PDA

View Full Version : காலத் தராசில் தவறுகள்.டாக்டர் அண்ணாதுரை
11-04-2007, 10:53 AM
அறியாத பருவத்தில்
புரியாமல் செய்த தவறுகளைகுறும்புகள் என்றார்கள்;

விவரமான பருவத்தில்
(யாருக்கும்) தெரியாமல் செய்த தவறுகளை
பருவக்கோளாறு என்றார்கள்;

இளமை கடந்த பருவத்தில்
தேவைக்காக செய்த தவறுகளை
தப்பு என்று தம்பட்டமடித்தார்கள்;

முடியாத பருவத்தில்
முடிக்காத கடமைகளே-தவறுகளாய்...!
நினைவுகளே-ஆட்கொல்லியாய்..!
இறக்காமலேயே சவக்கிடங்கில்.........
நாறியப் பிணமாய் மனசாட்சி!
(தற்பொழுது வேலை நிமித்தம் பாதி உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றேன். அடிக்கடி மன்றம் வர இயலாத நிலை, கடந்த சில நாட்களில்..சீனா, ஹாங்காங், ஜப்பான்...இன்று ஹாவாய்...இன்னும் சில தினங்களில்...அர்ஜெந்தினா...என்று 30 ஏப்ரல் வரையிலும்! ஆகவே பொறுத்தருளவேண்டும்)
அன்புடன் அன்பன்
ஆனந்த்

kavitha
11-04-2007, 10:59 AM
இறக்காமலேயே சவக்கிடங்கில்.........


இதை விட பெரிய தண்டனை அந்தத்தவறுகளுக்கு இல்லை.

வெற்றுத்தராசில்
எடைக்கல்லாய் தவறுகள்
சுமை குறையும் போது
நடுநிலைப்படும்

அன்புரசிகன்
11-04-2007, 11:15 AM
அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துக்கள். நலமுடனே மன்றம் வந்து சேர வாழ்த்துக்கள்.

gayathri.jagannathan
11-04-2007, 11:18 AM
விவரமான பருவத்தில்
(யாருக்கும்) தெறியாமல் செய்த தவறுகளை
பருவக்கோளாறு என்றார்கள்;
..........
முடியாத பருவத்தில்
முடிக்காத கடமைகளே-தவறுகளாய்...!
நினைவுகளே-ஆட்கொல்லியாய்..!
இறக்காமலேயே சவக்கிடங்கில்.........
நாறியப் பிணமாய் மனசாட்சி!!

அன்புடன் அன்பன்
ஆனந்த்

இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்...
பருவக் கோளாறு என்பதற்குச் சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்....
கவிதை பிரமாதம் ஆனந்த் அவர்களே....

(தயவு செய்து எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்...)

ஓவியா
11-04-2007, 05:06 PM
ஒவ்வொரு வரியும் மாடிப்படிபோல் பருவம் மாற மாற,
அங்கே கோர்த்த சொற்க்கள் அருமை.

கருவும் அருமை. கடைசி வரிகள் மட்டும் நல்ல நச்.

நன்றி.

டாக்டரய்யாவை பாராட்டுகிறேன்.

செலாமட் ஜாலான் ஆனந்த். ஜாங்கன் லூப்பா சமா தமிழ் மன்றம். கித ஒராங்க் மேஸ்தி துங்கு சம்பாய் டொக்தொர் பாலேக். ஜக பாடன்யா.

அரசன்
11-04-2007, 05:32 PM
இது கவிதை மட்டுமல்ல. யதார்த்தமான உண்மையும் கூட. அற்புதமான கவிதை.

இளசு
11-04-2007, 06:46 PM
;

முடியாத பருவத்தில்
முடிக்காத கடமைகளே-தவறுகளாய்...!
நினைவுகளே-ஆட்கொல்லியாய்..!
இறக்காமலேயே சவக்கிடங்கில்.........
நாறியப் பிணமாய் மனசாட்சி!!
அருமையான தேடல் கவிதை ஆனந்த்..


முழுமை அடைந்து ஜீவன்
ஆன்றடங்கும் வரம் வாய்ப்பது
அத்தனை சுலபமல்ல

மனமென்னும் மாயனைப் பற்றி
நம்ம விஜயன் சொல்வதைப் பாருங்களேன்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=191516#post191516

(அவரின் கையெழுத்தான கவியரசு வரிகள்..
எனக்கும் மிக மிக மிகப் பிடித்தம்..)

பென்ஸ்
11-04-2007, 07:20 PM
நீ செய்யாவிடில் யார் செய்வது?
இன்றே செய்யாவிடில் என்று செய்வது?

பதில்...
கவிதைக்கும்...
உங்களுக்கும்...

இளசு
11-04-2007, 07:24 PM
பதில்...
கவிதைக்கும்...
உங்களுக்கும்...

பென்ஸ்

ஆனந்தின் கையெழுத்துடன் முரண்படும்
அவரின் இன்னொரு கவிதை இங்கே -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8371

லட்சிய எல்லைக்கும்
தினசரி சறுக்கல் விளையாட்டுக்கும்
இடையில் இக்கவிதைகளும்
இவரின் கையெழுத்தும்...

இல்லையா ஆனந்த்?

ஷீ-நிசி
12-04-2007, 03:50 AM
விமானத்தில் பறக்கும்போது உண்டான கவிதையா நண்பரே! நிதர்சன கவிதை.... வாழ்த்துக்கள்!

ஓவியன்
12-04-2007, 03:57 AM
காலத் தராசில் தவறுகள் எப்படி எடை போடப் படுகிறது என்பதை அருமையாக உங்கள் வரிகளில் ஏற்றியுள்ளீர்கள் நண்பரே!

அருமையான தலைப்புக் கூட.....

வாழ்த்துக்கள்!

உங்கள் பணிகளை வெற்றிகரமாக முடித்து மீண்டும் வாருங்கள் மன்றாத்திற்கு - புதுப் பொலிவுடன்.

நாங்கள் காத்திருப்போம்.

டாக்டர் அண்ணாதுரை
13-04-2007, 07:24 AM
மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி....இதை பாதி பயணவழியில் எழுதுகின்றேன்.
அன்பிற்கினிய கவிதா, அன்புரசிகன்,காயத்ரி, மூர்த்தி, இளசு,பென்ஸ்,ஷீ-நிசி அனைவரின் விமர்சனத்திற்கும் நன்றி.
இளசு, நீங்கள் சொல்வது ஓரளவு உண்மையே...வாழ்க்கையில் சறுக்காதவர்கள் இருக்கிறார்களா என்ன?

ஓவியா...."தெரிம காசே அத்தாஸ் கிரிமான் சலாம் அண்டா.ஓவியா-புன் ஜாக டிரி யா? சய பாச்டி அக்கான் கெம்பலி கெ 'மன்றம்' செசெபட் யாங் பொலே."
அன்புடன் அன்பன்
ஆனந்த்

poo
19-04-2007, 04:48 AM
நிதானமான தொடக்கம் இறுதி வரிகளில் நெஞ்சைச்சுடும் நிஜம்.

பாராட்டுக்கள் நண்பரே..