PDA

View Full Version : புது கவிதை



அரசன்
03-04-2007, 02:06 PM
இன்று உலகம் சென்றுகொண்டிருக்கும் வேகத்தில் மரபு கவிதையோ அல்ல்து உரைநடையோ படிக்கும் பொருமை பெரும்பாலான மக்களிடம் இல்லை என்பதால் தான்" புதுக் கவிதை" பரிணமித்து என்பது தங்கள் எல்லோரும் அறிந்ததே.

எனவேதான் புதுக் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். இந்த பகுதியில் எனது கவிதைகளை கொடுக்கலாம் என நினைக்கிறேன்.:

:feiertag014:

அன்புரசிகன்
03-04-2007, 02:08 PM
ஆகட்டும். படிக்க ஆவலாய் உள்ளோம்.

ஓவியா
03-04-2007, 02:11 PM
வாழ்த்துக்கள்.

ஜாலியா ஜமாய்க்கவும்.

ம்ம்ம்.....ஆரம்பியுங்கள்.

மனோஜ்
03-04-2007, 02:14 PM
நாள் நட்சத்திரம் பாக்காம சட்டுபுட்டு புட்டுனு ஆரம்பிங்க

அறிஞர்
03-04-2007, 02:14 PM
கருவையாரின்.. புதுக்கவிதைகள் மன்றத்தை அலங்கரிக்கட்டும்..

தாமரை
03-04-2007, 02:15 PM
புதுக்கவிதையும் இப்போது குறுங்கவிதையாகி செல்பேசி(செல்லுமிடமெல்லாம் பேசமுடிவதால்)அலைபேசி (ரேடியோ அலைகளின் மூலம் பேச முடிவதால் அல்லது அலைந்து கொண்டே பேசமுடிவதால்) மூலம் செல் கவிதைகளாய் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.. அடுத்த மாற்றம் வருவதற்குள் ஆரம்பித்து விடுங்கள்...

விகடன்
03-04-2007, 02:15 PM
இன்று உலகம் சென்றுகொண்டிருக்கும் வேகத்தில் மரபு கவிதையோ அல்ல்து உரைநடையோ படிக்கும் பொருமை பெரும்பாலான மக்களிடம் இல்லை என்பதால் தான்" புதுக் கவிதை" பரிணமித்து என்பது தங்கள் எல்லோரும் அறிந்ததே.

எனவேதான் புதுக் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். இந்த பகுதியில் எனது கவிதைகளை கொடுக்கலாம் என நினைக்கிறேன்.:

:feiertag014:


வித்தியாசமான முறையில் கவிதை எழுதியிருக்கிறீர்கள்.

ஓவியனது கருத்துக்களின் கீழ் வருமே!
அதை பின்பற்றவில்லைத்தானே?

ஓவியா
03-04-2007, 02:20 PM
புதுக்கவிதையும் இப்போது குறுங்கவிதையாகி செல்பேசி(செல்லுமிடமெல்லாம் பேசமுடிவதால்)அலைபேசி (ரேடியோ அலைகளின் மூலம் பேச முடிவதால் அல்லது அலைந்து கொண்டே பேசமுடிவதால்) மூலம் செல் கவிதைகளாய் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.. அடுத்த மாற்றம் வருவதற்குள் ஆரம்பித்து விடுங்கள்...

ஹி ஹி ஹி ஹி

அண்ணானா அண்ணாதான் :mini023:

தாமரை
03-04-2007, 02:25 PM
ஹி ஹி ஹி ஹி

அண்ணானா அண்ணாதான் :mini023:

என் கண்களில் குருதி வடிவது
உனக்குத் தெரியும் என்றாலும்
உறுதியாக ஒரு வார்த்தை சொல்
இருக்கவா? போய்விடவா?

உடனே போ..
மருத்துவ மனைக்குத்தான்...:icon_03:

ஓவியா
03-04-2007, 02:31 PM
உடனே போ..
மருத்துவ மனைக்குத்தான்...:icon_03:

ஆதவாவின் கவிதையில் சுட்டது :feiertag014:


ஹி ஹி ஹி.

மன்றத்தில் தங்களை காண்பதில் மகிழ்ச்சி :ernaehrung004:

தாமரை
03-04-2007, 02:33 PM
ஆதவாவின் கவிதையில் சுட்டது :feiertag014:


ஹி ஹி ஹி.

மன்றத்தில் தங்களை காண்பதில் மகிழ்ச்சி :ernaehrung004:
ஓஓ சுட்டதால்தான் குருதி வழிகிறதா?
அதெப்படி..
சுட்டவருக்கே குருதி எனில்
சூடு பட்டவருக்கு?

ஓவியா
03-04-2007, 02:40 PM
ஓஓ சுட்டதால்தான் குருதி வழிகிறதா?
அதெப்படி..
சுட்டவருக்கே குருதி எனில்
சூடு பட்டவருக்கு?

அதான் ஆதவாவை லைனில் கானுமே. :icon_p:

கோவிந்தா கொவிந்தா.....:waffen093:

ஆதவா
03-04-2007, 04:57 PM
என்னங்க புதுக்கவிதை எழுதியிருப்பீங்கன்னு ஓடோடி வந்தேன்... சீக்கிரம் எழுதுங்க...... இங்கே நிறையபேரு படிக்க காத்திருக்காங்க.


வித்தியாசமான முறையில் கவிதை எழுதியிருக்கிறீர்கள்.

ஓவியனது கருத்துக்களின் கீழ் வருமே!
அதை பின்பற்றவில்லைத்தானே?

ஜாவா!~ அது கவிதை இல்லைப்பா~~~~:icon_wink1:

-------------------------------------------------------------
அண்ணனும் தங்கச்சியும் என்ன ரொம்ப சுட்டுக்கிறீங்க..:waffen093:

ம்ம்ம்.... என் கவிதையிலிருந்து சுட்டமைக்கு உங்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் ஓவியா அவர்களே! :nature-smiley-002: :nature-smiley-002:

ஓவியா
03-04-2007, 05:01 PM
ம்ம்ம்.... என் கவிதையிலிருந்து சுட்டமைக்கு உங்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் ஓவியா அவர்களே! :nature-smiley-002: :nature-smiley-002:

ஆமாம்.
அந்த சிறைக்காக தான் காத்துக்கொண்டு இருகிறேன்.

சீக்கிரம் திர்ப்ப சொல்லட்டும் மாமே :icon_wink1:

ஆதவா
03-04-2007, 05:28 PM
இது தீர்ப்பில்லா சிறை
மனமும் குணமும்
அன்பும் பாசமும்
அடக்கி வைக்கப்பட்ட சிறை.
குருதி பாயும் போதுகூட
ஒரு சிறு பலகையாக நீந்திச்சென்று
அந்த சிறையை அடையும் வழி
அக்கா! என்ற சொல்லி அடங்கியிருக்கிறது..
-----------------------------------------------------------
ரொம்ப ஐஸ் வைக்கிறேனா/?

விகடன்
03-04-2007, 05:31 PM
ஜாவா!~ அது கவிதை இல்லைப்பா~~~~:icon_wink1:



ஓவியனுடையதைத்தானே சொல்கிறீர்கள்.

நினைத்தேன்.

ஆனால் உறுதி படக்கூற முடியவில்லை. ஏனெனில்...எனக்குத்தானே அந்த ஞானமில்லை.

ஆதவா
03-04-2007, 05:38 PM
ஜாவா! நான் சொன்னது உங்களைத்தான்... ஓவியன் இங்கு இன்னும் வரவில்லை..

விகடன்
03-04-2007, 05:40 PM
ஜாவா! நான் சொன்னது உங்களைத்தான்... ஓவியன் இங்கு இன்னும் வரவில்லை..

அதுதாங்க,

ஓவியனுடைய கருத்துடன் அடியில் ஒட்டிக்கொண்டு வருமே.

என்ன செய்ய ஆதவன். எனக்கு இங்கு படித்தது ஓவியனுடைய அந்த தூரிகை வண்ணம் புலம்பலை ஒத்ததாக இருந்தது. அதுதான், இதுகூட கவிதயாஇ இருக்குமோ......என்று.

ஹீ....ஹீ....ஹீ....

விகடன்
03-04-2007, 07:07 PM
இன்று உலகம் சென்றுகொண்டிருக்கும் வேகத்தில் மரபு கவிதையோ அல்ல்து உரைநடையோ படிக்கும் பொருமை பெரும்பாலான மக்களிடம் இல்லை என்பதால் தான்" புதுக் கவிதை" பரிணமித்து என்பது தங்கள் எல்லோரும் அறிந்ததே.

எனவேதான் புதுக் கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். இந்த பகுதியில் எனது கவிதைகளை கொடுக்கலாம் என நினைக்கிறேன்.:

:feiertag014:

ஓவியனை வார முற்பட்டதில் உங்கள் பிழைப்பு நாறியதாக கருதினால் மன்னித்துவிடுங்கள் நண்பரே.

திராவிடன்
03-04-2007, 10:04 PM
புதுக்கவிதை என்றாய்
ஓடோடி வந்தேன்
புதியவனாய் புதியதாய்
எழுதினாய் கவிதையை
தவிர
நன்றி

அறிஞர்
03-04-2007, 10:09 PM
புதுக்கவிதை என்றாய்
ஓடோடி வந்தேன்
புதியவனாய் புதியதாய்
எழுதினாய் கவிதையை
தவிர
நன்றி
இப்பொழுது தானே வந்திருக்கிறார்.. சற்றுப்பொறுங்கள்... கவிதை மழை பொழிவார்.

ஷீ-நிசி
04-04-2007, 05:38 AM
ஓஓ சுட்டதால்தான் குருதி வழிகிறதா?
அதெப்படி..
சுட்டவருக்கே குருதி எனில்
சூடு பட்டவருக்கு?

வொண்டர்ஃபுல் டைமிங்......செல்வன்...

ஓஓ சுட்டதால்தான் குருதி வழிகிறதா?

ஆனால் இதை மட்டும் சொல்லி நிறுத்தியிருந்திக்கலாம்.. கச்சிதமாய் இருந்திருக்கும்...

ஷீ-நிசி
04-04-2007, 05:41 AM
கவிதை எழுதாமலே நண்பரின் திரி மூன்று பக்கத்தை தாண்டியுள்ளது.. நண்பரே புதுக்கவிதை எழுதுங்கள்.. "புதுக்கவிதை" என்று மட்டும் எழுதிவிடப்போகிறீர்கள்.