PDA

View Full Version : தனியாய் ஒரு மரம்............



Nanban
08-05-2003, 04:37 PM
தனி மரத்தின் மீது
பல பேரின் கண்கள்....

நனையும் ஆட்டிற்காக
அழும் ஓநாய்கள் -
மரத்தின் கிளைகளில்
வசிக்கும் பறவைகளை
நோட்டமிடும்.

ஆசையாய்
கல்லெறியும் குழந்தைகளைக்
கண்டிக்கும் பெருசுகள் -
கடைக்கண்ணால் நோக்கும்
கனிந்த பழம்
தன்னாலே வீழாதோ என்று?

கருக்கல் நேரத்தில்
காதலர்களும் வருவர் -
பிரிந்து போகையிலே
கீறிவிட்டுப் போன -
எதிராளியின் பெயரைத்
தடவிப் பார்த்து
கண்ணீருடன் அழுவர் -
என் மௌனமே சாட்சி.

சமயத்தில் தொட்டிலும்
தொங்கும் என் கிளைகளில் -
வேலைக்குப் போகும் தாயின்
பாசங்களை நான்
தர வேண்டியிருக்கும்....

எல்லோருக்கும் எல்லாமாய்
நானிருந்தும் -
நான் மட்டும் எங்கும்
நகர முடியாதவளாயிருப்பேன் -
விதவையாய் நின்றிருப்பேன்.

puthusu
08-05-2003, 11:57 PM
அழகாச் சொன்னீங்க சார்... விதவைப்பெண்ணின் நிலையை.. அருமை..

gans5001
09-05-2003, 12:55 AM
கீறிவிட்டுப் போன -
எதிராளியின் பெயரைத்
தடவிப் பார்த்து
கண்ணீருடன் அழுவர் -
என் மௌனமே சாட்சி.

நல்ல வரிகள்... பாராட்டுக்கள்

poo
09-05-2003, 02:19 PM
அழகாச் சொன்னீங்க சார்... விதவைப்பெண்ணின் நிலையை.. அருமை..


??????????... (இப்படி ஒரு கோணமுண்டா இந்த கவிதையில்?!)

இளசு
09-05-2003, 04:11 PM
பாராட்டுகள் நண்பனுக்கு.....

கீறிய பெயர்கள்....
கூரிய வரிகள்...

Nanban
10-05-2003, 07:26 AM
அழகாச் சொன்னீங்க சார்... விதவைப்பெண்ணின் நிலையை.. அருமை..


??????????... (இப்படி ஒரு கோணமுண்டா இந்த கவிதையில்?!)

இந்தக் கவிதையே அந்தக் கோணத்தில் தான் எழுதப் பட்டது...... புரியவில்லையா?

rambal
11-05-2003, 09:50 AM
மரம்.. பட்ட மரமா... பட்ட பெண்ணா.. குறியீடு...
வினைத் தொகையாய் ஒரு கவிதை.. அளவான சொல்.. அளவு மீறிய கற்பனை...
மொத்தத்தில் மனதைக் கொள்ளைகொள்ளும் படைப்பு..
பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்..