PDA

View Full Version : ♔. ஒரு ஊருல ஒரு ராஜாவாம்... ♔ராஜா
08-04-2007, 10:19 AM
வணக்கம் அன்பு நெஞ்சங்களே...!

என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. இதில் எவ்வித சுய தம்பட்ட நோக்கமும் இல்லை.. என் வாழ்க்கையில் நம்பற்கரிய அனேக நிகழ்வுகள் பின்னிப் பிணைந்துள்ளன.. அவற்றை நண்பர்களாகிய தங்களுக்கு அறியத் தருவதில் ஒரு திருப்தி எனக்கு.. அவ்வளவுதான்..

இது ஒரு கோர்வையான வாழ்க்கை சரிதம் அல்ல..
சில நினைவுச் சங்கிலிகளின் ஊர்வலம் மட்டுமே..
தங்கள் கருத்துகளைப் பதிந்து சிறப்பிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.. நன்றி.

varsha
08-04-2007, 10:23 AM
அந்த ராஜவுக்கு நிறைய கதைகள் இருக்கும் தை கொஞ்சம் சொல்லுங்கள்

ராஜா
08-04-2007, 10:23 AM
:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009:

praveen
08-04-2007, 10:23 AM
நன்றி நண்பரே, பகிர்ந்து கொள்ள வந்ததற்கு.

கழிவு நீர் தொட்டி மட்டுமா காரணம், உங்கள் மனித நேயமும் அக்கனத்தில் செய்த செயலும் தான்.

varsha
08-04-2007, 10:25 AM
ராஜா கதையை தொடருங்கள்.

ராஜா
08-04-2007, 10:26 AM
:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smi:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009:ley-009::nature-smiley-009:

ஓவியன்
08-04-2007, 10:54 AM
ராஜா அண்ணா!

எப்போதும் நகைச் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களிடமிருந்து சத்தியமாக இப்படி ஒரு படைப்பை எதிர் பார்க்கவில்லை. திரியின் தலைப்பைப் பார்த்தவுடன் சிரித்துக் கொண்டுதான் ஓடி வந்தேன் - ஆனால் மனதினைக் கனமாக்கி விட்டீர்கள்.

தேவகி அக்காவை உண்மையாக கொன்று போட்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்று நீர் கூறியதனை இன்று நான் எவ்வளவு உண்மையான வாசகம் உம்முடையது என்று உணர்கின்றேன்

இதே போன்று எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்று எங்கள் ஊரிலுள்ளது அவர்களும் மூன்று பெண் பிள்ளைகள், மூத்தவர் நீர் குறிப்பிட்ட்து போன்றவர். அந்த குடும்பமும் அந்த அக்காவினால் எண்ணற்ற இடைஞ்சல்களை அனுபவித்தது.

ஆனால் என்ன ஒரு வித்தியாசம் அந்த அக்காவின் இளைய சகோதரிகளிருவரும் அவரை ஒரு போதும் ஒருவரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவரால் பலவற்றை அவர்கள் இழந்த்து என்னவோ உண்மைதான் ஆனால் அவர்களிருவரும் தங்கள் அக்காவிற்காகவே வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள்.

இன்று அந்த சகோதரிகள் நல்ல இடத்திலே தாங்களும் வாழ்க்கைப் பட்டு தங்கள் அக்காவினை இன்றும் ஒரு குழந்தை போல பேணி வருகின்றனர்.

முன்பு இது எனக்குப் பெரிய விடயமாகத் தெரியவில்லை. ஆனால் உம் கதையைக் கேட்டவுடன் தான் அந்த இளைய சகோதரிகளின் பாசமும் தியாகமும் எத்தகையது என்று எண்ணிப் பார்கின்றேன்.உண்மையில் அந்த சகோதரிகளிருவரும் நடமாடும் தெய்வங்கள் இல்லையா?

உணர்ச்சிப் படையலாக ஒரு திரியினைத் தொடக்கியதற்கு என் வாழ்த்துக்கள்.

தொடர்ந்து தாருங்கள்.

varsha
08-04-2007, 10:59 AM
நல்ல படைப்பு தொடருங்கள் மனதை நெருடுகிறது

ராஜா
08-04-2007, 11:04 AM
நன்றி அஷோ மற்றும் வர்ஷா..

அன்பிற்கினிய ஓவீயன்.. தாங்கள் குறிப்பிட்ட இரு சகோதரிகளும் வாழூம் தெய்வங்கள்..அவர்கள் துணைவர்களும் கூட..

இன்னும் சொல்வேன்..

ஓவியன்
08-04-2007, 11:07 AM
நன்றி வர்ஷா..

அன்பிற்கினிய ஓவீயன்.. தாங்கள் குறிப்பிட்ட இரு சகோதரிகளும் வாழூம் தெய்வங்கள்..அவர்கள் துணைவர்களும் கூட..

இன்னும் சொல்வேன்..நன்றி அண்ணா!

தொடர்ந்து சொல்லுங்கள் - ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

அன்புரசிகன்
08-04-2007, 11:28 AM
இன்றளவும் அவருடைய பண்டிகை தினங்களில் எனக்கு மிகவும் பிடித்த பிரியாணி தயார் செய்து, 12 கிலோமீட்டர் பஸ் பயணம் செய்து மன்னை பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ பிடித்து சூடு ஆறுவதற்குள் கொண்டு வந்து என்னருகில் அமர்ந்து பாசத்துடன் பரிமாறுவதற்கும், அதை எட்டி நின்று என் மனைவி பார்த்து ரசிப்பதற்கும் காரணம் அந்த [கழிவு நீர்த் தொட்டி] சம்பவம் தானே..?


கழிவுநீர்த்தொட்டி சம்பவம் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதே தவிர உங்களின் ராஜ உள்ளம் மட்டுமே காரணமாக எனதுது மனதில் படுகிறதுது.

அன்புரசிகன்
08-04-2007, 11:35 AM
பின்னர் நான் தெரிந்து கொண்ட செய்தி இதுதான்.. கேரளா செல்லும் பாசஞ்சர் ட்ரெயினில் தேவகி அக்காவை அழைத்துச் சென்று ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறக்கி விட்டுவிட்டு வந்துவிட்டார்கள். துணைக்கு ஒரு பெரிய அலுமினியச் சட்டி நிறைய அக்காவுக்கு பிடித்த தயிர் சாதமும் நான் கொடுத்த புளியம் பிஞ்சுகளும்.. தன் பிற பெண்மக்களின் வாழ்வுக்காக அந்த அப்பாவிக் குடும்பம் கண்ட தீர்வு இதுதான்..


நீங்கள் தெரிந்துதுகொண்ட செய்தி மனதை பாரமாக்கிவிட்டதய்யா.

ராஜா
08-04-2007, 11:48 AM
தங்கள் கருத்துகளுக்கு நன்றி ரசிகரே..!

இளசு
08-04-2007, 09:15 PM
அன்பு ராஜா

மனிதம் உயர்ந்த முதல் நிகழ்வும்
மனிதம் உடைந்த அடுத்த நிகழ்வும் சொல்லி

மீண்டும் என்னைக் கலங்கடித்துவிட்டீர்கள்..

அந்த இஸ்லாமியச் சகோதரியை எண்ணி நெஞ்சு விம்முகிறது பெருமிதத்தால்...

அந்த மனவளர்ச்சி குறைந்த சகோதரியை எண்ணி நெஞ்சு விசும்புகிறது.. ஆற்றாமையால்..

பாரதி, பரம்ஸ், மயூரேசன், ஆதவன் வரிசையில் உங்கள் தொடரும்
மன்றத்தின் நினைவுப்பதிவுகள் வரிசையில் நிலையான இடம் பெற்றிருக்கிறது..

தொடருங்கள் ராஜா..

ராஜா
09-04-2007, 07:23 AM
நன்றி பெருந்தகையே..!

இன்னும்.. இன்னும் நிகழ்வுகள் உள்ளன.

கோத்து கொண்டுவருகிறேன்.. விரைவில்..

paarthiban
09-04-2007, 10:20 AM
ஒன்று மெய்சிலிர்க்க வைக்குது. ஒன்று பதைபதைக்க வைக்குது. ராஜா சாரின் அனுபவங்கள் சொல்லும் விதம் பிரமாதம். நண்பர்களையும் அவங்கவங்க நினைவுகளில் மூழ்கடிக்க வச்ச்சதே அதற்கு நல்ல சான்றாகும். ராஜா சார் இன்னும் எழுதணும். நன்றி.

ராஜா
09-04-2007, 11:48 AM
நன்றி பார்த்திபன்..!

தாங்கள் "ராஜா சார்" என்று அழைத்திருக்கும் விதம் முன்பே நீங்கள் எனக்கு பரிச்சயப் பட்டவரோ என எண்ண வைக்கிறது.

ராஜா
09-04-2007, 04:34 PM
:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smi:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009:ley-009::nature-smiley-009:

அன்புரசிகன்
09-04-2007, 04:53 PM
நீங்க ஏன் இந்த வேலையெல்லாம் செய்யறீங்க..? இருங்க.. நான் எடுத்துக்கறேன்..

நல்ல உள்ளங்கள் இவ்வையகத்திலுண்டு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.தினமும் வியாபாரம் செய்யற இந்தச் சரக்கு போட்ட சோறும் தந்த வருமானமும் தானேப்பா..? நம்ம வேலையை நாமச் செய்யறதிலே நமக்கென்னப்பா வெட்கம்..


தொழில்பக்தி மற்றும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதெல்லாம் இதுதானோ?
அருமையான சம்பவம். பலருருக்கு பாடமாகவும் எடுத்துக்காட்டாகவும் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஷீ-நிசி
09-04-2007, 05:23 PM
நிறைகுடம் நீர் தழும்பாது.. உங்கள் மகன் நிறைக்குடம்.... அருமையாய் வளர்த்திருக்கும் தந்தை... எடுத்துக்காட்டான தந்தை - மகன் உறவு...

வாழ்த்துக்கள் ராஜா சார்....

இளசு
09-04-2007, 08:19 PM
ராஜா

உங்கள் மகன் இத்தனை உயர்வுகள் அடைந்ததில் ஆச்சரியமும் இல்லை..

இன்னும் இன்னும் பலப்பல நல்லுயர்வுகளை அடைவார் என்பதிலும்
சந்தேகமும் இல்லை...

பொருத்தமான கையெழுத்து உங்களுடையது...

உங்கள் மகனைப் பெற்று வளர்த்த உங்களுக்கும், அண்ணியாருக்கும்
என் வந்தனமும் மரியாதையும்!

mukilan
10-04-2007, 02:13 AM
ஒரே நாளில் ஒப்பற்ற பல படைப்புக்கள். ஒவ்வொரு சம்பவமும் ஒரு பாடம். என் போன்றோர் உங்களிடம் கற்றுக்கொள்ள இன்னமும் ஏராளம் ஏராளம். உங்கள் மகன் கணிப்பொறியியலில் மட்டுமன்றி வாழ்க்கைப் பாடத்திலும் வல்லுநராகவே இருப்பார். கற்றது ராஜா என்ற பல்கலைக்கழகமாச்சே!
"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்".

ராஜா
10-04-2007, 04:48 AM
அனைத்து நண்பர்கட்கும் நன்றி..!

பாராட்டுகளை அவசரப்பட்டு வீணாக்கி விடாதீர்கள்.. நான் அடுத்துக் கூறப்போகும் சம்பவம் உங்கள் நண்பனாக என்னை வைத்திருக்காது என்றே நம்புகிறேன்..!

இளசு
10-04-2007, 07:15 AM
முகிலனின் பின்னூட்டம் அட போடவைக்கிறது..

ராஜா..

நம்மைப்பற்றி எல்லாம் அறிந்தும் உடன் இருப்பவன் உண்மையான நண்பன்..
நாங்கள் உங்களின் உண்மையான நண்பர்கள்..

வெறும் கருப்பு அல்லது வெள்ளை என்பது குழந்தைகள் தீர்ப்பு..
இவன் நல்லவன் , அவன் கெட்டவன்...
இது எம்ஜியார் ..அது நம்பியார்..
இந்த பகுத்தல் - கார்ட்டூன்களில் சாத்தியம்!

வாழ்க்கை அப்படி அன்று...
பல shades of grey.. அடங்கிய முதிர்ந்த நாவல்..
எல்லைகளை உரசி, அங்கங்கே அழித்து வரையப்பட்டது..

எல்லாவற்றையும் உள்வாங்கி, கற்று, பிழை குறைத்து
மீண்டும் சறுக்கி..... நாம் நித்தம் ஆடும் பரமபதம்...

நாங்களும் உங்களைப்போலத்தான் அனுபவங்களில்..
ஆனால் எல்லாராலும் எல்லாவற்றையும் இத்தனை சுவையாய்
எழுதிவிட முடியாது..

எழுதுங்கள் ராஜா..
எல்லாம் தெரிந்தும் இருக்கப்போகும் நண்பர்கள் எங்களுக்காக!

gayathri.jagannathan
10-04-2007, 08:25 AM
ராஜா, தேவகி அக்காவைப் பற்றிய பதிவு கண் கலங்க வைத்து விட்டது... ஏனென்றால் என் வாழ்விலும் இதே போன்றதொரு மனிதரை நெருங்கிய உறவினராகக் கடந்து வந்திருப்பதால் தான்...

அதை இங்கே பதியலாமா என்று தெரியவில்லை...

எனினும், உங்கள் நினைவுகளின் பதிவுகள் அனைத்தும் மிகவும் சுவாரசியமாக உள்ளது...

மனோஜ்
10-04-2007, 09:01 AM
உண்மையில் கண் கலங்க வைத்து விட்டது உங்கள் சம்பவங்கள்
அப்பாவுக்கு பிள்ளைதப்பாம பிறந்துள்ளது என்ற பழமோழியை மெய்பித்துவிட்டார் உங்கள் மகன் வாழ்த்துக்கள்

ஓவியா
11-04-2007, 12:43 AM
கழிவு நீர்த் தொட்டி
மனிதாவிமானம் ஓவ்வொரு மனிதனிற்க்கும் இருக்கும். ஆனல் அதை செயலில் காட்டினால் தன் பலனுண்டு. அதில் உங்களுக்கு 99% கிடைத்து விட்டது. உங்கள் முதல் கதையில் மெய் சிலிர்கிறேன்.
பிரியாமல் பிரியானி உண்டு பல்லாண்டு வாழ வாழ்துக்கள்.தேவகி அக்காவின் நினைவு.
அடடே, நெஞ்சில் கல்லை வைத்து விட்டீறே!!!!!
எங்கோ ஓர் மூலையில் வாழும் எங்களுக்கே மனது ரணமாகின்றது. குடும்பத்தாருக்கு என்ன கல் நெஞ்சாமா???
ச்சே, நீங்கள் சொல்வது போல் அவர்களே அக்காவை கொன்று இருக்கலாம். நினக்கவே முடியவில்லை. கொடுமை இது.புதுசா ஒரு ஆள்
எந்த குழந்தயும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே - பின்
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!!!!!!!
அந்த மகராசி கண்ணமாவிற்க்கு ஒரு பெரிய பாராட்டு. சபாஷ் அண்ணி

இருந்தாலும் உங்கா பையனுக்கு ரொம்பதான் பணிவு.
நல்ல மகன் + நல்ல பெற்றோர் = நல்ல குடும்பம்.

அருமையான பதிவு. நன்றி அண்ணா
மன்றத்தின் முத்து மாலையில் முத்துக்கள் கூடுகின்றன:icon_clap:

ராஜா
11-04-2007, 06:35 AM
ம்ம்ம்

உனக்கு பயந்துகிட்டுதான் அடுத்த பதிவு தள்ளிப் போகுது...

ராஜா
12-04-2007, 09:05 AM
:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smi:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009:ley-009::nature-smiley-009:

gayathri.jagannathan
12-04-2007, 09:24 AM
நடந்ததை அப்படியே சொல்லி, அதைத் தவறென்று ஒப்புக் கொள்ளும் தங்கள் பண்பு மிகவும் உயர்ந்தது...

மன்றத்துச் சொந்தங்களை நீங்கள் ஒரு போதும் இழக்க மாட்டீர்கள்.. இது உறுதி...

தவறு நடப்பது வாழ்க்கையில் சகஜமான ஒன்று....

மன்றத் தோழர் ஆனந்த் இயற்றிய கவிதை வரிகள் இதோ உங்களுக்காக...

விவரமான பருவத்தில்
(யாருக்கும்) தெரியாமல் செய்த தவறுகளை
பருவக்கோளாறு என்றார்கள்;

என்னுடைய சொந்தக் கருத்து யாதெனின், இந்த சம்பவத்தைத் தாங்கள் கூறியதன் மூலம் எனது மதிப்பில் மேலும் ஒரு படி உயர்ந்து விட்டீர்கள்...

ஓவியன்
12-04-2007, 10:01 AM
சகோதரி காயத்திரி கூறியது போன்று என்று ஒருவர் தான் செய்தது தவறென்று தானாகவே ஒப்புக் கொள்கிறாரோ அன்றே அவர் திருந்தியவராகின்றார். நீங்கள் செய்தது தவறென்று ஒப்புக் கொண்டதன்றி அதனை வெளிப்படையாகக் கூறவும் செய்கிறீர்கள். உள்ளொன்று வைத்தும் புறமொன்று பேசும் இந்த உலகமதில் நீங்கள் வித்தியாசமானவர், நேர்மையானவர், போற்றத் தக்கவர்.

உலகத்திலே இறந்த காலம் என்பது முடிந்த ஒன்று, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இல்லை. நிகழ் காலம் என்பதே மெய் அதனை சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கடமை. அதாவது, ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதனை விட அவர் இப்போது எப்படி வாழ்கின்றார் என்பதே முக்கியம்.

உங்களை இப்படி வாழ வைத்த தேவதை கிடைத்தது உங்கள் பாக்கியம் இல்லையா அண்ணா! - அவரைப் பற்றிய உங்கள் பதிவினையும் ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.

ராஜா
12-04-2007, 06:19 PM
நன்றி காயத்ரி..! ஓவியன்..!

மனோஜ்
12-04-2007, 06:45 PM
இது உங்கள் இளவயதின் செயல் அதுவும் கட்டுபடுகள் இல்லாது இருந்த உங்களுக்கு இப்படி நடந்தது இயல்பு அதையூம் அழகான கதையாக கொடுத்தது உங்கள் பன்பு தொடருங்கள் உங்கள் மாற்றத்தை அறிய ஆவல்

இளசு
13-04-2007, 07:36 AM
நண்பர்களே.. சொல்லுங்கள்.. பட்டீஸ்வரம் சம்பவம் பற்றி நீங்கள் சொல்ல நினைக்கும் செய்தி யாது..? என் வாழ்வின் முற்பகுதியைச் சொன்னபிறகும் நான் உங்கள் நண்பனாக இருக்கும் தகுதியில் இருக்கிறேனா..?


இதுவரை நண்பராய் இருந்த நாம் இப்போது
நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்..

மறுபக்கமும் பகிரும் உங்கள் மனப்பக்குவம்
உங்களை மிக உயர்த்துகிறது ராஜா..

வந்தனம் உங்கள் மனதுக்கு!

paarthiban
13-04-2007, 12:19 PM
ராஜா சார். உங்கள் வாழ்க்கைக் கட்டுரையில் உண்மைப் பாடங்கள் - நல்லதும் கெட்டதும் - எல்லாரும் கத்துக்கிறோம். மதிப்பு கூடுகிறது சார். தொடருங்கள். நன்றி. வணக்கம்.

ஓவியா
13-04-2007, 12:25 PM
ராஜா சார். உங்கள் வாழ்க்கைக் கட்டுரையில் உண்மைப் பாடங்கள் - நல்லதும் கெட்டதும் - எல்லாரும் கத்துக்கிறோம். மதிப்பு கூடுகிறது சார். தொடருங்கள். நன்றி. வணக்கம்.


தாங்கள் ஒரு ஆசிரியர் என்பது ஹி ஹி ஹி :medium-smiley-006:

மன்னிகவும் சார்.

ராஜா
14-04-2007, 06:28 AM
நன்றி நண்பர்களே..!

mukilan
14-04-2007, 06:35 AM
தவறு என்று தெரிந்தும் அதைச் செய்தால்தான் அது தவறு. தவறு என்பதையும் உணர்ந்து அதற்காக மனம் வருந்தினீர்கள் என்றால் அப்பொழுதே உங்களுக்கு தெய்வத்தின் மன்னிப்பு உண்டு. உங்களைப் போன்ற பக்குவமான மனதை எப்படி அடைவது?

banupriya
14-04-2007, 08:03 AM
நாம் செய்த நல்லதை மட்டும்வெளியிலேசொல்வதில் பெருமை இல்லை. தாம் செய்த தவறுகளை வெளியிலே சொல்ல ஒருவருக்கு மனப்பக்குவம் வேண்டும் , அது உங்களிடம் உள்ளது. மனிதன் பிறக்கும்போதே பக்குவப்பட்டவனாக பிறப்பதில்லை. வாழ்க்கையில் அவன் செய்த சில தவறுகள் தான் அவனை பக்குவப்பட்டவனா.க மாற்றுகிறது.தவறு என்று தெரிந்தும் தொடர்வது தான் தப்பு. நீங்கள் செய்த தவறுகளை வெளியிலே சொல்வதால் மற்றவர்களை தவறுகள்செய்யாதிருக்க உதவி செய்கிறீர்கள் . தொடருங்கள் உங்கள் எழுத்துக்களை.

ராஜா
14-04-2007, 08:51 AM
உண்மைதான் பானுப்பிரியா..

வயதில் இளையவராக இருந்தாலும் நீங்கள் சொன்ன வார்த்தைகள் முதிர்ச்சியானவை. என் குற்ற உணர்வைக் குறைக்க வல்லவை.

அருமைத் தம்பி முகிலனுக்கும் நன்றி.

அன்புரசிகன்
15-04-2007, 03:31 PM
சற்றுப்பிந்திய பதிவு. மன்னிக்க.

தவறு செய்து திருந்துபவர்கள் மீண்டும் அதே தவறு செய்யமாட்டார்கள்.
தவறு செய்தவன் திருந்தப்பாக்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும்.
தப்பு மற்றவருக்கு தெரிந்து செய்தாலும் சரி. தெரியாமல் செய்தாலும் சரி. தப்பு தப்பு தான்.
இவை சில திரைப்படங்களில் என்னால் காண முடிந்த தத்துவங்கள். தப்பு தவறு இரண்டுமே முற்றிலும் மாறுபட்டவை. எதுவாயினும் ஒப்புக்கொள்ளும் தன்மை கொண்டவர் நீங்கள். எதற்காக நீங்கள் வருந்தவேண்டும் நீங்கள்.
தற்சமயம் தப்பு செய்தது மட்டுமல்லாது அவற்றை நிஜாயப்படுத்தும் பலர் உள்ள நிலையில் உங்கள் வருத்தம் தேவையற்ற ஒன்று. பலர் தாம் செய்வது தவறு என்று தெரியாத நிலையில் உள்ளனர். ஒருகாலத்தில் அதை அவர்கள் உணர்ந்தால் அதுவே பெரியவிடையம். தொடருங்கள் உங்கள் பங்களிப்பை. (எந்தவித தயக்கமுமில்லாது)

ஓவியா
15-04-2007, 05:48 PM
நன்றி நண்பர்களே...

அதற்கு முன்.. நண்பர்களே.. சொல்லுங்கள்.. பட்டீஸ்வரம் சம்பவம் பற்றி நீங்கள் சொல்ல நினைக்கும் செய்தி யாது..? என் வாழ்வின் முற்பகுதியைச் சொன்னபிறகும் நான் உங்கள் நண்பனாக இருக்கும் தகுதியில் இருக்கிறேனா..?


இன்றிலிருந்து தாங்கள் என் நன்பரே அல்ல,
அந்தத் தகுதியை இழந்து விட்டீர்கள்.
சோரி ஃபொர் யூ...........யூ ஆர் எ வேரி ஃபேட்போய் :waffen093:


மாறாக உண்மையை சொல்லியதற்காக என் பெஸ்ட் நண்பராக தகுதி பெற்று
இன்றிலிருந்து யாம் உம்மை ப்பெஸ்ட் ஃபடி அண்ணா என்று அழைப்போம். :ernaehrung004:


நல்ல மனிதராக வாழ ஆசைப்படும் உங்களை மதிக்கிறேன்.

அன்புரசிகன்
16-04-2007, 09:03 AM
இன்றிலிருந்து யாம் உம்மை ப்பெஸ்ட் ஃபடி அண்ணா என்று அழைப்போம். ":ernaehrung004:"


இப்போ தான் அவர் கூறியிருந்தார் அவர் மனைவி கஷ்டப்பட்டு திருத்தியதாக. மீண்டும் அவரை பீர் அடிக்க கூப்பிடுகிறீர்களே...:sport-smiley-018: :icon_dance:

ராஜா
16-04-2007, 09:29 AM
ஓ அதுவா அர்த்தம்..?

அன்புரசிகன்
16-04-2007, 09:31 AM
சும்மா ஒரு குத்து மதிப்புத்தான். கை சும்மா இருக்குதில்ல. யாரையும் ஏதாச்சிலையும் வம்பிழுக்கத்தான் தோணுகிறது.

ஷீ-நிசி
16-04-2007, 10:42 AM
அதற்கு முன்.. நண்பர்களே.. சொல்லுங்கள்.. பட்டீஸ்வரம் சம்பவம் பற்றி நீங்கள் சொல்ல நினைக்கும் செய்தி யாது..? என் வாழ்வின் முற்பகுதியைச் சொன்னபிறகும் நான் உங்கள் நண்பனாக இருக்கும் தகுதியில் இருக்கிறேனா..?தவறுகளை ஒளிவுமறைவின்றி சொல்லும் அளவுக்கு நீங்க மனப்பக்குவம் அடைந்திருக்கிறீர்கள்!

எல்லோராலும் இது முடியாது!

முகமூடியுடன் உலாவும் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் மட்டும் முகமூடி இல்லாமல்!

வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்!

ராஜா
16-04-2007, 12:58 PM
சும்மா ஒரு குத்து மதிப்புத்தான். கை சும்மா இருக்குதில்ல. யாரையும் ஏதாச்சிலையும் வம்பிழுக்கத்தான் தோணுகிறது.

உங்களுக்கு அக்காவைப் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன்..

என்ன பாடு படுத்தப் போறாங்களோ உங்களை...;-)

ராஜா
16-04-2007, 12:59 PM
தவறுகளை ஒளிவுமறைவின்றி சொல்லும் அளவுக்கு நீங்க மனப்பக்குவம் அடைந்திருக்கிறீர்கள்!

எல்லோராலும் இது முடியாது!

முகமூடியுடன் உலாவும் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் மட்டும் முகமூடி இல்லாமல்!

வித்தியாசமான மனிதர்தான் நீங்கள்!

நன்றி ஷீ

அன்புரசிகன்
16-04-2007, 04:10 PM
உங்களுக்கு அக்காவைப் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன்..

என்ன பாடு படுத்தப் போறாங்களோ உங்களை...;-)

எனக்கென்ன கவலை. நீங்கள் இருக்கிறீர்கள் தானே.

ராஜா
17-04-2007, 05:10 PM
மாமனாரே ஒண்ணு மட்டும் எனக்கு க்ளியர் பண்ணுங்க..

நீங்க எனக்கு நல்லது பண்றீங்களா.. இல்லே சிக்கலில் இழுத்து விடறீங்களா..?

அன்புரசிகன்
17-04-2007, 05:32 PM
நீங்க எனக்கு நல்லது பண்றீங்களா.. இல்லே சிக்கலில் இழுத்து விடறீங்களா..?

நல்லதோ கெட்டதோ... அருகில் யாமிருக்கிறேன். பயமேன் உங்களுக்கு.

ராஜா
17-04-2007, 05:42 PM
:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smi:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009:ley-009::nature-smiley-009:

அன்புரசிகன்
17-04-2007, 05:51 PM
இன்றுவரை எத்தனையோ முறை என் மனைவியின் உள்ளுணர்வு தரும் எச்சரிக்கையின் காரணமாக பேராபத்துகளில் இருந்து தப்பியிருக்கிறேன். இது கடவுள் பால் எனது பக்தியையும், மனைவியின் மீது பாசத்தையும் வளர்த்துள்ளது என்றால் மிகையில்லை

இதைத்தான் பெண்புத்தி பின்புத்தி என முன்னொர்கள் கூறியிரந்தனர். (இப்பொழுது அதனை திரிவு படுத்திவிட்டார்கள்)

உங்கள் மாதா பிதா குரு இவர்களுக்கடுத்தபடியாக உங்கள் மனைவி உங்களின் நடமாடம் தெய்வமாகிவிட்டாள். போற்றத்தவறாதீர்கள்.

ஓவியா
17-04-2007, 05:57 PM
அருமையண்ணா,

படம் பார்க்க போன இடத்திலே யாரோ அடாவடி பண்ண நீங்க ஹீரோவாக ஆகிவிட்டு இருபீங்களோனுதான் ஆரம்பித்தேன்.......................அடடே

அண்ணி உயிர்கொடுத்த தெய்வமாகிட்டாங்களே!!!!!!!!!!:icon_tongue:

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

சைக்கில் கேப்பில் புது மனவி புது வண்டி ஆனால் வரதட்சனை இல்லைனு சொல்லீட்டீகளே..ஹி ஹி ஹி

மனோஜ்
17-04-2007, 06:03 PM
அருமை வாழ்க்கையே சரித்திரமாக உள்ளதே ராஜா அண்ணா

pradeepkt
18-04-2007, 05:38 AM
அடடே... இதைத்தான் மயிரிழையில் தப்பியதும்பாங்களா...
இனிமேலும் வீட்டில் அவங்க பேச்சைக் கேட்டு நடத்தலே நன்மை

ஓவியன்
18-04-2007, 05:44 AM
இன்றுவரை எத்தனையோ முறை என் மனைவியின் உள்ளுணர்வு தரும் எச்சரிக்கையின் காரணமாக பேராபத்துகளில் இருந்து தப்பியிருக்கிறேன். இது கடவுள் பால் எனது பக்தியையும், மனைவியின் மீது பாசத்தையும் வளர்த்துள்ளது என்றால் மிகையில்லை.[/COLOR][/FONT]

உண்மைதான் ராஜா!

உண்மையான அன்பினால், இது சாத்தியமாவதினை நானும் அனுபவித்துள்ளேன்.

மொத்ததில் நீங்கள் கொடுத்து வைத்தவர் வாழ்த்துக்கள்.

pradeepkt
18-04-2007, 05:48 AM
ராஜா,
இப்போதுதான் இந்தத் திரியில் உங்கள் பதிவுகளை முழுமையாகப் படித்தேன். உங்களைப் பற்றி எங்கள் எண்ணங்களை மீண்டும் மலை முகட்டில் கொண்டு வைத்துவிட்டன, உங்கள் பதிவுகள்.

உள்ளதை உள்ளபடிச் சொல்வதற்கும் ஒரு தனித்தன்மை வேண்டும். அனைத்துச் சம்பவங்களையும் சம்பவங்களாகவே சொல்லி எங்களுக்குப் படிப்பினையாக மாற்றி விட்டீர்கள்.

உங்களுக்கு மன்றத்தின் சார்பாகவும் நண்பர்கள் சார்பாகவும் என் மனதார்ந்த நன்றி.

இந்தத் திரி இன்னும் வளர்ந்து மன்றத்தின் பொற்திரிகளில் ஒன்றாக வாழ்த்துகள்.

banupriya
18-04-2007, 06:04 AM
ராஜா அண்ணா,
'' மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்தவரம்'' -
சும்மாவா சொன்னாங்க. உங்க வாழ்க்கை என்னும் புத்தகம் சுவாரஷ்யமாக போய்க்கிட்டிருக்கு.
எழுதுங்க,எழுதுங்க எழுதிக்கிட்டேயிருங்க...................

இளசு
18-04-2007, 06:23 AM
தாய்க்குப் பின் தாரம்..

அதீத அன்பு தரும் உள்ளுணர்வு இருவரிடமும் உண்டு.

சிலிர்க்க வைக்கும் அனுபவம் ராஜா.
பகிர்ந்தமைக்கு நன்றி.

நினைவில் நின்றவள் படநிகழ்வைப் படித்து
நினைவுக்கு வந்த பழைய பாட்டு -

நல்ல மனைவி.. நல்ல பிள்ளை..
நல்ல குடும்பம் - தெய்வீகம்!

ராஜா
28-04-2007, 04:22 PM
:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smi:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009:ley-009::nature-smiley-009:

ராஜா
28-04-2007, 04:22 PM
:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smi:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009:ley-009::nature-smiley-009:

ஷீ-நிசி
28-04-2007, 04:30 PM
அடடா.. சினிமாவிலெல்லாம் நடிச்சதுண்டா ராஜா சார்.. உங்க நினைவுகளை தொடருங்க...

மனோஜ்
29-04-2007, 10:51 AM
ஆகா அவஅவன் சினிமால வாய்புகிடைக்குமானு நாயா அலையிரானுங்க நீங்க ஜாலியா டுர் போயிட்டு நடித்துவந்தது அருமை
பகிர்தமைக்கு நன்றி ராஜா அண்ணா

பரஞ்சோதி
29-04-2007, 11:51 AM
அருமையான சம்பவங்கள்.

எங்க ஊரில கூட, எங்க வீட்டுக்கு எதிரே படம் எடுத்தாங்க, நானும் கூட்டத்தில் ஒருவனாக வருவேன். அதனால் என்னமோ படம் பெட்டியிலேயே தூங்குது.

அன்புரசிகன்
29-04-2007, 12:16 PM
உங்ங புல்லட்டுக்கு என் வயசு. :D..
சினிமாவில எல்லாம் நடிச்சிருக்கிறீர்கள். சொல்லவே இல்ல.
அது சரி.. அப்புறமா ஜக்குவை போய் பார்க்கவே இல்லையா? படத்தில பாத்திருக்கலாம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.

ஓவியா
01-05-2007, 09:40 PM
கில்லர் கவாலி அடடே பெயரே ஒரு கலக்லாதான் இருக்கு!!!

ரவுடிகளான நீங்கள் [?] இத படிச்சு சிரிச்சேன் பாருங்க....ஹி ஹி ஹி அடோய் சாமி....நல்ல ரசனை.

அருமையாக எழுதி, எங்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள்.....

பாராட்டுக்கள்.

அண்ணா இந்த படம் வலையில் எங்காவது பார்க்க வாய்ப்பு இருக்குமா????

pradeepkt
02-05-2007, 07:56 AM
அட ராஜா... மீண்டும் மீண்டும் நீங்க சகலகலா வல்லவர்னு நிரூபிச்சிட்டே வரீங்களே... :)
சூப்பரப்பு

ராஜா
02-05-2007, 08:39 AM
கில்லர் கவாலி

அண்ணா இந்த படம் வலையில் எங்காவது பார்க்க வாய்ப்பு இருக்குமா????

இதெல்லம் தீபாவளித் திரைப்படம் அம்மா..

தீபாவளிக்கு வெளியாகிற படம் இல்ல. முதல்நாள் ஈ ஓட்டுற தியேட்டர்ல எதையாவது போட்டு ஒப்பேத்துவாங்களே.. அது போன்ற திரைப்படம்.. வலையில் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்..

பாரதி
02-05-2007, 03:37 PM
அன்பு ராஜா,

முதலில் என்னை மன்னிக்கவும். இவ்வளவு சிறப்பான திரியை இவ்வளவு நாட்கள் எப்படித்தவற விட்டேன் என்றே தெரியவில்லை..?
சொல்வது எல்லாம் அப்படியே பசுமரத்தாணி போல மனதிலே பதிந்து விட்டது.

உங்கள் மனிதாபிமானத்திற்கும், ஈர மனதிற்கும் தலை வணங்குகிறேன். அனைவரின் வாழ்விலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தவறு என்று நினைத்து சொல்லாமல் வைத்துக்கொண்டிருக்கும் வரைதான் மனதில் அழுத்தமும் உளைச்சலும். வெளிப்படையாக சொல்லி ஒப்புக்கொண்டோமென்றால் பிறக்கும் நிம்மதியே அலாதிதான். அந்த வகையிலும் உங்களை பாராட்டுகிறேன்.

உங்களின் வாழ்க்கை வரிகள் அனைவரையும் சிந்திக்க, சிரிக்க வைக்கும் சரிதமாக அமையட்டும்.

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

paarthiban
03-05-2007, 11:03 AM
கில்லர் கபாலி சம்ப்வம் பிரமாதம். ராஜா சார் அப்புறம் ஏன் ஃகீரோவாக முயற்சி பண்ணலை நீங்க??

ராஜா
03-05-2007, 01:37 PM
நன்றி பாரதி..

நன்றி பார்த்தி...!

Gobalan
13-05-2007, 09:11 AM
. மிக அறுமையான சம்பவங்கள். வாழ்க்கை என்பது ஒரு பள்ளிகூடம். அது நமக்கு நிறைய பாடங்களை கற்று கொடுக்கிறது. அது, இங்கு நம் தளத்தில் உள்ள பல உறிப்பினர்களின் பதித்த அபிப்ராயங்கள் போல, ஒரு மனிதனை உருவாக்கிகிறது. இதை தான் பகுத்தறிவு என்கிரார்களோ! அது உங்களுக்கு நிறையவே இருப்பது உங்கள் பதிப்புகளில் இருந்து தெரிகிறது. வாழக்கையின் பாடங்களை கற்று கொண்ட பின் அதை தொகுப்பாக பத்தித்து மற்றவர்களுக்கு பயனுள்ளதாக எழுதுவது மிக பெரிய கலை. மகத்தான சேவை! ஆதலால் உங்களின் இந்த பதிப்பு பாராட்டுக்குறியது. என் பாராட்டுக்கள். நன்றி

ஓவியா
13-05-2007, 01:06 PM
பெஸ்ட் ஃபடி அண்ணா,

அடுத்த கட்டுரை எப்பொழுது, எங்கே, எப்படி, எதுக்கு, ஏன் என்று ஒரு நாலு வரி எழுதினா நல்லா இருக்கும்....

நங்களும் ஆட்டோ காசு, தடிபசங்க காசு, அருவா காசு எல்லாத்தையும் வீணாக்காமல் அப்படியே சேமிப்பில் வச்சுக்குவோம், எனாங்கறீக.....

அங்க வசதியெப்படி அண்ணாச்சி!!

அன்புரசிகன்
13-05-2007, 02:32 PM
எனாங்கறீக.....அங்க வசதியெப்படி அண்ணாச்சி!!

அப்படிப்போடுங்க அரிவாள...
அது தானே..
நானும் பொறுத்து பொறுத்து பார்தாகிவிட்டது... முடியல... மாப்புவுக்கு ஆட்டோ எல்லாம் சரிவராது. இங்கிருந்து மிக்- விமானம் தான். :D

ஓவியா
14-05-2007, 12:19 AM
அப்படிப்போடுங்க அரிவாள...

அது தானே..
நானும் பொறுத்து பொறுத்து பார்தாகிவிட்டது... முடியல... மாப்புவுக்கு ஆட்டோ எல்லாம் சரிவராது. இங்கிருந்து மிக்- விமானம் தான். :D

நானும் அரிவாள தூக்க வேணாம்னு தான் நினைக்கிறேன், எங்க, ம்ம்ஹும் இந்த மன்னர்க்குடி மக்கள் வேல வச்சாலும் வச்சுருவாங்க போல இருக்கே!!!!

சோடா பாட்டில் உடனே கிடைக்கும்......அந்த சைக்கில் ச்செய்னதான் அச்சோ எங்க வச்சேனு தெரியலே, தேடி பார்க்கனும் மமே.

- உல்லூர் சுவர்ணாக்கா.

அன்புரசிகன்
14-05-2007, 11:29 AM
நானும் அரிவாள தூக்க வேணாம்னு தான் நினைக்கிறேன், எங்க, ம்ம்ஹும் இந்த மன்னர்க்குடி மக்கள் வேல வச்சாலும் வச்சுருவாங்க போல இருக்கே!!!!

சோடா பாட்டில் உடனே கிடைக்கும்......அந்த சைக்கில் ச்செய்னதான் அச்சோ எங்க வச்சேனு தெரியலே, தேடி பார்க்கனும் மமே.

- உள்ளூர் சுவர்ணாக்கா.

உதுகளுக்கெல்லாம் அவர் மசியமாட்டாராக்கும். ஏன்னா.. அவர் நம்ம மாப்பு ஆச்சே... :icon_cool1:

தங்கவேல்
24-05-2007, 01:01 PM
ராஜா, வாழும் தெய்வம் நீங்கள் தான். கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது உங்களது எழுத்துக்கள்.. நீங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திப்பேன்.

ராஜா
24-05-2007, 01:09 PM
நானும் அரிவாள தூக்க வேணாம்னு தான் நினைக்கிறேன், எங்க, ம்ம்ஹும் இந்த மன்னர்க்குடி மக்கள் வேல வச்சாலும் வச்சுருவாங்க போல இருக்கே!!!!

சோடா பாட்டில் உடனே கிடைக்கும்......அந்த சைக்கில் ச்செய்னதான் அச்சோ எங்க வச்சேனு தெரியலே, தேடி பார்க்கனும் மமே.

- உல்லூர் சுவர்ணாக்கா.

வேற யாராச்சும் டபாய்ச்சா உன் கையில சொல்லிக்குவேன்..

நீயே பொருளை இட்டாந்தா நான் இன்னாத்த கண்ணு பண்றது..?

ராஜா
24-05-2007, 01:12 PM
அப்படிப்போடுங்க அரிவாள...
அது தானே..
நானும் பொறுத்து பொறுத்து பார்தாகிவிட்டது... முடியல... மாப்புவுக்கு ஆட்டோ எல்லாம் சரிவராது. இங்கிருந்து மிக்- விமானம் தான். :D

மாமா !

துன்பப்படுறவங்க எல்லாம் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க..

அந்த தெய்வமே ஃபிளைட்டை உட்டா எங்களுக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்..?

தங்கவேல்
24-05-2007, 01:15 PM
ஒரு மாணிக்கத்தை பிள்ளையாக அடைந்து இருக்கின்றீர்கள் ராஜா. கடவுள் உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார். மன்னை என்பது மன்னார்குடி தானே ?

ராஜா
24-05-2007, 01:15 PM
ராஜா, வாழும் தெய்வம் நீங்கள் தான். கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது உங்களது எழுத்துக்கள்.. நீங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ இறைவனிடம் பிரார்த்திப்பேன்.

நன்றி தங்கம்..!

பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க.. ! தெய்வம் எல்லாம் இல்லே.. உங்க நண்பன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்..!

ராஜா
24-05-2007, 01:16 PM
ஒரு மாணிக்கத்தை பிள்ளையாக அடைந்து இருக்கின்றீர்கள் ராஜா. கடவுள் உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார். மன்னை என்பது மன்னார்குடி தானே ?

ஆமாம் தங்கம்..!

தங்கவேல்
26-05-2007, 06:04 AM
ராஜா எனக்கும் மன்னார்குடிக்கும் ஒரு பினைப்பு உண்டு. பூண்டி கலை கல்லூரியில் படித்த காலத்தில் மன்னார்குடியில் கிடந்து இருக்கிறேன். விவரம் தெரியாத ஒரு வயசு அது.. மன்னை வரும் போது உங்களை சந்திக்க ஆவல். தங்களது முகவரியை தனி மடலில் அனுப்பி வையுங்கள்...உங்களையும், உங்களது மகனையும் பார்க்க ஆசை....

மனிதனுக்கு துன்பம் வரும்போது இறைவனிடம் கோரிக்கை வைப்பான். நேர்த்திகடன் செய்வான். தெய்வமும் உதவும். ஆனால், நீங்கள்.. உங்களை தெய்வம் என்று சொன்னதில் தவறு இல்லை என்றே நினைக்கின்றேன். துன்பம் வரும் வேளையில் உதவுபவர் கடவுள் ...

அக்னி
26-05-2007, 06:27 AM
உங்கள் குணம், உண்மை சொல்லும் துணிவு, மனைவி, பிள்ளை, நண்பர்கள் என்று அனைத்தும் மனக்கண்ணில் தெளிவாகத் தெரிகின்றது. அழகிய எழுத்து நடையில் சம்பவங்களைத் திரிவுபடுத்தாமல் தரும் பாங்கு ஈர்க்கின்றது. தொடருங்கள்... ஆவலோடு காத்திருக்கின்றேன்...

இதயம்
26-05-2007, 06:37 AM
உங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மிகவும் சுவராஸியமாக இருக்கின்றன. அதுவும் அந்த தியேட்டர் சம்பவம் அத்தனை சீக்கிரம் மறக்கமுடியாது.

சின்ன வயதில் நீங்க கொஞ்சம் மார்க்கமா தான் இருந்திருக்கீங்க..!! என்னை விட அதிக தப்பு செய்தவர்களும் இருக்கிறார்கள் என்பது மனதுக்கு ஆறுதல். தவறு செய்வது மனித குணம். அதையும் தாண்டி திருந்துவதும், செய்த தவறை பகிர்ந்து கொள்ளுதலும் செய்த தவற்றையே மாயமாக்கிவிடும்.

உங்கள் துணைவியாருக்கு என் நன்றிகள். காரணம், அவரால் தானே இப்படி ஒரு அஜால் குஜால் பார்ட்டி திருந்தி, அருமையான மனிதனாக மாறி தமிழ் மன்றம் மூலம் எங்களுக்கு நண்பராக கிடைத்தார்..!!

அன்புரசிகன்
27-05-2007, 11:56 AM
மாமா !
துன்பப்படுறவங்க எல்லாம் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க..
அந்த தெய்வமே ஃபிளைட்டை உட்டா எங்களுக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்..?

உங்க பீலிங்ஸ் என் ஹார்ட்டில ஒரு ஸ்கெட்ச்சு போட்டிருச்சு... :D

ராஜா
27-05-2007, 12:22 PM
நன்றி நண்பர்களே..!

சிவா.ஜி
27-05-2007, 02:32 PM
என்ன ஒரு வண்ணமயமான வாழ்க்கை. மனிதநேயம்,வாலிபகுறும்பு,மனைவிநேசம்,நல்ல மகன்,தெளிவான சிந்தனை ஆச்சர்யப்படுத்துகிறது உங்கள் வாழ்க்கை. வணங்கத்தோன்றுகிறது. நெகிழ்த்திய உங்கள் எழுத்துக்கு என் வணக்கங்கள்

ராஜா
30-05-2007, 01:18 PM
நன்றி சிவா.ஜி..!

ராஜா
30-05-2007, 01:20 PM
:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009::nature-smi:nature-smiley-009::nature-smiley-009::nature-smiley-009:ley-009::nature-smiley-009:

சூரியன்
30-05-2007, 01:27 PM
என்ன சொல்வது என்று தெரியவில்லை. இது போல் இன்றும்
நிறைய கிராமங்களில் நடக்கிறது

சிவா.ஜி
30-05-2007, 02:49 PM
இச்சம்பவம் எந்த வருடத்தில் நடந்தது என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் எங்கள் ஊரில்(கிருஷ்ணகிரி) இதைப்போல் ஒரு சம்பவம் நடப்பதேயில்லை. மாறாக உடன் படிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நன்பனை வீட்டுக்குள் கூட்டிக்கொண்டுவந்து உடன் இருந்து சாப்பிடுவோர் மிக அதிகம்.

ஓவியா
31-05-2007, 09:54 PM
வேற யாராச்சும் டபாய்ச்சா உன் கையில சொல்லிக்குவேன்..

நீயே பொருளை இட்டாந்தா நான் இன்னாத்த கண்ணு பண்றது..?

அது!!

சரி இப்ப ஆயுதத்த கீல போடறேன், மருபடியும் பேஜார் ஆச்சு, மன்னார்குடி மசாலாவாயிடும். சொல்லிபுட்டேன் ஆமா.

அப்பப்ப நம்மலே கொஞ்சாம் கவணிங்க, அக்ஹாம்.

- அநியாய தாதா 2007.

ஓவியா
31-05-2007, 09:57 PM
நன்றி தங்கம்..!

பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க.. ! தெய்வம் எல்லாம் இல்லே.. உங்க நண்பன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்..!

அண்ணா இப்ப நீங்க 'தெய்வ அண்ணா!!!' அய்ய்யா..

பேசாம வாங்கி வச்சுகுங்க, ஏன்னா நான் உங்க தங்கச்சி, நீங்க தெய்வ அண்ணானா நான் யாரு??? தெய்வ தங்கச்சி...ஹி ஹி ஹி

தெய்வ தங்கச்சி ஓவியா வாழ்க, அவள் புகழ் ஓங்குக...ஹி ஹி ஹி.

அன்புரசிகன்
31-05-2007, 10:18 PM
இந்தியர்கள் சுதந்திரத்தை பெற்றது வெள்ளையரிடம். அது பல உயிர்களை குடித்தது. ஆனால் இப்போது நடக்கும் யுத்தத்தில் மானமல்லவோ போகிறது.

இதயம்
03-06-2007, 07:50 AM
ராஜா அவர்கள் குறிப்பிட்ட கீழ் சாதி கொடுமை இப்பொழுது மிகவும் அரிது. ஆனாலும், விஷ செடிகளாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை கண்டுபிடித்து அழிப்பது தான் மனிதாபிமானம் கொண்டவர்களின் முதல் கடமை.

உழைப்பு, கல்வி, திறமை, நேர்மையை கருத்தில் கொள்ளாமல் வெறும் ஜாதியை அடிப்படையாக கொண்டு ஒருவன் தன்னை உயர்ந்தவனாக அறிவித்துக் கொண்டால் அவனை முச்சந்தியில் சவுக்கால் அடித்தாலும் தவறில்லை. அதை ஆதரிப்பவர்களுக்கும் அந்த தண்டனையே சரி..!!

Isaiprabhu
03-06-2007, 11:29 AM
என்ன சொல்வது என்று தெரியவில்லை. இது போல் இன்றும்
நிறைய கிராமங்களில் நடக்கிறது

உன்மை:mad: :mad:

ராஜா
03-06-2007, 07:42 PM
அண்ணா இப்ப நீங்க 'தெய்வ அண்ணா!!!' அய்ய்யா..

பேசாம வாங்கி வச்சுகுங்க, ஏன்னா நான் உங்க தங்கச்சி, நீங்க தெய்வ அண்ணானா நான் யாரு??? தெய்வ தங்கச்சி...ஹி ஹி ஹி

தெய்வ தங்கச்சி ஓவியா வாழ்க, அவள் புகழ் ஓங்குக...ஹி ஹி ஹி.

ஓகே..ஓகே.. ஓவியா. இல்லே இல்லே அருள்மிகு ஓவியா அறம் வளர்த்த நாயகி.!

வர வர உன் ரவுசு தாங்கலைப்பா..!

அன்புரசிகன்
03-06-2007, 08:15 PM
ஓகே..ஓகே.. ஓவியா. இல்லே இல்லே அருள்மிகு ஓவியா அறம் வளர்த்த நாயகி.!

வர வர உன் ரவுசு தாங்கலைப்பா..!

நம்ம ரவுசு மாப்பிள்ளைக்கே ரவுசா....

ராஜாவுக்கே சவாலா?

பாத்துகிட வேண்டியதுதான்...

ராஜா
04-06-2007, 05:44 AM
பாத்தியா ஓவி...?

என் மாம்ஸ் இருக்கார்.. அவர் கிட்ட யாரும் எதுவும் பண்ணமூடியாது..

ஓவியா
05-06-2007, 09:38 PM
ஓகே..ஓகே.. ஓவியா. இல்லே இல்லே அருள்மிகு ஓவியா அறம் வளர்த்த நாயகி.!

வர வர உன் ரவுசு தாங்கலைப்பா..!

ஹி ஹி ஹி :sport-smiley-018:பாத்தியா ஓவி...?

என் மாம்ஸ் இருக்கார்.. அவர் கிட்ட யாரும் எதுவும் பண்ணமூடியாது..அண்ணா, ஹி ஹி ஹி இதுக்கு நீங்க ஒண்டியாவே மோதலாம்.

ராஜா
06-06-2007, 11:32 AM
ஹி ஹி ஹி :sport-smiley-018:

அண்ணா, ஹி ஹி ஹி இதுக்கு நீங்க ஒண்டியாவே மோதலாம்.

என்னா மாம்ஸ்..?

இப்புடிக் கேலி பண்ணுது அந்தப் புள்ள.. ! இடிஞ்ச சுவர் மாதிரி நிக்கிறீங்க..

ஏதாச்சும் பேசுங்கப்பு..!

அன்புரசிகன்
06-06-2007, 11:43 AM
என்னசெய்வது மாப்பு... வாய் நிறைய அக்கா என்று கூப்பிட்டுவிட்டேன்... அதனால் தான்... அவங்கள பற்றி பெரிதாக யோசிக்கவேண்டாம். இளகிய மனசு... ஈசியா கரைச்சிடலாம். பனங்கிழங்கை பிளப்பதற்கு கோடரி எதற்கு.

சுட்டிபையன்
06-06-2007, 11:56 AM
மாம்ஸ் என்ன இதெல்லாம்..............?

ராஜா
06-06-2007, 12:19 PM
என்ன இது..? உங்களுக்கும் மாமாவா..?

[தில்லானா மோகனாம்பாள் தங்கவேலு ஸ்டைலில்]

சுட்டிபையன்
06-06-2007, 12:38 PM
என்ன இது..? உங்களுக்கும் மாமாவா..?

[தில்லானா மோகனாம்பாள் தங்கவேலு ஸ்டைலில்]

அக்காக்கு மாமா என்றா தம்பிக்கு என்ன தாத்தாவா:music-smiley-012:

இதுதானே அடிச்சு அடிச்சு சொன்னேன் மாமா கூட சேராதீங்க என்று

இதயம்
06-06-2007, 12:54 PM
எப்படியோ தவற விட்ட முதல் மூன்று நிகழ்வுகளை இன்று தான் படிக்க முடிந்தது. படித்து விட்டு எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதன் பிரதிபலிப்பாக கண்ணில் நீர்த்திரையிடுகிறது. இதை நான் படித்த சம்பவமாக நினைக்க முடியவில்லை. நேரில் கண்டு உணர்ந்தது போல் ஒரு பாதிப்பு, பாரம் மனதில்.!

1. நீங்கள் ஏற்கனவே சொன்னது போல் இஸ்லாமிய கொள்கையையும் மறந்து அந்த பெண் உங்கள் காலில் விழுந்தது பாசம் ஏற்படுத்திய விளைவு தானே. நீங்கள் இத்தனை சாதாரணமாக ஒரு கதையைப்போல் எழுதிவிட்டீர்கள். ஆனால், அதன் பின்னே இருக்கும் உங்கள் மனிதாபிமானம் "போங்கடா நீங்களும், பிரிவினைகளும்" என்று கத்தத் தோன்றுகிறது. இதில் எனக்கு மனதை திருப்தியடைய வைத்த ஒரு விஷயம் அந்த இஸ்லாமிய குடும்பத்தின் நன்றி மறவாமை. அது தான் மனிதனை உயர்த்தும். நீங்கள் செய்த அந்த ஒரு நாள் உதவி, அந்த இளைஞன் பெறும் ஒவ்வொரு வளர்ச்சியும் உங்களை கௌரவப்படுத்தும். காரணம் இன்று அவன் சாதிக்க நீங்கள் தான் அடிப்படை. அவர்கள் என்றும் நன்றி மறக்கக்கூடாது என்பது என் வேண்டுதல்.

2. மனதை கரைய வைத்த நிகழ்வு. மனநோயாளிகளுக்கு இந்த சமூகம் கொடுக்கும் தண்டனை மிக கொடியது. இனி எங்கு மனநோயுற்ற பெண்ணைக்கண்டாலும் அந்த பெண்ணாக இருக்குமோ என்று உங்களை நினைவு படுத்தப்போவது நிச்சயம். இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை கதைகளோ.? இதெல்லாம் அறிந்தும் சூழ்நிலைக்கைதிகளாக இருக்கிறோமே அது ஏன். இந்த இயலாமை என்னையே வெறுக்க வைக்கிறது. சமூகத்துடன் கலந்து வாழ அச்சமாக இருக்கிறது. அந்த சகோதரி என்ன ஆனாரோ..? என் இதயத்தை கிழித்து இரத்தம் வழிய வைக்கும் கேள்வி இது.

3. இன்றைய ஒவ்வொரு இளைஞனும் படிக்கவேண்டிய நிகழ்ச்சி இது. பொறுமை, தன்னடக்கத்திற்கு அர்த்தம் உங்கள் மகனோ என்று எண்ணத்தோன்றுகிறது. அவரை போட்டால் துவரையா முளைக்கும்.? அதே நேரம் ஒரு சிறந்த தந்தையின் இடத்தில் நீங்கள் இருக்க தவறிவிட்டீர்களோ என்று ஒரு வினா என் மனதில். காரணம், நிறைய படித்த, உங்கள் உழைப்பில் ஓரளவு வசதியான உங்கள் மகனுக்கு நீங்கள் கொடுத்தது வேலை அல்ல, அது சத்திய சோதனை..! ஆனால், அதில் வென்று உங்களுக்கு பெருமை தேடித்தந்து விட்டார் உங்கள் செல்வன். உங்கள் நெஞ்சை பெருமையுடன் நிமிர்த்திக் கொள்ளலாம்.

ராஜா
06-06-2007, 02:31 PM
நன்றி இதயம்..!

தங்கள் விமர்சனம் என்னை சற்று பெருமையடையத்தான் செய்திருக்கிறது.

ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஏன் நீங்களும் கூட இறைவனாக சிலவேளைகளில் சிலருக்கு தோற்றமளித்திருக்கலாம்.

ஓவியா
06-06-2007, 02:45 PM
என்னா மாம்ஸ்..?

இப்புடிக் கேலி பண்ணுது அந்தப் புள்ள.. ! இடிஞ்ச சுவர் மாதிரி நிக்கிறீங்க..

ஏதாச்சும் பேசுங்கப்பு..!

அன்பு இடிச்சா சுவர் நிக்குமா?? :mini023:

அன்புரசிகன்
06-06-2007, 03:33 PM
அன்பு இடிச்சா சுவர் நிக்குமா?? :mini023:

இடிச்சாலும் சுவர் நிற்குமுங்க.
இடிந்து விழுந்தால் தான் முடியாது அக்கா...

ராஜா
06-06-2007, 03:34 PM
சபாஷ் மாம்ஸ்...!

சரியான பதில்..!

ஓவியா
06-06-2007, 03:46 PM
ஹி ஹி ஹி


கவுத்துடீகளே அண்ணா,

அன்புரசிகன்
06-06-2007, 04:43 PM
உறவுகளிடம் தோற்பதிலும் ஒரு சுகம் உண்டு.

உறவுகளை கவிழ்ப்பதிலும் கூட... :D

ஓவியா
06-06-2007, 04:47 PM
உறவுகளிடம் தோற்பதிலும் ஒரு சுகம் உண்டு.

உறவுகளை கவிழ்ப்பதிலும் கூட... :D

இதான் அன்பு. அன்பின் அம்பு.

ஓவியன்
01-05-2008, 06:08 PM
அன்பு ராஜா அண்ணா!

உங்கள் பிறந்த நாளும் அதுவுமா, என் ஞாபக அலைக்குள் சிக்கியது உங்களது இந்தத் திரிதான்...

மீளவும் படித்தபோது...
பலவிடயங்கள் நம் வாழ்க்கைக்கும்
பயனுள்ளதாக அமையுமென்ற நம்பிக்கை
எனக்குள் நிறையவே....!!

மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்....

பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு சிறப்புடன் வாழ்கவென...

பார்த்திபன்
01-05-2008, 08:26 PM
ராஜாண்ணா,

இந்த திரியை எப்படித்தவற விட்டேன் என்றே தெரியவில்லை.
உங்கள் சம்பவங்கள் என் கண்களை கலங்க வைத்து விட்டது..
உங்கள் மனிதாபிமானத்திற்கும், அனுபவத்திற்கும், தவற்றை ஒப்புக் கொள்ளும் தங்கள் பண்புக்கும் தலை வணங்குகிறேன்...

இவ்வரிய திரியை மீண்டும் மீட்டுத்தந்த ஓவியன் அண்ணாவுக்கு என் நன்றிகள்.

ஓவியா
01-05-2008, 11:16 PM
ராஜாண்ணா,

இந்த திரியை எப்படித்தவற விட்டேன் என்றே தெரியவில்லை.
உங்கள் சம்பவங்கள் என் கண்களை கலங்க வைத்து விட்டது..
உங்கள் மனிதாபிமானத்திற்கும், அனுபவத்திற்கும், தவற்றை ஒப்புக் கொள்ளும் தங்கள் பண்புக்கும் தலை வணங்குகிறேன்...

இவ்வரிய திரியை மீண்டும் மீட்டுத்தந்த ஓவியன் அண்ணாவுக்கு என் நன்றிகள்.

பார்த்திபா இதென்ன விளையாட்டு, கீழே பார்:

Join Date: 25-02-2007
posting 122


ஒரு வருடத்திற்க்கு மேலே ஆகியும் 122 பின்னூடத்திலே படகு ஓடுது,
இதில் இதை எப்படி தவற விட்டேன் என்று மௌலியின் வசனமா!!!! :D:D:D

ஓவியன்
02-05-2008, 05:45 AM
பார்த்திபா இதென்ன விளையாட்டு, கீழே பார்:

Join Date: 25-02-2007
posting 122
அது விளையாட்டில்லை அக்கா, பார்த்தீபன் பின்னூட்டமுடுவதிலும் வாசிப்பது அதிகம். (ஏனென்றால் இவரை எனக்கு நன்றாகத் தெரியும்..!! :))
அதிலும் இவர் ராஜா அண்ணாவின் பதிவுகளின் பரம இரசிகன்..!! :)

ராஜா
01-07-2008, 06:04 AM
நன்றி பாசமலர் 2007 மற்றும் நண்பர்களே..!

xavier_raja
03-07-2008, 06:49 AM
நீங்கள் சொன்ன கதை உண்மையிலேயே என்கண்களை குளமாக்கியது நண்பரே.. காலத்தால் செய்த உதவி....

xavier_raja
03-07-2008, 06:57 AM
அருமையான சம்பவங்கள் நண்பரே, நிச்சயம் தலைகனை கொண்டு ஆடும் பிள்ளைகளுக்கு இதைபடித்தால் கொஞ்சம் திருந்துவார்கள் என்று நம்புகிறேன்.

அந்த 2வது சம்பவம் என் மனதை அப்படியே உலுக்கிவிட்டது. நீங்கள் சொன்னதைபோல் அந்த பெண்ணை கொன்று இருந்தால்கூட பரவாயில்லை. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டபிறகு அவர்களால் எப்படி நிம்மதியாக இருக்கமுடிந்தது. மனம்நிறைய பாரத்துடன் கண்களில் கண்ணிருடன்.

Xavier Raja

ராஜா
03-07-2008, 07:35 AM
தொடர்ந்த வாசிப்புக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி சேவியர் ராஜா..!

SivaS
05-07-2008, 08:40 AM
அப்பிடியே ஆரம்பத்துல இருந்து எல்லாத்தயும் சொல்லுங்க
இதை எல்லம் தொகுத்து ராஜாவின் ரகசியங்கள் என்று உங்கள் சுயசரிதையை மன்றதால் வெளியிடுவோமே.:D

அருமை அண்ணா எம்போன்ற இளையவர்களுக்கு:D அருமையான வழிகாட்டி.

பூமகள்
05-07-2008, 10:07 AM
என் ஐந்து நாள் தவத்தைக் கலைத்த பெருமை உங்களைச் சேர்கிறது ராஜா அண்ணா..!! (ஏன் எதுக்குன்னு கேக்காதீங்க.. ப்ளீஸ்..!:icon_rollout:)

இத்தனை நாள் பார்க்கத்தவறிய என் கண்களை நன்றாகவே தண்டித்துவிட்டேன்... அது இப்போது சிவக்கச் சிவக்க எரிந்து கொண்டிருக்கிறது... (பின்னே ஒரே மூச்சில் ஐந்து பக்க பதிவுகளையும் இமை சிமிட்டல் மறந்து படித்தால்??:eek::eek:)

ராஜா அண்ணா என்றாலே நகைச்சுவை கலந்த சுவையே நெஞ்சில் தங்குமென்று வந்த எனக்கு...

உண்மை உருவம் உருவான கவிதை.. நிஜக் கதை..
உறைய வைத்துவிட்டது..:icon_b::icon_b:

சாக்கடையில் வீழ்ந்த குழந்தையைக் காப்பாற்றிய உங்கள் கருணை உள்ளம்.. (இங்கே பூவுக்கு ப்ளேஸ் பேக் போகிறது.. மற்றொரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக அதைப் பற்றி எழுதுகிறேன்.:rolleyes::icon_ush:)
நிஜமாகவே.. செயற்கரிய செயல் ராஜா அண்ணா.. மனம் குளிர்ந்து உங்களைப் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்..:icon_b::icon_b:

மனநலம் சரியில்லாத அந்த வயதுவந்த பெண்ணின் நிலை... ஐயகோ.. நல்ல நிலையில் இருந்தாலே விடாத உலகம்.. இப்போது என்னிலையில் தேவகி அக்கா இருப்பாங்களோ??!! நினைக்கும் போதே ஆற்றாமையில் மனம் அழுகிறது.. (இனி பூவு தூங்கின மாதிரி தான்..!:traurig001::traurig001:)

அண்ணியின் சமயோஜித உணர்வு.. எத்தனை நல்ல பலனைத் தந்திருக்கிறது.. உயிரையல்லவா காத்திருக்கிறது.. உண்மையில் உங்களுக்கு நூறு சதம் பொறுத்தமான துணைவியாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?? பல்லாண்டுகள் நீடூழி வாழ வாழ்த்துகள் அண்ணா..:icon_b:

"செய்யும் தொழிலே தெய்வம்", "எந்த தொழிலுமே மட்டமானதில்லை" -என்பதைப் புரிந்த கணினிப் பொறியியல் படித்த ஒரு பக்குவமான மகன் உங்களுக்கு அமைந்திருப்பது மனம் நெகிழ்வைத் தருகிறது ராஜா அண்ணா... நிஜமாகவே... அந்த துறையே நானும் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன்..!

அம்மா முகமறியா குழந்தை எவ்வழியிலெல்லாம் செல்லும் என்பதை உங்களின் வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்கிறோம் ராஜா அண்ணா.. உண்மையை ஒப்புக் கொள்ள பயப்படும் பயந்தாங்கோளிகள் தான் அதீத தீங்குகள் சமூகத்தில் விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள்.. அப்படி ஒப்புக் கொள்ளும் தைரியம் உள்ளவர் ஒருபோதும் தவறிழைக்க முனைய மாட்டார்..

அவ்வகையில்.. பருவ வயதில் வழித்தடம் மாறினாலும்..(மாறாதவர்கள் சான்றோராவதில்லை..!:icon_rollout:) எங்களை உங்களின் தோழர்களாகக் கருதி.. உள்ளதை உள்ளபடியே ஒப்புக் கொண்ட உங்களின் நல்ல மனம் எப்போதுமே எங்களின் அன்பு மனம் தான்..

திரைப்படத்திலும் நடித்து.. சாகசம் பல நடத்தி.. வியக்க வைத்துவிட்டீர்களே ராஜா அண்ணா.. இத்தகைய சீரிய மனம் படைத்த உங்களைக் காணவே அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது... ஹ்ம்ம்.. ஏக்கமே மிச்சமாக உள்ளது..

இறுதியில் சாதிப் பித்தர்கள் செய்த செயல் கலங்க வைக்கிறது.. அப்படியே போட்டு நாலு சாத்து சாத்தியிருக்கலாம் இல்ல ராஜா அண்ணா..??:sauer028::sauer028::mad::mad:

இது இப்போதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது... மிக சமீபத்தில் நடந்த சம்பவம்.. மனம் குமைய வைத்துவிட்டது...

ஒரு மதிய உணவுவேளையின் போது.. இரு சக தோழிகளோடு நானும் உணவருந்திக் கொண்டிருந்தேன்.. பொதுவாக அதிகம் அமைதியாக இருப்பது என் வழக்கம்.. அவ்வண்ணமே நானும் அமைதி காத்து இரு தோழிகள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவர்கள் இருவரும் கொஞ்சம் கிராமப்புறத்திலிருந்து வருபவர்கள் தான்.. ஆகவே.. கிராமிய மனம் பேச்சில் நன்றாகவே வீசும்..

இவ்விரு தோழிகளும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஏற்கனவே மற்றொரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அறிந்தது... மேட்டுக் குடிக்கே உரிய அதிகார தோரணைகளும் பேச்சில் வரத் தவறவில்லை.. பேச்சு சுவாரஸ்யமாக.. வீட்டில் நடப்பவை..பற்றி சென்று கொண்டிருக்க... திடீரென்று.. ஹரிஜனமக்களை பொதுவாக கிராமத்தில் ஒரு சொல்லடை கொண்டு கூப்பிடுவார்களே(என்னால் அப்படி மனத்தில் யோசிக்க கூட முடியவில்லை..பின் எப்படி இங்கு சுட்ட??:mad::mad:)அந்த சொல்லாடலை அவள் சர்வ சாதாரணமாக.. எந்த ஒரு தயக்கமுமின்றி.. பல முறை உபயோகித்தார்.. எனக்கு முகம் இருண்டே விட்டது.. அதிர்ச்சியில்...

ஆனால்.. வீணாக பேசி அவர்களைத் திருத்த முடியாதென்பது நான் ஏற்கனவே அறிந்த ஒன்றென்பதால் அமைதியாக அவர்களை எடைபோட ஆரம்பித்தேன்..

இத்தனைக்கும்.. அவர்களின் சாதியப் பற்றும்.. அந்த மக்கள் சக மனிதமாக நடத்தாத பாங்கும் என்னில் பெரும் கோபத் தீயை மூட்டத்தவறவில்லை.. ஆனால்..அந்த சந்தர்ப்பத்தில் வார்த்தையை கோபத்தில் அள்ளிக் கொட்டிவிடுவேனோ என்ற பயத்தில் மெல்ல பின்பு இது பற்றி பேசி பக்குவமாக திருத்துவோம் என்று காத்திருக்கலானேன்..

இதில் மாபெரும் அதிர்ச்சி என்னவென்றால் இருவரும்.. கணினித் துறையில் முதுகலைப் பட்டம் படித்த பெண்கள்.. படித்த இளைஞர்களே.. இன்னும் சாதிப் பித்து கொண்டு அலைவது மனம் வேதனையடையச் செய்தது...

அவர்களின் எதிர்காலம் நினைத்தேன்.. கொஞ்சம் மனம் கனத்துவிட்டது...

"உன் நண்பனைப் பற்றிச் சொல்.. நான்
உன்னைப் பற்றி சொல்கிறேன்" என்ற ஒரு சொல்லாடல் உண்டு.. ஆனால்.. இவர்கள் என் தோழிகள் என்று சொல்லுமளவு பழக்கமில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும்.. இருப்பினும்.. ராஜா அண்ணாவின் இப்பதிவு இந்த சம்பவத்தை சொல்ல வைத்ததால் சொல்லிவிட்டேன்.. மற்றபடி சக தோழிகளை குறை கூறுவது என் எண்ணமில்லை.. தவறிருப்பின் மன்னியுங்கள்..!:icon_ush::icon_rollout:

நெகிழ்ச்சியான பதிவிட்ட ராஜா அண்ணாவுக்கு என் அன்பு பரிசாக 1000 இபண அன்பளிப்பும்.. இன்னும் தொடர வேண்டுமென்ற வேண்டுகோளும்..!

இளசு
05-07-2008, 10:14 AM
அன்பு பூ

அதிகம் படித்தவன் பாதகம் செய்தால்
அய்யோ அய்யோ என்று போவான் - பாரதியார் சொன்னது..

அதிகம் படித்தவர்கள் சா''தீ''யம் பேசினால்
அய்யோ அய்யோ எனப் போகட்டும்.

என் வயிறெரிந்து சாபமிடுகிறேன்!

பூமகள்
05-07-2008, 10:22 AM
பாவமண்ணா...
காலங்காலமாக ஊறிப் போன
வளர்ச் சிதை மாற்றத்தால் வந்த விளைவு..

வளர்த்தவர் குற்றம்..

பிள்ளைகள் அனுபவிக்க வேண்டுமா??!!

இன்னும் காலமிருக்கிறது..
மாறியே ஆக வேண்டும்..

மாறுவார்களென நம்புகிறேன்..!

ராஜா
05-07-2008, 01:59 PM
உன் தோழிகள் பாவம்... வளர்ப்பிலேயே சாதி வெறி எனும் நஞ்சிடப்பட்டவர்கள் ..!

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே..!

மானுடம், சாதி எனும் தராசு கொண்டு மதிப்பிடப்படுவதை இந்த யுகத்தின் மாபெரும் அநீதி என்று சொல்லுவேன்.

அந்த அளவுகோலைக் கண்டுபிடித்து, வழக்கத்துக்கு கொண்டுவந்தவர்களுக்கு நண்பர் இளசுவின் சாபம் போகட்டும்.

பூமகள்
05-08-2008, 07:11 PM
அந்த அளவுகோலைக் கண்டுபிடித்து, வழக்கத்துக்கு கொண்டுவந்தவர்களுக்கு நண்பர் இளசுவின் சாபம் போகட்டும்.
மிகச் சரியாக சொன்னீர்கள்..!! :icon_b:

ஆனால் ஒரு நல்லதை விதைப்பது அல்லவை வளர்ந்த பின் அவ்வளவு சுலபமில்லை என்பது மட்டும் எனக்கு அவர்களோடு பேசுகையில் விளங்கியது..:fragend005::mad::icon_rollout:

அதனால் தான்,

"சின்ன வயதில் சொல்லித்தருபவை பசுமரத்தாணி போல் பதியும்"
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" - என்றெல்லாம் சொன்னார்களோ பெரியவர்கள்..??!! :fragend005::confused::icon_ush:

ராஜா
25-11-2008, 07:24 AM
நெகிழ்ச்சியான பதிவிட்ட ராஜா அண்ணாவுக்கு என் அன்பு பரிசாக [COLOR=Red]1000 இபண அன்பளிப்பும்.. இன்னும் தொடர வேண்டுமென்ற வேண்டுகோளும்..!


நன்றி பூ..!

உன் வேண்டுகோளை, ஆணையாக ஏற்று விரைவில் செயல்படுத்துகிறேன்..!

அதற்கான தூண்டுகோலாக,

நேற்று பழைய நண்பர் ( நண்பரில் பழையவர் உண்டா..?) ஒருவரைச் சந்தித்தபோது ஒரு வாழ்வுச் சம்பவம் நினைவுக்கு வந்தது..

அது.. விரைவில்..!

அறிஞர்
25-11-2008, 02:11 PM
வெகுநாளுக்கு பின் இந்த பதிப்பிற்கு உயிர் வந்திருக்கிறது.

கலக்குங்க .. ராசா...