PDA

View Full Version : ஹைக்கூ...(1)



அரசன்
11-04-2007, 08:09 AM
விபத்துகள் குறைந்தப்பாடில்லை;
ஆனாலும் எட்டு போடச்சொல்லும்
லைசென்ஸ் அதிகாரி!

:Christo_pancho:

க.கமலக்கண்ணன்
11-04-2007, 10:04 AM
அவர்கள் பாக்கெட் நிறைய வேண்டுமே...
இதை தவிர வேறு ஒன்றும் அறியோம் பராபரமே...

இளசு
11-04-2007, 06:40 PM
எப்படியாவது சில நல்ல எல்லைகளை
எட்டிவிட வேணுமென்றுதான்
எட்டில் ஆரம்பிக்கிறார்கள் - இருந்தாலும் அது
எட்டாக்கனியானதுக்கு இன்னும் பல காரணம் இருக்கு!

பாராட்டுகள் கலியமூர்த்தி!

ஓவியன்
11-04-2007, 06:54 PM
எட்டு ஒழுங்காகக் போடுவதால் மட்டும் விபத்துக்களைத் தவிர்க்க இயலாது. இதில் காவல் துறையினர் பொது மக்கள் என்று எல்லோரதும் ஒத்துழைப்பும் ஒன்றாகச் சேர்ந்தால் மாத்திரமே விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.

நல்ல கருத்துக்களைக் கூறி வரும் மூர்த்தி உங்கள் பணி சிறக்கட்டும்

மனோஜ்
11-04-2007, 07:04 PM
அவுங்க எட்டுதான் போடச்சொல்லுராங்க
நம்ஆளுங்க பதினேன்றுல்ல சாலையில் போடுகிறார்கள் அதான்

ஆதவா
03-05-2007, 03:07 PM
வேற வழியில்லைங்க சாரே! விபத்துக்களுக்கும் எட்டுக்கும் சம்பந்தமில்லை என்று நான் நினைக்கிறேன்.... ஆனால் ஒன்று மட்டும் புரியாத விடயம்... ஏன் எட்டு போடவேண்டும்... மிக எளிதாயிற்றே...

ஒவ்வொரு போலீஸும் வண்டி லைசன்ஸ் எடுப்பவரை ஓட்ட வைத்து இரு தெருக்கள் சென்று வந்தார்கள் என்றால் சுகம்... அப்போழ்துதான் ஓட்டுனர் என்ன தவறு செய்கிறார் என்று புரியும்... கொஞ்சம் லேட்தான் மச்சி... ஆனா அதனால இன்னொருத்தன் லேட் ஆகிடக்கூடாது பாருங்க..

(20 பணம்)

தாமரை
03-05-2007, 03:13 PM
எட்டு போடுவது என்பது ஒருவரின் பேலன்ஸிங் சரியாக இருக்கிறதா.. வண்டியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியுமா, வழியில் உள்ள சிறு சிறு குழிகளில் வண்டிச்சக்கரம் மாட்டாமல் ஓட்ட முடியுமா என சோதனை செய்யத்தான்..

எட்டு போட்டாலும்
லைசென்ஸ்
பையில்
துட்டு போட்டாலும் லைசென்ஸ்..
ஒண்ணு காமன்சென்ஸ்
இன்னொண்ணு நான்சென்ஸ்..!!!
(நன்றி : மயூரேசன்)

பென்ஸ்
03-05-2007, 05:41 PM
எட்டு போடுவது என்பது ஒருவரின் பேலன்ஸிங் சரியாக இருக்கிறதா.. வண்டியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியுமா, வழியில் உள்ள சிறு சிறு குழிகளில் வண்டிச்சக்கரம் மாட்டாமல் ஓட்ட முடியுமா என சோதனை செய்யத்தான்..

எட்டு போட்டாலும்
லைசென்ஸ்
பையில்
துட்டு போட்டாலும் லைசென்ஸ்..
ஒண்ணு காமன்சென்ஸ்
இன்னொண்ணு நான்சென்ஸ்..!!!
(நன்றி : மயூரேசன்)
யோவ்... ஓவராயில்லை...

அமரன்
16-07-2007, 01:17 PM
மூர்த்தியின் சாட்டை கவியும் செல்வன் அண்ணாவின் பதில் கருத்துக்கவிதையும் கலக்கல்.

aren
16-07-2007, 02:29 PM
மூர்த்தியின் ஹைக்கூக்கு ஈடாக தாமரையின் பின்னூட்டம் அருமை. தொடருங்கள் நண்பர்களே.

இனியவள்
16-07-2007, 02:33 PM
எட்டுப் போட்டு லைசன்செஸை
பாக்கட்டில் போடு எட்டி
உதைக்கின்றனர் வண்டியை
கண்மூடி ஓடி கண்மூட
செய்கின்றனர் உயிரை...


மூர்த்து உங்களுக்கு ஒரு சபாஷ்..

தாமரை அண்ணா உங்களுக்கு ஒரு சபாஷ்

சிவா.ஜி
16-07-2007, 02:37 PM
சாலை விபத்துக்கும் எட்டுக்கும் சம்பந்தமே இல்லை. துட்டு போட்டு ஓட்டுனர் உரிமம் வாங்கியவர்களாகப்பார்த்து விட்டு விட்டால்தான் சாலையில் போகிறவர்கள் உயிரை விடாமல் இருக்க முடியும். ஹைக்கூ அருமை மூர்த்தி.