PDA

View Full Version : ஆறா ரணம் - கண்கள்



ஆதவா
03-04-2007, 12:31 PM
ஊறிக்கொண்டிருக்கும்
சேற்றுத் தாமரையைக்
கண்ணால் காண சகிக்காமல்
முற்கள் பொருந்திய மலராகச்
சென்று விடுகிறாய் பார்வை குருடாய்...

ஆற அமர்ந்து
கண்கள் பேசட்டுமே என்று
நினைத்தாலோ நீ
விழிகளை மூடிவிட்டு
மெளனம் பேசுகிறாய்
இதனால்
என் கண்களில் குருதி வடிவது
உனக்குத் தெரியும் என்றாலும்
உறுதியாக ஒரு வார்த்தை சொல்
இருக்கவா ? போய்விடவா ?

பார்த்த சமயங்களில்
கணைகளைத் தொடுத்தாய் கண்ணுக்கு
பாராத சமயங்களில்
அமிலம் ஊற்றுகிறாய் அதே கண்ணுக்கு

ஆடி அணிந்து பார்த்துக்கொள்ள
என் இதயமொன்றும்
பார்வை இழக்கவில்லை
அதனால் இரணத்தைத் தீர்க்க
உன் எச்சிலை என் விழிகளுக்குள்
ஒரு முறையாவது ஊற்றச் சொல்லுகிறேன்

நீ விழிகள் திறக்கும் போது
என் இதயம் இயங்குகிறது
மூடும்போது
குழாய்களில் கொழுப்பு சேருகிறது.
என்றுமே என் கண்களுக்கு முன்
நீ மூடியே கிடக்கிறாய் உன் மனம் போல

விக்கலோடு இயங்குகிறது
உன் பார்வை படாத என் இதயமும்
ஒரு சோடி கண்களும்...

தொடரும் இந்த புலன்களின் புலம்பல்கள்...

அறிஞர்
03-04-2007, 02:18 PM
கண்களின் புலம்பல் அருமை..
ஒரு பார்வை, எச்சில் கிடைத்தால் ரணம் ஆறுமே.

ஒவ்வொரு புலன்கள்...
கவிதை பாட ஆரம்பித்தால்....
ரணங்களின் பாதிப்பு குறையுமே...

தொடருங்கள் ஆதவா.

அன்புரசிகன்
03-04-2007, 02:24 PM
என் கண்களில் குருதி வடிவது
உனக்குத் தெரியும் என்றாலும்
உறுதியாக ஒரு வார்த்தை சொல்
இருக்கவா ? போய்விடவா ?



இந்த வரிகள் ஒரு கணம் எனது தலையை விறைக்க வைத்துவிட்டது.
கடின வார்த்தை.
வாழ்த்துக்கள் ஆதவரே. பிரகாசியுங்கள்.

ஆதவா
03-04-2007, 03:53 PM
நன்றி அறிஞர் மற்றும் அன்புரசிகன்..

ஆதவா
03-04-2007, 05:03 PM
என் கவிதை வரிகளை கையெழுத்தாக இட்டமைக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன் ஓவியா அவர்களே! கூடவே பெருமையும்......
---------------
ஒரு குட்டி விமர்சனம் போடலாமே!??

ஷீ-நிசி
03-04-2007, 05:07 PM
ஆதவா, பயங்கரமான புலம்பலாயிருக்கிறதே....

அதனால் இரணத்தைத் தீர்க்க
உன் எச்சிலை என் விழிகளுக்குள்
ஒரு முறையாவது ஊற்றச் சொல்லுகிறேன்

முற்றிலும் புதுமையான அழகான காதல் வலி வரிகள்...

ஆதவா
03-04-2007, 05:24 PM
நன்றிங்க ஷீ! இது ஒரு வெள்ளம்.. நான் வடிகட்டியது மட்டும் இங்கே!! இனி மேலும் பாயும்....

விகடன்
04-04-2007, 06:43 PM
புலனில் ஒன்றின் புலம்பலை வெளிப்படுத்திவிட்டீர்கள்.

மீதியையும் திறம்பட இதேபோல தருவிக்க எனது வாழ்த்துக்கள் ஆதவா.

இளசு
04-04-2007, 08:35 PM
ஊறிக்கொண்டிருக்கும்
சேற்றுத் தாமரையைக்
கண்ணால் காண சகிக்காமல்
முட்கள் பொருந்திய மலராகச்
சென்று விடுகிறாய் பார்வை குருடாய்...




முள்ளுடன் மலரானாலும் பரவாயில்லை!
முள் மட்டுமே மொத்தமும் என்றால்?





ஆற அமர்ந்து
கண்கள் பேசட்டுமே என்று
நினைத்தாலோ நீ
விழிகளை மூடிவிட்டு
மெளனம் பேசுகிறாய்
இதனால்
என் கண்களில் குருதி வடிவது
உனக்குத் தெரியும் என்றாலும்
உறுதியாக ஒரு வார்த்தை சொல்
இருக்கவா ? போய்விடவா ?
.

நீ திரும்பி நின்றால்
நான் நிற்கவா போய்விடவா???






பார்த்த சமயங்களில்
கணைகளைத் தொடுத்தாய் கண்ணுக்கு
பாராத சமயங்களில்
அமிலம் ஊற்றுகிறாய் அதே கண்ணுக்கு


...


அம்பும் அமிலமும்..
இரண்டுமே வேதனைதானே!





ஆடி அணிந்து பார்த்துக்கொள்ள
என் இதயமொன்றும்
பார்வை இழக்கவில்லை
அதனால் இரணத்தைத் தீர்க்க
உன் எச்சிலை என் விழிகளுக்குள்
ஒரு முறையாவது ஊற்றச் சொல்லுகிறேன்

நீ விழிகள் திறக்கும் போது
என் இதயம் இயங்குகிறது
மூடும்போது
குழாய்களில் கொழுப்பு சேருகிறது.
என்றுமே என் கண்களுக்கு முன்
நீ மூடியே கிடக்கிறாய் உன் மனம் போல

விக்கலோடு இயங்குகிறது
உன் பார்வை படாத என் இதயமும்
ஒரு சோடி கண்களும்...

...

இதயப் பார்வைக் குறைபாடு
விழிகளை நிரப்பும் எச்சில்
பார்க்காததால் நெருங்கும் மாரடைப்பு
இதய-விழி விக்கல் சிக்கல்!

முற்றிலும் புதிய சொல்லாடல்..
சொக்கி நிற்கிறேன்..

வாழ்த்துகள் ஆதவா!

ஆதவா
05-04-2007, 01:21 AM
நன்றிங்க இளசு அண்ணா! இனியும் புலன்களின் புலம்பல்கள் தொடர்ந்து வரும்....

poo
05-04-2007, 05:35 AM
வலிகளை, மன அவஸ்தைகளை வரிகளில் உணர்த்திட முடியுமா என்ற சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருகிறது ஆதவன்.

வாழ்த்துச்சொல்ல மனமில்லை... இரணமாகும் புலன்களை வருத்தத்தோடு கவனிக்கிறோம்... தொடருங்கள்!!

ஆதவா
05-04-2007, 04:46 PM
நன்றிங்க பூ!!