PDA

View Full Version : முருங்கை இலை



mgandhi
01-04-2007, 05:16 PM
முருங்கை இலை

ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயம்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்

100கிராமில் 92 கலோரி உள்ளது.

முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும்.
இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்
ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது.
முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும்.
முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.
முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும்.
முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க ு கட்டுபடும்.
விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம்
முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.

மனோஜ்
01-04-2007, 05:37 PM
முருங்கைக்கு இத்தனை மகத்துவமா
நன்றி காந்தி

sinnavan
02-04-2007, 01:53 PM
முருங்கை இலை பற்றி அறிந்தேன்.... வாரம் ஒருமுறை உண்ணவேண்டியதுதான்.

இளசு
02-04-2007, 06:40 PM
நன்றி காந்தி..

முருங்கை பற்றிய அன்பின் ஆரென் மற்றும் என் நினைவுகள் இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4959

விகடன்
02-04-2007, 06:54 PM
முருங்கைக்காய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முருங்கை இலையிலும் இந்தளவு விடயம் இருக்கிரதா?

அப்படியானால் முருங்கை மரத்தில்??

paarthiban
03-04-2007, 04:07 PM
அப்படியானால் முருங்கை மரத்தில்??


பேய் இருக்குமோ?:icon_wink1: -

விகடன்
03-04-2007, 07:14 PM
முருங்கைகாய், முருங்கைஇலை, முருங்கை பூ இவை எல்லாம்
முருங்கைமரத்தில் இருக்கும்.

ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

என்னை தப்பா புருஞ்சோண்டியள் நண்பரே!

நான் கேட்டது தண்டில்...

thambu
06-04-2007, 01:37 PM
நன்றி காந்தி