PDA

View Full Version : வாழ்க்கைப்பயணம்.



செல்விபிரகாஷ்
12-04-2007, 05:10 AM
http://bp1.blogger.com/_e_laRiU0vmM/Rh29mRTBpOI/AAAAAAAAAEY/dkcBXh_tntg/s400/vazkkaipayanam_1.jpg

கரை சேர்ந்ததாய்
எண்ணி இறங்கி
விட்டார்கள்..
உண்மையான பயணம்
பாதுகாப்பான கரையில்
இல்லை....
சுழலும், சுனாமியும்
உள்ள கடலில் தான்
என்று உணராத
மனிதர்கள்..!

அரசன்
12-04-2007, 05:26 AM
படக்கவிதை அருமை. வாழ்த்துக்கள்

இளசு
12-04-2007, 07:28 AM
சட்டியில் இருந்து நெருப்புக்கு..

ஒரு வேதனைக்கு மாற்று - இன்னொரு பெருந்துன்பம்...

என்று நல்ல தீர்வாய் விடியும்?

பாராட்டுகள் செல்விபிரகாஷ்..

ஏன் கொஞ்சம் இடைவெளி உங்கள் பங்களிப்பில்?

மனோஜ்
12-04-2007, 07:44 AM
கடலில்பயணம்
கரைப்பயணம் வென்றது கடல் உமது கவிதையில் அருமை வாழ்த்துக்கள்

ஓவியன்
12-04-2007, 10:55 AM
கவிதையும் அதற்கு இளசு அண்ணாவின் விளக்கமும் அருமை!
சட்டியில் இருந்து நெருப்புக்கு..

ஒரு வேதனைக்கு மாற்று - இன்னொரு பெருந்துன்பம்..

அன்புரசிகன்
12-04-2007, 11:20 AM
கரை சேர்ந்ததாய்
எண்ணி இறங்கி
விட்டார்கள்..
உண்மையான பயணம்
பாதுகாப்பான கரையில்
இல்லை...
சுழலும், சுனாமியும்
உள்ள கடலில் தான்
என்று உணராத
மனிதர்கள்..!

கரையிலுள்ள உயிர்க்கொல்லிகளை எதனுள் சேர்ப்பது.?
அவர்களின் துணையால் பாதுகாப்பான பயணம் எட்டுத்திக்கிலடங்காது 9வது திசையை நோக்கியல்லவா உள்ளது.

அருமையான கவி. நன்றி செல்வப்பிரகாஷ்.

செல்விபிரகாஷ்
12-04-2007, 11:49 AM
நன்றி நண்பர்களே. வேலை கொஞ்சம் அதிகம், அதனால்தான் என் பங்களிப்பு குறைவு, இனி இடைவெளி இன்றி தமிழ்மன்றத்தில் எனது பங்களிப்பு இருக்கும்

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

ஓவியா
12-04-2007, 03:21 PM
மன்னிகவும், செல்வி இந்த வரிகளை சற்று விளக்குவீர்களா???

உண்மையான பயணம்
பாதுகாப்பான கரையில்
இல்லை...


என்ன சொல்ல வருகின்றீர்கள் தோழி??
பாதுகாப்பான கரையில் மக்கள் நிம்மதியாக, வாழ்ந்துக்கொன்டா இருகின்றனர்???????

மணல் நிறந்த இடத்தைவிட
கொந்தழிக்கும் கடலில் வாழ்வது சிரமம்தான்.
இருப்பினும் மனிதர்கள் கரையில் வாழும் ஜீவராசிகளாச்சே!!!!!!!


நான் கவிதையை தவறாக புரிந்திருந்தல், நீங்கள் (மட்டும்) மண்டுனு திட்டிக்கொள்ளுங்கள்..


அச்சோ, எனக்கு கவிதை புரியலபா, கோவிக்காம கொஞ்சம் விளக்குங்களேன்.

நன்றி