PDA

View Full Version : கல்யாணக் காதல்



அமரன்
29-03-2007, 07:35 AM
நேற்று
காலையில் அலர்ந்து
மாலையில் உலரும்
பூவும் நீயும்
ஓரினம்
வேய்யோன் விடியலில்
விரிந்தன பூக்கள்
காதலன் இவனால்
அலர்ந்தது உன்முகம்
காரணம் நம்காதல்


இன்று
அழகின் வடிவாய்
அச்சத்தின் உருவாய்
மானும் நீயும்
ஒருஜாதி

வேடனின் வரவால்
ஒதுங்கிய மான்கள்
கலைமான் என்னால்
விரைவாய் மறைந்தாய்
காரணம் உன்கல்யாணம்

ஓவியா
29-03-2007, 07:44 AM
கன்னிக்கவியா!!!

வாழ்த்துக்கள்.

ஆதவாவின் விமர்சனம் கண்டு தொடருவேன்.

ஷீ-நிசி
29-03-2007, 10:20 AM
மிக் நல்ல முயற்சி நண்பரே! அருமையாக வருகிறது வார்த்தைகள்! வாழ்த்துக்கள்!

அறிஞர்
29-03-2007, 03:49 PM
நேற்று பூ
இன்று மான்....

வேடனை கண்டு ஒளியும் மான்....
காதலனை கண்டு ஒளியும் கல்யாண பெண்....

இன்னும் வார்த்தைகள் மெருகேறட்டும்...
கலக்குங்கள்.. அன்பரே..

அமரன்
29-03-2007, 03:53 PM
முதல்கவிக்கு முதலில் கருத்துச்சொன்ன ஓவியா அக்காவுக்கும், ஷீ-நிஷிக்கும், அறிஞருக்கும் என் நன்றிகள்.

ஆதவா
29-03-2007, 04:30 PM
கைகொடுங்க நரன்...............

வாழ்த்துக்கள். கன்னிக் கவிதை போலவா இருக்கிறது?,, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.. இதை இருவகையிலும் பொருந்தலாம்...
முதல் வெற்றி உங்களுக்கு முற்றிலும் வெற்றியே! வார்த்தைகள் அருமை....

கவிதை ஏது என்று கேள்வியான கவிதை இன்னும் அழகு... மரத்துப்போன குருதியில் காதலும் இல்லை ; காதலின்றி கவிதையுமில்லை/// அழகிய சிந்தனை.

சின்ன மாற்றம் :

இதயத்தின் ஓரறை
குருதியின் கருவறை

என்று கொடுத்திருக்கலாம்... இருப்பினும் அர்த்தம் மாறவில்லை..

இரண்டாம் கவிதையில்.. வார்த்தை பிரயோகம் மிக அருமை.

வேய்யோன், அலர்ந்தது, உலர்ந்தது, போன்றவைகள் உதாரணம்...

காலையில் அலர்ந்து
மாலையில் உலரும்
பூவும் நீயும்
ஓரினம்

உவமைகள் நல்ல பொருத்தம் என்றாலும் காதலியை மாலையில் உலர வைத்தல் நன்றாக இருக்காது :D :D . என்ன செய்ய காதலனைக் கண்டால் மட்டுமே மலரும் பூவோ காதலி/!!

வேய்யோன் விடியலில்
விரிந்தன பூக்கள்
காதலன் இவனால்
அலர்ந்தது உன்முகம்

சூரியனின் உதயத்தில் பூக்கள் விரிந்தது போல காதலனின் உதயத்தில் முகமலர்கிறாள் காதலி....
இவனால் ??? என்னால் என்று போட்டிருக்கலாமோ?

காரணம் நம்காதல்


இன்று


அழகின் வடிவாய்
அச்சத்தின் உருவாய்
மானும் நீயும்
ஒருஜாதி

முன்பு சூரியனைப் பார்த்து மலரும் பூவை உவமையாகக் கொண்டது அழகு... மானை ஒப்பிடல் அதினினும் அழகு.

வேடனின் வரவால்
ஒதுங்கிய மான்கள்
கலைமான் என்னால்
விரைவாய் மறைந்தாய்

காரணம் உன்கல்யாணம்
வேடன் என்பவன் கல்யாணம் செய்யப்போகிறவன். அவனின் வரவில் கலைமானான என்னை விட்டு மறைந்தாய்........ அடட!!!! என்ன அழகான உவமைப் பொருத்தம்!!!

நரன்... இது முதல் கவிதை என்று சொல்லாதீர்கள்...

சரி குறையென்ன?
கொஞ்சம் கூர் படுத்தவேண்டும்... அதாவது நீங்கள் முதல் நிலையைத் தாண்டிவிட்டீர்கள்... அழகு படுத்தப்பட்ட தங்கத்தை மீண்டும் பாலீஸ் போடுவதில்லையா? அது போலத்தான். வார்த்தைகள் அழகாய் விழுகிறது. வரியமைப்புகளும் ஓகே! ....

இன்னும் எழுதுங்கள்.... உங்களின் கவிதை உங்களுக்கு என்றும் திருப்தி அளிக்கக் கூடாது.. ஆம். அப்போதுதான் நிறைய எழுத வரும்........

வாழ்த்துக்கள் நண்பரே!!

(நரன்!! இங்கே ஜாம்பாவன் சச்சின்கள் இருக்கும்போது ஊத்தப்பாவான என்னை ஏம்ப இழுக்குற... இளசு அண்ணா உங்கள் கவிதையைப் பார்த்தால் பூரித்துவிடுவார்.... ஹி ஹி எங்கள் மாணாக்கன்..... :ernaehrung004: )

விகடன்
29-03-2007, 04:32 PM
காதல், கல்யாணத்தில் முடிந்தது.
ஆமாம்.
என் காதல் அவன் கல்யாணத்தில்...

ஆதவா
29-03-2007, 10:09 PM
காதல், கல்யாணத்தில் முடிந்தது.
ஆமாம்.
என் காதல் அவன் கல்யாணத்தில்...


ஜாவா!!! கைகொடுங்க.... மூனு வரியில சும்மா பிச்சு உதறீட்டீங்க....
அருமையான கவிதை,, இன்னும் தொடரவும்...

வாழ்த்துக்கள்...
(என்னோட கவிதை எழுதுவது எப்படி என்ற திரியைப் பார்த்து எழுதியிருந்தால் குருதட்சனை தரவும்... :sport-smiley-018: )

இளசு
29-03-2007, 10:09 PM
எந்த மண்ணில் எந்த வைரம் புதைந்திருக்கிறதோ..
எவர் அறிவார்?

குருதியின் கடலில்
நித்தம் வாழ்ந்ததால்
மரத்தது இதயம்..

இந்த வரிகளின் உண்மை, ஆழம்..
சுயவாழ்வுக்கும், சமூகப்போராட்டத்துக்கும்
ஒரே உவமை சொன்ன உபாயம்..

இந்த வரிகள் போதும் நரன்..
உங்களைக் கட்டித் தழுவிப்பாராட்ட...

ஆதவாவின் விரிவான பார்வைக்கு மிகவும் உகந்த கவிதையை
கன்னிக்கவிதையாய் தந்த உங்களை இருகரங்களால் அணைத்து
வரவேற்கிறேன்.. வாழ்த்துகிறேன்..

நிறைய நிறைய வாசியுங்கள்..
நிறைய எழுதுங்கள்....
எழுதியதை வாசித்துச் செப்பனிடுங்கள்.. செதுக்குங்கள்..
பின் பதியுங்கள்..
பிம்பம் காட்டும் கண்ணாடியாய் நாங்கள் உண்டு..
மேலும் அழகாக திருத்தங்கள் சுட்ட...


வளர்வோம் சேர்ந்து..
வாழ்த்துகள் நரன்!

அமரன்
30-03-2007, 08:31 AM
ஆதவன்,இளசு அண்ணா உங்கள் கருத்து என்னை இன்னும் மேம்படுத்த உதவுகின்றது. என் கவியின் ஆசான் நீங்கள் இருவரும்தான். நன்றி

poo
02-04-2007, 09:43 AM
பாராட்டுக்கள் நரண்..

இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்!!

ஓவியா
19-05-2007, 02:45 PM
ஆதவாவின் விமர்சனத்தின் பின் கவிதை இன்னும் அழகாக மின்னுகின்றது.

நன்றி

அமரன்
19-05-2007, 02:58 PM
ஆதவாவின் விமர்சனத்தின் பின் கவிதை இன்னும் அழகாக மின்னுகின்றது.

நன்றி
நன்றி ஓவியா.