PDA

View Full Version : யாகூவும் கூகிளும் இணைந்தன



தமிழ்பித்தன்
01-04-2007, 05:54 AM
http://www.gahooyoogle.com/gahooyoogle.jpg
யாகூவும் கூகிளும் யாரும் எதிர்பாராத விதமாக தாம் இணைந்து கொண்டதாக சற்றுமுன் அறிவித்தன இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்த இருநிறுவனங்களின் தலைவர்களும் அதனை உறிதிப்படுத்தும் விதமாக இரு தளங்களையும் பிரதிபலிக்க தக்க வகையில் ஓர் தேடு பொறியையும் அறிமுகம் செய்தனர் http://www.gahooyoogle.com/ ஆனாலும் அந்தந்த தேடு பொறிகள் தொடர்ந்து இயங்குமெனவும் தத்தம் வாடிக்கையாளர்கள் மெல்ல மெல்ல இங்கே நகர்த்தப் படுவார்கள் எனவும் அறிவித்தன ஏன் திடீர் முடிவு எனக் கேட்ட செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த யாகூவின் தலைவர் தாம் இதற்கு முன் micro soft உடன் messenger தொடர்பாக ஒர் ஒப்பந்தம் செய்திருந்தோம் அதன்பின் சில காரணங்களுக்காக எமக்கு முறிவு ஏற்பட்டது அதன் வெளிப்பாடே இது வெகுவிரைவில் மின்னஞ்சல் புளொக் போன்றவற்றிலும் இணைந்து செயற்படுவோம் என்றார் micro softக்கு எதிராக வெகுவிரைவில் அனைத்திலும் இணைந்து சிறப்பாக செயற்படுவொம் இயங்குதளம் சார்பான ஆராட்சியிலும் ஈடுபடுவொம் என்றும் கூறினார்
இது பற்றி மேலதிக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன அவர்கள் இணைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன அவற்றுடன் மீண்டும் விரிவாக எழுதுகிறேன்
இச்செய்தியால் பில்கேட்ஸ் என்ன அடுத்து செய்வது என்று தெரியாமல் விழிப்பார் என்று தெரிகிறது

தீபன்
01-04-2007, 06:04 AM
ஏப்ரல் முட்டாளாக்க இந்த செய்தியா..?

ஓவியன்
01-04-2007, 06:04 AM
உண்மையில் நம்ப முடியாத ஒரு செய்திதான் (ஏப்ரல் முட்டாளாக்கவோ தெரியவில்லை), ஆனால் இரு பெரும் ஜாம்பவான்கள் ஒன்றாக இணையும் போது பயனைடையப் போவது நாம் தான் என்றாலும், இப்பெரும் ஜாம்பவான்களின் ஆரோக்கியமான போட்டி இனி இருக்காது என்பது ஒரு வகையிலே சோகமான செய்தியே!

ஓவியன்
01-04-2007, 06:17 AM
பிந்திக் கிடைத்த தகவல்களின் படி இது ஒரு சிறந்த ஏப்ரல் முட்டாளாக்கும் முயற்சியெனக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

aren
01-04-2007, 06:33 AM
இது நிச்சயமாக ஒரு ஏப்ரல் பூஃல் செய்தியாகத்தான் இருக்கவேண்டும், ஏனெனில் இது அறிவித்திருப்பது ஞாயிறன்று.

ஷீ-நிசி
01-04-2007, 08:57 AM
இது நிச்சயம் ஏப்ரல்ஃபூல் செய்தியென்றுதான் நினைத்தேன்..ஆனால் வலைத்தளம் வேலை செய்கிறதே... ஒன்றும் புரியவில்லை

மனோஜ்
01-04-2007, 09:20 AM
நன்றாக வேலை செய்கிறதே பிரச்சனை இல்லையே நண்பர்களே

அன்புரசிகன்
01-04-2007, 10:54 AM
நன்றாக வேலை செய்கிறதே பிரச்சனை இல்லையே நண்பர்களே

இயங்கினாலும் அத்தளம் google மற்றும் yahoo தேடல்களுக்கு தனித்தனியாக திருப்பப்படுகின்றன. உண்மையிலேயே சரியாக இயங்கினால் எதற்காக 2 தேடல் விடைகளைத்தரவேண்டும்?

ஓவியன்
01-04-2007, 11:02 AM
இயங்கினாலும் அத்தளம் google மற்றும் yahoo தேடல்களுக்கு தனித்தனியாக திருப்பப்படுகின்றன. உண்மையிலேயே சரியாக இயங்கினால் எதற்காக 2 தேடல் விடைகளைத்தரவேண்டும்?

அது தானே, உண்மையிலே இது வேலை இல்லாத யாரோ ஒருவரின் சித்து விளையாட்டு

சுபன்
01-04-2007, 01:41 PM
இந்த தளம் முந்தி இருந்தே இருக்குதே!!

மனோஜ்
01-04-2007, 01:45 PM
இயங்கினாலும் அத்தளம் google மற்றும் yahoo தேடல்களுக்கு தனித்தனியாக திருப்பப்படுகின்றன. உண்மையிலேயே சரியாக இயங்கினால் எதற்காக 2 தேடல் விடைகளைத்தரவேண்டும்?

பல வகையில் கிடைத்தால் என்ன நமக்கு காரியம் ஆனால் போததா என்ன நமக்கு வேன்டியதை எடுத்துக்கொள்வேம் நண்பா:icon_b:

தமிழ்பித்தன்
01-04-2007, 02:51 PM
அமாம் கண்டுபிடித்து விட்டீர்கள் இது எனது முட்டாள் தினச் செய்தியே ஆனாலும் அத்தளம் உண்மையே யாரோ மூடன் அதை உருவாக்கி விட்டிருந்தான் 7 மாதங்கள் முன்பு என்மீது யாரும் வெறுப்புக்கொள்ள வேண்டாம்

nicebee
03-04-2007, 12:51 PM
மெய்யாலுமா?

அறிஞர்
03-04-2007, 02:09 PM
மக்கள் அழகாக வடிவமைத்துள்ளனர்.

ஒரே நேரத்தில் இரண்டு இடத்திலும் தேட வசதியான தளம்

மலர்
09-05-2007, 07:12 AM
பயன்படுத்த நன்றாக இல்லை