PDA

View Full Version : நானும் ஒரு கதைச்சொல்லி - எனக்கு தாயுமானவனபரஞ்சோதி
08-04-2007, 07:27 AM
நானும் ஒரு கதைச்சொல்லி - எனக்கு தாயுமானவன் என் தம்பி (3ம் பாகம்)

கிரிக்கெட் போட்டிகள் மற்றும் அலுவலக வேலைகள் அதிகரித்து விட்டதால் இத்தொடரை உடனே தொடர முடியாமல் போய் விட்டது, என் தோல் உரிந்ததா என்பதை அறிய காத்திருந்த அனைவரும் மன்னிக்கவும்.

டேய் படவா ராஸ்கல், வாடா இங்கே

நான் அம்மாவின் அதிரடியான குரலை கேட்டு பயந்து நடுங்கி, வழக்கம் போல் எங்க ஆச்சியை துணைக்கு அழைக்கலாமுன்னு திரும்பி பார்க்க, ஆச்சியோ மூஞ்சியை வேறு பக்கம் திருப்பிக்கிட்டாங்க.

ஏன் தெரியுமா? கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஆச்சி வெத்திலை இடிச்சி கொடுக்க சொன்னாங்க, அதுக்கு நான் வேற வேலை இல்லைன்னு கடுப்பா சொன்னதுக்காக ஆச்சி கொடுத்த அதிரடி பதிலடி தான் அது.

நான் நடுநடுங்கியப்படி (ஏற்கனவே அந்த தடியன்கிட்ட நல்ல அடி வாங்கியிருந்தேன்) வர, என்னை பார்த்து அந்த தடிப்பையன் அம்மா! என்னை அடிச்சது சுரேஷ் இல்லை, ரமேஷ் தான் அடிச்சான் என்றான்.

எங்க அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியலை, டேய் படவா? வெளியே வா என்று தம்பியை அழைக்க, அதுவரை கதவுக்கு பின்னால் ஒளிந்திருந்த என் தம்பி வெளியே வர, அடுத்த நிமிடம் அந்த அத்தை என் அம்மாவின் கையில் இருந்த கம்பை வாங்கி வெளு வெளு என்று வெளுத்துடாங்க.

யாரை, அவங்க பையனை ஏண்டா, தடிமாடு, நரம்பன் மாதிரி இருக்கான், இவன்கிட்டயா அடி வாங்கி வந்தே, அதை வேற என்கிட்ட சொல்லுறியா, வெட்கமாக இல்லை என்று சொல்லி அடிச்சிகிட்டே அழைச்சிட்டு போயிட்டாங்க, அன்று முதல் என் தம்பின்னா தெருவில் என் வயது பசங்களுக்கும் பயம் தான், அவன் இருக்கும் போது மட்டும் யாரும் என்னை அடிக்க மாட்டாங்க :) .

சில சமயம் யாராவது அடிக்க கை ஓங்கினால் உடனே டேய், என் தம்பிக்கிட்ட சொல்லிடுவேன்னா போதும், அடிக்க ஓங்கிய கை என்னை அணைச்சிடும். இது போன்ற காட்சிகளை டாம் அண்ட் ஜெரி கார்ட்டூனில் பார்க்கலாம், இப்போ அதை பார்த்தாலும் என் சின்ன வயசு வீரம் தான் நினைவுக்கு வரும்.

ஆனா பாருங்க, என்னுடைய வீரம் என் தம்பிக்கு நல்லா தெரிந்தும் என்னைக் கண்டால் பயப்படுவான், அது என்னா என்று தெரியலை, ஒருவேளை பாவம், நாமாவது அண்ணன்கிட்ட பயப்படுகிற மாதிரி நடிப்போம் என்ற நல்ல எண்ணமா என்று தெரியலை.

என் தம்பி குணத்தில் கர்ணனை மிஞ்சிடுவார், கையில் என்ன இருந்தாலும் யார் கேட்டாலும் கொடுத்திடுவான் (தயவு செய்து யாரும் அவனது தற்போதைய முகவரி கேட்க வேண்டாம், தெரிஞ்சவங்களும் அங்கே போக வேண்டாம் J ), எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க இவனுக்கு இவங்க அப்பா புத்தி தான் இருக்குது, இப்போ ஒரு லட்சம் ரூபாய் கையில் கொடுத்து, பஜார் வரை போயிட்டு வா என்றால், திரும்பி வரும் போது 10,000 ரூபாயாவது கடன் வைச்சிட்டு வருவான் என்று கேலியாக சொல்வாங்க.

நான் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை சமையல் அறையை உருட்டுவது தான், தினமும் யார் வீட்டிலிருந்தாவது பண்டம், பலகாரங்கள் வரும். இருக்கிறதை முடிஞ்ச வரை சாப்பிட்டு விடுவேன், அம்மா சொல்வாங்க டேய், தம்பிக்கும் கொஞ்சம் வையடா நானும் பாவமுன்னு கொஞ்சம் வைச்சிடுவேன்.

அப்புறம் தம்பி வந்த பின்னர் அம்மா அவன்கிட்ட சமையல் அறையில் இருக்கும் பண்டத்தை சாப்பிடு என்று சொல்லுவாங்க, நான் பாடம் படிக்கிறதை விட்டு விட்டு அவன் சாப்பிடுவதை பரக்க பரக்க பார்ப்பேன். தம்பி உடனே கேட்பான் அண்ணா! அம்மா உனக்கு கொடுக்கலையா?

நான் ஆமாம், இல்லை என்று வாயால் சொல்லாம, அவனை குழப்ப, தலையை ஒரு பக்கமாக சாய்த்து மேலும் கீழும் மெதுவாக ஆட்டுவேன். உடனே தம்பி சரி அண்ணா! இந்தா உனக்கு பாதி, எனக்கு பாதி அவ்வளவு தான் அம்மாவோ, ஆச்சியோ பார்க்கும் முன்பு அந்த பாதியையும் லபக்கிடுவேன். சரியான திருட்டுப்பூனை என்று எனக்கு அம்மா பெயர் வைத்திருந்தாங்க.

சின்ன வயசிலே தம்பிக்கு அடிக்கடி உடம்புக்கு சரியில்லாம வந்திடும், உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடுவோம். அவன் அசராமல் இருப்பான், டாக்டர் வந்தவுடன் கையை நீட்டுவான், ஊசிப் போட, நான் அதை பார்க்க பயந்து கண்ணை மூடிவேன், அவன் சிரிச்சிக்கிட்டே வருவான்.

ஒரு சமயம் தொடர்ந்து 6 மாதங்கள் தினமும் ஊசி போடணும் என்ற நிலை எல்லாம் இருந்தது. அம்மா அடிக்கடி சொல்லுவாங்க தம்பிக்காக ஆஸ்பத்திரிக்கு செலவு செய்த பணத்தை வைத்து ஒரு வீடே கட்டலாம்

அடிக்கடி உடம்புக்கு சரியில்லாமல் போவதால் அவனால் விளையாடி ஈடுப்பட முடியவில்லை, அப்படியே விளையாடினால் இரவில் 10 ரூபாய் மருத்துவமனைக்கு மொய் எழுதணும்.

அப்போ ஊரில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் என் தம்பியை எதிரணிக்கு அனுப்பிடுவேன், 90% என் அணி தான் வெல்லும், அப்போ பரிசோடு வீட்டுக்கு வருவேன், தம்பியை பார்க்க பாவமாக இருக்கும். இருந்தாலும் நான் அப்படி செய்யக் காரணம் என் அணி தோற்றாலும், வென்றாலும் ஒரு பரிசு கட்டாயம் எங்க வீட்டுக்கு வந்திடும் என்ற எண்ணம் தான், இருந்தாலும் இது என் தம்பிக்கு மன வருத்தம் கொடுத்திருக்கும்.

எனக்கு சுள்னுன்னு எதுக்கெடுத்தாலும் கோபம் வரும், அப்போ என் தம்பி தான் அடி வாங்குவான், சில நேரம் என் அடி தாங்க முடியாம, மவனே! உன்னை வெட்டுறேன்டா என்று அரிவாளை தூக்கிட்டு வர, நான் ஓடி பூஜை அறையின் கதவை பூட்டி உள்ளே இருந்திடுவேன், அவன் வாசலில் அரிவாளோடு உட்கார்ந்திடுவான். எங்க அம்மா தோட்டத்தில் தண்ணிர் பாய்ச்சு சில மணி நேரம் கழித்து வந்து தான் என்னை காப்பாற்றுவாங்க. அதுவரை உள்ளே புழுங்கி, ஒரு வழியாகி விடுவேன்.

நானும் தம்பியும் சண்டை போட்டால் அம்மா அன்று இரவில் சொல்லும் கதைகள் எல்லாம் அண்ணன் தம்பி ஒற்றுமையை போற்றும் கதைகளாக இருக்கும்.

பொதுவாக சொல்லும் கதைகளில் எல்லாம் அண்ணன் தான் வில்லனாக இருப்பார் (எ.கா. அலிபாபா), எப்படி என்றால் அண்ணன் குடும்பம் வசதியாக இருக்கும், தம்பி குடும்பம் கஷ்டப்படும். இதை சொல்லும் போது எல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கும், ஏன் எல்லாக் கதைகளிலும் அண்ணன் வில்லனாக இருக்கிறார், தம்பி மட்டும் நல்லவனாக இருக்கார்ன்னு நினைப்பேன். எப்போவாவது தம்பி வில்லனாக கதைகள் படித்தால் உடனே அம்மாவுக்கு நான் அந்த கதையை சொல்லி மனதை தேத்திக்குவேன்.

என் தம்பியோ எதையும் மனதில் வைத்திருக்காமல் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பான், சென்னையில் அவன் வேலை செய்த போது, எனக்கு வேலை இல்லாமல் இருந்த காலத்தில் அவன் எனக்கு அம்மா மாதிரி தினமும் சுடச் சுட சாப்பாடு சமைத்து போடுவான், நான் சாப்பிடுவதை உட்கார்ந்து ரசிப்பான். இன்னும் சாப்பிடு அண்ணா என்று பாசமாக சொல்வான். அதை இன்று நினைத்தால் கூட ஆனந்தக் கண்ணீர் வரும்.

இப்போ கூட அவனது சாப்பாட்டை எனக்கு பகிர்ந்து கொடுத்து என் வயிற்று பசியை போக்குகிறான். என் மீது காட்டும் அன்பை விட பல மடங்கு என் மகள் மீது காட்டுகிறான், சக்தி உண்மையில் மிக மிக கொடுத்து வைத்தவள்.

என் தம்பியின் பெருமைகளை மீண்டும் வேறு இடங்களில் சொல்கிறேன்.

இப்போ வேறு ஒரு சம்பவம்,

எங்க அம்மாவை பார்த்து என்னுடைய நண்பர்கள் எல்லோரும் சுரேஷ்! உங்க அம்மா டீச்சரா? என்று தான் சொல்வாங்க. அந்த மாதிரியான தோரணை உண்டு, நன்றாக பேசுவாங்க, அடிக்கடி அறிவுரை சொல்வாங்க. எங்க தெருவில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் மாலை நேரத்தில் எங்க வீட்டு வராண்டாவில் தான் இருந்து படிப்பாங்க, தெரு விளக்கு வெளிச்சமும் அதிகமாக இருக்கும். எங்க ஆச்சியின் கூட்டாளிகள், பெரியவங்க எல்லாம் சொந்தக்கதை, சோகக்கதை பேசுவாங்க. நாங்க படிப்போம், இல்லை படிக்கிற சாக்கில் அவங்க கதைகளை கேட்போம். எங்க அம்மா எல்லோரும் படிக்கிற வரை தேவையற்ற கதைகள் பேசுவதை தடை செய்திடுவாங்க, அது எங்க ஆச்சிக்கு கடுப்பாக இருக்கும்.

எங்க அம்மா சின்ன வயசில யார் எதை கொடுத்தாலும் வாங்ககூடாது, கீழே பணமே கிடந்தாலும் எடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருந்தாங்க, அதனால யார் என்ன கொடுத்தாலும் வாங்க மாட்டேன்.

அப்படி தான் ஒருமுறை இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாட பள்ளி மாணவர்கள் எல்லோரும் கூடியிருந்தோம். கிராமத்து காங்கிரஸ் தலைவரான எங்க சித்தப்பா கொடி ஏற்றி, எல்லோருக்கும் லட்டு கொடுத்தாங்க. நானும் வரிசையில் நின்றேன், எனக்கு லட்டு கொடுக்க, நான் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டேன். உடனே டீச்சர்கள் எல்லோரும் வந்து என்னிடம் வாங்கிகப்பா என்று சொன்னாங்க, நான் தெலுங்கில் மாட்டேன், அம்மா வாங்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கான்னு என்று சொல்ல, நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் விழிக்க, கடைசியில் ஒரு டீச்சர் எங்க வீட்டிற்கே என்னை அழைத்து வந்து, விபரத்தை சொல்லி, லட்டு வாங்க வச்சாங்க.

கொஞ்ச நாளிலேயே அவ்வளவு நல்லப்பிள்ளையாக இருந்த நான், விதி கட்டம் கட்டி சதி செய்ய, எங்க அம்மாவிடம் செம அடி வாங்கிய சம்பவம் நடந்தது. ஆஹா! இதுக்கும் நிறைய பேர் காத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

தொடரும் .....

இளசு
08-04-2007, 07:56 AM
அன்புள்ள பரம்ஸ்,

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஓர் இலக்கியம் படைக்கத்தக்க
சம்பவங்கள், எண்ண ஓட்டம் உண்டு..

அதைச் சொல்லும் விதத்தில் ஒரு சிலர்தான் - மனதுக்கும் எழுத்துக்கும் உள்ள இடைவெளியைத் தாண்டி வெல்கிறார்கள்..

நம் மன்றத்தில் பாரதி, மயூரேசன், ஆதவன்...நீங்கள்..

நினைக்கவே பூரிப்பாய் இருக்கிறது -

தாயுமான தம்பி அடைந்த பரம்ஸூக்கு அண்ணனாக அமைந்ததில்!

தோற்றம், வீரம், நோய் தாக்கும் உடற்கூறு, தயாளம், பாசம், அவ்வப்போது கோபம் - ஒரு நாயகனும் ஆவார் தம்பி!
அவருக்கு இன்னொரு அண்ணன் ரசிகனாகி விட்டார் எனச் சொல்லுங்கள் பரம்ஸ்.. (எனக்கு முகவரி இப்போதைக்கு வேண்டாம்...ஹ்ஹ்ஹ்ஹா!)

பரஞ்சோதி
09-04-2007, 08:05 AM
நன்றி அண்ணா.

தம்பிக்கு மட்டும் உங்களைப் பற்றி சொல்லிட்டா போதும், உடனே உறவாடி விடுவார். அப்புறம் நீங்க பரம்ஸை மறந்திடுவீங்க :)

ஓவியா
25-04-2007, 12:48 AM
அண்ணா, இன்று தான் பாகம் இரண்டை படித்தேன் மிகவும் சுவாராஸ்யமாக இருகின்றது. உங்க அண்ணண் தம்பி பாசம் நீண்டு நீடூழி வாழ்கவே.எங்கம்மாவும் இதே மாதிறிதான், யார் எது கொடுத்தாலும் வாங்கக்கூடாது, வெள்ளிகிழமை வரை 2 ஜோடி பள்ளி சீருடையும் சுத்தமாக இருக்கனும், காலனியும் கொஞ்சம் தான் அழுக்காக இருக்கனும். கொடுக்கும் காசையும் கொஞ்சம் சேமிக்கனும், யாரிடமும் பென்சில், இரப்பர் இரவல் வங்கக்கூடாது. பள்ளி முடிந்ததும் 10நிமிடதில் வீட்டில் இரூக்கனும். சாப்பிடும் போது ஒரு பருக்கை சாதம்கூட கீலே விழக்கூடாது. விழுந்தாலும் எடுக்கக்கூடாது. நல்ல பண்புகளை நிரைய கற்றுக்கொடுத்தார்கள்.

அதிகமாக சிரிக்கக்கூடாது. பகலில் தூங்ககூடாது. ஒரே ஹிட்லர் தான் எங்கம்மா.:mittelgr124:

pradeepkt
25-04-2007, 07:14 AM
அண்ணா எப்படித்தான் இதை விட்டேனோ தெரியவில்லை... ஓவியாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்...

உங்கள் வாழ்வின் நிகழ்ச்சிகள் அனைத்துமே எங்களை அந்தக் காலத்திற்கே கொண்டு செல்கின்றன. இன்றளவும் அம்மா மீதும் தம்பி மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பாசமும் மதிப்பும் காலமுள்ளளவும் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.

ஆமா, இந்த முறை தப்பிச்சிட்டீங்க... அடுத்த தடவை என்ன செய்யிறதா ஐடியா???

மனோஜ்
25-04-2007, 06:13 PM
கதை தற்பொழது நடப்பது பொன்று அழகாக எழுதியது அருமை பரம்ஸ் அண்ணா தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்

பென்ஸ்
25-04-2007, 06:53 PM
பரம்ஸ்..
இதை நான் என் சுயசரிதைஎழுதினால் எடுத்து கொள்ளலாம்...
பெயர் மாற்றம் ஒன்றை தவிர சம்பவங்களில் மாற்றம் இருந்தது போல் தெரியலை...

பரம்ஸ்...
எழுத்தில் ஒரு குழந்தைக்கு கதை சொல்லுவது போல் எழுதி இருப்பது... அருமை...

சக்தி நலமா....

அன்புரசிகன்
25-04-2007, 07:28 PM
கொடுத்துவைத்தவர் நீங்கள். இது போல 1000 இல் ஒருவருக்குத்தான் அமையும். உங்களுக்கு அமைந்துள்ளது. நீங்கள் ஆயிரத்தில் ஓருவரையா..

gragavan
25-04-2007, 07:43 PM
நல்லாயிருக்கு பரம்ஸ் தம்பி. விளையாட்டுக்காரன்னா விளையாட்டுக்காரந்தான். இப்பிடியா. :-)

பாரதி
25-04-2007, 08:17 PM
உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கும் ஒரு பரந்த மனப்பான்மையும், தைரியமும் வேண்டும். அதை உங்களிடம் காண்கிறேன் பரஞ்சோதி! தொடருங்கள்... படிக்க காத்திருக்கிறோம்.

பரஞ்சோதி
26-04-2007, 08:33 AM
அண்ணா, இன்று தான் பாகம் இரண்டை படித்தேன் மிகவும் சுவாராஸ்யமாக இருகின்றது. உங்க அண்ணண் தம்பி பாசம் நீண்டு நீடூழி வாழ்கவே.எங்கம்மாவும் இதே மாதிறிதான், யார் எது கொடுத்தாலும் வாங்கக்கூடாது, வெள்ளிகிழமை வரை 2 ஜோடி பள்ளி சீருடையும் சுத்தமாக இருக்கனும், காலனியும் கொஞ்சம் தான் அழுக்காக இருக்கனும். கொடுக்கும் காசையும் கொஞ்சம் சேமிக்கனும், யாரிடமும் பென்சில், இரப்பர் இரவல் வங்கக்கூடாது. பள்ளி முடிந்ததும் 10நிமிடதில் வீட்டில் இரூக்கனும். சாப்பிடும் போது ஒரு பருக்கை சாதம்கூட கீலே விழக்கூடாது. விழுந்தாலும் எடுக்கக்கூடாது. நல்ல பண்புகளை நிரைய கற்றுக்கொடுத்தார்கள்.

அதிகமாக சிரிக்கக்கூடாது. பகலில் தூங்ககூடாது. ஒரே ஹிட்லர் தான் எங்கம்மா.:mittelgr124:
ஆஹா!

சகோதரி, அம்மாவை இப்படி சொல்லியிருக்கீங்க, இருங்க இருங்க போட்டு கொடுக்கிறேன்.

எங்க அம்மா நான் 6வது படிக்கும் வரை ஹிட்லர் மாதிரி தான், அதன் பின்னர் காந்தி மாதிரி ஆகிட்டாங்க. எங்களை திருத்த அவங்க உண்ணாவிரதம் இருந்த நாட்கள் எத்தனையோ உண்டு.

ஹிட்லருக்கு பயப்படாத நான் காந்திக்கு அடிமை ஆகிட்டேன் :)

பரஞ்சோதி
26-04-2007, 08:34 AM
அண்ணா எப்படித்தான் இதை விட்டேனோ தெரியவில்லை... ஓவியாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்...

உங்கள் வாழ்வின் நிகழ்ச்சிகள் அனைத்துமே எங்களை அந்தக் காலத்திற்கே கொண்டு செல்கின்றன. இன்றளவும் அம்மா மீதும் தம்பி மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பாசமும் மதிப்பும் காலமுள்ளளவும் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.

ஆமா, இந்த முறை தப்பிச்சிட்டீங்க... அடுத்த தடவை என்ன செய்யிறதா ஐடியா???

நன்றி தம்பி.

அடுத்த முறை விதி சதி செய்ததை விரைவில் சொல்கிறேன். என் கதை கேட்டு கண்ணீர் விடாமல் இருந்தால் சரி :)

பரஞ்சோதி
26-04-2007, 08:35 AM
கதை தற்பொழது நடப்பது பொன்று அழகாக எழுதியது அருமை பரம்ஸ் அண்ணா தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி தம்பி, சொல்ல ஆயிரக்கணக்கில் சம்பவங்கள் இருக்குது. நிறைய கசப்பானவை, எப்படி சொல்லப் போகிறேன் என்று தெரியலை.

பரஞ்சோதி
26-04-2007, 08:37 AM
பரம்ஸ்..
இதை நான் என் சுயசரிதைஎழுதினால் எடுத்து கொள்ளலாம்...
பெயர் மாற்றம் ஒன்றை தவிர சம்பவங்களில் மாற்றம் இருந்தது போல் தெரியலை...

பரம்ஸ்...
எழுத்தில் ஒரு குழந்தைக்கு கதை சொல்லுவது போல் எழுதி இருப்பது... அருமை...

சக்தி நலமா....

ஆஹா! நம்ம இருவரின் கதையும் ஒத்து போகுதா?

அதான் நேரில் பேசும் போது சொன்னீங்களா? அடுத்த முறை நிறைய பேச நல்ல வாய்ப்பு கிடைக்கும், ஆகஸ்ட் மாதம் எங்கேயும் போயிடாதீங்கப்பூ :)

பரஞ்சோதி
26-04-2007, 08:38 AM
கொடுத்துவைத்தவர் நீங்கள். இது போல 1000 இல் ஒருவருக்குத்தான் அமையும். உங்களுக்கு அமைந்துள்ளது. நீங்கள் ஆயிரத்தில் ஓருவரையா..

நன்றி ரசிகரே!

நான் உண்மையில் கொடுத்து வைத்தவன் தான், யாருடைய புண்ணியமோ தெரியலை, எனக்கு எல்லாமே நல்லதாகவே நடக்குது, இன்னும் நடக்கும்.

- நம்பிக்கையோடு

பரஞ்சோதி
26-04-2007, 08:39 AM
நல்லாயிருக்கு பரம்ஸ் தம்பி. விளையாட்டுக்காரன்னா விளையாட்டுக்காரந்தான். இப்பிடியா. :-)

அண்ணா, அதை ஏன் கேட்கிறீங்க.

நம்ம திருவிளையாடல் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா, நிக்கவே நிக்காது. அத்தனை இருக்குதுல்ல.

பரஞ்சோதி
26-04-2007, 08:40 AM
உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கும் ஒரு பரந்த மனப்பான்மையும், தைரியமும் வேண்டும். அதை உங்களிடம் காண்கிறேன் பரஞ்சோதி! தொடருங்கள்... படிக்க காத்திருக்கிறோம்.

நன்றி அண்ணா.

இன்னும் இன்னும் நிறைய இருக்குது, நீங்க வந்து சென்ற அருஞ்சுனை அய்யனார் கோவில் கதை கூட இருக்குதுல்ல :)

ஓவியா
28-04-2007, 02:08 AM
ஆஹா!

சகோதரி, அம்மாவை இப்படி சொல்லியிருக்கீங்க, இருங்க இருங்க போட்டு கொடுக்கிறேன்.

எங்க அம்மா நான் 6வது படிக்கும் வரை ஹிட்லர் மாதிரி தான், அதன் பின்னர் காந்தி மாதிரி ஆகிட்டாங்க. எங்களை திருத்த அவங்க உண்ணாவிரதம் இருந்த நாட்கள் எத்தனையோ உண்டு.

ஹிட்லருக்கு பயப்படாத நான் காந்திக்கு அடிமை ஆகிட்டேன் :)

வாண அண்ண :1:
வாண அண்ண :1:
வாண அண்ண :1:
வாண அண்ண :1:

Gobalan
28-04-2007, 04:07 PM
சுயசறிதை எழுதுவது மிக கடினம். அதற்க்கு எழ்த்தாற்றல் தவிற மநோதைரியம் வேண்டும். உங்களுக்கு அது இருப்பது இந்த பதிப்புகளில் தெறிகிறது. தொடருங்கள், உங்கள் கதையை, நன்றி, கோபாலன்.

பரஞ்சோதி
29-04-2007, 08:14 AM
நன்றி கோபாலன்.

தொடர்ந்து பதிக்கிறேன், நீங்களும் உங்கள் படைப்புகளை கொடுங்கள்.