PDA

View Full Version : விதிமுறை மீறிய பதிவுகள்



இளசு
31-03-2007, 07:50 AM
நண்பர்களே

நம் மன்ற விதிமுறை மீறிய பதிவுகள்
எந்த வடிவில் வந்தாலும் உடனே அகற்றப்படும்.

வெறுப்பைத் தூண்டி நம்மை திசைதிருப்பும் எண்ணம் உள்ளவர்கள்
சலித்துத்தான் போவார்கள்..


உங்கள் கண்களில் அவ்வகைப்பதிவுகள் பட்டால்
எங்களுக்கு தனிமடலில் சுட்டிக்காட்டுங்கள்.

விவாதம், நகைச்சுவை என்ற போர்வையில் வரும் விரோதம் வளர்க்கும்
இவ்வகைப்பதிவுகளுக்கு ஆதரித்தோ, நல்லுரை சொல்லியோ
உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்..

நன்றி..

மனோஜ்
31-03-2007, 07:51 AM
எந்த வகையில் அண்ணா கொஞ்சம் விளக்கமாக
மன்றவிதிபடி தானே

இளசு
31-03-2007, 07:54 AM
மனோஜ்,

சாதி , மதம், மொழி இவற்றை வைத்து
கண்ணியமற்ற சொற்களும், சண்டை போடும் நோக்கமும் கொண்ட
பதிவுகள் ஒரு உதாரணம்

மனோஜ்
31-03-2007, 07:56 AM
பதிவுகள் ஒரு உதாரணம் மனோஜ்
ஐயே அண்ணா நான் என்ன செய்தேன் என்னை உதாரணம் செல்விட்டிர்கள்

இளசு
31-03-2007, 07:59 AM
ஐயே அண்ணா நான் என்ன செய்தேன் என்னை உதாரணம் செல்விட்டிர்கள்

மனோஜ்,

உங்களுக்குச் சொன்ன பதில் அது,
ஒரு உதராணம்,,,, மனோஜ் என்றிருந்திருக்க வேண்டும்..

அவசரத்தில் அப்படி புரிய நேரும்படி பதித்த விதத்துக்கு மன்னிக்கவும்.. திருத்திவிடுகிறேன்,

ஆதவா
31-03-2007, 09:02 AM
ஆம் அண்ணா! இன்று அதிகாலை கிட்டத்தட்ட 24 புது திரிகள் ஆரம்பிக்கப்பட்டது.. ஆரென் அண்ணா எச்சரிக்கை செய்தார். இருப்பினும் அந்த பதிவர் கண்டுகொள்வதாக இல்லை...
-------------------------------------------------------------
இந்த மன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் மற்ற உறுப்பினர்களிடம் சொல்லிக்கொள்வது.........
இளசு அண்ணா சொல்வது போல தேவையற்ற திரியை ஆதரிக்கவேண்டாம்..
நம் நண்பர்கள் இவ்விதம் செய்வதில்லை.. யாரோ சிலர் மட்டும் இம்மாதிரி செய்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ செய்திருப்பின் நாம் மேற்பார்வையாளர்களிடம் சுட்டிக் காண்பிப்போம்././ அவர்கள் உடன்பட்டால் திரியை குப்பையில் தள்ளலாம் இல்லையென்றால் அந்த நபருக்குண்டான உறுப்பினர் தகுதியையே நீக்கலாம்..

நமக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதெனில் உடனடியாக நிர்வாக விதிமுறைகளைக் காணலாம். அல்லது அச்சமயம் இருக்கும் மேற்பார்வையாளர்களிடம் கேட்கலாம்.

புதிய நபர்கள் தம் புதிய பதிவுகளை கவனமாக இடவேண்டும். தவறி ஏதாவது தவறு ஏற்பட்டு விட்டால் நிர்வாகம் தூக்கப்பட்டு பின் சம்பந்தப்பட்ட நபர் வருத்தத்திற்கு உரியவராக மாறுவதும் கூடாது.. ஆகையால் கவனம் தேவை.........

நாம் தமிழ் வளர்க்கத்தான் இங்கே பதிகிறோமே தவிர பணம் சம்பாதிக்க அல்ல.. அல்லது விவாதம் செய்து நேரம் வீணடிக்க அல்ல. நம் படைப்புகளின் அலசல்கள், விமர்சனங்கள், பதில்கள், நிறைகுறை, போன்றவற்றை மட்டுமே நாம் காண இருக்கிறோமே தவிர, விமர்சனம் செய்தாலோ, பதில் எழுதினாலோ, அல்லது சூடான விவாதம் தரும் பதிவுகளை இடுவதாலோ நமக்கு எந்த வகையிலும் பணம் வரப்போவதில்லை...

தமிழின் வளர்ச்சிக்கு நாம் காசுபணம் பார்க்காது உழைப்போம்
இடையே ஊறும் புழுக்களை மிதித்துவிட்டு நம் நெஞ்சம் நிமிர இலக்கின்றி புறப்படுவோம்...

வாழ்க தமிழ்..

leomohan
31-03-2007, 10:00 AM
நண்பர்களே

நம் மன்ற விதிமுறை மீறிய பதிவுகள்
எந்த வடிவில் வந்தாலும் உடனே அகற்றப்படும்.

வெறுப்பைத் தூண்டி நம்மை திசைதிருப்பும் எண்ணம் உள்ளவர்கள்
சலித்துத்தான் போவார்கள்..


உங்கள் கண்களில் அவ்வகைப்பதிவுகள் பட்டால்
எங்களுக்கு தனிமடலில் சுட்டிக்காட்டுங்கள்.

விவாதம், நகைச்சுவை என்ற போர்வையில் வரும் விரோதம் வளர்க்கும்
இவ்வகைப்பதிவுகளுக்கு ஆதரித்தோ, நல்லுரை சொல்லியோ
உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்..

நன்றி..

சரியான நேரத்தில் வந்த அறிவுரை இளசு. எதிர்மறையான கருத்துக்களை கூட நல்ல கண்ணியமாக இடுவேண்டும். அதுவே சங்கம் கட்டி வளர்த்த நம் தமிழுக்கு பெருமை.

இடைப்பட்ட காலத்தில் தமிழோட சேர்ந்து உருவான தரம் தாழ்ந்த வார்த்தைகளை கொண்டு திட்டி தீர்ப்பது இப்போது இணையத்தில் சகஜமாக நடக்கிறது.

தனி மனித துவஷேம் இல்லாமல் விவாதங்கள் இருந்தால் அது சிறந்த விவாதம். தரம் தாழ்ந்த வார்த்தைகள் இல்லாமல் இருந்தால் அது சிறந்த கட்டுரை.

மயூ
31-03-2007, 10:28 AM
கட்டாயமாக தேவை மன்றத்தில் குப்பை நீக்கும பணிகள்!

அமரன்
31-03-2007, 03:11 PM
இது மன்றத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும் கூட. தெரிவிக்கின்றோம் இளசு அண்ணா.

பாரதி
31-03-2007, 06:16 PM
மிக அவசியமான கருத்து அண்ணா. எக்காரணத்தைக் கொண்டும் மன்ற உறவுகளின் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்ட அனுமதிக்கக்கூடாது. அனைவருடைய பதிவுகளையும் மேற்பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்படும் முடிவுகளை தாமதமின்றி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஓவியன்
01-04-2007, 04:14 AM
அண்ணா!

எதிர் மறைக் கருத்துக்கள் என்றுமே எங்களைத் நாமே திரும்பிப் பார்க்க உதவும் என்று நம்புபவன் நான். அந்தக் கருத்துக்களை நல்ல முறையிலே நல்ல வசனப் பிரயோகங்களுடன் சொல்ல முடியாமலுள்ளது தான் பலரிற்கு உள்ள பிரச்சினை. சிலர் வேண்டுமென்றே பிரச்சினை செய்ய வேண்டி பதிப்புக்களை இடுகிறார்கள் அவர்களால் உண்மையிலேயே நல்ல சிந்தனை உள்ளவர்கள்தான் பாதிக்கப் படுகின்றார்கள். எனவே யார் உண்மையிலே அந்த சம்பந்தபட்ட விடயங்களில் உண்மையான ஆர்வமுடையவர், யார் அதனை வேண்டுமென்றே குழப்ப முயலுபவர் என்பதனை நாம் கண்டறிய வேண்டும். இவ்வாறு வேறு பிரித்தறிய முடியுமென்றால் நாம் இலகுவாக எங்களது பதிப்புக்களை நல்ல முறையில் பதிக்க முடியும்.

aren
01-04-2007, 05:30 AM
இளசு அவர்களே,

இந்த பதிவு சரியான நேரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. அதற்காக உங்களுக்கு என் நன்றிகள்.

மன்றத்திற்குள் பிரிவினையை உருவாக்கும் எவரையும் நம் மன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கவேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

மயூ
01-04-2007, 05:38 AM
இளசு அவர்களே,

இந்த பதிவு சரியான நேரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. அதற்காக உங்களுக்கு என் நன்றிகள்.

மன்றத்திற்குள் பிரிவினையை உருவாக்கும் எவரையும் நம் மன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கவேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்
நிச்சயமாக அண்ணா...
இத்தனை காலமாக உருவான இந்த உறவுப் பாலத்தை அத்தனை எளிதில் யாரையும் உடைத்துவிட அனுமதிக்க முடியாது.. அப்படி மற்றவர்களால் உடைக்கவும் முடியாது என்பதுதான் உண்மை!

பரஞ்சோதி
01-04-2007, 06:33 AM
பிரச்சனையை தூண்டும் பதிவுகள் கண்டால் நடத்துநர்களுக்கு சொல்லுங்க, பொதுவானவர்கள் பதில் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

mukilan
01-04-2007, 06:50 AM
மிகச் சரியான முடிவு! நேற்று சர்ச்சைக்குரிய அந்தப் பதிவர்க்கு அம்மாதிரிப் பதிவுகள் இட வேண்டாம் எனப் பின்னூட்டம் இட்டிருந்தேன். நான் செய்தது தவறென இப்பொழுது புரிகிறது. இனி நேரத்தை வீணடிக்காமல் உடனே மேற்பார்வையாளர்கட்கு தெரிவிக்கிறேன்.

ஷீ-நிசி
01-04-2007, 08:36 AM
மன்றத்தில் சில பேர் இதுபோல் பதிவுகள் இட்டு அவர்கள் நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்கள்.. இந்த அளவிற்கு மேற்பார்வையாளர்கள் பாதுகாப்போடு மன்றத்தை நடத்துவதால் யாரும் எல்லை மீற வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.. மன்ற உறவுகளாகிய நாமும் அம்மாதிரி திரிகளுக்கு பின்னூட்டமிடாமல் இருப்பதே சாலச் சிறந்தது..

paarthiban
01-04-2007, 01:29 PM
களை எடுக்கும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி. இளசு அண்ணா சொன்னபடி நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

பிரசாத்
10-04-2007, 06:54 AM
அவ்வாரே நடந்துக் கொள்கிறேன் அண்ணா.....

நன்றி
பிரசாத்

இளசு
16-04-2007, 06:54 PM
முன்பின் அறியாதவர்களை, அதிலும் ஒரு விவாதத்தின்போது
நீ போ என மரியாதையாகவும், உளறாதே என பண்பாகவும்
அஃறிணைகள், ஊளை என நாகரிகமாகவும்

உரையாடும் வல்லமை வாய்த்தவர்கள் .

தமிழர்கள் - படித்தவர்கள் - இணையம் வரை வந்தவர்கள்
என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்..

ஓவியா
16-04-2007, 06:58 PM
வருத்தங்கள் இளசு.

சபைக்கு சொல் கட்டுப்பாடு மிக அவசியமே.

அன்புரசிகன்
16-04-2007, 07:01 PM
வார்த்தைப்பிரயோகங்கள் மிக முக்கியமானது. மற்றவரை புண்படுத்தக்கூடிய பதிவுகள் கட்டாயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

leomohan
16-04-2007, 07:17 PM
நன்றி இளசு.

Mano.G.
16-04-2007, 11:53 PM
நன்றி சகோதரர்களே,
சீக்கிரமே புரிந்துகொண்டீர்கள்,
நாம் படித்தவர்கள், பண்பானவர்கள்,
மற்றவரையும் மதிக்க தெரிந்தவர்கள்,
நம்ம நாமே இளிவு படுத்திகொள்ளலாமா?
வேண்டாம் பண்புக்கு பெயர் போனவர்கள் நாம்
பாதுகாப்போம் நம் மன்றத்தை.


மனோ.ஜி

aren
17-04-2007, 12:19 AM
எந்த பதிவுமே அளவு மீறும்பொழுது அதை தளத்திலிருந்து உடனே அகற்றவேண்டும். இதற்காக பதித்தவரிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து.

நன்றி வணக்கம்
ஆரென்

paarthiban
15-08-2007, 12:37 PM
அனைவரும் அடிக்கடி படித்து அதன் படி நடக்க வேண்டிய திரி. நன்றி இளசு அவர்களே

lolluvathiyar
15-08-2007, 12:57 PM
மன்றத்தின் விதிமுரை மீறிய பதிப்புகளை முடக்க வேண்டும். அதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. குறிப்பாக தனி மனித தாக்குதல் மிகவும் தவறானது.
ஆனால் நான் உங்கள் சில கருத்துகளில் மாறுபடுகிறேன்

மனோஜ்,
சாதி , மதம், மொழி இவற்றை வைத்து
கண்ணியமற்ற சொற்களும், சண்டை போடும் நோக்கமும் கொண்ட
பதிவுகள் ஒரு உதாரணம்
கன்னியமற்ற சொற்களை என்று எவ்வாரு ரகம் பிரிப்பது. சில வார்த்தை சொல்ல வந்த கருத்துக்கு அவசியமானதாக இருக்கும் பட்சத்தில் அதை அனுமதிப்பது தவறில்லை.
அதே போல் விவாதம் சன்டை இரண்டுக்கும் இருக்கு வித்தியாசத்தை கன்டறவதும் சற்று கடினமான பனிதான்.



நாம் தமிழ் வளர்க்கத்தான் இங்கே பதிகிறோமே தவிர விவாதம் செய்து நேரம் வீணடிக்க அல்ல.

விவாதம் செய்வது தமிழ் வளர்ப்பதுக்கு எதிரானது என்று கூற முடியாது ஆதவா.
சிலருக்கு கவிதை விருப்பம்
சிலருக்கு சினிமா விருப்பம்
சிலருக்கு ஆண்மீகம் விருப்பம்
அதுபோல சிலருக்கு விவாதம் விருப்பம்

விவாதம் செய்து செய்து நிரைய பேர் தங்கள் தமிழ் அறிவை வளர்த்தி உள்ளார்கள் (அடியே உட்பட).
அதிகமாக பூட்ட படுவது விவாத பகுதிகள் தான். நான் சில திரிகளை கவனித்து பார்த்தால், சூடான விவாதமும் ஒரிரு நாட்கள் தான் சூடு இருக்கும். பிறகு போர் அடித்து தானாக வேறு திரிகளுக்கு தாவி விடுகிறார்கள். ஆகையால் பூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றூ கருதுகிறேன்

விகடன்
15-08-2007, 12:57 PM
இளசு அண்ணா
குப்பைத் தொட்டியையும் குப்பையாக்காமல் எல்லை மீறி அதி கேவலமாக இடப்படும் திரிகளை அடியோடு நீக்கினால் என்ன?

aren
15-08-2007, 01:04 PM
இளசு அண்ணா
குப்பைத் தொட்டியையும் குப்பையாக்காமல் எல்லை மீறி அதி கேவலமாக இடப்படும் திரிகளை அடியோடு நீக்கினால் என்ன?


முதலில் குப்பைக்கு போகும் பின்னர் அங்கிருந்து அடியோடி நீக்கப்பட்டுவிடும், ஆகையால் கவலைவேண்டாம்.