PDA

View Full Version : தமிழ், இலக்கண சந்தேகம்.ஷீ-நிசி
04-04-2007, 10:22 AM
திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம் தோன்றியது நண்பர்களே!

எங்கெங்கே இரண்டு சுழி 'ன' அல்லது மூன்று சுழி 'ண' போடவேண்டும் என்று சிறுவயதில் படித்ததினிமித்தம் அதனடிப்படையில் நான் பதிக்கிறேன் முடிந்த அளவு சரியான வார்த்தைகளை உபயோகிக்கிறேன்.

இலக்கணப்படி எப்படி அமைக்கவேண்டும் சரியான வார்த்தைகளை?

உதாரணத்திற்கு..

தகவள் - தவறு
தகவல் - என்பதுதான் சரி...

ஏன் இந்த 'ள்' இங்கே உபயோகிக்ககூடாது.. ஏன் இந்த 'ல்' தான் உபயோகிக்கவேண்டும். என்னிடம் விடை இல்லை.. நண்பர்களே! உங்களுக்கு தெரிந்தால் எனக்கு உதவுங்கள்..

ஓவியன்
04-04-2007, 10:24 AM
இன்னுமொரு தமிழ் செப்பனிடும் திரியா?

நல்லது, ஷீ - நிசி நல்லது.

இங்கும் என் பங்கிருக்கும்.

ஷீ-நிசி
04-04-2007, 10:27 AM
நம் தமிழ் ஆசான்கள் அந்த நாளிலே தீர்மானித்து நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.. அவர்கள் ஏதோ இலக்கணத்தின் படிதான் நமக்கு வார்த்தைகளை வரைமுறைப்படுத்தியிருப்பார்கள்.. அது எப்படி? எவ்விலக்கணத்தின்படி? அந்த சூட்சுமம் தெரிந்துக்கொண்டால் எந்த இடத்தில் மூன்று சுழி 'ண' இரண்டு சுழி 'ன' 'ழி' 'லி' 'ளி' ஆகியனவற்றை எங்கே உபயோகபடுத்துவது என்று பழகிவிடும்.

நண்பர்களே பதில் கூறுங்கள்!

விகடன்
04-04-2007, 10:28 AM
எனக்கு சொற்பளவிலான இலக்கணந்தான் தெரியும் நண்பரே. உங்களுடைய துரதிஸ்டம், எனக்குத்தெரிந்ததில் இந்த "ல்", "ள்" ,"ழ்" விடயம் இல்லை.


தெரிந்திருக்கும் பட்சத்தில் கட்டாயம் களமிறங்குவேன்.

உங்களின் இந்த திரி சிறப்புடன் வளர எனது வாழ்த்துக்கள்.

ஓவியன்
04-04-2007, 10:29 AM
உண்மை தான் ஷீ - நிசி, ஆனால் எனக்கு தமிழ் இலக்கணத்தில் அந்தளவு பரீட்சயமில்லை.

ஆனால் நம்ம நண்பர்கள் வந்து சரியான தகவல் தருவார்களென நினைக்கின்றேன்.

crisho
04-04-2007, 10:48 AM
ஏதோ பாமரன் என் அறிவுக்கு எட்டியதை கூறுகிறேன்....
"ல", "ள", "ழ", "ல்", "ள்" ,"ழ்" -
இவ் எழுத்துக்கள் அதன் உச்சரிப்பு தன்மையை ஒட்டி மாறுபடுகின்றன.

தமிழர் நாம் இவ் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அறிது (வாழைப் பழம் என்று உச்சரிப்பதற்கு பதிலாக வாலைப் பலம் என்று பேச்சு நடையில் சொல்கிறேம்) ஆனால் மலையாளிகள் (கேரளத்த்தவர்) இதற்கு விதி விலக்கு!!

என்னால் "ன", "ண", "ந" எப்படி கையாளப்படுகிறது என்றறியாமலுள்ளேன்!! :D

பரஞ்சோதி
04-04-2007, 12:10 PM
நல்ல திரி ஷீ-நிசி

எனக்கும் ரொம்ப சந்தேகங்கள் உண்டு.
ஆனா பாருங்க தட்டச்சு செய்யும் போது தவறாக போட்டால் என்னை அறியாமல் அது ஏதோ போல் தோன்றும், உடனே மாத்திடுவேன்.

ஷீ-நிசி
04-04-2007, 12:19 PM
ஆமாம் பரம்ஸ்.. எனக்கும் அதுபோல் நேரிடும், இரண்டுமுறையாவது என் பதிப்பை திருத்திவிடுவேன்..

பரஞ்சோதி
04-04-2007, 12:28 PM
ஆஹா!

அப்போ நாம எல்லாம் ஒரே பாணியைத் தான் கடைப்பிடிக்கிறோம்.

என்னுடைய பிரச்சனை எல்லாம் ஒற்று எழுத்துக்களில் தான் வரும், க், ச், ப் எல்லாம் எப்போ போடுவது, எப்போ போடக்கூடாது என்று தெரியாது.

ஷீ-நிசி
04-04-2007, 12:32 PM
தமிழ் என்றால் படிக்கும்போதே ஆர்வம், என் கட்டுரை நோட்டில் ஆசிரியரால் ஒன்றிரண்டு எழுத்துப்பிழையே காணமுடியும். ஆனால் இணையத்தில் தட்டச்சு செய்யும்போது என்னையும் அறியாமலே தவறுகள் சில பிழைகள் நிகழ்கின்றன... அதனால் ஒன்றிற்கு இரண்டுமுறையாவது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளது.

பரஞ்சோதி
04-04-2007, 12:34 PM
பள்ளி படிக்கும் போது தவறு செய்தால் அடியும், மதிப்பெண்கள் குறையும்.

இங்கே யாருமே தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற எண்ணமும், வேகவேகமாக பதில் கொடுக்க நினைப்பதுவே தவறுகளுக்கு காரணமாக அமைகிறது.

ஷீ-நிசி
04-04-2007, 12:40 PM
மிகச் சரியா சொன்னீங்க பரம்ஸ்

தாமரை
04-04-2007, 04:31 PM
ழ, ள, ல ஆகியவற்றிற்கு உச்சரிப்பு விதிகள் உள்ளன. ஆனால் இந்த வார்த்தைக்கு இந்த எழுத்தை உப்யோகிக்கவேண்டும் என வார்த்தை உருவாகும்பொழுது நிர்ணயிக்கப்படுகிறதென எண்ணுகிறேன்..

ண, ன, ந ஆகியவற்றிற்க்கு ஒரு விதி...

பந்தி, நந்தி, சந்தி, கந்தி.. மந்தி..

த விற்கு முன்னால் நகர ஒற்று வரும்
மண்டி, சண்டை, கெண்டை, என டகரத்திற்கு முன்னால் ணகர ஒற்று வரும்..

கன்று, மென்று, கொன்று, சென்று என றகரத்துக்கு முன் னகர ஒற்று வரும்.. அதனாலேயே இவை டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என அழைக்கப் படுகின்றன.
www.thedmk.org (http://www.thedmk.org) உள்ள இலக்கணப் புத்தகம் எங்கு இவை உபயோகப்படுத்தப் படலாம் என சில ஆலோசனைகளைத் தருகின்றன

முழு விதிகள் ... தேடித் தேடிப் பார்க்கிறேன்..

mukilan
04-04-2007, 04:37 PM
அருமையான விளக்கம் வாத்தியார் சார்!!! எங்கே போயிருந்தீங்க இவ்ளோ நாளா?

விகடன்
04-04-2007, 06:49 PM
புதியதோர் பாடம்... எனக்கு

நன்றி செல்வன்

மனோஜ்
04-04-2007, 07:08 PM
இதுவு எனக்கு தகரறாறு தான் நல்ல பதிவுகள் நன்றி

இளசு
04-04-2007, 09:23 PM
ஷீ தொடங்க, செல்வன் பாடம் எடுக்க
மற்றொரு பயனுள்ள திரி..

பாராட்டுகள் நண்பர்களே..

நானும் கற்றுக்கொள்கிறேன்..

தொடருங்கள்... விளக்கம் கேட்போரும், அளிப்போரும்!

மன்றத்தில் ஒன்று சொல்லி நான் நம் நண்பர்களிடம் வசமாய் மாட்டிய சம்பவம் ஒன்று உண்டு..

பொருள் - இதன் பன்மை என்ன எனக்கேட்கப்பட்டது.

வாள், நாள் இதைச்சுட்டி நான் பொருட்கள் சரி எனச் சொன்னேன்.

நண்பர்கள் தமிழ் அகராதியில் பொருள்கள் என்பதே சரியான சொல்லாய்த் தரப்பட்டிருக்கிறது எனச் சுட்டினார்கள்..

அந்தப்பதிவைத் தேடி கிடைக்கவில்லை... மேல்விளக்கம் அளிக்க..


செல்வன், ராகவன் உள்ளிட்ட நம் நண்பர் குழு இதை விளக்கி
என் பிழையைத் திருத்த உதவவேண்டும்.. நன்றி!

ஓவியா
04-04-2007, 09:28 PM
அருமையான திரி, எனக்கு முக்கியமான திரி,
நன்றி ஷி-நிஷி.

செல்வன் அண்ணா பாடம் ஆரம்பம்.........தூள்

ஓவியா எஸ்கேப் (பரிட்சை)

leomohan
04-04-2007, 09:30 PM
நானும் கற்க ஆவலாக இருக்கிறேன்.

ஒரு எழுத்து அதிகப்படியாக நடுவில் பயன்படுத்தப்படுகிறதா முடிவில் பயன்படுத்தப்படுகிறதா அல்லது முதலில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஒட்டியே வல்லினம் இடையினம் மெல்லினம் எழுத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது என் கருத்து.

மொழி ஆராய்ச்சி எப்போதுமே இனிமை தான்.

ஓவியா
04-04-2007, 09:32 PM
பள்ளி படிக்கும் போது தவறு செய்தால் அடியும், மதிப்பெண்கள் குறையும்.

இங்கே யாருமே தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற எண்ணமும், வேகவேகமாக பதில் கொடுக்க நினைப்பதுவே தவறுகளுக்கு காரணமாக அமைகிறது.


நன்றாக சொன்னீர்கள்.

இதை எப்படி நிவர்த்தி செய்யலாம் அண்ணா???

இப்பொழுதெல்லாம் தங்களின் பதிவுகளில் ஊசிபோல் கருத்துக்களை வைத்துதான் செல்கின்றீர்கள். நன்றி.

இளசு
04-04-2007, 09:38 PM
நானும் கற்க ஆவலாக இருக்கிறேன்.

ஒரு எழுத்து அதிகப்படியாக நடுவில் பயன்படுத்தப்படுகிறதா முடிவில் பயன்படுத்தப்படுகிறதா அல்லது முதலில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஒட்டியே வல்லினம் இடையினம் மெல்லினம் எழுத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது என் கருத்து.

மொழி ஆராய்ச்சி எப்போதுமே இனிமை தான்.

அட...அருமை!
இன்னும் விளக்கம் தாருங்கள் மோகன்...

leomohan
04-04-2007, 10:06 PM
லாவகமாய் - இதில் ள முதலில் வருவதில்லை. ஆக ல முதலாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கல் செல் போன்றவை விதிவில்ககு.

ள - பெரும்பாலும் பன்மை குறிக்க உதவுகிறது.
கற்கள் சொற்கள் - ஆனால் முதலாக பயன்படுத்தபடுவதில்லை.
கள்வன் - நடுவிலும் வருகிறது.

ந - முதலாக வார்தைகளில் அதிகம் பயன்படுகிறது. நண்பன். நல்லவன்.

ன - பெரும்பாலும் ன் ஆகவும் ன வாகவும் முடிவில் பயன்படுத்தப்படுகிறது. நடுவிலும் வருகிறது. ஆனால் துவக்கத்தில் வருவதில்லை.

நண்பன் நல்லவன். நல்லவந் என்று சொல்வதில்லை. விதிவிலக்கு கன்று நன்று வென்று போன்றவை

ண - ஆரம்பத்திலும் முடிவிலும் அதிகம் வருவதில்லை. கண் மண் போன்றவை விதிவிலக்கு. கண்டு போன்ற வார்த்தைகள்.


இது என்னுடைய observation தான். முறையாக நான் இலக்கணம் கற்கவில்லை.

இளசு
04-04-2007, 10:31 PM
இது என்னுடைய observation தான். முறையாக நான் இலக்கணம் கற்கவில்லை.

கூர்ந்து கவனித்தல் - முறையான கற்றலுக்குச் சளைத்ததில்லையே மோகன்..

தொடர்ந்து பகிருங்கள்.. நன்றி!

ஆதவா
05-04-2007, 02:25 AM
என்னங்க ஷி!! இப்படி திரி திரி யா கொழுத்தி வுட்டு என் மனசுல பொறாமை வளர்த்தீட்டீங்களே!!!..... :D

வாழ்த்துக்கள்... அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்துக்கொள்கிறேன்.. எனக்கும் பல இடங்களில் பிரச்சனை வந்துட்டுது.

ஷீ-நிசி
05-04-2007, 04:47 AM
செல்வனின் பாடம் அருமை... மோகன் சாரின் இலக்கண கவனிப்பு அருமை.. ஆதவா அடிக்கடி வந்து எட்டிப்பாருப்பா.... நீயெல்லாம் செய்யுள் கவிதையில கலக்கறவரு.. இலக்கணமும் கொஞ்சம் சொல்லிக்குடுப்பா..

இளசு அவர்களே!

திருவள்ளுவரின் எழுதிய குறள்கள் எத்தனை என்றுதானே கேட்கிறோம்?

அதாவது குறள் - ஒருமை, குறள்கள் - பன்மை...

அதேப்போல பொருள் - ஒருமை, பொருள்கள் - பன்மை..

பொருள்கள் என்பதுதானே சரி..

'ள்+ப' சேரும் இடத்தில்தானே 'ட்' உதிக்கும்..

உதா. திருவருள்+பாடல்கள் - திருவருட்பாக்கள்..

என் கூற்று சரியா?

gayathri.jagannathan
05-04-2007, 06:26 AM
செல்வனின் பாடம் அருமை... மோகன் சாரின் இலக்கண கவனிப்பு அருமை.. ஆதவா அடிக்கடி வந்து எட்டிப்பாருப்பா.... நீயெல்லாம் செய்யுள் கவிதையில கலக்கறவரு.. இலக்கணமும் கொஞ்சம் சொல்லிக்குடுப்பா..

இளசு அவர்களே!

திருவள்ளுவரின் எழுதிய குறள்கள் எத்தனை என்றுதானே கேட்கிறோம்?

அதாவது குறள் - ஒருமை, குறள்கள் - பன்மை...

அதேப்போல பொருள் - ஒருமை, பொருள்கள் - பன்மை..

பொருள்கள் என்பதுதானே சரி..

'ள்+ப' சேரும் இடத்தில்தானே 'ட்' உதிக்கும்..

உதா. திருவருள்+பாடல்கள் - திருவருட்பாக்கள்..

என் கூற்று சரியா?

நிசி, அப்படியென்றால், தங்கட்கு என்ற பதத்திற்கு விளக்கம் அளியுங்கள்...

phrase என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ்ப் பதம் என்ன?

அறிஞர்
05-04-2007, 06:36 AM
பாடம் அருமையாக போகுது.. நானும் கற்றுக்கொள்ளலாம் போல...

இதில் வரும் சொற்களை தொகுத்து கடைசியில் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அறுமை - தவறு
அருமை - சரி...

ஓவியன்
05-04-2007, 06:44 AM
நிசி, அப்படியென்றால், தங்கட்கு என்ற பதத்திற்கு விளக்கம் அளியுங்கள்...


தங்கட்கு என்றும் பாவிப்பார்கள் - தங்களிற்கு என்றும் பாவிக்கின்றோம். இதில் எது சரி?
இரண்டும் சரி தானா?

ஷீ-நிசி
05-04-2007, 12:21 PM
தங்கட்கு என்ற வார்த்தை சரியாக இருப்பதாக படவில்லை.. தங்களுக்கு என்பதே சரி... தங்கட்கு என்ற வார்த்தை எங்கு பயன்படுகிறது?

ஓவியன்
05-04-2007, 12:28 PM
தங்கட்கு என்ற வார்த்தை சரியாக இருப்பதாக படவில்லை.. தங்களுக்கு என்பதே சரி... தங்கட்கு என்ற வார்த்தை எங்கு பயன்படுகிறது?
கவிதைகளில் கண்டுள்ளதாக ஞாபகம். ஆனால் அது சரியானதோ தெரியவில்லை.

தங்களுக்கு என்பது சரிதான், நான் தங்களிற்கு என்றும் பாவிக்கின்றேன்.

ஓவியன்
21-09-2007, 12:33 PM
வாழ்த்துக்கள் என்பதா வாழ்த்துகள் என்பதா சரியானது..????

ஆதவா
21-09-2007, 01:01 PM
வாழ்த்துக்கள் என்பதா வாழ்த்துகள் என்பதா சரியானது..????

வாழ்த்துகள் என்பது சரி என்று நினைக்கிறேன்....:smilie_abcfra:

வாழ்த்து - ஒருமை பன்மை வார்த்தையான கள்" சேரும் போது ஒற்று அளபெடுக்காது என்பது பல வார்த்தைகளைக் கண்டு நானறிந்தவை.....
உதாரணம்

துகள் - துகள்கள்
வார்த்தை - வார்த்தைகள்

சில வரும் வார்த்தையான க" கர வரிசைப்படி ஒற்று உருவாகும்... உதாரணம்

நெஞ்சம் - நெஞ்சங்கள் (கவனிக்க, இறுதியெழுத்து மகரம் என்றால் பன்மை வார்த்தைக்கான ஒற்று "ங்" ஆகவே வருகிறது...)

சில திரிந்து போவதுமுண்டு இல்லையா?

நாள் - நாட்கள்.
வாள் - வாட்கள்

பாரதி
22-09-2007, 08:40 AM
ஞா.தேவநேயப்பாவாணரின் நூலில் இருந்து:

ண்,ம்,ல்,ள்,ன் என்ற மெய்கள் வல்லினத்தோடு புணரின், இரு வழியிலும் பெரும்பாலும் பின்வருமாறு திரியும்.

எழுத்து திரிவு எடுத்துக்காட்டு

ண் ட் மண்+கலம்=மட்கலம்

ம் ங் மரம்+குறிது = மரங்குறிது
ம் ஞ் மரம்+சிறிது = மரஞ்சிறிது
ம் ந் மரம்+தழைக்கும் = மரந்தழைக்கும்

ல் ற் கல்+பலகை = கற்பலகை

ள் ட் கள்+குடம் = கட்குடம்

ன் ற் பொன்+பணி = பொற்பணி


ண், ள் என்னும் மெய்கள் 'த'கரத்தோடு புணர்ந்து 'ட'கரமாகும் போது, அத்'த'கரமும் 'ட'கரமாகும்.

எடுத்துக்காட்டு:

மண்+தாழி = மட்டாழி, மண்டாழி
முள்+தாழை = முட்டாழை

(மட்தாழி,முட்தாழை என எழுதுவது தவறு.)

ல், ன் என்னும் மெய்கள் 'த'கரத்தோடு புணர்ந்து 'ற'கரமாகும் போது, அத்'த'கரமும் 'ற'கரமாகும்.

எடுத்துக்காட்டு:

கல்+தாழை = கற்றாழை
பொன்+தோடு = பொற்றோடு

'ந'கரம் ண்,ள் என்ற மெய்களுக்குப் பின்வரின் 'ண'கரமாகவும், ன்,ல் என்ற மெய்களுக்குப் பின்வரும் 'ன'கரமாகவும் இரு வழியிலும் திரியும்.

'ள'கரத்தோடு புணர்ந்து 'ந'கரம் 'ண'கரமாகும் போது அவ்'ள'கரமும் 'ண'கரமாகும்.

'ல'கரத்தோடு புணர்ந்து 'ந'கரம் 'ன'கரமாகும் போது அவ்'ல'கரமும் 'ன'கரமாகும்.

எடுத்துக்காட்டு:

கண்+நீர் = கண்ணீர் (ண்+ந=ண்ண)
கள்+நீர் = கண்ணீர் (ள்+ந=ண்ண)
பொன்+நகை = பொன்னகை (ன்+ந=ன்ன)
கல்+நகை = கன்னகை (ல்+ந=ன்ன)

'தங்கட்கு' என்பதும் 'வாழ்த்துகள்' என்பதும் சரி என்று தோன்றுகிறது.

ஓவியன்
22-09-2007, 08:46 AM
ஆமாம் பாரதி அண்ணா தங்கட்கு என்பது தாங்கள் குறிப்பிட்ட முறையிலே பார்கும் போது சரியாகவே தோன்றுகின்றது. ஆனால் இந்த வாழ்த்துக்கள் தான் கொஞ்சம் குழப்புகிறது.

விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா!

ஓவியன்
22-09-2007, 08:51 AM
நான் முன்பு எப்பவோ படித்தது இது...

இரண்டு சொற்கள் புணரும் போது...


புதிய எழுத்து உருவாகலாம்
உள்ள எழுத்துக்களில் எதாவது கெட்டு இல்லாமற் போகலாம்
இரு எழுத்துக்கள் விகாரமடைந்து புதிய எழுத்து உருவாகலாம்


இங்கே
தங்கட்கு என்பது விகாரப் புணர்ச்சி என்று நினைக்கின்றேன்....

அமரன்
22-09-2007, 08:53 AM
மரம்+கலம்=மரக்கலம்(?) என்றுதானே வருகிறது..அப்படி ஏதாவது ஒரு முறையில் வாழ்த்துக்கள் வரலாமல்லவா?

ஓவியன்
22-09-2007, 09:00 AM
அந்த முறையில் வந்தது என்று சொல்ல முடியாது அமர்....

இங்கே மரம்+கலம் = மரக்கலம் என்பது ஒரு விகாரப் புணர்ச்சி...
அதாவது புணர்ச்சியின் போது "ம்" என்பது விகாரமுற்று "க்" ஆக மாறுகிறது.

ஆனால்

வாழ்த்து + கள் என்பதை வாழ்த்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அது விகாரப் புணர்ச்சியல்ல, அங்கே புதிய ஒரு எழுத்து "க்" என தோற்றம் கொண்டுள்ளது...!! :confused:

பாரதி
23-09-2007, 09:30 AM
ஆமாம் பாரதி அண்ணா தங்கட்கு என்பது தாங்கள் குறிப்பிட்ட முறையிலே பார்கும் போது சரியாகவே தோன்றுகின்றது. ஆனால் இந்த வாழ்த்துக்கள் தான் கொஞ்சம் குழப்புகிறது.

விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா!

அன்பு ஓவியன்,

விழுது+கள் = விழுதுகள்
துகள்+கள் = துகள்கள்

விழுதுக்கள் அல்லது துகள்க்கள் எனில் அவற்றில் இருந்து பெறப்பட்ட கள் என்பதாக பொருள்படும். ஆகவே வாழ்த்துகள் என்பதுதான் சரி. (சில வாரங்களுக்கு முன் வரை நானும் வாழ்த்துக்கள் என்றுதான் உபயோகித்து வந்தேன்.)

விதிவிலக்காக வார்த்தைகள் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது.

ஓவியன்
23-09-2007, 10:35 AM
மிக்க நன்றி அண்ணா!!

நானும் வாழ்த்துக்கள் என்றே இதுவரை உபயோகித்து வந்தேன், இனிவரும் காலங்களில் வாழ்த்துகள் எனச் சரியாக எழுதலாம்....

தொடர்ந்து இந்த திரியிலே இவ்வாறான சந்தேகங்களைத் தீர்ப்போம். :)

பூமகள்
23-09-2007, 10:46 AM
நானும் இத்தனை நாளும் "வாழ்த்துக்கள்" என்று தான் உபயோகித்தேன்.
நன்றாக இருக்கிறது உங்கள் அனைவரின் விளக்கமும்.
நன்றிகள் மற்றும் பாராட்டுகள்..!!
வாழ்த்துகள் அன்பர்களே..!!

praveen
23-09-2007, 10:48 AM
எனக்குத்தெரிந்தவரை, முதலில் ஒரு சொல் தோன்றி வேறொரு சொல்லை மாறுபடுத்த அதை முன்னோர்கள் இவ்வாறு பிரித்திருக்கலாம். மற்றும் அந்தக்காலங்களில் செய்யுள் தான் முழுமையாக இருந்தது, உரைநடை கிடையாது (உரையாடவாவது செய்தார்களா அல்லது அதற்கும் பாட்டு தானா என்று தெரியவில்லை).

செய்யுளில் மாத்திரை அளவை சரி செய்வதற்கும் இவ்வாறு செய்திருக்கலாம்.

இதெல்லாம் எனது யூகமே, இந்த பதிவை எனது தமிழ்வாத்தியார் திரு.ராசேந்திரன் அவர்கள் கண்டால் என் காது தப்பாது.

இளசு
24-09-2007, 08:53 PM
பாரதியின் தொடரும் பாடப்பணிக்கு நன்றி..

பிழைகளைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைக்க
இத்தவணை முறை இலக்கண ஊட்டல்கள் உதவும்..

அசோ,
தமிழாசிரியரை வாத்தியார் என்றதற்காக
அடுத்த காதும் தப்பாமல் சிக்கும்..

திரு. இராசேந்திரன் கைகளுக்கு என வாழ்த்தும்
அசோ காதுகளுக்கு கொஞ்சம் களிம்பும் அனுப்புகிறேன்.

சாம்பவி
29-09-2007, 12:20 AM
வாழ்த்துகள் என்பது சரி என்று நினைக்கிறேன்....:smilie_abcfra:

வாழ்த்து - ஒருமை பன்மை வார்த்தையான கள்" சேரும் போது ஒற்று அளபெடுக்காது என்பது பல வார்த்தைகளைக் கண்டு நானறிந்தவை.....
உதாரணம்

துகள் - துகள்கள்
வார்த்தை - வார்த்தைகள்

.

அன்பு ஓவியன்,

விழுது+கள் = விழுதுகள்
துகள்+கள் = துகள்கள்

விழுதுக்கள் அல்லது துகள்க்கள் எனில் அவற்றில் இருந்து பெறப்பட்ட கள் என்பதாக பொருள்படும். ஆகவே வாழ்த்துகள் என்பதுதான் சரி. (சில வாரங்களுக்கு முன் வரை நானும் வாழ்த்துக்கள் என்றுதான் உபயோகித்து வந்தேன்.)

விதிவிலக்காக வார்த்தைகள் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது.

அப்படியானால்
கள்ளை வடிக்கும் அவை
பூகளா .. இல்லை பூக்களா..?
கல்லை வடிக்கும் அவர்கள்
சிற்பிகளா அல்ல சிற்பிக்களா ..?

அது போகட்டும்..
நீங்கள் மன்றத்து
முத்துகளா இல்லை முத்துக்களா
உங்கள் படைப்புகள்
பாகளா.. ..பாக்களா.. ?
அவை விலையில்லா
சொத்துகளா.... சொத்துக்களா ... ?

ஆமாம் இவைகளெள்ளம்
எழுத்துகளா இல்லை எழுத்துக்களா
சொல்களா....சொற்களா
வார்த்தைகளா....வார்த்தைக்கள்ளா ?

ஆதலால் நண்பர்களே
வாழ்த்துக்களா....வாழ்த்துகளா ?

குட்டையை மிகவும் குழப்பிவிட்டேனோ !! ... :rolleyes:

சரி சரி... விஷயத்திற்கு வருவோம்..
இதோ இந்த ஒற்று மிகும் சித்து விளையாட்டின் ஸுத்திரதாரி....
"வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் ஒற்று மிகும்"

பிரித்து எழுதும் பக்ஷத்தில்
"வன் தொடர் குற்றியல் உகரத்தின் பின் ஒற்று மிகும்"

தெளிந்திருக்கணுமே....!! :) அதே அதே.. !! :icon_b:

வால் மட்டும் நுழையாதவர்கட்கு.. :-
வன் ==> வன்முறையில் இருக்கும் அதே வன்... வன்மையான வல்லினம் ( க, ச, ட, த, ப, ற )
தொடர் ==> தொடருமேயானால்...
குற்றியல் உகரம் ==> இது ஒரு சிறிய கதை :sprachlos020:...இன்னொறு நாள் சொல்கிறேனே ;)... . இப்போதைக்கு வல்லின உகரம் அது போதும் ( கு, சு, டு, து, பு, று )
பின் ==> பின்னால்
ஒற்று மிகும் ==> அடுத்து வரும் வரு மொழியின் ஒற்றானது இரட்டிக்கும்.,.

அதாவது...
வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து :smilie_abcfra:.. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.
:)
ஆதலினால் நண்பர்களே,
குழம்பா ரசமா ... ?

நலம் வாழ எந்நாளும் நல் வாழ்த்துக்கள் !! :)

பி.கு: அப்போ......
ஆயிரம் தாமரை மொட்டுக்கள்
மூச்சு விடா மொட்டுகளானது எப்படி.. ? :p
.

அக்னி
29-09-2007, 01:17 AM
சாம்பவி...
உங்கள் விளக்கம் அருமை...
வினாக்களை எழுப்பி அதனூடு விடை காணும் திறன்...
பாரதி அண்ணா எம்மை இலக்கணச் செப்பனிடுகின்றார்.
அதேபோல, நீங்களும் தொடங்கலாமே...

வார்த்தைகளா....வார்த்தைக்கள்ளா ?

இது கொஞ்சம் குழப்புமாப்போலிருக்குதே...

சாம்பவி
29-09-2007, 01:28 AM
இது கொஞ்சம் குழப்புமாப்போலிருக்குதே...

போச்சுடா.... குழம்பு தானா... :(

வார்த்தையில் எங்கே இருக்கு குற்றியலுகரம்.. ?


குற்றியல் உகரம் ==> இது ஒரு சிறிய கதை ...இன்னொறு நாள் சொல்கிறேனே ... . இப்போதைக்கு வல்லின உகரம் அது போதும் ( கு, சு, டு, து, பு, று )

அக்னி
29-09-2007, 01:35 AM
போச்சுடா.... குழம்பு தானா... :(

வார்த்தையில் எங்கே இருக்கு குற்றியலுகரம்.. ?
புரிந்தது... நன்றி விளக்கத்திற்கு...
தமிழ்மொழி ரொம்ப சிக்கல்தான்...
தொடருங்கள்... நாங்கள் வளர்கின்றோம்...

பாரதி
29-09-2007, 02:12 AM
இதோ இந்த ஒற்று மிகும் சித்து விளையாட்டின் ஸுத்திரதாரி....
"வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் ஒற்று மிகும்"

பிரித்து எழுதும் பக்ஷத்தில்
"வன் தொடர் குற்றியல் உகரத்தின் பின் ஒற்று மிகும்"

தெளிந்திருக்கணுமே....!! :) அதே அதே.. !! :icon_b:

வால் மட்டும் நுழையாதவர்கட்கு.. :-
வன் ==> வன்முறையில் இருக்கும் அதே வன்... வன்மையான வல்லினம் ( க, ச, ட, த, ப, ற )
தொடர் ==> தொடருமேயானால்...
குற்றியல் உகரம் ==> இது ஒரு சிறிய கதை :sprachlos020:...இன்னொறு நாள் சொல்கிறேனே ;)... . இப்போதைக்கு வல்லின உகரம் அது போதும் ( கு, சு, டு, து, பு, று )
பின் ==> பின்னால்
ஒற்று மிகும் ==> அடுத்து வரும் வரு மொழியின் ஒற்றானது இரட்டிக்கும்.,.

அதாவது...
வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து :smilie_abcfra:.. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.
:)
ஆதலினால் நண்பர்களே,
குழம்பா ரசமா ... ?

நலம் வாழ எந்நாளும் நல் வாழ்த்துக்கள் !! :)

பி.கு: அப்போ......
ஆயிரம் தாமரை மொட்டுக்கள்
மூச்சு விடா மொட்டுகளானது எப்படி.. ? :p
.

முதற்கண் நம்முடைய சந்தேகத்தை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

"வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் ஒற்று மிகும்"

வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து .. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.
- மிக சுருக்கமான எளிய விளக்கம்.

நடைமுறையில் உபயோகிக்கும் சொற்கள் சரியானவையா என்று தெரியாமலே நாம் அதை உபயோகித்துக்கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறதல்லவா..?

கொக்குகளா.. இல்லை கொக்குக்கள்ளா..?

மீண்டும் மிக்க நன்றி.

அக்னி
29-09-2007, 08:31 AM
கொக்குகளா.. இல்லை கொக்குக்கள்ளா..?

அண்ணா... திரும்பக் குழம்பு...
:mini023: :smilie_abcfra: :confused:

பாரதி
29-09-2007, 08:35 AM
மேலும் ஊற்று,கீற்று,நெற்று,பருப்பு,அச்சு,செக்கு,தட்டு,லட்டு ... இப்படி பல சொற்களின் பன்மையும் இலக்கணப்படிதான் எழுதப்படுகிறதா...? இங்கே நாம் முதலில் குழம்புவது தெளிவாகத்தான் அக்னி.

சாம்பவி
29-09-2007, 09:54 PM
அந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள் விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ்.
ஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் :frown: ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..!

இன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பண்மை..? பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... ?

தமிழ்த் தாய் வாழ்த்து ;)
.

இளசு
29-09-2007, 11:17 PM
இங்கே நாம் முதலில் குழம்புவது தெளிவாகத்தான் அக்னி.

நன்றி பாரதி..

இப்போ அதிகமாய்க் குழம்பியிருக்கிறேன்..
எனவே
அதிகமாய்த் தெளிவேன் என நம்புகிறேன்..:)

--------------------------------------------

நன்றி சாம்பவி
(பெயர் மாற்றத்திற்கு இன்னொரு நன்றி:))
ஸ்கேலடி புகழ் வசந்தா டீச்சர், அப்புறம் அறிவார்ந்த உங்கள் தந்தை..
இவர்களுக்கும் உங்கள் மூலம் நன்றி சொல்கிறேன்..

-------------------

குழப்பம் அதிகரிக்கட்டும்!

பாரதி
30-09-2007, 12:35 AM
அந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள் விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ்.
ஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் :frown: ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..!

இன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பன்மை..? பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... ?

தமிழ்த் தாய் வாழ்த்து ;)
.

இப்போது தெளிவாகிறது சாம்பவி. வழக்குமொழியிலும், நாம் எழுதுவதைப் போலவே உச்சரிப்பது சரியானதுதானே..? இனிமேலாவது சரி செய்யலாமே என்பதால் எழுந்தது இந்த வினா. உங்கள்ஆசிரியை, தந்தை ஆகியோருடன் உங்களுக்கும் மிக்க நன்றி.

mukilan
30-09-2007, 01:46 AM
எனது பிழைகளைக் களைந்த அனைத்து நண்பர்கட்கும் வாழ்த்துகள். இதற்கு முந்தைய பதிப்பு வரை வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தவன் இனி வாழ்த்துகள் மட்டும் தருவேனாக்கும்.
காயத்ரி அவர்கட்கு: Phrase - சொற்றொடர்.

ஓவியன்
02-10-2007, 04:37 AM
ஆகா சாம்பவி இன்று தானே என் கண்களிலே இது பட்டது....
குழப்பம் தெளிவிக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல...
தொடர்ந்து நீங்கள் எங்கள் சந்தேகங்கள் பல நீக்க வேண்டுமென வேண்டுகிறேன்....

அமரன்
05-04-2008, 11:05 AM
இதுவரைகாலமும் உதைபந்து என்பதை பாவனையில் கண்டேன். நேற்று உதைப்பந்து என்று முக்கியமான தமிழ் ஆவணத்தில் கண்டேன். தப்பென்று சொன்னபோது இலக்கணப்படி சரி என்கிறார்கள். குழப்பம் தீருங்களேன்.

shibly591
05-04-2008, 11:13 AM
பயனுள்ள திரி

சாம்பவி
05-04-2008, 11:19 AM
இதுவரைகாலமும் உதைபந்து என்பதை பாவனையில் கண்டேன். நேற்று உதைப்பந்து என்று முக்கியமான தமிழ் ஆவணத்தில் கண்டேன். தப்பென்று சொன்னபோது இலக்கணப்படி சரி என்கிறார்கள். குழப்பம் தீருங்களேன்.


ஊறுகாய்.... ஊறுக்காயாமோ....!!!!

உதைக்கப்பட்ட பந்து....
உதைக்கப்படுகிற பந்து....
உதைக்கப்பட போகும் பந்து....
உதை பந்து.....
வினைத்தொகை..... !


வினைத்தொகயில்
ஏது சந்தி..... !!!!!!!!!!!!

என்னவன் விஜய்
05-04-2008, 11:34 AM
நான் இங்கே என் சகோதரியின் பிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துக்களை சொல்லிக்குடுக்கும் போது அவர்கள் என்னை கேட்ட ஒரு கேள்வி இது(எனக்கு பதில் தெரியவில்லை).

தமிழ் உயிர் மெய் எழுத்துக்களை சொற்களாக எழுதிவீர்களானால் அவை ணகரத்தில் முடியும் அது ஏன்?

அமரன்
05-04-2008, 11:59 AM
அதைத்தான் நானும் சொன்னேன்.. மேலும் சொல்ல, சின்னவயசில் தாத்தா சொன்ன உதைகாலி மாட்டை துணைக்கழைத்தேன். கூடைப்பந்து என்று வரும்போது உதைப்பந்து வராதோ என்றார்கள்.. அது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றேன். ஏற்கமாட்டோம்னு அடமாக நிற்கிறார்கள். அதனால சற்று நிலைகுலைவு. இப்போ நிமிர்ந்து நிற்போம்ல.. நன்றிங்க..

அமரன்
05-04-2008, 12:03 PM
தமிழ் உயிர் மெய் எழுத்துக்களை சொற்களாக எழுதிவீர்களானால் அவை ணகரத்தில் முடியும் அது ஏன்?
என் மரமண்டைக்கு கேள்வி புரியவில்லையே தோழா.. சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்.

என்னவன் விஜய்
09-04-2008, 11:35 AM
நான் கேட்பது என்னவென்றால் அ வை சொல்லிப்பாறுங்கள் அது ன வில் முடியும் . இவ்வாறே எல்ல எழுத்துக்களும் ன விலே முடியும் அது ஏன்?

mukilan
17-07-2008, 06:21 AM
பொறுப்பாளர்கட்கு: இதைத் தனியாக தொடங்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இவ்விடயத்திற்கு பொருத்தமான திரி இல்லை. நீங்கள் மற்ற ஏதேனும் திரி ஒன்றினை ஒத்த விடயமாக இதைக் கருதுகின்றீர்கள் என்றால் தயவு செய்து அத்திரியுடன் சேர்த்து விடவும்.

அன்பு நண்பர்களே!

எனக்கு நீண்ட நாட்களாக உள்ள ஐயம் இது. எண்ணிக்கையில் அடங்கக்கூடிய பெயர்ச்சொல் (countable nouns)பற்றிய ஐயம் இது.
எண்ணி(எண்ணிக்கை) விட முடியும் ஒன்றை எத்துனை? இத்தனை என்று சொல்வதா அல்லது எத்துணை, இத்துணை என்று சொல்வதா?
எத்துணை, இத்துணை என்று சொல்வதுதான் சரியெனப் படித்த நினைவு! எத்தனை, இத்தனை என்பவை தூய தமிழ் சொற்களா? இத்துணை என்பதன் திரிபுதான் இத்தனை என நான் நினைக்கிறேன். விளக்கம் கூறி என் ஐயம் போக்குங்களேன்.

எண்ண(எண்ணிக்கை) முடியாத பெயர்ச்சொல்கள் (non countable nouns): இவ்வளவு, எவ்வளவு

எனக்கு நீண்ட நாட்களாக உள்ள ஐயம் இது. எண்ணிக்கையில் அடங்கக்கூடிய பெயர்ச்சொல் (countable nouns)பற்றிய ஐயம் இது.
எண்ணி(எண்ணிக்கை) விட முடியும் ஒன்றை எத்துனை? இத்தனை என்று சொல்வதா அல்லது எத்துணை, இத்துணை என்று சொல்வதா?
எத்துணை, இத்துணை என்று சொல்வதுதான் சரியெனப் படித்த நினைவு! எத்தனை, இத்தனை என்பவை தூய தமிழ் சொற்களா? இத்துணை என்பதன் திரிபுதான் இத்தனை என நான் நினைக்கிறேன். விளக்கம் கூறி என் ஐயம் போக்குங்களேன்.

எண்ண(எண்ணிக்கை) முடியாத பெயர்ச்சொல்கள் (non countable nouns): இவ்வளவு, எவ்வளவு

pasaam
17-07-2008, 07:11 AM
இத்தனை என்பது எமது கணிப்புக்கு, எண்ணிக்கைக்குள் அடங்கக்கூடீயது. (உ+ம் - இத்தனை தான் எனக்குக் கிடைத்தது. அதாவது குறிப்பிட்டளவு). எத்தனை எண்பது எண்ணிலடங்காதது(உ+ம் - எத்தனை அழகு. இது அளவிடமுடியாதது).
இதுவே நடைமுறை வழக்கிலுள்ளது. இது என் கருத்து மட்டுமே.

'தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்'

இதயம்
17-07-2008, 07:26 AM
ஒரு பொருள் தொடர்பான வீச்சு, அல்லது எண்ணிக்கையை அறிந்து கொள்ள பயன்படும் வார்த்தை தான் எத்துனை அல்லது எத்தனை என்பது. எத்தனை என்ற சொல் காலப்போக்கில் மருவி எத்துனை என்றாகியிருக்கலாம் என்பது கருத்து. எத்தனை என்பதை விட எத்துனை என்றெழுதுவது சுத்தமான தமிழ் என்ற பார்வை நம்மிடையே இருக்கிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து அறிந்தவர்கள் சொல்லட்டும். ஆனால், எத்தனை என்பது மருவிய பின் வந்த எத்துனை அல்லது எத்துணை ஆகிய இரண்டில் எத்துனை என்பது தான் சரியான வார்த்தையாக எனக்கு சரியாக படுகிறது. காரணம், எத்துனையின் மூலம் எத்தனை என்ற சொல் என்பதால் தான்..!

ஆதி
17-07-2008, 09:01 AM
வைத்தநெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான். நீ பிறந்தபின்னை
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன் கதம்படாதே
முத்தனைய முறுவல்செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே

- நாலாயிர திவ்யபிரபந்தம்

எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்
துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை யின்றெனி னென்னாகு மஃதுண்டேற்
பொன்மலர் நாற்ற முடைத்து.

- நீதி நெறி

எத்தனையும் எத்துணையும் தான் சரியான வார்த்தைகள்

அமரன்
17-07-2008, 01:49 PM
அன்பு முகில்ஸ்..
உங்கள் சந்தேக நிவர்த்திக்கு ஏற்ற திரி கண்ணில் எத்துப்படவில்லை. எத்துப்பட்ட தமிழிலக்கண சந்தேகத்திரியை தமிழ், இலக்கணச் சந்தேகத்திரியாக்கி உங்கள் சந்தேகத்தையும் சேர்த்துள்ளேன். இனிவருங்காலங்களில் தமிழ்மொழி தொடர்பான எல்லா சந்தேகங்களையும் இங்கே கேட்போம்.

mukilan
17-07-2008, 02:24 PM
இதயம் உங்களின் விளக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி!

சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டி விளக்கிய ஆதி! உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எத்தனையும், எத்துணையும், இத்தனையும்- ஆக இம்மூன்றுமே சரியா? எனக்கு "ன'கர "ண' கர வேறுபாடு மட்டும் இன்னமும் சிறிது குழப்புகிறது.

பாசம், உங்கள் உதவிக்கும் என் நன்றி.
எண்ணிக்கையில் அடங்கக்கூடிய ஒன்றை எத்தனை என்று கேட்கலாம். அதற்கு இத்தனை என்ற பதில் வரும். இவ்விருவார்த்தைகளையும் ஆச்சர்ய உணர்ச்சியில் வரும் பதங்களாகவும் பயன் படுத்தலாம்.
எத்தனை பழங்கள்?(How many)- வினா
இத்தனை பழங்கள்- விடை
இத்துனை பழங்களா! -ஆச்சர்யம்
எத்தனையோ கோடி! இதில் கவனிக்க உட்கார்ந்து எண்ணினால் எண்ணிவிடலாம். ஆனால் சரிவரத் தெரியாது என்பதால் எத்தனையோ கோடி? எனக் குறிப்பிடலாம்.

எவ்வளவு என்பது எண்ணிக்கையில் அடங்கா பொருட்கள் (How much). இவ்வளவு என்பது பதில். இவ்வளவா! என்பது ஆச்சர்யம். எவ்வளவோ என்பது விடை உறுதியாக தெரியாத நிலை.

இது பொறுத்தமான திரிதான் அமரன். என் கண்ணுக்கு முதலில் படவில்லை. ஆனாலும் மன்றத்தில் இது போன்ற விடயங்கள் நிச்சயம் அலசப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில்தான் நான் முதலிலேயே பொருப்பாளர்கட்கு குறிப்பு இட்டேன். உங்கள் உதவிக்கு என் நன்றி.

அக்னி
01-03-2010, 05:04 PM
குணமதி அவர்களின்
தனக்குப் பிறந்த போது...! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=22897)
திரி, இந்தத் திரியைத் தூண்டிவிட்டது.


சமயம், விடயம், புடவை, கட்டடம்...
இப்படியான சொற்களில் சிறுகுழப்பம் இருந்து கொண்டேயிருப்பதுண்டு.

இச்சொற்கள் தொடர்பாக ஆராய வாருங்களேன் உறவுகளே...

பாரதி
01-03-2010, 05:52 PM
புடைசூழ இருப்பது, புடைவை -- புடவை.
புழைக்கடை -- புழக்கடை,
உடைமை -- உடமை (பொதுவுடமை).
தகைமை -- தகமை.
எதையும் குழைத்துச் சட்னியாக்கும் கல்: குழைவி > குழவி.
தமையன் -- தமயன்
சினைப்பு -- சினப்பு (வியர்க்குரு)
சமையம் -- சமயம்
வளைவு -- வளவு

நன்றி: சந்தவசந்தம் மடலாடற்குழு.

பாரதி
01-03-2010, 05:56 PM
கட்டடம் என்பது தொழிற்பெயர்; கட்டிடம் என்பது இடப்பெயர்; பொருளை மாறிப் பயன்படுத்தக் கூடாது. கட்டிடத்தின் மேல் கட்டடம் நிற்கிறது. அடம் என்பது அடுக்குதல் என்ற வினையில் கிளர்ந்த ஓர் ஈறு. கட்டுதல் என்பது சேர்த்தல்; கட்டி அடுக்குவது கட்டடம். குடில், குடிசை, மாளிகை, கோயில், அரண்மனை என எல்லாமே கட்டி அடுக்குவது தான்.

நன்றி : இராம.கி ஐயா

பாரதி
01-03-2010, 06:07 PM
தமிழ் இணையம் என்ற விதயத்தை (ஏதேனும் ஒன்றை விதந்து பேசினால் அது விதயம்; விதயம் வடமொழியில் விஷயம் என்று ஆகும். நம்முடைய மூலம் தெரியாமல் நாம் அதை விடயம் என்று எழுதிக் கொண்டு இருக்கிறோம். இனிமேலாவது மாற்றிக் கொள்ளுவோமா?)

நன்றி : இராம. கி ஐயா

அக்னி
01-03-2010, 06:18 PM
ஆனால்,
இவை எல்லாவற்றையும் எல்லோரும் (எல்லோருமா... எல்லாருமா...) பயன்படுத்த வைப்பது சாத்தியம்தானா...

அண்மையில்,
ஒரு வாழ்த்துச் சுவரொட்டிக்காக,
‘பிறந்ததின வாழ்த்துகள்’
என்றெழுதியிருந்தேன். அது சரியென விளக்கம் சொல்லியே போதுமென்றாகிவிட்டது.
இத்திரியை இன்று சுற்றிவருகையில், சாம்பவி அவர்களின் விளக்கத்தை மீளவும் காண,
இப்போது,
வாழ்த்துகள் - வாழ்த்துக்கள்
எது சரியென்பதில் மீளவும் குழப்பம்.

இனிதான சிக்கல் மொழியா
நம் மொழி...

(அடிக்கடி இத்திரியைத் தூண்டி விடுங்கள் அண்ணா.)

பாரதி
01-03-2010, 06:31 PM
அந்த விதி இவை அனைத்துக்குமே பொருந்தும் நண்பரே. இவை மட்டுமல்ல இன்னமும் பல வன்றொடர் குற்றியலுகரங்கள், கள்
விகுதியோடு புணரும் போது ஒற்று மிகாதது போல உச்சரிக்கின்றோம். அது வழக்கு தமிழ். ஆனால் தொல்காப்பியருக்கோ, அவரைக் காதலித்த வசந்தா டீச்சருக்கோ இது புரிந்தது மாதிரி தெரியவில்லை.. பாட்டுகளுக்கும் மெட்டுகளுக்கும், ஸ்கேலால் ( அதுவும் புறங்கையில் :frown: ) வாங்கிய அடியின் பயன், தூக்கத்திலும் பாட்டுக்களும் மெட்டுக்களும் தான்..!

இன்னொன்று, வாழ்த்து குறித்து எம் தந்தையிடம் கேட்ட போது அவர் கேட்டது.. வாழ்த்தில் எதற்கு பன்மை..? பல முறை வாழ்த்த போகிறாயா இல்லை...பலருடைய வாழ்த்துக்களா... அல்லது.. Best Wishes என்பதின் தாக்கமா... என்கிறார். என் சொல்வது... ?

தமிழ்த் தாய் வாழ்த்து ;)
.அண்மையில்,
ஒரு வாழ்த்துச் சுவரொட்டிக்காக,
‘பிறந்ததின வாழ்த்துகள்’
என்றெழுதியிருந்தேன். அது சரியென விளக்கம் சொல்லியே போதுமென்றாகிவிட்டது.
இத்திரியை இன்று சுற்றிவருகையில், சாம்பவி அவர்களின் விளக்கத்தை மீளவும் காண,
இப்போது,
வாழ்த்துகள் - வாழ்த்துக்கள்
எது சரியென்பதில் மீளவும் குழப்பம்.


முதலில் ஒருவரை மட்டும் வாழ்த்துவதெனில் "வாழ்த்து" என்று மட்டுமே கூற வேண்டும். ஒருவருக்கு எனில் வாழ்த்துக்கள் / நன்றிகள் என்று கூறக்கூடாதென்பது சாம்பவியின் பின்னூட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

இருவருக்கு மேற்பட்டவர்களுக்கு என்றால் வாழ்த்துக்கள் என்று கூற வேண்டும்.

அக்னி
01-03-2010, 06:46 PM
இருவருக்காகச் செய்யப்பட்ட சுவரொட்டி அது...

எழுதும்போதே,
‘வாழ்த்துகள்’ தான் சரியான பதம் எனச் சொல்லி, எழுதியிருந்தேன்.
அதற்கு ஒரு சிலரிடம் விளக்கமும் சொல்லியிருந்தேன்.
இப்போது நான்தான் தவறா...

பாரதி
01-03-2010, 06:56 PM

இதோ இந்த ஒற்று மிகும் சித்து விளையாட்டின் ஸுத்திரதாரி....
"வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் ஒற்று மிகும்"

பிரித்து எழுதும் பக்ஷத்தில்
"வன் தொடர் குற்றியல் உகரத்தின் பின் ஒற்று மிகும்"

வன் ==> வன்முறையில் இருக்கும் அதே வன்... வன்மையான வல்லினம் ( க, ச, ட, த, ப, ற )
தொடர் ==> தொடருமேயானால்...
குற்றியல் உகரம் ==> வல்லின உகரம் ( கு, சு, டு, து, பு, று )
பின் ==> பின்னால்
ஒற்று மிகும் ==> அடுத்து வரும் வரு மொழியின் ஒற்றானது இரட்டிக்கும்.,.

அதாவது...
வல்லின ஒற்றும் அதனை தொடர்ந்து அதன் குற்றியலுகரமும் வருமேயாயின் அவை ( மொட்டு, பொட்டு, முத்து, சொத்து, வாழ்த்து :smilie_abcfra:.. ) புணரும் போது கண்டிப்பாய், மிக மிக கண்டிப்பாய் ஒற்று மிகும்.
:)
நலம் வாழ எந்நாளும் நல் வாழ்த்துக்கள் !! :)


இவ்விதியின் படி நாம் வாழ்த்துக்கள் என்றுரைப்பதே சரியானதாகும்.

இளசு
01-03-2010, 10:06 PM
ஆஹா.... பாரதி...


எனக்காகவே மேலெழுப்பியதாய் எண்ணுகிறேன்..

இனி வாழ்த்து எனச் சுருக்கி எழுதிப் பழகுகிறேன்..


சாம்பவிக்கும், அக்னிக்கும், உனக்கும் - வாழ்த்துக்கள்!!!!!

சிவா.ஜி
02-03-2010, 06:39 AM
வாழ்த்துக்கள் என எழுதிக்கொண்டிருந்தவனை, ஏதோ ஒரு திரியில்(எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியல...பாரதி...எப்படிங்க டக்குன்னு தேடிப் பிடிக்கிறீங்க....) படித்துவிட்டு சமாதானமாகி, வாழ்த்துகள் என எழுதத் தொடங்கினேன்.

இப்போது சாம்பவியின் விளக்கம்( பாதிக்குமேல் புரியவில்லையென்றாலும்...ஆத்தா சொன்னா சரியாத்தான் இருக்கும்ங்கற நம்பிக்கை) பார்த்து இனி நானும் 'வாழ்த்துக்கள்'தான்.

சாம்பவிக்கு வாழ்த்து, அக்னி, பாரதிக்கு வாழ்த்துக்கள்.

அக்னி
02-03-2010, 07:46 AM
வாழ்த்துக்கள் என எழுதிக்கொண்டிருந்தவனை,
அதே அதே...
நானும் அப்படித்தான் சிவா.ஜி...

‘க்’ தேவையில்லை என்று எத்தனையோ பேரிடம் வக்காலத்துவேறு வாங்கியிருக்கின்றேன் தெரியுமா..?

அவங்கள்லாம் திரும்ப ‘க்’ போட்டு நான் எழுதறத பார்த்தாங்கன்னா...
:traurig001:


(எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியல...பாரதி...எப்படிங்க டக்குன்னு தேடிப் பிடிக்கிறீங்க....)
இதப்பத்தி செல்வர் ஏதோ ஒரு திரியில விளக்கம் கொடுத்திருந்தாரு.
:D :D :D
அதையும் தேடிப் பிடிக்க முடியலீங்க... :cool:

( பாதிக்குமேல் புரியவில்லையென்றாலும்...ஆத்தா சொன்னா சரியாத்தான் இருக்கும்ங்கற நம்பிக்கை)
பாதிக்குக் கீழ் புரிந்தது,

சாம்பவிக்கு வாழ்த்து, அக்னி, பாரதிக்கு வாழ்த்துக்கள்.
இதனைப் பார்க்கப் புரியுது.

உங்களுக்குக் கீழ்ப் பாதியாவது புரிந்திருக்கே...

கலைஞர் அவர்கள் இந்த வாழ்த்துப் பற்றி ஏதோ சொன்னதாக,
எங்கேயோ பார்த்த ஞாபகம்...
ஆனால், ஞாபகமாய் இல்லை... :redface:

சிவா.ஜி
04-03-2010, 09:40 AM
கலைஞர் அவர்கள் இந்த வாழ்த்துப் பற்றி ஏதோ சொன்னதாக,
எங்கேயோ பார்த்த ஞாபகம்...
ஆனால், ஞாபகமாய் இல்லை... :redface:


ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு....பார்த்த ஞாபகமாம்....ஞாபகம் இல்லையாம்......ஸ்....அப்பாடா.....என்னக் கொடுமை சார் இது....????

பாரதி
06-03-2010, 07:30 AM
வல்லினம் மிகா இடங்கள்:


1. வினைத்தொகையில் வல்லினம் மிகாது.

விரி+சுடர் - விரிசுடர்.
பாய்+புலி - பாய்புலி.

2. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

காய்+கனி - காய்கனி.
தாய்+தந்தை - தாய்தந்தை.

3. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

தமிழ்+கற்றார் - தமிழ்கற்றார்.
கதை+சொன்னார் - கதைசொன்னார்.

4. வியங்கோள்வினைமுற்றுக்குப்பின் வல்லினம் மிகாது.

கற்க+கசடற - கற்ககசடற.
வாழ்க+தமிழ் - வாழ்கதமிழ்.

5. விளித்தொடரில் வல்லினம் மிகாது.

அண்ணா+கேள் - அண்ணாகேள்.

6. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப்பின் வல்லினம் மிகாது.

அத்தனை+பழங்கள் - அத்தனைபழங்கள்
எத்தனை+காய்கள் - எத்தனைகாய்கள்.

7. இரட்டைக்கிளவியிலும் அடுக்குத்தொடரிலும் வல்லினம் மிகாது.

கல+கல - கலகல
பாம்பு+பாம்பு - பாம்புபாம்பு

8. அவை, இவை என்னும் சுட்டுச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.

அவை+சென்றன - அவைசென்றன.
இவை+செய்தன -இவைசெய்தன.

9. அது, இது என்னும் சுட்டுகளின் பின் வல்லினம் மிகாது.

அது+பறந்தது - அதுபறந்தது.
இது+கடித்தது - இதுகடித்தது.

10. எது, யாது வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.

எது+பறந்தது - எது பறந்தது?
யாது+தந்தார் - யாது தந்தார்?

நன்றி: கருத்து தளம்.

பாரதி
06-03-2010, 07:38 AM
வல்லினம் மிகும் இடங்கள்:


1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

இந்த+கருத்து- இந்தக்கருத்து.
அப்படி+பேசினான் - அப்படிப்பேசினான்.

2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகும்.

புத்தகத்தை+படித்தான் - புத்தகத்தைப்படித்தான்.
நண்பனுக்கு+கொடு - நண்பனுக்குக் கொடு.

3. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின்பின் வல்லினம் மிகும்.

படிப்பதாய்+சொன்னான் - படிப்பதாய்ச்சொன்னான்.
போய்+சேர்ந்தான் - போய்ச்சேர்ந்தான்.

4. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

சால+சிறந்தது - சாலச்சிறந்தது.
தவ+சிறிது - தவச்சிறிது.

5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்க தொகைகளின் பின் வல்லினம் மிகும்.

மரம்+பலகை - மரப்பலகை.
சட்டை+துணி - சட்டைத்துணி.

6. ஓரெழுத்துச் சொற்கள் சிலவற்றின் பின் வல்லினம் மிகும்.

தீ+சுடர் - தீச்சுடர்.
தை+திங்கள் - தைத்திங்கள்.

7. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

ஓடா+புலி -ஓடாப்புலி.
வளையா+செங்கோல் - வளையாச்செங்கோல்.

8. வன்றொடர் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

பத்து+பாட்டு - பத்துப்பாட்டு.
எட்டு+தொகை - எட்டுத்தொகை.

9. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

திரு+குறள் - திருக்குறள்.
பொது+சொத்து - பொதுச்சொத்து.

10. உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

மழை+காலம் - மழைக்காலம்.
பனி+துளி - பனித்துளி.

நன்றி : கருத்து தளம்.

குணமதி
21-03-2010, 01:27 PM
மிகப் பயனுள்ள பணியைச் செய்த பாரதிக்கு மிகுந்த பாராட்டு!

படித்துப் பின்பற்றினால், பயனுண்டு.

தமிழ்மன்றம் செப்பத் தமிழால் சிறக்கும்.

நன்றி.