PDA

View Full Version : அருகில் நீயில்லா பொழுதுகள்!



ப்ரியன்
10-04-2007, 11:19 AM
மின் தகனமேடை
சடலமாய்
சலனமற்று
எரிந்து
சாம்பலாகி
காற்றுடன் கலந்து கரைந்து
காணாமல் போகின்றன
அருகில் நீயில்லா பொழுதுகள்!

- ப்ரியன்.

gayathri.jagannathan
10-04-2007, 11:47 AM
அற்புதம் ப்ரியன் அவர்களே.... காதலி அருகில் இல்லாத கணத்தின் பதிவு... மனதைத் தொடுகின்றது...
(சரியான புரிதல் கொன்டேன் என்று நினைக்கிறேன்...)

ப்ரியன்
10-04-2007, 11:50 AM
அற்புதம் ப்ரியன் அவர்களே.... காதலி அருகில் இல்லாத கணத்தின் பதிவு... மனதைத் தொடுகின்றது...
(சரியான புரிதல் கொன்டேன் என்று நினைக்கிறேன்...)

நன்றி காயத்ரி...சரியான புரிதல்தான்

அன்புரசிகன்
10-04-2007, 11:53 AM
காதலி அருகில் இல்லாவிட்டால் இப்படித்தான் இருக்குமா? நன்றி பிரியன்.

பென்ஸ்
10-04-2007, 01:00 PM
ப்ரியன்...
கொஞ்ச நாளா கவிதையே வரலையே... போனில் கூப்பிடவேண்டியத்துதான் என்று யோசித்து முடிப்பதற்க்குள், என் செலவை மிச்சமாக்க ஒரு கவிதை.

விக்கி...
கவிதை நன்றாயிருக்கிறது...
வார்த்தியின் அடுக்குதல் இப்படி இருக்கனுமோ???

மின் தகனமேடை -
சடலமாய்
சலனமற்று
எரிந்து
சாம்பலாகி
காற்றுடன் கலந்து
கரைந்து
காணாமல் போகின்றன
அருகில் நீயில்லா பொழுதுகள்!
- ப்ரியன்

இரண்டு வித்தியாசம் செய்துள்ளேன் என் புரிதல் மற்றும் விருப்பதின் படி...
கண்டுபிடியுங்க பாக்கலாம்...
ஏன் இப்படி செய்தேன் என்பது... அதன் பிறகு...

ஷீ-நிசி
10-04-2007, 01:06 PM
நல்ல கவிதை ப்ரியன்.. தொடருங்கள்!

ப்ரியன்
10-04-2007, 01:28 PM
காதலி அருகில் இல்லாவிட்டால் இப்படித்தான் இருக்குமா? நன்றி பிரியன்.

ஆமாம் அன்புரசிகன்...

ப்ரியன்
10-04-2007, 01:32 PM
இரண்டு வித்தியாசங்கள்


மின் தகனமேடை -


காற்றுடன் கலந்து
கரைந்து

சரியா பென்ஸ்? :) காரணம் சொல்லுங்கள் எனக்கு என்னத் தோன்றுகிறதென்பதை சொல்கிறேன்.


போனில் கூப்பிடவேண்டியத்துதான் என்று யோசித்து முடிப்பதற்க்குள், என் செலவை மிச்சமாக்க ஒரு கவிதை.

கவிதை வந்ததால் செல்பேசி வழியே கூப்பிடமாட்டீர்களா என்ன?

ப்ரியன்
10-04-2007, 01:34 PM
நல்ல கவிதை ப்ரியன்.. தொடருங்கள்!

நன்றி ஷீ-நிசி...

ஆதவா
10-04-2007, 01:41 PM
கவிதை அருமை

பென்ஸ்
10-04-2007, 01:47 PM
இரண்டு வித்தியாசங்கள்

சரியா பென்ஸ்? :) காரணம் சொல்லுங்கள் எனக்கு என்னத் தோன்றுகிறதென்பதை சொல்கிறேன்.
கவிதை வந்ததால் செல்பேசி வழியே கூப்பிடமாட்டீர்களா என்ன?
அதேப்படி உங்கள் கவிதையின் மற்றங்களை தெரியாமல் இருப்பீர்கள்...

வரிகளை தனியே அனுபவித்து வருகையில்
"மின் தகனமேடை சடலமாய்" என்பது சரியாகபட்டது...

மேலும் தன்னிலை சொல்லுகையில் "சடலமாய்" என்றும் தனியாக இருக்கலாம் என்று பட்டது எனவே முதல் மாற்றம்...

"கரைந்து" என்பதை தனியான தன்னிலை சொல்கையில் வருந்தி , உருகி என்று பொருள் படுத்தலாம் , மேலும் கவிதையுடன் படிக்கும் போது காற்றில் கரைந்ததாய் பொருள் படுத்தலாம் ... எனவே இரண்டாவது மாற்றம்...

இது என் மனதில்பட்டது....

உங்கள் கவிதைய்ன் பொருளும் , அழகும் அப்படியே என்றும் மாறமல்... நான் சிறியதாய் எடுத்து விட்டேன் .. அவ்வளவுதான்...


அட உங்களை கூப்பிட காலம் நேரம் பாத்திருக்கிறேனா???

ப்ரியன்
11-04-2007, 04:14 AM
கவிதை அருமை

நன்றி ஆதவா

இளசு
11-04-2007, 06:50 PM
ப்ரியன்

அவள் அருகில் இல்லாப் பொழுதுகளை
அவளின் நினைவுகளைக் கவிதையாக்கி
இணையத்தில் உலவவிடும் இன்பப்பொழுதுகளாக்க
இளசுவின் அன்பான ( அவளிடம் சொல்லக்கூடாத) யோசனை!