PDA

View Full Version : வஞ்வம் மிகுந்த வண்டுகள்ஆதவா
01-04-2007, 11:13 AM
விழுதுகளின் நீளமும்
வேர்களின் ஆழமும்
இலைகளின் பசுமையும்
இதமாகக் கொண்டு
கிளைகளைப் பரப்பி
எண்ணற்ற விழுதுகளைப்
பெற்றிருக்கிறது
தன்னலமில்லா ஆலமரம்

ஆழ ஊன்றி நிற்குமிந்த
ஆல மரத்தின்
அடிவேர்களை
நோண்டப்பார்க்கிறது
நெஞ்சமில்லா உயிர்கள்

மரத்தைச்
சாய்ப்பதாக நினைத்து
இடுக்குகளில் படர்ந்திருக்கும்
அழகிய பூக்களையும்
கொத்தப்பார்க்கிறது
வஞ்வம் மிகுந்த வண்டுகள்..

வேர்களைப் பிடுங்க இருக்க
பூக்களைக் கொத்துவது
எந்த விதத்தில் ஞாயம்?

புன்னகையை மறந்து
தன்னிலையைத் துறந்து
கொத்தும் வண்டுகளுக்கு
விழுதுகளின் ஒரு அடி போதும்//

ஆலமரம் விழித்துக்கொண்டால்
துச்சமான இவ்வண்டுகளின் கதி
என்ன என்று யாருக்குத் தெரியும்?

விழுதின் ஒரு நுனி
கண் விழித்துக்கொண்டது,
கணைகள் தொடுக்க புறப்பட்டுவிட்டது.

இனியும் வேர்களை நோண்டினால்
அக்னிக்குஞ்சுகளுக்கு
பலியாகவேண்டியதுதான்...

பிகு: கவிக்கரு அளித்த பூக்களுக்கு நன்றி.. தோட்டத்தைச் சிதறடிக்கும் கூட்டத்திற்கு என் கண்டனம்....

மன்ற வளர்ச்சியில் என்றும் மகிழும்
ஆதவன்..

அன்புரசிகன்
01-04-2007, 11:25 AM
விழுதுகளின் நீளமும்
வேர்களின் ஆழமும்
இலைகளின் பசுமையும்
இதமாகக் கொண்டு
கிளைகளைப் பரப்பி
எண்ணற்ற விழுதுகளைப்
பெற்றிருக்கிறது
தன்னலமில்லா ஆலமரம்

பூமித்தாய் போன்றது. என்ன செய்தோம் இவ்வுலகில் நாம் பிறக்க?ஆழ ஊன்றி நிற்குமிந்த
ஆல மரத்தின்
அடிவேர்களை
நோண்டப்பார்க்கிறது
நெஞ்சமில்லா உயிர்கள்
நாசம் செய்யும் மனிதர்கள் இவர்கள்.
மரத்தைச்
சாய்ப்பதாக நினைத்து
இடுக்குகளில் படர்ந்திருக்கும்
அழகிய பூக்களையும்
கொத்தப்பார்க்கிறது
வஞ்வம் மிகுந்த வண்டுகள்..

மனிதர்களால் படைக்கப்பட்ட மிக மோசமான படைப்புக்கள்.
ஆலமரம் விழித்துக்கொண்டால்
துச்சமான இவ்வண்டுகளின் கதி
என்ன என்று யாருக்குத் தெரியும்?


சுனாமி தாக்கியது இவற்றிற்கு சிறந்த உதாரணம்.இனியும் வேர்களை நோண்டினால்
அக்னிக்குஞ்சுகளுக்கு
பலியாகவேண்டியதுதான்...

எரிமலைகள் குமுறுவதும் தரைகள் ஆட்டம் காட்டுவதும் சமுத்திரங்கள் ஆர்ப்பரிப்பதும் இவற்றின் வெளிப்பாடே.

சிறந்த படைப்பு ஆதவா. நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள் உங்களுக்கு. தொடருங்கள்.

ஓவியன்
01-04-2007, 11:28 AM
அருமை ஆதவா நன்றிகள் கோடி!
பூக்களைக் கொத்தும் வண்டுகளுக்குத் தெரிவதில்லை
பூக்களின் வலிகளும் வேதனையும் - அது மட்டுமா
பூக்களைத் தாங்கும் விழுதுகளின் வலிமையும் தான்.

ஓவியன்
01-04-2007, 11:51 AM
விழுதுகள் கொஞ்சம் முன்னரே விழித்துக் கொண்டிருந்தால் அந்தப் பூக்கள் தப்பியிருக்குமே என்ற அங்கலாய்ப்பை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை ஆதவா!

ஆதவா
01-04-2007, 11:51 AM
நன்றிகள் மிகவும்..... அன்புரசிகன் மற்றும் ஓவியன்....

தங்கள் இருவரும் தங்களைப் போல சிலரும் தற்காலங்களில் மன்றத்தில் அதிகநேரம் இருப்பது என் மனதிற்கு நிரம்ப மகிழ்ச்சி அளிக்கிறது... பாராட்டுக்களை சலிக்கமல் வழங்குவதிலும் கிண்டல்களை எல்லை மீறாமல் செய்வதிலும் கில்லாடியாக இருக்கிறீர்கள்....

நன்றி மிகவும் நண்பர்களே!!!.......

மயூ
01-04-2007, 12:37 PM
வித்தியாசமான கற்பனை... ஆதவன் பாணியில் இன்னுமொரு கவிதை.....
இதை பல்வேறு சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்!!!!!
விழுதுகள் என்றும் விரும்பியதில்லை
அந்த வண்டுகளை விரட்ட
ஆனால் வண்டுகளின் செயல்???
மென்னிதயத்தானையும்
வன்னிதயத்தானாக்கும் இந்த வண்டுகள்!!!!

ஆதவா
01-04-2007, 12:42 PM
நிரம்ப நன்றி மயூரேசன்... உங்கள் கருத்துக்களுக்கு அப்படியே பொருத்தம் இக்கவிதை.

ஷீ-நிசி
01-04-2007, 12:45 PM
வீழ்த்த நினைக்கின்ற ஒவ்வொரும் வீர(ண)ரும், சில நிமிட வெற்றியை ருசிக்கலாம்... அது தற்காலிகமே! வாழ்த்துக்கள் ஆதவா!
இந்த கவிதைக்கும் பொருந்துகிறது..

வாழ்த்துக்கள் ஆதவன்

paarthiban
01-04-2007, 01:35 PM
எங்களை காயப்படுத்தினால் ஓடிவிட மாட்டோம்.
வீறு கொண்டு இன்னும் மரத்தை அலங்கரிப்போம்.

முலைப்பாலாய் அன்பு தரும் வேர்கள் இருக்க
சாய்தோளாய் ஆதரிக்கும் விழுதுகள் இருக்க

வக்கிர வண்டுகள் கத்தி கடித்து ஓயும்..மாயும்.

ஆதவா உங்களின் அபிமான ரசிகனின் வீரவணக்கம் ஏற்றுக்கொள்ளுங்கள் அண்ணலே.

மனோஜ்
01-04-2007, 01:42 PM
அருமை நண்பா
சரியான நேரத்தில் சரியான கவிதை
மன்ற நண்பர்களின் ஒட்டுமொத்த ஓசை இது அருமையாய் உம்மிடம் கவிதையானது வாழ்த்துக்கள்

ஆதவா
01-04-2007, 02:11 PM
நெஞ்சம் நெகிழ்கிறது இந்த பாராட்டுக்களுக்கு.....

கொதித்தெழுபவன் என்றுமே கவிஞந்தான்.. நான் எழுந்ததும், எனக்கு எழ கை கொடுத்ததும் இந்த தமிழ்மேல் கொண்ட அன்புதான்..

நம் கைகள் என்றுமே இணைந்திருக்கவேண்டும்.. இளித்துக்கொண்டு ஒழிக்க நினைக்கும் பேய்களை ஓட ஓட விரட்ட வேண்டும்..

நன்றி ஷீ! மனோ, மற்றும் பார்த்திபன் அவர்களே! இப்பாராட்டுக்களில் பங்கெடுத்துக்கொள்ளவேண்டிய உள்ளங்கள் இக்கவிதையை படிக்க வேண்டும்...

நன்றி

பென்ஸ்
01-04-2007, 02:28 PM
ஆதவா..
என் செல்லம்டா நீ...
என் உணர்வுகளின் வெளிப்பாடு நீ....

காத்திரு வந்து உன்னோடு வாள் ஏந்துவேன்...

ஆதவா
01-04-2007, 04:12 PM
நன்றி பெஞ்சமின் அவர்களே!! நான் வாளாலோ அல்லது கோலாலோ சுழற்றத் தயாராகிவிட்டேன்...
நன்றி

இளசு
02-04-2007, 06:26 PM
என் ஆழ்ந்த பாராட்டுகள் ஆதவா..


ஒருவீட்டின் தூண்களைப் பிடுங்கி எடுத்து
மறுவீடு கட்ட எண்ணுவோருக்குத் தெரியுமா..?

அவை ஒதிய மரத் தூண்கள் அல்ல!
அங்கங்கு ஒத்து நிற்க...!
அன்பை ஊட்டி வளர்த்த ஊன்கள்...!


குருதியும் நரம்புமாய் உயிர் துடிக்கும்
நீர்ப் பிரிந்த அம்மீன்கள்! ..
'தன் தசையாடும்' எனச் சீறி
தாய்மடி தேடி மீண்டு வரும் மான மான்கள்!

ஆதவா
02-04-2007, 07:40 PM
மிக்க நன்றி இளசு அண்ணா! உங்கள் வரிகளில் இலக்கியத் துளிகள் தெறிக்கிறது...

அறிஞர்
02-04-2007, 10:54 PM
அருமையான கவிதை..... ஆதவா....
மரம் வளமுடன், நலமாக இருந்தால்....
வண்டுகளுக்கு என்ன...
வேலையற்ற வண்டுகளுக்கு
வேலையே அழிக்கும் தொழில் தானே...
இதனால் ஏற்படும் ஆதாயம் தான் என்ன...
நல்ல மன நிலையோடு சிந்திக்கட்டும்....

ஆதவா
03-04-2007, 04:45 PM
நன்றிங்க அறிஞரே! நீங்கள் சொன்னது ஒவ்வொன்றும் அமிர்த வார்த்தைகள்...

ஓவியா
04-04-2007, 01:38 PM
விழுதுகளின் நீளமும்
வேர்களின் ஆழமும்
இலைகளின் பசுமையும்
இதமாகக் கொண்டு
கிளைகளைப் பரப்பி
எண்ணற்ற விழுதுகளைப்
பெற்றிருக்கிறது
தன்னலமில்லா ஆலமரம்

அருமையான ஆரம்பம்


வேர்களைப் பிடுங்க இருக்க
பூக்களைக் கொத்துவது
எந்த விதத்தில் ஞாயம்?

ஆலமரத்தை சாய்க்க எண்ணி அதில் அப்பாவியாய் ஓடி ஆடி விளையாடிய அனில் பிள்ளையின் காலை உடைத்து, நிழலுக்கு அமர்ந்த முயலின் காதை அறுத்து, சுதந்திரமாக பாடித்திரிந்த சிட்டுக் குருவியின் சிறகை ஒடித்து........அழகிய பூக்களை கசக்கி .....உன் சிந்தைனே அபாரம்.

நல்ல கவிதை.

நன்றி

பாராட்டுக்கள்

ஆதவா
05-04-2007, 12:47 AM
நன்றிங்க ஓவியா உங்கள் வரிகளில் நல்ல கவிதைச் சுவை தெரிகிறது.

ஓவியா
05-04-2007, 12:53 AM
ஆலமரத்தை
சாய்க்க எண்ணி - அதில்
அப்பாவியாய்

ஓடி ஆடி விளையாடிய - அனில்
பிள்ளையின் காலை உடைத்து

நிழலுக்கு அமர்ந்த - முயலின்
காதை அறுத்து

சுதந்திரமாக பாடித்திரிந்த - சிட்டுக்
குருவியின் சிறகை ஒடித்து........

அழகிய பூக்களை
கசக்கி
.
.
.
.
போராட்டம் தொடரும்

.......................................................................................................


நன்றிங்க ஓவியா உங்கள் வரிகளில் நல்ல கவிதைச் சுவை தெரிகிறது.


இது லொல்லு ஆதவாவா...ஹி ஹி ஹி

காலையிலே வணக்கம் ஸ் காலை வணக்கம்.

ஆதவா
05-04-2007, 04:48 PM
கவிதை அருமைங்க.... நன்றி..

நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி..