PDA

View Full Version : ஆறா ரணம்



ஆதவா
30-03-2007, 03:20 PM
முற்களைத் தாண்டித்தான்
உன்னைக் கண்டேன்.
கொன்று போட்டிடும்
அந்த வேள் விழியால்
அன்றே கொன்றிருக்கலாம்
இன்று சித்ரவதைப் படும் என்னை.

குருதியால் ஏற்பட்ட
ரணத்தை விட
குருட்டுக் காதலில் ஏற்பட்ட
ரணங்களின் வடுக்கள்
ஆறத் துடிக்கவில்லை
இன்னும்.

என்னுள் கொப்பளிக்கும்
ரத்தங்கள் உன்னையே
நினைப்பதாலோ என்னவோ
சூடேறிவிடுகிறது.
தணிக்கத்தான் ஒருமுறை
நீ காண்வாய் என்னை..
தன்னை மறந்து
தணிக்கவும் மறந்து
ஓட்டங்களை நிறுத்திவிட்டு
எட்டிப் பார்க்கிறது இத்திரவம்.

கூந்தலில் ஏறிய என்னை,
மாலையில் பூக்களை
மதிக்காமல்
மிதிப்பதுபோல
கிடத்திவிட்டாய்..
நறுமணத்தை இழந்து
ஒரு சாக்கடைக்குள் தவிக்கிறேன்
பூ என்ற குணத்தோடு மட்டும்.

அள்ளிக்கொண்ட
அனைத்து நீரையும்
பருகிவிட முடியாது.
உன் உதடு பட்ட நீராக
நான் இருக்கையில்
உன் கைவிரல் இடுக்குகளில்
தொலைந்து போகிறேன்.

என் கதிர்களின் வீச்சை
தடுத்து விட்ட பிறகு
என்னடி உனக்கு இன்னும் பார்வை?
என்றாவது நின்றுபோன கதிர்களுக்கு
நீ வருத்தப்படுவாய்..
அன்று நான் மேகத்திலிருந்து
உன்னைக் கண்டு
அழுவதா, சிரிப்பதா என்று
யோசிப்பேன்..

விழிகளில் அடக்கிக்கொண்ட
உன் மனதினை
ஒரு முறையாவது காட்டு.
உன்னால் ஒரு ஜென்மம் பிழைக்கட்டும்.

தொடரும் இந்த புலம்பல்கள்.....

அறிஞர்
30-03-2007, 03:22 PM
விழிகளில் அடக்கிக்கொண்ட
உன் மனதினை
ஒரு முறையாவது காட்டு.
உன்னால் ஒரு ஜென்மம் பிழைக்கட்டும்.

தொடரும் இந்த புலம்பல்கள்.....

காதலித்ததின் விளைவு
ஒரு புலம்பல் படலம்.....

ஒரு ஜென்மத்தை பிழைக்கவிட
மனதினை காட்டுவாரா.. காதலி...

தொடருங்கள் ஆதவா..

ஆதவா
30-03-2007, 03:26 PM
மிகவும் நன்றி அறிஞரே!
காதல் ஒரு ஜென்மக்கோளாறு. பிறவி எடுக்க முடியா ஊனம் தோல்வியில் அடங்கியிருக்கிறது. எடுக்கப்பட்ட பிறவியும் ரணத்தை அனுபவிக்காமல் இல்லை....
காதலின்றி உலகில்லை..

ஷீ-நிசி
31-03-2007, 06:54 AM
முதல் சந்திப்பே பல இன்னல்களின் மத்தியில் ஆரம்பித்ததாய் கூறுகிறது கவிதையின் முதல் வரி....

முற்களைத் தாண்டித்தான்
உன்னைக் கண்டேன்.

காதல் இருக்கிறதா, இல்லையா என்று தெரியாமலே ஏற்படும் குருட்டுக்காதல்கள் தான் நாட்டில் அதிகம்...

பூக்களின் நிலை, காலையில் தலையில், மாலையில் காலில்...
அந்நிலையில் தான் இக்காதலன்....

அள்ளிக்கொண்ட
அனைத்து நீரையும்
பருகிவிட முடியாது.
உன் உதடு பட்ட நீராக
நான் இருக்கையில்
உன் கைவிரல் இடுக்குகளில்
தொலைந்து போகிறேன்.

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... எனக்கு புரிந்தவரையில்...

ஒரு சின்ன செயல் நடக்கிறது..
உதட்டின் மேல் ஒட்டி இருக்கின்றது நீர்த்துளிகள்.
அந்த நீரை கைகளினால் அவள் துடைத்துவிடுகிறாள்.. அந்த நீர் பின் காணாமலே போகிறது..

அந்த நீரின் நிலையில் காதலன், உதடுவரை வந்த அவனால் உள்செல்லமுடியவில்லை.. நிராகரிப்பில் சிக்கி கைவிரலின் இடுக்கில் ஆவியானான்...


என் கதிர்களின் வீச்சை
தடுத்து விட்ட பிறகு
என்னடி உனக்கு இன்னும் பார்வை?
என்றாவது நின்றுபோன கதிர்களுக்கு
நீ வருத்தப்படுவாய்..
அன்று நான் மேகத்திலிருந்து
உன்னைக் கண்டு
அழுவதா, சிரிப்பதா என்று
யோசிப்பேன்..

நிராகரித்தாகிவிட்டது... அவ்வப்போது பல பயணங்களில் நாம் சந்திக்க நேர்கிறது.. நம் பார்வைகள் பார்த்துக்கொள்கிறது.. வார்த்தைகளில்லை.. என்றைக்காகிலும் ஒரு நாள் இவனை நாம் இழந்துவிட்டோமே என்று வருத்தபடுவாய்.. அன்றைக்கு நான் உன்னைக் கண்டு சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் எல்லாம் விதி என்று இயற்கையின் மேல் பழி போட்டு விழுந்து கிடப்பேன்..நீயும் என்னைப் போலவே..

90% காதலர்களும் ஏதேனும் ஒரு காலத்தில் இந்த வட்டத்துக்குள் அடங்குவர் ஆதவா...

வாழ்த்துக்கள்! அருமையான கவிதை..

அமரன்
31-03-2007, 06:58 AM
கூந்தலில் ஏறிய என்னை,
மாலையில் பூக்களை
மதிக்காமல்
மிதிப்பதுபோல
கிடத்திவிட்டாய்..
நறுமணத்தை இழந்து
ஒரு சாக்கடைக்குள் தவிக்கிறேன்
பூ என்ற குணத்தோடு மட்டும்.



இதுவரை கவிதைகளை மேலோட்டமாகப் படித்த நான் இப்போதெல்லாம் ஆழ்ந்து படிக்கின்றேன். அந்த வகையில் என்னைத் தொட்ட வரிகள் இவை.

ஆதவா
31-03-2007, 07:32 AM
நன்றி ஷீ! மற்றும் நரன். ரணத்தை அனுபவத்தவர்களுக்கு இது ஆறட்டுமே!!
காதல் எவ்வளவு இனிமையானதோ அதைவிட் துன்பமானது......... எனது புலம்பல்கள் இன்னும் தொடரும்..............

கண்ணீர் வர மறுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.... உங்களின் கண்ணீருக்கும்தான்.

மனோஜ்
31-03-2007, 07:50 AM
ஆதவா கண்ணீருக்கும் வலிக்கிறது
உங்கள் காதல் புலம்பல் அருமை கவிதை

இளசு
31-03-2007, 08:17 AM
சில வகை வலிகள் சாசுவதமாய்.. தலைமுறை தாண்டியும்..
படும் மனங்கள் மாறினாலும், வலியின் குணம் மாறாமல்..

களத்தூர் கண்ணம்மா படப்பாட்டு ஒன்று:

மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர் தான் யாரோ -அன்று
சூட்டி மகிழ்ந்ததும் அவள்தானோ -பின்பு
தூக்கி எறிந்ததும் அவள்தானோ!

மலராய் வாடும் கவலை இப்படி என்றால்
விரலிடுக்கு நீராய் வீணாவது புதிய வீச்சு..

என்னை நிராகரித்தற்கு
என்றாவது நீ அழுவாய் எனும்
நினைப்பே இம்மனப்புண்ணுக்கு மருந்து..

ஆதவனின் கவிதைப்பூம்புலம்பல்கள் அருமை..
அதனால் தொடரட்டும்!

மயூ
31-03-2007, 10:36 AM
எப்பிடி ஆதவா இப்படி உணர்ந்து எழுத முடிகின்றது... ???

ஆதவா
31-03-2007, 11:04 AM
நன்றி இளசு அண்ணா மற்றும் மனோ!
---------------------------------------

வலியை அனுபவித்தவனுக்கு எப்படி என்று தெரியும்
வலியைக் கண்டவனுக்கும் அது தெரியும்...

இரண்டையும் ஒருங்கே ஒருமித்தமாய் என் மனது போட்டு குழப்பி.....

ரணத்தை மீண்டும் கீறுகிறேன்.........

நன்றி மயூரா

poo
02-04-2007, 09:48 AM
பெண்களுக்கு சாதாரணம்..
ஆண்களுக்கு சதா ரணம்.

- இன்னும் தொடருங்கள் ஆதவன்.

ஆதவா
02-04-2007, 07:46 PM
நன்றிங்க பூ!

ஓவியா
23-06-2007, 01:30 PM
என்ன சிந்தனை, வியக்கிறேன் ஆதவா.

உம்மை கண்டு வியக்கிறேன் தமிழ் மகனே.

கவிதை பிரமாதம்.

விமர்சனங்களும் அருமை.

lolluvathiyar
23-06-2007, 01:50 PM
ஆதவா கவிதை தூள், காதல் பற்றிய உன்மையா, அனுபவமா. அல்லது ஏக்கமா. எதுவாக இருந்தாலும் வரிகள் அருமை

அந்த வேள் விழியால்


யானைக்கு அடி சருக்கும் என்பது இதுதான்.
வேல் என்றல்லவா வரவேண்டும்.
த*மிழ் க*ட*வுள்முருக*பெருமானின் கையிலிருப்ப*தை த*வ*றாக* எழுத*லாமா?
அதுவும் பிழைகளின் வாத்தியார் என்று பெயரெடுத்த நான் கண்டுபிடிக்கு அளவுக்கு ஆகிவிட்டதா?

ஆதவா
14-07-2007, 05:23 PM
ஆதவா கவிதை தூள், காதல் பற்றிய உன்மையா, அனுபவமா. அல்லது ஏக்கமா. எதுவாக இருந்தாலும் வரிகள் அருமை


யானைக்கு அடி சருக்கும் என்பது இதுதான்.
வேல் என்றல்லவா வரவேண்டும்.
த*மிழ் க*ட*வுள்முருக*பெருமானின் கையிலிருப்ப*தை த*வ*றாக* எழுத*லாமா?
அதுவும் பிழைகளின் வாத்தியார் என்று பெயரெடுத்த நான் கண்டுபிடிக்கு அளவுக்கு ஆகிவிட்டதா?

ஹ* ஹ.... வாத்தியாரே இதற்காகவே முயன்று வேள் என்பத்ற்கு அர்த்தம் கண்டு பிடித்தேன்.. வேட்கை என்பதன் சுருக்கம் வேள் என்பதாகும்....

உண்மையிலேயே வேல் என்றுதான் வரவேண்டும். இருந்தாலும் வேள் போட்டதும் தவறில்லை என்று சமாளித்துவிட்டேன்....

சுட்டிக் காட்டியமைக்கு நன்றிங்க வாத்தியாரே......
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

ஓவியாக்கா... மிகவும் நன்றிங்க அக்கா... என்னுடைய பல கவிதைகள் உங்கள் நிழல் படாமல் இருக்குங்க... பார்த்து ஏதாவது போடுங்க அம்மா தாயே!1

ஓவியன்
14-07-2007, 05:30 PM
அள்ளிக்கொண்ட
அனைத்து நீரையும்
பருகிவிட முடியாது.
உன் உதடு பட்ட நீராக
நான் இருக்கையில்
உன் கைவிரல் இடுக்குகளில்
தொலைந்து போகிறேன்.
..[/COLOR][/FONT]

ஆதவா!

என்னை நிரம்ப பாதித்தன இந்த வரிகள்.....................
இதைவிட அழகாக இந்த தவிப்பினை நான் சொல்ல முடியுமென்று நினைக்கவில்லை.

பாராட்டுக்கள் ஆதவா!.

பி.கு − இன்றுதான் என் கண்களில் பட்டது இந்த படைப்பு − ஆவலுடன் காத்திருக்கிறேன் தொடரும் புலம்பல்களுக்காகவும்..............

ஆதவா
14-07-2007, 05:47 PM
ஆதவா!

என்னை நிரம்ப பாதித்தன இந்த வரிகள்.....................
இதைவிட அழகாக இந்த தவிப்பினை நான் சொல்ல முடியுமென்று நினைக்கவில்லை.

பாராட்டுக்கள் ஆதவா!.

பி.கு − இன்றுதான் என் கண்களில் பட்டது இந்த படைப்பு − ஆவலுடன் காத்திருக்கிறேன் தொடரும் புலம்பல்களுக்காகவும்..............


மிக*வும் ந*ன்றிங்க* ஓவிய*ன்.... பாதிப்ப*டைந்த*வ*ர்தான் பாதிப்புக*ள் நிர*ம்ப* த*ர*முடியுமோ? தெரிய*வில்லை... மிக*வும் ந*ன்றிக*ள். அதோடு,, இதே தொட*ர்க*விதைப் பிரிவில் மற்றைய புலம்பல்கள் இருக்கின்றன.. இக்கவிதை எழுத மனம் இருந்தால் தொடருகிறேன்.....

அதிரடி அரசன்
02-08-2007, 10:47 AM
அருமையான கவிதைகல்

விகடன்
02-08-2007, 10:49 AM
தொடர் கதையாய் இடைவிடாது எழுதி முடித்த கவிதை. மிக மிக அற்புதம்.
பாராட்டுக்கள் ஆதவா

ஆதவா
04-08-2007, 10:56 AM
நன்றி விராடன், அதிரடி அரசன்... அது இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது. நேரம் அமைந்தால் முடிக்கிறேன். நன்றி