PDA

View Full Version : உறங்காத விழிகள்



அரசன்
10-04-2007, 09:09 AM
உறங்காத விழிகள்


மழைக்கும் கூட மனமில்லை!
ஆழ்ந்து உறங்கிய சிறுவனையும்
விட்டுவைக்கவில்லை.
தட்டி எழுப்பி, ஓரிடத்தில்
உருட்டினாள் தாய்.
உறக்கம் கலைந்த நிலையில்
சோர்ந்த இரண்டு விழிகளும்
விழித்துக் கொண்டிருந்த வானத்தையே
பார்த்திருந்தன விடியும்வரை!
விழித்திருந்தது அவனது விழிகள் மட்டுமல்ல,
இரவில் உறக்கத்தை மறந்த
அத்தனை நடைப்பாதை மக்களும்தான்!

மனோஜ்
10-04-2007, 09:13 AM
கனகச்சிதம் கவிதை அருமை

விகடன்
10-04-2007, 09:13 AM
வானமே கூரை, வையகமே படுக்கை என்றிருக்கும் மாந்தர்களின் வாழ்க்கையை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்... கவிதை வடிவில்

பாராட்டுக்கள்.

மீண்டும் ஒருமுறை "அழகி" படத்தை கண்ணெதிரே கொண்டுவந்தீர்கள் என்றால் மிகையாகாது.

மயூ
10-04-2007, 09:13 AM
நடை பாதை மக்களின் வாழ்க்கை...
நான் பலதடவை வீதியில் செல்லும் போது எப்படி இவர்கள் வாழ்கின்றார்கள் என்று எண்ணிக்கொள்வேன்...!!!
நிஜத்தை எழுதிய கவிதைத வாழ்த்துக்கள் நண்பனே!

gayathri.jagannathan
10-04-2007, 09:55 AM
அழகிய ஆனால் மனதைப் பிசையும் கவிதை..
ஆழமான வரிகள்.... நன்றி நண்பரே...இன்னும் பல படைப்புகள் தர வாழ்த்துக்கள்

அரசன்
10-04-2007, 04:20 PM
மயூர், ஜாவா, காயத்ரி அவர்களுக்கு நன்றி

ஓவியா
10-04-2007, 04:37 PM
எழைகளின் அவலம் என்றுமே ஒரு விடியா இரவுதான்.

சமூக சிந்தனை கவிதைக்கு நன்றி.

வார்தைகள் அழகாக அமைக்கபட்டு, சுலபமாக புரியும்படி இருகின்றது. சபாஷ்

வாழ்த்துக்கள் மூர்த்தி.

அரசன்
10-04-2007, 04:40 PM
மிக்க நன்றி ஓவியா

இளசு
10-04-2007, 09:07 PM
இது யார் குற்றம்
எனும் கேள்விக்கு
இன்னும் விடை இல்லை!

பாராட்டுகள் கலியமூர்த்தி..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8075
ஷீ-நிசியின் இந்தக் கவிதையையும் பாருங்கள்: