PDA

View Full Version : தலைகவசம் (ஹெல்மெட்).க.கமலக்கண்ணன்
06-04-2007, 07:20 AM
தலைகவசம் (ஹெல்மெட்)

http://www.geocities.com/kamal_kkk/hel.gif

அணிவீர் தலைகவசம், ஏனனென்றால்
ஆயிரம் கோடிகளை கொட்டினாலும் - உடலுடன்
இணையுமா பிரிந்த அந்த உயிர்...
ஈடு செய்ய முடியாத இழப்பை தவிர்த்திட
உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் - உங்கள்
ஊரில் உள்ள அனைவரிடமும் அன்பாய்
எடுத்துச் சொல்லுங்கள், அவர்களிடம் பாதுகாப்பு உணர்வை
ஏற்றுங்கள். குடும்பத்தின் ஆணிவேர் நீங்கள் என்பதில்
ஐயம் இல்லையே ...
ஒவ்வொருவரும் இதை பின்பற்றினால் - வண்ண
ஓவியமாக உங்களின் வாழ்வு வளமோடு என
ஒளவைத் தமிழிலே அன்போடும்
அதே பாசத்தோடும் வேண்டுகிறேன்...

ஓவியன்
06-04-2007, 07:27 AM
அருமை கமலக் கண்ணன்!

தேவையான முக்கியமான ஒரு பிரச்சினையைக் கையிலெடுத்துக் கவிதையாகத் தந்துள்ளீர்கள்.

இந்தக் கவிதையின் மூலம் தலைக் கவசம் அணிபவர்களின் என்ணிக்கை அதிகரிக்குமனால் - அதுவே உமக்குக் கிடைக்கும் வெற்றி!\

வாழ்த்துக்கள் நண்பரே! - தொடர்ந்து தாருங்கள்.

அன்புரசிகன்
06-04-2007, 08:15 AM
உயிரின் மேல் அப்படி ஒரு பற்று உங்களுக்கு. வாழ்த்துக்கள் கண்ணா.

இளசு
06-04-2007, 09:23 PM
உயிரின் மேல் அப்படி ஒரு பற்று உங்களுக்கு. வாழ்த்துக்கள் கண்ணா.

எல்லா என ஒரு சொல்லை முன்னால் சேர்த்துக்கொள்ளுங்கள்
அன்புரசிகன்...

உயிர்களின் மதிப்பு பற்றி மீனாகுமார் சொல்வது இங்கே....

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8604

===========================================================


உயிரிழப்பு, உடல் உறுப்பிழப்பு,
மருத்துவ செலவு+ சக்தி இழப்பு...

இவை தடுக்க, காலத்துக்கேற்ற கவிதை!
பாராட்டுகள் கமலக்கண்ணன்!

தமிழக போக்குவரத்து காவல்துறைக்கு அனுப்பி வையுங்கள் இதை!

ஓவியா
06-04-2007, 09:26 PM
கவிதை அருமை.

வேண்டுகோள் பலிக்க வாழ்த்துக்கள்.

ஆதவா
06-04-2007, 11:18 PM
அருமையான கவிதை... அவசியம் வேண்டிய கவிதையும் கூட...

ஷீ நிசி இம்மாதிரி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.... அது அவர் பாணி

அகரவரிசையில் இங்கே- இது உங்கள் பாணி.. கலக்கிறீங்க.............

சின்ன வேண்டுகோள்... ஔ மற்றூம் ஃ க்கு வேறு வார்த்தைகளை கையாளலாம்./// அதே ஒளவை, ஒளசிதம் அஃதே போன்ற பழைய வார்த்தைகளை தவிருங்கள்....

ஒள வேதான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை... உச்சரிப்புக்குத் தகுந்த வார்த்தைகளையும் இடலாம்... உதாரணம் அவ்

(அவ்விதம் - ஔவிதம்,)
(அக்கணம் - அஃகணம்)

புதுவார்த்தைகள் இடுவீர்.... புதிதாய் எழுதுவீர்...................

வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
07-04-2007, 06:09 AM
உயிர்காக்கும் கவிதையை கொடுத்த உங்களை வணங்குகிறேன்.

இக்கவிதையானது பலருக்கு பாடம் புகட்டும், உயிர் காக்கும். தொடரட்டும் உங்கள் சேவை.

ஷீ-நிசி
08-04-2007, 05:35 AM
அகரவரிசையில் மற்றுமோர் கவிதை.. தொடருங்கள்.. ஆதவன் சொல்வது போல் புதிய வார்த்தைகளை கொண்டுவாருங்கள்..

இதே மன்றத்தில் முன்பு நான் பதிந்தது, தலைக் கவசம் கவிதை..

மழையின் தூறல்
விழுமுன் அணிகிறாய்
மழைக் கவசம்!

தலையில் கீறல்
விழுமுன் அணிவாயோ!
தலைக் கவசம்!

வாழ்த்துக்கள் நண்பரே! தொடருங்கள்!

இளசு
08-04-2007, 06:59 AM
..

மழையின் தூறல்
விழுமுன் அணிகிறாய்
மழைக் கவசம்!

தலையில் கீறல்
விழுமுன் அணிவாயோ!
தலைக் கவசம்!அட, சுருக்கென தைக்கும் நறுக் கவிதை!
வாழ்த்துகள் ஷீ-நிசி!

virumaandi
08-04-2007, 07:04 AM
அருமை கவிதை..
தமிழின் பால் நீர் கொடுத்த வேண்டுகோளை ஏற்று இன்றே.. தலை கவசம் அணிகிறேன்..

டிராபிக் நாராயணசாமிக்காக அல்ல...

அகர வரிசை கவிதை அருமை

க.கமலக்கண்ணன்
08-04-2007, 08:32 AM
மழையின் தூறல்
விழுமுன் அணிகிறாய்
மழைக் கவசம்!

தலையில் கீறல்
விழுமுன் அணிவாயோ!
தலைக் கவசம்!
நறுக்கென்று ஆறு வரிகளில் கவிதை நன்றி

மிகவும் அருமை...

kvairamani
08-04-2007, 03:04 PM
கவிதை அருமை.

poo
09-04-2007, 08:04 AM
18 வயது குழந்தைகள் படிக்கவேண்டிய அவசியச்சூடி..

நன்றிகள் நண்பரே... உங்கள் பார்வைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் மனதுக்கு இதம்.