PDA

View Full Version : பெருமை படுவோம்.. தமிழர்களே.. பெருமை படுவோம்..



உதயசூரியன்
08-04-2007, 08:27 AM
பெருமை படுவோம்.. தமிழர்களே.. பெருமை படுவோம்....
சென்னை வாசிகளும் பெருமை படட்டும்.....

இந்தியாவின்.. 2வது சுத்தமான நகரம் சென்னை...

முதலிடம் சண்டிகருக்கு..
இதில் கொடுமையான விஷயம் என்ன என்றால் 3 வதாக வந்த இரு நகரங்கள்
கொல்கொத்தா, பெங்களூர்..
பெங்களூர் ஓகே..
கொல்கொத்தா.. தவறு....

வாழ்த்துக்கள் சென்னைக்கு....
வாழ்த்துங்கள்..சென்னைக்கு..

இதோ அந்த செய்தி

தூய்மையான நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

கருத்துக் கணிப்பில் தகவல்

இந்தியாவில் உள்ள தூய்மையான நகரங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் சென்னை உள்ளது. ஏ.சி.நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் முதலாவது இடத்தை சண்டிகரும், 2வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன.

லைபாய் சோப் நிறுவனம், இந்தியாவில் உள்ள 18 மாநிலத் தலைநகரங்களில், சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை செயல்படுத்தியது.
இந்நிறுவனம், நாட்டில் உள்ள தூய்மையான நகரங்கள் எவை? என்ற கருத்துக் கணிப்பை நடத்த திட்டமிட்டது. சுகாதாரம், தூய்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஏ.சி.நீல்சன் நிறுவனம் மூலம், கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களின் தலைநகரங்களில், தலா 300 பேர் என்ற அடிப்படையில், 4900 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண், பெண் இருபாலாரிடமும், இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது.
சுத்தமான தண்ணீர், குப்பை அகற்றும் முறை, சுத்தமான சாலை, மாசு இல்லாத காற்று, பொது இடங்களில் குப்பை தொட்டி, பொது கழிப்பிட வசதி, பசுமை மற்றும் மரம் நடுதல், சுகாதாரமான போக்குவரத்து, பொது இடங்களில் தூய்மை, கழிவுநீர் அகற்றும் வசதி, மாநகரை சுத்தமாக வைத்திருப்பதில் மாநகராட்சியின் பங்கு ஆகிய 11 அளவுகோல்களின் அடிப்படையில் தூய்மையான நகரம் எது என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.


கருத்துக் கணிப்பில், 144 புள்ளிகளை பெற்று சண்டிகர் முதல் இடத்தை பிடித்தது.
118 புள்ளிகளை பெற்று, சென்னை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பசுமை, மரம் நடுதல், சுத்தமான சாலைகள், குப்பை அகற்றும் முறைகள், பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் அமைத்தல் ஆகியவற்றில், சென்னை அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது.
தலா 108 புள்ளிகளை பெற்று, கொல்கொத்தா, பெங்களூர் நகரங்கள் 3வது இடத்தையும் பெற்றுள்ளன. தலா 99 புள்ளிகளை பெற்று டில்லியும், மும்பையும் 8வது இடத்தில் உள்ளன.
இந்த கருத்துக் கணிப்பு தொடர்பாக ஏ.சி.நீல்சன் நிறுவனத்தின் இணை இயக்குனர் விஜய் உதாசி கூறுகையில், "இந்த கருத்துக் கணிப்பு பாரபட்சமில்லாமல் நடத்தப்பட்டது. 11 அளவுகோல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது" என்றார்.

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

praveen
08-04-2007, 08:38 AM
நல்ல செய்தி தான் நண்பரே, இதற்கு காரணம் நிர்வாகமும், அதற்கு ஒத்துழைத்த மக்களுமே. முழு தமிழ்நாடும் இம்மாதிரி ஆக எவ்வளவு நாள் ஆகுமோ?.

virumaandi
08-04-2007, 09:08 AM
என்னுடைய வாழ்த்துக்களை சென்னைக்கு தெரிவிக்கிறேன்

ஓவியா
08-04-2007, 01:40 PM
ஆக சிங்கார சென்னைதான் இந்தியாவின்.. 2வது சுத்தமான நகரமாம்.


நினைக்கவே ஆச்சர்யம் தாங்கவில்லை, சரி படிப்பு முடிந்ததும் சென்னையிலே செட்டில் ஆகிவிடுகிறேன்.

தகவலுக்கு மிக்க நன்றி

தமிழ் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள்.