PDA

View Full Version : உயிரே...



மீனாகுமார்
01-04-2007, 04:16 PM
ஆங்கோர் உயிர்போனால் அந்நாடே கதறுகிறது.
காரணங்கள் துல்லியமாக ஆராய்ந்த றியப்படுகிறது.
அதைப் பற்றியே பேச்சுக்கள் சிலகாலங்களுக்கு
நாடே அவர்கட்கு அஞ்சலி செலுத்துகிறது.

எவ்வாறு தடுத்திருக்க முடியுமென்ற ஆராய்ச்சி
மீண்டும் நிகழாது தடுத்திட ஆழத்திட்டம்
வெறும் வாய்ச்சொல் லில்லாது செயலுமங்கே
திட்டங்கள் உடனே நிறைவேற்றப் படுகின்றன.

ஆண்டுதோறும் அச்சம்பவம் நினைவு கூர்ந்து
தடுப்புத் திட்டமும் ஒத்திகை பார்க்கிறது
ஓருயிரின் மதிப்பும் விளைவும் இவ்வளவாயின்
பல்லுயிரின் மதிப்பென்ன பார்த்துக் கொள்ளடா.

ஒவ்வொரு மனிதருக்கு மித்தனை மரியாதை
யாவரும் யாவரையும் மதிப்புடன் இட்டிடுவர்

இந்திய சாலைகளில் மட்டுமே தினமும்
எத்தனை எத்தனை உயிர்கள் பிரிகிறதடா
அச் சாலையிலே மனிதனுக் கோர்
எள்ள ளவேணும் மரியாதையு ண்டோ

மருந்துக்கும் மருத்துவத்திற்கும் பணம் இல்லா
மாளும் உயிர்கள் திரும்பி வந்திடுமோ
வெறும் ஐயாயிரம் ரூபாய்க்கு சிலஉயிர்
கடன் தொல்லையிடம் விடுபட பல்லுயிர்.

காதல் தோல்விக்கு தேர்வில் தோல்விக்கு
கூண்டு கூண்டாக தீவிர வாதத்திற்க்கு
திட்டமிட்ட பாதுகாப்பில்லா ஜன நெரிசல்கள்
விழாவில் கோவிலில் நசுங்கிச்சாகும் அர்ப்பர்கள்

யாரோ தலைவர் கைதானால் தன்குடும்பத்தின்
ஐயாயிரம் ரூபாய்க்கு தன்னுயிரை விடும்தியாகி

ஆலையிற் தொழிற் சாலையில் திட்டமிட்ட
பாதுகாப்பு செய்யும் அப்பத்தாயிரம் தான்சேமித்திட
எவரோ பலரின் உயிர்களைக் கொய்திடும்
அலட்சிய மான எமதர்ம ராஜாக்கள்.

பாலமோ கட்டிடமோ கூரையோ ஆயினும்
இடிந்து வீழ்ந்து எவரோ மாண்டபின்
பராமரிப்பதாகக் கூறிடும் பொய்ச்சத்தியங்கள்
அனுதாப தொகையாக ஆயிரமும் இலட்சமும்

உயிரே போய்விட்டபின் பணமெதற்க்கடா ?

அலட்சியம் - இன்றைய நவீன இந்தியாவில்
தலை விரித் தாடிடும் மூதேவி.
ஒவ்வொரு நாளும் நம் சகோதரர்களின்
உயிரினை எத்தனைதான் காவு கொள்ளும்.

சரி இவர்கள் இறந்தால் நமக்கென்ன.
தொலைக்காட்சி நாடகம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்தியா வல்லரசாகுமாவென ஆராய வேண்டியுள்ளது.
விபத்தென்று பலகோப்புகளை மூட வேண்டியுள்ளது.

இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. இருப்பவர்களுக்கு
என் மரியாதையும் வேண்டுகோளும்.

மனோஜ்
01-04-2007, 04:37 PM
அருமை கவிதை
ஆனால் இதை என்ன செய்ய இயலும் அஞ்சலியை தவிற

ஆதவா
01-04-2007, 05:07 PM
அட! போடவைக்கும் கவிதை மீனாகுமார்....

கருத்துக்கள் எல்லாமே சாட்டையடி.. நல்ல அருமையான கவிதை... தொடரவும்.

இளசு
01-04-2007, 08:29 PM
கையைக்கொடுங்கள் மீனாகுமார்.

முக்கிய பிரசினையக் கருவாக்கி
அழமான கவிதையாக்கியமைக்குப் பாராட்டுகள்..

அதிகம் என்பதால் மலிவானதா? அப்போ சீனா???
ஆதியில் தோன்றிய இனம் என்பதால் பழசானதா???

எனக்குள்ளும் அடிக்கடி எழும்பும் கேள்வி..

மனித உயிருக்கு விலையே இல்லை... நம் நாட்டில்!!!!!

காணும் பொங்கல் நாள்
கடற்கரையில் ஆடிவிட்டு
குடும்பத்துடன் குதித்தோடி வந்த ஏழைச்சிறுமி
கூவம் நேப்பியர் பாலத்தில் மூடாத துளையில் வீழ்ந்து
சாக்கடையில் மூச்சடைத்து மாண்டாள்!

இந்த ஆண்டு நடந்தது இது...
எவர் பொறுப்பேற்றார்?

சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவியை
தண்ணீர் லாரி ஏறிக்கொன்ற கோரம்..!


இதுபோல் எத்தனை எத்தனை..!
கும்பகோணம், சீரங்க நெருப்பு விழுங்கல்கள்..
பொங்கலானால் கடல் விழுங்கும் இளைய உயிர்கள்!


இந்நிலை மாறுமா? மாறவேண்டும்..

ஒவ்வொரு உயிரும் விலை-மதிப்பு -அற்றதன்று..
விலை மதிக்க முடியா செல்வம் என நாடே உணரவேண்டும்..

நாமே தொடங்குவோம்..

ஹெல்மெட் போட்டா வேர்க்குது என்னும் சால்ஜாப்பு சொல்வதை
முதலில் நிறுத்துவோம்...

poo
02-04-2007, 10:13 AM
கைகளில் சாட்டையோடு விளாசியிருக்கிறீர்கள்..

என்று தணியும் இந்த...... என பாரதி முடிக்காமல் போயிருக்கலாம்... காலத்திற்கேற்ப நாம் அதில் வலிகளை இட்டுக் கொண்டிருக்கலாம்.

--நன்றிகள் கவிஞரே... சாடல் தொடரட்டும்!

ஷீ-நிசி
02-04-2007, 10:23 AM
மிக அருமையான கவிதை...மனம் கணக்க வைக்கின்ற கவிதை... விலை மதிப்பற்றதாகிவிடுகின்றன உயிர்கள் இங்கே மரித்தால்... உங்களைப்போலவே நானும் பலமுறை வியந்திருக்கிறேன்..
அமெரிக்க போன்ற நாடுகள் தன் பிரஜைகளுக்கு கொடுக்கும் மரியாதை இங்கே நமக்கு கிடைத்திடுமா???

அருமை நண்பரே!

அறிஞர்
02-04-2007, 11:04 PM
அருமையான சாடல் கவிதை மீனாக்குமார்.

வல்லரசாக இந்தியா ஒரு நாள் உருவாகும் என்ற கனவு...
கனவாகவே இருந்து கலைந்துவிடுமோ எனக்கவலை....