PDA

View Full Version : இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை



அகத்தியன்
29-03-2007, 10:31 AM
நீண்ட தூரம் செல்லும்
என் கனவுகளின் மீது
இன்னும் பாரம் ஏறுகிறது
இலட்சியங்கள் தின்னும்
என்னுள் எதுவோ ஒன்று உடைய...

நீ மட்டும் தொலையாமல் பாரமாகி நிற்கிறாய்....
காலங்கள் கண்டு கொள்ளாமல் போன என்
கனவுகளில் உனக்கென்ன வேலை?
தொலைந்து போ........
இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை

pradeepkt
29-03-2007, 11:24 AM
ஹ்ம்ம்... சிலருக்குக் கனவுகளே சுகமான சுமைகளாகத் தெரிகின்றனவே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...???

ஷீ-நிசி
29-03-2007, 11:48 AM
'நீ' என்று பதித்திட n-ii என்ற கீயை அழுத்திடுங்கள்....

கவிதை தொடர்ந்து எழுதிடுங்கள்...

ஜெயாஸ்தா
29-03-2007, 01:14 PM
உங்கள் கவிதை நன்று. அதிலும் எனக்குப் பிடித்த என் ஆசான் பாரதியின் வரிகளை உங்களின் கையெழுத்தடையாளமாக போட்டிருப்பது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

அறிஞர்
29-03-2007, 01:43 PM
கனவுகளில் பாரத்தை கொடுப்பவரின் சுமை பெரிது தான்....
தூக்க வலுவில்லாதவருக்கு எதற்கு இந்த தொல்லை...
அது தொலைந்து போகட்டும்.

அமரன்
29-03-2007, 02:15 PM
கனவாக வந்த ஒருவன் அல்லது ஒருத்தி சுமையாக இருப்பது பலர் வாழ்வில் நிகழும் ஜாலம். அதை வைத்து கவி படித்த உங்களை எப்படி வாழ்த்துவது.

விகடன்
29-03-2007, 04:43 PM
னீ(நீ)ண்ட தூரம் செல்லும்
என் கனவுகளின் மீது
இன்னும் பாரம் ஏறுகிறது
இலட்சியங(ங்)கள் தின்னும்
என்னுள் எதுவோ ஒன்று உடைய...

னீ(நீ) மட்டும் தொலையாமல் பாரமாகி நிற்கிறாய்....
காலங்கள் கண்டு கொள்ளாமல் போன என் கனவுகளில் உனக்கென்ன வேலை?
தொலைந்து போ........
இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை
ஆமாம்.
நினைவிலே வாடுவதை விட - சுய
நினைவை நாடுவது மேல்.

வர்ணமில்லா இடத்தில் தூரிகை இருந்து என்ன பயன்?

ஓவியரே......

எங்கே போய்விட்டீர்.

உமது கருத்தை எதிர்பார்க்கிறோம் ஐயா?!?!?

இளசு
29-03-2007, 09:44 PM
இனி மயிலின் சிறகு ஏறினாலும்
மளுக்கென முறிவேன் என தீனமாய்
மனசுக்குள் முனகும் அச்சாணி..

(வள்ளுவர் சொன்ன கவிதை இது)..

கனவில் வரும் பாரமும் தாங்காதென விம்மும்
இந்நெஞ்சம் எத்தனை துயர்பட்டிருந்தால்
இப்படி நெக்குருகிக் கெஞ்சும்?


அகத்தியனுக்கு பாராட்டுகள்!

அன்புரசிகன்
29-03-2007, 09:55 PM
நீ மட்டும் தொலையாமல் பாரமாகி நிற்கிறாய்....
காலங்கள் கண்டு கொள்ளாமல் போன என்
கனவுகளில் உனக்கென்ன வேலை?
தொலைந்து போ........இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை

இதனால் தான் பலர் வாழ்க்கை திண்டாட்டமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அகத்தியன்.

ஆதவா
30-03-2007, 03:40 AM
லட்சியங்கள் தீரா மோகத்தினால் பாரமாகிவிட்டது. இதை இப்படி சொன்னால்?..........

அன்பு ரசிகன் சொல்வதுபோல வாழ்க்கைத் திண்டாட்டமே இதனால்தான்.. காதலும் சரி, மனைவியும் சரி. எங்குமே பொருந்தும் கவி இது.. அங்கு மட்டுமா? உரைக்கும் ஊழலிருந்து ஆரம்பிக்கலாம்..

பல்வேறு கோணங்களைக் கொடுத்த கவிதைக்கும் கவிஞருக்கும் என் பாராட்டுக்கள்..

மேன்மேலும் நிங்கள் எழுத அவா...

மனோஜ்
01-04-2007, 08:14 PM
அருமை கவிவரிகள் சுமை தூக்கி பாரபடுவது ஏன் மறப்பது நன்று

poo
02-04-2007, 10:11 AM
இறங்க மறுக்கும் சுமையை.. இறக்கிப்போகவும் முடியாமல் தவிக்கும் அழகு.. அருமை!

இன்னும் நிறைய கவிதைகள் எழுதுவதற்கு வாழ்த்துகள் நண்பரே!