PDA

View Full Version : மறந்த தமிழை நினைவூட்டுவோம்



rajeshkrv
05-04-2007, 09:29 PM
இன்றைய இளைஞர்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு தமிழ் இலக்கியங்கள் பற்றி தெரியவும் இல்லை
தெரிந்து கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதுமில்லை
ஆதலால் நாம் படித்த இலக்கியங்கள் மற்றும் செய்யுள்களை இங்கே நினைவு கூர்வோமா..
சரி ..

யார் சரியாக பதிவு செய்கிறார்கள் என்று பார்ப்போம்..
இதோ..

தேரா மன்னா என நாம் படித்த அந்த இலக்கிய பாடலை
இங்கே சரியாக பதிவு செய்யுங்கள்

ஓவியன்
05-04-2007, 09:32 PM
நான் படிக்கவில்லை நண்பரே - ஏனென்றால் நான் வேறு கல்வித் திட்டத்தில் (இலங்கையில்) படித்தவன். என்றாலும் பரவாயில்லை நண்பர்கள் பதித்து விடுவார்கள் நான் காத்திருக்கின்றேன்.

இளசு
05-04-2007, 09:44 PM
.........................................



-கொஞ்சம் தேடிப்படித்து பதித்தேன் என்பதை
குருவிடம் ஒப்புக்கொள்கிறேன்... அதனால் நீக்கிவிட்டேன்...
(மனசாட்சி குத்தியது.. குரு கேட்டது நினைவில் இருந்து சொல்லச்சொல்லி)

அந்தப்பாடலின் பொருளை மட்டும் சொல்கிறேன்:'

அறிவிலா மன்னா!'
உன்னிடம் கூற வேண்டியது உள்ளது;
அதற்கு முன் யாரெனக் கேட்டாய்; கூறுவேன் கேள்!
பறக்கும் புறாவுக்குச் செய்த துன்பத்திற்காக
அப்புறாவுக்கும் நீதி வழங்கினான் சிபி என்ற அரசன்!
கண்ணீருடன் பசு ஒன்று ஆராய்ச்சி மணி ஒலிக்க, அதன் குறை அறிந்தான் மனுநீதிச் சோழன்!
அதன் கன்றைக் கொன்ற அவன் மகனை
அதே தேர்க்காலில் இட்டுக் கொன்றான் அச்சோழன்.
மனித இனமற்ற பறவைக்கும், பசுவுக்கும்
அரசநெறி கொண்டு நீதி வழங்கிய நெறிதவறா அரசர்கள் ஆண்ட புகார் நகரம் என் ஊர்....!

ஓவியா
05-04-2007, 09:48 PM
ஓவியனோ வேறு கல்வித் திட்டத்தில் படித்தவர். (இலங்கையில்)

ஓவியாவோ வேறு மொழியில் கல்விக் கற்றவள் (மலேசியாவில்).


சான்றோர்கள் வாசிக்க, நாங்கள் திரிக்கு வந்து போய் பாடம் மட்டும் கற்றுக்கொள்கிறோம்.

மன்னிக்கவும் குரு.

ஓவியா
05-04-2007, 09:49 PM
இளசு.

தங்களே தேடி பிடித்துப் படித்தால்!!!!!

ஓவியன்
05-04-2007, 10:59 PM
ஓவியனோ வேறு கல்வித் திட்டத்தில் படித்தவர். (இலங்கையில்)

ஓவியாவோ வேறு மொழியில் கல்விக் கற்றவள் (மலேசியாவில்).


சான்றோர்கள் வாசிக்க, நாங்கள் திரிக்கு வந்து போய் பாடம் மட்டும் கற்றுக்கொள்கிறோம்.

மன்னிக்கவும் குரு.

ஏற்றுக் கொள்கின்றேன் அப்படியே!:ernaehrung004:

மனோஜ்
06-04-2007, 02:53 PM
என்னால யோசிக்கவும் முடியல எல்லாம் மன்டையில் கான போச்சு அதான் மன்னிங்க குருவே