PDA

View Full Version : வர்ணஜாலம்.



அமரன்
29-03-2007, 03:51 PM
வறண்ட பூமியின் நிலைகண்டு
வெகுண்டு எழுந்த வானம்
அருணனின் ஆரோகணத்துக்கு
கறுப்புக் கொடி காட்டுகின்றது
மழைக்கால கார்மேகமாய்

ஆகாயத்தின் அன்பு கண்டு
படர்பச்சைக் கம்பளம்விரித்து
செப்புகின்றன நறுமைதனை
மழைத்துளியால் தளிர் விட்ட
வேனில்கால மரஞ் செடிகள்

மனம்கிழ்ந்த விண்டலம்
விருட்ஷ விருத்திக்கு
பச்சயம்தரும் பகலவனின்
வருகைக்கு சாமரம் வீசுகின்றது
கோடைகால வெண்மேகமாய்

விகடன்
29-03-2007, 04:34 PM
பருவகாலக் கவிதை அருமை.

வாழ்த்துக்கள்.

இளசு
29-03-2007, 04:38 PM
நரன்..

நான் படிக்கும் உங்களின் முதல் கவிதை..

ஒரு அழகான எண்ணவோட்டத்தை
வண்ணங்கள் தெளித்து வடிவான கவிதையாக்கியிருக்கிறீர்கள்..


தொடருங்கள் இன்னும் தொடாத வண்ணங்களையும் தொட்டு..

அந்தியில் சந்திக்கும் காதலர் அந்தரங்கம் அறிந்து
குங்குமமாய்ச் சிவக்கும் மாலைநேர வானம்..

மங்கையாகிவிட்ட பூரிப்பில் பருவ உச்சியில்
மஞ்சள் பூசிய முகம் காட்டும் பௌர்ணமி நிலா

வஞ்சகம் உள்ளோர் நெஞ்சாழத்தில் புதைந்த
நஞ்சரவங்கள் கதை சொல்லும் நீலக்கடல்..


எத்தனை வண்ணங்கள்...
அத்தனை எண்ணங்கள்..

தொடருங்கள் நரன்..
பாராட்டுகள்!