PDA

View Full Version : மெல்ல என் காதல் இனிச் சாகுமா?



lenram80
05-04-2007, 05:32 PM
ஒரு பெண்ணைப் பார்த்து, பேசி
சிலவற்றில் பலவற்றால் கவரப்பட்டு
நட்பாக மாறி பின் காதலாக உருமாறி
காலமெல்லாம் ஒன்றாக என்ற நிலைக்கு வருவது
ஒன்றும் சின்ன விஷயம் இல்லை!

வாழ்ந்தால் இவளுடன் என்று நம்பிக்கை வருவதும்
அதைவிட,
வாழ்ந்தால் இவனுடன் தான் என்று நம்பிக்கை தருவதும்
ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை!

ஆசை ஆசையாய் அன்பு கலந்து
பானை பானையாய் பாசம் பிசைந்து
குடம் குடமாய் உயிர் ஊற்றி
கொஞ்சம் கொஞ்சமாய் நெஞ்சத்தில்
கட்டிய காதல் கலங்(கா) கரைவிளக்கத்தை

இது வேண்டாம் என்கிறாள் உயிர் கொடுத்த மடி!
அம்மா அப்பாவை எதிர்த்து
இது வேண்டுமா? என்கிறாள் உயிர் கொடுக்கும் மடி!
எந்த பக்கம் போவது?
என்ன முடிவு எடுப்பது?

அவளிடம் கேட்டால்
அம்மாவின் முடிவையே ஆமோதிக்கலாம் என்கிறாள்!
கண்ணீர் அலை அடிக்கும் கடல் கண்களோடு!

என்ன பாவம் செய்தோம்?
பிரிவோம் என்ற முடிவைக் கூட
நாங்கள் ஒன்றாகக் கூடி எடுக்கிறோம்!

பிரிந்து செல்லும் வழி எங்கென்று பார்க்கிறோம்!
ஆம்! பிரிந்து, எங்கள் காதலுக்கு புனிதம் சேர்க்கிறோம்!

எங்களுக்கு இந்த இருபதுகளில் இருக்கும் தெளிவு,
எங்கள் பெற்றோர்களுக்கு
அறுபதுகளில் இல்லாமல் போனது இழிவு!

கல்யாணம் என்பது உறவுமுறை!
காதல் என்பது உணர்வு முறை!

கல்யாணம் என்பது உறவு கூடி எடுக்கும் முடிவு!
காதல் என்பது உயிர் கூடி துவங்கும் தொடக்கம்!

கல்யாணம் என்பது சம்பரதாயம்!
காதல் என்பது சந்தோஷக் காயம்!

கல்யாணம் என்பது செயற்கை! தவிர்க்கக் கூடியது!
காதல் என்பது இயற்கை! தவிர்க்க முடியாதது!

கல்யாணத்தில் முடிந்தால் தான் காதல் வெற்றியா?
கல்யாணத்தில்லாமல் காதல் இடிந்தால் அது தோல்வியா?

இல்லை!

என்று எங்களை நாங்கள் நம்பினோமோ
அன்றே எங்களுக்குள் பிறந்ததே - அந்தக் காதல்
அதுவே வெற்றி!

காதல் என்பதே வெற்றி!
அப்பறம் எப்படி தோல்வி?

நாங்கள் பிரியவில்லை!
நாங்களாகப் பிரிகிறோம்!
இது எங்கள் மா-காதலின் மகா வெற்றி!

பெற்றோர்களே!
எங்கள் இதயத்தைப் பிய்த்து உரமாக்கி
எங்கள் காதல் செடி வளர்ப்போம்!
நீங்கள் பிரித்தது எங்கள் உடம்புகளைத் தான்!
உணர்வுகளை அல்ல!
கிளைகளைத் தான் வெட்டினீர்கள்!
உள்ளூர உயிரெல்லாம் ஊடுறுவிய வேர்களை அல்ல!

உடல் தொடர்பு தவிர
மற்ற எல்லா தொடர்புகளுடனும்
நான் வாழ்நாள் முழுதும்
வாழ்வேன் காதலனாக!
உலகத்ததின் கண்ணில் நண்பனாக!

நாங்கள் செய்தது தியாகம்!
நீங்கள் செய்தது தீ யாகம்!

இந்த கவிதையின் வார்த்தைகளைத் தொட்டுப் பாருங்கள்!
என் காதல் விடும் கண்ணீர் பசை ஒட்டும்!
அது அலறும் அலறல் ஓசை காதுக்கெட்டும்!

இளசு
05-04-2007, 08:54 PM
பாராட்டுகள் லெனின்..

காதல் போயின் சாதல் என்றால்
பாதி உலகம் கல்லறை!

காதல் மறுத்தும் வாழ்தல்
என்பது புதிய தலைமுறை!

உடை, கல்வி, பொம்மை, வாகனம் -
என்ன பிடிக்கும் எனக் கேட்டுச் செய்வது
பெற்றவர் வாடிக்கை!

எவன் வேண்டும்? எவள் உன் துணை?
என்ன உன் ரசனை என அவர்கள்
கேட்கத் தவறுவது விளங்கா வேடிக்கை!

உலகளாவிய மனமுடிச்சு இது...
வயது வந்த குஞ்சுகளை பறக்கவிடாமல்
பொத்தி வைத்து, இணையும் பிணைத்து,
அதன் வாரிசுக்கும் தூளிகட்டித் தொடரும்
தாக்கம் மனித வர்க்கத்துக்கு மட்டுமே வாய்த்த
சாபவரம்!

அந்த நன்மை செய்த உள்ளங்கள்
சில நேரம் பாசத்தீயாக!..
சில நேரம் பாசிசத்தீயாக!

ஒன்றை ஏற்று மகிழ்ந்ததால்
இன்னொன்றையும் சுமக்க நேரிடுகிறது..

Its a package deal!

இளசு
06-04-2007, 11:24 PM
லெனின்

கவிதைப்பகுதியில் உங்களின் இக்கவிதை 800வது பதிப்பு..

அதற்கான என் சிறப்புப் பாராட்டுகள்!

ஹைக்கூ போட்டியில் உங்கள் கவிதைக்கு
பென்ஸின் சிறப்புப்பாராட்டு (+வாக்கு) பார்த்தீர்களா?

lenram80
14-04-2007, 02:19 PM
எப்போதும் அசர வைக்கும் கண்ணோட்டத்துடன் பின்னூட்டமிடும் இளசுக்கு நன்றிகள்....
உணர்ச்சிகளை எழுதிய பிறகு அதை படிப்பவரும் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கு, படிப்பவர்கள் அக்கவிதையுடன் லயிக்க வேண்டும். நீங்கள் அதை எப்போதும் செய்கிறீர்கள். நன்றிகளும், நானும் அதைப் போல உள்ளம் பெற வேண்டுதலுடனும்....லெனின்

மனோஜ்
14-04-2007, 03:29 PM
உள்ள குமுறளை உறித்தாக்கிய லெனினுக்கு பாறாட்டுக்கள் வாத்தையல்ல வாழ்க்கையில் நன்றி

ஓவியன்
15-04-2007, 06:22 AM
இது வேண்டாம் என்கிறாள் உயிர் கொடுத்த மடி!
அம்மா அப்பாவை எதிர்த்து
இது வேண்டுமா? என்கிறாள் உயிர் கொடுக்கும் மடி!
எந்த பக்கம் போவது?
என்ன முடிவு எடுப்பது?

..............

..............
உடல் தொடர்பு தவிர
மற்ற எல்லா தொடர்புகளுடனும்
நான் வாழ்நாள் முழுதும்
வாழ்வேன் காதலனாக!
உலகத்ததின் கண்ணில் நண்பனாக!

நாங்கள் செய்தது தியாகம்!
நீங்கள் செய்தது தீ யாகம்!

இந்த கவிதையின் வார்த்தைகளைத் தொட்டுப் பாருங்கள்!
என் காதல் விடும் கண்ணீர் பசை ஒட்டும்!
அது அலறும் அலறல் ஓசை காதுக்கெட்டும்!


அருமை லெனின் கவி வரிகள் நெஞ்சத்தைத் தொடுகின்றன. உணர்வுகள் முட்டி மோதுவதால் விமர்சிக்க என்னால் முடியவில்லை.

ஆனால் ஒரே வார்த்தையில் - சொல்ல வந்ததை அருமையாக சொல்லி முடித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் லெனின்.