PDA

View Full Version : வெந்தயம்



mgandhi
09-04-2007, 05:51 PM
வெந்தயம்
தாவரவியல்ற் பெயர்;(Trigonella Forenum-graecum)
மனிதனுக்கு இயற்கை அளித்த வரம் எனலாம்.

புரதம்-4.4 கிராம்
கொழுப்பு 0.9 கிராம்
இழைப்பாண்டம்1.1 கிராம்
மாவுப்பொருட்கள்-6.0 காராம்
கால்சியம்- 395 மி.கி
மக்ளீசியம்- 67மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 13 மி.கி
பாஸ்பரஸ்- 51 மி.கி
அயம்- 16.5 மி.கி
சோடியம்- 76.1 மி.கி
பொட்டாசியம்- 31 மி.கி
செம்பு- 0.26 மி.கி
க்ளோரின்-165 மி.கி
வைட்டமின் சி 52 மி.கி
தயமின்- 0.04 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.31மி.கி
நியாஸின்- 0.8 மி.கி

100கிராமில் 49 கலோரி உள்ளது.

இந்த கீரையை மைபோல் அரைத்து தலையில் தேய்த்து குளித்தால்முடி நீண்டு வளரும்.மடியின் இயல்பு நிறம் காக்கப்படும்.முடி பட்டுப்போல் இருக்கும்.
குடலின் வாயுஉபத்திரவம்,ஈரல் மந்தம்,அசீரணம் ஆகியவற்றுடன் வாய்ப்புண்னையும் குணப்படுத்தும்.
சோகை வராமல் இது தடுக்கும்.
உடம்பில் உள்ள சொறி சிரங்குகள்குணமிக்கும்,கண்பார்வை தெளிவுறும்.
வெந்தயகீரையை கடைந்து தேன்விட்டு உண்டால் குடல் புண் குணமாகும்.
வெந்தயகீரை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் தலைவலி,தலைசுற்றல்,உறக்கமான்மை தீரும்.
நீரழிவின் ஆரம்பநிலையில் வெந்தயகீரை சாற்று நல்ல பலன் கிட்டும்.

ralah
09-04-2007, 06:00 PM
வெந்தயத்தில் இவ்வளவு பலனா?

வாழ்த்துக்கள் நண்பரே.

அன்புரசிகன்
09-04-2007, 06:01 PM
நல்லது காந்தி.எனக்குத்தெரிந்த ஒரு விடையம். சரியாக மலம் கழிக்க முடியாதவர்கள் வயிற்றில் பூச்சிக்குணம் உள்ளவர்கள் 4 அல்லது 5 வெந்தயத்தை வெறுமனே மென்று விழுங்கலாம். அல்லது ஊறவைத்து ஊறவைத்த நீரைக்குடிக்கலாம். இது எனது அம்மம்மாவின் கை வைத்தியம்.

அன்புரசிகன்
09-04-2007, 06:13 PM
அன்பு சார் வெந்தியம் கசப்பாக இருக்கும் எப்படி சார் வெறும் வயிஇற்றில் சாப்பிடுவது,இது எனது அம்மம்மாவின் கை வைத்தியம்.
என்று சொல்கிறீர்கள், அனுபவமுறை பலன் அளிக்கும் நன்றி சார்

சில நல்லவிடையங்கள் கசப்பாகத்தான் இருக்கும். சார் மோரெல்லாம் எனக்கு வேண்டாம்:icon_v: . :icon_08:

அன்புரசிகன்
09-04-2007, 06:29 PM
மோரில் சப்பிட்டா கூட நல்லா இருக்குனும் தான் நினைக்கிறேன்
கசப்பு குறைவாக இருக்கும்

கடிச்சுட்டீங்க.

ஓவியா
09-04-2007, 06:37 PM
ஆமாம் உன்மை சில நல்லவிடையங்கள் கசப்பாகத்தான் இருக்கும்.

கடிசுட்டீங்களே :icon_hmm: :icon_hmm: :icon_hmm: :icon_hmm:


அன்பு சார் வெந்தியம் கசப்பாக இருக்கும் எப்படி சார் வெறும் வயிஇற்றில் சாப்பிடுவது,இது எனது அம்மம்மாவின் கை வைத்தியம்.
என்று சொல்கிறீர்கள், அனுபவமுறை பலன் அளிக்கும் நன்றி சார்

வர்ஷா, ஒரு பெண்னாக இருந்துக்கொண்டு வெரும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டதது இல்லையா??? :sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019: :sport-smiley-019: அட என்ன ஆச்சர்யம்.

அம்மாவிடம் கேளுங்கள் பெண்களும் வெந்தயமும் எதற்க்கு என்று. (நீங்களேன் சொள்ளுங்கள் என்று எனக்கு அன்பு வேண்டுகோள் வைக்ககூடாது..ஹி ஹீ ஹ்)

ஓவியா
09-04-2007, 06:43 PM
அது தான் வீட்டில் வெந்திய குழம்பாக வைத்து தள்ளிவிடுவார்கள்
சாப்பிட்டுதான் ஆகவேண்டும்

நல்லது. நல்ல ஆரோக்யம் கிடைக்கும்.
சந்தோஷாமாக வீட்டில் வைத்து தள்ளிய வெந்தய குழம்பை ருசிக்கவும்.

ஓவியா
09-04-2007, 06:47 PM
நீங்களேன் சொள்ளுங்கள் எனது அன்பு வேண்டுகோள்



பெண்களுக்கு வயிற்ரு குளுமைகாகவும் கர்ப்பிணி பெண்களின் உஷண வலிக்காவும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட சொல்வார்கள்.

எதுக்கும் உங்களுக்கு தெரிந்த பெண்களிடம் கேளுங்கள். :icon_wacko:

ஓவியா
09-04-2007, 06:52 PM
அப்படியென்றால் நேரம் வரும் போது கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன் தங்களின் அன்பு பதிலுக்கு நன்றி

அதே அதே காத்திருங்கள்.

நேரம் வரும் பொழுது கண்டிப்பாக கொடுப்பார்கள்.

banupriya
11-04-2007, 06:55 AM
மிகவும் அருமை. வெந்தெயம் இவ்வளவு பயன்படுகிறதா தலைமுடி வளர்வதற்குமுயற்சி செய்வோம். குறிப்புகளுக்கு நன்றி.

ஜோய்ஸ்
13-04-2007, 03:50 PM
வெந்தயத்தின் மகத்துவங்களை மிக அழகாக சொல்லியிருந்தீர்கள்.நன்றி.
அது சரி நீங்கள் என்ன ஒரு மூலிகை மருத்துவரா என்ன?

பரஞ்சோதி
14-04-2007, 04:32 AM
அருமையான தகவல்கள். நன்றி காந்தி அவர்களே!

வாரம் தோறும் இருமுறை வெந்தயக்கீரை சாப்பிட்டு வருகிறேன். அப்போ அப்போ சமையல் அறை பக்கம் எட்டிப்பார்த்தால் வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டுக்குவேன். உடல் வெப்பத்தை குறைக்கும் என்று சொல்வாங்க.