PDA

View Full Version : காதலுக்காக ஒரு காதல்



தமிழ்பித்தன்
09-04-2007, 04:28 AM
தமிழ் பித்தனின் இயக்கத்தில் உருவான இவ் ஒலிப்பதிவை கேட்டுப் பாருங்கள் இசையும் கதையும்
http://biththan.blogspot.com/2007/04/blog-post_08.html

mini10101976
09-04-2007, 04:30 AM
கேட்க கேட்க ஆர்வம் கூடுகின்றது

ஓவியன்
09-04-2007, 04:39 AM
நண்பரே கேட்டு விட்டு பதிக்கிறேன் என் கருத்தினை.

இளசு
09-04-2007, 10:57 AM
நன்றி தமிழ்ப்பித்தன்..

இதற்காக நீங்கள் மெனக்கிட்ட காலத்துக்கு முதல் வந்தனம்..

ஒரு கோர்வையான நிஜமொட்டிய கதை, பொருத்தமான பாடல்கள்..

நண்பர்களின் குரல்பாவம் மாற்றிய ஒத்துழைப்பு...

அனைவருக்கும் என் பாராட்டுகள்!

---------------------------------------------

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=189947#post189947


ஆசிய சேவையில் நான் ரசித்த இப்பகுதியை மீண்டும் நினைவுபடுத்தியது தமிழ்ப்பித்தனின் இப்பதிவு..
இதையொட்டி என் (திஸ்கி) பதிவு இங்கே மீண்டும்-





ஆசிய தமிழ்சேவை - மலரும் நினைவுகள்

தொ(ல்)லைக்காட்சி பெட்டி வராத காலம் அது.
நேயரை கட்டிப்போடாமல், வீட்டுவேலை செய்துகொண்டோ
ஏன் என் போன்றோர் உண்ணும்போதும், உறங்கும் வரையிலும்,
குளிக்கும்போதும், படிக்கும்போதும், கூட வரும் உறுத்தாத
தோழன் வானொலிப் பெட்டிதான்!

வித்தியாசமான ரசனை/ நிகழ்ச்சிகள், உற்சாகமாய் அறிவிக்கும்
குரல், தூய தமிழ் சொற்கள்/ உச்சரிப்பு - இவை வீசை என்ன
விலை எனக் கேட்ட, தமிழ்நாட்டு நிலையங்கள்!!! இந்தப் பஞ்சத்தை
தீர்த்தது இலங்கை வானொலி நிலையம் ஆசிய தமிழ்ச்சேவை!

எழுபதுகளில் என் தலைமுறைக்கு ரசனைகளை பட்டை தீட்டி
விட்ட தமிழ்ப் பட்டறை அது! எத்தனை வளமான குரல்கள்!
வாலிபமான/ வாளிப்பான நிகழ்ச்சிகள்! நேரம் குறைவென்றால்
அதற்கென குறும்பாடல் போடும் நேர்த்தி. (குற்றுயிரும் குலை
உயிருமாய் பாதியில் ஆகாஷ்வாணிக்கு தாவுவது தமிழக புத்தி!)

காலை 7.15 பொங்கும் பூம்புனல். காதே கடிகாரம். கச்சிதமாய்
பள்ளிக்கு தயார் ஆவேன். படிக்காத மேதையில் திரை இசைத்திலகம்
கே. வி. மகாதேவன் இசையில் ' இன்ப மலர்கள் பூத்து குலுங்கும்
சிங்காரத் தோட்டம்" என்ற பாட்டின் intro தான் பூம்புனலின்
முகவரி! அலுக்காத அந்த மெட்டை தெரிந்து எடுத்த ரசிகர் யாரோ!
அவரிடம் நான் apprentice ஆகி பாடம் படிக்கணும்!

திரைப்பட விளம்பரங்களில் புதுப்புது உத்திகள். இரு வேறு கட்டங்களில்
நாயகி மஞ்சுளா பேசும் வசனங்களை ஒட்டி இடையில் KS ராஜா ஒரே
ஒரு வரி சேர்க்க, அந்தக் கால morphing!
படம் : எங்கள் தங்க ராஜா
மஞ்சுளா: சே சே , இந்த ஆம்பிளைகளே சுத்த மோசம்............
KS ராஜா: என்ன சொன்னீங்க மிஸ் மஞ்சுளா?
மஞ்சுளா : ஓ..சாரி ராஜா!

ராஜாவை விட ( இவர் எம்ஜியார் ரசிகர் என்று அப்போது நினைத்தேன்)
சிவாஜி படங்களின் விளம்பரங்களை அழகாகத் தொகுத்து வழங்கிய
அப்துல் ஹமீதின் குரலுக்கு தீவிர ரசிகன் நான்! காணாமலே நான்
கட்டிய ரசிகக் கோட்டை! மற்றும் மயில் வாகனன், வணக்கம் கூறி
விடைபெறும் அன்புச்சகோதரி ராஜேஸ்வரி சண்முகம்..... இப்போதும்
கேட்கும் குரல்!

பாட்டுக்குப் பாட்டு, பிறந்த நாள் வாழ்த்து,
ஒன்றோடு ஒன்று, இசையும் கதையும், இசைப்போட்டி
இன்றைய நேயர்.....இடைவிடா நிகழ்ச்சிகள் இரவு தீரும் வரை.
தலையணைக்கு அருகே சப்தம் குறைத்து நான் கேட்ட 'இரவின்
மடியில்".....பத்து வயது சிறுவனுக்கு தாயின் மடியில்!
அலாரமும் உறங்கி விடும் அற்புதத் தெரிவுகள்!

ஏ.எம்.ராஜாவை முழுமையாகத் தெரியாமலே போய் இருக்கும் இந்த
தமிழ்ச்சேவை இல்லை என்றால். melodyகளின் தாய் வீடு இந்த சேவை!
இத்தனை நிகழ்ச்சிகளில் என்னைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியை விரிவாக
சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

நிகழ்ச்சி : அத்திப்பூ. காரணம்: காரணப் பெயர்!
மிகச் சிறந்த படைப்புகள் கூட, தினம் பெருகும் புது வரவால்
முகம் காட்டக் கூட முடியாமல் மூடப்படுவது உண்டு! ஓரிரு முறை மட்டும்
ஒலித்த காந்தர்வக் குரல்கள் மூச்சு வாங்கி மறுவாழ்வு பெறும் நிகழ்ச்சி!

அன்று கேட்ட பல பாடல்கள் இன்று வரை காதில் படவில்லை!
நினைவில் இருந்து சில மட்டும் இங்கே.
கிடைத்தால் கேட்டுப் பாருங்கள்!
hype ல் இருந்து தற்காலிக விடுதலை உணர்வீர்கள்.

நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு- (ML ஸ்ரீகாந்த்.)
எங்கு பார்த்தாலும் இயற்கை காட்சி ( " " " )
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி ( ஜாய்)
அழகிய செந்நிற வானம் (படம் : சௌந்தர்யமே வருக வருக)
ஒரு பார்வை பார்க்கும் போது ( படம்: நங்கூரம்)
மழை தருமோ என் மேகம் ( படம்: மனிதரில் இத்தனை நிறங்களா)
பொன்னென்ன பூவென்ன கண்ணே ( படம் : அலைகள்)
மனமே முருகனின்மயில் வாகனம் ( படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை)
தங்க ரதம் வந்தது வீதியிலே ( படம்: கலைக் கோயில்)

விட்டால் விடிய விடிய எழுதிக்கொண்டே இருப்பேன். இந்த
மட்டில் நிறுத்தி முடிக்கிறேன்.
என் பிராண நண்பருக்கே இந்தக் கட்டுரை அர்ப்பணம்!
சுபமாக முடிக்க ஆசைப்படுவதால் இந்த அற்புத சேவையின்
பிற்கால நிகழ்வுகளை சொல்லாமல் விடுகிறேன்.

வணக்கம் கூறி விடைபெறுவது
உங்கள் அன்புச் சகோதரன்
இளசு!.....இளசு!!..இளசு!!!

தமிழ்பித்தன்
09-04-2007, 11:08 AM
பாராட்டுகள் தெரிவத்த அனைவருக்கம் இந்தச் சிறியவனின் நண்றிகள்