PDA

View Full Version : சுமையல்ல!



அரசன்
10-04-2007, 04:28 PM
எந்த
சுமையும் எனக்கு
சுமையல்ல!
இமயத்தையும் சுமக்க
நான் தயார்.
என்
இதயத்தை மட்டும் - நீ
சுமப்பதென்றால்!

ஓவியா
10-04-2007, 04:46 PM
:aktion033: :aktion033: படித்தவுடன் காதலை நினைத்து சிரித்தே விட்டேன். ஹி ஹி ஹி
...........................................................................................

சும்மா நச்சுனு ஒரு வார்த்தை. அதிலும் திருவார்த்தை.

இப்படி சொன்னால் காதல் வருமா????? வந்தாலும் ஆச்சயபடுவதிற்க்கில்லை, வாழ்க காதல்.

குட்டி காதல் கவிதை அருமை.

அன்புரசிகன்
10-04-2007, 05:08 PM
எந்த
சுமையும் எனக்கு
சுமையல்ல!
இமயத்தையும் சுமக்க
நான் தயார்.
என்
இதயத்தை மட்டும் - நீ
சுமப்பதென்றால்!

அப்படியென்றால் காதல்கூட சுமையில்லைத்தான்.

இளசு
10-04-2007, 09:03 PM
இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

இதயமாற்று அறுவைசிகிச்சை
காதலில் மட்டும்
கத்தியின்றி ரத்தமின்றி..

பாராட்டுகள் கலியமூர்த்தி !

gayathri.jagannathan
11-04-2007, 07:49 AM
"கடைக்கண் பார்வை தனை
கன்னியர் தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு
மாமலையும் ஓர் கடுகாம்"

கூறியது யார் எனத் தெரியவில்லை... ஆனால் தங்கள் கவிதையின் பொருள் இது...சரி தானே நண்பரே?!!!

அரசன்
11-04-2007, 07:56 AM
"கடைக்கண் பார்வை தனை
கன்னியர் தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு
மாமலையும் ஓர் கடுகாம்"

கூறியது யார் எனத் தெரியவில்லை... ஆனால் தங்கள் கவிதையின் பொருள் இது...சரி தானே நண்பரே?!!!


மிகச் சரியான ஒன்று. நன்றி காயத்ரி.

க.கமலக்கண்ணன்
11-04-2007, 10:06 AM
நன்றாக இருக்கிறது நல்ல பறிமாற்றம்.

தொடருங்கள்...

paarthiban
11-04-2007, 11:19 AM
"கடைக்கண் பார்வை தனை
கன்னியர் தாம் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு
மாமலையும் ஓர் கடுகாம்"

கூறியது யார் எனத் தெரியவில்லை... ஆனால் தங்கள் கவிதையின் பொருள் இது...சரி தானே நண்பரே?!!!


பாவேந்தர் பாரதிதாசன்

gayathri.jagannathan
11-04-2007, 11:45 AM
தகவலுக்கு நன்றி பார்த்திபன்

banupriya
11-04-2007, 12:25 PM
எதையும் தாங்கும் இதயத்தையே காதலியிடம்கொடுத்துவிட்டால் எப்படிஇமயத்தைதாங்கமுடியும் ?எப்படியோ காதலியிடம் இதயத்தை கொடுத்துவிட்டு நீங்கள் சுமைதாங்கி ஆகிறீர்கள்

பென்ஸ்
11-04-2007, 12:44 PM
மூர்த்தி...
நல்ல கவிதை.
"எதிர்பார்ப்புகள் இல்லாமல் உறவுகள் இல்லை.." என்று நண்பர்களிடம் அடிக்கடி சொல்லுவேன்.
இந்த உலகில் எல்லாம் எதையாவது, அல்லது எவரையாவது சார்ந்தே வாழுகிறது, வாழமுடியும்...

காதலுக்கு மட்டும் என்ன அது விதிவிலக்கா???
காதலை ஏற்று கொள், உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்...
இளசு சொன்னது போல நல்ல டீலிங்தான், ஆனால் அதிற்பாப்புகளை அதிகமாக்காதா...
அதுவே ஏமாற்றங்களாகிறதோ????

காயத்ரி...
உங்கள் பின்னுட்டங்களை கவனித்து வருகிறேன்...
அழகாக ஆராய்கிறிர்கள்... மற்றும் "கலக்ஸன் ஆன்ட் கனக்சன்" என்று சொல்லுவார்கள் , அது உங்கள் எழுத்துகளில் அதிகமாகவே இருக்கிறது. வாழ்த்துகள்...

ஓவியன்
11-04-2007, 05:18 PM
காதல் இமயத்தையும் சுமக்கும் என்று சொல்லும் மூர்த்தி.கவி அருமையாக இருக்கின்றது, முக்கியமாக கவிதையை முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை.

வாழ்த்துக்கள்.

அரசன்
11-04-2007, 05:22 PM
நன்றி பென்ஸ், ஓவியன் அவர்களுக்கு

gayathri.jagannathan
12-04-2007, 03:27 AM
காயத்ரி...
உங்கள் பின்னுட்டங்களை கவனித்து வருகிறேன்...
அழகாக ஆராய்கிறிர்கள்... மற்றும் "கலக்ஸன் ஆன்ட் கனக்சன்" என்று சொல்லுவார்கள் , அது உங்கள் எழுத்துகளில் அதிகமாகவே இருக்கிறது. வாழ்த்துகள்...

நன்றி பென்ஸ்.... நீங்கள் சொன்ன "கலக்ஸன் ஆன்ட் கனக்சன்" என்பதற்கு என்னால் சரியான பொருள் கொள்ள முடியவில்லை... விளக்கமளிப்பீர்களா பென்ஸ்?