PDA

View Full Version : என் இதயமும்....பிச்சி
08-04-2007, 07:22 AM
ரேகைகளின் ஊடே செல்லுகிறது
இலைகளின் நரம்புகள்
முகத்தினில் படர்ந்த
உன் கூந்தல் ஓவியங்கள்
உன் எச்சத்திற்காக
வேண்டி நிற்கிறது
கால்கடுக்க, ஒரு முல்லைப் பூவும்
இரண்டு மைனாக்களும்..
தவறிப் போய் காணுகிறாய்
வீழ்கிறது இவைகளோடு
என் இதயமும்....

ஓவியன்
08-04-2007, 08:11 AM
சகோதரி கவியின் முழு அர்த்தமும் புரி படவில்லையென் மூளைக்கு என்று நினைக்கின்றேன். ஆனால் மன்றத்தின் திறமைசாலிகள் தகுந்த வந்து பின்னூட்டம் இடுவார்கள், அப்போது எனக்கும் நீங்கள் சொல்ல வந்தது தெளிவாக புரியும்.

crisho
08-04-2007, 11:55 AM
பிச்சியின்
படைப்புக்கள் அனைத்தும்
மணம் வீசக் கூடியவை
என நுகர்ந்தறிந்தேன்!

இம் மன்றப் பூங்கா மணக்கட்டும்
பிச்சியின் வாசனை...

வழமை போல்
இப் பாமரனுக்கு எட்டவில்லை
கருப்பொருள் இக் கவியில்!

அன்புரசிகன்
08-04-2007, 12:49 PM
இலகு தமிழில் விளக்கினால் நன்றாக இருக்கும்.

விகடன்
08-04-2007, 12:51 PM
தாம் கூறிய பாட்டின் பொருள் என்னவோ?

பிச்சி
08-04-2007, 01:40 PM
உன் முகத்தினில் படர்ந்திருக்கும்
முடிகள் இலைகளின் நரம்புகள் போல.
உன் கூந்தல் வரைந்த ஓவியங்கள் (கஷ்டமான சிக்கலான வாழ்க்கை)

உன்னைக் காணத் துடிக்கும்
பூக்களும் பறவைகளும் கூட
கால்கடுக்க நிற்கிறது.. (போற்றப்படும் தெய்வம் ஆகியால்)

நீ உமிழும் எச்சத்திற்க்காகக்கூட (முத்தம்)
பூவான முல்லையும், பறவைகளான மைனாக்களும்
காத்திருக்கிறது. (முல்லை = பெண், மைனா - ஆண் )

உன் பார்வை தவற நீ காணுகிறாய்
வீழ்ந்திடுகிறது இவைகள்
என் மனமும் கூட.. ( அன்பைக் கொட்டுகிறாய், உனக்கே அறியாமல். எனக்கு இதயம் இளககிறது )

அம்மா காணும் அந்த நொடிக்காக ஏங்குகிறது இக்குழந்தைகள்

கவிதையில் தப்பு இருந்தால் மன்னிச்சுக்கோங்க..

crisho
08-04-2007, 01:45 PM
நன்றி பிச்சி.... சூப்பர்

மேலும் மேலும் நறுமணமூட்டுங்கள் இம் மன்றத்தை உங்கள் கவிகளால்!!

பிச்சி
08-04-2007, 01:47 PM
நாணமிழந்து நன்றி சொல்லுகிறேன்

ஓவியா
08-04-2007, 01:53 PM
பிரபா நலமாமா???

கவிதையும் விமர்சனமும் மிகவும் அருமை.
தங்களுக்கு நல்ல எழுத்து வளம். ரசிக்கிறேன் ரசிகையே

இன்னும் அதிகம் எழுத ஆசிர்வாதங்கள்.


உங்கள் ரசிகை
ஓவியா

crisho
08-04-2007, 01:55 PM
நாணமிழந்து நன்றி சொல்லுகிறேன்

தாங்கள் நாணமிழந்தது எதனாலோ??:icon_blush: (confused)

ஓவியா
08-04-2007, 01:56 PM
தாங்கள் நாணமிழந்தது எதனாலோ??:icon_blush: (confused)

பெண் = நாணம்


:icon_dance: :209: :icon_dance: :209: :icon_dance:

பிச்சி
08-04-2007, 01:57 PM
நலம் அக்கா!
நீங்க எப்படி இருக்கீக?

நான் உங்கள் கவிதைக்கும் லூட்டிக்கும் ரசிகை.

தங்களுக்கு பரிசை எப்படி போகுது? எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

சீக்கிரமே இந்தியா வாங்க.

அன்பு தங்கை
பிரபா

விகடன்
08-04-2007, 01:57 PM
அருமையான வரிகள்.

பாருங்கள்.!!!
நீங்கள் பிரித்து கருத்தை சொன்ன பின்னர்தான் விளங்குகிறது.

உங்கள் புலமை வளர வாழ்த்துக்கள்

பிச்சி
08-04-2007, 02:00 PM
கிரிஸ்கோ அண்ணாவுக்கு பதில் கொடுத்தமைக்கு நன்றிக்கா

உங்களுக்காக நான் எழுதிய கவிதை ஞாபகம் இருக்கா/?இன்னொரு திரியில் போடுதேன்,

ஓவியா
08-04-2007, 02:04 PM
பரிசை இல்லை பரிட்சை

பரிட்சையா போகுது போகுது.....கிருஷணருக்குதான் தெரியும் ரிசால்ட்.

பிச்சி
08-04-2007, 02:08 PM
ஹஹை... நானும் புடிச்சேனே!

கிருஷணருக்குதான இல்லை.. கிருஷ்ணர்...

(கண்ணன் என் காதலன். அவன் பெயர் தப்பா சொல்லாமா?

பிச்சி
08-04-2007, 02:10 PM
மென்னிரு கரங்கள் கூப்பி
நன்றிகள் உடைத்தாக்குகிறாள் பிச்சி
ஜாவா அவர்களுக்கு..

ஓவியா
08-04-2007, 02:23 PM
ஹஹை... நானும் புடிச்சேனே!

கிருஷணருக்குதான இல்லை.. கிருஷ்ணர்...

(கண்ணன் என் காதலன். அவன் பெயர் தப்பா சொல்லாமா?

ஹி ஹி ஹி

நான் சுட்ட தோசையை திருப்பி போட்டு விட்டாயே!!!!!

கண்ணன் எந்தன் காதலன் :icon_dance:

பிச்சி
08-04-2007, 02:32 PM
அக்கா! இந்த விஷய்த்தில் மட்டும் போட்டியே வேண்டாம்/.

என்னோடு என்
இமைகளிலும்
சுமைகளிலும்
வேள்விழிகளிலும்
தாள் மனதிலும் கலந்தவன்

எனக்கொருவன் அவன்.
எனக்கு மட்டுமே ஒருவன் அவன்

குழல் நாதன்
நீல வர்ணன்
இறகுகளின் வேந்தன்..
நான் எழுதிடும் எழுத்துக்களின்
சொந்தக்காரன்

ஆருயிர் கண்ணன்......

ஓவியா
08-04-2007, 02:38 PM
அக்கா! இந்த விஷய்த்தில் மட்டும் போட்டியே வேண்டாம்/.

என்னோடு என்
இமைகளிலும்
சுமைகளிலும்
வேள்விழிகளிலும்
தாள் மனதிலும் கலந்தவன்

எனக்கொருவன் அவன்.
எனக்கு மட்டுமே ஒருவன் அவன்

குழல் நாதன்
நீல வர்ணன்
இறகுகளின் வேந்தன்..
நான் எழுதிடும் எழுத்துக்களின்
சொந்தக்காரன்

ஆருயிர் கண்ணன்......


அடடே சைக்கள் கேபில் போட்ட கவிதை சூப்பர்லே.
:verkleidung021:

ஓவியா
08-04-2007, 02:40 PM
அக்கா! இந்த விஷய்த்தில் மட்டும் போட்டியே வேண்டாம்/.

குழல் நாதன்
நீல வர்ணன்
இறகுகளின் வேந்தன்..
நான் எழுதிடும் எழுத்துக்களின்
சொந்தக்காரன்

ஆருயிர் கண்ணன்......

சரிமா விட்டு கொடுப்பது என் முதல் நற்குணம்.
(மனசாட்சி: சொன்னா பத்தாதுலே, உருப்படியா ஒரு தடவையாவது இதை ஃபிரக்டீகலா செய்யுனும்மிலே)

கண்ணனை நீங்களே வச்சுகுங்க, நான் பழனி'க்கு போறேன்.

பழம் நீ யப்பா ஞான பழம் நீ யப்பா....தமிழ் ஞான பழம் நீ யப்பா

கந்தா, கதிவேலா, சண்முகா, கார்திகை வாசா.....யப்பா யப்பா இங்கண நமலே கொஞ்சம் பாரப்பா,

பிச்சி
08-04-2007, 02:41 PM
ஆ!..லார்ட் முருகன் மாமாவுக்கு ஏற்கனவே ரெண்டு பேரு இருக்காங்க.... ஹி ஹி...

ஓவியா
08-04-2007, 02:48 PM
ஆ!..லார்ட் முருகன் மாமாவுக்கு ஏற்கனவே ரெண்டு பேரு இருக்காங்க.... ஹி ஹி...

அப்ப கிரிஸ்க்கு 18ட்டு ஆயிரமாம்.....ஹி ஹி ஹி


இப்ப என்னா பன்னுவீங்க
ஆ அச்சுக்கு ஆ ஆ புச்சுக்கு
இப்ப என்னா பன்னுவீங்க
இப்ப என்னா பன்னுவீங்க :icon_dance: :icon_dance:

பிச்சி
08-04-2007, 02:55 PM
:medium-smiley-100:

கண்ணா!
நினைவுகளினால் உனக்கு ஆயிரம்
எனக்கு நீ மட்டுமே வயிரம்.

கவலை கொள்ளாதே பிச்சி
கண்ணன் உனக்கே !

இளசு
08-04-2007, 08:48 PM
தேர்ந்த சொற்களும் -உள்ளார்ந்த பொருளும்
பிச்சியின் சிறப்பம்சங்கள்..

இக்கவிதையிலும் அவை ஜொலிக்கின்றன..

பாராட்டுகள் பிச்சி!

poo
09-04-2007, 08:08 AM
காட்சிகளில் வலி{மை}யை மறைத்த அழகான கவிதை.

வாழ்த்துக்கள் பிச்சி.

அரசன்
12-04-2007, 02:10 PM
கவிதையை படிக்கும்போது பொருள் விளங்கவில்லை. அதன் பொருள் கூறிய பின் கவிதையை ரசித்தேன். பிறகு ருசித்தேன். கவி மலர்கள் மலர வாழ்த்துக்கள்

பிச்சி
19-04-2007, 11:26 AM
எல்லா அண்ணாக்களுக்கு அக்காக்களுக்கும் பிச்சியின் நன்றி...

slgirl
19-04-2007, 11:30 AM
கவிதைகள் பிச்சி பூவினை போல வாசம் வீசுகின்றது நுகர்கின்றேன் நான்