PDA

View Full Version : வேவுகணைகள்



ஆதவா
05-04-2007, 12:33 PM
உன் மீது எனக்கு
அதீத அன்பு
தின முத்தங்களால்
மனம் நிறைந்து
புதுமலராய் நிற்கிறேன்.
என் முகம் பார்க்கும்
இத்தனை பேர் மத்தியில்
உன் சிலரால் மட்டுமே
காதல் புரிய முடிகிறது.

உனக்கெனவே
ஒதுக்கப்பட்ட இடத்தில்
எனக்காக கவியெழுதுகிறாய்
கதை பேசுகிறாய்.
சில சமயங்களில் கிண்டலாக
கொஞ்சுகிறாய்.
ஏதாவதொரு நொடியில்
கோபம் வந்தால்,
என் கண்ணசைவில்
நிறுத்திக் கொள்கிறாய்!

அவ்வப்போது
விண்கற்கள் தாக்கும்.
உனக்கும் எனக்குமுண்டான
ஈர்ப்புவிசை அறியாமல்.

வேவு பார்க்கும்
சில கழுகுகள்,
நம் உறுதியறியாது
கண்கள் பொசுங்க
ரணப்பட்டு போகிறது.

நம் பந்தம் பிரிக்க முடியாதது.
வேவுகணைகள்
எத்தனை வந்தபின்னும்....

விகடன்
05-04-2007, 12:42 PM
ஐயா கவியே.

சற்று விளக்கம் கொடுங்களேன்.

எனது சிற்றறிவிற்கு கருத்து முழுமையாக ஏறவில்லை.

ஆதவா
05-04-2007, 04:49 PM
ஜாவா!! நன்றாக படித்துப்பாருங்கள்... ஏதோ ஒன்று இருக்கவேண்டுமே என்றூ யோசியுங்கள்.... மிகவும் எளிதாக நான் நினைத்து எழுதியிருக்கிறேன்... உங்கள் கருத்து தேவை..

leomohan
05-04-2007, 05:02 PM
உன் மீது எனக்கு
அதீத அன்பு
தின முத்தங்களால்
மனம் நிறைந்து
புதுமலராய் நிற்கிறேன்.
என் முகம் பார்க்கும்
இத்தனை பேர் மத்தியில்
உன் சிலரால் மட்டுமே
காதல் புரிய முடிகிறது.

உனக்கெனவே
ஒதுக்கப்பட்ட இடத்தில்
எனக்காக கவியெழுதுகிறாய்
கதை பேசுகிறாய்.
சில சமயங்களில் கிண்டலாக
கொஞ்சுகிறாய்.
ஏதாவதொரு நொடியில்
கோபம் வந்தால்,
என் கண்ணசைவில்
நிறுத்திக் கொள்கிறாய்!

அவ்வப்போது
விண்கற்கள் தாக்கும்.
உனக்கும் எனக்குமுண்டான
ஈர்ப்புவிசை அறியாமல்.

வேவு பார்க்கும்
சில கழுகுகள்,
நம் உறுதியறியாது
கண்கள் பொசுங்க
ரணப்பட்டு போகிறது.

நம் பந்தம் பிரிக்க முடியாதது.
வேவுகணைகள்
எத்தனை வந்தபின்னும்....

அற்புதம் ஆதவன். சூழ்நிலைக்கு ஏற்ப கவிதை எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.

ஆதவா
05-04-2007, 05:04 PM
நன்றிங்க மோகன்...

சூழ்நிலைக்குத் தக்கவாறு கவிதையா
இல்லை
கவிதைக்கு தக்கவாறு சூழ்நிலை மாறிவிட்டதா என்பது அறியாமல் இருக்கிறேன்....

leomohan
05-04-2007, 05:05 PM
நன்றிங்க மோகன்...

சூழ்நிலைக்குத் தக்கவாறு கவிதையா
இல்லை
கவிதைக்கு தக்கவாறு சூழ்நிலை மாறிவிட்டதா என்பது அறியாமல் இருக்கிறேன்....

ஐயோ பதில் தருவதிலும் கவிதையா

ஆதவா
05-04-2007, 05:12 PM
அய்யோ இல்லீங்க... சும்மா எழுதினேன்..

இளசு
05-04-2007, 09:33 PM
ஏவுகணைகள் என்றால்
எய்தவன் இருக்க இதை நோவானேன்
என விட்டுவிடலாம்..

வந்து வந்து போகும் வேவுகணைகள் என்றால்?

பந்தம் பிரிக்க - தீப்
பந்தம் எடுத்து
சொந்தம் எரிக்க -பொய்ச்
சொந்தம் கொண்டாடும்

அக்கணைகள் வெட்கி மக்கட்டும் -
வக்கனையாய் வந்த ஆதவன் கவிதை கண்டு!

எந்த ஆத்ம பந்தத்துக்கும் பொருந்தும் சொற்பிரயோகம்!
காதலன் -காதலி
படைப்பாளி - படைக்கும் களம்
சுவைஞன் -நுண்கலை....

இப்படி பல பட்டையுள்ள வைரம் தீட்டி படைப்பது
ஆதவனுக்கு வாய்த்துவிட்ட வரம்!


வாழ்த்துகள் ஆதவா!

ஓவியா
05-04-2007, 11:29 PM
இது அந்த 7.00 மணிக்கு பஸ்டாப்பில் அடப்புக்குறி போடும் கவிதைதானே!!!!!!!

மொத்த கவிதையும் ஒரு வரி விடாமல் விளங்கியது.....பலே

ஹி ஹி ஹி நடத்து

பரிட்சைக்கு பின் விமர்சனம் போடுகிறேன்.

ஓவியன்
06-04-2007, 12:04 AM
உன் மீது எனக்கு
அதீத அன்பு
தின முத்தங்களால்
மனம் நிறைந்து
புதுமலராய் நிற்கிறேன்.
என் முகம் பார்க்கும்
இத்தனை பேர் மத்தியில்
உன் சிலரால் மட்டுமே
காதல் புரிய முடிகிறது.

உண்மை தான் ஆதவா!
காதல் எல்லோர் மீதும் வருவதில்லையே, அது என்னவோ தெரியலை ஒரு சிலரைப் பார்த்தவுடனேயே பத்திக்கும் - ஒரு பல்ப் போல



உனக்கெனவே
ஒதுக்கப்பட்ட இடத்தில்
எனக்காக கவியெழுதுகிறாய்
கதை பேசுகிறாய்.
சில சமயங்களில் கிண்டலாக
கொஞ்சுகிறாய்.
ஏதாவதொரு நொடியில்
கோபம் வந்தால்,
என் கண்ணசைவில்
நிறுத்திக் கொள்கிறாய்!

வேண்டியவர்களுக்காக கெஞ்சுவதிலும், கோவப் படுவதிலும் ஒரு தனி சுகமே இருக்கின்றது. (அதெல்லாம் அனுபவிச்சுத் தான் பார்க்கவேணும்)




அவ்வப்போது
விண்கற்கள் தாக்கும்.
உனக்கும் எனக்குமுண்டான
ஈர்ப்புவிசை அறியாமல்.

விண்கற்களுக்கு பொறாமை வேறொன்றுமில்லை, ஆனால் அதுவும் நல்லதுக்குத் தான் அப்போது உங்கள் ஈர்ப்பு விசை மேலும் மேலும் வலுப்படுமேயொழிய வலுவிழக்காது எப்போதும்.



நம் பந்தம் பிரிக்க முடியாதது.
வேவுகணைகள்
எத்தனை வந்தபின்னும்....

விண் கற்களாலேயே முடியாததை ஏவுகணைகள் சாதித்து விடுமா என்ன?


ஆதவா கவிதை அருமையிலும் அருமை - அனுபவித்து எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

:icon_good: :aktion033: :4_1_8:

ஆதவா
06-04-2007, 01:10 AM
நன்றி இளசு அண்ணா!
--------------------
நன்றிங்க ஓவியா! ஏதோ பொடி வைக்கிறீங்க..
--------------------
நன்றிங்க ஓவியன்....... மிகவும் நன்றீ..

ஷீ-நிசி
08-04-2007, 04:35 PM
ஆதவா! இந்தக் கவிதை எழக் காரணம் இந்தக் களம்.. அந்த கள்ளம்....

நீ வைத்த பொடியை கண்டேனா?!

ஆதவா
08-04-2007, 04:42 PM
ஆமாம் நிசியாரே!! விமர்சனம் இல்லையா?

ஷீ-நிசி
08-04-2007, 05:32 PM
கொசுவுக்குப் சுருள் வைப்பாங்க... நீங்க கவிதை வச்சிருக்கீங்க.. கொசுத் தொல்லை தாங்க முடியல... ஆதவா...

arun
09-04-2007, 05:08 AM
பிரமாதம் அனப்ரே உங்களின் கவிதை பதிவுக்கு நன்றி

poo
09-04-2007, 05:36 AM
பாராட்டுக்கள் ஆதவன்.

அண்ணன் சொன்னதுபோல எந்தச் சூழலுக்கும், சுழலுக்கும் பொருந்தும் கவிதை..

படிப்பவர் ஆழ்மன ஓட்டத்தோடு, அண்மை நிகழ்வோடு ஒட்டிப்பார்த்து, அனுபவித்துக் கொள்ளும்விதம் அமைந்த வரிகள்..

வாழ்த்துக்கள் இன்னும் தொடருங்கள்.

ஆதவா
09-04-2007, 01:06 PM
நன்றிங்க அனைவருக்கும்.....
கரு cஒன்ன தலைக்கும் என் நன்றிகள் கோடி