PDA

View Full Version : விடியலை நோக்கி..

அரசன்
04-04-2007, 04:12 AM
இதுவும்
இயற்கையின் ஒரு
சுயநலக் கொடுமைதான்.

ஒரு
ஆண்மகனை,
தன் கணவனை
ஒரு
கண்ணியத் தாய் சுமக்கிறாள்.
ஏதுமறியாத
அரை சித்தத்தில்-அந்த
ஆண்மகன்!

விளங்காத இந்த உலகம்
ஒரு வகையில்
அவனை
விலங்கிட முடியாமல்
தவிக்கிறது.

பிறர்
வெறுப்பிலும் - சிரிப்பு!
தன் மனைவியின்
வெம்மையிலும் - சிரிப்பு!
அது ஒன்றே
இறைவன் அவனுக்கு
கொடுத்த வரம்!

இலக்கு இல்லாத
அவன் வாழ்வில்
விடியலைத் தேடியே
அவன் மனைவி!

விடியும்பொழுது ஒவ்வொன்றும்
தன் வாழ்வில் விடியாதபோது
பொறுப்புகளுடன் சேர்த்து
தன் கணவனையும்
சுமந்து கொண்டு
பயணமாகிறாள்,
விடியலை நோக்கி! அந்த
பூக்காரத் தாய்!
___________________

குறை இருந்தால் குதறி விடாமல், என்னிடம் உளறிவிடுங்கள்.

ஆதவா
04-04-2007, 06:35 AM
நண்பரே! கீழ்கண்ட வார்த்தைகளுக்கு ஏன் * வைத்திருக்கிறீர்கள் ?

ஏதுமறியாத* , அந்த* இல்லாத* விடியலை நோக்கி! அந்த*
-----------------------------------------------------
கண்ணியதாய் சுமக்கிறாள் - இதற்கு அர்த்தம் எனக்குத் தெரியவில்லை நண்பரே! தயவு செய்து நான் மேற்கொண்ட குறிப்புகளுக்கு விடையளியுங்கள்... அதன் பின் விமர்சனம் தொடருகிறேன்...
----------------------------------------------
கவிதை நன்று, அபாரம் அல்லது சுமார் என்று ஒரு வார்த்தைகூட சொல்லாமல் போவதற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.. கவிதை எனக்குத் தெளிவாகட்டும்.. பிறகு என் கருத்தைச் சொல்லுகிறேன்.. மனம் புண்பட எழுதியிருந்தால் மன்னிக்க....

ஷீ-நிசி
04-04-2007, 06:36 AM
விடியலை நோக்கின பயணம் நன்றாகவே உள்ளது.. ஆனால் ஏன் அங்கங்கே நட்சத்திர குறியிட்டுள்ளீர்கள்.. புரியாத வார்த்தைகளுக்குதான் அதுபோல் * இடுவார்கள்.

அரசன்
04-04-2007, 06:43 AM
நண்பரே! கீழ்கண்ட வார்த்தைகளுக்கு ஏன் * வைத்திருக்கிறீர்கள் ?

ஏதுமறியாத* , அந்த* இல்லாத* விடியலை நோக்கி! அந்த*
-----------------------------------------------------
கண்ணியதாய் சுமக்கிறாள் - இதற்கு அர்த்தம் எனக்குத் தெரியவில்லை நண்பரே! தயவு செய்து நான் மேற்கொண்ட குறிப்புகளுக்கு விடையளியுங்கள்... அதன் பின் விமர்சனம் தொடருகிறேன்...
----------------------------------------------
கவிதை நன்று, அபாரம் அல்லது சுமார் என்று ஒரு வார்த்தைகூட சொல்லாமல் போவதற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.. கவிதை எனக்குத் தெளிவாகட்டும்.. பிறகு என் கருத்தைச் சொல்லுகிறேன்.. மனம் புண்பட எழுதியிருந்தால் மன்னிக்க....

நான் அறியாமல் நிகழ்ந்திருக்கிறது. திருத்திவிட்டேன். நன்றி

வறுமை வாட்டினாலும்
கடமை மறவாத
கண்ணியத்தாய்.

ஒரு குழந்தையைப்போல் அவள் தன் சித்தமற்ற கணவனையும் மடியில் சுமக்கிறாள்

ஷீ-நிசி
04-04-2007, 06:47 AM
அரைசித்தம் என்றால் பைத்தியக்கார கணவன், அவனுக்கு தெரிந்ததெல்லாம் சிரிக்க மட்டுமே, இவள் பூ விற்று வாழ்க்கையின் அத்தியாவாசிய சுமைகளோடு தன் கணவனையும் சுமக்கும் ஒரு பெண். இவளின் நிகழ்வை கூறியவிதம் அருமை நண்பரே.. நீங்கள் கருவை சொன்னபின் தான் கவிதையின் சுவை கூடியது..

ஆதவா
04-04-2007, 07:01 AM
நன்றிங்க மூர்த்தி.... கண்ணியதாய் க்கும் கண்ணியத்தாய்க்கும் வித்தியாசம் நிறைய.... ஒரு எழுத்து மாறியதாலே அர்த்தமே மாறிவிட்டது... அதுபோல கண்ணியத்தாய் என்ற வார்த்தை சரியான பதமா என்று தெரியவில்லை... கண்ணியமுள்ள தாய் என்றால் எனக்கு விளங்கும்.. ஹி ஹி.
கவிதையில் எழுத்துக்கள் அதிலும் இம்மாதிரி ஒற்றெழுத்துக்கள் எழுதும்போது மிகுந்த கவனம் தேவை. இனி வரும் கவிதையில் அதை கவனிப்பீர்கள் என்று நினைக்கிறேன்...
--------------------------------------------------------
கவிதை முதலிலேயே புரிந்துவிட்டது. என்றாலும் நான் இருவேறு அர்த்தங்கள் இருக்குமோ என்று அந்த * இருப்பதைக்கண்டு விமர்சனம் செய்யவில்லை. அழகிய கரு. அதில் அழகான கவிக்குழந்தை..

சித்தம் குறைந்திருந்தாலும் இந்த பூக்காரியின் வாழ்வு, அவள் கடமை என்றுமே ஒரு விடியலைப் போல காரணமாகவே நடந்துகொண்டிருக்கிறது. மிகத் தெளிவான கரு. அந்த பூக்காரியோ அவனுக்கு குணமாக வேண்டியே அதாவது அவனின் விடியலைத் தேடியே அவனைச் சுமக்கிறாள்..

குறிப்பாக நான் கவனித்த வரிகள் இவை
விடியும்பொழுது ஒவ்வொன்றும்
தன் வாழ்வில் விடியாதபோது
பொறுப்புகளுடன் சேர்த்து
தன் கணவனையும்
சுமந்து கொண்டு
பயணமாகிறாள்,
விடியலை நோக்கி! அந்த
பூக்காரத் தாய்!

பூக்காரி தன் தலையில் பூ வைத்திராவிடினும் பூவைக் கூடையில் சுமப்பாள். அது அவளின் அன்றாட வேலையும் கூட... தன் கணவனைச் சுமப்பது என்பது இங்கே அழகாய் ஒட்டி வருகிறது.. வாழ்த்துக்கள் மூர்த்தி. மிக அழகாய் இருக்கிறது முதல் கவிதையே (நம் மன்றத்தில்..) சமூக பிரச்சனைகளைக் கையாள பூ , ஷீ வரிசையில் நீங்களும்....
வாழ்த்துக்கள்.. மேன்மேலும் எழுதுங்கள்...
-----------------------------------------------------------
குரை - குறை. மாற்றிவிடுங்கள்..

அரசன்
04-04-2007, 07:13 AM
நன்றிங்க மூர்த்தி.... கண்ணியதாய் க்கும் கண்ணியத்தாய்க்கும் வித்தியாசம் நிறைய.... ஒரு எழுத்து மாறியதாலே அர்த்தமே மாறிவிட்டது... அதுபோல கண்ணியத்தாய் என்ற வார்த்தை சரியான பதமா என்று தெரியவில்லை... கண்ணியமுள்ள தாய் என்றால் எனக்கு விளங்கும்.. ஹி ஹி.
கவிதையில் எழுத்துக்கள் அதிலும் இம்மாதிரி ஒற்றெழுத்துக்கள் எழுதும்போது மிகுந்த கவனம் தேவை. இனி வரும் கவிதையில் அதை கவனிப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
--------------------------------------------------------
கவிதை முதலிலேயே புரிந்துவிட்டது. என்றாலும் நான் இருவேறு அர்த்தங்கள் இருக்குமோ என்று அந்த * இருப்பதைக்கண்டு விமர்சனம் செய்யவில்லை. அழகிய கரு. அதில் அழகான கவிக்குழந்தை..

சித்தம் குறைந்திருந்தாலும் இந்த பூக்காரியின் வாழ்வு, அவள் கடமை என்றுமே ஒரு விடியலைப் போல காரணமாகவே நடந்துகொண்டிருக்கிறது. மிகத் தெளிவான கரு. அந்த பூக்காரியோ அவனுக்கு குணமாக வேண்டியே அதாவது அவனின் விடியலைத் தேடியே அவனைச் சுமக்கிறாள்..

குறிப்பாக நான் கவனித்த வரிகள் இவை
விடியும்பொழுது ஒவ்வொன்றும்
தன் வாழ்வில் விடியாதபோது
பொறுப்புகளுடன் சேர்த்து
தன் கணவனையும்
சுமந்து கொண்டு
பயணமாகிறாள்,
விடியலை நோக்கி! அந்த
பூக்காரத் தாய்!

பூக்காரி தன் தலையில் பூ வைத்திராவிடினும் பூவைக் கூடையில் சுமப்பாள். அது அவளின் அன்றாட வேலையும் கூட... தன் கணவனைச் சுமப்பது என்பது இங்கே அழகாய் ஒட்டி வருகிறது.. வாழ்த்துக்கள் மூர்த்தி. மிக அழகாய் இருக்கிறது முதல் கவிதையே (நம் மன்றத்தில்..) சமூக பிரச்சனைகளைக் கையாள பூ , ஷீ வரிசையில் நீங்களும்....
வாழ்த்துக்கள்.. மேன்மேலும் எழுதுங்கள்...
-----------------------------------------------------------
குரை - குறை. மாற்றிவிடுங்கள்..

விமர்சனம் ஒரு நல்ல கலைஞனை (நான் அல்ல) உருவாக்கும் என்பதை அறிவேன். எனவே விமர்சனத்திற்கும், பிழையை சுட்டியதற்கும் மிக்க நன்றி. பிழையை திருத்திக்கொள்கிறேன்.

ஆதவா
04-04-2007, 07:34 AM
ஆம் நண்பரே ! நம் மன்றத்தின் விசேசமே சிறப்பே மிகச் சரியான பின்னூட்டங்கள் தான்... தெளிவான விமர்சனங்கள். வேறெங்கும் கிடைக்காத பதில்கள்.. அலசல்கள். தெரியாதென்றால் அதை தயக்கமின்றி கேட்கும் பண்பு ஆகியவை நிறைந்து கிடக்கிறது....
-------------------------------------------------------------
மற்றவர்கள் கவிதைக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன்...

அரசன்
04-04-2007, 07:50 AM

விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்பதால் தயங்குகிறேன். முயற்சி செய்கிறேன்.

விகடன்
04-04-2007, 06:38 PM
கண்ணியத்தாய் என்ற வார்த்தை சரியான பதமா என்று தெரியவில்லை

சரியான பதந்தான் ஆதவா.

உங்களின் பொறுமை மிகுந்த விமர்சனமும் தன்னடக்கமுடனான திருத்தியமைப்பும் மெச்சவைக்கிறது.

வளரட்டும்.
கவிதை படைப்போர் படிப்போர் ராஜாங்கம்.

இளசு
04-04-2007, 07:32 PM
அரைச்சித்தக் கணவனை அடைந்ததால்
சுயமாகவும், பிறர் ஏளனம்/பரிதாபம் மூலமாகவும்
எத்தனை கழிவிரக்கம் வந்திருக்கவேண்டும்
அந்தப் பூவிற்கும் தாய்க்கு!!!

புதையவைக்கும் அளவுக்கு பெருகும்
சுயபச்சாதாபத்தைக் கீறிப்பிளந்து
தன்னையும் அவனையும் சேர்த்து சுமந்து
வீறுநடை போடும் வீரத்தாய்க்கு வந்தனம்!

வாழ்த்துகள் கலியமூர்த்தி அவர்களே....

கவிதையின் கருவைத் தேர்ந்தெடுத்ததில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்..

தொடர்ந்து உங்கள் படைப்புகள்/ கருத்துகள் தாருங்கள்..

தயக்கம் வேண்டாம் நண்பரே..

இங்கு நாம் யாவரும் ஓர் நிறை!

மனோஜ்
04-04-2007, 07:43 PM
அருமை எனது சொந்தத்தில் இப்படி ஒருவர் இருந்தார்.
காரணம் காதல் !
.ஆனால் திருமணம் வேறுஒருவரிடம்.
விளைவு உங்கள் கவிதை நாயகன்!
அவர்களின் வாழ்வில் அந்த தாய்க்கு பொறுமை இல்லை.
இன்று அவர்களின் மகன் அவர்கள் பாட்டி தாத்தாவிடம்..
தாய் உலகில் இல்லை..

உங்கள் கவிதை படித்ததும் அவர்கள் வாழ்வு ஞாபகம் வந்தது.
மிக்க நன்றி அருமையான இக்கவிதைக்கு!

ஆதவா
05-04-2007, 01:15 AM
விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்பதால் தயங்குகிறேன். முயற்சி செய்கிறேன்.

அட சும்மா உங்களுக்கு தெரிஞ்சதைப் போடுங்க மூர்த்தி அவர்களே!... விமர்சனம் தெரிஞ்சுதான் பண்ணனும்னா இங்கே பலபேரு உருவாகி இருக்கமாட்டாங்க.

அரசன்
05-04-2007, 04:20 AM
அரைச்சித்தக் கணவனை அடைந்ததால்
சுயமாகவும், பிறர் ஏளனம்/பரிதாபம் மூலமாகவும்
எத்தனை கழிவிரக்கம் வந்திருக்கவேண்டும்
அந்தப் பூவிற்கும் தாய்க்கு!!!

புதையவைக்கும் அளவுக்கு பெருகும்
சுயபச்சாதாபத்தைக் கீறிப்பிளந்து
தன்னையும் அவனையும் சேர்த்து சுமந்து
வீறுநடை போடும் வீரத்தாய்க்கு வந்தனம்!

வாழ்த்துகள் கலியமூர்த்தி அவர்களே..

கவிதையின் கருவைத் தேர்ந்தெடுத்ததில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்..

தொடர்ந்து உங்கள் படைப்புகள்/ கருத்துகள் தாருங்கள்..

தயக்கம் வேண்டாம் நண்பரே..

இங்கு நாம் யாவரும் ஓர் நிறை!

தங்களது வரவேற்பும், ஆதரவும் எனக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. நன்றி.

அரசன்
05-04-2007, 06:56 AM
அருமை எனது சொந்தத்தில் இப்படி ஒருவர் இருந்தார்.
காரணம் காதல் !
.ஆனால் திருமணம் வேறுஒருவரிடம்.
விளைவு உங்கள் கவிதை நாயகன்!
அவர்களின் வாழ்வில் அந்த தாய்க்கு பொறுமை இல்லை.
இன்று அவர்களின் மகன் அவர்கள் பாட்டி தாத்தாவிடம்..
தாய் உலகில் இல்லை..

உங்கள் கவிதை படித்ததும் அவர்கள் வாழ்வு ஞாபகம் வந்தது.
மிக்க நன்றி அருமையான இக்கவிதைக்கு!

வாழ்க்கை சிதைவுகளை ஒரு சில வரிகளில் வடிக்கும்போது ஒரு சிலர் வாழ்வின் நிலை நினைவுக்கு வரும். அனுபவித்திருக்கிறேன்....
நன்றி