PDA

View Full Version : ராஜாவும் திருடனும்



vijayan_t
31-03-2007, 02:35 AM
தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றத்தில்(திரு.லியோனி என்று நினைக்கின்றேன்) கேட்ட கதை இது.

ஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம் வீரம், மனிதாபிமானம், புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவ்ற்றில் சிறந்து விளங்குபவன். மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து களைவது வழக்கமாக கொன்டிருக்கின்றான்.
ஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊணமுற்ற ஒருவன் நடக்க முடியாமல், சிரமபட்டுகொன்டு இருபநை பார்த்து அவனுக்கு உதவலாமே என்ற என்னத்தில், அவனையும் தன்னுடைய குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான். உன்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல் குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல நடிக்கின்றான். திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி, குதிரைமேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி அவனை ஏற்றிவிட்டு, எற எத்தனிக்கையில், திருடன் ராஜவின் குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான். ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரன்மனைக்கு சென்றுவிடுகின்றார்.
பின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம் மாட்டி த்ன்டனைக்காக ராஜாவிடம் அழைது வரப்பட்டான், அவனை அடையாள்ம் கன்ட ராஜா, அவனுக்கு சிந்தண்டனை கொடுத்தார். பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில் வந்தபொழுது தன் குதிரையை அவன் எமாற்றி திருடிச்சென்றதை சொன்னார். உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து மன்னியுங்கள் என்று கதறினான், உடனே ராஜா அவனை மண்ணித்துவிட்டதாக கூறி, படாரென அவன் காலில் விழுந்து, தன்னிடம் அவன் குதிரையை திருடிய விதத்தினை யாரிடம்மும் கூறிவிடதே என்று கெஞ்சுகின்றார். அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு அப்படியே கண்ணீர்விட்டு கதறி அழுது, ராஜா என்னை மண்ணியுங்கள், இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று சொல்லி, அக்கனம் முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.

அவ்வளவுதான் கதை முடிந்தது. இதில் என்ன இருகின்றது என்கிறீர்களா, சிலர் இந்த கதையை ஏற்க்கனவே படித்திருக்கலாம், மற்றவர்களுக்காக இது.

1). ராஜா ஏன் அவன் காலில் விழுந்து யரிடமும் சொல்லதே கேட்டார்?
2). திருடன் ஏன் அதனால் திருந்தினான்?

யோசித்து பாருங்கள், இரன்டு நாளில் விடை சொல்லுகின்றேன். சரியாக கன்டு பிடித்தவர்களுக்கு நன்பர் manojoalex அவர்களிடம் தமிழ்கணபுலி பட்டத்துக்கு சிபாரிசு செய்கின்றேன்.

பரஞ்சோதி
02-04-2007, 05:57 AM
அரசனாகப்பட்டவன் எதையும் ஆராயமல் உடனடியாக எதையும் நம்பிவிடக்கூடாது என்பது நியதி.

முடவன் போல் நடித்த திருடனின் நடிப்பை கண்டு ஏமாந்ததால் அரசனுக்குறிய மரியாதையை இழந்து விடுகிறான், ஆகையால் தன் மானத்தை காக்க திருடனின் காலில் விழுகிறான்.

திருடன் திருந்தக்காரணம், மாபெரும் அரசனே! தான் செய்த சிறு தவறுக்காக இத்தனை வருந்தும் போது, தினம் தினம் தான் செய்யும் தவறுகள் எத்தனை என்பதை அறிந்து அவனும் தனக்கு பாடம் போதித்த அரசனின் காலில் விழுந்து மனம் திருந்துகிறான்.

விஜயன், ஏதோ சொல்லியிருக்கேங்கன்னு சரி என்று சொல்லிடாதீங்க, சரியாக சொல்லியிருக்கேனான்னு பார்த்து சொல்லுங்க.

redson
02-04-2007, 07:51 AM
அறிவுக் கதை பிரமாதம்.


ரெட்சன்
எல்லோரும் இன்புற்றிருக்க யாம்
ஒன்றும் அறியோம் பராபரமே

மனோஜ்
02-04-2007, 08:01 AM
நல்ல கதை விஜயன்
பரம்ஸ் அவர்களுக்கு பட்டம் கொடுத்திடலமா ?

மயூ
02-04-2007, 08:33 AM
ம்.. நல்ல படிப்பினை!!!

vijayan_t
02-04-2007, 10:54 AM
நிருடனுக்கும் ஒன்றும் புரியவில்லை என்னடா, மக்களால் பெரிதும் போற்றப்படக்கூடிய மாமண்ணன், சாதாரன விசயத்துக்காக, நம் காலில் விழுந்து, தான் ஏமாந்த விதத்தை யாரிடமும் சொல்லிவிடாதே என்று கெஞ்சுகின்றானே என்று குழம்பிவிட்டான். காரணமில்லாமல் இப்படிசெய்ய மாட்டானே என்று யோசித்தான்.
பளிச்சென்று அவன் மனதில் அதன் காரனம் பளிச்சிட்டது, அடடா இப்படிப்பட்ட மண்ணனின் ஆட்சியிலா இப்படி செய்தோம், இனிமேல் திருடக்கூடாது என்று என்னி, அழுது, மண்ணனிடம் மண்ணிப்பு கேட்டன்.

திருடன் புரிந்துகொன்டது இதுதான்:

கல்வி, கேள்வி, மனித நேயம் அனைத்திலும் சிறந்த அந்த மண்ணன் அவைகளனைத்தும் மக்களிடையேயும் தழைத்தோங்கவேன்டும் என்று நினைப்பவன். யாரோ ஒருவன் கஷ்டப்படுபவன் போல ஏமாற்றி திருடிவிட்டன் என்று மக்கள் அறிந்தால், அடுத்து கஷ்டப்படுபவர்களுக்கு, யாரும் உதவ மாட்டார்களே மனித நேயம் மறைந்துவிடுமே என்றஞ்சி, யாரிடமும் சொல்லிவிடாதே என்று கேட்டிருக்கின்றான்.

தயவு செய்து, தற்கால ராஜா மற்றும் திருடன்களை எண்ணிப்பார்க்கதீர்கள்.

ஆகவே மனோஜ்அலெக்ஸ அவர்களே ஒரு தமிழ்கணப்புலி பட்டம் சேமிப்பிலிருக்கட்டும்.

அறிஞர்
02-04-2007, 01:59 PM
அருமை விஜயன்...

பரம்ஸும் நன்றாக முயற்சித்தார்...

அடுத்த கதையை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

vijayan_t
02-04-2007, 09:03 PM
ஆமாம் யாருமே முயர்ச்சிக்காதபோது பரம்ஸ் மட்டுமே முயர்ச்சித்தார். நல்ல முடர்ச்சி, வித்தியாசமான சிந்தனை.
சிறுவயதில் இந்த மாதிரி கதைக்ள் நிறைய படித்ததுன்டு, ஞாபகப்படுத்தி எழுதுகின்றேன்.
முத்து காமிக்ஸ், அம்புலிமாமா, பொம்மை வீடு எல்லாம் நினைவிலாடுதுங்க.
இரும்புக்கை மயாவி, டேவிட் & லாரன்ஸ், ரிப்கெர்பி, ஜானிநீரோ, முகமூடிவேதாளர், மான்ட்ரெக் எல்லாம் இப்ப எப்படி இருக்காங்க்களோ.

ஓவியா
10-04-2007, 11:47 PM
அறிவுக் கதை பிரமாதம்.

வாழ்த்துக்கள் விஜயன் அண்ணா.

அடுத்த கதையை தொடரவும்.

banupriya
11-04-2007, 06:24 AM
மிகவும் அருமை

vijayan_t
11-04-2007, 09:32 AM
இதுவும் லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில்கேட்டதுதான்.

நடுத்தர வயது சென்னை அலுவலகவாசியொருவர் சென்னைக்கேயுரித்தான இயந்திர கதி வாழ்கயில் உழலுகின்றார். தினமும் மின்சார-புகைவன்டி பயனம், கூட்டம், புளியோதரை கட்டு என்று வெறுத்துப்போனவர். அவர் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள தயாராக இருக்கின்றார், அந்த புளியோதரையைத்தவிர. சுமார் எட்டு வருடங்களாக புளியோதரை மட்டுமே அவரது மனைவி கட்டிக்கொடுக்கின்றார். எவ்வளவோ கேட்டும் மாற்ற தயாராக இல்லை. சென்னைவாழ் கனவண்களுக்கே உரித்தான, சகிப்பு தன்மையில் பொறுத்துக்கொன்டு காலத்தை ஓட்டுகின்றார், ஆனால் மனதுக்குள் ஒரு வைராக்கியம் வளர்க்கின்றார், மனைவிக்கு த்ரியாமல் பனம் சேர்த்து, ஒரு நட்சத்திர ஓட்டலில் சென்று சாப்பிடவேன்டுமென்று. நன்பரிகளிடம் அது குறித்த விலை பற்றி விசாரித்ததில், அவர் ஆறு மாதங்கள் சேர்க்கவேன்டியிருப்பது தெரிகின்றது. நம்மவர்தான் வைராக்கிய புலியாயிற்றே, பொறுமையா வெத்திலை, பாக்கு, கடலைமிட்டாய் எல்லவற்றையும் தியகம் செய்து, பனம் சேர்க்கின்றார். அவரது கனவு நாளும் வந்தது. நட்சத்திர ஓட்டலுக்குள்போகின்றார், பணியாளர் அவரிடம் மெனுவை நீட்டுகின்றார், அவரும் வாங்கி பார்ப்பதுபோல நடிக்கின்றார், அவருக்கு எதுவுமே புரியலை, சரி எதாவது ஒன்றை டிக் பன்னி கொடுப்போம் என்று டிக் பன்னி கொடுக்கின்றார், அவரது மகா கெட்ட நேரம் புளியோதரையை போய் டிக் பன்னிவிட்டார். பணியாளர் கொன்டு வந்து கொடுத்ததும் பார்த்து நொந்து நொறுங்கி போய் விட்டார், பிறகு மனதை தேற்றிக்கொன்டு சரி அடுத்தமுறை சரியாக தெரிவு செய்யவேன்டும் என முடிவு செய்து, அந்த புளியோதரையை கஷ்டபட்டு சாப்பிடுகின்றார்.
அவருக்கு அருகே உள்ள மேஜையில் ஒருவர் வித்தியாசமான உணவை வெட்டு வெட்டுனு வெட்டுறார், பிரமாதமான வாசனையுடன், பார்ப்பத்ற்கே சாப்பிட தூன்டுமளவுக்கான நேர்த்தியிலிருக்கின்றது அது. அருகிலுள்ளவர் அதை சாப்பிட்டு முடித்ததும் அடுத கட்டளைக்கு தயாராகின்றார், நம்ம ஆளும் காதை தீட்டிக்கொள்ளுகின்றார், பெயரை கேட்டு வைத்துக்கொள்ளுவோம், வரும் பதார்த்தம் நன்றாக இருந்தால் நாமும் அதையே கேட்க்கலாமென நினைக்கின்றார். அருகிலுள்ளவர் பணியாளரை அழைத்து "ரிபீட் த சேம்" என்று சொல்லுகின்றார், நம்மாளும் அதை எழுதி வைத்துக்கொள்ளுகின்றார். பணியாளர் , அருகிலுள்ளவருக்கு கொன்டு வந்ததைப்பார்த்ததும் அவருக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை, ஆஹா வாழ்கையில் முதல் முறையாக உன்னதமான பதார்த்ததினை சாப்பிட போகின்றோமென அகமகிழ்ந்து பணியாளரை அழைத்து "ரிபீட் த சேம்" என்று சொல்லுகின்றார். பிறகு பணியாளர் கொன்டு வந்ததை பார்த்து நொந்து நூடுல்ஸாகி போனார், அதன் பிறகு அவர் நட்சத்திர ஓட்டல் ஆசையே விட்டுவிட்டார்.

இதில் நீதி எதும் இருக்கிறதா என்று தெரியலை, நகைச்சுவையாக இருந்தது அதான் பதிந்தேன்.

"தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைக்கக்கூடாது" என்ற நீதி இருப்பதாகக்கொள்ளலாமா?

அன்புரசிகன்
11-04-2007, 09:44 AM
பாவம் அந்த மனுசன். ஆண்டவன் இப்படி அவரை சோதித்திருக்கக்கூடாது.

pradeepkt
11-04-2007, 09:44 AM
கொள்ளலாம் கொள்ளலாம்...

ஓவியன்
12-04-2007, 12:10 PM
விஜன் திரியை நகைச் சுவையாகவும் நல்ல விடயங்களைக் கூறும் செய்திகளாகவும் நகர்த்தும் விதம் அருமை - வாழ்த்துக்கள்.

vijayan_t
29-04-2007, 01:21 PM
இது இனையத்தில் படித்தது.

அந்த கணவனுக்கு தன் மனைவியின் கேட்கும் திறன் பற்றி சந்தேகம் இருந்தது தொலைவில் நின்று என்ன சொன்னாலும் காதில் வாங்கி பதிலுரைக்க மாட்டேன் என்கின்றாள், அவனுக்கு கவலையாக போய்விட்டது என்னடா நம் மனைவி இப்படி ஆகி விட்டாளே, இதை யாரேனுமறிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும் என்று. சரி மருத்துவரிடம் யோசனை கேட்கலாமென செல்கின்றான். மருத்துவரும் இப்படி பொத்தம்பொதுவாக சொன்னால் எப்படி, எவ்வளவு தூரத்தில் அவரது காது சரியாக கேட்க்கவில்லை? அந்த கனவன்ஙேட்டன் அதை எப்படி கன்டுபிடிப்பது? மருத்துவர் சொன்னார் முதலில் வெகு தொலைவில் நின்று ஏதாவது கேளுங்கள், பதிலளிகின்றாரா என்று பாருங்கள், பிறகு படிப்படியாக தூரத்தை குறைத்து கன்டுபிடியுங்கள் என்றார். க்ணவனும் வீடுக்கு வந்து முக்கிய வாயிலில் நின்று, சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதி வரவில்லை.

பிறகு உள்ளே வந்து நுழைவாயிலில்நின்று சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை

பிறகு ஹாலின் உள்ளே வந்து "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை. அவ்ள் சமயல்றையில் இருப்பதை கவனித்து, சமயலறையின் கதவருகே நின்று "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை.

அவனுக்கு ரெம்ப கவலையாகி போயிற்று என்னட நம் மனைவி ரெம்ப செவிடாகி போய் விட்டாளே என்று, பிறகு சமயலறையின் உள்ளே நுழைந்து தன் மனைவியின் அருகேபோய் நின்று ஆத்திரமாக கத்தி கேட்கின்றான்.
"இன்று மதிய உணவு என்ன"??

அவளிடமிருந்து பதில் வருகின்றது "முட்டாள் கனவனே ஏற்கனவே மூன்று முறை நீ கேட்டதுக்கு புளியோதரை என்று சொனேனே"

அவன் அதிர்ச்சியகிவிட்டான், உடனே மருத்துவரிடம் ஓடினான்.

vijayan_t
29-04-2007, 01:24 PM
விஜன் திரியை நகைச் சுவையாகவும் நல்ல விடயங்களைக் கூறும் செய்திகளாகவும் நகர்த்தும் விதம் அருமை - வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஓவியன் அவர்களே
(தாமதமாக படித்ததால் நன்றிக்கும் தாமதமாகி போனதற்க்கு மண்ணிக்கவும்)

மனோஜ்
29-04-2007, 01:41 PM
நல்ல கணவன் அருமையான கதை விஜயன்

சுட்டிபையன்
29-04-2007, 01:45 PM
விஜயன் உங்கள் பதிப்புக்கள் நன்றாக உள்ளது, ரசித்து படிக்கக் கூடியதாக.
எழுத்துப் பிழைகளைக் குறைத்தால் என்னும் நன்றாகவிருக்கும்

சுட்டிபையன்
29-04-2007, 01:47 PM
நான் புத்தகங்களில் இருந்து படித்து ரசித்தது

படித்த ஒருவனும் படிக்காத ஒருவனும் ரயிலில் பயணம் செய்தார்கள். இவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டார்கள். படித்தவனுக்கா இல்லை படிக்காதவனுக்க பொது அறிவு அதிகம்.....? இதுதான் பந்தயம். தோற்றால் பணம் கொடுக்கவேண்டும் என்று முடிவானது. ""எனக்கும் படிப்பறிவில்லை நீதான் படித்தவன், ஒரு கேள்வி கேட்டு நான் தோற்று விட்டால் உனக்கு நூறு ரூபாய் தருகின்றேன்! நீ படித்தவன் என் கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் நீ எனக்கு இருநூறு ரூபாய் தரவேண்டும் சரியா"" என்றான். படிக்காதவன் கேள்வியை கேட்கச் சொன்னான் படித்தவன்.

"ஆறு கால்,இரண்டு வால்,ஒரு கொம்பு இருக்கும் மிருகம் எது" என்று கேட்டான் படிக்காதவன். படித்தவன் நீண்ட நேரம் யோசித்தான், அவனிற்க்கு தலை சுத்தியது. விடை கண்டு பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியை ஒத்துக் கொண்டான்.

ஏற்கனவே கூறியபடி இருநூறு ரூபயை கொடுத்தான் படித்தவன். ""அது சரி அந்த மிருகத்தின் பெயர் சொல்லு"" என்று கேட்டான் படித்தவன். ""இந்தா நூறூ ரூபாய்"" என்று திருப்பி நீட்டினான் படிக்காதவன். ""எனக்கும் அந்த மிருகத்தின் பெயர் தெரியாது"" என்று சொன்னான் புத்தி சாலித்தனமாய் படிக்காதவன்
( இதில ஒன்று ஓவியன் மற்றது கிஷொ, நீங்களே அவங்க யார் என்று கணக்குப் போடுங்க :D:D)(கலாய்க்கத்தன்)

அன்புரசிகன்
30-04-2007, 05:18 PM
அவன் அதிர்ச்சியகிவிட்டான், உடனே மருத்துவரிடம் ஓடினான்.

நகைச்சுவையானாலும் ஒரு கருத்தும் உள்ளது. மற்றவரை சந்தேகப்படுமுன் யாம் சரியாக இருத்தல்வேண்டும். யேசுநாதர் கதை ஒன்று ஞாபகம் வருகிறது.

அன்புரசிகன்
30-04-2007, 05:20 PM
ஏற்கனவே கூறியபடி இருநூறு ரூபயை கொடுத்தான் படித்தவன். ""அது சரி அந்த மிருகத்தின் பெயர் சொல்லு"" என்று கேட்டான் படித்தவன். ""இந்தா நூறூ ரூபாய்"" என்று திருப்பி நீட்டினான் படிக்காதவன். ""எனக்கும் அந்த மிருகத்தின் பெயர் தெரியாது"" என்று சொன்னான் புத்தி சாலித்தனமாய் படிக்காதவன்
(கலாய்க்கத்தன்)

சுட்டியருக்கு 100 ருபாய் நட்டம். :sport-smiley-007:

vijayan_t
01-05-2007, 03:33 PM
இது ஆனந்தவிகடனில் படித்தது.

புகைவண்டி ஓட்டுநர் ஒருவர், நீதிபதியின் முன்நிறுததப்பட்டு, புகைவண்டியை இருப்புப்பதையை விட்டு விலக்கி காட்டுக்குள் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கின்றார். அவ்ருக்கு எதிரான வழக்கறிஞர் அவர் செய்த குற்றத்தையும், கடமையிலிருந்து தவறியதையும், ஆயிரக்கனக்கானோரின் உயிர்ப்பலி நிகழவிருந்ததையும், சுட்டிகாட்டி வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். ஆனால் அந்த ஓட்டுனரோ கொஞ்சம்கூட கவலைப்படாமல், குற்றவாளி கூண்டில் நிற்கின்றார்.

நீதிபதி அந்த ஓட்டுனரிடம் கேட்கின்றார், "என்னப்பா கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர்களின் உயிர் உன் கையில் இருந்தது, ஆனால் நீ கொஞ்சம்கூட பொறுப்பிலாமல் நடந்து இருக்கின்றாயே? ஏன் அப்படி செய்தாய்?.

ஓட்டுனர் சொன்னார், ஐயா, நான் எப்பொழுதும் என் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றவனாக்கும் , சம்பவம் நடந்த அன்று, அந்த இடத்தில் புகைவன்டியை ஓட்டிவருகையில், இருப்புப்பாதை நடுவினில், ஒருவன் நின்றிருக்கக்கன்டேன்.

அதற்கு அந்த நீதிபதி கேட்டார், அதனாலென்ன ஒருவன் உயிருக்காக இரண்டாயிரம் உயிர்களை கொல்லப்பார்த்தாயே. நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவனை இடித்துவிட்டு சென்றிருக்கலாமே,. இரண்டாயிரம் உயிர்கள் பலியாவதற்க்கு பதிலாக ஒரு உயிர் பலியாவது மேலல்லவா. நீ புத்திசாலித்தனமாக அவன்மீது மோதிச்சென்றிருக்கவேன்டும் என்றார்.

ஓட்டுனர் சொன்னார், ஐயா, நான் எப்பவுமே புத்திசாலிததனமாக செயல்படுபவன்தான், நீங்கள் குறிப்பிட்டதுபோல அவனை மோதிகொல்லவேன்டுமென்ற எண்ணத்தில்தான் வந்தேன், மிக அருகில் வந்துவிட்டேன், அவன் மீது மோதும் தருனம் வந்துவிட்டது, நானும் எதிபார்த்துக்கொன்டிருந்தேன், ஆனால் நாமெல்லாம் ஆசைப்பட்டதை, நடக்கவிடாமல் அவன் சதி செய்துவிட்டானவன். புகைவன்டி அருகில் வந்தவுடன் அவன், இருப்புப்பதையைவிட்டு விலகி காட்டுக்குள் ஓட ஆரம்பித்துவிட்டான். நீங்களே சொல்லுங்கள் நான் என்ன செய்வது, வேறு வழியில்லாமல் அவனை விரட்டி காட்டுக்குள் செல்லவேன்டிதாயிற்று.

சுட்டிபையன்
01-05-2007, 03:51 PM
சுட்டியருக்கு 100 ருபாய் நட்டம். :sport-smiley-007:

எனக்கு எதுக்கு நட்டம் ஓவ் இல்லை கிஷோ யாராவது ஒருத்தருக்குத்தான் நட்டலம்:icon_v:

அன்புரசிகன்
01-05-2007, 03:57 PM
நீங்களே சொல்லுங்கள் நான் என்ன செய்வது, வேறு வழியில்லாமல் அவனை விரட்டி காட்டுக்குள் செல்லவேன்டிதாயிற்று.

ரொம்ப வில்லங்கம் பிடித்த ஓட்டுனர்.

சுட்டிபையன்
01-05-2007, 04:01 PM
இதை சர்தாஜி ஜோக்ஸில் படித்த ஞாபகம் இருக்கிறது

ஓவியா
01-05-2007, 10:00 PM
'புகைவண்டி ஓட்டுநர்'
இந்த கதையின் தத்துவம் தான் என்ன??

நன்றி: விஜயன் அண்ணா
நன்றி: ஆனந்தவிகடன்

சுட்டிபையன்
07-05-2007, 01:10 PM
அமைச்சர் பதவி

வேட்டையாடுவத்ற்குப் புறப்பட்ட மன்னன் வானம் மேகமூட்டமாய் இருப்பதைப் பார்த்தார். அவர் தனது அமைச்சைரப் பார்த்து "இன்று மழை வருமா" என்று கேட்டார், மன்னர் பெருமான் இன்று மழை வராது என் பேச்சை நம்பி வேட்கைக்குப் போங்கள்' என்று அமைச்சர் கூறினார்.

மன்னரும் வேட்டைக்கும் புறப்பட்டுச் சென்றார். காட்டில் ஒரு விவசாயி தனது கழுதயை ஓட்டிக்கொண்டு வந்தான். "இன்று மழை வருமா என்று" விவசாயியிடம் மன்னர் கேட்டார். 'இன்று நிச்சயமாக மழை வரும் நீங்கள் அரண்மனைக்குப் போங்கள்' என்றான் விவசாயி. அதைப் பொருட்டுப் படுதாமல் மன்னர் வேட்டைக்குச் சென்றார். சிறுது நேரத்தில் கடுமையாக மழை பெய்து மன்னர் கடுமையாக நைனைந்து விட்டார். திரும்பி வரும் வழியில் அந்த விவசாயியை சந்திக்க நேர்ந்தது. 'இன்று மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்" என்று மன்னர் கேட்டார். மழை பெய்யும் என்று எனக்குத் தெரியாது ஆனல் என் கழுதைக்குத் தெரியும். கழுதை தனது காதுகளை முன்னுக்கு நீட்டினால் மழை பெய்யும் என்று உண்மை எனக்குத் தெரியும்' என்றான் விவசாயி. அரண்மனை திரும்பிய மன்னர் தந்து அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு விவசாயியின் க்ழுதையய் அமைச்சராக்கிவிட்டார்.

மயூ
07-05-2007, 02:16 PM
ஹா.. ஹா...
அந்த அரசன் சுட்டி
அந்த (புதிய?? பழைய??) அமைச்சர் ஓவியன்

சுட்டிபையன்
07-05-2007, 02:21 PM
ஹா.. ஹா...
அந்த அரசன் சுட்டி
அந்த (புதிய?? பழைய??) அமைச்சர் ஓவியன்

அந்த கழுதை தாங்கள்தான் மயூரேசா:p