PDA

View Full Version : வலைப்பூஅரசன்
11-04-2007, 07:41 AM
வலைப்பூ உருவாக்குவது எப்படி? வலைப்பூவின் ஆங்கில வார்த்தை என்ன?
webhosting என்றால் என்ன? இதற்கும் வலைப்பூவிற்கும் என்ன வித்தியாசம்
தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்கள்

பரஞ்சோதி
11-04-2007, 08:11 AM
மூர்த்தி நீங்க ஒரு முடிவுக்கு வந்திட்டீங்க போலிருக்குது, அதான் வலைப்பூ தொடங்கப் போறேன்னு சொல்லுறீங்க.

www.blogger.com (http://www.blogger.com) போங்க, அங்கே கணக்கு தொடங்கி, இஷ்டம் போல் எழுதுங்க. அதற்கு முன்னர் மோகன் அவர்களின் இணையத்தில் அடி வாங்கமால் இருக்க என்ற பதிவை பார்த்துட்டு போங்க :)

ஓவியா
11-04-2007, 05:32 PM
www.blogger.com
இங்கே செல்வதற்க்கு முன்

அருமை எழுத்தாளர் நண்பர் மோகனின் பதிவை படித்து பாருங்களேன்.

இதோ அந்த சுட்டி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8551

ஷீ-நிசி
11-04-2007, 05:35 PM
மூர்த்தி நீங்க ஒரு முடிவுக்கு வந்திட்டீங்க போலிருக்குது, அதான் வலைப்பூ தொடங்கப் போறேன்னு சொல்லுறீங்க.

www.blogger.com (http://www.blogger.com) போங்க, அங்கே கணக்கு தொடங்கி, இஷ்டம் போல் எழுதுங்க. அதற்கு முன்னர் மோகன் அவர்களின் இணையத்தில் அடி வாங்கமால் இருக்க என்ற பதிவை பார்த்துட்டு போங்க :)

ஹி ஹி ஹி...:sport-smiley-018: தக்க அறிவுரை....

murthykmd அவர்களே! எனது சந்தேகங்கள் என்று ஒரு திரி தொடங்கி அதில் உங்கள் கேள்விகளை பதித்தால், பதிலும் உங்களுக்கு ஓரிடத்திலேயே கிடைக்குமா? என்ன நான் சொல்றது சரியாபடுதுங்களா??:icon_smokeing:

leomohan
11-04-2007, 05:52 PM
வலைப்பூ உருவாக்குவது எப்படி? வலைப்பூவின் ஆங்கில வார்த்தை என்ன?
webhosting என்றால் என்ன? இதற்கும் வலைப்பூவிற்கும் என்ன வித்தியாசம்
தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்கள்

வலைப்பூ என்பது நம் டையரியை போல. தினமும் மனதில் தோன்றியதை எழுதலாம். கணினி அறிவு தேவையில்லை. நேரடியாக பதிக்கலாம். மிகவும் பிரபலமான தளத்தை ஓவியா தந்திருக்கிறார்கள். இதற்கு ஆங்கிலத்தில் Blogging. Web+Log - Weblog - Blog ஆனது.

வலைதளம் - website webhosting. இதற்கு தமிழ் பித்தன் அநேக தளங்கள் தந்துள்ளார். மிகவும் சுலபமாக தளம் அமைக்க http://www.geocities.com http://www.tripod.com தளங்களை பயன்படுத்தலாம்.
வலைதளம் வாரம் ஒரு முறை புதுப்பிக்கலாம். அமைப்பு ஞானம் அவசியம் HTML தெரிந்திருந்தால் நல்லது.

srimariselvam
12-04-2007, 02:00 PM
வலையேற்றம் செய்வதற்கு வெப்கோஸ்டிங் என்று பெயர். இதை வெப்சைட்டிற்கு நமது செய்தி,படம்,க்ளிப் ஆகியவற்றை ஏற்றுவதற்கான முயற்சி என சொல்லலாம். வெப்சைட் துவக்குவதற்கு சர்வரில் இலவசமாகவோ அல்லது பணம் கொடுத்தோ நமக்கு ஜிபி இடம்வாங்கி பெயர் பதிவுசெய்து வலைத்தளத்தை உருவாக்கி செய்திகளை வெப்கோஸ்டிங் (வலையேற்றம்) செய்யலாம்.
வலைப்பூ என்பது ரொம்ப சுலபம். வலைப்பூக்களை உருவாக்க தேன்கூடு, ப்ளாக்கர், வோர்டுப்ரஸ் போன்றோர் கிளைவிரித்து காத்திருக்கின்றனர். அவர்களிடம் நமது பெயர்,மின்முகவரி கொடுத்துவிட்டால்போதும் நமக்கென்று சிறுஇடம் ஒதுக்கித் தருகிறார்கள். அதில் டைரி எழுதுவதுபோன்று நாம் கண்டது, கேட்டது, அறிந்தது எழுதி மகிழலாம்.

அரசன்
13-04-2007, 02:09 PM
வலைப்பூவில் சில சந்தேகங்கள். வலைப்பூ தொடங்கையில் கவிதை, கட்டுரை. கதை மற்றும் பல முக்கிய தகவலை இட நினைக்கிறேன். ஆனால் அவ்வாறு வராமல் நான் பதிவு செய்வது அனைத்தும் அதாவது கவிதை, கதை அப்படியே வரிசையாக வருகிறது. அவ்வாறில்லாமல் கவிதை தலைப்பில் கவிதையும், கதை தலைப்பில் கதையும் வந்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு தலைப்பின் கீழ் வருமாறு எவ்வாறு அமைப்பது என்று தெரிந்தவர்கள் தயைக் கூர்ந்து தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நான் ப்ளாக்கர்.காம் பயன்படுத்துகிறேன்.

leomohan
13-04-2007, 04:06 PM

Blogger ல் ஒரு பதிவு இடும் போது Keywords `கொடுக்க வேண்டும். அதாவது கவிதை பதிப்பு பதிக்கும் போது கவிதை என்று வார்த்தை இடவேண்டும்.

இந்த மாதிரி Categorisation க்கு Wordpress வசதியாக இருக்கிறது.

அரசன்
13-04-2007, 05:48 PM
Blogger ல் ஒரு பதிவு இடும் போது Keywords `கொடுக்க வேண்டும். அதாவது கவிதை பதிப்பு பதிக்கும் போது கவிதை என்று வார்த்தை இடவேண்டும்.

இந்த மாதிரி Categorisation க்கு Wordpress வசதியாக இருக்கிறது.

அப்ப ப்ளாக்கர்.காம்ல முடியாதா? வேர்ட்பிரஸ் போனால்தான் முடியுமா

leomohan
13-04-2007, 09:06 PM
அப்ப ப்ளாக்கர்.காம்ல முடியாதா? வேர்ட்பிரஸ் போனால்தான் முடியுமா

ஆம் வேர்ட் ப்ரஸில் categorisation by keywords வசதி நன்றாக உள்ளது.

அரசன்
13-05-2007, 06:18 PM
ஹி ஹி ஹி...:sport-smiley-018: தக்க அறிவுரை....

murthykmd அவர்களே! எனது சந்தேகங்கள் என்று ஒரு திரி தொடங்கி அதில் உங்கள் கேள்விகளை பதித்தால், பதிலும் உங்களுக்கு ஓரிடத்திலேயே கிடைக்குமா? என்ன நான் சொல்றது சரியாபடுதுங்களா??:icon_smokeing:எனக்கு கணினிப் பற்றி சுத்தமாக தெரியாது. நம் மன்றத்தின் மூலமாகதான் ஓரளவிற்கு அறிவை வளர்த்திருக்கிறேன்னு நினைக்கிறேன். சந்தேகங்களை கேட்க கேட்க சிறிதளவாவது கணினி அறிவை வளர்த்துக்களாம்ன்னு நினைக்கிறேன். தொடர்ந்து எனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்கலாமா?

அன்புரசிகன்
14-05-2007, 08:44 AM
எனக்கு கணினிப் பற்றி சுத்தமாக தெரியாது. நம் மன்றத்தின் மூலமாகதான் ஓரளவிற்கு அறிவை வளர்த்திருக்கிறேன்னு நினைக்கிறேன். சந்தேகங்களை கேட்க கேட்க சிறிதளவாவது கணினி அறிவை வளர்த்துக்களாம்ன்னு நினைக்கிறேன். தொடர்ந்து எனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்கலாமா?

மூர்த்தி என்ன கேள்வி இது...? மன்றம் பலவகை சேவைகளுக்காகவே உள்ளது என நினைக்கிறேன். அதில் நீங்கள் சந்தேகம் கேட்க்கக்கூடாதென யார் கூறியது? விடையங்களை பகிர்தல் வினாவுதல் போன்றவைக்காவும் தான் என நான் நினைக்கிறேன். எல்லாம் தெரிந்தவர்தான் மன்றத்தில் உள்ளனர் என்றில்லை.
சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனும் பொழுது தான் தேடல்கள் ஆரம்பிக்கும். இல்லை முடியாதென்ற வார்த்தைகளை ஒழிப்போமாக.