PDA

View Full Version : பழமொழிகள் - மூலம் அறிதல்

அரசன்
04-04-2007, 11:44 AM
இந்த பகுதியில் நம் முன்னோர்கள் கூறிய பல பழமொழிகள் காலப்போக்கில் வார்த்தைகளும், அதன் பொருளும் மாற்றப்பட்டு உண்மையான பொருளர்த்தம் மறைந்து வேறொரு பொருளில் பேசப்பட்டு வருகிறது.எனவே
எனக்கு தெரிந்த ஒரு சில பழமொழிகளின் மூலங்களை விளக்குகிறேன்.தாங்களும் தங்களுக்கு தெரிந்த பழமொழிகளின் மூலங்களை இந்த பகுதியில் அளிக்கலாம்.
:icon_shades:

அரசன்
04-04-2007, 12:53 PM
சரி பழமொழிகளைப் பார்ப்போம்.
"மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" - இது பழமொழி.
இந்த பழமொழி காலப்போக்கில் "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று மாறிவிட்டது. அப்படி மாறவும் ஒரு பொருள் உண்டு. அதாவது களிமண்ணால் செய்த குதிரையை ஆற்றில் இறக்கினால் அது தண்ணீரில் கரைந்துவிடும் என்பது இயல்பு. அந்த பொருளில் எடுத்துக் கொண்டதால் இவ்வாறு மாறியிருக்கலாம் என்பது என் கருத்து.
ஆனால் உண்மையான மூலம், ஆற்றில் சில இடங்களில் மணலானது குவித்து வைக்கப்பட்ட ஒரு குவியல் போன்று காணப்படும். இந்த குவியலை "குதிர்" என்று அழைப்பார்கள். நாம் அந்த குவியலில் காலை வைத்தால் அது பொசுக்கென உள்ளே இழுத்துவிடும். இதன் காரணமாகவே அந்த குவியலை மேடு என்று நினைத்து காலை வைக்காதே என்பதற்காக "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று சொல்லியிருப்பதாக ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.:sport-smiley-018:

கருத்து வேறுபாடுகள் இருப்பின் தெரிவிக்கவும்.

ஓவியா
04-04-2007, 01:21 PM
நல்ல பதிவு. தொடருங்கள்

முன்பு காந்தி அண்ணா தொகுத்து வழங்கினார்.

மனோஜ்
04-04-2007, 01:48 PM
பலெ பலெ பழமொழி அர்த்தம் பூதுசு பூதுசு

அரசன்
05-04-2007, 10:34 AM
அடுத்ததாக
"சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா" - இதுதான் பழமொழி.
ஆனால் இந்த பழமொழி காலப்போக்கில் 'சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா' என்று மருவி உள்ளது. இதன் பொருள், ஒரு அதிக எடையுள்ள பொருளை தலையில் சுமக்கும் பொழுது, தலையில் வலியில்லாமல் இருக்க ஒரு துணியை சுற்றி தலையில் வைத்து, இப்போது அந்த பொருளை சுமந்தால் வலி ஏற்படாது. இதற்கு 'சும்மாடு" என்று பெயர். சோழியன் என்பது மனித சமூதாயத்தின் ஒரு பிரிவாகும். அவர்கள் குடுமி வளர்ப்பது மரபாக கருதப்பட்டது. எனவே அவர்களது குடுமியை சும்மாடோடு ஒப்பிட்டு சும்மாடு போல் வருமா என்பதற்காக, "சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா" என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டது.

விகடன்
05-04-2007, 01:48 PM
[B]சரி பழமொழிகளைப் பார்ப்போம்.
"மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" - இது பழமொழி.
.....

மிகவும் சரியான பதிப்பு. முறையாக திருத்தி அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறீர்கள்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

அரசன்
05-04-2007, 01:51 PM
மிகவும் சரியான பதிப்பு. முறையாக திருத்தி அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறீர்கள்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

தங்கள் ஆதரவிற்கு நன்றி

பரஞ்சோதி
05-04-2007, 04:43 PM
பலர் சொல்லியிருந்தாலும் உங்களால் மீண்டும் படிக்கும் போது இனிமையாகவே இருக்கிறது. தொடருங்கள்.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று சொல்லுறாங்களே! அதுக்கு என்ன விளக்கம்.

அரசன்
05-04-2007, 05:03 PM
பலர் சொல்லியிருந்தாலும் உங்களால் மீண்டும் படிக்கும் போது இனிமையாகவே இருக்கிறது. தொடருங்கள்.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று சொல்லுறாங்களே! அதுக்கு என்ன விளக்கம்.

ஆராய்ந்தறிந்த பின் விளக்குகிறேனே.

ஓவியன்
05-04-2007, 09:19 PM
.
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று சொல்லுறாங்களே! அதுக்கு என்ன விளக்கம்.

ஆறு வயதென்றாலும் நூறு வயதென்றாலும் சாவு என்பது எல்லோருக்கும் ஒரு முறை தான் வருமென்பதற்காகச் சொல்லி இருக்கிறார்களென்று நினைக்கின்றேன்.

அரசன்
12-05-2007, 02:17 PM
"முயலான் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல!" - இது பழமொழி.

இந்த பழமொழி காலப்போக்கில் முயலான் என்ற வார்த்தை மருவி முடவன் என்று மாறி 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல' என புழக்கத்தில் பேசப்படுகிறது. அதாவது, முயலான் என்றால் முயற்சி செய்யாதவன் என்று பொருள். கொம்புத் தேன் என்பது பெரிய மலை உச்சியிலும், காடுகளில் பெரிய பெரிய மரங்களின் உச்சியிலும் தேனீக்களால் தேன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த தேனீக்களிடமிருந்து தேனை எடுப்பது ஒரு சாதாரண விசயமல்ல. அந்த தேனை முயன்றால் தான் எடுக்க முடியும்.

எனவே தான் முயற்சி செய்யாமல் ஒரு பொருளின் மீது ஆசைபடுபவனிடம், "முயலான் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல!" என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி : மக்கள் தொலைக்காட்சி

அரசன்
06-08-2007, 06:32 AM
"குரைக்கிற நாய் கடிக்காது" இந்த பழமொழியைப் பார்ப்போம்.

குரைக்கிற நாய் கடிக்காது. ஏன் கடிக்காது. கடித்தலின் அறிகுறியே குரைத்தல். சரியான பழமொழி, "குழைகிற நாய் கடிக்காது". இந்த குழைகிற என்ற வார்த்தை காலபோக்கில் மாறி குரைக்கிற என்ற வார்த்தை நிலைத்து விட்டது. நாய்க்கு ஒரு உருண்டை சோறு போட்டால் அது வாலை ஆட்டிக்கொண்டு நம்மிடம் வந்து குழையும். இதன் பொருட்டு முன்னோர்கள் குழைகிற நாய் கடிக்காது என்று சொல்லியிருக்கிறார்கள்.

எனவே இனி யாரும் குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லாதீர்கள்.

இதயம்
06-08-2007, 07:04 AM

மருவி நிற்கும் பழமொழிகள் பற்றிய உங்கள் பதிவுகள் அசத்தலாக இருக்கிறது. பாராட்டுக்கள்..! இதில் "குரைக்கிற நாய் கடிக்காது" என்ற பழமொழியின் விளக்கம் மட்டும் எனக்கு முரண்படுகிறது. காரணம், பழமொழிகள் என்பவை விலங்குகளை, நிகழ்வுகளை உதாரணமாக உருவகமாக பயன்படுத்தி மனிதனுக்கு நீதியையும் அவனுக்கான நன்மையையும் பற்றி சொல்பவை. எந்த பழமொழியும் மனிதனைத்தவிர வேறு எதற்காகவும் சொல்லப்பட்டதல்ல. அந்த வகையில் "குரைக்கிற நாய் கடிக்காது" என்ற பழமொழி "குழைகிற நாய் கடிக்காது" என்பதாக இருந்து பின் மருவிற்று என்பதில் எந்த ஒரு அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை. "குழைகிற நாய் கடிக்காது" என்பதில் மனிதனுக்கான நீதி எதுவும் சொல்லப்படவில்லை. காரணம், பொதுவாக அமைதியாக, பொறுமையாக இருக்கும் மனிதர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்வதில் அரிதாக தான் இருக்கிறார்கள். ஆனால், "குரைக்கிற நாய் கடிக்காது" என்ற பழமொழியின் மூலம் நாம் அறியும் நீதியான தன் வாயை அதிகமாக பயனற்ற முறையில் பயன்படுத்துபவனிடமும், வெறும் வாய்ச்சவடால் விடுபவர்களிடம் எந்த விஷயமும் இருக்காது, அவர்களால் எதிரிகளை வெற்றி கொள்ளமுடியாது என்பதை குறிக்கத்தான் அப்படி சொன்னதாக நினைக்கிறேன். அப்படி பார்த்தால் "குரைக்கிற நாய் கடிக்காது" என்ற பழமொழி சரியானது தான்..!

namsec
06-08-2007, 07:11 AM
சரி பழமொழிகளைப் பார்ப்போம்.
"மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" - இது பழமொழி.
இந்த பழமொழி காலப்போக்கில் "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று மாறிவிட்டது. அப்படி மாறவும் ஒரு பொருள் உண்டு. அதாவது களிமண்ணால் செய்த குதிரையை ஆற்றில் இறக்கினால் அது தண்ணீரில் கரைந்துவிடும் என்பது இயல்பு. அந்த பொருளில் எடுத்துக் கொண்டதால் இவ்வாறு மாறியிருக்கலாம் என்பது என் கருத்து.
ஆனால் உண்மையான மூலம், ஆற்றில் சில இடங்களில் மணலானது குவித்து வைக்கப்பட்ட ஒரு குவியல் போன்று காணப்படும். இந்த குவியலை "குதிர்" என்று அழைப்பார்கள். நாம் அந்த குவியலில் காலை வைத்தால் அது பொசுக்கென உள்ளே இழுத்துவிடும். இதன் காரணமாகவே அந்த குவியலை மேடு என்று நினைத்து காலை வைக்காதே என்பதற்காக "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று சொல்லியிருப்பதாக ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.:sport-smiley-018:

கருத்து வேறுபாடுகள் இருப்பின் தெரிவிக்கவும்.

முற்றிலும் உண்மையான கருத்து

அரசன்
06-08-2007, 07:19 AM

நீங்கள் பார்க்கும் கோணத்தில் இருந்து பார்த்ததினால் தான் பழமொழி குரைக்கிற நாய் கடிக்காது என்று மாறியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். எல்லோருமே அதே அர்த்ததில் பார்க்கிறோம். இப்படி பாருங்களேன், அன்பாக, கருணை உள்ளம் கொண்டவர்கள் ஒரு போதும் தன் எதிரியாக இருந்தாலும் தீங்கு செய்யமாட்டான் என்பதன் பொருட்டும் சொல்லியிருக்கலாம் அல்லவா. எந்த பழமொழியும் ஒரு நீதியைதான் சொல்லுகிறது. ஆயினும் அது இயற்கைக்கு முரணான ஒரு நிகழ்வைக் குறித்து சொல்லப்படுவதில்லை.

உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள்!

சிவா.ஜி
06-08-2007, 07:25 AM
சரி பழமொழிகளைப் பார்ப்போம்.
"மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" - இது பழமொழி.
இந்த பழமொழி காலப்போக்கில் "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று மாறிவிட்டது. அப்படி மாறவும் ஒரு பொருள் உண்டு. அதாவது களிமண்ணால் செய்த குதிரையை ஆற்றில் இறக்கினால் அது தண்ணீரில் கரைந்துவிடும் என்பது இயல்பு. அந்த பொருளில் எடுத்துக் கொண்டதால் இவ்வாறு மாறியிருக்கலாம் என்பது என் கருத்து.
ஆனால் உண்மையான மூலம், ஆற்றில் சில இடங்களில் மணலானது குவித்து வைக்கப்பட்ட ஒரு குவியல் போன்று காணப்படும். இந்த குவியலை "குதிர்" என்று அழைப்பார்கள். நாம் அந்த குவியலில் காலை வைத்தால் அது பொசுக்கென உள்ளே இழுத்துவிடும். இதன் காரணமாகவே அந்த குவியலை மேடு என்று நினைத்து காலை வைக்காதே என்பதற்காக "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று சொல்லியிருப்பதாக ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.:sport-smiley-018:

கருத்து வேறுபாடுகள் இருப்பின் தெரிவிக்கவும்.
சரியான கருத்துதான்,இதற்கு இன்னொரு விளக்கமும் அளிப்பார்கள்.
'மங்கு திரையை நம்பி ஆற்றில் இறங்காதே' என்றும் சொல்வார்கள்.
வானம் மங்கலாக இருக்கும் போது காலநிலை நன்றாக இருக்கிறது என்று நினைத்து ஆற்றில் இறங்கக்கூடாது,ஏனென்றால் வானம் மங்கியிருக்கிறது என்றால் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்,அதனால் ஆற்றில் வெள்ளம் வரக்கூடும் எனவே இறங்கக்கூடாது என்றும் சொல்வார்கள்.

இதயம்
06-08-2007, 07:38 AM
அன்பாக, கருணை உள்ளம் கொண்டவர்கள் ஒரு போதும் தன் எதிரியாக இருந்தாலும் தீங்கு செய்யமாட்டான் என்பதன் பொருட்டும் சொல்லியிருக்கலாம் அல்லவா. எந்த பழமொழியும் ஒரு நீதியைதான் சொல்லுகிறது. ஆயினும் அது இயற்கைக்கு முரணான ஒரு நிகழ்வைக் குறித்து சொல்லப்படுவதில்லை.

உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள்!

நடை முறைக்கு முரணில்லாத ஒன்றை, எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை உணர்த்த பழமொழி பயன்பட்டது என்பதை ஏற்க கடினமாக இருக்கிறது. காரணம், அது ஏற்கனவே நடைமுறையில் முரணற்று இருப்பதாலும், எல்லோருக்கும் முன்பே தெரிந்து விட்டதாலும் அந்த நீதியை பழமொழி மூலம் மக்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியமில்லாது போகிறது. நடைமுறைக்கு எதிரான ஒன்றைபற்றி சொல்லி அதன் மூலம் மனித குலத்திற்கு ஒரு நீதியும் சொல்வதன் மூலம் பலரும் அறியாத கருத்தை சொல்லி விழிப்புணர்ச்சி ஊட்டவே பழமொழி உண்டானது என்பது என் கருத்து. உதாரணத்திற்கு, பசுத்தோல் போர்த்திய புலி..! ஆன்மீகவாதிகள் பசுவைப்போல் சாந்தமானவர்கள், அன்பானவர்கள், அடுத்தவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருப்பவர்கள் என்பது இயல்பு. ஆனால், ஆன்மீகம் என்ற பெயரில் காலித்தனம் செய்பவர்களை பசுத்தோல் போர்த்திய புலி என்கிறோம். ஆன்மீகவாதி இழிசெயல் செய்வது நடைமுறைக்கு முரணானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லவே இல்லை. சரியா அரசன்..?!

உதாரணத்திற்கு நடைமுறைக்கு முரணான பழமொழிகள் சில:
ஆடிக்காற்றில் அம்மி பறப்பது போல்..!
வெண்ணெய் திரண்டு வரும் நேரம் தாழி உடைந்தார் போல்..!
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை போல்..!
நிர்வாணமான ஊரில் கோவணம் கட்டியவன் முட்டாள் போல்..!

மீனாகுமார்
06-08-2007, 06:49 PM
பலே.. அருமையான முயற்ச்சி... அட்டகாசமான தொடக்கம்...

தோண்டி தோண்டி ஆராயத்தான் உண்மைகள் விளங்குகின்றன.. சில பழமொழிகளுக்கு 'பல' மொழிகள் அர்த்தங்கள் இருக்கும் போலிருக்கு...

நான் புதியதாக படித்த மொழி.. இப்போது அடிக்கடி பயன்படுவது...

புலி இல்லாத ஊரில் பூனை தான் ராசா

நுண்மையான* திற*மை வாய்ந்தவர்கள் இல்லாத* இட*த்தில் திற*மை குன்றிய*வ*ர்க*ள் த*லைமை ஏற்ப*ர்...

அர*சே, தொட*ர*ட்டும் உங்க*ள் சேவை.