PDA

View Full Version : இந்தியாவின் அடுத்த கிரிக்கெட் கோச்

aren
04-04-2007, 01:05 PM
இன்று கிரெக் சாப்பல் இந்திய கோச்சிங் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். அடுத்த கோச் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.

என்னுடைய கணிப்பு, கீழே குறிப்பிட்டவர்களில் ஒருவராக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சந்தீப் பட்டீல்
மொகீந்தர் அமர்நாத்
சுனில் கவாஸ்கர்

இதில் சந்தீப் பட்டீலுக்கும், சுனில் கவாஸ்கருக்கும் சான்ஸ் இருக்கிறது. காரணம் இவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சரத் பவார் மகாராஷ்டிரா காரர். அது தவிற தேர்வுக்குழுவின் தலைவர் திலீப் வெங்சர்காரும் மகாராஷ்டிராவைச் சார்ந்தவர். அதுதவிற சச்சின் டெண்டுல்கர் காப்டனாக அறிவிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அவரும் மகாராஷ்டிராவைச் சார்ந்தவர். ஆகையால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட இது உதவும் ஐ ன்று நினைக்கலாம்.

மேலே கூறியது அனைத்துமே இந்த இருவருக்கும் எதிராகவும் அமையக்கூடும். ஆகையால் மொகீந்தர் அமர்நாத்திற்கு இந்த பதவி கிடைக்கக்கூடும். அது தவிற மொகீந்தர் அமர்நாத் இந்த பதவிக்கு ஏற்கெனவே விண்ணப்பத்திருந்தார். அவருக்கு கொடுக்காமல் கிரெக் சாப்பலுக்கு இந்த வாய்ப்பை கவாஸ்கரும், ரவி சாஸ்திரியும் சேர்ந்து கொடுத்தார்கள். ஆகையால் இந்த முறை இவருக்கு கொடுத்தாலும் கொடுக்கலாம்.

டார்க் ஹார்ஸாக அன்சுமன் கைக்வாய்டு இந்த சான்ஸில் வெற்றி பெற்றாலும் பெறக்கூடும்.

உங்கள் கருத்துக்களை அள்ளிவிடுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
04-04-2007, 01:35 PM
பெண்டெடுக்கற கோச்ச ரிசைன் பன்ன வச்சாச்சி... உங்களுக்கு வேண்டியது பெண்டாகுற கோச்தான... நடக்கட்டும்... இனி ஒரு 1983 வெறும் கனவுதான்..

அறிஞர்
04-04-2007, 01:51 PM
என் ஓட்டு சந்திப் பாட்டீலுக்கு.

மயூ
04-04-2007, 01:56 PM
யார் என்றாலும் வரட்டும்!!! ஆனால் இந்திய அணி முன்னேறினால் சரி!!!!

aren
04-04-2007, 03:06 PM
சாப்பல் சரியான சமயத்தில் ராஜினாமா செய்திருக்கிறார். அப்படியானால் அவருடைய ரிப்போர்ட்டில் அனைவரையும் ஒரு பிடி பிடிப்பார் என்றே நினைக்கிறேன்.

தாமரை
04-04-2007, 03:17 PM
கிரிக்கெட்டா? அப்படின்னா என்ன?

aren
04-04-2007, 03:55 PM
கிரிக்கெட்டா? அப்படின்னா என்ன?

உங்களுக்கே தெரியல்லைன்ன எங்களுக்கு எப்படிங்க தெரியும்.

ஆதவா
05-04-2007, 01:03 AM
நல்லது... இம்முறை வெளிநாட்டு கோச் இல்லை போலும்.. சரி! டாம் மூடியை தள்ளி விட்டதற்கு இந்தியா வருத்தப்படவில்லையா>?

அறிஞர்
05-04-2007, 01:09 AM
நல்லது... இம்முறை வெளிநாட்டு கோச் இல்லை போலும்.. சரி! டாம் மூடியை தள்ளி விட்டதற்கு இந்தியா வருத்தப்படவில்லையா>?
யாரை தள்ளிவிட்டாலும்... யாரை இழுத்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என அறிந்திருப்பார்கள்.:weihnachten031: :weihnachten031:

Mathu
15-04-2007, 11:05 AM
என்னை பொறுத்தவரை இங்கு ஒரு இளம், பலம் நிறைந்த அணி உருவாக வேண்டும் என்றால் ஒரு வெளிநாட்டுக் காரர் தான் சிறந்தது.

arun
16-04-2007, 05:02 AM
சந்தீப் பாட்டீல் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்

வெளிநாட்டு கோச் நியமித்தாலும் அவர் போய் களத்தில் விளையாட முடியாது

என்ன தான் கோச் கொடுத்தாலும் நமது அணி வீரர்கள் தான் நன்றாக விளையாட வேண்டும்

ஓவியன்
16-04-2007, 05:10 AM
எந்த பயிற்றுவிப்பாளர் வந்தாலும் அந்தப் பயிற்றுனர் இந்திய அணியினை வெற்றிப் பாதையில் திருப்ப எனது வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
16-04-2007, 08:56 AM
வாட்மோர் பங்களாதேசத்தை துக்கி நிறுத்தியவர் இலங்கையையும் கூட.
தக்க தண்டனைகள் அணியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. (விளம்பரங்கள் பற்றிய) இது எந்த அளவிற்கு பயனளிக்கும் என பொறுத்துதான் பார்க்கவேண்டும். நல்ல பயிற்சி அணியயிலுள்ள களைனளை நீக்குதல் இதுதான் தற்சமயம் இந்திய அணிக்குத்தேவை.

vgmnaveen
21-04-2007, 07:08 AM
மூவரில் யார் கோச் ஆனாலும் அணி உருப்படப்போவதில்லை. முதலில் கிழட்டு வீரர்களை விரட்டி அடிக்கனும்.

மனோஜ்
21-04-2007, 07:38 AM
யார் வந்தாலும் இந்திய அணி நல்லபயிர்ச்சி பெற்று வெற்றி பெற்றால் அது சிறந்தது இனி இப்படி ஒரு தவறு நடக்காமல் இருந்தால் சரி

பரஞ்சோதி
21-04-2007, 11:28 AM
எனக்கு தெரிஞ்சு சந்தீப் பாட்டீல் அவர்களை கோச்சாக அறிவிக்கலாம்.

வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்க வேண்டும். இளைய வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

aren
22-04-2007, 03:05 AM
கிரிக்கெட் மானேஜாராக ரவி சாஸ்திரியை நியமித்திருக்கிறார்கள். இவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
03-05-2007, 07:29 PM
இவர்களில் சந்தீப்பட்டேல் தகுதியானவர் என நினைக்கின்றேன். 2003 உலக்கிண்ணத்தில் கென்யாவின் எழுச்சிக்குக் காரணமானவர் இவர். இவர்களுடன் ஒருவையும் சேர்த்துக்கொள்ளலாம். அவர் டேவ் வட்மோர். இந்தியாவுக்கு கோச்சாகப் போக விரும்புவதாக சொல்லியுள்ளார். இலங்கை சோப்பளாங்கி அணியாக இருந்தபோது அதனை புயலாகியவர் இவர். அடுத்ததாக பங்களாதேஸின் நிலைமையைத் தலைகீழாக மாற்றி அமைத்தவர். அந்த வகையில் (இந்த இரு அணிகளின் முன்னைய நிலைமையை விட மோசமாக இருக்கும்) இந்திய அணிக்கு கோச்சாக விரும்புகின்றார் வட்மோர். இவரை நியமித்தால் 1983 திரும்பக்கூடும்.

அறிஞர்
03-05-2007, 07:35 PM
இந்திய அணிக்கு கோச்சாக விரும்புகின்றார் வட்மோர். இவரை நியமித்தால் 1983 திரும்பக்கூடும்.
எவ்வளவு காலம் 1983ஐ சொல்லிக்கிட்டு இருப்போமோ...

வாட்மோர் விளையாடிய போட்டி விவரங்களை.. நண்பர்களே கொடுங்கள்...

அமரன்
04-05-2007, 10:07 AM
அறிஞரின் வேண்டுகோளுக்கிணங்க வட்மோர் பற்றிச் சில துளிகள்.
மிறப்பு: மர்ச் 16, 1954, கொழும்பு, சிறீலங்கா. (இவரது தாயார் இலங்கைக்கு உல்லாசப்பயணமாக வந்தபோது பிறந்தவர். அதனால் இவருக்கு இலங்கையில் கூட பிரயாவுரிமை உள்ளது)
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அபிராந்திய அணிக்காக விளையாடிய இவர் பின்னர் ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்காகவும் விளையாடினார். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் மார்ச் 10,1979 இல் மெல்பேர்னில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மாட்சில் முதன்முதலாக ஆடினார். முதல் இன்னிங்ஸில் ஆறாவது ஆட்டக்காரராக களமிறங்கிய இவர் 147 பந்துகளைஎதிர்கொண்டு 43 ஓட்டங்களை எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் ஆரம்பவீரராக களமாடிய இவர் 48 பந்துகளில் 15 ஓட்டங்களை எடுத்தார். தொடர்ச்சியாக ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 293 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்றார். இதில் இரண்டு ஐம்பது ஓட்டங்களை பெற்றுள்ளார். ஒரு சததைக்கூட பெறவில்லை. இறுதியாக இந்தியாவுக்கு எதிராக நொவெம்பர் 3 1979 இல் மும்மையில் ஆடினார். அதன் பின்னர் 1980 ஜனவரி 18 இல் மேற்கிந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். சிட்னியில் நடைபெற்ற இந்த ஆட்டமே இவரது முதலும் கடைசியுமான ஒருநாள் போட்டியாகும். அத்துடன் கிரிக்கட் உலகில் இவரது இறுதிப்போட்டியும் இதுவே. இந்தப்போட்டியில் இவர் 2 ஓட்டங்களை மட்டுமே பெற்றார். அதன் பின்னான இவர் வரலாறு அனைவரும் அறிந்ததே.
கொசுறு. வட்மோர் ஒருநாள் போட்டியில் விளையாடியாபோது காப்டனாக இருந்தவர் கிரேக் சப்பல்.

mania
04-05-2007, 11:01 AM
அறிஞருக்கு.......வாட் மோர் யூ வாண்ட்...??? ஹி....ஹி...ஹி...
அன்புடன்
மணியா....
(நரனுக்கு நன்றி)

அறிஞர்
04-05-2007, 01:35 PM

நன்றி நரேன்...
விளையாடி சாதிக்காத ஒருவர்.. பயிற்சியாளராக சாதிப்பதில் அதிசயமே.......

அறிஞர்
04-05-2007, 01:35 PM
அறிஞருக்கு.......வாட் மோர் யூ வாண்ட்...??? ஹி....ஹி...ஹி...
அன்புடன்
மணியா....
(நரனுக்கு நன்றி)
நோ மோர்....

அமரன்
04-05-2007, 06:24 PM
நன்றி நரேன்...
விளையாடி சாதிக்காத ஒருவர்.. பயிற்சியாளராக சாதிப்பதில் அதிசயமே.......

உண்மைதான் அறிஞரே. இவரைப்போன்று இப்போ டாம் மூடி வந்திருக்கின்றார். அவரின் திறமைகூட நன்றாகவே இருக்கின்றது.

அறிஞர்
04-05-2007, 06:29 PM
உண்மைதான் அறிஞரே. இவரைப்போன்று இப்போ டாம் மூடி வந்திருக்கின்றார். அவரின் திறமைகூட நன்றாகவே இருக்கின்றது.
அன்பரே.. முடிந்தால்.. டாம் மூடி பற்றியும் கொடுங்களேன் அறிந்துக்கொள்வோம்.

அன்புரசிகன்
04-05-2007, 06:38 PM
அன்பரே.. முடிந்தால்.. டாம் மூடி பற்றியும் கொடுங்களேன் அறிந்துக்கொள்வோம்.

இங்கே (http://content-gulf.cricinfo.com/australia/content/player/6628.html) சென்று அவரைப்பற்றிப்பார்க்கலாம்.

ஆதவா
04-05-2007, 06:46 PM
அறிஞரே! நீங்கள் சொன்னதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்..

கத்துக்குட்டி அணியான இலங்கைக்கு உலகக் கோப்பை வாங்கித்தந்ததே இவரின் திறமையான பயிற்சியினால்தான்... பங்களாதேசம் இன்றூ ஓரளவு நன்றாக விளையாடுவதற்கும் இவரே காரணம்...

poo
05-05-2007, 08:07 AM
அறிஞர் சொன்னதுபோல மோருக்கு நோ-தான்!!..

எதுக்கெடுத்தாலும் கோச்சுக்காத ஒரு கோச் வேணும்!!

சக்தி
05-05-2007, 10:50 AM
யார் கோச்சாக இருந்தாலும் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் வீரர்களிடம் வேண்டும். சூழ்நிலையை அறிந்து செயல் படும் கேப்டன் தேவை.

ராஜா
05-05-2007, 03:18 PM
நம் பின்னால் 110 கோடி மக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கின்றது என்ற உணர்வும் வேண்டும்.

சக்தி
05-05-2007, 03:28 PM
இது கில்லி கில்லி கில்லியடி ராஜா