PDA

View Full Version : உரிமையுடன் வம்பிழு - பாகம் 4



lenram80
11-04-2007, 10:15 PM
(சாட் செய்யும் போது)
எப்போதும் தப்பு தப்பாகவே டைப் செய்யும் என்னவள்,

"ம்ம்ம்...நன் நல்லா இருக்கிறென். நிங்க நலா இருக்கிங்காள?"

"வாவ். என்ன இன்னைக்கு ஃபுல் ஃபார்ம்லே இருக்கியா?
ஒரு வார்த்தைக் கூட ஒழுங்கா டைப் பண்ணலெ!
ஆனால்,
உனது எழுத்துப் பிழை கூட
பொங்கலில் வரும் முந்திரி போல எவ்வளவு சுவை!"

சும்மாயிருங்க!
பிழை என்பது தவிர்க்கமுடியாதது!
அதற்காக
'பொங்கலில் முந்திரி!
என் தேச மந்திரி!
அருகே வா என் சுந்தரி'
என்றெல்லாம் என்னைப் புகழாதிங்க!

கள்ளி!
வஞ்சப் புகழ்ச்சிக்கும்
உயர்வு நவிர்ச்சிக்கும்
உனக்கு வித்தியாசமே தெரியாதா என்ன?

ஏதோ ஒன்னுரெண்டு பிழை என்றால் சரி!
நீ எழுதுவது எல்லாமே பிழையாச்சே!
இது பொங்கலில் முந்திரி அல்ல!
குத்திக் கொதறப்பட்ட குத்து பரோட்டா!

கொஞ்சம் பொறு!
நான் எப்போதடி சொன்னேன்,
மந்திரி! சுந்தரி! - என்றெல்லாம்?
ஒனக்கே இது கொஞ்சம்
ஓவரா தெரியலயா?

போடா! வெண்ணெ!!
வீட்டுக்கு வாடா, வச்சுகிறேன் உன்னே!

அய்யயோ! என்னை வச்சுகிறியா?
அசிங்கமா பேசாதடி!
ஆசையெ தூண்டாதடி!

வேறு தேசத்தில் இருந்தாலும்
என்னை நேசத்தில் நனைப்பவனே!
பசி தாங்குடா என்னவனே!
என் தேக தேச மன்னவனே!

எழுதிவிட்டு,
கணிணி வழி கலகலவென்று சிரித்தாள்!
ஒயர் வழி கொஞ்சம் உயிர் பறித்தாள்!

==========================

என்னங்க!
ரேடியோவிலெ நமக்கு புடிச்ச பாட்டு வந்துச்சு!
நானும் கூட சேந்து பாடினேன்!
திடீர்ன்னு ரேடியோ நின்னு போச்சு!

அடிப்பாவி,
உன்னோட பாட வெக்கப்பட்டுத்தான் அது நின்னுபோயிருக்கும்!
சுருதியே சேராம சுமாராத் தான் பாடுவே!
அதுக்கே இந்த நிலமையின்னா,
நல்லா பாடுனா,
ரேடியோ ஸ்டேசனே ரெண்டா வெடிச்சுருக்கும்!!

உண்மையே சொல்லுங்க!
நான் நல்லா பாடுறேன் தானே?

ஏற்கனவே டிவி, டேப் ரிகார்டர், வாக் மேன்
எதுவுவே வேலை செய்யலே!
கூட சேந்து பாடி, எல்லாத்தையும் சோந்து போக வச்சுட்டே!
இன்னுமா உனக்கு சந்தேகம்?

ஏதோ பிளக் பாயிண்ட் சரியில்லே,
அதுனாலே தான் எல்லாம் புகஞ்சு போச்சுன்னு சொன்னிங்க?

சின்னதம்பி பிரபு மாதிரியே இன்னும் எத்தனை நாளுடி நடிப்பே?
திருப்பி ரேடியோவையும் அதே பாய்ண்ட்லெ மாட்டி புகச்சுபுட்டே!

(ஏதோ முனங்குகிறாள்)

அய்யயோ! எனக்கு காதுலேயே விழுவலயே!
என் காதையும் பொகச்சுபுட்டியே!
என் உடல் கடிக்கும் மொசக்குட்டியே!
என் உயிர் வாங்கும் வெஷப்புட்டியே!

போடா! தடியா!
சிலசமயம் கோபப்படும் சிவகாசி வெடியா!
எப்போதும் என்னை அரவணைக்கும் ஆம்பளெ அம்மா மடியா!
என் கூட சண்டை போடுரியே, இது சரியா?


என் மீது படரும் பொம்பளெ கொடியே!
சண்டை போட்டா தாண்டி, சமாதானக் கொடியே!
இப்ப சில்மிஷம் பண்ண வாடி என் சிங்கார மிடியே!!!
==================================

ஓவியன்
12-04-2007, 04:06 AM
என் மீது படரும் பொம்பளெ கொடியே!
சண்டை போட்டா தாண்டி, சமாதானக் கொடியே!
இப்ப சில்மிஷம் பண்ண வாடி என் சிங்கார மிடியே!!!

ஊடலின் வெளிப்பாடு உங்கள் கவிதை லெனின்!, ஆருமையாக இருக்கின்றது. ஒவ்வொரு வரிகளாக நான் இரசித்தேன்.

முக்கியமாக பின்வரும் வரிகள்,
[COLOR="Navy"]
கள்ளி!
வஞ்சப் புகழ்ச்சிக்கும்
உயர்வு நவிர்ச்சிக்கும்
உனக்கு வித்தியாசமே தெரியாதா என்ன?

ஏதோ ஒன்னுரெண்டு பிழை என்றால் சரி!
நீ எழுதுவது எல்லாமே பிழையாச்சே!
இது பொங்கலில் முந்திரி அல்ல!
குத்திக் கொதறப்பட்ட குத்து பரோட்டா!
:4_1_8:

அருமையிலும் அருமை லெனின் - வாழ்த்துக்கள்.:aktion033: :aktion033: :aktion033:

இளசு
12-04-2007, 04:48 AM
கொஞ்சம் அந்நியோன்யம்
கொஞ்சம் சில்மிஷக்குசும்பு
கொஞ்சம் தமிழ்விளையாட்டு
எல்லாம் கலந்து லெனின் படைத்த
சுவையான கவிதைக்குப் பாராட்டு..

வஞ்சப்புகழ்ச்சிக்கும் உயர்வு நவிற்சிக்கும்
வித்தியாசம் அவர்களுக்குத் தெரியாத ( தெரிய விரும்பாத) காரணத்தால்தான்
ஆண்கள் பாடு ஏதோ இந்த அளவுக்கு தப்பித்திருக்கிறது!
இல்லையென்றால் பிடித்து, தப்பி விடமாட்டார்களா!!!!

அன்புரசிகன்
12-04-2007, 10:45 AM
ஒருவருக்கொருவர் கொடுத்து வைத்தவர்கள். (அந்த கணவன் மனைவியைச்சொன்னேன்).
சகல விசையங்களையும் உள்ளடக்கிய ஒரு சம்பவம். குறுநாடகம் ஒன்று பார்த்தால் போல் உள்ளது. இன்றய இயக்குனர்களின் கண்களில் பட்டுவிட்டால் இதற்கு நகைச்சுவை பாடல் சண்டை என்றெல்லாம் போட்டு ஒரு திரைப்படமே தயாரித்திருப்பார்கள்.
உரிமையுடன் வம்பிழுத்த லெனினுக்கு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.

gayathri.jagannathan
12-04-2007, 11:59 AM
தம்பதிகள் இருவரும் காதல் மற்றும் ஊடலினூடே இலக்கண ஆராய்ச்சி செய்கிறார்களே... நன்று..

ரசிக்கத் தக்க படைப்பு.... நன்றி லெனின்...

lenram80
14-04-2007, 02:24 PM
உரிமையுடன் நான் வம்பு இழுத்தாலும் அதற்கும் பாராட்டு தெரிவிக்கும் :) ஓவியன், இளசு, அன்பு ரசிகன், காயத்ரி- க்கு நன்றி தெரிவிப்பதோடு,
தேவைப் பட்டால், நான் உங்களுடன் வம்பும் இழுப்பேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்:)))

மனோஜ்
14-04-2007, 03:33 PM
அருமை அருமை காதல் அரட்டையை கண்ணீல் தந்ததிற்கு நன்றி

mukilan
14-04-2007, 03:44 PM
அருமை அருமை காதல் அரட்டையை கண்ணீல் தந்ததிற்கு நன்றி

ஏது! ஏது!! மனோஜ் உங்களுக்கு இப்படியான அனுபவமே இல்லை போலிருக்கிறதே!:smartass: லெனின் இந்த மாதிரி எழுதிப் பசங்களைக் கெடுக்கக் கூடாது. (ச்சும்ம்மா நான் வெளையாட்டுக்குச் சொன்னேன், உங்கள் கவிதையை ரசித்துப் படித்தேன்)