PDA

View Full Version : எனது ரயில் பயணங்களில்-1



arun
10-04-2007, 09:05 AM
அனைத்து நண்பர்களுக்கும் முதலில் எனது வணக்கம்

ரயில் பயணம் என்பது பொதுவாக இனிமையான ஒன்று சில நேரங்களில் தான் அப்படி இருக்கும் வேலைக்கு செல்பவர்களிடம் ரயில் பயணத்தை பற்றி கேட்டால் சுமையானது என்று தான் சொல்வார்கள்

ரயில் பயணங்களில் நம்மில் பலருக்கு பலவிதமான அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கலாம் எனது அனுபவங்களை தொகுக்கலாம் என இருக்கிறேன் அன்பர்களும் அவர்களது ரயில் பயண அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்

ரயில் பயணத்தில் தூங்குவது என்பது சில நேரங்களில் சுகமான ஒன்று ஆனால் அதுவே சுமையாகவும் சுவையாகவும் மாறுவதுண்டு
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு போகும் அன்பர்களுக்கு நமது ரயில் நிலைய அறிவிப்புகள் பற்றி நன்றாக தெரிந்து இருக்கும் நான் சொல்வது மின்சார ரயில்களை பற்றிய அறிவிப்புகள்

முதலில் ஒரு பிளாட்பார்மில் இருக்கும் ரயில் ஒரு தடத்தில் செல்லும் என்பர்கள் அடுத்து அதே ரயில் வேறு தடத்திற்கு செல்லும் என்பர்கள் நாம் மட்டும் சரியாக கவனிக்கவில்லை என்றால் நமது பாடு திண்டாட்டம் தான்

அப்படி தான் ஒரு தடவை எனக்கும் நடந்து விட்டது
ரயிலில் வீட்டுக்கு போகும்போது சில நேரங்களில் எனது நண்பர்களும் என்னுடன் வருவார்கள் அன்று பார்த்து யாருமே இல்லை ரயிலில் போய் அமர்ந்தேன் அக்கம் பக்கத்து சீட்டுகளில் எல்லாம் தெரிந்த முகங்கள் வந்து அமர ஆரம்பித்தனர்(வழக்கமாக அந்த ரயிலில் பயணம் செய்பவர்கள்) அன்று என்னவோ தெரியவில்லை போய் அமர்ந்ததும் தூங்கி விட்டேன் ரயில் கிளம்பியதை சிறிது நேரத்தில் உணர்ந்தேன் ரயில் இரண்டு மூன்று ரயில் நிலையங்களை கடந்து இருக்கும் என நினைக்கிறேன்

ரயிலில் எப்போதும் போல இல்லாமல் சல சல என ஒரே பேச்சு சத்தம் என்னடா இது நமது ரயிலில் இந்த நேரத்தில் பேச்சு சத்தம் வராதே என கண்ணை திறந்து பார்த்தால் திடுக்கென ஆகி விட்டது எதுவும் தெரிந்த முகமில்லை கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல ஆகி விட்டது

வெளியில் பார்க்கிறேன் ரயில் எங்கோ வேறு தடத்தில் போய் கொண்டிருக்கிறது ரயிலின் வேகத்தை விட எனது இதயத்தின் வேகம் தடக் தடக் என ஆகி விட்டது

அதற்கு முதல் காரணம் ரயில் எங்கு போய் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை

இரண்டாம் காரணம் டிக்கெட் இல்லை எல்லாரும் என்னையே பார்ப்பதை போல ஒரு உணர்வு உடனே அடுத்த ரயில் நிலையத்தில் இறங்குபவனை போல காட்டி கொண்டு சீட்டில் இருந்து எழுந்தேன் எழுந்து வெளியே நின்று கொண்டேன்

அடுத்த நிலையம் வருவதற்குள் ஒரு யுகம் கடப்பதை போல இருந்தது ரயில் நிலையம் வந்தது இறங்கி விட்டேன் ரயில் நிலைய பேரை பார்த்தேன் அய்யோ எவ்வளவு தூரம் வந்து இருக்கிறோம் என்று கூட தெரியவில்லை அந்த தடத்தில் ரயில் சேவை வேறு குறைவு நல்ல வேளை என்னுடைய நல்ல நேரம் நான் இறங்கியதும் ஒரு ரயில் அடுத்த பிளாட்பாரத்தில் வந்து நின்றது ஓடி போய் ஏறி கொண்டேன்
ஆனாலும் இதய துடிப்பு அடங்கவில்லை எப்போது நமக்கு பழக்கப்பட்ட ரயில் நிலையம் வரும் என்று தெரியவில்லை இன்னொரு பக்கம் பயண டிக்கெட் இப்பொழுதும் எடுக்கவில்லை ஏனினில் இந்த ரயிலை விட்டு விட்டால் எத்தனை மணிக்கு ரயில் என்றும் தெரியவில்லை செக்கிங் வந்தால் சமாளித்து விடலாம் என ஒரு குருட்டு தைரியம் தான் ஆனாலும் திக் திக் என்று இருந்தது மூன்று நிலையம் தாண்டி நான்காவதாக பழக்கப்பட்ட ரயில் நிலையம் வந்தது அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்

அதில் இருந்து எப்போதும் ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவு படுத்தி விட்டு நமது தடத்தில் தான் ரயில் செல்கிறதா என உறுதி செய்து விட்டு தான் அடுத்த வேலைகளை கவனிப்பேன்(அதாவது தூங்குவது,படிப்பது இன்னும் நிறைய இருக்குங்கோ):D :D

அன்பர்களே இது போல பலருக்கு நடந்து இருக்கலாம் அவர்களும் இங்கு அவர்களின் அனுபவங்களை கொடுக்கலாமே?

அடுத்த முறை வேறு ரயில் அனுபவத்துடன் சந்திக்கிறேன்

நன்றி

மனோஜ்
10-04-2007, 09:11 AM
இடியான சம்பவம் தான் வாழ்வில் மறக்க மாட்டிங்க போங்க
பகிந்தமைக்கு நன்றி அருன்

மயூ
10-04-2007, 09:11 AM
ஓ... நல்ல அனுபவம்...
நான் பஸ்சில் நன்றாக நித்திரை கொள்வேன்...
இதனால் பல நிறுத்தங்கள் தாண்டி இறங்கி மீண்டும் பணம் கொடுக்க மனம் இல்லாமல்் நடந்து வந்த கதைகள் தான் ஆயிரம்.

இளசு
14-04-2007, 10:01 AM
அருண்

பகிரவேண்டிய பாடமான அனுபவம்தான். நன்றி.

நல்ல கோர்வையாய் எழுத வருகிறது உங்களுக்கு. பாராட்டுகள்!

தொடருங்கள் (எழுத்துப்) பயணத்தை!