PDA

View Full Version : பெரு மூச்சு விடுகின்றேன்!!!!



மயூ
09-04-2007, 12:40 PM
பேச மனம் துடிக்கும்...
கடைக் கண் பார்வைக்கு
மனம் ஏங்கும்!

ஏளனச் சிரிப்பைக் கூட
எனக்காக உதிர்த்தாளோ என
எண்ணத் தோன்றும்!!

நண்பியுடன் பேசத் திரும்பினால்
என்னைப் பார்க்கத்
திரும்பியதாகத் தோன்றும்

கடந்து செல்கையில்
மல்லிகைப மலர்கள்
கடந்து சென்றதாகத் தோன்றும்

உன் நீல விழி பார்க்கையில்
நீல வானம் உனக்கு
மண்டியிட்டதாகத் தோன்றும்

அவள் சுட்டு விரல்
உயர்த்துவதைப் பார்க்கையில்
சுக்கிரன் கூட
பணிந்துவிட்டதாகத் தோன்றும்

என்னவளின் வேல் விழிகளில்
கோடி மின்னல் காண்பேன்
அந்த மின்னல் வந்து
இதயத்தைத் தாக்குவதையும்
வெண் மேகம் போல இரசிப்பேன்

அவள் நடந்து வரும் பாணியில்
அன்னத்தைக் காண்பேன்,

நீ யாருடனோ சிரித்து பேசும் போது
நானும் என்னுள்ளே சிரித்துக்கொள்வேன்

பேசும் போது புரியாது
ஆனால் சரி சரி என்று தலையாட்டுவேன்

ஒரு ஓரப் பார்வைக்காக
நாள் முழுதும் அலைவேன்
நாள் முடிந்த பி்ன்பும்
உன் நினைவில் கனவில் அலைவேன்

கண்ணாடி முன் நின்று
உன் கூடப் பல கதை பேசுவேன்

நீ நடந்த இடத்தில்
உன் காலடித் தடம் தேடுவேன்
முடியாவிட்டால் காற்றலையில்
முகர்ந்து திரிவேன்
அப்படியாவது உன் வாசனையை
நுகர முடியுமல்லவா?

ஒரு நாளாவது உன் அருகில்
இருக்க சந்தர்ப்பம் தேடுவேன்
சந்தர்ப்பம் வாய்த்ததும்
சங்கடத்துடன் விலகிச்செல்வேன்

நான் என்ன பைத்தியமா?
இல்லை என்னை புரியாத
நீ பைத்தியமா?
நான்தான் முட்டாள்
என்றும் உண்மை
என்று ஒன்று இருக்கின்றது

நான் ஒரு சூழ்நிலைக் கைதி
விதியின் கிறுக்கல் கையெழுத்து
பாலைவனத்தில் பறக்கும் ஒற்றைப் பறவை
நடுக்கடலின் மணல் திட்டு

அனைத்தும் நிசத்தில் நிழல்
என்பது உறைத்ததும்
கரும் புகையாய்
காற்று வெளியில் கலந்துவிடுவேன்

மறுமுறை உன்னைக் கண்டதும்
அனைத்தும் மறந்து
நினைவு இழந்து
மீண்டும் கனவு காண்பேன்
நான் அடிப்படையில்
சாதாரண இளைஞன்தானே?

கவிதை எழுதுவது எப்படி என்ன திரியின் விழைவாக நான் எழுதிய கவிதை. மன்றத்தின் கவிப் பேரரசுகளே இப்போ உங்கள் நேரம். நிறைகளைத் தவிர்த்து குறைகளை எடுத்தியம்பி இந்த பிதற்றலை ஒரு கவிதையாக்க முயலுங்கள்.

என்னை அன்புக் கட்டளை இட்டு கவிதை எழுத வைத்த இளசு அண்ணாவிற்கு நன்றிகள்.

அன்புடன்,
ஜெ.மயூரேசன்.

இளசு
09-04-2007, 12:45 PM
முதலில் கட்டிப்பிடித்து பாராட்டுகிறேன் மயூரேசா..

அடுத்த பாராட்டு ஆதவனுக்கு...


நீலவானம் மண்டியிட்ட
சுக்கிரன் அடிபணிய..
மின்னல் தாக்கும் வெண்மேகம்..


இல்பொருள் உவமைகளில் புதுவீச்சு...

மண்ணில் தடம்
காற்றில் வாசம்...

தேடல்களில் பல பரிமாணம்..


கனவிலும் தொடரும் பேச்சும்
நிதர்சன தன்னுணர்தல் அவள் தரிசனம் கண்டு கலைவதும்
யதார்த்தப் பதிவுகள்...


யார் சொன்னது இது முதல் கவிதை என?
முத்தான கவிதை..
பொருளடக்கம், சொற்கட்டில்
சத்தான கவிதை...

முத்தாடுகிறேன் தம்பியை..
கவிதைப்பூவை முத்தமிட்ட இத்தும்பியை..
தேனுண்ணல் தொடரட்டும் த(து)ம்பியே!!!

ஆதவா
09-04-2007, 12:52 PM
மயூரா!!!!!
அலுவலகத்தில் தற்போது இல்லையப்பா! பிறகு வருகிறேன் விமர்cஅனத்திர்கு

பென்ஸ்
09-04-2007, 01:04 PM
ஏல...
உனக்கு ஏன் இந்த வேலை...
நல்லாதானே இருந்தாய்???
கவிதை எழுதுவது...
அதிலும் காதல் கவிதை எழுதுவது...
அதையும் உணர்ச்சிபூர்வமாய் எழுதுவது
அதுயும் நான் படித்து என் கல்லூரி காலங்களை நினைக்க வைப்பது...
இதுதாண் உனக்கு வேலையா... ???
என் உணர்வுfகளுடன் உன் முதல் கவிதையாலே விளையாட வேண்டுமா???
என் எண்ண ஏக்கங்களை எழுப்பி விடவேண்டுமா???

மயூ....
உன்னை திட்டி திட்டி பழகி போனதாலே, எனக்கு பாராட்டும் இப்படிதான் வருது...

கவிதையின் தலைப்பே அருமைடா...
"பெருமூச்சு விடுகிறேன்", உணர்வுகள் மனதில் அடக்கி வைக்கபட்டு அது மேலேழும்பும் போது வரும் காற்றுதான் பெருமூச்சா??? இந்த மூச்சில் கலந்திருக்கும் இந்த கவிதைவரிகளில் உன் காதல் கலந்திருக்கு...

ஆதவா...
உன் பதிவுகளின் இனிய விளைவுகளை பார்... பாரட்டுகள்...

வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களை சுட்டிகாட்டியே, என் மனதை கொள்ளையடித்து விட்டாய்...

பாராட்டுகள்...

மயூ
09-04-2007, 01:09 PM
நன்றி இளசு அண்ணா!!!!
உங்கள் பாராட்டுக்கு நன்றி... அப்போ கவிதை சுமாராக வருவதால் தொடர்ந்து எழுதலாம் என்று துணிவு வந்துவிட்டது... ஹி... ஹி... நன்றி... அப்புறம் மறக்காமல் ஆதவனிற்கு நன்றி சொன்னதற்கும் நன்றி!!!!

மயூ
09-04-2007, 01:10 PM
மயூரா!!!!!
அலுவலகத்தில் தற்போது இல்லையப்பா! பிறகு வருகிறேன் விமர்cஅனத்திர்கு
சரி சரி பரவாயில்லை... ஆனாலும் விமர்சனம் கட்டாயம் போட வேணும் சரியா!!!:medium-smiley-029:

மயூ
09-04-2007, 01:11 PM
ஏல...
உனக்கு ஏன் இந்த வேலை...
நல்லாதானே இருந்தாய்???
கவிதை எழுதுவது...
அதிலும் காதல் கவிதை எழுதுவது...
அதையும் உணர்ச்சிபூர்வமாய் எழுதுவது
அதுயும் நான் படித்து என் கல்லூரி காலங்களை நினைக்க வைப்பது...
இதுதாண் உனக்கு வேலையா... ???
என் உணர்வுfகளுடன் உன் முதல் கவிதையாலே விளையாட வேண்டுமா???
என் எண்ண ஏக்கங்களை எழுப்பி விடவேண்டுமா???

ஹி.. ஹி.. எல்லாம் ஆதவரின் அலுவல்.


மயூ....
உன்னை திட்டி திட்டி பழகி போனதாலே, எனக்கு பாராட்டும் இப்படிதான் வருது...


அட அதுக்கென்ன.. இதவிட என்னென்ன திட்டெல்லாம் வாங்கியிருக்கிறன்...ஹி.. இது அன்புத் திட்டுத்தானே!!!



கவிதையின் தலைப்பே அருமைடா...
"பெருமூச்சு விடுகிறேன்", உணர்வுகள் மனதில் அடக்கி வைக்கபட்டு அது மேலேழும்பும் போது வரும் காற்றுதான் பெருமூச்சா??? இந்த மூச்சில் கலந்திருக்கும் இந்த கவிதைவரிகளில் உன் காதல் கலந்திருக்கு...

என் காதல் இல்லை ஒரு சராசரி இளைஞனின் உணர்வு என்று நினைக்கின்றேன்...:frown:


ஆதவா...
உன் பதிவுகளின் இனிய விளைவுகளை பார்... பாரட்டுகள்...

.
ஆமா ஆமா.. பாராட்டுங்கள்..


வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களை சுட்டிகாட்டியே, என் மனதை கொள்ளையடித்து விட்டாய்...

பாராட்டுகள்...
நன்றி பென்ஸூ அண்ணா..

உங்களதும் இளசு அண்ணாவினதும் பாராட்டு இன்னமும் தைரியம் தருகின்றது!!! மீண்டும் ஒரு கவிதையுடன் இங்கு வந்து குதிப்பேன்!!!:nature-smiley-006:

ஓவியன்
09-04-2007, 01:13 PM
ஏம்பா இப்படி பெரு மூச்சு விடுறீங்க - அதற்குப் பதில் செய்ய வேண்டியவற்றை கால காலத்தில் செய்து முடித்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காதே!:lachen001:


முதல் கவிமூச்சானாலும் உயிர் மூச்சாகிறது உங்கள் பெருமூச்சு.

மயூ
09-04-2007, 01:15 PM
ஏம்பா இப்படி பெரு மூச்சு விடுறீங்க - அதற்குப் பதில் செய்ய வேண்டியவற்றை கால காலத்தில் செய்து முடித்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காதே!



நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை!!!


முதல் கவிமூச்சானாலும் உயிர் மூச்சாகிறது உங்கள் பெருமூச்சு.
நன்றிப்பா ஓவிரே!

ஆதவா
09-04-2007, 01:16 PM
சரி சரி பரவாயில்லை... ஆனாலும் விமர்சனம் கட்டாயம் போட வேணும் சரியா!!!:medium-smiley-029:அட மயூறா!! நான் இல்லாமலா?

இளசு
09-04-2007, 01:19 PM
மயூரா

இரண்டு நிமிடம் உன் கவிதையை வாசிக்க
இரண்டு நிமிடம் என் கருத்தைத் தட்டச்ச
ஒரு நிமிடம் பதிக்க + செப்பனிட..

என துரிதமாய்ப் பதித்த கருத்து அது..

பென்ஸின் விமர்சனம் படித்த பிறகு
நிறுத்தி நிதானமாய் எழுதியிருக்கலாமோ என இப்போது ஏக்கம்!

என்னை எப்போதும் இப்படி ஏங்க வைக்கும்
இனிய பென்ஸ் வாழ்க!

ஓவியா
09-04-2007, 01:26 PM
ஏல...
உனக்கு ஏன் இந்த வேலை...
நல்லாதானே இருந்தாய்???
கவிதை எழுதுவது...
அதிலும் காதல் கவிதை எழுதுவது...
அதையும் உணர்ச்சிபூர்வமாய் எழுதுவது
அதுயும் நான் படித்து என் கல்லூரி காலங்களை நினைக்க வைப்பது...
இதுதாண் உனக்கு வேலையா... ???
என் உணர்வுfகளுடன் உன் முதல் கவிதையாலே விளையாட வேண்டுமா???
என் எண்ண ஏக்கங்களை எழுப்பி விடவேண்டுமா???

மயூ....
உன்னை திட்டி திட்டி பழகி போனதாலே, எனக்கு பாராட்டும் இப்படிதான் வருது...

கவிதையின் தலைப்பே அருமைடா...
"பெருமூச்சு விடுகிறேன்", உணர்வுகள் மனதில் அடக்கி வைக்கபட்டு அது மேலேழும்பும் போது வரும் காற்றுதான் பெருமூச்சா??? இந்த மூச்சில் கலந்திருக்கும் இந்த கவிதைவரிகளில் உன் காதல் கலந்திருக்கு...

ஆதவா...
உன் பதிவுகளின் இனிய விளைவுகளை பார்... பாரட்டுகள்...

வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களை சுட்டிகாட்டியே, என் மனதை கொள்ளையடித்து விட்டாய்...

பாராட்டுகள்...


பென்ஸ் தங்களின் விமர்சனத்திலே அனைவரது மனதயும் கொள்ளையடித்து விட்டீறே. :medium-smiley-029:

ஆதவா
09-04-2007, 01:28 PM
மன்றத்தில நம்ம இளசு அண்ண மற்றும் பென்ஸ் ஆகியோர் விமர்சனத்திற்கு ஈடு ஏது????

இளசு
09-04-2007, 01:31 PM
மன்றத்தில நம்ம இளசு அண்ணன் மற்றும் பென்ஸ் ஆகியோர் விமர்சனத்திற்கு ஈடு ஏது????

ஈடு இல்லை ஆனால் அதையும் தாண்டி பல உண்டு..
இல்லையா பென்ஸ்?

அதில் ஒன்று - ஆதவன் தருவது..

ஷீ-நிசி, ரசனைச் சொட்டும் ஓவியா இப்படி பலருண்டு..
கோடையிலும் வற்றாத இக்குளத்தில் ( வர்ணனை உதவி -ஓவியா)

பென்ஸ்
09-04-2007, 01:33 PM
மன்றத்தில நம்ம இளசு அண்ண மற்றும் பென்ஸ் ஆகியோர் விமர்சனத்திற்கு ஈடு ஏது????
வின்னர் வடிவேலு ஸ்டைலில் வாசிக்க:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஓவியா: பென்ஸ் விமர்சனம் சூப்பரப்பா... இளசுவும் பாராட்டிடாரு... அப்ப கவிதை சூப்பரு...
பென்ஸ்: இளசு இவங்க இன்னுமா நம்மளை நம்புறங்க
இளசு: அது அவங்க தலைவிதி ... விடுங்க

ஓவியா
09-04-2007, 01:35 PM
வின்னர் வடிவேலு ஸ்டைலில் வாசிக்க:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ஓவியா: பென்ஸ் விமர்சனம் சூப்பரப்பா... இளசுவும் பாராட்டிடாரு... அப்ப கவிதை சூப்பரு...
பென்ஸ்: இளசு இவங்க இன்னுமா நம்மளை நம்புறங்க
இளசு: அது அவங்க தலைவிதி ... விடுங்க


மயூ,
உன் கவிதைக்கு ஃசட்டிபிகெட் கொடுத்துடாக, வந்து பார்.......இதுதான் கவிதையின் நிஜ விமர்சனம்லே...
அழாதே துன்பம் வரும் பொழுது சிரிக்கனும் கண்ணு....எங்க சிரி சிரி :lachen001: :lachen001: :lachen001:

மயூ
09-04-2007, 01:47 PM
மயூ,
உன் கவிதைக்கு ஃசட்டிபிகெட் கொடுத்துடாக, வந்து பார்.......இதுதான் கவிதையின் நிஜ விமர்சனம்லே...
அழாதே துன்பம் வரும் பொழுது சிரிக்கனும் கண்ணு....எங்க சிரி சிரி :lachen001: :lachen001: :lachen001:
துன்பம் சேரும் போது யாழ் எடுத்து வாசிக்க வேண்டும்.. யாழ் இல்லாததால் கிட்டார் வாசிக்கின்றேன்.. கேளுங்கள் :musik010: :musik010: :musik010: :musik010:

மயூ
09-04-2007, 01:47 PM
பென்ஸ் தங்களின் விமர்சனத்திலே அனைவரது மனதயும் கொள்ளையடித்து விட்டீறே. :medium-smiley-029:
மேலே இட்டிருக்கும் பதிலைப் பார்க்கவும்.. ஹி.. ஹி... சும்மா நக்கலு :icon_good:

ஓவியா
09-04-2007, 01:56 PM
மேலே இட்டிருக்கும் பதிலைப் பார்க்கவும்.. ஹி.. ஹி... சும்மா நக்கலு :icon_good:

நான் நினைதேன் நீ சொல்லிவிட்டாய்.

என் விமர்சனம் அவசியமுண்டு ராசா. கவலையை விடு, கண்ணடி. :D

மயூ
09-04-2007, 02:17 PM
நான் நினைதேன் நீ சொல்லிவிட்டாய்.

என் விமர்சனம் அவசியமுண்டு ராசா. கவலையை விடு, கண்ணடி. :D
:sprachlos020: :sprachlos020: இது சரியா???:D :D

ஷீ-நிசி
09-04-2007, 03:34 PM
மயூ! மிக அருமையாக உள்ளது... முதல் முயற்சியிலேயே அட போட வைத்த கவிதைதான். இது.. தொடர்ந்து கற்பனைகளை சுவாசிக்க ஆரம்பித்தால் கவிதைகளில் மெருகு கூடும்.... வாழ்த்துக்கள்!

மயூ
10-04-2007, 03:25 AM
நன்றி ஷீ... தொடர்ந்தும் எழுதத் தூண்டியமைக்கு நன்றி!!!!

poo
10-04-2007, 05:33 AM
பாராட்டுக்கள் நண்பரே...

வார்த்தைகள் சரளமாக வந்து கொட்டியிருக்கிறது... உணர்ச்சிகள் வார்த்தைகளில் மறைந்து போகவில்லை..

வரிகளின் கட்டமைப்பில் கவலை கொள்ள வேண்டாம்.. நீங்கள் எழுத ஆரம்பித்ததும் தானே வெளி விழுந்த வரிகள் அவை.. யதார்த்தம் மாறாமல் இங்கே பதிந்தமைக்கு நன்றிகள்.

முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் ஆர்வம்...

பாராட்டுக்கள் ஆதவன்... நீங்கள் கவிதை எழுதுவதைக் காட்டிலும் தற்போது அதிகம் மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

gayathri.jagannathan
10-04-2007, 06:13 AM
மயூரேசனின் முயற்சியில் விளைந்த கன்னி கவிதை... வார்த்தைகள், இயல்பு மாறாமல் வந்து அமர்ந்திருக்கின்றன... ஒவ்வொர் இளைஞனும் அவனது வாழ்வில் நிச்சயம் கடந்து சென்றிருக்கும் அந்த நிமிடங்களின் பதிவு... அருமை... அருமை...

வாழ்த்துக்கள் மயூரேசன்....

மதி
10-04-2007, 08:04 AM
வாழ்த்துக்கள் மயூரா..!
உன் முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள்..ஆதவனுக்கும் உன்னை எழுதத் தூண்டியமைக்கு...
மனதின் எண்ணங்களே வார்த்தைகளாக இங்கு தெரித்து விழுந்திருக்கின்றன.
எல்லாம் சரி..
இவ்வளவு அனுபவித்து எழுதுமளவிற்கு...என்ன நடந்தது..??
யார் அந்த கள்ளி..?!

மனோஜ்
10-04-2007, 08:27 AM
வாழ்த்துக்கள் மயூரேசன் முதல்கவிதை போல இல்லையே அருமையாக உள்ளது பல முறை கவிதை எழுதிபழகியவர் போல
தொடருங்கள் உங்கள் கவிதை பயணத்ததை
வழி நடத்திய ஆதவா பாராட்டுக்கள்

மயூ
10-04-2007, 08:39 AM
பாராட்டிய மனோஜ், மதிஅண்ணா, காயத்திரி, பூ அனைவருக்கும் நன்றிகள்.....!!!

ஆதவா
10-04-2007, 05:29 PM
முன்பே பதிலளிக்காமைக்கு மன்னிக்க மயூரேசன்.

முதல் கவிதை என்று எங்காவது சொல்லிவிடப்போகிறீர்? அத்துணை அழகு போங்கள். உண்மையில் கவிதை எழுதுவது
எப்படி திரி படித்தீரா அல்லது கவிதை எழுதத் தெரியாதவர் போல நடித்தீரா? எனக்கு விளங்கவில்லை.

ஒரு மொட்டை விரிக்கச் செய்ய சூரியன் என்ன பாடு படவேண்டியதிருக்கிறது. ஆனால் ஏற்கனவே விரிக்கத்தெரிந்த
ஒரு பூவை விரிக்கச் சொல்லி விரித்திருக்கிறது ஒரு ஆதவன்.. நானல்ல.. இளசு அண்ணா.

கவிதைக்குண்டான விமர்சனம் இங்கே குவிந்திருக்கும்போது அடியேன் எழுத ஒன்றுமில்லாமல் போனது பென்ஸ் மற்றூம்
இளசு அண்ணாவின் எழுத்துக்களால்தான்.. அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.. இப்படி முன்னமே
எழுதிவிட்டீர்களென்றால் நான் எப்படி எழுதுவது?

இயற்கையை பின்னிப் பிணைந்து கவிதை கொடுக்கும் இங்குள்ள சிலரில் (நானல்ல) நீங்களும் இணைந்துவிட்டீர்... நல்ல
சிறுகதை எழுத்தாளனுக்கு நல்ல நல்ல கருக்கள் தோன்றுமே! உம்மைக் கண்டு நான் சிலாகிப்பதா? பெருமைப் படுவதா?
பொறாமைப் படுவதா? இல்லை என்னதான் செய்ய?, ஆனாலும் முதல் கவிதை என்பதை மட்டும் நான் ஒத்துக்கொள்ளவே
மாட்டேன்.. மன்றத்தின் தூணான பின் எடுத்த அதிரடி நடவடிக்கையோ?..

காதல்..........

ஒருமுறையேனும் காதலின்றி, காதல் புரியாமல்யாருமில்லை. கவிதை எழுதுபவர்கள் எல்லார் கண்களிலும் உடனே
எழுதவரும் வார்த்தையே காதல்தான். உம்மை திரும்பிப் பார்க்கவைத்த காதலுக்கு நீர் நன்றி சொல்லவில்லையா?. கடல்
அலைகள் எத்தனை மோதினாலும் சலிப்புறுவதில்லை. காதல் அலைகளும் தான். பெண்... புவி ஈர்ப்பைவிட பெண்
ஈர்ப்புதான் உலகிலே மிகப் பெரிதும்கூட.. அவ்வீர்ப்பு இன்றி கனவிலாவது வாழலாம். பெண்ணீர்ப்பு இன்றி ஏது>?.
அதற்கு ஒரு நன்றி இல்லையா உம்மிடமிருந்து?

ஒருத்தியை நேரில் கண்டதாகவே தோணும் வடிவமைப்பு! உவமைகளால் நேராக செல்லும் கவிப்பாதை. இன்னும்
எத்தனைதான் நான் சொல்ல? உம்மை கவிவிமர்சனம் என்ற போர்வையில் வெல்ல!


பேச மனம் துடிக்கும்...
கடைக் கண் பார்வைக்கு
மனம் ஏங்கும்!

மனம் ஒரு குழந்தை, அதற்கு பொறுமை கிடையாது காதலில்... காத்திருப்பு பொறுமையெல்லாம் காதலி உண்டென்றாலும்
அவளின் பார்வைக்கு ஆயிரம் அர்த்தம் காணும் இந்த பொல்லா மனம்.

ஏளனச் சிரிப்பைக் கூட
எனக்காக உதிர்த்தாளோ என
எண்ணத் தோன்றும்!!

உம்மைக் கண்டு சிரித்த அந்த வினாடிகள், அது ஏளனம்,. அவற்றை அப்படியே அள்ளி வந்து, அட மயூரேசா!
உனக்காகத் தாண்டா சிரித்தாள் என்று குட்டும். மனம் ஒரு மந்திரப் போர்வை. உம்மை ஆட்டுவிக்கும் மாயக்கோல்.

நண்பியுடன் பேசத் திரும்பினால்
என்னைப் பார்க்கத்
திரும்பியதாகத் தோன்றும்

அவளின் பார்வை திரும்பல், உம்மை ஏமாற்றும் மனம்.. அவள் கண்டது உம்மையல்ல என்று ஒரு வார்த்தைகூட
சொல்லாமல் மெளனம் காப்பதும் அதே மனம்தான்.. மனம் ஒரு ஏமாற்றுக்காரன்..

கடந்து செல்கையில்
மல்லிகைப மலர்கள்
கடந்து சென்றதாகத் தோன்றும்

பெண்களை பொதுவாக மலர்களுக்கு ஈடாகச் சொல்வார்கள்,. ஆண்களுக்கு அந்த பாக்கியமில்லை. உண்மையில்
மென்மை படைத்த பூக்களுக்கு சமான பெண்களை அப்படிச்சொல்வதில் தவறில்லை. மனம், நீர் நுகர்வதை இழக்கச்
செய்யும் வியாதி..

உன் நீல விழி பார்க்கையில்
நீல வானம் உனக்கு
மண்டியிட்டதாகத் தோன்றும்

விழிகள்.. காதலுக்கு வாசல், பின் வானம் மண்டியிடாதிருக்குமா? காதலுக்குண்டான சக்தியது. உம் மனம் செய்யும்
வேலையைப் பாரப்பா மயூரா!

அவள் சுட்டு விரல்
உயர்த்துவதைப் பார்க்கையில்
சுக்கிரன் கூட
பணிந்துவிட்டதாகத் தோன்றும்

விரல் நுனிகள் காதலை வளர்த்திவிடும் போர்வீரர்கள்.. காமத்தில் அடங்காமல் சண்டையிடும் தேர்வீரர்கள். ஏதாவது ஒரு
சமயத்தில் அவள் உயர்த்துவது உம் மனம் பாரய்யா என்னவாய் நினைக்கிறது!! பாவம் அந்த சுக்கிரர்... ஏதோ தேமே
என்று சுத்திக்கொண்டிருக்கிறார். அவரை வம்புக்கிழுக்காதேயும்.

என்னவளின் வேல் விழிகளில்
கோடி மின்னல் காண்பேன்
அந்த மின்னல் வந்து
இதயத்தைத் தாக்குவதையும்
வெண் மேகம் போல இரசிப்பேன்

இவ்வரிகள் உம்மை அழகிய கற்பனாவாதி என்றே சொல்லுகிறது... நீர் என்ன சொல்லுகிறீர்? அழகிய உவமை.. நான் ஷீ
போன்றவர்களெல்லாம் இப்படி நினைப்போமா? ம்ஹூம்.. விழிகளில் நரம்புகள் எல்லாம் கோடி மின்னல்களாம்... என்னே
கற்பனை.

அவள் நடந்து வரும் பாணியில்
அன்னத்தைக் காண்பேன்,

நீ யாருடனோ சிரித்து பேசும் போது
நானும் என்னுள்ளே சிரித்துக்கொள்வேன்

பேசும் போது புரியாது
ஆனால் சரி சரி என்று தலையாட்டுவேன்

உங்களை கிட்டத்தட்ட பைத்தியம் ஆக்கிவிட்டது என்று சொல்லுங்கள் மயூர். காதலின் முதல் நண்பன் மனம்,. மனம்
செய்யும் குரங்கு வேலைகள் எல்லாம் பைத்தியக்காரத்தன்மைக்கு எடுத்துக்காட்டு. மந்திரம் தொலைந்து போன
மாயக்கம்பளம்தான் இந்த மனம். அவள் நடந்துவரும்போது உம் கண்களை வேறுவிதமாக மாற்றூவதும். சிரிப்பதை
உமக்குள் எடுத்து ஊற்றுவதும் பேசும்போது தலையாட்டி தம்மைத் தாமே தேற்றுவதும் இதே மனம்தான்.

ஒரு ஓரப் பார்வைக்காக
நாள் முழுதும் அலைவேன்
நாள் முடிந்த பி்ன்பும்
உன் நினைவில் கனவில் அலைவேன்


ம்ம்.. நல்ல சிந்தனைதான். ஏதோ பெண்ணோட தாக்கம் நிறைய கவிதையில் இருக்கு. எங்கயோ பின்னாடி போய் கனவு
கண்டிருக்கீர்,. நம்ம கிட்ட கவிதைங்கற பேர்ல கொட்டித் தீர்க்கிறீர்.. நடக்கட்டும்.

கண்ணாடி முன் நின்று
உன் கூடப் பல கதை பேசுவேன்

நீ நடந்த இடத்தில்
உன் காலடித் தடம் தேடுவேன்
முடியாவிட்டால் காற்றலையில்
முகர்ந்து திரிவேன்
அப்படியாவது உன் வாசனையை
நுகர முடியுமல்லவா?

காலடித் தடம் தேடுவது... காதலியைத் தேடுவது... காதலைத் தேடுவது.. முடிவில் கிடப்பது என்னவோ இச்சமயங்களில்
பூஜ்யம்தான். எங்கும் கிடைக்கமாட்டாத பொருள் தான் இந்த காதல். கிடைத்தால் அது பெண்ணின் உள்ளத்தில்
மட்டுமே... டிமாண்ட் அதிகம். காற்றின் நறுமணத்தில் கலந்தவள் இதுவரை கண்களில் மட்டுமே திறந்து உள் நுழைந்தவள்
இன்று காற்றாக நாசியில் நுழையட்டுமே... நுகரு நுகரு... நுகர்ந்தபின் பகரு பகரு..


ஒரு நாளாவது உன் அருகில்
இருக்க சந்தர்ப்பம் தேடுவேன்
சந்தர்ப்பம் வாய்த்ததும்
சங்கடத்துடன் விலகிச்செல்வேன்

சந்தர்பம் கிடைப்பது சந்தோசம், விலகிச்செல்லும்போது மூச்சுக்காற்றை வெறுக்கும் குழந்தைபோல வருத்தம். ஒரு நாள்
என்பதைவிட ஒரு நொடி என்றே சொல்லலாம். நொடிப்பொழுதில் அவள் நறுமணமோ அல்லது சொற்களோ அல்லது
பார்வைக் கணைகளோ நம் எதிரே தங்கிவிடாதா என்று ஏங்குவோமல்லவா?

நான் என்ன பைத்தியமா?
இல்லை என்னை புரியாத
நீ பைத்தியமா?
நான்தான் முட்டாள்
என்றும் உண்மை
என்று ஒன்று இருக்கின்றது

அதான் முன்னமே சொல்லீட்டம்ல. பைத்தியம்னு..

நான் ஒரு சூழ்நிலைக் கைதி
விதியின் கிறுக்கல் கையெழுத்து
பாலைவனத்தில் பறக்கும் ஒற்றைப் பறவை
நடுக்கடலின் மணல் திட்டு

இது இது.... இதத்தான் நான் எதிர்பார்த்தேன்..
பாலைவனப்பறவை, மணல்திட்டு... என்னே அருமையான உவமைகள். சொற்கள்.!!!.. மயூரா!! நீ மிஞ்சீட்டப்பா!!!

அனைத்தும் நிசத்தில் நிழல்
என்பது உறைத்ததும்
கரும் புகையாய்
காற்று வெளியில் கலந்துவிடுவேன்

நிழலுக்கு சரிதம் உண்டு.. நிஜத்தின் நிழலாகவாவது நீர் இருக்க வேண்டும். ஏனய்யா காற்றில் கலக்கப் போகிறீர்.. அவள்
நிஜம். யதார்த்தம்,. காதலின் உன்னதம். அவளோடு பகலெல்லாம் அலை, இரவெல்லாம் மனதோடு தொலை..

மறுமுறை உன்னைக் கண்டதும்
அனைத்தும் மறந்து
நினைவு இழந்து
மீண்டும் கனவு காண்பேன்
நான் அடிப்படையில்
சாதாரண இளைஞன்தானே?

யார் சொன்னது??? முன்னமே சொன்னமாதிரி நீர் பைத்தியமேதான்.. உமக்குத் தெரிவதெல்லாம் அன்னத்தின் நடை,
மல்லிகைப் பூ! நீல வானம், மின்னல், மேகம். இப்படி பல. பிறகெப்படி சாதாரண மனிதன்..?? இப்படி கனவு கண்டு
கொண்டே இருமய்யா!~

சரி போகட்டும்.. விமர்சனம் முடிந்துவிட்டது. இன்னுமொரு நாலுவரி கேட்கிறேன்.

யார் உமக்கு கவிதை எழுதத் தூண்டியது? ஆதவன், இளசு என்று சொல்லிவிடாதேயும்.

மனிதர்கள் மனதுக்குள் எத்தனை ஒளித்துவைத்திருக்கிறார்கள்.. மனமானது ஒரு கிணறு.. தோண்டத் தோண்ட நீர் வரும்..
வற்றாத சுனை. இனிமையான நீர்ச்சுவை கொண்ட அன்னையின் பால். இன்னும் எத்தனை எத்தனை!!!!

மேலும் எழுத வேண்டுகிறேன். நல்ல கவிஞனாக வரும் திறம் உமக்கு நிறையவே உண்டு...

வாழ்த்துக்கள்

ஓவியா
10-04-2007, 05:49 PM
உன் நீல விழி பார்க்கையில்
நீல வானம் உனக்கு
மண்டியிட்டதாகத் தோன்றும்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அழகான வர்ணணை

நான் என்ன பைத்தியமா?
இல்லை என்னை புரியாத
நீ பைத்தியமா?
நான்தான் முட்டாள்
என்றும் உண்மை
என்று ஒன்று இருக்கின்றது

நச்சுச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்'னு ஒரு உண்மையா


நான் ஒரு சூழ்நிலைக் கைதி
விதியின் கிறுக்கல் கையெழுத்து
பாலைவனத்தில் பறக்கும் ஒற்றைப் பறவை
நடுக்கடலின் மணல் திட்டு

வரிகள் மிக அருமை


மயூ,,
கவிதை தூள், ஜமாய்ச்சுட்டே. பலே :icon_08:

ஓவியா
10-04-2007, 06:00 PM
அடடே மிகவும் சிறப்பான விமர்சனம்..........பலே ஆதவா

வஞ்சமில்லாமல் பாராட்டும் ஆதவாவிற்க்கு தோளை தட்டி 'பாராட்டுக்கள்'.

இளசு
10-04-2007, 08:43 PM
ஆதவனின் விமர்சனம் படித்து மெய்மறந்து

எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டுகிறேன்..
ஆதவன், மயூரேசன் இருவரையும்!

மயூ
16-04-2007, 02:14 PM
ஆதவா உம் விமர்சனத்திற்கு கோடான கோடி நன்றிகள்.. என் எழுத்துக்களுக்கு நான் நினைக்காத அர்த்தம் எல்லாம் கற்பித்து அதை மென்மேலும் அழகாகக் காட்டியமைக்கு நன்றி.!!!
மொத்தத்தில் என் வரிகளின் அர்த்தத்தை அப்படியே வெளியே பிழிந்து எடுத்தமைக்கு நன்றிகள் ஆதவா!!!!!

எல்லார் கவிதை உணராவிட்டால் எழுத முடியாது என்று நினைக்கின்றேன்... முன்பு சொல்லியது போல என்னை எழுத வைத்தது ஆதவாவும், இளசு அண்ணாவும்தான் ஆயினும் அவற்றிற்கப்பால்... ஹி.. ஹி.. என்ன அதெல்லாம் சொல்லியா புரியோணும்!!!!

அப்புறம் ஓவியா அக்கா நன்றிகள்.. சின்னதாய் நச்சுன்னு விமர்சனம் போட்டிருக்கிறியள்.. நன்றி நன்றி... என்வரிகளுக்கு தந்த பாராட்டுக்கு நன்றி..!!!

மயூ
16-04-2007, 02:15 PM
ஆதவனின் விமர்சனம் படித்து மெய்மறந்து

எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டுகிறேன்..
ஆதவன், மயூரேசன் இருவரையும்!
ஆமாம் ஆதவனின் விமர்சனத்திற்காக நான் கூட அவரை ஒரு தடவை கட்டி அணைத்து நன்றி தெரிவிக்கின்றேன்...!!!!

ஆதவா இன்றைக்குத்தான் பல சிங்களப் பெட்டைகளை கம்பசில ஹக் பண்ணிட்டு வந்தனான்!!!! அந்த மணம் இன்னமும் என் சொக்கில் இருக்குது...!!! விரைவாக வந்து நீயும் ஒரு தடவை கட்டி அணைத்துக்கோ!!!!:music-smiley-010: :icon_shok: :icon_shok: :icon_clap:

pradeepkt
17-04-2007, 04:14 AM
அடடே... மயூரேசா...
எப்படி இது என் கண்ணில் படாமல் போனதென்று தெரியவில்லையே... மன்னிக்க!!!

நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் நண்பர்கள் சொல்லி விட்டனர். குறிப்பாக ஆதவனும் பென்ஸூம் அக்கு வேறு ஆணி வேறாக அலசி விட்டனர். ஹூம்... எனக்குக் கொடுத்து வைக்கவில்லை!!!
ஆமா, இது என்ன??? :music-smiley-010: :icon_shok: :icon_shok: :icon_clap:
உன் மேற்படி பதிலைப் படித்தால் நீ கவிதையைப் பெட்டைகளைப் பார்த்த பிறகு எழுதினாயா, அல்லது உன் கவிதையைப் படித்து அவர்கள் வந்தார்களா என்று குழப்பமாக இருக்கிறதே...

மயூ
17-04-2007, 01:00 PM
கடைசியாக உங்கள் கண்ணில் பட்டதே!!! கோடி நன்றீகள்!!
அப்புறம் எதுக்கு இந்தத் தேவையில்லாத ஆராய்ச்சிகள்!!!.. ஹி.. ஹி.. அதுதான் அந்த கண்ட பின்னா இல்லை காண முன்னா ஆராய்ச்சி!!!