PDA

View Full Version : உங்களுக்கு உதவ இரண்டு டாக்டர்கள்mgandhi
11-04-2007, 06:00 PM
நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உங்களுக்கு உதவ இரண்டு
டாக்டர்கள் நிரந்தரமாக உங்கள் கூடவே இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லை?

பிரிட்டனின் ஆன்மீகத் தாத்தா என்று புகழப்படும் ஜார்ஜ் ட்ரெவெல்யன் 1913ம் ஆண்டு இந்த இரண்டு டாக்டர்களைப் பற்றி இப்படி அறிமுகம் செய்து வைத்தார்:-

"என்னிடம் இரண்டு டாக்டர்கள் இருக்கின்றனர்; என் இடது கால்; என் வலது கால்!"

உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு அனைத்து நோய்களையும் தீர்க்க வல்ல நடைப் பயிற்சியை இந்த இடது கால் மற்றும் வலது கால் டாக்டர்கள் தான் செய்ய முடியும்.

ஆகவே நீங்கள் உங்கள் இரு டாக்டர்களை தினமும் இயக்க வேண்டும்; மீதியை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்!

தினமும் நடப்பது என்பது ஆயுளைக் கூட்டி உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும் ஒரு அற்புதப் பயிற்சி!

2005ல் நவம்பர் 14ம் தேதி ஆர்ச்சிவ்ஸ் ஆப் இன்டர்னல் மெடிசின் நடத்திய ஒருஆய்வில் உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும் நேரடி சம்பந்தம் உடையவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி சிறந்த உடல் பயிற்சி!

தினமும் 30 நிமிடங்கள் நடப்பதானது உங்கள் ஆயுளை 1.3 வருடங்களைக் கூட்டுவதோடு, 1.1 வருடங்கள் இதய நோய் இல்லாமல் ஆக்குகிறது.

வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல அமெரிக்கப் பத்திரிக்கை தனது தலையங்கத்தில் நடைப் பயிற்சியைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து தினமும் 30 நிமிடங்கள் நடந்தால் 1.3 ஆரோக்கிய வருடங்களைப் பெறலாம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது! அதிக ஆற்றலைத் தருவதோடு ஆழ்ந்த உறக்கத்தையும் நடைப்பயிற்சி உறுதிப் படுத்துகிறது.

தினமும் நடைப்பயிற்சி செய்யும் மாணவன் நன்கு படிப்பதோடு படித்ததை உடனுக்குடன் நினைவுக்குக் கொண்டு வரும் ஆற்றலையும் பெறுகிறான்.

எங்கும் வாகனம்; எப்போதும் வாகனம் என்றைய இந்த வேக யுகத்தில் கார்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சென்று அலுவலகம் மற்றும் இதர இடங்களில் அமர்ந்து பணி செய்வோர் தங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவர்கள் மதிய உணவு இடைவேளையில் ஒரு அரை மணி நேரம் நிச்சயம் நடக்க வேண்டும்.

வாகனங்களைச் சற்று அதிக தூரத்தில் நிறுத்தி விட்டு பணியிடங்களுக்கு நடக்கும் வாய்ப்பை இவர்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

லிப்டை உபயோகிக்காமல் படிகளில் ஏறவும் இறங்கவும் செய்யலாம். மாடியில் பணிபுரிவோர் அதே பகுதியில் உள்ள டாய்லட்டை உபயோகிக்காமல்

அடுத்த தளத்தில் உள்ள டாய்லட்டை உபயோகிக்கும் விதமாக சற்று தூரம் நடந்து மாடிப்படிகளில் ஏறலாம், இறங்கலாம். இப்படி நடப்பதை சிறு சிறு வழிகள் மூலம் சிரத்தையுடன் மேற்கொண்டால் உடல் எடை அல்லது பருமன் அதிகமாவது தடுக்கப்பட்டு சரியான எடையுடன் கூடிய அழகிய மேனியை உருவாக்கிக் கொள்ளலாம்; அழகிய மேனி உடையவர்கள் அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டு என்றும் இளமையோடு இருக்கலாம்.
நடப்பதால் உடல் இளைக்கும்; அதிக சுறுசுறுப்படையும்.

அழகிகள் போட்டியைச் சற்று கவனியுங்கள். அதில் வென்றவர்களைச் சற்றுப் பாருங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த நடிகர் அல்லது நடிகை உங்களை ஏன் கவர்கிறார் என்பதைச் சற்று சிந்தியுங்கள். அவர்கள் முகமும் அங்க லாவண்யங்களும் ஒரு புறம் இருக்க அவர்கள் நடக்கும் நடை அழகே - கேட் வாக் என்று பிரசித்தி பெற்ற நடை அழகே- அவர்களது பொலிவை எடுப்பாக எடுத்துக் காட்டுவதை நிச்சயமாக நீங்கள் உணர முடியும்!

அவர்களிடம் உள்ள இரண்டு டாக்டர்களையும் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி ஆடிப் பாடி இடைவிடாது நடை பயின்று உடலை 'சிக்'கென்று பாதுகாப்பதால் அவர்கள் கவர்ச்சி உடையவர்களாக உங்கள் முன் தோன்றுகிறார்கள்!

தினமும் விடாமல் அரை மணி நேரம் நடப்பதால் கவர்ச்சி, அழகு, ஆரோக்கியம், நீடித்த ஆயுள் நிச்சயம்.ஆகவே உங்களுடன் கூடவே இருக்கும் இரண்டு டாக்டர்களைச் சற்று போற்றி மதியுங்கள்; அதன் மூலம் வலிமை வாய்ந்த உடலுடன் சமுதாயத்தில் மதிப்புடன் வாழுங்கள்!

நன்றி : சினேகிதி ஜனவரி 2007 இதழ்

அன்புரசிகன்
11-04-2007, 06:02 PM
ம்... பகிர்ந்துகொண்டதற்கு நன்றி காந்தி.

varsha
11-04-2007, 06:04 PM
தினமும் விடாமல் அரை மணி நேரம் நடப்பதால் கவர்ச்சி, அழகு, ஆரோக்கியம், நீடித்த ஆயுள் நிச்சயம்.ஆகவே உங்களுடன் கூடவே இருக்கும் இரண்டு டாக்டர்களைச் சற்று போற்றி மதியுங்கள்; அதன் மூலம் வலிமை வாய்ந்த உடலுடன் சமுதாயத்தில் மதிப்புடன் வாழுங்கள்!
ரத்தின சுருக்கமாஉ கூறீவிட்டீர்கள் காந்தி சார்

மனோஜ்
11-04-2007, 06:15 PM
கால்களின் வலிமை உடலுக்கு பெருமை
அருமை காந்தி

ஓவியா
11-04-2007, 06:20 PM
நல்ல பதிவு.

நன்றி : சினேகிதி ஜனவரி 2007 இதழ்
நன்றி : காந்தியண்ணா

விகடன்
11-04-2007, 06:36 PM
தரமானதும் தேவையானதுமான ஒரு பதிவு.
எல்லோரிற்கும் இருந்தும் அந்த வைத்தியர்களை சரியான முறையில் பாவப்பதில்லை.

ஓவியன்
11-04-2007, 07:41 PM
உண்மைதான், இந்த விடயம் பலருக்குத் தெரிந்தும் நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் கால வாழ்கையில் நடப்பதற்கு நேரம் பலருக்குக் கிடைப்பதில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும்.

banupriya
12-04-2007, 05:10 AM
இன்றைய இயந்திர வாழ்க்கையில் ,எல்லோருக்கும் பொருத்தமான ஒரு பதிவு. காலாற நடப்பதென்பதே ஒரு சுகமான அனுபவம் தான், ஆனால் எத்தனை பேர் அதை செய்கிறோம் ? மிதிவண்டி மிதித்தல் கூட நல்ல பயிற்சி தான். . ஆனால் எத்தனை பேர் மிதிவண்டி வைத்திருக்கிறோம்? எல்லோரும் இரண்டு சக்கர நான்கு சக்கர வண்டிகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.நோய் வந்து மருத்துவரிடம் சென்றுவிட்டு அவர் சொன்னால் மட்டுமே நடப்பவர்கள் தான் அதிகம் . எல்லோரும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் , நலமாக வாழவேண்டும் பயனுள்ள பதிவு நன்றி காந்தி அவர்களே.

srimariselvam
12-04-2007, 01:51 PM
காந்தியண்ணா... கலக்கிட்டீங்க.
இப்படி அடிக்கடி தாங்க டாக்டரையே பார்க்கவேண்டாம் போங்க..