PDA

View Full Version : சித்திரைக்கனி



ஆதவா
10-04-2007, 02:29 PM
சித்திரைக்கனிக்காக கவிதை எழுதுபவர்கள் இங்கு இருப்பார்கள்... நான் கொஞ்சம் முந்திக்கொண்டேன்.. ஹி ஹி/

என் பழைய கவிதை. எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே..

ஊருக்குள்ள ஒண்ணுமில்ல
ஊத்திக்கவோ தண்ணியில்ல

பல்லுங் காஞ்சி பதிநாளு ஆச்சு
பத்துங் கரஞ்சி போயாச்சு

என்ன எழவுக்கு இந்த கொண்டாட்டம்?

மீசை முறுக்கி வாயோரம்
காச மெரட்டி கழுத்தோரம்
ஓச இல்லாம கத்தி வெச்சாப்ல

வேணுமோடா எனக்கு?

வெளக்குத் திரிக்கு லோல்பட்டு
பக்கத்து வீட்டுக் காரன்கிட்ட
பத்து ரூபா கடன் நான் வாங்க,

வட்டியில்லாம எங்கிட்ட
தருமகர்த்தா அன்பளிப்பா?
வேணுமோடா எனக்கு
சித்திரைக் கனி
நிறுத்துக்கோடா
பணம் பொறட்றது இனி.

அன்புரசிகன்
10-04-2007, 02:32 PM
பழமையிலும் இனிமையுண்டு ஆதவா...

மனோஜ்
10-04-2007, 02:49 PM
ஆகா அருமை ஆதவா எப்படி இப்படி?

ஆதவா
10-04-2007, 02:52 PM
நன்றி ரசிகன் மற்றும் மனோஜ்....

ஷீ-நிசி
10-04-2007, 04:03 PM
அது என்ன சித்திரைக் கனி.... புத்தாண்டு கவிதையா.. கிராமிய வாசனை..

அரசன்
10-04-2007, 04:23 PM
கவிதை(கனி)யின் ருசி தெரிகிறது. அது என்ன சித்திரைக்கனி.

poo
11-04-2007, 04:23 AM
கிராமத்து விழாக்களில் இந்த கொடுமை அரங்கேறுவதுண்டு... தலவரி-ன்னு போட்டு வயித்துல அடிப்பாங்க.... மக்களும் ஆத்தா குத்தம்னு வாயைப்பொத்தி முதுகெலும்பை அடகுவைச்சி புரட்டிக் கொடுப்பாங்க..

ஆதவன்,

உங்கள் பார்வை மிகவும் பிடித்திருக்கிறது...
கொண்டாட்டங்களை மிஞ்சும் திண்டாங்கள். கிராமிய வாசத்தோடு பொட்டில் அடிக்கும் கவிதை!

(உங்கள் தனிமடலுக்கு பதில் அனுப்ப இயலவில்லை.. உங்கள் பெட்டி நிரம்பி வழிகிறதாமே.. )

இளசு
11-04-2007, 06:37 PM
குடிக்கிறதுக்கு கூழ் இல்லைன்னாலும்
வெளியில வெள்ளையும் சள்ளையுமா கெளம்புற

நம்மாளின் துயரம் புரியுது..

சித்திரைக்கனிக்கு என்பாடு கொஞ்சமே
பொங்க தீவாளி வந்தாதான் ஈரக்கொலை நடுக்கமே...

பாராட்டுகள் ஆதவா!