PDA

View Full Version : மழை.....



Nanban
08-05-2003, 03:31 PM
மழை.....

நான் மழையில்
நனைந்த
முதல் நாள் ஞாபகமில்லை.

ஒவ்வொரு
மழை நாளிலும்
நனையத் தான் ஆசை.

அன்று ஒரு நாள்
அம்மா திட்டினாள்
மழையில் நனைந்ததற்கு
'எதையாவது இழுத்து
வைச்சித் தொலை -
சேவகம் செய்ய நானொருத்தி
இருக்கேன்ற திமிரா?'
கஞ்சி வைத்துக் கொண்டே
கடுப்புடன் திட்டினாள்.

மற்றுமொரு மழையில்
மனைவி திட்டினாள் -
'மாஞ்சி மாஞ்சி
வேலை செய்ய
வேலைக்காரி நானொருத்தி
இருக்கேன்ற மதப்பு'
கஷாயம் காய்ச்சிக் கொண்டே
என்னையும் காய்ச்சினாள்.

'வயாசான வயசில்
மழையென்ன வேண்டிக் கிடக்குது
அதுவும் பிள்ளைகளோட'
விக்ஸ் தடவிக் கொண்டே
அதட்டுகிறாள் மகள் -
அவளும் ஒரு அம்மா இன்று.

எவருக்கும் தெரியாது -
நனைந்து கிடக்க
ஓடும் என் மனதை.
மனம் போன போக்கில்
மழையில் நனைந்து
நைந்த காகிதமாய்
மனம் துவளும்
வேலையிலே மட்டும்தான்
மண் வாசனை மட்டுமல்ல,
முந்தானையைக் கொண்டு
என்னையும் தன்னையும்
காக்க முயற்சித்துத் தோற்ற
அவளின் நனைந்தக் கூந்தலின்
மணத்தையும்
நான் உணர்கிறேன் -
அவளுக்கும் எனக்கும் மட்டும்தான்
மழை மருத்துவத்தை அழைக்காது
பொழிந்தது.

நண்பன்........

poo
08-05-2003, 03:33 PM
அருமை நண்பரே... இடைவெளிவிட்டு வந்த கவிதை... பாராட்டுக்கள்!!!

இளசு
09-05-2003, 04:18 PM
கவிமழையும் காதல்மழையும்

நண்பனின் கவிமழையில் நனைந்த
எனக்கும் மருந்து தேவையில்லை...

காதலில் இருந்தால்...
நோய்க்கிருமிகளும் அருகில் வர அஞ்சும்..
இது அறிவியல் உண்மை....

காதலில் இருந்தால்
பசி மறக்கும்
உறக்கம் போகும்
தமிழ் வசப்படும்
வாத்து குரல் கூட வாழ்த்தும் குயில் ஒலியாய் மாறும்
காலை விடிவதே பரவசம் தரும்
அவளை நினைவுபடுத்தும் எதுவும் பிடிக்கும்...
பார்க்கும் எல்லாமே அவளை நினைவுபடுத்தும்..
எனவே எல்லாமும் எல்லாரையும் பிடிக்கும்..
இது அனுபவ உண்மை!

rambal
11-05-2003, 10:03 AM
உங்கள் கவிதை மழை அருமை..
ஜலதோசம் என்பதை விட..
மழைதோசத்திற்கான காரணங்கள் அருமை..
பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்..

Nanban
18-05-2003, 09:31 AM
கவிமழையும் காதல்மழையும்


காதலில் இருந்தால்...
நோய்க்கிருமிகளும் அருகில் வர அஞ்சும்..
இது அறிவியல் உண்மை....


:oops: இதைத் தான் காதல் Chemistry என்கிறார்களோ?

நன்றி இளசு அவர்களே!


மழைதோசத்திற்கான காரணங்கள் அருமை..

மழை தோஷம் உண்டானாலும், மழையினாலே தோஷமும் நீங்குமே!!

நன்றி ராம்பால் அவர்களே!


இடைவெளிவிட்டு வந்த கவிதை...

இடைவெளிவிட்டாலும் மறக்காதிருந்தீரே....

நன்றி பூ அவர்களே!!!

gankrish
20-05-2003, 09:47 AM
கோடை காலத்தில் அருமையான ஒரு கவிதை.