PDA

View Full Version : அப்பாயணம்இளசு
02-04-2003, 05:05 AM
அப்பாயணம்


நீ எனக்கு வாங்கித் தந்த
இனிப்புகளை விட
புத்தகங்களே அதிகம்

"உன் குழந்தையை அடிக்கும்போது
ஒரு புகைப்படம் எடுக்கச்சொல்லிப் பார்"
ரஸ்ஸல் படித்து நீ எழுதியது பழைய டைரியில்
அப்படி ஒரு படமே இல்லை உன் வாழ்க்கை டைரியில்

"இளந்தோள்.... முதிய தலை "
பத்துவயதில் நீ தந்த பாராட்டுப்பத்திரம்
இன்றும் பொக்கிஷமாய் என் நெஞ்சில் அது பத்திரம்

தோளுக்கு மேல் வளரும் முன்னே
உன் தோள்மேல் ஏறி திருவிழா பார்த்தபோதே
தோழனாய் ஏற்றுக் கொண்டாய்

"மனிதன் செய்யும் தவறுகள் எல்லாமே
மன்னிக்கப்படக் கூடியவை.
அதை
மறைக்கச் செய்யும் முறைகளும் வழிகளும் அல்ல"
சொல்லித் தந்த குரு நீ....

எரவாணப் புத்தகங்கள்
ஏ படங்கள்
திருட்டு தம்
இருட்டுப் பிசையல்.....
மன்னித்தாய்
மனதால் நீயும் தாய்
மறைக்க வேண்டிய சூழல் வராமல்
மானம் காத்தாய்

நீ சொல்லிக் கற்றதைவிட
உன்னைப் பார்த்துக் கற்றது அதிகம்

இன்றும் கற்கிறாய்
ஆறு மாதம் கழித்துப் பார்க்கும்
ஆசை மகனிடம் நீ கேட்டது
"தொல்காப்பியப் பூங்கா"

என்னைப் பெற்றது பெருமை என்பாய்
இல்லை அப்பா
உனக்குப் பிறந்தது
நான் வாங்கி வந்த வரம்

முடிக்க முடியவில்லை........

Narathar
02-04-2003, 05:40 AM
"இளந்தோள்.... முதிய தலை " இது உங்கள் அப்பா தந்த பாராட்டு......
"இளந்த பெயர் முதிர்ந்த வரி" இது நாம் உமக்களித்த பாராட்டு!!!

rambal
02-04-2003, 08:33 AM
கம்பன் எழுதியது ராமாயணம்
கலைஞர் எழுதியது பரதாயணம்..
இளசு எழுதியது அப்பாயணம்..
எல்லாமே அழகுத் தமிழாயணம்...

aren
02-04-2003, 12:41 PM
தந்தை பற்றி இதைவிட அருமையாக எழுதி நான் கண்டதில்லை.

இளசு அவர்களே உங்கள் தொண்டு தொடரட்டும். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
08-04-2003, 10:04 PM
நண்பர் நாரதர்
அன்பிற் பெரிய ஆரென்
இளைய கவி ராம்....

நன்றிகள்....

poo
09-04-2003, 12:27 PM
அப்பாவுக்கு ஏங்க வைக்கும் அப்பாயணம்... அண்ணனுக்கு நன்றி!!!

rambal
09-04-2003, 04:35 PM
அடுத்த பிறவி
என்ற ஒன்றிருந்தால்
நீ எனக்கு மகனாக
பிறக்க வேண்டும் அப்பா..
நீ எனக்கு
செய்ததை விட
இரண்டு மடங்கு செய்ய
ஆசைப்படுகிறேன்..

இரண்டாவது தடவையாக இந்தக் கவிதைக்கு..
பாராட்டுக்கள் அண்ணனுக்கு..

குமரன்
10-04-2003, 01:25 AM
இளைய அப்பாக்களும்
அப்பாவாகத் துடிக்கும்
அனைவரும் படித்து
பின்பற்ற வேண்டிய
கவிதை...

-குமரன்

இளசு
10-04-2003, 06:01 AM
நண்பர்கள்
ராமுக்கும் (இரண்டாவது முறையாக)
குமரனுக்கும்
நன்றிகள்....

chezhian
10-04-2003, 12:44 PM
நல்ல முறையில் ஒரு நல்ல அப்பாவை
போற்றிய கவிதை.. அருமை இளசுஜி..

இளசு
18-04-2003, 08:35 PM
என் அன்புக்குரிய கவிஞன் செழியனே
உனக்கு என் நன்றி....

gans5001
19-04-2003, 01:32 AM
ஆனாலும் இளசு.. அப்படி ஒரு அப்பா இந்த இயந்திர வாழ்வில் சாத்தியமா?

இளசு
22-04-2003, 03:55 PM
ஆனாலும் இளசு.. அப்படி ஒரு அப்பா இந்த இயந்திர வாழ்வில் சாத்தியமா?

சாத்தியம்... நானே (மகனாய்) அதன் சாட்சியம்!
இந்தக் கவிதை என் வாழ்க்கைப் பதிவின் ஒரு விள்ளல்!

Nanban
10-01-2004, 02:27 PM
அப்பாவின் பெருமை..... பிற்காலத்தில் இடிக்க மனமில்லையே என்ற என்னின் ஒரு கவிதைக்கு முன்னோடி...... பாராட்டுகள் இளசு........

aren
10-01-2004, 02:32 PM
இளசு அவர்களின் தந்தை மாதிரி எல்லோருக்கும் அமைந்துவிட்டால் மக்கள் நிச்சயம் சாதிப்பார்கள்.

எனக்கும் அந்தமாதிரி தந்தை கிடைத்தார், ஆனால் எனக்குத்தான் அதற்கு அதிர்ஷ்டமில்லை. அவரும் என்னுடைய சிறுவயதிலேயே போய்விட்டார்.

இளசு
10-01-2004, 02:38 PM
நண்பனுக்கு நன்றி
பிப்ரவரி 15 வரை அகழ்வாராய்ச்சியா நண்பனே

அன்பின் ஆரென் அவர்களே,

படைப்புலகில் இருந்த உங்கள் அப்பா, பாட்டனார் பற்றி என் மனதில் உயர்ந்த எண்ணம்... உங்கள் அப்பாவின் குணநலம் அறிந்து இன்னும் இன்னும்..

இதோ என் அப்பாவுடன் பேச தொலைபேசியைக் கையில் எடுத்துவிட்டேன்..
நெகிழவைத்துவிட்டது உங்கள் கருத்து...

நண்பர்களே,
இருக்கும்போதே அந்தத் தெய்வங்களைக் கொண்டாடுங்கள்..வாய் விட்டு சொல்லுங்கள்... அவர்களை மதிக்கிறோம், நேசிக்கிறோம் என்று...

காலம் கடந்தால் அந்த கணங்கள் திரும்ப வாரா...

Nanban
10-01-2004, 03:28 PM
அப்படி இல்லை.....

சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் - கொஞ்சம் பார்த்து விடலாம் என்று தான்.... மன்றத்தின் ஆரம்பகாலப் பதிவுகளில் ஒரு நூறு இன்று முடித்திருக்கிறேன்..... அதற்கே கிட்டத் தட்ட 8 மணி நேரம் ஆகிவிட்டது

aren
11-01-2004, 05:23 AM
அப்படி இல்லை.....

சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் - கொஞ்சம் பார்த்து விடலாம் என்று தான்.... மன்றத்தின் ஆரம்பகாலப் பதிவுகளில் ஒரு நூறு இன்று முடித்திருக்கிறேன்..... அதற்கே கிட்டத் தட்ட 8 மணி நேரம் ஆகிவிட்டது

நண்பன் அவர்களே,

உங்களுடைய வேகம் வியக்க வைக்கிறது. இப்படி பழைய பதிவுகளைப் படித்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும்பொழுது அந்தப் பதிவும் உயிர்பெற்று இதுவரை படிக்காதவர்களும் படித்து பயன்பெறும் என்பது நிச்சயம். தொடருங்கள்.

மன்மதன்
11-01-2004, 08:28 AM
அப்படி இல்லை.....

சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் - கொஞ்சம் பார்த்து விடலாம் என்று தான்.... மன்றத்தின் ஆரம்பகாலப் பதிவுகளில் ஒரு நூறு இன்று முடித்திருக்கிறேன்..... அதற்கே கிட்டத் தட்ட 8 மணி நேரம் ஆகிவிட்டது.
நண்பன் அவர்களே,
உங்களுடைய வேகம் வியக்க வைக்கிறது. இப்படி பழைய பதிவுகளைப் படித்து அவைகளுக்கு விமர்சனம் எழுதும்பொழுது அந்தப் பதிவும் உயிர்பெற்று இதுவரை படிக்காதவர்களும் படித்து பயன்பெறும் என்பது நிச்சயம். தொடருங்கள்.

கண்டிப்பா . நேற்று நண்பன் உதவியால் நிறைய அருமையான பழைய பதிவுகளை படிக்க முடிந்தது..

சேரன்கயல்
11-01-2004, 12:59 PM
என் இனிய இளசுவின் இன்னுமொரு அசத்தலான பதிவு...
(அநியாயமா கண்ணை கலங்க வச்சிட்டீங்க...)

இங்கே மீட்டுக் கொடுத்த நண்பனுக்கு நன்றிகள்...

இளசு
11-01-2004, 01:10 PM
நாந்தான் சொன்னேனே இனிய சேரன்
அப்பா மன்றம் வந்தால், என் பதவிக்கு ஆபத்துன்னு...

என் முதல் ஹீரோ...இன்னமும் அதே ஸ்தானத்தில்...

பாரதி
11-01-2004, 03:36 PM
அப்'பா'ராயணம் அருமை அண்ணா...!

இளசு
11-01-2004, 10:27 PM
நன்றி பாரதி..

முத்து
11-01-2004, 10:44 PM
அருமையாக , சுகமாக ,இனிமையாக இருக்கிறது ...
நன்றிகள் இளசு அண்ணா ...

இளசு
11-01-2004, 10:45 PM
நன்றி முத்து
எல்லா உண்மைகளும் கசப்பதில்லை

சில இனிக்கவே செய்கின்றன.. என் அப்பா போல..

பாரதி
01-05-2008, 03:34 PM
இனிக்கும் இந்த அப்பாயணம் மன்ற உறவுகளின் பார்வைக்காக மேலெழுப்பப்படுகிறது.

Keelai Naadaan
01-05-2008, 03:48 PM
பெரும்பாலும் யாரும் அப்பாவைப் பற்றி அதிகம் கவிதை எழுதுவதில்லை. நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றிகள்.
பிள்ளைகளின் வாழ்வுக்காக தங்கள் மேல் சுமைகளை தாங்கும் அவர்களை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பூமகள்
12-05-2008, 08:18 AM
எனக்கும் அப்பாயணம் எழுத ஆவல் வந்துவிட்டது பெரியண்ணா..!!
அழகான அப்பா பதிவு.. மனம் நெகிழ்கிறது...!! பாராட்டுகள் பெரியண்ணா..!!

----------------------------------
பூவப்பாயணம்..!!

உறங்கி கிடக்கும்
நடுநிசி நேரத்தில்..
இரவுப்பணி முடிந்து
கிரீம் ரொட்டி வாங்கி
ஊட்டி விட்ட நான்கு
வயது நாட்கள்..

சைக்கிள் முன்புறம்
கூடையில் பூவேற்றி..
ஊர் சுற்றி
காட்டித் திரிந்த
மூன்று வயது நாட்கள்..

காத்திருந்து எனை
அழைத்துச் செல்லும்..
என்அலுவலக
வேலை நாட்கள்..

பிறந்த நாள் முதல்
இன்று வரை..
சுமப்பது ஒன்றையே
சுகமாகக் கொண்ட
தங்கத் தந்தையே...

எப்போது எப்படி
என் கடன்
கழிக்க போகிறேன்??

குழந்தையான வயதிலேயே
குடும்ப குழுமத்தில்
பொருள் இருப்பும்..
உலக நடப்பும்
புரிவித்த வித்தகரே..

பொருளில்லா துயர்
நேரங்களில்...
புன்னகைப் பூக்க
படிப்பித்தவரே...

பகிராத விசயமென்று
எதுவுமில்லை உன்னில்..நான்
பகிராத ஒன்றிருந்தாலும்
மௌனத்தில் பரிமாறியவையே
அவை..!!

நேர்மையின் இருப்பிடமே..
மனத் திடம் இருந்தால்..
சூழ்நிலை எதுவும் நம்மை
மாற்றாதென வாழ்நாள்
சாட்சியானவரே...

இன்னும் சொல்ல
ஆயிரமுண்டு...
எத்தனை பிறவியெடுத்தாலும்
என் இக்கவியும்
உன் புகழும் சொல்லி
முடிக்க முடியாமலே...
தொடரும்..
நம் பந்தம் போலவே..!!

meera
24-05-2008, 07:52 AM
இளசு அண்ணா அழகான,ஆழமான வரிகள். படித்ததும் பிடித்துக்கொண்டது ஆசை அப்பாவை பார்க்க.

பாரதி அண்ணா காண தந்தமைக்கு நன்றி.

பூ, அழகுதான்.உன் கவி வெள்ளத்தில் நானும் நனைந்தேன்.இதை உன் அப்பாவிடம் காட்டு மிகவும் சந்தோஷப்படுவார்.

பூமகள்
28-05-2008, 06:40 AM
பூ, அழகுதான்.உன் கவி வெள்ளத்தில் நானும் நனைந்தேன்.இதை உன் அப்பாவிடம் காட்டு மிகவும் சந்தோஷப்படுவார்.
மிக்க நன்றி மீரா அக்கா..!
நிச்சயம் செய்கிறேன்..!! :)

தீபா
21-06-2008, 05:24 AM
பெருமைகள் பிறப்பதில்லை
அது நம்மோடே இருக்கின்றன.
நம்மிலும், அவரிலும்.

வாழ்த்துகள்

இளசு
12-07-2008, 11:11 AM
[COLOR=Green]
பிறந்த நாள் முதல்
இன்று வரை..
சுமப்பது ஒன்றையே
சுகமாகக் கொண்ட
தங்கத் தந்தையே...

எப்போது எப்படி
என் கடன்
கழிக்க போகிறேன்??

பொருளில்லா துயர்
நேரங்களில்...
புன்னகைப் பூக்க
படிப்பித்தவரே...

பகிராத விசயமென்று
எதுவுமில்லை உன்னில்..நான்
பகிராத ஒன்றிருந்தாலும்
மௌனத்தில் பரிமாறியவையே
அவை..!!

நேர்மையின் இருப்பிடமே..
மனத் திடம் இருந்தால்..
சூழ்நிலை எதுவும் நம்மை
மாற்றாதென வாழ்நாள்
சாட்சியானவரே...

இன்னும் சொல்ல
ஆயிரமுண்டு...
எத்தனை பிறவியெடுத்தாலும்
என் இக்கவியும்
உன் புகழும் சொல்லி
முடிக்க முடியாமலே...
தொடரும்..
நம் பந்தம் போலவே..!!
கண்கள் பனித்தேன்
தங்கையின் அர்ப்பணம் கண்டு!
அப்பாவுக்கு என் அன்பு!

இதைத் தனிக்கவிதையாய் பதிக்கலாமே பூ!

----------------------------

மெலெழுப்பிய தம்பிக்கும்
கருத்தளித்த கீழைநாடான், தங்கை மீரா, தென்றல் - அனைவருக்கும்
என் அமுத நன்றிகள்!

பூமகள்
12-07-2008, 03:21 PM
கண்கள் பனித்தேன்
தங்கையின் அர்ப்பணம் கண்டு!
அப்பாவுக்கு என் அன்பு!

இதைத் தனிக்கவிதையாய் பதிக்கலாமே பூ!
கண்கள் பனிப்பதே.. அன்பின் இறுதி வெளிப்பாடு தானே பெரியண்ணா..!!

இக்கவி வடிக்கையில் எனக்குள் ஏற்பட்ட உணர்வை உங்களிலும் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது..!

உங்களின் மிகச் சிறந்த கவிக்கு ஒரு அணிலினைப் போல எனது மழலை எழுத்துகளைப் பதித்தேன்... அது.. உங்கள் மனம் தொட்டதில் மகிழ்ச்சி..!

இக்கவிதையை தனித்திரியாக்க விரும்பவில்லை அண்ணலே... மன்னியுங்கள்..!:icon_rollout:
பெரியண்ணாவின் கவிப்பூவோடு சேர்ந்து என் கவியும் இருந்தால் சற்றேனும் அதிகம் மணக்கும் என்று நம்புகிறேன்..!!:icon_ush:

முகுடத்தின் இறுதி வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய முத்தைப் போல.. உங்கள் கவி மகுடத்தில் என் கவி ஓர் ஓரத்திலேனும் இருக்க வேண்டுமென்ற பேராசை தான் பெரியண்ணா..!!

உங்கள் ஊக்கத்துக்கு மிகுந்த நன்றிகள். :)

mukilan
12-07-2008, 03:49 PM
உண்மைதான் பொருளீட்டி நம் தேவைகளை நிறைவேற்றும் அப்பாக்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய அன்பைக் கொடுத்திருக்கிறோமா என அவ்வப்பொழுது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இளசு அண்ணா, பூமகள் உங்கள் தாயுமானவருக்கு நீங்கள் அளித்த பாராட்டுப் பத்திரம். இத்தகைய மகவுகளைப் பெற அந்த தகப்பன்சாமிக்கள் என்ன தவம் செய்தனரோ?
எனக்கும் என் தந்தைக்கும் அப்படி ஒரு பிணைப்புதான் இருக்கிறது என்பதில் என் மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே விடுதிகளில் வளர்ந்ததால் என் அன்னையை விட தந்தை என்ற என் தோழனிடம்தான் என் மனப் பகிர்தல் அதிகமாக இருக்கின்றது.

எளிய சொல்லாடலுடன், அடி மன உணர்வுகளைத் தூண்டி விட்ட இளசு அண்ணா படைத்த இக்கவியை மேலெழுப்பிய பாரதி அண்ணாவிற்கு நன்றி.
கவிதை படித்ததோடு மட்டுமில்லாமல் அதே உந்துதலில் பூவப்பாயணம் படைத்த பூமகளின் புதுக்காவியத்திற்கு பாராட்டுக்கள்.

இளசு
12-07-2008, 04:49 PM
அன்பு பூ..

உன் பதிவு இம்மன்றத்தால் நான் பெற்ற பேறுகளில் ஒன்று..
நன்றி சொல்லி நம்மில் பிரிவு காண விருப்பமில்லை!
ஒத்த உணர்வுகளுக்கு என்னைப் புரியவைக்கப் பணிக்கிறேன்..
அவை உன்னிடம் வந்து சொல்லும்!


அன்பு முகில்ஸ்,
இதைப் போன்ற பின்னூட்டங்களால் மனபல பயில்வான் ஆகிறேன்..
பலமான மகிழ்வும் நெகிழ்வும்..!

பூமகள்
12-07-2008, 05:06 PM
உண்மையில் உங்கள் பதிவுகள் காண தவமிருந்த நாட்கள் அதிகம் பெரியண்ணா...!!

அத்தகைய பதிவுகள் கண்டு துவண்டு விழும் மனம் எழுந்து சிரிப்பதை வார்த்தைகளில் என்னால் பகிர இயலாது..

ஒவ்வொரு முறையும் உங்கள் பெயர் மன்றத்தின் பார்வையாளர்களில் பார்க்கையில்.. இதழோர புன்னகையும்.. உடல் சோர்வுகள் விட்டுப் போவதை எங்ஙனம் புரிய வைப்பேன்..??!!

அடிமனத்தில் இருக்கும் பல நல்ல நுட்பமான உணர்வுகள் விசுவரூபமெடுத்து உங்கள் எழுத்துகளில் தவழ்ந்து வரும் அழகை ரசிக்க எனக்கு இந்த பிறவி போதாது அண்ணலே..!!

உணர்ச்சி வசப்பட்டு எழுதும் பதிலல்ல.... மனம் ஒன்றி எழுதும் என் உயிலெனவும் கொள்ளலாம்..

உங்களின் அன்பு தங்கை பாமகளாக என் வாழ்நாள் முழுக்க இருப்பதே நான் பெற்ற பேறு தான்..!

நல்லகம் மட்டும் காணும் இம்மன்றத்துக்கும் அது தந்த மாபெரும் மாணிக்க பெரியண்ணாவுக்கும் என்றென்றைக்கும் இந்தப் பூ தலை வணங்கியே இருப்பேன்..!!

பா.ராஜேஷ்
02-04-2009, 06:21 AM
தந்தை மகர் காற்றும் உதவி எனும் குறளும் மகன் தந்தை கற்றும் உதவி எனும் குறளையும் நினைவ கொள்ள வைத்த அருமையான (க) விதைகள்.
அப்பாயணம் எழுதிய கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

richard
11-12-2009, 12:11 PM
அப்பாயணம்


நீ எனக்கு வாங்கித் தந்த
இனிப்புகளை விட
புத்தகங்களே அதிகம்

"உன் குழந்தையை அடிக்கும்போது
ஒரு புகைப்படம் எடுக்கச்சொல்லிப் பார்"
ரஸ்ஸல் படித்து நீ எழுதியது பழைய டைரியில்
அப்படி ஒரு படமே இல்லை உன் வாழ்க்கை டைரியில்

"இளந்தோள்.... முதிய தலை "
பத்துவயதில் நீ தந்த பாராட்டுப்பத்திரம்
இன்றும் பொக்கிஷமாய் என் நெஞ்சில் அது பத்திரம்

தோளுக்கு மேல் வளரும் முன்னே
உன் தோள்மேல் ஏறி திருவிழா பார்த்தபோதே
தோழனாய் ஏற்றுக் கொண்டாய்

"மனிதன் செய்யும் தவறுகள் எல்லாமே
மன்னிக்கப்படக் கூடியவை.
அதை
மறைக்கச் செய்யும் முறைகளும் வழிகளும் அல்ல"
சொல்லித் தந்த குரு நீ....

எரவாணப் புத்தகங்கள்
ஏ படங்கள்
திருட்டு தம்
இருட்டுப் பிசையல்.....
மன்னித்தாய்
மனதால் நீயும் தாய்
மறைக்க வேண்டிய சூழல் வராமல்
மானம் காத்தாய்

நீ சொல்லிக் கற்றதைவிட
உன்னைப் பார்த்துக் கற்றது அதிகம்

இன்றும் கற்கிறாய்
ஆறு மாதம் கழித்துப் பார்க்கும்
ஆசை மகனிடம் நீ கேட்டது
"தொல்காப்பியப் பூங்கா"

என்னைப் பெற்றது பெருமை என்பாய்
இல்லை அப்பா
உனக்குப் பிறந்தது
நான் வாங்கி வந்த வரம்

முடிக்க முடியவில்லை........

இது கவிதை இல்லை தெய்வ வாக்கு, மனதை நெகிழவைக்கிறது

richard
11-12-2009, 12:17 PM
உண்மைதான் பொருளீட்டி நம் தேவைகளை நிறைவேற்றும் அப்பாக்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய அன்பைக் கொடுத்திருக்கிறோமா என அவ்வப்பொழுது சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இளசு அண்ணா, பூமகள் உங்கள் தாயுமானவருக்கு நீங்கள் அளித்த பாராட்டுப் பத்திரம். இத்தகைய மகவுகளைப் பெற அந்த தகப்பன்சாமிக்கள் என்ன தவம் செய்தனரோ?
எனக்கும் என் தந்தைக்கும் அப்படி ஒரு பிணைப்புதான் இருக்கிறது என்பதில் என் மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே விடுதிகளில் வளர்ந்ததால் என் அன்னையை விட தந்தை என்ற என் தோழனிடம்தான் என் மனப் பகிர்தல் அதிகமாக இருக்கின்றது.

எளிய சொல்லாடலுடன், அடி மன உணர்வுகளைத் தூண்டி விட்ட இளசு அண்ணா படைத்த இக்கவியை மேலெழுப்பிய பாரதி அண்ணாவிற்கு நன்றி.
கவிதை படித்ததோடு மட்டுமில்லாமல் அதே உந்துதலில் பூவப்பாயணம் படைத்த பூமகளின் புதுக்காவியத்திற்கு பாராட்டுக்கள்.

உண்மை தான் அதனால் தான் நம் பெற்றோர்களுக்கு மதிபளிப்பதோடு. குறிப்பாக வயதான காலத்தில் அருகில் இருந்து அவர்களுக்கு வேண்டிய மருத்துவமும் நல்ல நேரத்தோடு உணவும் தந்துஅன்பான வார்த்தைகளை கூறி நாம் தாய் தந்தையர்களை கவனித்துக்கொண்டால். அவர்கள் மறைவிற்கு பிறகும் நாம் குற்றவுணர்வு இல்லாமல் மனநிறைவோடு சந்தோசமாக வாழாலாம்

muthuvel
16-12-2009, 04:17 PM
மிகவும் அருமை

கீதம்
22-03-2010, 06:54 AM
அப்பாயணம் படித்து நெகிழ்ந்தேன். ஆண்பிள்ளைகளுக்கு அப்பாக்கள்தான் உதாரணபுருஷர்கள். உங்களைப் பெற்றதற்காய் உங்கள் தந்தை மிகவும் பெருமைப்படுவார். மனதில் நினைத்தாலும் எத்தனைப் பேர் மனம்விட்டு சொல்கிறோம், அவரிடம்?

ஏன் இப்போதெல்லாம் நீங்கள் எழுதுவதில்லை, இளசு அவர்களே? தொடருங்களேன், நாங்கள் களிக்க!

simariba
02-05-2010, 09:21 AM
மிகவும் அழகான கவிதை, வாழ்த்துக்கள் இளசு.

nambi
09-05-2010, 10:27 AM
அப்பாவுக்காக மகன் எழுதிய கவிதை நன்று.

அய்யா
19-11-2010, 09:54 AM
அப்பாவை உயர்த்துவதற்காக மகனின் சித்தரிப்பு மாற்றுக் குறைந்துவிட்டதோ என ஒரு எண்ணம் எழாமலில்லை..

இப்படிப்பட்ட ஒரு மேன்மையாளரால் வளர்க்கப்பட்டவன் எப்படி திருட்டு தம், இருட்டுப் பிசையல்..?

சிந்தித்து எழுதுவதற்கும், உணர்ந்து எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு நெருடுகிறது..

சாரி அண்ணா.. கோபமில்லைதானே..?