PM
சின்னக் கரண்டியில் சிறிது சிறிதாய் இலக்கணப்பால் புகட்டும்
கருணைச் செவிலியர் ஷீ-நிசிக்கு இந்தச் சிசுபாலனின் நன்றி!

poo
20-04-2007, 08:48 AM
வாழ்த்துக்கள் ஷீ..

கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பதால் அலுப்பில்லாமல் ஆர்வமாக கற்றுக் கொள்ள முடிகிறது..

உங்களுக்கு தோள்கொடுக்கும் தோழனுக்கும் வாழ்த்துக்கள்!

ஓவியா
22-04-2007, 05:13 PM
நல்ல பதிவு, எனக்குதான் ஒன்னுமே புரிய மாட்டேங்கிறது!!

நன்றி நண்பர்களே. நீங்கள் அனைவரும கலந்து ஜாமாய்க்கவும்.

பாரதி
23-04-2007, 01:33 AM
அன்பு நண்பரே,
கருத்துக்கள் குறைவு என்பதால் வருத்தப்பட வேண்டாம். நிச்சயம் ஒருநாள் அனைவருக்கும் பலனளிக்கப்போகும் இந்தப்பதிவை தொடர்ந்து எழுதி நிறைவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

RRaja
23-04-2007, 04:16 AM
குறில் (க), குறில்+ஒற்று = குறிலொற்று (கா+ல்)

நெடில் (மா), நெடில்+ஒற்று = நெடிலொற்று (மா+ன்)

கழுத்து இன்னாமா வலிக்குதுபா...

நாளைக்கு பார்க்கலாமா.. ராசங்களா, பாடம் நல்லாருக்கா, இல்லையானு சொல்லுங்க, போரடிச்சா விட்டுடலாம்..
நீங்க எந்த ராசாவ சொன்னீங்களோ தெரியாது... இந்த ராஜாவுக்கு கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கவும். தொடர்ந்து படிக்கிறேன்.

ஷீ-நிசி
23-04-2007, 04:38 AM
நன்றி நண்பர்களே! நிச்சயம் தொடருகிறேன் பாரதி அவர்களே!

ஷீ-நிசி
25-04-2007, 04:25 PM
மொத வகுப்புல,

எழுத்துனா என்னன்னு பார்த்தோம்.. எழுத்துனா என்ன சொல்லுங்க??

குறில்.. (குயிலு இல்லபா) நெடில், ஒற்று...

ஆங்! அதேதான்...கன்னுங்களா..

போன தபா,

அசை பாடத்துல நேரசை மட்டும் பார்த்தோம்!

நேரசை னா என்ன சொல்லுங்க,

குறில் (க) , குறில்+ஒற்று (க+ல் = கல்), நெடில் (கா), நெடில்+ஒற்று.. (கா+ல் = கால்)


இன்னைக்கு பாடத்துல, நிரையசைனா என்னன்னு பார்க்கலாம்....

குறில்+குறில் = இரண்டு குறில் சேர்ந்து வரும் வார்த்தைகள்...

அதாவது, பல, சில, மழை, பிழை.. இந்த வார்த்தைகள் எல்லாவற்றிலும் இரண்டு குறில்கள் சேர்ந்துள்ளன....

இன்னாபா கறீட்டா, நான் சொல்றது...

சரி இதுக்கு ஒரு பேரு வச்சிடுவோம்...

குறில்+குறில் சேர்ந்து வந்தா குறலிணை... சரிதானா தலைவா..

இப்போ, நிரையசை ல குறலிணை பார்த்தாச்சு

நாளைக்கு குறலிணைஒற்று பார்க்கலாமா..

poo
26-04-2007, 04:50 AM
இலக்கணம் மருந்தென மிரள்வதால் அளவாக, தேன் குழைத்து சுவையாக கொடுக்கும் ஷீ-க்கு நன்றிகளோடு பாராட்டுக்கள்...

(கொஞ்சம் விரைந்து கொடுக்க முயற்சி செய்யுங்கள் நண்பா... என் அவசரம் புரியும்னு நினைக்கிறேன்..)

aren
26-04-2007, 05:23 AM
நிறைய புரியாத விஷயங்கள் உள்ளன. மெதுவாக படித்து புரிந்துகொள்ளவேண்டும்.

இப்பொழுதுதான் புரிகிறது - நான் எத்தனை இழந்திருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
26-04-2007, 06:09 AM
நன்றி பூ! விரைவாக கொடுக்க விரும்பினாலும் முடிவதில்லை பூ! முயற்சிக்கிறேன்...
------------

ஆரென் அவர்களே! இங்கே பதிக்கும்பொழுதுதான் நானும் அந்த இலக்கணங்களை கற்றுக்கொள்கிறேன்.. உங்களைப்போலவே நானும் வருத்தபடுகிறேன்.. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்து கற்றுக்கொள்வோம்..

ஷீ-நிசி
30-04-2007, 10:52 PM
இப்போ, நிரையசை ல குறலிணை பார்த்தாச்சு

குறலிணைஒற்று பார்க்கலாமா..
---------------------------------------------

சிலக்(காதல்கள்) இந்த வார்த்தையில் அடைப்புக்குறியில் உள்ளதை விட்டுவிடுங்கள்..

சில என்பது குறலிணை, கூடவே பொட்டு விட்டுக்குனு ஒரு எழுத்து ஒட்டிகிட்டிருக்கு பாருங்க, அது ஒற்றெழுத்துனு உங்களுக்கு நல்லாவே தெரியும்..

அப்ப இதை எப்படி அழைக்கலாம், குறலிணை ஒற்று...

நிரையசைல,

குறலிணை (உதா: சில), குறலிணைஒற்று (உதா: சிலக்காதல்கள்), பார்த்தாச்சு..

அடுத்து குறில்நெடில் பார்க்கலாம்..

குறிலும், நெடிலும் இணைந்து வரும் வார்த்தைகள் இதிலே அடங்கும்..

உலா, விழா, நிலா,

அடுத்து குறில்நெடில்ஒற்று

கனாக்காலம் க-குறில், னா-நெடில், க்-ஒற்று..

கடைசியா, ரெண்டு ஞாபகம் வச்சிக்கோங்க...
நெடிலும்குறிலும் சேர்ந்து வராது... உதா. மாவு (மா=நெடில் - 1 அசை----வு=குறில் - 1 அசை) இது 2 அசையாக கொள்ளப்படும்
நெடிலும்நெடிலும் சேர்ந்து வராது...உதா. தோழா (தோ = 1 அசை----ழா = 1 அசை) இது 2 அசையாக கொள்ளப்படும்


அப்படி சேர்ந்து ஏதாகிலும் வார்த்தை வந்துச்சினா, அது ஓரசை யா இருக்காது, ஓரசை னா நாம உச்சரிக்கிறோம் இல்ல அதுல வேறுபடும்,

உதாரணம், மாவு - இதில் மா-நெடில், வு-குறில், மாவு என்று வார்த்தை வந்தாலும் மா என்று உசரிக்கும்போதே அது ஓரசையாகிறது, வு என்னும்போது அது இன்னொரு அசையாகிறது...

ஒற்று எழுத்துக்கு அசை கிடையாது, இது பூஜ்ஜியம் மாதிரி, சேர்ந்து வந்தாதான் மரியாதை... உதாரணம்: கால், கல், இப்படி சேர்ந்து வரனும். வெறுமனே 'ல்' அப்படி இருந்தா அர்த்தம் தராது..

இரண்டு ஒற்று எழுத்துக்கள் சேர்ந்து வந்தாலும் ஒன்றாகவே எடுத்துக்க வேண்டும்

உதாரணம்: அர்ப்பணிப்பு என்ற வார்த்தையில் ர் ப் என்ற எழுத்துக்கள் வந்தாலும்,

அ=குறில், ர்-ப்=ஒற்று (இரண்டுமே) குறில்+ஒற்று = நேரசை என்று கொள்ளவேண்டும்

உஷ்! அப்பாடா! இப்பவே கண்ணக் கட்டுதே

ஷீ-நிசி
14-05-2007, 04:30 PM
இதுவரிக்கும் எழுத்துன்னா,

உயிர், மெய், உயிர்மெய் எழுத்து, ஆயுத எழுத்து இந்த 4 வகையும்,

குறில்,நெடில்,ஒற்று இந்த 3 வகையும்,

அசைன்னா...

இந்த 3-ல (குறில்,நெடில்,ஒற்று) நேர்அசை, நிரைஅசை இந்த 2 வகையும் பார்த்தோம்.

----------------------------

சீர்னா இன்னான்னு பார்க்கலாமா.....சீர்னா இன்னான்னு பார்க்கலாமா..... (உன் கல்யாண்துக்கு வாங்குறதில்ல கண்ணு.. இலக்கண சீர்)


நேர் அசை, நிரை அசை. இந்த ரெண்டு அசைகளும் சேர்ந்தோ, அதாம்பா ஒன்னா, இல்லாட்டி தனியாவோ... இருந்தா சீர்னு சொல்வாங்க..

1 அசை வந்தா = ஓரசைச்சீர்
2 அசை வந்தா = ஈரசைச்சீர்,
3 அசை வந்தா = மூவசைச்சீர்,
4 அசை வந்தா = நாலசைச்சீர்

இதா சீர் வாய்ப்பாடு...

அப்பிடியே ஒரு தபா, எல்லாத்தையும் படிங்க..

நான் நாளிக்கி வரேன்...

jpl
11-09-2007, 01:11 AM
மீண்டுமொரு முறை கவி இலக்கணம் பார்ப்போமா?
என் பாணியில்!!!!
சொல்லாட்சியும்,இனிய சொற்களும் நமக்கு கைவர வேண்டுமென்றால் நிறைய படிக்க வேண்டும்.

செய்யுள் இலக்கணம் யாப்பு எனப்படும்.யாக்கப்படுவது(கட்டப்படுவது) யாப்பு ஆயிற்று.
செய்யுள் உறுப்புகள்
எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
செய்யுள் உறுப்பெனச் செப்பினர் புலவர்.

எழுத்து
இது நம் அனைவருக்கும் தெரிந்தே.
உயிர்,மெய்யெழுத்து,உயிர்மெய்யெழுத்து,ஆயுதெழுத்து ஆகியவை அனைத்தும் யாப்பில் குறில்,நெடில்,ஒற்று என்று 3 வகைகள் ஆகி அசைக்கு உறுப்புகளாகின்றன.

அசை
குறில்,நெடில்,ஒற்று என்னும் எழுத்துகளால் அசைக்கப்படுவது(கட்டப்படுவது)அசை.அது நேர் அசை,நிரை அசை என இருவகைப் படும்.

இளசு
11-09-2007, 05:52 AM
தொடருங்கள் லதா..

பல முறை படித்தால் இலக்கணமும் வசப்படும் எங்களுக்கு..

ஷீ-நிசி
11-09-2007, 08:21 AM
அட.. மறந்தே போச்சு இந்த திரி....

தொடருங்க சகோ!

தீபா
09-12-2007, 07:50 AM
வெண்பா ஓர் அறிமுகம் - பகுதி 1 -ஆசார வாசல்
---------------------------------------------


வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்.

இதில் இரண்டாம் சீர் கருவிளங்காய் ஆனால் மூன்றாம் சீர் நிரையசையில் தொடங்கி இருக்கிறது. எப்படி? இதுவும் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அலகிட்ட குறள். பதினைந்து வருடங்கள் முடிந்தும் பதில் கிடைக்கவில்லை. யாரோ ஒரு ஆசிரியர் அது குற்றியலிகரம் என்றதாய் நினைவு. அதற்கு நான் அவரிடம் குற்றியலிகரம் என்றால் மட்டும் ஏன் விதிவிலக்கு? வேறேனும் குறள்கள் அல்லது வெண்பாக்களில் இது போன்ற பயன்பாடு இருக்கிறதா? என்று கேட்ட கேள்விகளால் முதல் கேள்விக்கு பதில் சொன்னதே தவறு என்ற முறையில் முறைத்துவிட்டு போய்விட்டார். அதனால் உங்களிடம் விடுகிறேன் இக்குறளை. குற்றியலிகரம் என்றால் மட்டும் ஏன் ஸ்பெஷல் அந்தஸ்து? விளக்கவும். இப்போது இல்லையெனினும் பின்னெப்போதாவதாவது.

அன்புடன்
பிரசன்னா

தியாதெனில் வந்த விபரம்
யாதெனில்
திகரத்தின் சுகம் அதிகம்.
மாத்திரைக் குறை
அதனால் வந்தது
காய்முன் நிரை.

செந்தமிழும் நாப்பழக்கம்
தியாதெனில் சொன்னால்
தெரியும் வள்ளுவனின் வழக்கம்.

தீபா
09-12-2007, 07:53 AM
அட.. மறந்தே போச்சு இந்த திரி....

தொடருங்க சகோ!

தொடர்
தொடர்வதெப்போ?

ஆர்.ஈஸ்வரன்
09-12-2007, 08:54 AM
வெண்பா எழுத வேண்டும் என்று என் மனதின் ஓரத்தில் ஆசை உள்ளது..
அதன் சூட்சுமமும் ஓரளவிற்கு அறிந்துள்ளேன்..

வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் விளக்கமாக
சொல்லிகொடுங்களேன்...

திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை என்று அறிந்திருக்கிறேன்..

உங்கள் விளக்கங்களும் வெண்பாக்களும் தாருங்கள்..

இணையத்திலிருந்து கீதா என்பவர் எழுதின சில வெண்பாக்கள்
நன்றி கீதா...
http://geeths.info/archives/category/venba-muyarchi/

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.

விளக்கம்:
தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும்.
அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.

வெண்பாவின் சூட்சுமம்... நான் அறிந்தவரையில்...

சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து
ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் - பார்தனிலே
தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும்
தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ.

முதல் இரண்டு அடியில்
ஒரே உச்சரிப்பை உடைய வார்த்தைகள் மூன்று இடத்திலும்
அடுத்த இரண்டு அடியின் தொடக்கத்தில்
ஒரே உச்சரிப்பை உடைய இரண்டு வார்த்தைகள் வருகின்றன..

எல்லா வெண்பாக்களையும் நான் ஆராய்ந்த வரையில் இம்முறையிலேயே அமைந்துள்ளன..

ஆனால் இலக்கணப்படி எப்படி எனறு தெரியவில்லை.

வெண்பாவின் வகைகள்..

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
சவலை வெண்பா

வெண்பா முயற்சியில் சூட்சுமம் தெரியாமலே பல வருடங்களுக்கு முன்பாய் எழுதிய ஒன்று...


விழிநீர் இரவெல்லாம் தலையணை நனைக்க
வலியோடு உறங்குகிறேன் நிலவே - சில இரவுகள் மட்டும்
உமிழ்நீர் தலையணை நனைக்க உறங்குகிறேன், உன்
இதழ்கள் அன்றெல்லாம் என்னைக் கண்டு புன்னகைத்திருந்திருக்கும்...

நிச்சயம் ஏகப்பட்ட குறைகள் இதிலே இருக்கும்...

கவிதைகளில் வெண்பா எழுதுவது மிகவும் ரசனையான ஒன்று...

வெண்பா எழுத தெரிந்தவர்கள் யாராகிலும் இன்னும் விளக்கமாக
சொல்லிகொடுங்கள் நண்பர்களே!
நானும் வெண்ப கற்றுக்கொள்ள வெகு ஆசையாய் இருக்கிறேன்.

தீபா
09-12-2007, 09:07 AM
நானும் வெண்ப கற்றுக்கொள்ள வெகு ஆசையாய் இருக்கிறேன்.

செந்தமிழ்ச் செல்வரும்
லதா அம்மையும்
அம்மையோடு
சாம்பவியும்
பெண்பா வெழுதும்
ஆதவனும்
இன்னபிற செல்வங்களும்
இருக்க

பயமெதற்கு சிவனே!

poornima
26-07-2008, 09:58 AM
சீரிரண்டு மாச்சீராம் முச்சீரோ காய்ச்சீராம்
பாரிதுதான் பாவுக்கு பாங்காய் இலக்கணமாம்
மூன்றாம் அடிக்குகீழ் முச்சீர் வரவைத்து
வெண்பா வடிக்கலாம் வா

poornima
26-07-2008, 10:03 AM
நாள்மலர் காசு பிறப்பு இவைநான்கும்
நான்காம் அடிச்சீர் இறுதியில் நன்றேவாம்
தேன்போல் ஒலித்திட செப்பலோசை சேர்த்தேதான்
வெண்பா வடிக்கலாம் வா.

poornima
26-07-2008, 10:06 AM
முதலில் வருமெழுத்து ஒன்றினால் மோனை
இரண்டில் வருமெழுத்து ஒன்றில் எதுகையாம்
மாச்சீரும் காய்ச்சீரும் மாண்புடன் கற்றேநாம்
வெண்பா வடிக்கலாம் வா

செல்வா
26-07-2008, 10:26 AM
ஆஹா... வெண்பாவின் இலக்கணத்தையே வெண்பாக்களாக பாடும் பூர்ணிமா அவர்களே கலக்குறீங்க. எப்புடி இப்புடி அந்த வித்தைய கொஞ்சம் கத்துக் கொடுங்களேன்.

poornima
26-07-2008, 10:35 AM
வெகு எளிது

வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றிட
நண்பனே நம்மிடையே ஆசிரியர் உண்டிங்கு
அன்பாய் அதைஅவர் சொல்லித் தந்திடநாம்
வெண்பா வடிக்கலாம் வா

poornima
26-07-2008, 10:36 AM
அந்தப் பாட்டின் முதல்வரியில் தளை தட்டும். அதை மாற்றி இப்படி
படிக்க

வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றிட

பூமகள்
26-07-2008, 10:41 AM
ஆஹா.. வெண்பா இலக்கணத்தினை வெண்பாவில் புகுத்தி சொல்லியிருக்கும் பாங்கு.. வியக்க வைக்கிறது..

பாராட்டுகள் சகோதரி..:)
உங்களால் நாங்களும் கொஞ்சம் செந்தமிழைச் சுவைக்கிறோம்..!!
எங்களுக்கும் சொல்லிக் கொடுப்பீர்கள் தானே? :rolleyes::icon_rollout:

அந்தப் பாட்டின் முதல்வரியில் தளை தட்டும். அதை மாற்றி இப்படி
படிக்க
வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றிட
இந்த சிறு வார்த்தை மாற்றத்தை மேல் உள்ள உங்களின் இந்த (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=369597&postcount=67) பதிவில் Edit என்ற பட்டனை அழுத்தி.. மாற்றம் செய்யலாம் சகோதரி பூர்ணிமா..!!

மறுபடி பின்னால் எழுத வேண்டுமென்ற சுமை குறையுமல்லவா??:icon_rollout:

poornima
26-07-2008, 10:55 AM
எடிட்பற்றி சொன்னதற்கு ஏற்றமிகு நன்றி
படித்திட்டேன் மன்றத்தில் இன்றொரு பாடத்தை
பூமகளே வாழிஉன் புகழ்
- இது மூன்றடி - சிந்தியல் வெண்பா

இளசு
26-07-2008, 02:00 PM
கவனம் ஈர்க்கும் பூர்ணிமாவின் வெண்பாக்கள்..

பாராட்டுகள் + வாழ்த்துகள்!

poornima
26-07-2008, 02:13 PM
நல்லார் பதிவுக்கும் நல்லபடி பாராட்டி
எல்லார் பதிவிலும் பின்னூட்டி - செல்லும்
இடமெல்லாம் சிறப்பாய் பதில்தந்து ஊக்குவிக்கும்
இன்முக நண்பர் இளசு.

இளசு
26-07-2008, 02:18 PM
நல்லதைக் கண்டு ரசித்துவிட்டு - ஒன்றும்
சொல்லாமல் போவது பாவம்!

நல்ல நண்பர் நம் மன்றத்தில் எனக்கு
சொல்லித் தந்த பாடம்!


(இது வெண்பா அன்று பூர்ணிமா- இன்னும் அது எனக்கு வசப்படவில்லை..

முதல் கவளம் வாயில்..
மறுகணம் சமையல் பற்றி கருத்து..

உண்ணும்போது என் பழக்கம் இது..

அதே பழக்கம் - பணியிலும் மன்றத்திலும்...

கற்றுக்கொடுத்தவருக்கு நன்றியாய் என்றும் என்னுடன் இருக்கும்..


நன்றி உங்கள் பின்னூட்ட வெண்பாவுக்கு..)

poornima
26-07-2008, 02:30 PM
நல்லதைக் கண்டு ரசித்துவிட்டு - ஒன்றும்
சொல்லாமல் போவது பாவம்!

நல்ல நண்பர் நம் மன்றத்தில் எனக்கு
சொல்லித் தந்த பாடம்!




சற்றே மாற்றிப் பார்த்தேன் - வெண்பாவுக்காய்..

நல்லதைக் கண்டு ரசித்திட்டு ஒன்றுமே
சொல்லாமல் போவது பாவம் - இதைசொன்ன
நண்பரின் பாடம் படிநடந்தேன் மன்றத்தில்
வெண்பா வருமா எனக்கு.

பி.கு : உலகத்தில் வசப்படாதது என்று எதுவுமே இல்லை.இன்னும்
நாம் அதைக் கற்றுக் கொள்ளவில்லை அவ்வளவே..

இளசு
26-07-2008, 02:33 PM
ஆஹா!

உங்கள் அடி ஒற்றி நடந்தால் விரைவில் வெண்பாவும் வசப்படலாம்..

நன்றி + பாராட்டுகள் பூர்ணிமா!

அமரன்
26-07-2008, 03:56 PM
அந்தப் பாட்டின் முதல்வரியில் தளை தட்டும். அதை மாற்றி இப்படி
படிக்க

வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றிட

உங்கள் விருப்பப்படி உங்கள் அனுமதியின்றி
தளைத் திருத்தம் செய்யப்பட்டது

குணமதி
13-11-2009, 11:35 AM
வெகு எளிது

வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றிட
நண்பனே நம்மிடையே ஆசிரியர் உண்டிங்கு
அன்பாய் அதைஅவர் சொல்லித் தந்திடநாம்
வெண்பா வடிக்கலாம் வா


சொல்லித் தந்திடநாம் - தளை தவறுவதாக எண்ணுகிறேன். தெரிந்தவர்கள் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



நல்லார் பதிவுக்கும் நல்லபடி பாராட்டி
எல்லார் பதிவிலும் பின்னூட்டி - செல்லும்
இடமெல்லாம் சிறப்பாய் பதில்தந்து ஊக்குவிக்கும்
இன்முக நண்பர் இளசு.


இடமெல்லாம் சிறப்பாய் - இங்கும் ஐயமாக உள்ளது.

கலைவேந்தன்
11-04-2012, 07:37 PM
வெண்பா விலக்கணம் வேகமாய்க் கற்றிட
நண்பனே நம்மிடையே ஆசிரியர் உண்டிங்கு
அன்பாய் அதைஅவர் சொல்லித் தரவேநாம்
வெண்பா வடிக்கலாம் வா.

நல்லார் பதிவுக்கும் நல்லபடி பாராட்டி
எல்லார் பதிவிலும் பின்னூட்டி - செல்லும்
இடமெல்லாம் சீராய் பதில்தந்து ஊக்குவிக்கும்
இன்முக நண்பரி ளசு.

இப்படித்தான் வரவேண்டும்.

கலைவேந்தன்
11-04-2012, 07:39 PM
இந்தத்திரி முழுவதும் வாசித்தேன். எவரும் தொடங்கிய பாடத்தைத் தொடரவும் இல்லை முடிக்கவும் இல்லை.

இடையிடையில் சிலரது வெண்பாக்கள் தளையும் சீரும் தனிச்சீரும் ஒத்துவராமல் வெண்பா இலக்கணம் திணறியும் இருக்கின்றன.

வெண்பா எழுத இலக்கணம் இலேசாகத் தெரிந்தால் போதும். எழுத எழுதத் தான் அது நம் கைவரும்.

சுருக்கமாக ஒரே பதிவில் வெண்பா இலக்கணம் சொல்லிவிடுகிறேன்.

கலைவேந்தன்
11-04-2012, 07:55 PM
பொதுவான பலவகை வெண்பா இருப்பினும் ஒருவிகற்ப இருவிகற்ப பலவிகற்ப நாலடி வெண்பாக்கள் மட்டுமே எளிமையானதும் கைவரப்பெற்றதும் ஆகும்.

மிக முக்கிய கருத்துகள். நினைவில் வைக்கவேண்டியவை. இவை போதும் வெண்பாவுக்கு. ( ஆச்சரியமா இருக்கா..? பொறுங்க.. )

1. நான்கு அடிகள். முதல் மூன்று அடிகள் நாற்சீர். இறுதி அடி முச்சீர்.

உ - ம்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நாந்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத்த மிழ்மூன்றும் தா.

2. முதல் இரண்டு அடிகளும்
முதல் சீரிலும் இரண்டாம் அடியின் நான்காம் சீரிலும் ( அது தனிச்சொல் (-) இடப்பட்டு காண்பிக்கப்படும்)
அடுத்த மூன்றாம் நான்காம் அடியின் முதல் சீரும்
எதுகை இருத்தல் நலம்.

உதாரணம் :
பாலும் நாலும் கோலம்செய்
துங்க சங்க

3.கடைசி சீர் (அதாவது நான்காம் அடியின் மூன்றாம் சீர் )
ஒற்றைச்சீராக அமைதல் நலம். உதாரணம் : நாள் மலர் காசு பிறப்பு

நாள் = நேர்
மலர் = நிரை
காசு = நேர்பு
பிறப்பு = நிரைபு
இதே வாய்பாட்டில் தான் இறுதிச் சீர் அமைதல் வேண்டும்.

4. மிக முக்கியமானது:

வெண்பாக்களில் தளை மிக முக்கியம். வெண்டளை என்னும் வெண்பாக்குரிய தளைகள் மட்டுமே வரவேண்டும்.

அவை :

நேர் முன் நிரை ( மா முன் நிரை )
நிரை முன் நேர் ( விளம் முன் நேர் )
மூச்சீரின் இறுதி நேர் முன் நேர் ( காய் முன் நேர் )
முச்சீரில் கனிச்சீர் வராது அதாவது மூன்றாம்சீர் நிரையாக வராது.

5, மோனைகள் முடிந்தவரை இயல்பாக வரலாம் வரவில்லை என்றாலும் பாதகமில்லை.

இப்போது மீண்டும் நான் மேலே தந்த உதாரணத்தை இவ்விளக்கமுடன் பொருத்திப்படித்து புரிந்துகொண்டு எழுத முயலலாம்.

இந்த ஐந்து பாயிண்ட்களை மனதில் வைத்தால் போதும். நீங்கள் வெண்பா எழுதலாம்..!!

M.Jagadeesan
12-04-2012, 01:08 AM
இக்கட்டு வாழ்க்கையில் ஆயிரம் இருந்தாலும்
விக்கெட்டு வீழ்ந்ததென விம்முகிறார்- திக்கெட்டும்
தீராப் பிணிபோல் பரவும் கிரிக்கெட்டை
வேரோடு சாய்த்திடுவோம் வா.


வெண்பா எழுதி எனக்கு அவ்வளவாகப் பழக்கமில்லை. மேலே கண்ட வெண்பாவில் குறையிருப்பின் , சுட்டிக் காட்டவும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
12-04-2012, 03:00 AM
இக்கட்டு வாழ்க்கையில் ஆயிரம் இருந்தாலும்
விக்கெட்டு வீழ்ந்ததென விம்முகிறார்- திக்கெட்டும்
தீராப் பிணிபோல் பரவும் கிரிக்கெட்டை
வேரோடு சாய்த்திடுவோம் வா.

வெண்பா எழுதி எனக்கு அவ்வளவாகப் பழக்கமில்லை. மேலே கண்ட வெண்பாவில் குறையிருப்பின் , சுட்டிக் காட்டவும்.

ஆயிரம் இருந்தாலும் - நிரையொன்று ஆசிரியத்தளை வந்துள்ளதே ஐயா.
ஆயிரம் என்றாலும் --- என்று இருந்தால் இயற்ச்சீர் வெண்டளை வந்து வெண்பா சரியாகிவிடும் ஐயா.
மற்றபடி எல்லாம் சரியாக உள்ளது. நாள் என்ற வாய்பாட்டில் முடித்துள்ளீர்கள். நல்ல வெண்பா ஜெகதீசன் ஐயா :)

கலைவேந்தன்
12-04-2012, 03:45 AM
பாராட்டுகள் ஜகதீசன். இன்னும் நிறைய எழுதுங்கள். செந்தமிழும் நாப்பழக்கம்.

M.Jagadeesan
12-04-2012, 04:19 AM
வழிகாட்டியமைக்கு நன்றி கலைவேந்தன்!