PDA

View Full Version : புலம்பெயர் தமிழன்



அமரன்
29-03-2007, 03:29 PM
புலம்பெயர் தமிழன்

பனிபடர்ந்த காலைவேளையில்
ஈரம்நிறைந்த காற்றுத் தழுவிட
வேகமெடுக்கும் தொடருந்துக்குள்
எட்டிப்பாய்ந்தேன் அவசரமாய்
வழக்கமான பயணதுக்காய்

மூக்குக் கண்ணாடியின் வழி
புத்தகத்தில் விழிபதித்தபடி
லண்டன் வயோதிபர்

செல்லில் காதல் சொல்லாடி
புன்னைகையை பொன்னகையாக்கிய
ஆபிரிக்கமங்கை

தூக்கம் நிறைந்த முகத்துடன்
புத்தகப் பையை அணைத்தபடி
அரபுநாட்டுச் சிறுவன்

அனைவரின் பார்வையும் என்மேல்.
ஏனிந்த அவசரம் உனக்கு?
கேட்டன அத்தனை கண்களும்
என்னையே நான் கேட்டேன்.

அலைபாயும் கண்களுடன்
புலம்பெயர் தமிழன் நீ
எதைத்தேடி தினம் ஓடுறாய்?
விடைதெரியா வினா இது.

அறிஞர்
29-03-2007, 03:41 PM
வாழ்க்கையில் ஏதாவது
சாதிக்க வேண்டும் என்ற எண்ணமோ

இப்படி பட்ட ஓட்டம்
இல்லாமல் இருந்திருந்தால்....
புலம் பெயர்ந்து...
வாழ்க்கையை வளமாக்கி இருக்க முடியுமா...

ஓட்டங்களுடம் சாதனைகளும் தொடரட்டும்.

அமரன்
29-03-2007, 03:54 PM
அறிஞரின் கருத்துக்கு நன்றி.

விகடன்
29-03-2007, 04:30 PM
கயவர்களின் அரசியல் இலாபத்திற்கும்
கண்மூடித்தனமான இன வெறியர்களின் கொட்டத்திற்கும்
இரையாகி கிடக்கும் எம்மினத்தை விட்டுத் தெறித்து
தட்டுத்தடுமாறி நிற்கும் தமிழனனிற்கு
இதுவுந் தேவை.
இன்னமும் தேவை.

ஷீ-நிசி
29-03-2007, 04:45 PM
கவிதை நன்றாக இருக்கிறது நண்பரே! அதுவும் தொடருந்து என்ற வார்த்தை இரயிலை குறிக்கிறதா?!... வியந்தேன் அவ்வார்த்தையைக் கண்டு..

இளசு
29-03-2007, 10:35 PM
ஆறாத்துயரம் இது
மாறா மனக்காயம் இது..

நாளை(யாவது) என் தாயகம் செல்வேன்
என வாழ்நாள் முழுதும் ஓட்டலாம்..

தாய்மடி என்று, எப்படி கிடைக்கும் என அறியாமல்
ஒரு நாளைக்கூட கழிப்பது நரகம்..

அந்நியப்பார்வைகள் கூசவைக்கப் படர, நெளிகையில்
இங்கு இப்போது இப்படி நான் - ஏன்?
என்ற விடை தெரியா கேள்வி
நெஞ்சுக்குழியில் விக்கி நிற்குமே

அந்த வேதனையைப்
பட்டவர் தவிர
மற்றவர் அறிவது அரிது..

நரனும் ஜாவாவும் அதைத்தான் சொல்ல வருகிறார்கள்..

நெஞ்சறுக்கும் கவிதைக்கு நெகிழ்கண்ணீர்த் துளிகள் பரிசாக!

ஆதவா
30-03-2007, 03:17 AM
நரனின் கவிதைகள் தற்போது கனம் கூடுகின்றன... எனக்கு பயமாக வேறூ இருக்கிறது, :) வாழ்த்துக்கள் நரன். வார்த்தைகளின் வலியே வேதனையாக இருக்கும்போது நேரில் அனுபவித்த அனுபவித்துக்கொண்டிருக்கிறவர்களின் வலி இன்னும் வேதனைதான்...

பேருந்து இருக்கைகளில் எல்லாரும் அமர்ந்துவிட்ட பின் ஒருவன் மட்டும் நின்று கொண்டு பயணம் செய்ய எத்தனை சங்கடமாக இருக்கும்!! தனிவாழ்வு... தன் மண்ணைத் தியாகம் செய்யும் வாழ்வு...

உங்கள் வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கவிதையை வெட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.. பலே!! இன்னும் வெட்டுங்கள்.. வற்றாத பொற்குவியல் அது.

பரஞ்சோதி
30-03-2007, 03:58 AM
நரன்,

கவிதையின் வாயிலாக நம் மக்கள் படும் நரக வேதனை புரிகிறது. என்னுடைய நண்பர்கள் சொல்லும் கதைகள் கேட்க கேட்க, மனித இனத்தின் மீதே வெறுப்பு உண்டாகிறது. எல்லையில்லா உலகை படைத்த இறைவனே இன்று வெட்கப்படுகிறான்.

அமரன்
30-03-2007, 08:21 AM
என் கவிக்கு பின்னூட்டம் அளித்து என்னை உக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி

மனோஜ்
01-04-2007, 08:30 PM
எனது மனவேதனை இங்கு கவிதையாய் நன்றி நரன்

poo
02-04-2007, 10:21 AM
வார்த்தைகளில் அறியவைக்க முடியாத கொடுமை அதுவென புரிகிறேன்..
பரம்ஸ் சொல்வதைப்போல மனித இனமே வெறுக்கிறேன்...

-- உங்கள் குமுறல்கள் மனதைப் பிசைகிறது நரன்.