PDA

View Full Version : திருவிழாவில் ஆதவன் தெருஉலாஆதவா
03-04-2007, 10:13 AM
எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஒரு ஊரில் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று உண்டு. கொண்டத்து காளியம்மன்
என்பது அந்த தெய்வத்துக்கு வைத்த பெயர். வருடா வருடம் பங்குனி மாதத்தில் திருவிழாவே நடக்கும். நேற்று
பெளர்ணமி என்பதால் இன்னும் அங்கு உச்சகட்ட திருவிழாதான்...

திருப்பூரின் பெரும்பாலான பெண்கள் அங்கேதான் இருப்பார்கள்.. ஹி ஹி குறிப்பாக நங்கைகள். அதிலும் சுரிதார்கள்
முதல் பாவாடை தாவணிவரை என்ன அழகு என்ன அழகு! எங்கள் ஊரில் அழகான பெண்கள் இத்தனையா என்று
ஆச்சரியப்படுத்தும் கூட்டங்கள் இவை/// ம்ம்ம்ம் நமக்கு கண்கள் அலைபாய்ந்தாலும் நான் பொறுப்பில் இருப்பதால்
கொஞ்சம் அடக்கியே வாசித்தேன். முன்பெல்லாம் இப்படியில்லை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, காதலர்கள் முதல், கள்ள சோடிகள் வரை அங்கே கும்மாளமிடுவதைக்
கண்கூடாக கண்றாவியாகப் பார்க்கலாம்.. இது ஒருபக்கம் இருக்கட்டும்.. எங்கள் ஊரிலிருந்து கிட்டத்தட்ட 12 கி.மி
தொலைவில் பெருமாநல்லூர் என்ற ஊரில் இருக்கிறது. தே.நெ சாலைக்கு மிக ஒட்டியவாறு அந்த கோவில்
அமைந்திருக்கும். திருப்பூர் மட்டுமல்ல அண்டை ஊரிலிருந்தும் பெண்களும் ஆண்களும் பக்தர்களும் ஒன்றாக நடந்தே
வந்து சேர்வார்கள்.. இங்கே கவனிக்க வேண்டியது, இரவு நேரத்தில் இந்த நடை பயணத்தை ஆரம்பிப்பார்கள்... திருப்பூர்
- பெருமாநல்லூர் சாலை முழுக்க மஞ்சள் வண்ணப் புடவை கட்டிய பக்தப் பெண்களையும் மஞ்சள் வேட்டி கட்டிய
ஆண்களையும் காணமுடியும். இதனோடு ரவுசு செய்யவே எங்களைப்போல செல்லும் கூட்டம் மிக அதிகம்.

பொதுவாக பக்தர்கள் அவரவர் ஊரிலிருந்து கிளம்பும்போது அங்கங்கே உள்ள கோவிலில் விசேச பூசைகள் செய்துவிட்டு
பின் பயணத்தைத் தொடருவார்கள். பெரும்பாலும் மஞ்சள் உடை தரித்தவர்கள் எல்லாருமே மாலை அணிந்து
வேண்டியிருப்பார்கள்.. குண்டம் இறங்குபவர்கள்.. வழி முழுக்க குடம்குடமாய் நீராடலும் பக்திப் பரவசத்தில் அருள் வந்து
ஆடும் பக்தர்களிடம் நிறைகுறை கேட்பதுவும் திருநீறு பூசிவிடுவதும் நிறைய இடத்தில் காணலாம். இங்கே எத்தனை
நாள் திருவிழா என்று எனக்குத் தெரியாது. எல்லாருமே கிட்டத்தட்ட 6 மணியளவில் கிளம்பிவிடுவார்கள். இரவு 11
மணிக்கு கிளம்பும் கூட்டமும் உண்டு.. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் அங்கே கூடியிருந்தார்கள் என்பது என் கணக்கு.
மேலும் இருக்கலாம்.

நான் ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்றாலும் நேற்று வேளையிருந்ததால் கிட்டத்தட்ட யோசனையே இல்லை..
என்னிடம் எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு.. நான் எங்காவது வருவதாக யாரிடமும் வாக்கு தரமாட்டேன். என்
நண்பர்கள் என்னிடம் எங்காவது போவதைப் பற்றி முன்பே சொல்லுவார்கள் ஆனால் நான் முடிவெடுப்பது அன்று இரவு
அல்லது அன்று அதிகாலைதான்... அதேமாதிரி நேற்று பத்து மணியளவில் திடீரென ஒரு யோசனை. கொண்டாத்தா
கோவிலுக்குச் சென்றால் என்ன? என்று. சரி உடனே என் நண்பர்களை அழைத்தேன். குமார், எங்கள்
அலுவலகத்திற்கருகில் வேலை புரியும் நண்பர், என் இளமைப் பருவமுதலே பழகும் இனியவன் சுரேஷ், அவன் அண்ணன்
ரமேஷ், இவர்களின் பெரியப்பா மகன் ரவி, நான், இன்னொரு நண்பர் திருப்பதி ஆகிய ஆறுபேர் கிளம்பினோம்.
பொதுவாக என்னுடைய குழு இவர்கள் கிடையாது சுரேஷ் தவிர, எங்கள் குழுவில் மொத்தம் இருபதுக்கும்
மேற்பட்டவர்கள் இருப்பார்கள்.

இரவு சுரேஷ் வீட்டிற்கு சென்று அவனை அழைக்க இருக்கையில் பசியெடுத்ததால் நானும் குமாரும் நேரே
உணவகத்திற்கு சென்றோம். ஒரு புரோட்டா, இரண்டு தோசைகள் இரண்டு மீன் மற்றும் ஒரு அரைவெம் முட்டை
(ஆப்பாயில்) சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். ஒரு கிமீ தாண்டியிருப்போம். அப்போதே கூட்டம் அதிகமாக
சென்றுகொண்டிருந்தது. எங்களுக்கு முன்னே இரண்டு வண்டிகள் சென்று கொண்டிருந்தது. பின்னே கிட்டத்தட்ட
இருபது வண்டிகள் வந்துகொண்டிருந்தன. நாங்கள் முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தவேளையில் எங்களுக்குள்
இரு வண்டிகளில் நல்ல வடிவான பெண் அமர்ந்து சென்று கொண்டிருக்க, வண்டியோட்டிய நானோ அந்த பெண்ணை
பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். நாங்கள் லூட்டி அடிக்க, அந்த பெண்கள் இருவரும் கையசைக்க,, ஒரே
கூத்துதான் போங்கள்... பெருமாநல்லூர் வரை நாங்கள் பிந்தொடர்ந்தே சென்றோம். அட! வண்டியை நிறுத்தும்போதுகூட
அருகிலே தானே நிறுத்தினோம்...

நிறுத்தியதும் தே.நெ சாலை கடந்து சென்றுகொண்டிருக்கையில் ஒரு சுற்றுலா வேன். அதில் சில நங்கைகள்
அமர்ந்திருந்தனர். திருவிழாவை ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்க, நான் அவர்களுக்கு கையசைத்தேன்.
அவர்களும் சிரித்துக்கொண்டே கையசைத்தார்கள். கூட்டமாக இருந்தமையால் அவர்களின் வேன் மெதுவாகவே
சென்றுகொண்டிருந்தது. நான் நடந்தவாறே நீங்கள் இந்த ஊரா என்று கேட்டேன். பதில் ஆமாம் என்று வந்தது. பின்
ஒருசில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.. பொறுக்க முடியாத நண்பர்கள் என்னை அப்படியே திருவிழா நடக்கும்
இடத்திற்கு அழைத்துச் செல்ல, நானும் அந்த கிளியும் கொஞ்சம் சோர்ந்துபோனதென்னவோ உண்மைதான்..

நேரே ராட்டினங்கள் சுற்றும் இடத்திற்கு சென்றோம்... செம கூட்டம். அங்கு நிற்கவே முடியவில்லை. கொஞ்சம்
கொஞ்சமாக அங்கிருந்த நங்கையர்களை ரசித்தவாறே மெல்ல பொருள்கள் விற்கும் இடம் நோக்கி அகன்றோம். என்
கண்களில் முதலில் தென்பட்டது பலூன் சுடும் இடம். போன வருடம் வந்தபோது கிட்டத்தட்ட சாம்பியனாக இருந்தேன்.
பத்து குண்டுகளில் எட்டு பலூன்களை சுட்டு நண்பர்களிடம் பாராட்டு பெற்றமையால் இம்முறை என்னிடம் எதிர்பார்ப்பு
கூடியது. ஆனால் ஏமாற்றம். அப்படியே தலைகீழ் ஆனது. பத்து குண்டுகளில் இரண்டு பலூன்களை மட்டுமே சுட்டேன்.
துப்பாக்கி லேசாக கோணமாக இருந்ததுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

பெண்கள் உபயோகப் பொருள்களான முடிப்பின்னல், சீப்பு, கண்ணாடி, வளையல், நகச்சுருள், தங்கமாதிரி மாலை,
போன்றவைகள் பார்த்துக்கொண்டே வந்தோம். சில கடைகளில் பீங்கான்களால் ஆன பாத்திரங்கள், சிலவற்றீல்
களிமண்களை பீங்கான் என்று சொல்லி விற்கும் பாத்திரங்கள் என்று பலவகைகளைப் பார்த்தோம். முக்கியமாக
நங்கையர்கள் எங்கே நிற்கிறார்களோ அங்கேயெல்லாம் சென்று நின்றுகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வீட்டு
உபயோகப் பொருள்கள், சிறார்களுக்கு விளையாட்டுப் பொருள்கள், பலவகை திண்பண்டங்கள் என்று அந்த இடமே
களிப்பாக இருந்தது,... எங்களைப் போன்ற இளைஞர்களின் கூட்டத்தால் திருவிழாவே அல்லோலகல்லோலமாக
இருந்தது. அங்கே கிட்டத்தட்ட ஒருமணிநேரம் உலாவிக்கொண்டிருந்தோம், மெல்ல பட்டி மன்றம் நடக்கும் இடத்திற்கு
சென்றோம்

திரைப்பாடல்களைப் போட்டு அதில் உள்ள குறைபாடுகளைச் சொன்னவாறு பட்டிமன்றம் நடந்தது. தலைப்பு
என்னவென்று தெரியவில்லை... நங்கையர் தலைப்பைத் துலாவிக்கொண்டு வரும் எங்களுக்கு பட்டிமன்றத்தலைப்பு எப்படி
கண்களுக்குத் தெரியும்?. சரி, இடையில் ஒன்றுமே சாப்பிடவில்லையா என்று கேட்டீர்களேயானால் எப்படி நான் மறுக்க,
ஒன்று விடாமல் ருசி கண்டுவிட்டோம். பெரும் அப்பளம்,. காரவடை, காளிப்ப்பூ சில்லி சுண்டல் என்று காரமாக ஒரு
இடத்திலும், மாங்காய், கரும்பு, கொய்யா., என்று இயற்கை பதார்த்தங்கள் ஒரு இடத்திலும், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள்
என்று ஒரு இடத்திலும் சாப்பிட்டு நடக்க முடியாமல் தள்ளாடியது தனிக்கதை. ஆனால் நாங்கள் எங்கு சென்றாலும்
அங்கே ஒரு பெண்கள் கூட்டம் இருப்பது ஏன் என்றே தெரியவில்லை./

சரி இம்முறை எப்படியும் ராட்டினம் சுற்றுவது என்ற முடிவோடு, சென்று கூட்டத்தில் நின்றால், எங்களுக்கு முன்னால்
கிட்டத்தட்ட நூறுபேராவது இருந்திருப்பார்கள். இதுவேண்டாம் என்ற முடிவோடு, பிரேக் டான்ஸ் எனப்படும் ஒரு சுற்று
ஒன்றில் பயணம் செய்ய நுழைவுச் சீட்டு வாங்கினோம். அதற்கே போதும்போதுமென்றாகிவிட்டது. சென்று அமர்ந்து
சென்று சுற்றினால், வேகமேஇல்லை, இரண்டு நிமிடங்கள் தான் சுற்றினோம். அதற்குள் இறக்கிவிட்டார்கள்,. இதற்கு
இருபது ரூபாய் தண்டம்... பேசாமல் பிளாக் தண்டர் போயிருந்தால் நன்றாக சுற்றி இருக்கலாம். (நிறைய நங்கையர்
கூட்டம் வரும்... :D ) மணி பனிரெண்டாகிவிட, நண்பன் சுரேஷுக்கு தூக்கம் வந்துவிட்டது. மெதுவாக அங்கிருந்து
கழன்று வந்தோம். வரும் வழியில் நாக்கு சும்மா இருக்காமல் ஐஸ்கிரீம் கேட்டது. சரி என்று தண்டம் வைத்துவிட்டு
வண்டியை எடுத்து கிளம்பினோம்,. சுமார் 20 நிமிடத்தில் நாங்கள் எல்லாரும் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம்.///

வந்தபின்னர் பார்த்தால் மணி கிட்டத்தட்ட 1.15 இந்நேரத்தில் மன்றத்தில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று வந்தால்
அறிஞர், இளசு இருந்தார்கள். நான் சிலவற்றிற்கு பதில் அளித்துக்கொண்டிருக்கையில் ஓவியாவும் வந்தார்....

அப்பறம் இரண்டு மணியளவில் தூக்கம் வந்துவிட, நான் தூங்கிவிட்டேன். காலை நேரம் கழித்து எழுந்தேன்.....

திருவிழா என்றாலும் கோவில் விசேசம் ஆகையால் நான் கோவிலுக்குச் சென்றிருக்க வேண்டும்.. ஆனால் இம்முறையும்
செல்லவில்லை... ஹி ஹி நான் இதுவரை கோவிலுக்குள் சென்றதே இல்லை.// அந்த வழியில் சென்றாலே நம் நண்பர்கள்
உடனே ராங் ரூட் என்கிறார்கள்.. என்ன செய்ய../?

நடக்கக் கூடாதவைகள் நான் அங்கே கண்டது :

மிக வேகமாக சென்று கொண்டிருந்த ஒரு வண்டி பேருந்து மீது மோதி வண்டி நபருக்கு பலத்த காயம்... அதை நேரிலே
வேறு கண்டு தொலைத்துவிட்டு சென்றமையால் கொஞ்சம் கவனமாகவே வண்டியைச் செலுத்தினேன்.

திருவிழாவில் பெண்களை ரசிப்பதில் தவறில்லை. ஆனால் துன்புறுத்துதல் மிகவும் தவறு. ஒரு இளைஞன் ஒரு பெண்ணின்
மீது மோதி கை பதிந்து தவறுசெய்யப் பார்க்க, அச்சமயம் பார்த்து அங்கிருந்த காவல்துறையினர் தம் கடமையினை கம்பு
வழியே காண்பிக்க, பாவம் அந்த பெண்.... இந்தமாதிரி ஆண்கள் நடந்துகொள்ளும் விதத்தைக் கண்டால் எனக்கு
ரொம்பவே வெறுப்பு வரும்.// சைட் அடிங்கடா! பிரச்சனையில்லாம கடலை போடுங்கடா; ஆனா அநுமதி இல்லாம
அவங்களைத் தொடாதீங்க என்பது என் கொள்கை....

சரி சரி... திருவிழாவில் நடந்தவைகள் நான்கண்டவைகள் இவைதான்..... இனி என்ன... பதில் எழுதுங்கள் எப்படி
இருந்தது என்றூ..

அன்பு
ஆதவன்

poo
03-04-2007, 10:29 AM
ம்ம்.. கலக்கி இருக்கீங்க ஐயா... திருவிழாவில சாமியைப் பார்த்த இளவயசு ஆசாமிங்க ரொம்ப கம்மிதான்...

நேற்று 11 மணிக்கு பௌணர்மி நிலவொளியை ரசித்தேன்.. சில நிமிடங்கள்..அதே வேளை நீங்க என்ன அழிச்சாட்டியம் பண்ணி இருக்கீங்க..

எங்களையும் அந்த கூட்டக்கடலுக்குள் அழைத்துச் சென்று...கடைசியில சாமி கும்பிட வைக்காம விட்டுட்டீங்க...

என் கரகக்கிளியை இந்த பதிவுக்குப்பின் எழுதி இருக்கலாம்... பின்னே திருவிழா எப்படி இருக்கும்னு எல்லோருக்கும் நினைவுபடுத்தி இருக்கீங்களே..

கால்கட்டு மாட்டிக்கிறதுக்குள்ள நல்லா கலகலன்னு அனுபவிங்க நண்பரே!!

ஷீ-நிசி
03-04-2007, 10:43 AM
திருவிழாவை கண்முன்னே நிறுத்தினீர்கள்.. ஆதவா....

அன்புரசிகன்
03-04-2007, 10:53 AM
எங்களுக்கு முன்னே இரண்டு வண்டிகள் சென்று கொண்டிருந்தது. பின்னே கிட்டத்தட்ட
இருபது வண்டிகள் வந்துகொண்டிருந்தன. நாங்கள் முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தவேளையில் எங்களுக்குள்
இரு வண்டிகளில் நல்ல வடிவான பெண் அமர்ந்து சென்று கொண்டிருக்க, வண்டியோட்டிய நானோ அந்த பெண்ணை
பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். நாங்கள் லூட்டி அடிக்க, அந்த பெண்கள் இருவரும் கையசைக்க,,
ஆதவன்

எங்கள் ஊரில் தற்பொழுது இராணுவ வண்டி தான் அப்படிச்செல்லும்.

நீங்கள் சந்தோஷமாய் இருந்தீர்கள் தானே. அது போதுமைய்யா...
சிறுவயதில் தண்ணீர்ப்பந்தலில் பானம் அருந்துவதற்காக துள்ளிக்குதித்தவை நினைவில் வந்ததது. அந்த அனுபவங்களை மீட்டித்தந்ததற்கு நன்றி ஆதவா.

ஓவியன்
03-04-2007, 10:55 AM
வர்ணனை அட்டகாசம் ஆதவா!
அதில் உம்முடைய லொள்ளு அருமை ஆதவா!
அதற்கு மேலாக நீர் அதற்கு வைத்த பெயர் - அடடடா என்னே ஒரு பொருத்தம், நான் என்னவோ எதோவென்று ஓடி வந்தேன்.

பி.கு - நேற்று நீர் சொல்லாமல் கொள்ளாமல் தெருவுலாவிற்குப் போய் விட்டீர் இந்த பயலுகள் சரியான சந்தோசத்தில மயூரசனின் திரியிலே செம ரகளை பண்ணிட்டாங்க

ஆதவா
03-04-2007, 12:09 PM
மிகவும் நன்றி பூ! உங்கள் கரகக்கிளிக்கும் இதற்கும் ஏணி என்ன ராக்கெட்டே விட்டாலும் வானம் தொடமுடியா தூரம்.. அதற்கு உண்டான அர்த்தமே என்னை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது... அதுதான் உண்மைக் கவிஞனின் பார்வை

இப்போவே கால்கட்டா? அதற்கு இன்னும் எழெட்டு வருடங்கள் இருக்கிறது... அதற்குள் கலகலத்திரவேண்டியதுதான்..... :)

---------------------------------------------------------------
நன்றிங்க ஷீ! உங்கள் கண்களுக்கு முன் கொண்டுவந்ததாக இருக்குமானால் அதுவே என் வெற்றி...
--------------------------------------------------------------
அன்பு ரசிகன், உங்களின் அந்த வார்த்தைகள் கண்டதும் எனக்கு மனம் என்னவோ போலாகிவிட்டது.... நாம் அனுபவிப்பவைகளும் அதற்கு நேர்மாறாக என் ஈழ சகோதர சகோதரிகள் அனுபவிப்பதும் கண்களுக்குள் வருகிறது..... விடிவு பிறக்கும் நண்பரே! எத்தனை நாள்தான் மேகம் முடங்கிக் கிடக்கும்.?
-----------------------------------------------------------
நன்றி ஓவியரே! (ஓவியான்னு சொல்ல முடியாது....ஏற்கனவே ஒரு ரீட்டா இருக்கச்சே எப்படி சொல்ல?.) நீங்கள் அடித்த கூத்தைக் கண்டேனே பல பக்கங்கள்.... பக்கம் திருப்பி திருப்பியே கை வலித்துவிட்டது, இருக்கட்டும்.. வேலைப் பளு ஓயட்டும்... அப்போது கவனித்துக்கொள்கிறேன் அவர்களை............. நர நர நர (பற்களிடமிருந்து சவுண்டு :D )

raj6272
03-04-2007, 12:22 PM
பரவாயில்லையே.....நல்ல பிள்ளையா இருக்கீங்களே ஆதவா...

ஆதவா
03-04-2007, 01:09 PM
ஏங்க ராஜ்... கிண்டால் பண்டுறீங்க! நான் ரொம்ப நல்லவன்னு ஊர்ல பேசிக்கிட்டாலும் ஓவரா ரவுசு உடறதால எனக்கு கொஞ்சம் என்மேலெயே சந்தேகம் வேற..............

நன்றிங்க ராஜ்..

ஓவியா
03-04-2007, 01:23 PM
அன்பு தம்பி ஆதவா,

உன் கைவண்ணதில் மலரும் அத்தனை பதிப்புகளும் நச்சத்திர பதிவு. ஒவொன்றும் ஒரு அழகான படைப்பு.

கட்டுரை படிக்க முகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. இது போல் படைக்கும் இன்னொரு படைப்பளியும் நம் மன்றத்தில் உண்டு.

ரசித்து படித்தேன். இந்த வயதில் வரும் குறும்புகளை புட்டு-புட்டு அழகாக எழுதியுல்லாய். நல்ல பதிவு.

நன்றி ஆதவா சார்.....


தொடர்ந்து இன்னும் பல திருவிழாக்கள் சென்று சைட் அடித்து இன்புற்று வாழ்க. :icon_wink1:

paarthiban
03-04-2007, 04:21 PM
அய்யோ அய்யோ மிஸ் பண்ணிட்டேனே ஆதவா அவர்களே
படிக்கும்போதே ஜாலியா இருக்கே. அடுத்தமுறை அழச்சிட்டு போங்க. சரிங்களா?

ஆதவா
03-04-2007, 04:35 PM
மிகவும் நன்றி ஓவியா அவர்களே!! சார் என்று அழைக்க வேண்டாம்... தம்பி என்று அழையுங்கள்... இது என் வேண்டுகோள்... உங்கள் வாழ்த்துப்படி நடக்க வேண்டுகிறேன்..
என்னைப் போல எழுதுபவரா? யாருங்க? சொல்லீடுங்க.. இல்லைன தலை வெடிச்சுரும்..
------------------------------------------------------------
பார்த்திபன் அவர்களே! கவலை விடுங்கள்... இன்னும் பல திருவிழாக்களும் உலாக்களும் இருக்கின்றன.... முன்னதாக.. நன்றி பார்த்திபன் அவர்களே!

ஓவியா
03-04-2007, 04:44 PM
மிகவும் நன்றி ஓவியா அவர்களே!! சார் என்று அழைக்க வேண்டாம்... தம்பி என்று அழையுங்கள்... இது என் வேண்டுகோள்... உங்கள் வாழ்த்துப்படி நடக்க வேண்டுகிறேன்..
என்னைப் போல எழுதுபவரா? யாருங்க? சொல்லீடுங்க.. இல்லைன தலை வெடிச்சுரும்..
------------------------------------------------------------
பார்த்திபன் அவர்களே! கவலை விடுங்கள்... இன்னும் பல திருவிழாக்களும் உலாக்களும் இருக்கின்றன.... முன்னதாக.. நன்றி பார்த்திபன் அவர்களே!

சொல்ல மாட்டேன். ஹி ஹி ஹி ஹி

ஒருவர் ரொம்ப ரசனை மழை சொட்ட சொட்ட பதிவு போடுவார்...

ஒரு வேளை இளசு சார் வந்து இது யார் என்று சொன்னாலும் சொல்லாம்.....:icon_wink1:

ஆதவா
03-04-2007, 05:11 PM
ஏங்க இப்படி தலை வெடிக்கற மாதிரி விசயம் சொல்றீங்க... தனிமடலிலாவது சொல்லவும்....

அறிஞர்
03-04-2007, 11:33 PM
சிறு வயசுல திருவிழாக்களை பார்த்தது...

கல்லூரியில் படிக்கும்பொழுது.. தேனிக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு திருவிழாவிற்கு சென்றேன்.

கிராமங்கள் திருவிழா என்றாலே தனி சிறப்பு தான்.
----------
திருவிழா சென்று வந்தாலும் மன்றத்தில் சரியாக ஆஜராகிவிட்டீர்கள்..

ஆதவா
04-04-2007, 01:05 AM
நன்றிங்க அறிஞரே!!!

mukilan
04-04-2007, 02:04 AM
அந்த நாள் ஞாபகம், வந்ததே ஆதவன்! சுவையான சம்பவங்கள் சொல்லி எல்லார் மனசிலும் ஆசையைக் கெளப்பிட்டீங்க. கோவில் மட்டும் இல்லை சாப்பிட்டீங்களே அரைவேக்காடு முட்டை, கல் தோசை, மீன் பரோட்டானு! உங்களையெல்லாம்...... :violent-smiley-027: :violent-smiley-027: இனிமேல் யாராச்சும் சாப்பாட்டு ஆசையைக் கெளப்பினா இருக்கு.

அப்போ 1997..... மதுரைல தல்லாகுளம்னு ஒரு இடம் இருக்கு. அழகர் ஆத்துல இறங்குற திருவிழா சமயம் தல்லாகுளம் பெருமாள் கோயில்லையும் கொஞ்சம் விசேசமா இருக்கும். அப்போ இதே போல நண்பர்களோட போய் சுத்துனவந்தேன்! ஒரு பொண்ணை நான் லுக் விடவும் அந்தப் பொண்ணு நம்மளை லுக் விடவும், ஏத்திவிட்டாய்ங்க நம்ம பங்காளிங்க. அப்புறம் என்ன அந்தப் பொண்ணு வீடு வரைக்கும் தினமும் போய்வாற வேலைதான். நல்லாத்தான் போச்சி! ஆனா எக்ஸ்ட்ரா ஸ்டெப் எப்போவுமே என்னால எடுத்து வைக்கமுடியாம அந்த விசயம் மண்ணாகிப் போச்சி! அதோட விளைவு நல்லா பரிட்சையில தெரிஞ்சது ஹி!ஹி!!

ஓவியன்
04-04-2007, 03:12 AM
கட்டுரை படிக்க முகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. இது போல் படைக்கும் இன்னொரு படைப்பளியும் நம் மன்றத்தில் உண்டு.


மற்றவர் யார் நம்ம பாரதி அண்ணாவா?

ஓவியா
04-04-2007, 02:44 PM
மற்றவர் யார் நம்ம பாரதி அண்ணாவா?

யாராவது சீனியர் வந்து பதில் சொல்லலாம்!!!!!!!

நீங்க லண்டனே வந்தாலும் நான் சொல்ல மாட்டேன்....ஒரு வேல இளசு சார் உதவலாம்........:icon_dance:

இளசு
04-04-2007, 10:05 PM
முகிலன் பின்னூட்டம் இடுமுன்னே முந்திக்கிட்டாதான் நான் இனி பிழைப்பேன் போல..

(பென்ஸூக்கும் இந்த வன்மை உண்டு)


ஆதவா

என் பல - பழைய நினைவுகளையும்
ரசனை + வயிற்றுப்பசியையும் வெகுவாய்க் கிளப்பிவிட்ட
இந்த ஜனரஞ்சகப்பதிவுக்கு....

என் மனமார்ந்த பாராட்டுகள்!

இளசு
04-04-2007, 10:10 PM
ஒருவர் ரொம்ப ரசனை மழை சொட்ட சொட்ட பதிவு போடுவார்...ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல...?


மனவள ரசனைச் சொட்ட பென்ஸ்..
மண்வள ரசனைச் சொட்ட பாரதி
அறிவு சொட்டச்சொட்ட செல்வன்
உணர்வு சொட்டச்சொட்ட பூ
சொல்லழகு சொட்டச்சொட்ட ஆதவா
காட்சியழகு சொட்டச்சொட்ட ஷீ-நிசி
சிந்தனை சொட்டச்சொட்ட மோகன்
பல்வகை ரசனைகள் சொட்ட ராகவன்..

மன்ற ரசனையாளர்கள்..

ஒருவரா இருவரா..
எவரைச் சொல்ல?

ஆதவா
05-04-2007, 12:44 AM
அடடா கடைசி வரைக்கும் அவர் யார்னே தெரியல.... ஆனாலும் ஓவியா உங்களுக்கு நன்றீ.... இல்லைனா ஜாம்பாவன்களுக்கு இடையில என் பெயர் ரசனை சொட்ட இளசு அண்ணா எழுதுவாரா?

நன்றிங்க அனைவருக்கும்

ஓவியா
05-04-2007, 12:57 AM
ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல...?


மனவள ரசனைச் சொட்ட பென்ஸ்..
மண்வள ரசனைச் சொட்ட பாரதி
அறிவு சொட்டச்சொட்ட செல்வன்
உணர்வு சொட்டச்சொட்ட பூ
சொல்லழகு சொட்டச்சொட்ட ஆதவா
காட்சியழகு சொட்டச்சொட்ட ஷீ-நிசி
சிந்தனை சொட்டச்சொட்ட மோகன்
பல்வகை ரசனைகள் சொட்ட ராகவன்..

மன்ற ரசனையாளர்கள்..

ஒருவரா இருவரா..
எவரைச் சொல்ல?


நன்றி இளசு சார்.

வஞ்சமில்லா பாராட்டு.....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கொடுத்து வைத்த மன்றம்தான்.

ஓவியா
05-04-2007, 01:01 AM
அடடா கடைசி வரைக்கும் அவர் யார்னே தெரியல.... ஆனாலும் ஓவியா உங்களுக்கு நன்றீ.... இல்லைனா ஜாம்பாவன்களுக்கு இடையில என் பெயர் ரசனை சொட்ட இளசு அண்ணா எழுதுவாரா?

நன்றிங்க அனைவருக்கும்

ஆமா ஆமா
பெரியா ஜாம்பவான்னா ஆகிட்டியே!!!!!.....:cool008:

போச்சுடா இன்று உன்னை கையில் பிடிக்க முடியாதே:sport-smiley-002:

மகிழ்ச்சிக்கடலில் முங்கி-முங்கி, முங்கி-முங்கி, முங்கி-முங்கி, முங்கி-முங்கி, முத்தா எடு ராஜா....

ஆதவா
05-04-2007, 01:07 AM
ஏங்க!!???!! என்னை கொண்டிபோய் அந்த லிஸ்ட்ல சேர்த்திரீங்க.? மகிழ்ச்சிக் கடலில் முங்கி முத்தெடுக்கப் பார்த்தா சலதோசம்தான் வரும்.. முத்து வராது :D

ஓவியா
05-04-2007, 01:10 AM
ஏங்க!!???!! என்னை கொண்டிபோய் அந்த லிஸ்ட்ல சேர்த்திரீங்க.? மகிழ்ச்சிக் கடலில் முங்கி முத்தெடுக்கப் பார்த்தா சலதோசம்தான் வரும்.. முத்து வராது :D

ஹி ஹி ஹி

காலை சிந்தனை அபாரம்.

முதலில் உங்க ஊரில் கடல் இருக்கா??? அச்சோ அத தேடு ஹி ஹி ஹி ....

பின் முத்த பற்றி யோசிக்கலாம் ஹி ஹி ஹி

ஓவியன்
07-04-2007, 03:53 AM
யாராவது சீனியர் வந்து பதில் சொல்லலாம்!!!!!!!

நீங்க லண்டனே வந்தாலும் நான் சொல்ல மாட்டேன்....ஒரு வேல இளசு சார் உதவலாம்........:icon_dance:

ஹி,ஹி!
இதுக்கெல்லாம் லண்டனுக்கு வருவாங்களா என்ன?:sport-smiley-007:

இளசு அண்ணா ஒரு பெரிய லிஸ்டே தந்துட்டார் அதில் நான் சொன்னவரின் பெயரும் இருக்கு.

இத்தால் நான் சொல்வதென்னவென்றால் நீங்கள் சொன்னவர் அவரே தான், அவரே தான் அவரே தான்.......... (நான் சொன்னது தான் சரியென்ற பிடிவாதம் தான்)

மதி
07-04-2007, 04:47 AM
ஆதவன்,
இன்று தான் இத்திரியை முழுமையாக படித்தேன். நல்லாவே கொட்டமடித்திருக்கிறீர்... இப்போது கொட்டமடிக்காமல் பின் எப்போது? அது சரி.. நீங்கள் போகுமிடமெல்லாம் நங்கையர் இருந்தனரா? இல்லை நீங்க போனதே நங்கையர் இருக்குமிடத்துக்கு மட்டும் தானா..?

இவ்ளோ தூரம் போயிட்டு கோயிலுக்கு போகாம வந்துட்டீங்களே? இதே மாதிரி ரெண்டு மூணு திருவிழாக்களுக்கு போயிருக்கேன். ஆனால் சிறு வயதில். கூட்டாளிங்களோட சேர்ந்து கொட்டமடிக்க திருவிழா சந்தர்ப்பங்கள் இதுவரை வந்ததில்லை. பார்க்கலாம். விரைவிலே அந்த வாய்ப்பு கிட்டட்டும்.

மதி
07-04-2007, 04:50 AM
சொல்ல மாட்டேன். ஹி ஹி ஹி ஹி

ஒருவர் ரொம்ப ரசனை மழை சொட்ட சொட்ட பதிவு போடுவார்...

ஒரு வேளை இளசு சார் வந்து இது யார் என்று சொன்னாலும் சொல்லாம்.....:icon_wink1:
யாருக்கும் சொல்ல வேண்டாம்..
இந்த தம்பி காதில மட்டும் கொஞ்சம் ரகசியமா..???:icon_dance:
:062802photo_prv:
அவரா..அவரா..
அவரே தானா..???:angel-smiley-004:
சரி..சரி..

பரஞ்சோதி
07-04-2007, 05:39 AM
எனக்கு எங்க ஊரு திருவிழா நினைவுக்கு வந்துவிட்டது.

ஆஹா! அந்த நாட்கள் எத்தனை இனிமையானவை தெரியுமா? உங்க பதிவை போலவே ஒரு பதிவை போட ஆவல் தூண்டிட்டீங்க.

உங்க நண்பர் சுரேஷ், அவரது அண்ணன் ரமேஷ். எங்க வீட்டில் அப்படியே தலை கீழ் :)

ஓவியன்
07-04-2007, 05:46 AM
யாருக்கும் சொல்ல வேண்டாம்..
இந்த தம்பி காதில மட்டும் கொஞ்சம் ரகசியமா..???:icon_dance:
:062802photo_prv:
அவரா..அவரா..
அவரே தானா..???:angel-smiley-004:
சரி..சரி..

அடடே!
மன்றத்திற்கு புதியவனாகையால் நிறைய விடயங்கள் புரியவே மாட்டேங்குது ராஜேஸ்!

ம்ம்ம் !!!
பார்ப்போம், பார்ப்போம் - ஓவியன் வெகு விரைவில் எல்லாவற்றையும் புரிந்து கொள்வான்.

ஓவியா
07-04-2007, 12:56 PM
யாருக்கும் சொல்ல வேண்டாம்..
இந்த தம்பி காதில மட்டும் கொஞ்சம் ரகசியமா..???:icon_dance:
:062802photo_prv:
அவரா..அவரா..
அவரே தானா..???:angel-smiley-004:
சரி..சரி..

ஆமாமா அவரே தான்.
பார்த்தா ரொம்ப விசாரிசேன் என்று சொல்லுபா.
இல்லனா கோவிக்க போரார்.நீ(ங்க) யார சொல்லறீங்க :smilie_abcfra: :smilie_abcfra:

ஓவியன்
07-04-2007, 02:24 PM
ஆமாமா அவரே தான்.
பார்த்தா ரொம்ப விசாரிசேன் என்று சொல்லுபா.
இல்லனா கோவிக்க போரார்.நீ(ங்க) யார சொல்லறீங்க :smilie_abcfra: :smilie_abcfra:

அது சரி வெள்ளை நிறத்திலே எழுதினா நல்லா இருக்குமெண்டு யார் சொல்லித் தந்தவை?

ஆதவா
07-04-2007, 03:47 PM
நன்றிங்க மதி...... நான் போன இடத்திலெல்லாம் நங்கையர்கள் இருந்ததுதான் ஆச்சரியம்,ம்... ஒருவேளை அவர்கள் இருந்த இடத்தில் நாங்கள் சென்றிருக்கலாம் :D எது இதைவிட எங்கள் கோவில் திருவிழா மற்றும் குலதெய்வ பொங்கள் விழாவிற்கு சென்றால்தான் எங்கள் கொட்டமே இருக்கு... இதில் நண்பர்கள் இருக்கமாட்டார்கள்.. என் அக்காமார்களும் அத்தைமார்களும் சேர்ந்து அவர்கள் பிள்ளைகளையே (பெரும்பாலும் என் தங்கைகள்) கிண்டல் பண்ணூவோம்... புரட்டாசி வரை பொறுங்கள்...
--------------
அவரே தான்.. மதி... கரெட்டா சொல்லீட்டீங்களே!! யக்கா!1! அவர் சூசகமா சொன்னாரே பாருங்கள்....
------------------------------
நன்றிங்க பரம்ஸ் அண்ணா! உங்கள் அனுபவமும் எனக்கு உதவும்..
--------------------------
ஓவியன்!! இன்னுமா புரியல.... ஹி ஹி எனக்கும்தான்..

மதி
09-04-2007, 02:51 AM
ஆமாமா அவரே தான்.
பார்த்தா ரொம்ப விசாரிசேன் என்று சொல்லுபா.
இல்லனா கோவிக்க போரார்.நீ(ங்க) யார சொல்லறீங்க :smilie_abcfra: :smilie_abcfra:
கண்டிப்பா சொல்றேன்..:feiertag014:

ஓவியா
09-04-2007, 03:03 AM
கண்டிப்பா சொல்றேன்..:feiertag014:

ஆமாம் அப்படியே அனுரித், சுவேதா, அண்ணியையும் கேட்டேனு சொல்லுங்க....:icon_wink1:

ஓவியன்
22-04-2007, 04:53 AM
ஆதவன் ரெண்டு நாளாக மன்றத்தில் உங்களைக் காணவில்லை மீண்டும் தெருவுலாவிற்குப் போயிட்டீங்களோ???

அன்புரசிகன்
22-04-2007, 01:24 PM
ஆதவன் ரெண்டு நாளாக மன்றத்தில் உங்களைக் காணவில்லை மீண்டும் தெருவுலாவிற்குப் போயிட்டீங்களோ???

ரொம்பத்தான் ஆதங்கம். ஆதவரே மிஸ்கோலாவது அடியுங்கோ (ஓவியருக்கு) என்னதான் இருந்தாலும் ஒன்றாக வாங்குபவர்களாச்சே...

ஆதவா
16-06-2007, 06:14 PM
ரொம்பத்தான் ஆதங்கம். ஆதவரே மிஸ்கோலாவது அடியுங்கோ (ஓவியருக்கு) என்னதான் இருந்தாலும் ஒன்றாக வாங்குபவர்களாச்சே...

இப்பொல்லாம் உங்களைத் தேடவேண்டியிருக்கு அன்பு... ஹி ஹி

ஓவியன்
16-06-2007, 08:43 PM
ரொம்பத்தான் ஆதங்கம். ஆதவரே மிஸ்கோலாவது அடியுங்கோ (ஓவியருக்கு) என்னதான் இருந்தாலும் ஒன்றாக வாங்குபவர்களாச்சே...

ஏன் எங்களிடம் அடி வாங்கி கன நாளாப் போச்சுதா???:icon_hmm:

இதயம்
18-06-2007, 10:08 AM
அருமையான பதிவு ஆதவா..!

தமிழர்களின் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் ஒரு திருவிழாவை கொஞ்சம் கூட பொய் கலக்காமல் முழு மனம் கொண்டு பி(இ)சைந்து மண்ணின் மணத்தோடு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு சராசரி மனிதன் தன்னுடைய பால்ய, விடலைபருவ காலங்களை நினைவுகூர்ந்து சொல்லவேண்டியவற்றை மிக தைரியமாக சொல்லியதற்காகவே ஆதவாவை பாராட்டலாம் (அவர் நிறைய அழிச்சாட்டியங்கள் செய்திருந்தாலும் கூட..!!). ஆதவனின் பயண அனுபவங்களை படித்தவரை கன்னிகளை கண்டாலே அவர் கால்கள் நடக்க மறுத்துவிடுவது தெரிகிறது. எலிப்பொறிக்குள் இருக்கும் திண்பண்டத்தின் மேல் எலிக்கு ஈர்ப்பு என்பது இயல்பு தானே..?!! பாலியல் ஈர்ப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் அதன் விகிதாச்சாரங்கள் பல விதங்களில் வேறுபடுகிறது. ஆதவனின் விகிதாச்சாரம் கொஞ்சம் அதிகப்படிதான். நான் சிறுவனாக இருக்கும் போதும், விடலைப்பருவத்திலும் திருவிழாக்களுக்கு போயிருக்கிறேன். அது ஒரு மிக சந்தோஷமான அனுபவம்.

திருவிழாக்களின் அடிப்படை நோக்கம் கடவுள் பக்தி என்றாலும் ப*யனாளர்களின் நோக்கம் அது அல்லாமல் அதன் பல பரிமாணங்களில் கிடைக்கும் சந்தோஷம் தான் அதிகம் என்பது உண்மை. அங்கே அடிப்படை அடிப்பட்டு போவது நிதர்சன உண்மை. நான் கண்ட திருவிழாக்களை நினைவு கூர்ந்தால் கரகாட்டம், காவடி, நீர்ப்பந்தலில் கிடைக்கும் மோர், பலாப்பழம், கலர்கலரான பலூன்கள், குடை ராட்டினம், வாண வேடிக்கை, சட்டிப்பானைகள், அர்ச்சனைக்கடைகள், மாவிளக்கு, சாமியாட்டம், பல நிறங்களில் சிறு சிறு இனிப்பு கடைகள், வளையம் வீசி பொருள் எடுக்கும் விளையாட்டு, கட்டம் உருட்டி காசு வைத்து விளையாடும் விளையாட்டு, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே விளையாடும் சீட்டு விளையாட்டு, விடிய, விடிய திரை கட்டி திரைப்படம் அல்லது மெல்லிசைக்கச்சேரி அல்லது வள்ளித்திருமணம், அர்ச்சந்திர மயான கண்டம் என்று கதம்பமாய் நினைவுக்கு வரும். அங்கு பார்க்கும் ஒவ்வொரு விஷயமும் எனக்கு ஆச்சரியத்தையும், அழகையும், கேள்விகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. விடிய விடிய 2, 3 படங்களை பார்த்துவிட்டு எந்த படத்தின் கதை எது, எந்த கதாபாத்திரம் எந்த படத்தில் என்று புரியாமல் குழம்புவதுண்டு. நாடகங்களில் காமெடி செய்ய வரும் பபூனுக்காக 11 மணி வரை காத்திருந்து, மற்றவர்கள் செய்யும் வசன, இசை சித்திரவதைகளை பொறுத்து இருந்து, பபூன் வந்து போனவுடன் தூங்கிவிடுவேன். ஏதோ ஒரு காரணத்தால் தூக்கம் கலைந்து தலை தூக்கிப்பார்த்தால் சந்திரமதி தலைவிரி கோலமாக அரிச்சந்திரன் முன் நின்று அழுது கொண்டோ, முருகன் ரொமான்ஸ் என்ற பெயரில் வள்ளியிடம் காதல் கொடுமை செய்து கொண்டோ இருப்பார்கள். இங்கே இந்த நாடகம் என்றால் வேறு ஒரு நாடகம் சைடில் நடந்து கொண்டிருக்கும். அது தான் விடலைகளின் சேட்டைகள். இருபால் விடலைகளுக்கும் சேட்டை செய்ய இந்த திருவிழா பெரும் வசதியாக இருக்கும். அங்கு அவர்களின் கடைக்கண் பார்வைகளும், சிலிர்ப்புகளும், கண்ணசைவுகளும் பல நூறு திரைப்படம் சொல்லாத செய்திகளை சொல்லும்.

ஆதவனின் படைப்பை படிக்கும் போது தான் நானும் என் இந்து நண்பர்களும் எத்தனை நல்லவர்கள் என்பது தெரிகிறது.!! பெண்களை நாங்கள் ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. அன்று அவர்களின் பார்வைகளுக்கு இன்று எனக்கு அர்த்தம் புரிகிறது. இது தெரியாமல் கேனத்தனமாக (!) காவடியையும், சாமியாடுவதையும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன். என்னுடைய பால்ய வயதில் நான் என் தாத்தாவுடன் வீட்டு வாண்டுகள் சகிதமாக திருவிழாவிற்கு போகும் போது இப்போதைய என் மனைவியும் கூட வந்திருக்கிறாள். திருவிழாவில் நான் ஆசைப்பட்டு கேட்கும் எல்லாத்திற்கும் தடை அவளிடமிருந்து தான் வரும். ஆசையாக மோர் குடிக்க தாத்தாவிடம் கேட்டால் "அய்ய.. அதையா குடிப்பாங்க..? சுத்தமே இல்லை", ஸ்வீட் வாங்கி கேட்டால் "ஈ மொய்க்கிது", பொம்மை வாங்கி கேட்டால் இலவச இணைப்பாக "எனக்கும் ஒண்ணு வேணும்" என்று எப்போதும் என்னுடைய சத்ருவாக இருந்தாள். அதனாலேயே திருவிழா களத்திலேயே இருவருக்கும் வாக்குவாதம் வரும். என் திட்டு கொஞ்சம் அதிகமானால் அவளுக்கு கண்ணில் நீர் தளும்பிவிடும். கொஞ்சம் கூடுதல் செல்லம், செல்வாக்கோடு வளர்ந்தவள் என்பதால் அப்படி. பொதுவாக என்னால் அவள் அழுதால் என் முதுகில் வீட்டார்கள் டின் கட்டுவது வழக்கம். அது போல் நான் அழும் சமயங்களில் தன்னிடம் உள்ள தின்பண்டத்தை கொடுத்து என்னை சமாதானம் செய்வாள். அதை நினைத்து பார்த்து இப்போதும் இருவரும் பேசி சிரிப்பது உண்டு.

பகலில் இந்த கோஷ்டியுடன் வந்து விட்டு இரவில் என் நண்பர்களுடன் வந்து ஆசை தீர உண்டு, சுற்றி களைத்து வீடு திரும்புவோம். திருவிழா நடக்கும் இடத்தின் வாண வேடிக்கை சத்தம், மேளச்சத்தம், ஒலிபெருக்கி சத்தம் என்று அந்த இடமே ஏதோ நாம் ஒரு தனி உலகத்திற்கு வந்தது போல் இருக்கும். அப்படி ஒரு சந்தோஷ உலகத்தில் காண விரும்பாத, பயப்படும் ஒரு காட்சியும் உண்டு. அது பக்தர்கள் நாக்கில், கன்னத்தில், முதுகில் என்று கொக்கி போட்டு அலகு குத்தி காவடி ஆடுவதை பார்க்க கொடூரமாக இருக்கும். யாருக்காக, எதற்காக தன்னை இப்படி சித்திரவதை செய்துகொள்கிறார்கள் என்று கேள்வி எழும். இப்போதும் திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால், இப்போது அங்கு நிற்கும் போது நான் தனிமைப்படுத்தப்பட்டது போல் ஒரு பிரமை, வெறுமை. அந்த வெறுமையை ஓரளவுக்கு நிரப்புவது என்னுடைய பால்ய நண்பர்கள் தான். திருவிழா என்பது ஒரு பக்திக்களமாக இல்லாமல் என்னை பலதரப்பட்ட விஷயங்களை புரியவைத்த, மனம் மகிழ்வித்த ஒரு பொழுது போக்கு களம்..!! நம் தமிழ்க்கலாச்சாரத்தின் தடங்களின் அடையாளங்கள் ஓரளவுக்கு நம்மிடம் இருப்பதற்கு இந்த திருவிழாக்களும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஆதவா
18-06-2007, 10:22 AM
இதயம்...

இதயத்தைத் தொடும் பின்னூட்டம்... அதில் உங்கள் நினைவுகளும் மிக அருமை. அப்படியே ஒரு திரியாக் போட்டிருக்கலாமே! அதிலும் சிறு வயதில் உங்கள் மனைவியோடு நீங்கள் ஓரியாட்டம் கட்டியது அருமையான நினைவுகள்....(பரவாயில்லை. நீங்கள் கொடுத்துவைத்தவர்) திருவிழாக் காலங்கள் எல்லாம் கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஏக கொண்டாட்டம்.. அதையெல்லாம் தொலைத்துவிட்டு நகரத்தில் இருப்பவர்களிடம் பேசி பிரயோசனமில்லை....

நன்றி இதயம். உங்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டமைக்கு....

சூரியன்
18-06-2007, 10:27 AM
எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஒரு ஊரில் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று உண்டு. கொண்டத்து காளியம்மன்
என்பது அந்த தெய்வத்துக்கு வைத்த பெயர். வருடா வருடம் பங்குனி மாதத்தில் திருவிழாவே நடக்கும். நேற்று
பெளர்ணமி என்பதால் இன்னும் அங்கு உச்சகட்ட திருவிழாதான்...

அன்பு
ஆதவன்
அந்த கோயிலை பற்றி என்க்கு நன்றாக தெரியும் அது எங்கள் ஊரின் அருகில் தான் உள்ளது அந்த திருவிழா மிகவும் விசேசமானது

vithiy
18-06-2007, 10:33 AM
ஆதவா...............................ம்

ஆதவா
18-06-2007, 10:33 AM
அந்த கோயிலை பற்றி என்க்கு நன்றாக தெரியும் அது எங்கள் ஊரின் அருகில் தான் உள்ளது அந்த திருவிழா மிகவும் விசேசமானது


சூரியன் அவர்களே

முழுமையாக மேற்கோள் செய்யாதீர்கள்... உங்களிடம் நேரடியாகவும் மடல் மூலமாகவும் எத்தனையோ முறை சொல்லியாயிற்று... நீங்களே யோசித்துப் பாருங்கள்... முழுமையான மேற்கோள் சரியா என்று....

ஆதவன்.

சூரியன்
18-06-2007, 10:36 AM
சூரியன் அவர்களே

முழுமையாக மேற்கோள் செய்யாதீர்கள்... உங்களிடம் நேரடியாகவும் மடல் மூலமாகவும் எத்தனையோ முறை சொல்லியாயிற்று... நீங்களே யோசித்துப் பாருங்கள்... முழுமையான மேற்கோள் சரியா என்று....

ஆதவன்.அவசரத்தில் அப்படியே விட்டு விட்டேன் மன்னியுங்கள்

ஆதவா
18-06-2007, 10:37 AM
அவசரத்தில் அப்படியே விட்டு விட்டேன் மன்னியுங்கள்


இது நீங்கள் கேட்கும் ஆயிரமாவது மன்னிப்பு.... திருத்திக்கொள்ளூங்கள்>...

சூரியன்
18-06-2007, 10:40 AM
இது நீங்கள் கேட்கும் ஆயிரமாவது மன்னிப்பு.... திருத்திக்கொள்ளூங்கள்>...இதுவே கடைசி மன்னிப்பாக இருக்கும் இது உண்மை

balasubramanian
18-06-2007, 11:19 AM
அறிஞர்:

சிறு வயசுல திருவிழாக்களை பார்த்தது...

கல்லூரியில் படிக்கும்பொழுது.. தேனிக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு திருவிழாவிற்கு சென்றேன்.

அறிஞர் அவர்களே,

எனது ஊர் தேனி தான். தேனிக்கு அருகில் வீர பாண்டிய அம்மன் கோயில் திருவிழா தமிழ் நாடு பிரசித்தி பெற்றது.

அக்னி
18-06-2007, 11:33 AM
உலா நன்றாகவே இருந்தது...
அனுபவித்து, எம்மையும் அன்பவிக்க வைத்திருக்கிறீர்கள்...

மோட்டார் சைக்கிளில் நங்கையரைத் தொடர்ந்த ஆதவன்,
திருவிழாத் தெருவில், நங்கையரைக் கைகாட்டி மகிழ்ந்த ஆதவன்...
ம்ம்ம்ம்.... நல்ல பொழுதுகள்தான்...

கடவுளே! ஓவியன் கண்ணில் இந்த பதிவு பட்டுத் தொலையாதிருக்க வேண்டுமே...
அப்புறம் இதையும் வரைந்து தள்ளிவிட்டால், பழி என்மேலல்லவா வந்துவிடும்....:icon_03:

அக்னி
18-06-2007, 11:37 AM
இதயம், உங்கள் அனுபவமும் அருமை, இன்றைய மனைவியுடன், திருவிழாவில் சிறுவர்களாய் சுழன்று திரிதல், எல்லோருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு...
வாழ்த்துக்கள்...

ஆமாம்.., அன்று வேறு யாரையும் சைட் அடித்ததற்காக*, இன்று மனைவி உங்களுடன் பைட் செய்ததில்லையா?

lolluvathiyar
10-07-2007, 03:47 PM
இந்த திரியை நீண்ட நாட்களுக்கு முன் நான் படித்து எந்த பின்னூட்டமும் இடாமல் இருந்து விட்டேன். ஆனால் சமிபத்தில் அந்த கோவிலைபற்றி ஒரு சுவரசியமான வரலாறு கிடைத்தது, அதை பகிர கஸ்டபட்டு இந்த திரியை துழாவி எடுத்தேன்.

இந்த கோவில் தமிழ்நாட்டிலேயே பிரபலமானதாம். இங்கு கொன்டம் திருவிழா நடக்கும் போடது தவறாமல் மழை வருகிறதாம்.
திருவிழா இல்லாத நாட்களில் ஒரு முரை சென்றிருகிறேன்.
அங்கிலேயர்கள் ஆட்சியில், அப்பொழுது குண்ட திருவிழா காலத்தில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் அங்கு காவலுக்கு நிண்று கொண்டிருந்தனர். அன்று இந்த கோவிலில் குண்டம் இறங்குதை ஒரு ஆங்கிலேய சிப்பாய் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

கையில் குழந்தையுடன் ஒரு பெண் குண்டத்தில் நடந்து கொண்டிருக்கும் போது அவளின் சேலை மாராப்பு கழுண்டுவிட்டதாம்.
அடுத்த நொடியில் அந்த பெண் அந்த குழந்தையை குண்டத்தின் மீது வைத்து விட்டு தன் மாராப்பை சரி செய்து மீண்டும் குழந்தையை தூக்கி குண்டத்தில் நடந்தாராம்.
அந்த காட்சியை பார்த்து அதிசிய பட்ட அந்த ஆங்கிலேய சிப்பாய் இந்த கோவிலின் மீது பெண்கள் வைத்திருக்கும் பக்தியை மெச்சினாராம்.
வருடா வருடம் அவர் இந்த கோவில் குண்டத்துக்கு தேவையான நெய் அனுப்பி வைப்பாராம்.

அவர் மாற்றலாகி இங்கிலாந்து போயும் கூட அங்கிருந்து இந்த கோவிலுக்கு வருடா வருடம் நெய் அனுப்பினாராம். இன்றும் அவர் சந்ததியினர் நெய் அனுப்பி வருகின்றனராம். அந்த நெய் தான் குண்டத்துக்கு பயன்படுத்தபடுகிறதாம்.

இந்த செய்தி எந்த அளவுக்கு உன்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்

ஆதவா
14-07-2007, 05:37 PM
இந்த திரியை நீண்ட நாட்களுக்கு முன் நான் படித்து எந்த பின்னூட்டமும் இடாமல் இருந்து விட்டேன். ஆனால் சமிபத்தில் அந்த கோவிலைபற்றி ஒரு சுவரசியமான வரலாறு கிடைத்தது, அதை பகிர கஸ்டபட்டு இந்த திரியை துழாவி எடுத்தேன்.

இந்த கோவில் தமிழ்நாட்டிலேயே பிரபலமானதாம். இங்கு கொன்டம் திருவிழா நடக்கும் போடது தவறாமல் மழை வருகிறதாம்.
திருவிழா இல்லாத நாட்களில் ஒரு முரை சென்றிருகிறேன்.
அங்கிலேயர்கள் ஆட்சியில், அப்பொழுது குண்ட திருவிழா காலத்தில் பிரிட்டிஷ் சிப்பாய்கள் அங்கு காவலுக்கு நிண்று கொண்டிருந்தனர். அன்று இந்த கோவிலில் குண்டம் இறங்குதை ஒரு ஆங்கிலேய சிப்பாய் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

கையில் குழந்தையுடன் ஒரு பெண் குண்டத்தில் நடந்து கொண்டிருக்கும் போது அவளின் சேலை மாராப்பு கழுண்டுவிட்டதாம்.
அடுத்த நொடியில் அந்த பெண் அந்த குழந்தையை குண்டத்தின் மீது வைத்து விட்டு தன் மாராப்பை சரி செய்து மீண்டும் குழந்தையை தூக்கி குண்டத்தில் நடந்தாராம்.
அந்த காட்சியை பார்த்து அதிசிய பட்ட அந்த ஆங்கிலேய சிப்பாய் இந்த கோவிலின் மீது பெண்கள் வைத்திருக்கும் பக்தியை மெச்சினாராம்.
வருடா வருடம் அவர் இந்த கோவில் குண்டத்துக்கு தேவையான நெய் அனுப்பி வைப்பாராம்.

அவர் மாற்றலாகி இங்கிலாந்து போயும் கூட அங்கிருந்து இந்த கோவிலுக்கு வருடா வருடம் நெய் அனுப்பினாராம். இன்றும் அவர் சந்ததியினர் நெய் அனுப்பி வருகின்றனராம். அந்த நெய் தான் குண்டத்துக்கு பயன்படுத்தபடுகிறதாம்.

இந்த செய்தி எந்த அளவுக்கு உன்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்

இருக்கலாம் வாத்தியாரே! காதலைத் தவிர சைட் அடிப்பதைத் தவிர, கோவில் அழகை ரசிப்பதைத் தவிர வேறெதெற்கும் கோவிலுக்குச் சென்றதில்லை. ஆகையால் ஆராய்ந்ததில்லை// நன்றிங்க உங்கள் தகவலுக்கு..