PDA

View Full Version : பிரசண்ட் சார்



gayathri.jagannathan
05-04-2007, 11:47 AM
பத்தாத சட்டையும்
அரைக்கால் டிராயருமாய்
ஏபிசிடி எழுதிய
பள்ளிப் பருவம்-
குட்டிக் குறும்புடன்
சுட்டிக் குழந்தையாய்
நான்-
வளர்கிறேனே மம்மி


தினம் தினம் மாட்டு வண்டி
எங்கள் போக்குவரத்து
இன்னும் கண்களில் அசையும்
அந்த காட்டுப் பாதையில்
மாட்டு வண்டிப் பயணம்

பள்ளிக்குப் போக மனமில்லாமல்
வண்டி ஒட்டும் வெள்ளைச்சாமியை..
மெதுவா ஓட்டு வெள்ளைச்சாமி
ஸ்கூல் பக்கமா வந்துருச்சு
சாயங்காலம் சீக்கிரம் வந்திரு..
இப்படிக் கெஞ்சாத நாளில்லை...


மே மாத விடுமுறையில்
நண்பர்களுடன் ஊர் சுற்றி
செம்மண் புழுதி படிந்து
சாயங்காலம் வீடு வர
மிரட்டத் தடியுடன் காத்திருக்கும்
அம்மாவிற்கு பயந்து
ஓடி ஒளிந்த அந்த அழகிய வயது


விடுமுறை முடிந்து
ஜூன் மாதம் வந்தாலும்
புது வகுப்புக்குச் செல்லும் மகிழ்ச்சியில்
குதூகலமாய்ச் சென்று
பழைய நண்பர்களுடன்
புதிய பென்ச்சில் அமரும்
அந்த அழகிய வகுப்பறை


நாட்கள் நடந்து செல்ல
சிறு சிறு சண்டைகள்
விரைவில் இணையும்
கள்ளமற்ற நெஞ்சங்கள்...
வாரம் இருமுறை வரும்
கேம்ஸ் பீரியடுக்காக
தினம் தினம் அத்தனை எதிர்பார்ப்பு...


ஒவ்வொரு வகுப்பிலும்
உற்சாகக் குரலில்
அழகாய்ச் சொல்லும் "பிரசண்ட் சார்"
வகுப்பு நடக்கையில்
பக்கத்து நண்பனுடன்
ஆசையாய் விளையாடும்
புத்தக கிரிக்கெட்


தமிழ் செய்யுளும்
ஆங்கில கிராமருமாய்
ஊட்டப்பட்ட அறிவு,
கல்வியில்-அடுத்தபடி
திப்பு சுல்தான் கதைகள் சொல்லி
தூங்க வைக்கும் ஹிஸ்ட்ரி மாஸ்டர்..


பள்ளி முடிந்ததும்
வேகமாய் ஓடி
பள்ளிப் பெருந்தின்
ஜன்னல் ஓர இருக்கை
எனக்குத்தான் வேண்டுமென
அத்தனை ஆர்ப்பாட்டம் செய்யும்
அந்த வயதில் ஆசை அவ்வளவுதான்...


அறிவு வளர ஆனந்தம் குறைந்தது...
கழுதை வயசாகுதில்ல என்று
அணைத்த நெஞ்சங்கள்
அறிவுரை ஊட்டின-
கொஞ்சம் பக்குவப்பட்டது என் மனசு


கம்பியூட்டர் படிக்கத் தொடங்கிய காலம் -
என் முதல் புரோகிராம்
எர்ரரை மட்டுமே
அவுட்புட்டாய்க் கொடுத்தது-
இன்டல் இன்சைடு
இடியட் அவுட்சைடு
அர்த்தம் புரிந்தது..


காலப் போக்கில் வேலை கிடைத்தது..
அன்று நான் தொடக் கூட
கிடைக்காத கம்பியூட்டர்
இன்று என் கையில்
கைக்கணினி என்ற பெயரில்...
சந்தோஷத்தை மாதக் கடைசியில் வாங்குகிறேன் -
சம்பளமாய்!!

பாஸ்ட் புட் சாப்பிட்டு விட்டு
நடக்கிறேன் பாஸ்டாய்
என் மனது முழுவதும்
கிளையண்ட் மீட்டிங்
பற்றிய சிந்தனைகள்...
எதிரில் வந்தவர் முகம்
எங்கோ பார்த்தது போல -
நேரமில்லை நடக்கிறேன்...


அடுத்த நாள் காலை
ஆபீஸ் வந்ததும்
நேற்றைய முகம் நினைவுக்கு வந்தது..
ஸ்வைப் இன் செய்யும் இயந்திரம்
அவரை உறுதி செய்தது...
அட நம்ம ராமசாமி வாத்தியார்,
அவரிடம் நான் சொல்லும் பிரசண்ட் சார்...


-நன்றி மெயிலில் அனுப்பியவருக்கு

அரசன்
05-04-2007, 11:59 AM
பள்ளிப் பருவத்து குழந்தைதனமான செய்கைகள் இன்று நினைதாலும் இறக்கை முளைத்து பறக்க துடிக்கிறது மனது.
தனிமையில் உணரும் அருமையான நினைவுகள். இதற்கெல்லாம் காரணம் பிரசண்ட் சார் சொன்ன நம்மை பாஸ்ட்டா கொண்டு சென்ற காலம்தான். வாழ்த்துகள்.

ஓவியன்
05-04-2007, 12:04 PM
கவிதை நன்றாக இருக்கின்றது சகோதரி!

இந்தக் கவியின் உண்மையை இன்று உணர்பவர்களில் நானும் ஒருவன்,
நாம் அன்று சொன்ன பிரசண்டின் விளைச்சலை இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றோம்.

கிட்ட்த் தட்ட இதே கருப்பொருளில் உதித்த ஆதவனின் கவிதை (ஆல மரக் கவிதை) ஒன்று மன்றத்திலுள்ளது பார்த்தீர்களா சகோதரி?

redson
05-04-2007, 12:16 PM
உன்மையிலும் அருமை கவிதை வாழ்த்த வாயில் சொல்வரவில்லை
மன்றத்தில் கண்ட முத்து கவிதை.மற்றும் அறிவு பூர்வமான கவிதை,உயிருள்ள கவிதை

நாம் அன்று சொன்ன பிரசண்டின் விளைச்சலை இன்று
அறுவடை செய்து கொண்டிருக்கின்றோம்.

நீங்கள் கூறுவது உன்மைக்கு உன்மை

ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

நம்பிகோபாலன்
05-04-2007, 01:12 PM
அருமை. இன்று உள்ள நிலை நினைதால் சிரிப்பாகாதான் இருக்கிறது.

மக்கள் வருமானதிர்க்காக மாக்களாய் மாறியவரில் நானும் ஒருவன்

redson
05-04-2007, 01:16 PM
எதிரில் வந்தவர் முகம்
எங்கோ பார்த்தது போல -
நேரமில்லை நடக்கிறேன்

அப்படி வேண்டாம் அட் லீஸ்ட் ஒரு வனக்கம் கூறிசெல்லலாமே.


ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

ஆதவா
05-04-2007, 01:32 PM
கவிதை அருமை தோழி! பள்ளி நினைவுகள் வந்து தாலாட்டும் நேரம்.. வகுப்பின் கடைசி நாட்களை ஏப்ரலில் எண்ணியும் முதல்நாளை ஜீனில் எண்ணியும் மகிழ்ந்த காலங்கள்...... சற்று நீளமாக எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கொஞ்சம் வார்த்தைகளை அடக்கி சுருக்கியிருக்கலாம்.... மன்றக் கவிகளே! சொல்லுங்கள்..


தங்கள் கவிதையில்லை என்பதால் விமர்சனம் இல்லை.
--------------------------------------------------------------

ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

இந்த வாசகம் ஒவ்வொரு பதிவிலும் இருக்கிறது... அதை கையெழுத்தாக உபயோகித்துக்கொள்ளலாம்....

வாசகம் தவறாக எழுதப்பட்டிருக்கிறது ரெட்சன். நீங்கள் அடுத்தமுறை நிச்சயம் மாற்றித்தான் ஆகவேண்டும். அர்த்தம் மாறப்பட்ட பழங்காலத்து வரிகளை இடாதீர்கள்... உதவிக்கு நிர்வாகிகளை அணுகவும்

உங்கள் அறிமுகம் கொடுத்தீர்களென்றால் வசதி...

இளசு
06-04-2007, 10:16 PM
ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே..

அழகிய ஆட்டோகிராப்..

வாழ்த்துகள் எழுதியவருக்கு..
நன்றிகள் இங்கே தந்த காயத்ரிக்கு...

(நல்லவேளை... காயத்ரிக்கு கடிஜோக்குகள் மெயிலில் வரவில்லை..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8355 )

poo
07-04-2007, 08:40 AM
அருமையான கவிதை.. எழுதியவருக்கு வாழ்த்துக்கள்..

இங்கே பதிந்த தோழிக்கு நன்றிகள்.

(நான் முன்பு இங்கு எழுதிய ஒரு கவிதை நினைவில் வந்து போகிறது.. தேடி எடுத்து கிடைத்தால் இங்கே ஒட்டுகிறேன்.. இதேமாதிரியானது .. ஆனால் இதேமாதிரியானது இல்லை... ஹிஹி/
ஆட்டோகிராப் நினைவுகள் ஒவ்வொருக்கும் இருக்கும்தானே... )

ஓவியா
07-04-2007, 01:24 PM
அருமையோ அருமை

எழுதியவருக்கும் பதித்தவருக்கும் நன்றிகள் பல.

அந்த ஒன்னாங்கிலாஸ் மறக்க முடியா அனுபவம்.

மயூ
07-04-2007, 01:31 PM
ஒரு சின்னத் திருத்தம் நான் பாடசாலையில் சொன்னது பிரசன்ட் சேர்!!! (சார் இல்லை) :D

mini10101976
09-04-2007, 04:32 AM
கவிதை நன்றாக இருக்கின்றது

arun
09-04-2007, 05:08 AM
கவிதையை படிக்கும்போதே பள்ளியில் படித்த காலத்துக்கு கொண்டு சென்று விட்டார்

அருமையான கவிதை பாராட்டுக்கள்