PDA

View Full Version : ஹரி பொட்டர் கடைசிப் புத்தகம்



மயூ
07-04-2007, 12:46 PM
http://bp2.blogger.com/_cXy91K5_Avs/RhePUAm5GWI/AAAAAAAAACc/UaKf9bAPiro/s400/hp7usfull.jpg (http://bp2.blogger.com/_cXy91K5_Avs/RhePUAm5GWI/AAAAAAAAACc/UaKf9bAPiro/s1600-h/hp7usfull.jpg)


ஹரி பொட்டர் தொடரில் கடைசியும் ஏழாவதுமான ஹரி பொட்டர் அன்ட் டெத்லி ஹலோவ்ஸ் வரும் ஜூலை மாதத்தில் வெளி வர உள்ளமை அனைவரும் அறிந்ததே. இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை இணைத்துள்ளேன் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தில் ஹரி கொலை செய்யப்படுவார் என்று பலர் பேசிக்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ரெளலிங் தான் இந்தக் ஹரி பொட்டர் தொடரை இதற்கு மேல் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லியுள்ளார். அத்துடன் இக் கதையை எதிர்காலத்தில் வேறு யாரும் தொடராமல் இருக்க ஹரியின் பாத்திரத்தைக் கொலை செய்வது அவசியம் ஆகின்றது.

http://bp2.blogger.com/_cXy91K5_Avs/RhePGAm5GTI/AAAAAAAAACE/7bZH2fLufSU/s400/hp7ukadult.jpg (http://bp2.blogger.com/_cXy91K5_Avs/RhePGAm5GTI/AAAAAAAAACE/7bZH2fLufSU/s1600-h/hp7ukadult.jpg)

ரெளலிங் மேலும் கூறுகையில் இந்தக் கதையின் கடைசிச் சொல்லு Scar என்று முடியும் என்பதாகும். அதாவது ஹரியின் நெற்றியிலே இருக்கும் வடுவைக் குறிப்பிடுவதாக இருக்குமோ என்று பலர் எண்ணுகின்றனர். எது எதுவாயினும் என்னையும் சேர்த்து உலகெங்குமுள்ள ஹரி இரசிகர்கள் ஹரி இறப்பதை விரும்ப மாட்டார்கள்.

இது இப்படி இருக்க கதையின் வில்லனான வால்டமோட்டின் உயிருடன் ஹரியின் உயர் கலப்பதாகக் கதை முடியும் என்று இன்னுமொரு பக்கம் சில விசர் சனங்கள் கதைத்துத் திரிகின்றது!!!!

நீங்களும் ஹரியிற்காக இறைவனை வேண்டுங்கள்.!!!!!!
http://bp1.blogger.com/_cXy91K5_Avs/RhePPwm5GVI/AAAAAAAAACU/mPmXrWBWhwY/s400/hp7usfront.jpg (http://bp1.blogger.com/_cXy91K5_Avs/RhePPwm5GVI/AAAAAAAAACU/mPmXrWBWhwY/s1600-h/hp7usfront.jpg)
http://bp3.blogger.com/_cXy91K5_Avs/RhePKQm5GUI/AAAAAAAAACM/q2d3EtzN4Zw/s400/hp7ukchild.jpg (http://bp3.blogger.com/_cXy91K5_Avs/RhePKQm5GUI/AAAAAAAAACM/q2d3EtzN4Zw/s1600-h/hp7ukchild.jpg)

ஓவியன்
07-04-2007, 12:58 PM
மயூரேசா அட்டைப் படம் எளிமையாகவும் அழகாகவும் உள்ளது.

பி.கு - ஹரி பொட்டர் இறக்க மாட்டாரப்பா!
நான் அந்த ஆச்சியோடக் கதைச்சனான் (அது தாங்க ரெளலிங்). ஏதாவது மயூரேசனுக்கு அழுகை வார மாதிரி எழுதினா பெரிய பிரச்சினை வருமெண்டு வெருட்டினான். ஆச்சி பயந்து போனா - அப்படி எழுத மாட்டெனெண்டு சொன்னவா!.

மயூ
07-04-2007, 01:00 PM
முதல் ஆறு புத்தகங்களுக்கு படம் கீறியவரே இதற்கும் கீறியுள்ளார்...
என்ன நடக்குதெண்டு பார்ப்பம் நன்றி ஓவியரே!

ஓவியன்
07-04-2007, 01:07 PM
முதல் ஆறு புத்தகங்களுக்கு படம் கீறியவரே இதற்கும் கீறியுள்ளார்...!
ஆமாம் ஒரே சாயல் இருக்குது, எனக்கு 5 வது புத்தகத்தின்ர(Order of Phoenix ) படம் தான் பிடிக்கலை. கதைக்கு ஏற்ற மாதிரியென்றாலும் எனக்குப் பிடிக்கலை.

மயூ
07-04-2007, 01:09 PM
ஆமாம் ஒரே சாயல் இருக்குது, எனக்கு 5 வது புத்தகத்தின்ர(Order of Phoenix ) படம் தான் பிடிக்கலை. கதைக்கு ஏற்ற மாதிரியென்றாலும் எனக்குப் பிடிக்கலை.
உண்மையைச் சொல்லுறதெண்டால் பீனிக்ஸ் பறவைக்கும் அந்த இரகசிய குழுவிற்கும் (Order of Phoenix) எந்த சம்பந்தமும் இல்லாமல் எதற்கு அந்தப் படத்தைக் கீறினார்கள் என்று தெரியவில்லை!!!!

ஓவியன்
07-04-2007, 01:17 PM
அது தானே - சில வேளை கதை முழுவதுமாக முடிவடைய முன்னர் பெயரை மட்டும் வைத்துக் கீறி இருப்பார்கள் போல!

மயூ
07-04-2007, 01:19 PM
அப்பிடித்தான் ஏதாவது நடந்திருக்கோணும்!!!!!!!

மயூ
07-04-2007, 04:04 PM
ஹாரி சாக மாட்டான். வால்டமார்ட்டுடனான போரில் யாரேனும் ஒருவர் பிழைப்பார் என்ற ப்ராபஸியை மறந்துவிட்டீர்களா?

என் ஊகம்:

ஹாரி வால்டமார்ட்டை வீழ்த்தி, பிறகு மக்கிள்ஸோடு மக்கிளாக முடிவு செய்துவிடுவான்.

the only memories of his wizardhood id his scar என்று முடியும் :-))

எனது வலைப்பதிவில் ஒருத்தர் இட்ட பதில் இது!!!

மயூ
07-04-2007, 04:06 PM
ஆனாலும் பிராபசியில் ஹரி வாழும் போது வால்டமோட் வாழ முடியாது அதே போல வால்ட மோட் வாழும் போது ஹரி வாழ முடியாது என்றல்லவா இருந்தது... அப்போ இருவரும் மடிவதாகக் கூட கதை முடியலாம் அல்லவா????

ஓவியன்
08-04-2007, 03:55 AM
ஆனாலும் பிராபசியில் ஹரி வாழும் போது வால்டமோட் வாழ முடியாது அதே போல வால்ட மோட் வாழும் போது ஹரி வாழ முடியாது என்றல்லவா இருந்தது... அப்போ இருவரும் மடிவதாகக் கூட கதை முடியலாம் அல்லவா????

உண்மைதான் ஆனால் ஹரியினை வைத்து இந்தக் கதையினைத் தொடரக் கூடாது என்பது தானே ரெளலிங்கின் பிரச்சினை. அதற்கு ஹரி மடியத்தான் வேண்டுமென்பதல்ல, அதற்கு வேறு விதமான வழிகளைக் கூட அவர் கையாளலாம். சிறுவர்களை மையப் படுத்தி படைக்கப் படும் கதையின் நாயகன் மடிவதாக ரெளலிங் முடிக்க மாட்டாரென நம்புகின்றேன்.

மயூ
08-04-2007, 07:58 AM
பார்ப்போம் என்னத்தை செய்து முடிக்கின்றார்!!!
ஆனாலும் ஒன்று ரௌலிங் எதிர்வு கூறல்களுக்கு அப்பாற் பட்டவர்!!! யாரும் எதிர்வுகூறியமாதிரி இது வரை வந்த புத்தகங்களில் நடக்கவில்லை!

மயூ
09-04-2007, 02:40 PM
ஜின்னி இறக்கலாம் என்பதற்கான சான்று!!!!

go to page 310 of the chamber of secrets
read the third paragraph on the page...


"If i say it myself Harry, I've always been able to charm the people I needed. So Ginny poured out her soul to me, and her soul happened to be exactly what I wanted...I grew stronger and stronger on a diet of her deepest fears, her darkest secrets. I grew powerful, far more powerful than little Miss Weasley. Powerful enough to start feeding Miss Weasley a few of my secrets, to start pouring a little of MY soul back into HER..." ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும். ஒரு ஆங்கிலத்தளத்தில் இருந்து எடுத்தது!!!

அப்போ கடைசி புத்தகத்தில் இறக்கப் போகின்ற பாத்திரங்களில் ஜின்னி ஒன்றாக இருக்கலாம்.. காதலியுடன் சேர்ந்து ஹரியும் இறக்க வேண்டி ஏற்படுமோ???

சிதம்பரம்
11-04-2007, 02:36 AM
இந்த அளவு வரவேற்பு பெறும் அளவுக்கு தமிழில் புத்தகங்கள் வெளிவருமா?

ஓவியன்
12-04-2007, 04:16 AM
இந்த அளவு வரவேற்பு பெறும் அளவுக்கு தமிழில் புத்தகங்கள் வெளிவருமா?
சிறந்த படைப்புக்கள் எப்போதும் ஏற்றம் பெறும் சிதம்பரம்! - அதற்கு மொழி ஒரு போதும் தடையாக இருக்காது.

சிதம்பரம் நீங்கள் நீண்ட காலத்தின் பின்னர் வருகின்றீர்களா?