PDA

View Full Version : தமிழ் சொல் அறிவோம்

leomohan
09-04-2007, 12:10 PM
தமிழில் பிற மொழி வார்த்தைகள் கலந்துள்ளன. இதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் பல முறை அது பிறமொழி வார்த்தை என்று அறியாமலே பயன்படுத்துகிறோம். உதாரணம் - வார்த்தை. ஏன் உதாரணமே கூட.

இந்த திரியில் நாம் அறிந்ததை பகிர்ந்துக் கொள்வோம்.

சொல்-----------மொழி மூலம்--------------தமிழ் சொல்
பிரயோகம்-------பிரயோக்------------------பயன்
உபயோகம்-------உபயோகம்----------------பயன்
வார்த்தை---------வார்த்தா------------------சொல்
உதாரணம்--------உதாஹரண்----------------எடுத்துக்காட்டு

மேலும் நண்பர்கள் தொடரலாமே.

இளசு
09-04-2007, 12:14 PM
அருமையான முயற்சி மோகன்..

மொழிமூலம் சரியாகத் தெரியாவிட்டாலும்
அலமாரி, பங்களா, ஓட்டு (வாக்கு) என
பல சொற்கள் தமிழ்மூலம் அல்ல...

ஆனாலும் எல்லாவற்றையும் உள்வாங்கி இன்னும்
பொங்கும் நதியாய் ஓடும் தமிழை எப்படிப் புகழ?

இதுபற்றி வைரமுத்து அண்மையில் சொன்னது:

பாமரப் பெண்ணின் பாடல் -

சாரட்டு வண்டியில
சீரட்டு புடிக்குறவரே
சீரட்டு நெருப்பினல
தெரியுதய்யா உந்தன் மொகம்!

ச்சேரியட், சிகரெட் ஆகிய சொற்களை
சட்டென தமிழாக்கிய அவளை மெச்சுகிறார் வைரமுத்து..

ஓவியன்
09-04-2007, 12:26 PM
அலுமாரி, அலவாங்கு என்பன ஒல்லாந்தரிடமிருந்து வந்த சொற்கள் என்று நினைக்கின்றேன் அண்ணா!

என் பங்கிற்கு சில நடைமுறச் சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள்!
பாண் (பிரட்) - வெதும்பி
பேக்கரி - வெதுப்பகம்
ஐஸ் கிரீம் - குளிர் களி
கேக் - குதப்பி

இன்னும் தொடர்வேன்

ஓவியன்
09-04-2007, 12:28 PM
ஈழத்தில் என் பகுதியில் கேக்கிற்கு குதப்பி என்ற சொல்லை அறிமுகப் படுத்திப் பயன் படுத்தியும் வருகிறார்கள். கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அது ஒரு தூய தமிழ்ச் சொல்.

இளசு
09-04-2007, 12:28 PM
நன்றி ஓவியன்..

நம் மொழி அழகு.. முடிந்தவரை அதன் அழகை முழுதும் வெளிக்காட்டும்படி நம் பேச்சும் எழுத்தும் இருக்கும்படி முயல்வோம்..

தேவையெனில் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி
நம் அன்னையை இன்னும் அழகுசெய்வோம்...

ஓவியன்
09-04-2007, 12:34 PM
நன்றி அண்ணா!

ஒரு தடவை நான் ஈழத்திலே எனது வீட்டிற்கு(வட பகுதியிலுள்ளது) தென் பகுதியிலிருந்து நீண்ட நாட்களின் பின் சென்றேன். ஒரு பேரூந்தில் ஏறி ரிக்கற் வாங்கினேன் அந்த ரிக்கற்றில் ரிக்கற் என்பதற்குப் பதில் எழுதி இருந்த தமிழ் சொல் என்ன தெரியுமா?, மிக..நீளமானது.

வழிச் செல்லுனர் வழிச்செலவுத் துண்டுச் சீட்டு.

இளசு
09-04-2007, 12:34 PM
ஈழத்தில் என் பகுதியில் கேக்கிற்கு குதப்பி என்ற சொல்லை அறிமுகப் படுத்திப் பயன் படுத்தியும் வருகிறார்கள். கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அது ஒரு தூய தமிழ்ச் சொல்.

ஆமாம் ஓவியன்

முதலில் அறிமுகப்படுத்தும்போது மக்கள் சுணங்கவே செய்கிறார்கள்..

டிரான்ஸ்போர்ட் இலாக்காவை போக்குவரத்துத் துறையாக்கியபோது
சில பெரிசுகள் - என்னய்யா..போக்கு..வரத்து..- எனக் கிண்டல் அடித்தார்களாம்...

இன்று அது வழக்கத்தில் உள்ள சொற்றொடர்!

ஃபைல் -கோப்பாகியது..
சிட்டி போலீஸ் - மாநகரக் காவல் ஆகியது..

சொல்லிப்பழகினால், காப்பியும் குழம்பி ஆகும்..
டீ தேநீர் ஆனாற்போல்!

இளசு
09-04-2007, 12:37 PM
நன்றி அண்ணா!

ஒரு தடவை நான் ஈழத்திலே எனது வீட்டிற்கு(வட பகுதியிலுள்ளது) தென் பகுதியிலிருந்து நீண்ட நாட்களின் பின் சென்றேன். ஒரு பேரூந்தில் ஏறி ரிக்கற் வாங்கினேன் அந்த ரிக்கற்றில் ரிக்கற் என்பதற்குப் பதில் எழுதி இருந்த தமிழ் சொல் என்ன தெரியுமா?, மிக..நீளமானது.

வழிச் செல்லுனர் வழிச்செலவுத் துண்டுச் சீட்டு.

பயனாளரை வசீகரிக்க சொற்சிக்கனம் அவசியம்..

தமிழகத்தில் - பயணச்சீட்டு புழக்கத்தில் உள்ளது..

மாநகரப் பேருந்தில் தூய தமிழில் சீட்டு வாங்க அழைக்கும்
ஒரு நடத்துனர் முன்பு சென்னையில் பேசப்பட்ட நபர்!

ஓவியா
09-04-2007, 12:41 PM
அருமையான பதிவு,

நன்றி மோகன்
நன்றி இளசு

அனைவரும் தொடருங்கள்.

நான் கற்றுக் கொள்கிறேன்.

ஓவியன்
09-04-2007, 12:42 PM
உண்மை தான் அண்ணா!

மரணம் என்பது தூய தமிழ் சொல்லில்லையாம் சாவு என்பதே தூய தமிழாம்.

மரண அறிவித்தல் என்பதற்குப் பதில் சாவு அறிவித்தல் என்கிறார்கள்.

leomohan
09-04-2007, 12:55 PM
லாபம் - லாப் - வரவு
நஷ்டம் - நஷ்ட் - செலவு
அம்மா - மா - தாய்
அப்பா - பாப்பா - தந்தை
ஜாமீன் - ஜாமீன் - பிணைத் தொகை
டவாலி - டவாலி - பணியாளர்
வக்கீல் - வக்காலத்து-வக்கீல் - வழக்கறிஞர்
ஜனாதிபதி - ஜன்-அதிபதி - குடியரசு தலைவர்

தொடரும்...

இளசு
09-04-2007, 01:01 PM
உண்மை தான் அண்ணா!

மரணம் என்பது தூய தமிழ் சொல்லில்லையாம் சாவு என்பதே தூய தமிழாம்.

மரண அறிவித்தல் என்பதற்குப் பதில் சாவு அறிவித்தல் என்கிறார்கள்.

ஆமாம் ஓவியன்..

இதுபற்றி நான் முன்பு படித்தது -

தமிழில் இறத்தல், சாவு, மடிதல் போன்றவை வளைவு என்ற அடிக் கருத்தில் எழுந்தவை. (இன்னும் சில சொற்கள்
துண்டாகிப் போன கருத்தில் எழுந்தவை.) ஒருவன் உயிராற்றலை இழந்து சாய்ந்து போனால் அதைச் சாய்வு>சாவு
என்கிறோம்.
சாவு>சவத்தல்>சவம்; சாதல்>சவத்தல்>செத்தல் என்றெல்லாம் அது திரியும். மடிதல் என்பதும்
நிற்க முடியாமல் மடங்கிப் போதல் என்றே பொருட்பாடு கொள்ளும். மடிதல்>மரித்தல் (டகரமும் ரகரமும்
போலி)>மரணம், இறத்தல் என்பதும் சரிதல் என்ற பொருளே கொள்ளும். இறக்கம் = சரிவு. சாய்வும் சரிவும்
ஒன்றுதானே!

மடிதல்/மரித்தல் என்ற சொல்தான் இந்தையிரோப்பியச் சொல்லடியான mort என்பதோடு தொடர்பு
கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியானால், மரிப்பு = mortality' மரித்துறை =
mortuary (சவ அறை) என்ற சொற்கள் சரியாக இருக்கும்.

ஓவியன்
09-04-2007, 01:08 PM
தகவல்களுக்கு நன்றிகள் அண்ணா!

பென்ஸ்
09-04-2007, 01:14 PM
நல்ல தொடர்...
தமிழ் மொழி அறியமுயலுவது.... நலம்.
ஆனால், என் கருத்து என்னவெனில், மொழியானது தான் சொல்லவருவதை
அடுத்தவரிடம் எந்தத் தடங்கலும் இல்லாமல் விளக்குவதே
.
நம்மவரிடமே ஐஸ்கிரீம் என்று சொல்லாமல் குளிர்களி என்றால் விளங்குமா????
தெரிந்துகொள்வதில் தவறில்லை, பிரயோகிப்பதில் கவனம் இருக்கவேண்டும்....
தொடருங்கள், நானும் தெரிந்துகொள்கிறேன்...

இளசு
09-04-2007, 01:27 PM
சொல்-----------மொழி மூலம்--------------தமிழ் சொல்
பிரயோகம்-------பிரயோக்------------------பயன்
.

தெரிந்துகொள்வதில் தவறில்லை, பிரயோகிப்பதில் கவனம் இருக்கவேண்டும்....
தொடருங்கள், நானும் தெரிந்துகொள்கிறேன்...

உண்மை பென்ஸ்..

ஆனால் மோகனின் நோக்கம்
பிரயோகிப்பதை பயன்படுத்தும்போது
முந்தையது எங்கிருந்து வந்தது என உணரவைப்பதே!

பென்ஸ்
09-04-2007, 01:38 PM
உண்மை பென்ஸ்..

ஆனால் மோகனின் நோக்கம்
பிரயோகிப்பதை பயன்படுத்தும்போது
முந்தையது எங்கிருந்து வந்தது என உணரவைப்பதே!
நச் இளசு..

விகடன்
09-04-2007, 01:48 PM
கொமட் - குந்து சட்டி

வோசிங் மெஷின் - கழுவு சட்டி

ஓவியன்
09-04-2007, 01:59 PM
.
நம்மவரிடமே ஐஸ்கிரீம் என்று சொல்லாமல் குளிர்களி என்றால் விளங்குமா????
தெரிந்துகொள்வதில் தவறில்லை, பிரயோகிப்பதில் கவனம் இருக்கவேண்டும்....
தொடருங்கள், நானும் தெரிந்துகொள்கிறேன்...

உண்மைதான் ஆனால் இவை எங்கள் பகுதியில் பயன்படுத்தப் படுகின்றன.

எங்கள் இடத்தில் குளிரகத்திற்கு (கூல் பார்) போனால் இதே பெயர்களைத் தான் பாவிப்பார்கள்.

அங்கே குளிர்களியிலும் பலவகைகள் கறவம், மீனம் அப்படி பல வகைகள் உண்டு.

ஷீ-நிசி
09-04-2007, 04:54 PM
மோகன் சார்... நல்ல முயற்சி.. ஆனால் இதுபோன்ற திரிகள் சில நாட்களுக்குப் பின்னர் தொடராமலே போகிடுமோ என அஞ்சுகிறேன்..

விகடன்
09-04-2007, 04:57 PM
மோகன் சார்... நல்ல முயற்சி.. ஆனால் இதுபோன்ற திரிகள் சில நாட்களுக்குப் பின்னர் தொடராமலே போகிடுமோ என அஞ்சுகிறேன்..

அந்தக்கவலை ஏன் ஷீ-நாசி அவர்களே?:icon_nono:

இந்த மன்றத்தில் ஓவியா சொன்ன அந்த 5 மக்கள் இருக்கும் வரை ஒரு திரியும் முற்றுப்புள்ளி என்றால் என்ன என்றே அறியாது,

மனோஜ்
09-04-2007, 05:30 PM
நல்ல முயற்சி மோகன் அவர்களே
பஸ் என்ற வார்த்தையை இன்னும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பேருந்து என்று சொல்பவர்கள் எவர் ?
நடப்பு மொழியாக இந்த வார்த்தைகள் வருவதற்கு என்ன செய்வது?

leomohan
09-04-2007, 05:42 PM
மோகன் சார்... நல்ல முயற்சி.. ஆனால் இதுபோன்ற திரிகள் சில நாட்களுக்குப் பின்னர் தொடராமலே போகிடுமோ என அஞ்சுகிறேன்..

திரி முடிந்துவிட்டது என்றால் சரக்கு முடிந்துவிட்டது. அப்படியென்றால் அனைத்து சொற்களை கற்றுவிட்டோம் என்று பொருள். இது நல்ல விஷயம் தானே.

அன்புரசிகன்
09-04-2007, 05:43 PM
சலூன் என தமிழிலே போடப்படுவதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். தூய தமிழெனின் சிகை அலங்கரிப்பு நிலையம்.

இன்னுமொரு சுவையான சம்பவம். எனது ககோதரர் அண்டை நாடு ஒன்றுக்கு (அட அது இந்தியா தான். குறிப்பிடத்தக்க விடையம் யாதெனில் தமிழ்நாட்டுக்கு) கடை ஒன்றுக்கு சென்று சவுக்காரம் இருக்கா என்று கேட்டிருக்கிறார். கடைக்காரருக்கு விளங்கவில்லை. பின் அதை சுட்டிக்காட்டவே சோப்பென்று தமிழில சொல்லுங்கபபா என்றாராம். இதல் வேடிக்கை என்னவென்றால் இரண்டுமே தூய தமிழ் இல்லை. சலவைக்கட்டி என்பதே சரியானது.

மனவருத்தத்திற்குரியது என்னவென்றால் சில ஆங்கிலச்சொற்கள் எம்மை அறியாமலே எமது சாதாரணபேச்சு வழக்கில் ஊறிவிட்டது.

leomohan
10-04-2007, 04:24 PM
சொல்-----------மொழி மூலம்--------------தமிழ் சொல்
பிரச்சனை---------ப்ரஷ்ன----------------கேள்வி தொல்லை
ஜகா slang --------ஜஹா-----------------இடம்
சுலபம்----------சுலப்------------------எளிய
கடினம்----------கடின்-----------------?????
படா slang---------படா----------------பெரிய
உஷார்-----------ஹோஷியார்----------திறமை திறமைசாலி
சக்தி-------------ஷக்தி----------------வலிமை
பலம்-------------பல்-----------------வலிமை
சாதி---------------ஜாதி----------------இனம்

ஓவியா
10-04-2007, 04:34 PM
சொல்-----------மொழி மூலம்--------------தமிழ் சொல்
குசினி ................Cuisine (ஆங்கிலதில்)............சமயலறை

மோகன்,
இது சரியா???

leomohan
11-04-2007, 06:27 AM
குசினி என்று நான் கேள்விப்பட்டதில்லை ஓவியா. மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

உஷார் -------ஹோஷியார்---------எச்சரிக்கை
ஜாக்கிரதை-ஜாக்தே ரஹோ----------எச்சரிக்கை விழிப்புடன்
ரங்கோலி--------ரங்கோலி----------கோலம்
சீரியல்----------Serial------------தொடர்
ஜரூரா----------ஜரூர் ஜரூரி----------கட்டாயம் விரைந்து
அவசியம்--------அவஷ்ய----------கட்டாயம்

இளசு
11-04-2007, 07:39 PM
தொடரும் பணிக்குப் பாராட்டுகள் மோகன்..

குசினி பிரஞ்சு மூலம்.. ஓவியாவின் பதிவு சரியே..

ஓப்பித்தால் - ஹாஸ்பிட்டல் - ஆஸ்பத்திரி - மருத்துவமனை
பிரஞ்சு வழங்கிய இன்னொரு சொல்!

ஓவியன்
11-04-2007, 07:51 PM
ஓப்பித்தால் - ஹாஸ்பிட்டல் - ஆஸ்பத்திரி - மருத்துவமனை
பிரஞ்சு வழங்கிய இன்னொரு சொல்!

வைத்தியர், வைத்தியசாலை என்பதை விட மருத்துவர், மருத்துமனை என்பது தூய தமிழ் சொற்களென்று நினைக்கின்றேன் இல்லையா அண்ணா?

பென்ஸ்
11-04-2007, 07:52 PM
சொல்-----------மொழி மூலம்--------------தமிழ் சொல்
கடினம்----------கடின்-----------------சிரமம்

இது சரியா மோகன்..

இளசு
11-04-2007, 07:53 PM
வைத்தியர், வைத்தியசாலை என்பதை விட மருத்துவர், மருத்துமனை என்பது தூய தமிழ் சொற்களென்று நினைக்கின்றேன் இல்லையா அண்ணா?

சரிதான் ஓவியன்..

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
தாளாத அன்பை - நம் வள்ளுவர் பாடியிருக்கிறார்!

leomohan
12-04-2007, 06:27 AM
இது சரியா மோகன்..

சிரமம் என்பதும் ஸ்ரம் எனும் வேற்று மொழி வார்த்தையிலிருந்து வந்தது.

leomohan
12-04-2007, 06:31 AM
தமாசு ------------தமாஷா--------------வேடிக்கை நகைச்சுவை
ஜாலி------------ஜாலி------------------மகிழ்ச்சியாக
கிண்டல்-----------தமிழே தானா பொருட்களை வானலியில் வைத்து கிண்டுவதை குறிக்கிறது -அது மனிதர்களின் உணர்வுகளை கிண்டுவதால் கிண்டல் என்றாகிறது.
கணிதம்-----------கணித்------------------????????
பூகோளம்----------பூகோள்----------------பூவியியல்
சரித்தரம்----------சரித்ர----------------வரலாறு

ஓவியன்
12-04-2007, 10:26 AM
சரிதான் ஓவியன்..
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
தாளாத அன்பை - நம் வள்ளுவர் பாடியிருக்கிறார்!
விளக்கத்திற்கு நன்றிகள் அண்ணா!

ஓவியன்
12-04-2007, 10:29 AM
மோகன் உங்களுடைய இந்த முயற்சி முகவும் அருமையாக செல்கின்றது, வேற்று மொழி மூலத்தைக் கண்டறியும் உங்கள் முயற்சிக்கும் வேற்று மொழிகளில் உங்களுக்கு இருக்கும் ஞானத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.

ஓவியா
12-04-2007, 02:25 PM
தொடரும் பணிக்குப் பாராட்டுகள் மோகன்..

குசினி பிரஞ்சு மூலம்.. ஓவியாவின் பதிவு சரியே..

ஓப்பித்தால் - ஹாஸ்பிட்டல் - ஆஸ்பத்திரி - மருத்துவமனை
பிரஞ்சு வழங்கிய இன்னொரு சொல்!

நன்றி இளசு சார்

leomohan
12-04-2007, 04:13 PM
விஞ்ஞானம்---------வைஞான்----------அறிவியல்
ஜோர்---------------ஜோர்-----------நன்று வேகமாக பலத்துடன்
அற்புதம்-----------அத்புத்------------?????????????
பயங்கரமான---------பயங்கர்------------????????
பயம்----------------பைய்------------அச்சம்
சிருங்காரம்----------ஷ்ருங்கார்----------அழகு அழகுபடுத்துதல்
நாட்டியம்------------நாட்ய-------------நடனம்
பிரம்மாண்டம்---------பிரம்மாண்ட்---------பெரிய

இளசு
13-04-2007, 06:39 AM
தொடருங்கள் மோகன்..

நர் - நரன் ( மனிதன்)
சிம்ஹ சிம்மம் ( சிங்கம்)
ராஜ்ய - ராஜ்ஜியம் ( தேசம், நாடு)
சிஷ்யா - சிஷ்யன் ( சீடன், மாணாக்கன், மாணவன்)
குரு - (ஆசிரியர்)

இப்படி மணிப்பிரவாளமாய் ஏராளச் சொற்கள் இருக்கு இல்லையா?

leomohan
13-04-2007, 08:34 AM

மணிபிரவாளம் என்றால் என்ன எப்போதிலிருந்து சமஸ்கிருத சொற்கள் தமிழில் கலக்க தொடங்கின. சமஸ்கிருத சொற்கள் பாதிப்பு இல்லாமல் இருக்கும் தமிழ் இலக்கியங்கள் யாவை.

சற்று சொல்லுங்கள் இளசு. நண்பர்களும் பங்கு பெறலாமே.

மன்மதன்
13-04-2007, 09:57 AM
மொழி மூலம் என்பதில் () போட்டு எந்த மொழி என்றும் தெரிவிக்கலாமே..

உ.தா
சொல்-----------மொழி மூலம்--------------தமிழ் சொல்
உபயோகம்-------உபயோகம்(இந்தி)----------------பயன்

leomohan
13-04-2007, 10:20 AM
மொழி மூலம் என்பதில் () போட்டு எந்த மொழி என்றும் தெரிவிக்கலாமே..

உ.தா
சொல்-----------மொழி மூலம்--------------தமிழ் சொல்
உபயோகம்-------உபயோகம்(இந்தி)----------------பயன்

நல்ல யோசனை. அவ்வாறே மன்மதேன். நன்றி.

mukilan
13-04-2007, 05:31 PM
அருமையான முயற்சி மோகன்.பல சொற்களின் சரியான தமிழாக்கத்தை பயன்படுத்த ("பிரயோகிக்க") கற்றுக் கொடுத்தற்கு.எனக்கு குசினி என்றால் சமையலறை என்று பல நாட்களுக்கு முன்னர் தெரியும். மயூரேசன் கதைகளில் கண்டிருக்கலாம். ஆம் ஈழத்தமிழர்கள் குசினி என்றுதான் சமயலறையைக் கூறுவார்கள். அதன் மூலம் ஃப்ரெஞ்ச்சு என்று இப்பொழுதுதான் தெரிகிறது.

ஓவியனின் பதிவில் உள்ள வெதும்பகம்- தமிழகத் தமிழில் அடுமனை என்று அழைக்கப் படுகிறது. அதே போல ஐஸ் கிரீம்- பனிக் கூழ் எனப் படித்த நினைவு! அல்வா- இனிப்புக் களி.

ஸ்டூல் என்பதற்கு "மொட்டான்" என்றும் படித்த நினைவு!

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் இது போல ஏராளமான பிற மொழிச் சொற்களுக்கு தமிழாக்கம் கொடுத்திருக்கிறார்.

மணிப்பிரவாள நடை என்பது இடைப் பட்ட காலத்தில் (சங்க காலத்திற்குப் பின்) தமிழில் ஏராளமான உரைநடை நூல்கள் ஏற்பட்ட பின் வட மொழி கலந்து எழுதப் பட்ட ஒரு நடை. வடமொழி என குறிப்பிடுகையில் சம்ஸ்கிருதம் என்றுதான் கொள்ள வேண்டும். பின்னர் உரை நடைத் தமிழில் இரண்டறக் கலந்திருந்தது சில காலம். பின்னர் தமிழ் மொழி ஆர்வலர்கள் அவ்வாறான நடையில் சம்ஸ்கிருதத்தின் ஆதிக்கத்தையும், தமிழ்மொழி சிறுமைப் படுத்தப் படுவதையும் கண்டு மனம் வெதும்பி மக்களிடையே முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி நெடிய போராட்டத்திற்குப் பின்னே,மிகச்சமீப (சமீப என்பதன் தமிழாக்கம் கூடத் தெரியாதற்கு மன்னிக்க) காலத்திற்கு முன்னர்தான் தனித்தமிழில் மாற்றப் பட்டது (மறைமலையடிகள், ம.பொ.சிவஞானம், பரிதிமாற்கலைஞர் போன்றவர்கள் குறிப்பிடப் பட வேண்டியவர்கள்) பரிதிமாற்கலைஞர் தான் சூரிய (பரிதி)நாராயண(மால்) சாஸ்திரிகள் (கலைஞர்).

மணிப்பிரவாள நடையின் சிறு எடுத்துக்காட்டு
""ஆழ்வாரும் திருமகளாரும் அதிப் ப்ரீதியுடன் அங்கிருந்தும் புறப்பட்டு திருவரங்கன் எழுந்தருளியுள்ள திருப்பதியில் ......." என்று போகும் அந்தச் சொற்றொடர். பதினொன்றாம் வகுப்பில் படித்தது.

இளசு
13-04-2007, 05:39 PM
சமீப - அண்மை ..

சரியா முகிலன்?

மீண்டும் உன் சத்தான பின்னூட்டத்தில் மனம் 'புஷ்டியான -
அண்ணன்!

ஆதவா
13-04-2007, 05:46 PM
விஞ்ஞானம்---------வைஞான்----------அறிவியல்
ஜோர்---------------ஜோர்-----------நன்று வேகமாக பலத்துடன்
அற்புதம்-----------அத்புத்------------அதிசயம் ???
பயங்கரமான---------பயங்கர்------------விகாரம்??/
பயம்----------------பைய்------------அச்சம்
சிருங்காரம்----------ஷ்ருங்கார்----------அழகு அழகுபடுத்துதல்
நாட்டியம்------------நாட்ய-------------நடனம்
பிரம்மாண்டம்---------பிரம்மாண்ட்---------பெரிய

இது சரியா நண்பர்களே!

leomohan
13-04-2007, 08:01 PM
இல்லை ஆதவா. இரண்டு சொற்களும் சற்று சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. அதிசயம் தெரியவில்லை. ஆனால் விகாரம் கட்டாயம் இல்லை.

நன்றி முகிலன். சங்க இலக்கியங்களில் சமஸ்கிருத தாக்கம் இல்லை என்கிறீர்களா. மிகவும் அருமையான தகவல் தந்திருக்கிறீர்கள். நன்றி. அருமையாக செல்கிறது இந்த திரி.

mukilan
14-04-2007, 12:03 AM
சமீப - அண்மை ..

சரியா முகிலன்?

மீண்டும் உன் சத்தான பின்னூட்டத்தில் மனம் 'புஷ்டியான -
அண்ணன்!

இளசு அண்ணா என் பின்னூட்டங்களுக்கு பாராட்ட ஆரம்பித்ததிலிருந்து எனக்குள் அதிகப் பொறுப்பு வந்து விட்டது போல உணர்கிறேன். மோதிரக்கையால் அதிகம் குட்டுப்பட யாருக்குத்தான் ஆசை இருக்காது!

ஓவியா
14-04-2007, 12:28 AM
இளசு அண்ணா என் பின்னூட்டங்களுக்கு பாராட்ட ஆரம்பித்ததிலிருந்து எனக்குள் அதிகப் பொறுப்பு வந்து விட்டது போல உணர்கிரேன். மோதிரக்கையால் அதிகம் குட்டுப்பட யாருக்குத்தான் ஆசை இருக்காது!

ம்ம்ம் என்னாமோ நடக்குது,

சொல்-----------மொழி மூலம்--------------தமிழ் சொல்
புஸ்தகம்....................புக்ஸ்................................புத்தகம்
இரப்பர்......................ரப்பர் (Rubber)..................அழிப்பான்