PDA

View Full Version : நாளைய காலை....



ஆதவா
09-04-2007, 12:48 PM
அமரப்பட்ட இடத்தில்
பல நினைவுகள் அமர
கண்கள் குளித்தது;
தேகமும் கூட.

என்னுள் இருந்து
பயிர் செய்தவன்,
தப்பிவிட்டான்.
இனியென் கண்களுக்கு
முத்தமில்லை;
வெறும் கனவுகள் வருமோ?

என் கரங்களின் கணையாழிகள்
ஆவேசமாக பிடுங்கியெடுக்கப்படுகிறது
இதயக் குழாய்கள் பிடுங்குவதைப்போல..

ஊற்றிய தண்ணீரில்
என் கோலம்
அலங்கோலம்.
புள்ளி வைத்த பொடிகள்
கரைந்து போன கோலம்.

கழுத்தோடு
அணைக்கப்பட்டிருந்த என்னுயிர்
கொலை செய்யப்பட்டது.
கவனித்துக் கொண்டிருந்த
மரண ஜீவன்
கண்ணீர் விட்டது.

திருப்தியாக சென்றுவிட்டார்கள்
புண்ணிய வதிகள்.
திருப்தியற்று கிடக்கிறேன்
புண்பட்ட விதிகள்.

நாளைய காலை,
வாசலில் கூவிக் கொண்டிருக்கும்
பூக்காரியிடம் வாங்கி
சொறுகிக் கொண்டேன்
இருமுழ மல்லிகைப் பூக்கள்!

இளசு
09-04-2007, 12:53 PM
உடன்கட்டை ஏற்றினார்கள் ஒரு காலம்..
ராஜாராம் மோகன்ராய்க்கு முந்தின காலம்..

முண்டம் செய்தார்கள் கூந்தலை..
கொஞ்சம் கொஞ்சமாய் அதுவும் மறைந்தது..

இன்னும் எச்சமிருக்கும் இக்கொடுமைகளும்
மிச்சமின்றி மாறும் காலம் வரும்..

அதுவரை இவ்வகை நாயகிகளுக்காக
நம் புரிந்துணர்வு மட்டுமே ஆபரணமாய்..


ஆதவனுக்குப் பாராட்டுகள்!

ஓவியன்
09-04-2007, 12:53 PM
ஒரு விதவையின் அவலத்தை உங்கள் பாணியில் வெளிப் படுத்தியுள்ளீர்கள் ஆதவன்.

என்றுதான் தீருமோ விதவை என்று சொல்லிப் பெண்களை ஒதுக்கும் பொல்லா வழக்கம்???

கவி சொன்ன பாங்கும் வரிகளும் அருமை வாழ்த்துக்கள் ஆதவன்.

ஆதவா
09-04-2007, 12:59 PM
நன்றிங்க இளசு அண்ணா மற்றும் ஓவியன்..
என் பழைய கவிதையின் கரு இது.. பழைய கவிதை ஒரு மாதிரி இருந்தமையால் இன்று மாற்றிக் கொடுத்துள்ளேன்

ஷீ-நிசி
09-04-2007, 03:46 PM
விதவைக்காய் எழுதப்பட்ட கவிதை என்று விமர்சனம் பார்த்த பின்னரே மூளைக்கு எட்டியது...


என்னுள் இருந்து
பயிர் செய்தவன்,
தப்பிவிட்டான்.
இனியென் கண்களுக்கு
முத்தமில்லை;
வெறும் கனவுகள் வருமோ?


இந்த வரிகள் மிக நன்றாயிருக்கிறது ஆதவா

விகடன்
09-04-2007, 04:49 PM
விளங்கிக்கொள்ள முயற்சித்தேன். அதில் சொற்பளவேனும் வெற்றி கண்டுவிட்டேன் என்ற பெருமிதத்தில் எழுத விளைகிறேன் இதை.

எனக்கு எல்லாமே நல்ல கவிதைகள்தான்.

இருந்தாலும் சற்று வித்தியாசமாக சிந்தித்தேன். அதில் உதயமானது இது,



என்னுள் இருந்து
பயிர் செய்தவன்,
தப்பிவிட்டான்.
இனியென் கண்களுக்கு
முத்தமில்லை;
வெறும் கனவுகள் வருமோ?

இனிமையான கலர் கலர்க்கனவுகள் கலைந்ததையும் சொல்லலாம் அல்லவா?

ஆதாவா... உமது கருத்து என்னவோ?

பென்ஸ்
09-04-2007, 05:21 PM
திருமணம் முடிந்து ...
மனம் இனைந்து
உடல் இனைந்து
குழந்தைகள்...
சமுதாயம் என்று வாழும் பொழுது
தெரிந்தோ தெரியாமலோ வரும் (ஏ)மாற்றங்கள்...

ஒரு பெண் இறந்து போனால்
இன்னொரு பெண்ணை மணந்து
"குழந்தை போக போக ஏற்று கொள்ளும்...!!!" என்று சமாதன படுத்தி கொண்டு...
ஆனால் இழப்பின் வலி இல்லை என்று சொல்லவில்லை, ஒரு பெண் அடையும் வலியைவிட அதிகமில்லைதான்...

அதுவே ஆண் இறந்து போனால்,
"குழந்தை ஏற்றுகொள்ளுமா??? " என்று கேள்வி
"கிடக்க முடியாமலா இருக்கிறாள்" கேவல பேச்சு..
"யாரை காண்பிக்க இப்படி மினிக்கிகிட்டு போறாளோ?? என்று காது பட...
ஒடிந்து போயிருப்பவளை போயிருப்பவளை அப்பிரிவின் வலி வாட்டுவதை விட நம்மவர்கள் காலங்காலமாக வாட்டுவதில்லையா???

அவள் முடிவு சரியானதே, ஆனால் கடினமானது.
வலிகளை பொறுத்து கொள்ளுவளேயானால், போக போக சரியாகிவிடும்...

ஆனாலும்...
பூந்தோட்டத்தை காப்பாற்ற வேலிகள் வைக்கபடும்
வேலிகள் என்றும் முட்களால் மட்டுமே இருக்கும்...
இடஞ்சலானது, ஆனால் பாதுகாப்பனாது...

இவளுக்கு பாதுகாப்பு தேவையா இல்லை சுதந்திரம் தேவையா..?
அது அவள் விருப்பத்திற்க்கே...

gayathri.jagannathan
10-04-2007, 03:46 AM
நம்மூர் விதவைகளின் அவலத்தை தங்கள் பாணியில் அழகாக எடுத்துக் கூறி, எமது இதயத்தைக் கீறி விட்டீர்கள் ஆதவா....

கலைஞர் அவர்கள் சொன்னார் ஒரு முறை.."விதவை என்ற சொல்லுக்குக் கூட பொட்டு இல்லை.. அதையே... கைம்பெண் என்று எழுதிப் பார்த்தால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு (புள்ளி) இருக்கும்"

இதைப் போல் அனைவரும் பெருந்தன்மையாகச் (முற்போக்காக) சிந்திக்கும் நாள் என்று வருமோ!!!

காத்திருக்கின்றேன்......

poo
10-04-2007, 05:42 AM
பாராட்டுக்கள் ஆதவன்...

அந்த கடைசி பத்தியில் கவிதை முடிந்துபோகவில்லை என காட்டியிருக்கிறீர்கள்...

ஆதவா
10-04-2007, 01:11 PM
நன்றிங்க ஜாவா! உங்கள் கருத்துக்கு நான் எப்படி சொல்வது என்று தெரியவில்லை..
-----------------------------
நன்றிங்க பென்ஸ்.... உங்கள் விமர்சனம் என் கவிதைக்கு எட்டியது என் பாக்கியம்... ஏற்கனவே இங்கு எழுதப்பட்டவைகள் என் பாக்கியத்தோடு இணைந்துவிட்டன... இதுவும்,....

இவளுக்கு பாதுகாப்பு தேவையா இல்லை சுதந்திரம் தேவையா..?

தேவை இரண்டுமேதான்.. சற்று கடினமான கேள்வி..

பாதுகாப்பு வந்த பின் சுதந்திரம் பறிபோனால்???
சுதந்திரத்தால் பாதுகாப்பு வராவிட்டா???

பெண்கள் துணையை நம்பி மட்டும் இருக்கக்கூடாது... துணைக்கும் பின் என்ன என்பதில்தான் இருக்கிறது..
---------------------------------------------
பழைய கவிதைக்கு புது பரிமாணம் கொடுத்தமாதிரி எழுதியிருக்கிறேனே தவிர வேறொன்றுமில்லை,, முதலில் யோசித்த கரு இறந்துபோன கணவன் வழி கவிதை கொண்டு செல்லலாமா என்றுதான்... பின் யோசனையைக் கைவிட்டேன்..
-----------------------------------------
நாளைய பொழுதில் நான் இறந்தாலும் கூட என் மனைவி தனியேவோ அல்லது மறுமணமோ செய்துகொள்ளும்படியான சிந்தனையை நான் இருந்த காலத்தில் வளர்த்திவிடுவேன். வெறும் வாய்ப்பேச்சு அல்ல.
----------------------------------

ஆதவா
10-04-2007, 01:13 PM
நன்றிங்க பூ! மற்றூம் காயத்திரி..

இதயத்தை கீறினாலும் ரணமில்லைதானே??? :)

ஓவியா
11-04-2007, 12:53 AM
அமரப்பட்ட இடத்தில்
பல நினைவுகள் அமர
கண்கள் குளித்தது;
தேகமும் கூட.

கண்ணீரில் குளியல்

என்னுள் இருந்து
பயிர் செய்தவன்,
தப்பிவிட்டான்.
இனியென் கண்களுக்கு
முத்தமில்லை;
வெறும் கனவுகள் வருமோ?

கனவன் மனைவி உறவு


என் கரங்களின் கணையாழிகள்
ஆவேசமாக பிடுங்கியெடுக்கப்படுகிறது
இதயக் குழாய்கள் பிடுங்குவதைப்போல..

வலயைல்கள்

ஊற்றிய தண்ணீரில்
என் கோலம்
அலங்கோலம்.
புள்ளி வைத்த பொடிகள்
கரைந்து போன கோலம்.

பொட்டு

கழுத்தோடு
அணைக்கப்பட்டிருந்த என்னுயிர்
கொலை செய்யப்பட்டது.
கவனித்துக் கொண்டிருந்த
மரண ஜீவன்
கண்ணீர் விட்டது.

தாலி

திருப்தியாக சென்றுவிட்டார்கள்
புண்ணிய வதிகள். விதவைகள்
திருப்தியற்று கிடக்கிறேன்
புண்பட்ட விதிகள். ஒரு விதவை

நாளைய காலை,
வாசலில் கூவிக் கொண்டிருக்கும்
பூக்காரியிடம் வாங்கி
சொறுகிக் கொண்டேன்
இருமுழ மல்லிகைப் பூக்கள்!



நல்ல அருமையான கரு. சமூக சிந்தனை.
கடைசி வரியில் பாரதியின் மைந்தனாக!!! சபாஷ் :sport-smiley-014: :sport-smiley-014:

விதவை பெண்ணின் துயரை சொல்லும் ஆதவருக்கு இருகரங்கூப்பி நன்றிகள்.

ஆதவா
11-04-2007, 12:55 AM
நன்றிங்க ஒவியா

ஓவியா
11-04-2007, 12:56 AM
நன்றிங்க ஒவியா

2 நிமிடத்திலே நன்றி சொல்லீட்டீங்க ஆபிசர்!!!!!!!!!!!

என்ன ஸ்பீடு, யப்பா :1:

ஆதவா
11-04-2007, 01:03 AM
எல்லாம் உங்கள் தயவுதான்.... :)

ஓவியா
11-04-2007, 01:09 AM
எல்லாம் உங்கள் தயவுதான்.... :)

ம்ம்ம் நல்ல மனம் வாழ்க.

மதி
11-04-2007, 02:46 AM
நல்லதொரு கவிதை ஆதவா..!
இன்றும் நிலவி வரும் அவலம் பற்றிய தங்களின் கருத்து. விதவைக் கோலம் என்பது வாழ்வின் முடிவல்ல, அது ஒரு அரைப்புள்ளி. மேலும் விதவை என்னும் கோலமே இங்கெதற்கு.
கட்டியவன் மாய்ந்துவிட்டால் கட்டியவள் மனம் மாய்ந்து போகுமோ?

அருமையாக விவரித்துள்ளீர் ஆதவன்..பாராட்டுக்கள்.!

ஆதவா
09-06-2007, 08:02 PM
நன்றிங்க மதி.. காலம் தாழ்ந்தாலும் நன்றி மறக்கவில்லை..