PDA

View Full Version : ஜெஸிகாவின் முதல் முத்தம்



ஆதவா
11-04-2007, 10:49 AM
வணக்கம் மக்களே!

கதையைப் படித்தபின் என் அலுவலகத்திற்கு ஆட்டோ அனுப்பப் போகிறீர்கள்... !!! சகிப்புத் தன்மையோடு படியுங்கள்.
படித்து முடித்தபின் அடச்சே! இதெல்லாம் ஒரு கதையா என்று சொல்லக்கூடாது ஆமாம்...

ஆதவனும் (அட நானில்லைங்க) அவன் காதலியும் முத்தமிடும் அந்தி நேரம். அந்த முத்தத்தில் விளைந்த சத்தங்கள்
இடியாக ஒலிக்க, கண்கள் மின்னல் பார்வைகளை ஆதவன் வீச, சூழ்ந்து மறைத்துக் கொண்டிருந்த மேக மாமாக்கள்
கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு காதல் அரங்கேறுவதை கண்கொண்டு பார்த்து சிரிக்கிறது பூமி, அந்த
பூமியில் ஒரு புழுவாக நெண்டிக் கொண்டிருக்கும் பல உயிர்களில் ஆறறிவு உயிரனமாக கதிரவன் இருந்தான்..

மாலை நேரத்தின் மது மயக்கத்தில் பூக்கள் சொறிந்துகொண்டிருந்த சோம்பலை தன் புன்னகையில் வழித்துக்கொண்டு
நேரே மேனியை சுத்தம் செய்யப் புறப்பட்டான். அதுவரை என்ன செய்துகொண்டிருந்தான் என்று கேட்கிறீர்களா?
கதிரவனுக்கு ஏது வேலை? எல்லாம் கனவுகள் தான். காதல் கனவுகள். அதைவிடுங்கள். நாம் கதைக்குள் வருவோம்.

கதிரவன் என்றுமே தன் தலையை நீர் நனைய குளிக்கும் போது அருகிலிருப்பவர்கள் கண்கள்
குளித்துக்கொண்டிருக்கும்.. அந்த நேரத்தில் தன் அகோரக் குரலில் பாட்டு ஒன்று பாடுவான் பாருங்கள்.. முத்தமிட்டுக்
கொண்டிருக்கும் ஆதவனும் இரவுக் காதலியும் பயந்தே ஓடிவிடுவார்கள். பூமி அலறிஅடித்துக்கொண்டு சுற்றும்..
இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவனைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் இருக்கும்.. அதற்கு பெயர் காதல்.
இப்படித்தான் அவனே சொல்லிக் கொள்வான். சரி.. விஷயத்திற்கு வருவோம். மெல்ல , தண்ணீரின் கண்ணீரை
துடைத்துவிட்டு குளித்துவிட்டு வரும் கதிரவன் மிக அழகாக இருப்பான்.

அங்குள்ள ஆண்களில் கதிரவன் அழகு என்றாலும் சற்று அழுக்குதான். சூரியனின் பாசத்தில் பொங்கி வழியும் அவன்
வியர்வைத் தண்ணீர். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் குடம் எடுத்து வந்து பிடிப்பார்கள் என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன். கண்கள் அயிரை மீன் மாதிரி.. வேறென்ன சொல்ல, மீன்களைத் தவிர வேறொன்றும்
உவமையே சிக்கமாட்டேங்குது. மூக்கு ஆங்கில எழுத்தான 'எல் ஐ கவிழ்த்தமாதிரி இருக்கும். செவிகளிரண்டும்
யானைசெவிகள்.. சற்று நீளமான வாய்.. எத்தனை இன்ஞ் என்று கேட்டுவிடப்போகிறீர். இப்படியே வருணித்துக்கொண்டு
போனால், போடா இதெல்லாம் ஒரு கதையா என்று திரியை மூடிவிடுவீர்கள்.. அதனால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்,.

இந்த நேரத்தில் இவன் எங்கு புறப்படுவான்?.. எல்லாம் காதலியைத் தேடித்தான்... நிற்க, காதலி என்றால் இவன்
மட்டுமேதான் காதலிக்கிறான். அவளில்லை. கிட்டத்தட்ட இது ஒருதலைக் காதல். பாவம் கதிர், பலதடவைகள் காதலை
பல கோணங்களில் சொல்லிப் பார்த்தான்.. ம்ஹீம்.. அவள் இணங்கவே இல்லை. எல்லா முயற்சியும் கடலில் கலந்த
நதிநீர்தான்.. காதலிக்கு ஒரு பெயர் இருக்குங்க. ஜெஸ்ஸிகா. அவள் ஒரு கிறிஸ்டீயன்.. ஜெஸ்ஸிகா என்ற பெயர்
வைத்துக்கொண்டு பின்ன என்ன முஸ்லீமா என்று பிரதீப் அண்ணா ஆட்டோவை ஐதராபாத்தில் ஸ்டார்ட் செய்வது
தெரிகிறது... ஜெஸீகா மிக அழகு என்றாலும் கர்வம் ஜாஸ்தி. தான் தான் உலகிலேயே பேரழகி என்று குதிகுதி என்று
குதிப்பாள். அவளைப் பற்றிய வருணனைகள் கீழே தருகிறேன். நினைவில் கொண்டு சென்று பெருமூச்சு விட்டுக்
கொள்ளுங்கள்..

ஜெஸ்ஸிகா பார்ப்பதற்கு மிக ஒல்லியாக இருப்பாள். கேசம் இருக்கிறதே அது மலையிலிருந்து விழும் அருவியாக அப்படி
ஒரு அழகு... கேசத்தை சுருட்டி கொண்டை போடும் பழக்கமே இல்லை இவளிடம். ஒவ்வொரு முடியையும் கையில்
எடுத்துக் கொண்டு ஆனாலப்பட்ட ஆலமரத்தையே சாய்க்கலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதை அங்கேயும்
இங்கேயும் ஆட்டிக்கொண்டு அவள் நடக்கும்போது கேசத்தின் பொலிவைக் கண்டு பாதைகள் எல்லாம் சுத்தமாகிவிடும்
என்று கதிரவன் சொல்லுவான். நெற்றி இருக்கிறதே நெற்றி, ஆறாம் பிறை நிலவைப் போல அரை நெற்றி. அதில் பொட்டு
இருக்காது. நெற்றியில் உள்ள சுருக்கங்களை ஒப்பிட கவிஞர்கள் பொருளைத் தேடுகிறார்களாம். கண்களின்
வசீகரத்தைப் பற்றி நான் எழுதவே முடியாது. அட அட என்ன ஒரு அழகு போங்கள். நட்சத்திரங்கள் மின்னுவதைப் போல
இமைகளை மூடி திறக்கும்போது ஒரு ஒளிவெட்டு கண்களில் ஏற்படும் பாருங்கள்... சூரிய கிரகணத்தைவிட சூடானது..
மூக்கு கொஞ்சம் நீளம்தான். இருந்தாலும் கொக்கு மூக்கோடு ஒப்பிட வேண்டாம். மூக்கின் நுனியில்தான் எப்போதுமே
அமர்ந்துகொண்டிருப்பாள். அத்தனை கோபம் அவள் காட்டுவாள். மூக்கில் இரு துவாரங்கள்.. (இந்த முறை ராகவன்
சேர்ந்து கொண்டார்.. இருங்க மக்களே! ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணாதீங்க.) துவாரத்தின் வழியே என்ன இருக்கிறது
என்று அறியாமல் காற்று நுழைந்துவிடும்.. அங்கிருந்து பெருத்த அழுகையோடு இன்னொரு காற்று வெளியே வரும்...
பேசாமல் காற்றாகவாவது பிறந்து இருக்கலாம் என்று தோணும். நுதல்களைப் பொறுத்தவரை அவள் உருவத்திற்கு
பொருத்தமாகவும், குறைவான நீளம் கொண்டனவாகவும் இருக்கும்.. உதடுகளில் வெடிப்பு இருக்கும்.. கதிரவன் அங்கேயே
படுத்துக்கொள்ள பார்ப்பான். எந்த பருவத்திலும் 0 டிகிரியில் வைத்திருப்பாள். அவ்வப்போது நாக்கைக் கொண்டு தடவித்
தடவியே குளிர்பிரதேசமாக வைத்திருப்பாள். பொதுவாக கழுத்தை சங்குக்கு ஒப்பிடுவார்கள். நான் கொஞ்சம்
வித்தியாசமாக யோசிக்கிறேன். தண்ணீர் குடத்தின் விளிம்பை கவிழ்த்துப் போட்ட மாதிரி இருக்கும். கழுத்தில்
அவ்வப்போது நரம்புகள் எட்டிப்பார்க்கும்.. அப்படியே இறங்கி வந்தால்.... அய்யய்யோ பென்ஸ் கூட சேர்ந்துட்டாரே!!
அருவாள எடுத்துவர போயிருக்கார்... அப்படியே நிறுத்திக்கிறேன்..

அப்பாடா! ஒருவழியா முக அழகை வர்ணிச்சுட்டேன்.. இனியாவது கதைக்குள் போவோம்...

கதிரவன் ஒரு பூங்காவில் நின்றுகொண்டிருந்தான். காதலித்தவர்கள் பைத்தியம் என்று மயூரேசன் சொல்லிவிட்டாரல்லவா
அதனால் அவன் பூக்களோடு பைத்தியக்காரத்தனமாகப் பேசிக்கொண்டிருந்தான்.. அங்குள்ள பூக்கள் பல வகைகள்
ரோசாப்பூக்கள்தான் நிறைய இருந்தன.. அவன் மனதிற்கு பிடித்த பூவான சிவப்பு வர்ண ரோசாப்பூக்கள் அன்றைய
இரவை எதிர்நோக்கி தன் கன்னத்தில் கைவைத்து சோகமாக இருந்தது.. எதிர்நோக்கியதர்க்கும் சோகத்திற்கு பல
அர்த்தங்கள் உண்டு. என்னிடம் கேட்காதீர்கள்.. எனக்கே தெரியாது. அந்த ரோஜாப் பூ சொன்னது, அடப்பாவி கதிரவா!
இப்படி நடமாடும் பூவுக்காக காத்திருக்கிறாயே! எங்களையும் கொஞ்சம் கவனித்து ஒரு முத்தம் கொடுத்தால்தான் என்ன?
என்று கேட்டன. கதிரவன் சும்மா இருந்தானா? இல்லை. வேலியைத் தாண்டிப் போய் ஒரு முத்தம் கொடுத்தான்... ரோசா
முற்கள் அவன் சட்டையை பிடித்துக்கொண்டு இன்னும் இரு முத்தம் கொடு என்று கேட்டன... பாவம் அவன்.. அப்படி
கொடுத்துக் கொடுத்தே எச்சில் செய்துவிட்டான்... நல்லவேளை அந்தநேரம் பார்த்து விஜயகாந்த் இல்லை. (பூந்தோட்டக்
காவல்காரன்).

தன் கையில் உள்ள கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். மணி 6.10. இன்னும் வரவில்லையே அவள்...
சலித்துக்கொண்டான். அங்குள்ள பாறை ஒன்றில் அமர்ந்து நிலவோடு பாட்டுக்குப் பாட்டு பாடிக்கொண்டிருந்தான்...
சரியாக 6.20க்கு அவள் வந்தாள்... பூங்காவில் ஒழுங்காக எரியாத விளக்குகள் கூட எரிந்தன.. நிலவு தன் முகத்தைத்
துடைத்துக்கொண்டு ஃபேர் அன் லவ்லி போட்டதைக் காணமுடிந்தது,. அவன் அப்படியே கனவுக்குள் போய் விட்டான்.
காதல் செய்யும் பாட்டைப் பாருங்கள். நன்றாக இருந்த கதிரவன் இப்படி ஆகிவிட்டானே என்று ஒரு ஓரமாக இரு காதல்
புறாக்கள் கண்ணீர் விட்டன... (நன்றாக கவனித்துப்பார்த்தால் ஆண் புறா மட்டுமே, "சிக்கிவிட்டானே" என்று கண்ணீர்
விட்டது தெரிந்தது.) அவள் ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறாள். அவனுக்கோ குளிர்தேவதை வந்து ஆட்டு ஆட்டு என்று
ஆட்டிவிட்டாள்... உடலெல்லாம் ஒருவித நடுக்கம் ஏற்பட, கண்களாலேயே வலைவிரித்தாள் அவள்..

அவள் புன்னகைத்தாள்... இவனோ அந்த புன்னகையில் உள்ளே நுழைந்து தன் ஆசையைத் தீர்த்துக்கொண்டான். அட
அட... காதலியின் புன்னகை என்ன ஒரு அற்புதம் போங்கள்... அதை அனுபவிக்கனுமே!!... மெல்ல அதரம் திறந்தாள்.
ஒருநிமிடம் உலகத்திலுள்ள அனைத்து கோள்களும் நின்றுவிட்டன. அவள் எச்சில், உதடுகளை முத்தமிட்டு பிரிய, அவள்
சொன்னாள்,," கதிர் உன்னை நான்...... போடா "

" கதிர் உன்னை நான்...... போடா " ... இந்த வார்த்தைகள் அவனை அப்படியே சொர்க்கத்திற்கு எடுத்துக்கொண்டு
சென்றுவிட்டது.. அங்கே ரதியும் மன்மதனும் கட்டிபிடித்து முத்தமிட்டு நடனமாடுவதைக் கண்டு களித்தான்...
சொர்க்கத்தைப் பற்றி வர்ணனை????? வேண்டவே வேண்டாம்... இம்முறை ஓவியா மேடம் லண்டனிலிருந்து ஆட்டோ
ஓட்டிக்கொண்டு வருவதாக SMS ..... உள்ளூர் ஆட்களிடமே அதற்கு அடிவாங்கிவிடலாம்... ஒரு தேவதை இறகுகளைப்
பொருத்திக்கொண்டு கதிரவனை தன் மடியில் வைத்து அதே பூங்காவில் இறக்கிவிட்டது... அவள் இன்னும்
சிரித்துக்கொண்டுதான் இருந்தாள். சிரித்தவள் சும்மா இருந்தால்தானே ஆகும்? நம் கதைக்கு முக்கிய காரணியான
முத்தத்தை காற்றிலே கலந்துவிட்டு சென்றாள்...

கதிரவன் தெளிவான நிலைக்கு வந்த பின் ரொம்பவே வருத்தப்பட்டான்... பாழாய்ப் போன மன்மதனும் ரதியும் நம்மை
மயக்கிவிட்டார்களே ! இதனால் நம் உதடுக்கு வரவேண்டிய முத்தம் காற்றில் மிதக்கிறதே என்று ரொம்பவே
வருத்தப்பட்டான்... முத்தக் கறை காற்றில் மிதந்துகொண்டுதான் இருந்தது.. கரையாமல்.

அவன் அதை மெல்ல பிடிக்க முயன்றான்.. அந்த நேரம் பார்த்தா தென்றல் வீசவேண்டும்.. பூச்சாண்டி வேலைகள்
காண்பித்தது இந்த காற்று... முத்தம் அப்படியே பறந்து போய் பூங்காவின் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டிருக்கும்
செம்பருத்திச் செடி மீது அமர்ந்தது.. இவன் அதறிப்பதறி ஓடிப்போய் அந்த பூவை சாத்து சாத்து என்று சாத்தினான்....
அடப்பாவமே! கதிரவனுக்கு அதிட்டமே இல்லை.. காற்று மீண்டும் வேலையைக் காட்டியது.. இம்முறை பூவிலிருந்து
அப்படியே வானம் நோக்கி பறந்தது ஜெஸ்ஸிகா இட்ட அழகிய முத்தம். மேக வீரர்கள் அதைத் தடுத்து நிறுத்தினார்கள்.
இவன் எப்படியோ காதல் தந்த சக்தியில் பறந்து வந்தான்.. மேகம் அதுவரை அடைக்கலமாய் அந்த முத்தத்தை
பத்திரமாக பாதுகாத்துவைத்திருந்தது. இவன் ஒரு போர்வீரனைப்போல் ஆவேசமாக பறந்துவந்தான்.. கையில் ஒரு
கேடயம் இருந்ததையும் கவனிக்கவேண்டும். மேகம் பயந்ததோ என்னவோ தன் வேகத்தைக் குறைக்காமல்
ஓடிக்கொண்டே இருந்தது. முத்தம் மேகத்தின் அணைப்பில் தூங்கியது. கதிரவனுக்கு பெட்ரோல் தீர்ந்துவிட்டதோ
என்னவோ மெல்ல மெல்ல வேகம் குறைந்து வந்தான்.. களைப்பு வேறு வாட்டியது. கண்கள் முத்தத்தைக் காணாமல்
வலித்தது. கண்களின் நரம்புகள் வெளிறியது. காதுமடல்கள் சம்மட்டியில் அடித்தவாறு சட்னியானது. இத்தனைப்
புலன்களும் ஒரேசமயத்தில் மயக்கமுற்றாலும் மனம் மட்டும் ஒளிவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென ஜெஸிகா
அவன் கண்களில் வந்து போனாள். " மச்சான்! நல்லா பறந்துபோடா " என்று சொன்னாளே பாருங்கள்... எங்கிருந்துதான்
வந்ததோ அத்தனை வேகம்..... ஒரே மூச்சில் தனக்கு மட்டுமே சொந்தமான முத்தத்தை சீதையைக் கவர்ந்த
ராவணனனாகச் சென்றுகொண்டிருக்கும் மேகத்தை அடைந்து அதனோடு சண்டையிட்டான்... அவளை நினைத்துகொண்டு
அவள் கண்களின் நரம்புகளை எடுத்து பின்னி ஒரு கத்தியை நொடிப்பொழுதில் தயாரித்துவிட்டான்... மேகம் அந்த
கத்தியின் பளபளப்பைக் கண்டதும் முத்தத்தை கீழே விட்டுவிட்டு ஒரே ஓட்டமாக சென்றுவிட்டது..

கீழே வீழ்ந்துகொண்டிருந்த முத்தம் கனவிலிருந்து மீண்டது... அநாதையாக வானில் விடப்பட்டதை
உணர்ந்துகொண்டது... இம்முறை மழை முத்தத்திற்கு அடைக்கலம் கொடுத்தது.. கதிரவனுக்கு அன்றுமுதல்
மழையென்றாலே பிடிக்காமல் போனது...

ஓடிப்போன மேகம் தன் கோபத்தை இப்படியாகக் காண்பித்தது. மழைத் தண்ணீர் முத்தத்தை கரைக்காமல் தன்
இடுக்குகளில் சொறுகிக்கொண்டு மண்ணை நோக்கி விழப் பார்த்தது... மேகத்திடமிருந்து விடுதலை வாங்கித் தந்த
சந்தோசத்தில் தலைகால் புரியாமல் வானில் குச்சிப்புடி ஆடிக்கொண்டிருந்த கதிரவன் அவன் சக்தியை இழந்து தரையை
நோக்கி விழுந்தான்... மழையிடம் சிக்கிய முத்தம் காணாமல் போனது... மழையைவிட அதிக அளவு தண்ணீரை இமைகள்
என்ற மேகம் சொறிந்தது. அப்போது இரவாகையால் மின்னல் அடித்த போது எங்கோ ஒரு ஆட்டோடு கொம்பில்
அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த முத்தத்தைக் கண்டுவிட்டான்.... தன் கால் மேல் கால் போட்டு
அமர்ந்திருந்த முத்தத்தை ஆடு தன் குளிரைப் போக்க தலையை ஆட்டி வெளியே வீசியது.... தன் மேனியெல்லாம்
சேறாகப் போனாலும் பரவாயில்லை என்று அங்கிருந்த சேற்றுக் குளத்துக்குள் விழுந்து தேடினான்.... அடக் கதிரவா!!
உனக்கு மூளையே இல்லையடா!! நேரே ஜெஸ்ஸிகாவிடம் கேட்டாள் இன்னொரு முத்தம் கொடுக்கப் போகிறாள் என்று
சேறு அவன் முகத்தில் சேற்றைப் பூசப் பார்த்தது... அப்போழ்து சொன்னான்.. " உனக்கென்ன தெரியும் முதல் முத்தத்தின்
அருமை... நான் தொலைத்துவிட்டு நிற்கிறேனே என்ன செய்வேன்..." என்று அலறினான்....

மழை ஓய்ந்தது.. இரவு பனி படர்ந்தது... பனியிடன் இந்த மனிதன் கஷ்டப்படுவது பார்க்கும் இயற்கை அனைத்திற்கும்
வருத்தமாக இருந்தது.. என்ன செய்ய? முத்தம் கிடைக்காமல் இவன் போகமாட்டானே!! மெல்ல அந்த சேற்றிலேயே
உறங்கிப் போனான்.. மழையின் துளிகள் அவனுக்குத் தாலாட்டு படித்தது. இரவு கனவில் ஜெஸிகா மிரட்டுவது தெரிந்து
சீக்கிரமே அதிகாலையில் எழுந்துவிட்டான்... இம்முறை தன் தேடுதல் வேட்டையில் முத்தம் கிடைக்காவிட்டால் மேனி
வானுக்கு மனமோ அந்த மானுக்கு என்று சபதம் பூண்டுகொண்டான்... அவன் ஆயத்தமாவதை சூரியன் கைகொட்டி
வரவேற்த்தான்.. அவனின் கதிர்கள் கதிரவனின் நெற்றியில் குங்குமத்தைப் பூசின. இரவெல்லாம் கனவில் வாட்டிய
மகராசி தற்போழ்து நினைவில் வந்தாள்...

காற்று, மேகம், மழைம, சேறு இப்படி பல தடைகளைத் தாண்டி முத்தம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்றால்
சும்மாவா என்ன? அத்துணை சக்தி... காதல் எவ்வளவு தெய்வீகமானது தெரியுமா? ஷீநிசியிடம் கேட்டுப் பாருங்கள்..
அவர்தான் காதல்காலமெல்லாம் வரைந்தவர்... இப்படியொரு நொடிப்பொழுதில் அவன் கடற்கரைக்குச் சென்றான்...
சேற்றின் வழி நதியில் கலந்து கடலை அடைந்திருக்கவேண்டும் என்னவள் கொடுத்த முத்தம் என்று
நினைத்துக்கொண்டான்.. கடல் ஒன்றுமே தெரியாமல் தேமே என்று படுத்துக்கொண்டிருந்தது. சீற்றமில்லை, சுனாமி
இல்லை, ஒரு மண்ணுமில்லை... ஜெஸ்ஸிகாவை நினைத்துக்கொண்டு மயூரேசனிடம் கடன்வாங்கிய ஹாரிபாட்டர்
மந்திரத்தை உபயோகித்து கடலுக்குள் சென்றான்....

அலைகளின் அடுக்குகளில் ஒளிந்துகொண்டிருக்குமா என்று முதலில் துலாவினான். ம்ஹீம்... கடலில் துலாவுவது என்பது
அத்துணை சுளுவா? இல்லை.. அலையடுக்குகளில் இல்லை... அங்கே இரு சிலைகள் நிர்வாணமாக நின்று
கொண்டிருக்கிறதே! அட ஆமாம். கவிதைப்போட்டியில் கலந்துகொண்டே அதே சிலைகள் தான்.. ஒருவேளை
இச்சிலைக்குத் தெரியுமோ?,, அடடா! கடலிள் இறங்கியபின் எப்படி போய்க் கேட்பது என்று அந்த திட்டத்தைக்
கைவிட்டான்... திடீரென ஒரு சந்தேகம்.. தன் சட்டைப் பையினுள் இருந்து அலைபேசியை எடுத்து லண்டனுக்கு ஒரு
போன் செய்தான்.. இச்சிலையைப் பற்றி நன்றாக அறிந்துவைத்திருந்த ஓவியாவிடம் கேட்டான்... ம்ம்... ஏதோ ஆராய்ச்சி
என்று மழுப்பிவிட்டார்கள். சரி வேறு யாரிடம் கேட்கலாம்? லெனின்? அட ஆமாம்... லெனினிடம் கேட்கலாமே ஆனால்,,,,
லெனின் அலைபேசி எண் தெரியாதே!!... வேறு யாரிடம் கேட்க??? யோசித்துக்கொண்டிருக்கும்போதே பிச்சி அங்கே
வந்துவிட்டார்..

பிச்சியிடம் கதிரவன் கேட்டான். ம்ம்ஹீம்.. அவர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு க்ளூ மட்டும் கொடுத்தார்... இந்த
வானமும் கடலும் முட்டிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு மூலையில் பொத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று
சொல்லிவிட்டு மறைந்துபோனார்...

இவன் வேகவேகமா நீந்தி அந்த இடத்தை அடைந்துவிட்டான். வானும் கடலும் ஒருவரையொருவர் மனம் தவிர்த்துவிட்டு
முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.. அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது ஜெஸ்ஸிகாவின் முத்தம்... மெல்ல
அடியெடுத்து வைத்து கதிரவன் , அந்த முத்தத்தை லபக் என்று பிடித்துவிட்டான்... பிடித்தவன் அந்த முத்தத்தை தன்
உதடுகளுக்குள் பொருத்திவிட்டான்.... திடீரென ஒரு ஆக்ரோசப் புயல் தாக்கியது.. முத்தத்தின் வேலையை அது
காட்டியது.

வானும் கடலும் கண்களில் கோபம் கொப்பளிக்க இவனைப் பார்த்தது... அலறியடித்துக்கொண்டு நீந்தி சென்றான்
கரைக்கு... கரைக்கு வருவதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள்... அதையெல்லாம் எழுதுவதற்கு நேரமில்லை. கரையில்
ஜெஸ்ஸிகாவோடு இளசு அண்ணாவும் அறிஞரும் வெற்றி மாலை புடை சூழ நின்றுகொண்டிருந்தார்கள்... கரை வரைக்கும்
பயத்தோடு வந்தவன் கரை கண்டதும் மயங்கிவிட்டான்... அங்கே ஆட்டோவில் வந்த பெங்களூர் மக்கள் அவனை எடுத்து
கடல்நீரைத் தெளித்து மயக்க நிலையை போக்க முயன்றனர்.... ம்ஹீம்... இதற்கு ஒரே மருந்து ஜெஸிகா தான்..

ஜெஸிகா அவனை எழுப்ப முயன்று நீரைத் தெளித்தாள்... அவள் கையில் பட்ட அமிர்த நீர் அவனின் கண்களைத்
திறக்கவில்லை.. அவன் காதில் ஒன்று சொன்னாள்... உடனே எழுந்துவிட்டான்....

அப்படி என்ன சொல்லியிருப்பாள்??/ யோசியுங்கள்...

கதை என்ற பெயரில் நான் இட்ட விதையைப் பார்த்துவிட்டு, பதை பதைக்க ஓடிவந்து என்னை உதைக்கப்
போகிறீர்கள்... என் சதை கிழியப் போகிறது.. எதையும் செய்யும் முன் யோசித்துவிடுங்கள்.. :D

அன்புரசிகன்
11-04-2007, 11:10 AM
கதையிலும் இடையிடை வந்த பிட்டுக்களை ரசித்தேன். ஆகா.. ஓகோ.. 1ம் வகுப்பு. (1st class என்று சொன்னேன்)... அதிலும் முதல் வரி அவையடக்கம். அவையடக்கமோ அவையடக்கம். அப்படி ஒரு அடக்கம்.

டேய் மடையா பிச்சுப்புடுவன் பிச்சு இப்படி சொல்லியிருப்பாளோ?

மனோஜ்
11-04-2007, 01:54 PM
ஆககா ஓகேகே என்மா கதைஇது:angel-smiley-010:
ஆதவா கதைய இது கவிதையா இல்ல என்னத்த செல்லறது
அருமை அருமை சுவை நகைசுவை காதல் முத்தம் வாய்ல இது மேல வார்த்தை வரல வாழ்த்துக்கள் ஆதாவா கதிரவா சூரியனே........
நான் உண்னை காதலிக்கிறோன் சரியா ஆதாவ:icon_wink1:

ஜோய்ஸ்
11-04-2007, 02:11 PM
இது ஒரு கதையா
இல்லை கவிதையா
அல்ல காவியமா,
அல்ல கருத்துப் பொக்கிஷமா
அல்ல பண்பட்ட எழுத்துக்களின் கோர்வையா
அல்ல மனதின் கற்ப்பனையை வஞ்சகப் புகழ்சியுடன் கொட்டித்தீர்த்த ஒரு விசித்திர படைப்பா?

ஐயகோ நான் என்ன சொல்வேன்!
எந்தன் சிந்தனைக்கு அப்பார்ப்பட்டு ஜொலிக்குதே தங்களின் கருக்கூட்டு.

ஷீ-நிசி
11-04-2007, 03:52 PM
ஒரு முடிவோட எழுதியிருக்க ஆதவா.... ஆனால் முடிவுதான் இல்லை. என்ன சொல்லியிருப்பாள்... மூதேவி எழுந்து வேலைக்குப் போ! இவ்ளோ நேரம் தூங்கிட்டிருக்கியே, அவன் அம்மா எழுப்பிக்கொண்டிருந்தாளா?!

இளசு
11-04-2007, 07:18 PM
அற்புதம்..

கல்கி, சாவி போன்றவர்களின் நகைச்சுவை, நையாண்டி நிரம்பிய எழுத்து...

இன்றைய காலஜீன்ஸ்போட்டு, மன்ற அலைபேசியோடு
வந்ததுபோல்...

எத்தனை வரிகளின் சொல்லழகு, பொருளழகு கண்டு லயித்தேன் எனச் சொல்வது கடினம்..

பணிச்சுமை, கண்விழிப்பில் பின்னிரவு அல்லது அதிகாலை உறக்கத்தில்
ஜெஸிக்கா என்ற கனவு சொன்னது -

எழுந்திரு ஆதவா.. லேட் பண்ணா,
வேலைக்குப்போகும் முன் மன்றம் லாகின் பண்ண
நேரம் லேதுடா...

என் பாராட்டுகள் ஆதவா - ஒவ்வொரு வரிக்கும்!

ஓவியா
11-04-2007, 09:01 PM
சபாஷ் ஆதவா,

காதல் எவ்வளவு தெய்வீகமானது தெரியுமா????? இதை காதலித்தவர்கள் மட்டுமே சொல்ல முடியும். :icon_give_rose: :icon_give_rose:


கதையின் கரு, வர்னனை, நடை, வார்தைகள், கோர்வை, நகைச்சுவை, கற்ப்பனை என அனைதையும் சொட்டு சொட்டாக ரசித்தேன்.
அளவிட முடியாத அளவிற்க்கு தேனாக இனித்தது. படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்.


நகைசுவையாக இருந்தாலும், படிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை ரண்மாக்குகின்றது.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பிடிக்கும் காதல் சில சமயம் கரை சேருவதே இல்லை.


கதையின் ஆரம்பதில் ஒருதலை பட்ச காதலை விளக்கும் விதம் சூப்பர்,
அந்த அபூர்வ பறக்கும் முத்தத்திற்காக பறந்து பறந்து இயற்க்கையுடன் சண்டையிடும் கற்ப்பனை துள்.
பின் அதனை இயற்க்கயிடமே கண்டு ஒப்பிட்டு ரசிக்கும் விதம் பலே..........


மொத்தத்தில் உன் கி(ரு)றுக்கள்களை எண்ணத்தால் சுவைத்...தேன்...தேன் ..தேன்.

ஓவியா
11-04-2007, 09:39 PM
அப்படி என்ன சொல்லியிருப்பாள்??/ யோசியுங்கள்...

1. எனக்கு மயூவுடன் திருமணம் நிச்சயக்கபட்டு விட்டது. :liebe028:

2. உங்க அம்மா ஓவியா கையில் உருட்டுக் கட்டையுடன் வருகின்றார். :violent-smiley-010:

3. என் அப்பா ரவுசு ராஜா பெண் இல்லை என்று சொல்லிவிட்டார். :sport-smiley-002:

4. படம் காட்டாதே, விஐபி படம் பார்த்துட்டேன்........எந்திரி ராசா :smilie_bett:

5. என்பேரு ஜெஸ்ஸிகா என்றால் எங்கண்ணா பேரு பென்சு :medium-smiley-051: தம்பி பேரு மனோஜ் அலெக்ஸ் :weihnachten031:

6. என் முறை மாமன் ஜாவா, ஓவியன், அன்புரசிகன் வந்திருகாக.....எந்திரி மாப்பிளே :cool008: :medium-smiley-044: :medium-smiley-009:

7. கவிதை போட்டியில் உனக்கு முதல் பரிசு. :medium-smiley-031: பாராட்டுவுரை ராகவன் :medium-smiley-053:


8. பிரதீப் வெண்ணீரியில் சுக்கு காப்பி கொண்டு வந்துல்லார். சூடா இருக்குலே :food-smiley-010:

9. உன் கவிதைக்கு இளசு விமர்சனம் போட்டுல்லார்.:medium-smiley-006: லெனின் கருத்து சொல்லியுள்ளார் :love-smiley-073:


10. அது டூப்பு முத்தம், எந்திரி ஒரிஜினல் தாரேன். :icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose:

ஆதவா
12-04-2007, 01:52 AM
கதையை ரசித்து ருசித்து படித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....

ஓவியன்
12-04-2007, 03:21 AM
ஆதவா!
உங்களது எழுத்தின் வித்தியாசமான ஒரு பரிமாணம் இந்தக் கதையின் மூலமாக வெளிப் படுத்தப் பட்டுள்ளது. வித்தியாசமான வர்ணனைகளையும், வேறு பட்ட சிந்தனைகளையும் உங்களுக்கே உரிய கிண்டலுடன் சேர்த்துத் தந்துள்ளீர்கள்.

பாராட்டுகள் ஆதவா!

என்னதான் சொல்லியிருப்பாள்,

ஆதவன் ஜெசிக்காவின் இரண்டாவது முத்தத்தை கதையாக எழுதத் தொடங்கி விட்டார் என்று சொல்லியிருப்பாளோ?:icon_dance:

ஓவியன்
12-04-2007, 03:24 AM
அப்படி என்ன சொல்லியிருப்பாள்??/ யோசியுங்கள்...
5. என்பேரு ஜெஸ்ஸிகா என்றால் எங்கண்ணா பேரு பென்சு :medium-smiley-051: தம்பி பேரு மனோஜ் அலெக்ஸ் :weihnachten031:

என்னமா யோசிக்கிறீங்க ஓவியா!
:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

ஆதவா
13-04-2007, 11:22 AM
நன்றிங்க ஓவியன்.. ஓவியா அவர்கள் எழுதியவற்றைக் கலந்து அடித்து ஒன்று மட்டும் சரியான விடைக்கு அருகிலிருப்பதாகத் தெரிகிறது..

எது எப்படியோ மிகச் சரியான விடை ஜெஸிகாவுக்குத்தான் தெரியும்... :D

ஓவியா
13-04-2007, 11:34 AM
என்னமா யோசிக்கிறீங்க ஓவியா!
:sport-smiley-018: :sport-smiley-018: :sport-smiley-018:

அதான் ஓவி :medium-smiley-029:





நன்றிங்க ஓவியன்.. ஓவியா அவர்கள் எழுதியவற்றைக் கலந்து அடித்து ஒன்று மட்டும் சரியான விடைக்கு அருகிலிருப்பதாகத் தெரிகிறது..

எது எப்படியோ மிகச் சரியான விடை ஜெஸிகாவுக்குத்தான் தெரியும்... :D


10. அது டூப்பு முத்தம், எந்திரி ஒரிஜினல் தாரேன். :082502now_prv:

ஆதவா
13-04-2007, 11:42 AM
கிட்டத்தட்ட சரிதான்.... முழுவதுமாக இல்லை. எதற்கும் ஜெஸிகாவிடம் நான் கேட்டுவிடுகிறேன்...

இதைத் தொடர்ந்து எழுத ஆசை. மனதுக்குள் இம்மாதிரி கற்பனைகள் பல உண்டு... அதை அடக்கி, கவிதையாக்க விருப்பமில்லை....

வரவேற்புகள் பொறுத்து, கதை எழுதலாம் என்று இருக்கிறேன்..

:music-smiley-019:கண்டிப்பாக படித்து கடிபட்டு போங்கள்....:sport009:

அன்புரசிகன்
13-04-2007, 11:11 PM
அப்படி என்ன சொல்லியிருப்பாள்??/ யோசியுங்கள்...

1. எனக்கு மயூவுடன் திருமணம் நிச்சயக்கபட்டு விட்டது. :liebe028:

ஆதவாவின் காதலியும் மயூரேசனுக்கு சப்போட்டா???


2. உங்க அம்மா ஓவியா கையில் உருட்டுக் கட்டையுடன் வருகின்றார். :violent-smiley-010:

ஆதவா பாடு அதோ கெதிதான்.


3. என் அப்பா ரவுசு ராஜா பெண் இல்லை என்று சொல்லிவிட்டார். :sport-smiley-002:

பரவாயில்லை. ஜோக்காகவும் சொல்லியிருப்பார்.



6. என் முறை மாமன் ஜாவா, ஓவியன், அன்புரசிகன் வந்திருகாக.....எந்திரி மாப்பிளே :cool008: :medium-smiley-044: :medium-smiley-009:

ஓவியனை பற்றி பயப்படாதீங்க. அவர் வெறும் வாய் வேட்டுத்தான்.
என்னப்பற்றித்தான் தெரியுமே.... :sport-smiley-003: :sport-smiley-002:


7. கவிதை போட்டியில் உனக்கு முதல் பரிசு. :medium-smiley-031: பாராட்டுவுரை ராகவன் :medium-smiley-053:

முதல்பரிசு பாராட்டுரை வைத்து பால்மா வாங்கமுடியுமா...:medium-smiley-088:


8. பிரதீப் வெண்ணீரியில் சுக்கு காப்பி கொண்டு வந்துல்லார். சூடா இருக்குலே :food-smiley-010:

ஓவியாம்மா தந்த உருட்டுக்கட்டை தாளத்துக்கு இது தேவைப்படும்.


10. அது டூப்பு முத்தம், எந்திரி ஒரிஜினல் தாரேன். :icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose: :icon_give_rose:
ஓவியாம்மா சிலவேளை பொய்கள் எல்லாம் கூறுவார். ஜாக்கிரதை.

ஆதவா
14-04-2007, 12:57 AM
ரசிகரே! இது கதிரவனுக்குச் சொல்லப்படவில்லையாகத் தெரிகிறது,... :D

ஓவியா அவர்களுக்குச் சொன்னதாகத் தெரிகிறது... :D

ஓவியன்
14-04-2007, 11:23 AM
ஆதவா மீண்டும் வந்துட்டேன்!

ஒரே நாளில் அன்பு ரசிகன் ஏகத்துக்குத் துள்ளி இருப்பதாகத் தெரிகிறது. கவலை வேண்டாம் - அவங்க அப்படித் தான்.

நம்ம நாட்டு வானிலை நிலையம் மாதிரி தப்புத் தப்பா அறிக்கை விடுவாங்க!

மழை பெய்யாதென்றால் - பெய்யும்

காற்று வீசாதென்ற்றால் - வீசும்........................

ஓவியா
15-04-2007, 04:33 PM
ரசிகா உங்க ரசனையே தனிபா

அன்புரசிகன்
15-04-2007, 08:45 PM
ஆதவன் கதிரவன். எழுத்துக்களைத்தவிர வேறு என்ன வித்தியாசம் உண்டு??? :nature-smiley-006: :natur008:

அன்புரசிகன்
15-04-2007, 08:52 PM
ஆதவா மீண்டும் வந்துட்டேன்!

24 மணிநேரம் கூட நீம்மதி யில்லை.


ஒரே நாளில் அன்பு ரசிகன் ஏகத்துக்குத் துள்ளி இருப்பதாகத் தெரிகிறது. கவலை வேண்டாம் - அவங்க அப்படித் தான்.

இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களின் பேச்சாளர் கெகலிய (கோமாளிப்பேச்சாளர்) போல சம்பந்தம் இல்லாமல் பேசுசுகிறீர்.


நம்ம நாட்டு வானிலை நிலையம் மாதிரி தப்புத் தப்பா அறிக்கை விடுவாங்க!
மழை பெய்யாதென்றால் - பெய்யும்
காற்று வீசாதென்ற்றால் - வீசும்.......................
உம்முடைய அந்த நாடு எது???
நீர் அங்கே இருந்தால் எது ஒழுங்காக நடக்கும். இல்லை நடக்கத்தான் விட்டிருப்பீரா...கெகலிய போல் :p கூத்துக்காட்டியிருப்பீரே...

ஆதவா
16-04-2007, 10:48 AM
ஓவியரே!! இங்கும் வந்து ரசிகர் நம்மிடம் கடிவாங்கப் போகிறார்.... எதற்கு எச்சரிக்கை விட்டுவிடுவோம்...

அன்புரசிகரே! இங்கே புதிய மினிடோர் வேன் ஒன்றும் திருப்பாச்சி அருவாளும் வாங்கி வைத்திருக்கிறோம். அருவாளை இன்னமும் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள்... ம்ம்ம்.... பார்த்துக்கொள்ளுங்கள்.....

sns
15-05-2007, 11:01 AM
ஆதவா இது ரொம்ப நல்ல கற்பனை, இன்னும் தொடர்து எழுதுங்கல்

ஆதவா
15-05-2007, 11:14 AM
நன்றி எஸென்ஸ்

உங்களைப் பற்றீய அறிமுகம் கொடுக்கலாமே எஸென்ஸ்....

அமரன்
23-05-2007, 03:33 PM
நவரசங்கள் அடங்கிய கதை. பாராட்டுகள் ஆதவா.

ஆதவா
23-05-2007, 03:34 PM
அடடே!! இவ்வளவு நாட்கள் கழித்து மீண்டும் பார்த்தமைக்கு நன்றி அமரன்....

அமரன்
23-05-2007, 03:36 PM
அடடே!! இவ்வளவு நாட்கள் கழித்து மீண்டும் பார்த்தமைக்கு நன்றி அமரன்....
பழைய கதைகளைப் படித்துக்கொண்டு வருகின்றேன் ஆதவரே கதை எழுதக் கற்றுக்கொள்ளும் ஒரு ஆர்வத்தில்

ஓவியா
23-05-2007, 03:37 PM
அமரன் பார்த்தாரா, அப்ப படிக்களையா????

அடுத்த பாகம் எங்கே?????

அமரன்
23-05-2007, 03:40 PM
அமரன் பார்த்தாரா, அப்ப படிக்களையா????

அடுத்த பாகம் எங்கே?????
ரொமபக் கடிக்கிறீங்க ஓவியா.

ஆதவா
23-05-2007, 03:40 PM
யாரும் கேட்காததாலேயே அடுத்த பாகத்தை எழுத வில்லை....

மன்னிக்கவும் அமரன். பார்த்தீர்கள் என்று போட்டமைக்கு.... அவசரக் கோளாறு என் மூளையில்...... தவறுக்கு மன்னிக்க...

கதை எழுதக் கற்றுக் கொள்ளவேண்டுமெனில் ராகவன் மோகன் மயூரேசன் (இன்னும் பலர்) போன்றவர்கள் கதை படிக்கவும்...

அமரன்
23-05-2007, 03:41 PM
இப்போ கேட்கின்றோமே. அடுத்த பாகத்தை விரைவில் தாருங்கள்.

ஆதவா
14-06-2007, 03:20 PM
ஜெஸிகாவின் அடுத்த கட்டளைக்கு கதிரவன் தயாராகிவிட்டான்...

நண்பர்களே! ஆட்டோ கிளப்பப் போகிறீர்கள்.....
------------------------------
ஒவ்வொரு சொட்டையும் உறிஞ்சிப் படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. மீண்டுமொரு சுவை கிடைக்குமா என்று தேடி அலைகிறேன்... அதற்குள் ஜெஸிகா இன்னொரு கட்டளை போட்டிருக்கிறாள்.. பார்ப்போம். இந்த முறை கதிரவன் வெல்வானா அல்லது தோற்பானா என்று...

தொடர்ந்து படியுங்கள்... ஜெஸிகா , கதிரவன், காதல்..

அமரன்
14-06-2007, 03:25 PM
அண்ணே ஆட்டோ தயாராகவே உள்ளது.

ஆதவா
14-06-2007, 03:27 PM
நான் இனிமேல் தான் எழுதவேண்டும்.. அதுவரை ஸ்டார்ட் செய்தே வைத்திருங்கள். (பெட்ரோல் தீர்ந்துபோகும்.. :D )