PDA

View Full Version : மீண்டும் ஞானி - பாகம் 3



leomohan
28-03-2007, 07:23 PM
1. கல்வி

நீண்ட நாட்களுக்கு பிறகு ஞானி வீட்டுக்கு வந்திருந்தான். பேசிக் கொண்டிருந்தோம்.

என்ன ஞானி இளைத்துவிட்டாயே என்றேன்.

சம்பிரதாயமாக பேசாதே என்று கடிந்தான்.

சட்டென்று வாயை மூடிக் கொண்டேன். திட்டு வாங்காமல் என்ன பேசலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது என் மகன் கணித புத்தகத்துடன் வந்தான்.

அப்பா இந்த கணக்கு வரமாட்டேங்குது என்றான்.

எனக்கும் கணித பாடத்திற்கும் காத தூரம்.

ஞானி மாமாவிடம் கேள். அவர் கணக்கில் புலி என்று சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தேன்.

என்ன எனக்கு கணக்கு வராது என்ற நினைப்போ என்றான்.

நமட்டுச் சிரிப்பை வாயில் முழுங்கினேன்.

மகனிடமிருந்து நோட்டு புத்தகம் வாங்கி மடமடவென்று கணக்கு எழுதி விளக்கினான்.

தாங்க்யூ அங்கிள் என்று சொல்லி என் மகன் விலகியதும் ஆச்சர்யம் அடக்க முடியாமல் எப்படி ஞானி என்றேன்.

இப்போது தான் இதே பாடத்தை அடுத்த தெருவில் இருக்கும் ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுத்தேன் என்றான்.

அட ட்யூஷன் எல்லாம் எடுக்கிறாயா என்றேன் ஆச்சர்யத்துடன்.

ஆம். மாலை நேரங்களில் சிலர் வீட்டுக் சென்று பாடம் சொல்லிக் கொடுக்கிறேன். காலை நேரங்களில் மாணவர்கள் வீட்டுக் வருகிறார்கள் என்றான் மனைவி கொண்டு வந்த காபியை அருந்தியவாறே.

நல்ல வருமானம் என்று சொல் என்றேன் சிரிப்புடன்.

மறுபடியும் மனிதன் மாதிரி பேசுகிறாயே என்றான் காட்டமாக.

எனக்கு டிமோஷன் ஆனது போல இருந்தது. ஏன் என்றேன் குழப்பமாக.

நமக்கு தெரிந்த விஷயங்களை நாலு பேருக்கு சொல்லித் தரவேண்டும். கல்வியை வியாபாரமாக்க நான் ஒன்றும் மனிதன் இல்லை. காப்பி கோப்பையை வைத்துவிட்டு விலகினான்.

ஞானி அங்கிள் பெஸ்ட். அப்பா வேஸ்ட்டு என்று என் மகன் என் மனைவியிடன் சொல்வது காதில் கேட்டது. தெரு ஓரத்தில் ஞானி அவன் சைக்கிளில் அடித்த மணி கிண் என்று என் மனதில் அடித்தது.

வெட்கி தலைகுனிந்தேன்.

அறிஞர்
28-03-2007, 07:27 PM
ஞானி மூலம் சொல்லித்தரும் பாடம் அருமை மோகன்...

புத்தியான பேச்சு.. அடுத்தவரை மதித்தல்.. தெரிந்ததை சொல்லி தருதல்.. முக்கியம்...

இளசு
28-03-2007, 07:28 PM
1
நமக்கு தெரிந்த விஷயங்களை நாலு பேருக்கு சொல்லித் தரவேண்டும். .


வாழ்த்துகள் மோகன்.. மீண்டும் ஞானியை அழைத்து வந்ததற்கு..

புத்தகத்தில்படித்தால் 20 சதம் நிற்கும்..
நேரில் பார்த்தால் 40 சதம் நிற்கும்..
ஆழ்ந்து விவாதித்தால் 50 சதம் நிற்கும்..
செய்து பார்த்தால் 70 சதம் நிற்கும்..

கற்பித்தால் மட்டுமே 90 சதம் நிற்கும்....

கற்பிப்பதில் ஒரு அழகான சுயலாபம் இது...

காசு-பணம் எல்லாம் இந்த லாபத்துக்கு முன்?

ஞானிக்கு என் அன்பைச் சொல்லவும்..
அடிக்கடி மன்றம் வரவும் சொல்லவும்..

leomohan
28-03-2007, 07:33 PM
நன்றி அறிஞரே. நன்றி இளசு.

ஞானியை பற்றி நிறைய எழுத ஆவலிருந்தாலும் மனிதனான நான் மனிதனுடைய சராசரி வாழ்கை வாழ்வதால் materialistic வட்டத்தில் சுழன்று வீணனாகி வருகிறேன். விரைவில் விடியும். :icon_wink1:

ஆதவா
28-03-2007, 07:36 PM
வெகு அருமை மோகன் அவர்களே!!..

அறிஞர், இளசு அண்ணா சொன்னபின் நான் என்ன சொல்ல... நமக்குத் தெரிந்ததை காசு பார்க்காமல் சொல்லித் தரவேண்டும்.... இதுவே அடிப்படை கரு. என்னுள் ஏற்கனவே விதைக்கப்பட்ட கரு. உங்களின் வலைத்தளத் தொகுப்பும் அம்மாதிரிதான்..

நாலுபேருக்கு நாம் அறிந்த விஷயம் தெரிவதில் சொல்லிக்கொடுப்பதில் தவறில்லை; மாறாக அறிவு ஒன்றே வளரும்... இது நான் கண்ட அனுபவமான உண்மை..

காசுக்கென்று பார்த்திருந்தால் இழிச்செயல்கூட இனிமைதான்....

ஞானியின் தோற்றத்திற்கு வந்தனங்கள்... முடிவின்றி செல்ல வேண்டுமென்பதுவே என் அவா...

(அட நிறைய கவிதைக்கரு கிடைக்கும் பாருங்க.. :D )

leomohan
28-03-2007, 07:39 PM
நன்றி ஆதவா.

உங்கள் பலவிதமான கோணங்களில் யோசிக்கும் விதத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன். இத்தனை சிறிய வயதில் பலவித பரிமாணங்கள் அருமை.

உங்களுக்கு இத்தனை எழுத நேரம் கிடைப்பதை கண்டு சற்று பொறாமையாக இருப்பதுண்டு.

ஞானியால் உங்கள் கவிதைக்கு கரு கிடைத்தால் அது என் பாக்கியமே.

ஆதவா
28-03-2007, 07:47 PM
நன்றிங்க மோகன்... ஞானிக்கு முன்னெல்லாம் நான் வெறும் தோணிதான்... உங்களின் சில ஆக்கங்களைக் கண்டு நான் பொறாமை பட்டதுண்டு.......... மன்றம் வந்ததும் நீங்கள் செய்த உதவி மறக்க முடியாதது..
---------------------
பொதுவாக நான் பகலில் பதிவுகள் இடுவதில்லை.... வருவேன்... அடுத்த நிமிடத்தில் log out தான்... இரவு நேரம் ஒதுக்குவேன்... இருப்பினும் பாருங்கள்.. இன்று வேலை......... ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது. மன்றமும் விடமுடியவில்லை...
-----------------------------

தற்சமயம் கண்கள் எப்படி இருக்கின்றன ?......... வெகுநேரம் உலாத்துவதால்தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். எனக்கும் இப்படித்தான்.. இன்று தூங்க முடியாது. நாளைக்கு ஒரே எரிச்சலாக கண்வலியாகவே இருக்கும்.............. என்ன செய்ய.?

கால்வயித்து கஞ்சிக்கு கால்கடுக்க வேலை..

ஓவியா
28-03-2007, 07:54 PM
நமக்கு தெரிந்த விஷயங்களை நாலு பேருக்கு சொல்லித் தரவேண்டும்

ஞானியின் பதிவு என்றாலே எது ஒரு சுவரஸ்யமான விசயம் இருக்கும்.


சில நாட்டில் கல்வி அருமையான வியாபாரமாகிவிட்டது. நல்ல வருமானம்

அருமையான பதிவு மோகன். மிக்க நன்றி.


விரைவில் விடியும்.
வாழ்த்துக்கள் :icon_wink1:

leomohan
28-03-2007, 07:57 PM
நன்றி ஓவியா. வளரும் நாடுகளில் தான் கல்வி வியாபாரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். உங்கள் நாட்டில் எப்படி

நன்றி ஆதவா. ஆம். ஆதவா நம் கண்கள் மிகவும் முக்கியமானவை. நம்மை போன்றவர்கள் படிப்பதற்கும் தொலைகாட்சி பார்ப்பதற்கும் மேலும் கணினியில் வேலை செய்வதற்கும் ஆக படிப்பு பொழுதுபோக்கு வேலை என்று அனைத்து விஷயங்களிலுமே கண்களை நம்பி இருப்பதால் கண்களை வெகு காலம் காத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம்

ஓவியா
28-03-2007, 08:02 PM
நன்றி ஓவியா. வளரும் நாடுகளில் தான் கல்வி வியாபாரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். உங்கள் நாட்டில் எப்படி

நன்றி ஆதவா. ஆம். ஆதவா நம் கண்கள் மிகவும் முக்கியமானவை. நம்மை போன்றவர்கள் படிப்பதற்கும் தொலைகாட்சி பார்ப்பதற்கும் மேலும் கணினியில் வேலை செய்வதற்கும் ஆக படிப்பு பொழுதுபோக்கு வேலை என்று அனைத்து விஷயங்களிலுமே கண்களை நம்பி இருப்பதால் கண்களை வெகு காலம் காத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம்

எங்கள் நாடு மட்டும் என்ன விதி விலக்கா? இல்லையே, அதே கதை தான் அங்கும். மியன்மார், கம்போடியா சொமலியா, மாலித்தீவு, ஸ்ரீலங்க, இந்தியா, சிங்கை, ஃபிலிபீன்ஸ், இந்தோனேசியா என்று பல நாடுகளிலிருந்து மாணக்கள் வந்த வண்ணம்தான்.

கொசுரு: எங்க நாடும் வளாரும் நாடுதான்.

leomohan
28-03-2007, 08:15 PM
எங்கள் நாடு மட்டும் என்ன விதி விலக்கா? இல்லையே, அதே கதை தான் அங்கும். மியன்மார், கம்போடியா சொமலியா, மாலித்தீவு, ஸ்ரீலங்க, இந்தியா, சிங்கை, ஃபிலிபீன்ஸ், இந்தோனேசியா என்று பல நாடுகளிலிருந்து மாணக்கள் வந்த வண்ணம்தான்.

கொசுரு: எங்க நாடும் வளாரும் நாடுதான்.

ஐயோ நான் கேட்டது இப்போது இருக்கும் நாட்டில்

ஓவியா
28-03-2007, 08:35 PM
ஐயோ நான் கேட்டது இப்போது இருக்கும் நாட்டில்

ஓ அதுவா, இங்கே காலங்காலமாக 1ம் தர விற்பனையே கல்விதான்.

என்று ஃஒக்ஸ்ஃபர்ட் அகராதி வந்ததோ, அன்றில் இருந்து இன்று வரை பிரிதானியாவில் கல்வியின் பணவரவு முதல் 5 நிலையில் தான் உள்ளது.

போன வருடம் இங்கிலாந்தில் மட்டும் மாணாக்களின் (வருகை) எண்ணிக்கை 5 லட்சமாம்.

எஃடுகேசைன் இஸ் தெ பேஸ்ட் ஃபிசுனஸ்.

guna
29-03-2007, 03:08 AM
அட டா, நன்றிகள் மோகன் சார், மீண்டும் ஞானியை மன்றம் அழைத்து வந்தமைக்கு..
ஞானியின் கருதுக்களை படிப்பதில் அலாதிப்ப்ரியம் குணாக்கு..
அடிக்கடி வர சொல்லுங்கள்..

pradeepkt
29-03-2007, 05:47 AM
அடடே.. ஞானி திரும்ப வந்திட்டாரா...
செயல்கள் மூலம் விளக்கும் படிப்பு வெகு நாட்களுக்கு மனதில் நிற்கும் என்பது விதி. ஞானி அதில் தேர்ந்தவர்.

leomohan
29-03-2007, 06:19 AM
நன்றி ப்ரதீப் நன்றி குணா.

crisho
29-03-2007, 07:52 AM
ஞானி ஸ் த பெஸ்ட்.... நன்றி மேகன்!

ஞானியின் இன்னுமொரு வரவை வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்...

leomohan
03-04-2007, 04:14 PM
ஞானி ஸ் த பெஸ்ட்.... நன்றி மேகன்!

ஞானியின் இன்னுமொரு வரவை வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்...

நன்றி கிரெஷோ.

leomohan
03-04-2007, 04:26 PM
2. சோம்பேறித்தனம்

கணினி பெட்டி பழுதாகிவிட்டது. பிரித்துப்போட்டு உள்ளே தலையை விட்டு நோண்டிக் கொண்டிருந்தேன். ஞானி மின்னல் போல் உள்ளே நுழைந்தான்.

வா ஞானி. நலமா?

நலத்துக்கு குறைவில்லை. என்ன செய்கிறாய்?

அதுவா கம்ப்யூட்டர்ல பிரச்சனை. சரி பார்க்கிறேன்.

உனக்கு கம்ப்யூட்டர் சரி பார்க்க தெரியுமா?

தெரியாது. சும்மா முயற்சி தான்.

தெரியாத வேலையை ஏன் செய்கிறாய்?

பின்னே இன்ஜினியரை கூப்பிட்டா 500 ரூபாய் கேட்கறான்.

கொடுத்துட்டு போயேன். அவன் பிழைப்பில் ஏன் மண் அள்ளி போடுகிறாய்? ஒவ்வொரு நுட்பமான வேலையை செய்ய விஷயம் தெரிந்தவர் இருக்கிறார்கள். உன் வேலையை இன்னொருவர் செய்தால் ஒப்புக் கொள்வாயா?

என்ன ஞானி. நம்ம வேலையை நாமே செய்யறது தப்பா?

சோபாவில் காலை நீட்டி அமர்ந்துக் கொண்டு தூரத்திலிருந்து தொலைகாட்சி பெட்டியை சுலபமாக பயன்படுத்த சோம்பேறித்தனைத்தை அதிகரிக்கும் ஒரு பொருள் - ரிமோட், அதை கூட உன் மனைவியிடம் எடுத்து தர சொல்கிறாயே - அதை நீயே செய்யலாம்.

6 முட்டை வாங்க வேண்டும் என்றாலும் எதிர் கடைக்கு போன் போட்டு கடைக்காரரை எடுத்து வர சொல்கிறாயே - அதை நீயே செய்யலாம்.

ஞாயிறு மதியம் பின் தெருவில் இருக்கும் ஓட்டலுக்கு போன் போட்டு சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு வரச் சொல்கிறாயே - அதை நீயே செய்யலாம்.

கேவலம் தண்ணி குடிக்க கூட உன் மகனுக்கு குரல் கொடுக்கிறாயே அதையாவது நீயே செய்யலாம்.

இதையெல்லாம் நீயே செய்யாமல் உனக்கு தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்கிறாய் நீ?

அப்பாடா. மழை ஓய்ந்த மாதிரி இருந்தது. சரி ஞானியோட பஞ்ச் டயலாக் முடிந்துவிட்டது. மின்னல் வேகத்தில் மறைந்துவிடுவான் என்று பார்த்தால் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

என்ன என்பது போல் பார்த்தேன். இன்னும் பாட்டு முடியவில்லையா என்று நினைத்துக் கொண்டேன்.

காபி என்றான்.

ஓ சாரி ஞானி. மறந்தே போயிட்டேன். அம்மா ஞானிக்கு ஒரு காபி கொண்டுவா என்று அடுப்பறை நோக்கி என் மனைவிக்கு குரல் கொடுத்தேன்.

எரித்துவிடும் பார்வையில் என்னை பார்த்தான்.

சரி சரி. நானே போய் காபி போட்டு கொண்டு வரேன் என்று சொல்லி எழுந்தேன்.

விரைவாக விஷயம் கற்பவர் இருக்கும் இடத்தில் ஞானிக்கு இடம் இல்லை என்று சிரித்தபடியே நழுவினான்.

ஓவியா
03-04-2007, 04:37 PM
சோம்பேரித்தனமும் சிக்கனமும்..........பதிவு பலே

வாழ்க்கை பாடம் நல்லவே படிக்கிறீங்க மோகன்.

நல்ல சிந்தையாளர் நீங்கள். பாராட்டுக்கள்.

இன்னும் அதிகம் எழுதுங்க.

leomohan
03-04-2007, 04:48 PM
நன்றி ஓவியா. ஞானியிடமிருந்து நிறைய கற்றாலும் அதில் சிலவற்றை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறேன். செயல் படுத்தக் கூடிய மற்றவர்களாவது படித்து பயன்பெறட்டுமே என்ற நப்பாசை தான்.

leomohan
03-04-2007, 05:12 PM
3. நரை

என்னங்க தலை நல்லா நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. போய் டை பண்ணிகிட்டு வாங்க என்று ஒரு நாள் மாலை நச்சரித்தாள் என் மனைவி.

அட டையெல்லாம் நான் பண்ணிக்க மாட்டேன். நான் இயற்கையா தான் இருப்பேன். நான் ஞானியோட சிஷ்யன். நாளைக்கு ஞானியாக போறவன். சே. போ என்றேன்.

நீங்களாவது ஞானியாகறதாவது என்று நக்கலாக சொல்லிவிட்டு அடுப்பறைக்குள் நுழைந்தாள்.

எதிர்வீட்டு பெண்மணி திடீரென்று உள்ளே நுழைந்தார். கட்டுக்கு அடங்காமல் வெளியே வந்து விழும் தொந்தியை மூச்சு பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டேன். வாங்க, வாங்க உட்காருங்க.

எங்க வீட்ல டிவி மக்கர் பண்ணுது. சட்டி ஒலி பாக்கனும் என்றார் அந்த பெண்மணி.

அதுக்கு என்ன. உட்காருங்க என்று சொல்லி தொலைகாட்சி துவக்கிவிட்டு சமையலறைக்குள் விரைவாக சென்று தண்ணீர் குவளை எடுத்து வந்து அவர் முன் வைத்தேன்.

என்ன சார் இல்லையா வீட்ல என்றேன்.

அவரா. டை அடிச்சிட்டு வர போயிருக்காரு. நாளைக்கு ஏதோ பெரிய மீட்டிங்கா.

அட டை அடிப்பாரா அவர்? அடப்பாவி மனிதா உன் முடியை பார்த்து இத்தனை வயதிலும் என்ன இளமை என்றெல்லவா நினைத்திருந்தேன் என்று மனதுக்குள் திட்டினேன்.

பின்னே. நாப்பது வயசில் நரைக்காம இருக்குமா? உங்களுக்கு எத்தனை வயது? என்றார் என்னிடம் சட்டென்று.

வரக்கூடாத கேள்வி என்று நினைக்கும் போதே வந்த கேள்வி. முப்பதததததததைந்து என்றேன். உள்ளே இருந்து என் மனைவி...........தெட்டு என்று முடித்தாள்.

ஹிஹி எட்டு என்று முடித்தேன்.

புயலை கிளப்பிவிட்டு தொடர் முடிந்ததும் வீடு திரும்பினார் அந்த பெண்மணி.

கையில் சப்பாத்தி கட்டையுடன் என் மனைவி பத்திரகாளியாக வெளியே வந்தாள். 38ஐ 35ன்னு சொல்றீங்க, தம் கட்டி வயித்தை இழுத்து பிடிச்சி வச்சிருக்கீங்க, தண்ணி எடுத்திட்டு வர துள்ளி ஓடி வர்றீங்க. இதுல ஞானி ஆவப்போரிங்களா. உங்களை விட 2 வயது பெரியவர் அவரே டை அடிச்சிக்கிறார்ல. போய் டை அடிச்சிட்டு வாங்க என்றாள் காட்டமாக.

பூனை மாதிரி உள்ளே சென்று சட்டை போட்டுக் கொண்டு முடி திருத்தும் நிலையத்திற்கு கிளம்பினேன்.

எதிர்பட்டான் ஞானி. நடந்ததை சொன்னேன்.

ஹாஹா வென்று சிரித்தான்.

நான் இருக்கும் இடத்திலிருந்து நீ இருக்கும் இடம் ரொம்ப தூரம் என்று சொல்லி பறந்தான்.

அவன் போன திசையை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆதவா
03-04-2007, 05:16 PM
அருமைங்க மோகன்.. நாம் செய்யவேண்டிய வேலையும் செய்யவேண்டாத வேலையும் புட்டு புட்டு வைத்திருப்பது நன்றாக இருக்கிறது....
ஆனால் என் அப்பா சொல்வார்... ஒரு விஷயத்தையும் விடாதே.. நன்றாக நோண்டு என்பார்... அதன் படி பார்த்தால் நான் நோண்டியதால்தான் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்... இந்த விஷயத்திற்கு இவர் இருக்க நாம் எதற்கு நோண்டவேண்டும் என்ற கருத்து இருந்திருந்தால் நான் இன்று தமிழ்மன்றமே வந்திருக்க முடியாது... ஆகையால் ஞானியின் பொதுக்கருத்தான செய்யக்கூடிய வேலைக்கு நான் டூ விடுகிறேன்...

நன்றிங்க மோகன்...

leomohan
03-04-2007, 05:50 PM
அருமைங்க மோகன்.. நாம் செய்யவேண்டிய வேலையும் செய்யவேண்டாத வேலையும் புட்டு புட்டு வைத்திருப்பது நன்றாக இருக்கிறது....
ஆனால் என் அப்பா சொல்வார்... ஒரு விஷயத்தையும் விடாதே.. நன்றாக நோண்டு என்பார்... அதன் படி பார்த்தால் நான் நோண்டியதால்தான் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்... இந்த விஷயத்திற்கு இவர் இருக்க நாம் எதற்கு நோண்டவேண்டும் என்ற கருத்து இருந்திருந்தால் நான் இன்று தமிழ்மன்றமே வந்திருக்க முடியாது... ஆகையால் ஞானியின் பொதுக்கருத்தான செய்யக்கூடிய வேலைக்கு நான் டூ விடுகிறேன்...

நன்றிங்க மோகன்...

நோண்டி கற்றுக் கொள்வதில் ஞானிக்கு ஏதும் பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இங்கு ஞானி என்ன சொல்கிறான் என்றால் நம் வேலையை நாமாக செய்ய வேண்டும் என்று தெரியாத விஷயங்களில் கற்காமல் இறங்குவதை விட முதலில் நமக்கு தெரிந்த விஷயங்களை சோம்பேறித்தனத்தால் செய்யாமல் இருப்பதை விடுக்க வேண்டும் என்றே சொல்ல வருகிறான் நினைக்கிறேன்

ஆதவா
03-04-2007, 06:12 PM
ஆ!!! அதுமிக சரிதான்.... மிக மிக சரி என்றாலும் கதைக்கரு என்ன சொல்கிறதென்றால் (என் பார்வைப்படி) தெரிந்தவேலையை ஒழுங்காக செய்! தெரியாத வேலைக்கு செல்லாதே! அதற்கு ஆள் இருக்கு... என்று....

தவறிருந்தால் மன்னிக்க.... இது என் கருத்து மட்டுமே

leomohan
03-04-2007, 07:00 PM
ஆ!!! அதுமிக சரிதான்.... மிக மிக சரி என்றாலும் கதைக்கரு என்ன சொல்கிறதென்றால் (என் பார்வைப்படி) தெரிந்தவேலையை ஒழுங்காக செய்! தெரியாத வேலைக்கு செல்லாதே! அதற்கு ஆள் இருக்கு... என்று....

தவறிருந்தால் மன்னிக்க.... இது என் கருத்து மட்டுமே

நன்றி ஆதவன். உங்கள் கருத்திற்கிணங்க தலைப்பை சோம்பேறித்தனம் என்று மாற்றிவிட்டேன்.

sinnavan
03-04-2007, 11:06 PM
ஞானி மூலம் நல்ல பாடங்கள்.....

நன்றி மோகன் சார்.

ஓவியா
03-04-2007, 11:10 PM
என்னாது சட்டி ஒலியா.....நல்ல உஷாராதான் இருகீங்க. பலே

நரை...ஹி ஹி ஹி

பதிவு அருமையோ அருமை.

crisho
04-04-2007, 12:01 PM
சோம்பேறித்தனம்'னு போட்டு நா செய்றதெல்லாம் புட்டு புட்டு வைச்சிட்டீங்க...

திருந்த முயற்சிக்கிறேன்!! :D

leomohan
04-04-2007, 12:11 PM
சோம்பேறித்தனம்'னு போட்டு நா செய்றதெல்லாம் புட்டு புட்டு வைச்சிட்டீங்க...

திருந்த முயற்சிக்கிறேன்!! :D

நாம எல்லோரும் செய்வது தானே. அதை பார்த்து தான் ஞானிக்கு யோசனை தோன்றியதோ என்னவோ.

:icon_clap:

leomohan
07-04-2007, 11:30 AM
4. வெளிநாட்டில் வேலை

எனக்கும் என் மனைவிக்கு பெரிய வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனக்கு வெளிநாட்டில் ஒரு வேலை வாய்ப்பு கிடைத்திருந்தது. நான் போகலாம் என்று சொல்ல அவள் போக வேண்டாம் என்று சொல்ல ஒரு வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது.

உங்களுக்கு தேசப்பற்றே இல்லையா - என் மனைவி.

அப்ப வெளிநாட்டுல இருக்கற நம்ம ஊர்காரங்களுக்கு எல்லாம்
தேசப்பற்று இல்லையா? - நான்

நான் சொந்த பந்தத்தையெல்லாம் விட்டுட்டு வரமாட்டேன்.

இப்ப மட்டும் தின போய் உட்கார்ந்துக்குறோமா யார் வீட்டிலையாவது?

நம்ம ஊர்ல படிச்சா தான் பிள்ளைங்க நம்ம கலாச்சாரத்தை கத்துப்பாங்க.

என்ன வாழுது இங்கே கலாச்சாராம். அங்க போனா நல்ல படிப்பு கிடைக்கும் பிள்ளைகளுக்கு.

அப்ப இங்கே படிச்சிட்டு ஃபாரீன் போலையா மத்தவங்களெல்லாம்.

நல்ல லைஃப் ஸ்டைல் கிடைக்கும் - நான்.

எனக்கு அந்த லைஃப் ஸ்டைலெல்லாம் வேண்டாம் - அவள்.

இப்படியாக போய் கொண்டிருந்தது. ஞானி உள்ளே நுழைந்தான்.

குடும்ப வக்கீல் குடும்ப டாக்டர் போல எங்களுடைய குடும்ப ஆலோசகர் ஞானி.

நாங்கள் சொன்னதை கேட்டதும் ஒரு காகிதத்தில் எதையோ எழுதினான்.

என்னை பார்த்து கேட்டான் - பணக்காரன் ஆவதற்காக வெளிநாட்டிற்கு போகிறாயா? நம் நாட்டில் இருந்தே பலர் பணக்காரர் ஆகியிருக்கிறார்கள். எப்படி என்று பார். வெளிநாட்டில் வேலை செய்கிறேன் எனும் பெருமைக்காக போகிறாயா? நீ பெருமை படுவதை பார்த்து சந்தோஷம் படும் அளவிற்கு உன் சுற்றம் பக்குவம் அடைந்துவிட்டதா என்று பார்?

இதை சொல்லிவிட்டு எழுந்தான் ஞானி. அவன் சொன்னது நன்றாக புரிந்தது. ஆனாலும் இன்னும் அந்த முத்திரை வசன முன்னுசாமி வரவில்லையே என்று பார்த்தேன். பொட்டில் அடித்தது போல் எதையாவது சொல்வானே என்று காத்திருந்தேன்.

அவன் கிறுக்கிய காகிதத்தை தந்துவிட்டு விலகினான்.

நீ இருக்கும் இடமும் இருக்க விரும்பம் இடமும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இரண்டிலும் மாறாமல் இருப்பது நீ மட்டும் தான் - என்று எழுதியிருந்தது.

leomohan
07-04-2007, 12:25 PM
5. மனோவசியம்

The Practice of Hypnotism எனும் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தேன். ஞானி உள்ளே நுழைந்தான்.

வா ஞானி.

நலமா?

நலம் தான்.

என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?

இதோ -- என்று புத்தகத்தை காட்டினேன்.

அவன் புரட்டிக் கொண்டிருந்தான். மனோவசியம் மூளை சலவை இதெல்லாம் சாத்தியமா என்று ஆவலாக கேட்டேன்.

லட்சம் பேர் இருக்கும் கூட்டத்தை தன் பேச்சால் மயக்கி ஒரே நேரத்தில் கைதட்ட வைக்கிறானே அரசியல் வாதி அவன் பெரிய மனோதத்துவ நிபுணன். தன் குடும்பம் மனைவி மக்கள் இவர்கள் என்ன ஆவார்கள் என்று கூட யோசிக்காமல் ஒரு தலைவன் சொல்கிறான் என்று தீக்குளிக்கிறார்களே பல முட்டாள்கள் அந்த தலைவன் ஒரு மனோதத்துவ நிபுணன். ஒரு சொட்டு திரவம் ஊற்றினால் ஒரு பக்கெட் துணியை வெளுக்கலாம் என்று விளம்பரம் செய்து ஏமாற்றுகிறானே அந்த வியாபாரி அவன் செய்வது மூளை சலவை தான்.

எதிர்கட்சி ஊடகங்களில் நம் நாட்டில் பட்டப்பகலில் கொள்ளையும் கொலையும் கற்பழிப்பும் நடப்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்களே அவர்கள் செய்வதும் மூளை சலவை தான். ஆளுங்கட்சி ஊடகத்தில் நம் நாட்டில் தெருக்களில் பாலும் தேனும் ஓடுவதாகவும் அனைவரும் தங்கமும் வெள்ளியும் சாப்பிடுவதாகவும் சொல்கிறார்கள் அவர்கள் மனோதத்துவ நிபுணர்கள் தான்.

இவையெல்லாம் தெரிந்தும் சாத்தியமா என்று கேட்கிறாயே?

அது சரி ஞானி, இதிலிருந்து எப்படி தப்புவது?

ஏன் தப்ப வேண்டும்?

அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் சுயநலத்தினால் தானே அவ்வாறு மூளைச்சலவை செய்கிறார்கள். அதிலிருந்து தப்ப வேண்டாமா?

ஆம். அவசியம் தப்ப வேண்டும்.

அதற்கு என்ன செய்வது?

அதையும் நானே சொல்லிவிட்டால் நான் உன்னை மூளை சலவை செய்ததாகிவிடாதா? போ, நீயே அதற்கு ஒரு வழி கண்டுபிடி.

பிறகென்ன செய்தான் என்று வெகுநாட்களாக ஞானி படிக்கும் உங்களிடமும் சொல்ல வேண்டுமா? மின்னல் போல் காற்றில் மறைந்தான் ஞானி.

ஓவியன்
07-04-2007, 12:47 PM
மோகன் உங்கள் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை - ஆனால் ஒருவர் ஒரு கருத்துச் சொல்வதே மூளைச் சலவை என்று நீர் கூறுவதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படித் தான் அது மூளைச் சலவை என்று எடுத்துக் கொண்டாலும் அது சரியா தவறா என்று ஆராய வேண்டியது நம் கடமை.

leomohan
07-04-2007, 01:03 PM
மோகன் உங்கள் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை - ஆனால் ஒருவர் ஒரு கருத்துச் சொல்வதே மூளைச் சலவை என்று நீர் கூறுவதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படித் தான் அது மூளைச் சலவை என்று எடுத்துக் கொண்டாலும் அது சரியா தவறா என்று ஆராய வேண்டியது நம் கடமை.

உங்கள் கருத்துக்கு நன்றி ஓவியன்.

leomohan
07-04-2007, 01:04 PM
6. தொலைந்துவிட்டவை

பேனாவை தொலைத்துவிட்டு ஒரு நாள் வீட்டில் தேடிக் கொண்டிருந்தேன். மேசை மேலும் உள்ளும் டிவி ஸ்டாண்ட் சோபாவென்று நோண்டிக் கொண்டிருந்தேன். உள்ளே வந்தான் ஞானி.

என்ன தேடுகிறாய்?

பேனாவை தொலைத்துவிட்டேன். தேடுகிறேன்.

கற்பை தொலைத்துவிட்டனர் இன்றைய பெண்கள்
மனசாட்சியை தொலைத்துவிட்டனர் இன்றைய ஆண்கள்
சேதப்பற்றை தொலைத்துவிட்டனர் அரசியல்வாதிகள்
நேர்மையை தொலைத்துவிட்டனர் காவல்துறையினர்
நீதியை தொலைத்துவிட்டனர் நீதிபதிகள்
உண்மையை தொலைத்துவிட்டனர் வழக்கறிஞர்கள்
நாணயத்தை தொலைத்துவிட்டனர் அரசாங்க அதிகாரிகள்
நியாயத்தை தொலைத்துவிட்டனர் வியாபாரிகள்
பொறுமையை தொலைத்துவிட்டனர் மருத்துவதுறையினர்
மக்கள் அனைவரும் அன்பை தொலைத்துவிட்டனர்

அப்படியிருக்க நீ பேனாவை தொலைத்தது பெரிய விஷயமில்லை. பேனாவை தொலைத்தால் வேறு பேனா வாங்கிவிடலாம்.

நீ மேல் சொன்னவைகளை தொலைக்காமல் இரு. அது போதும். வருகிறேன்.

ஓவியா
07-04-2007, 01:20 PM
6. தொலைந்துவிட்டவை

கற்பை தொலைத்துவிட்டனர் இன்றைய பெண்கள்


நீ மேல் சொன்னவைகளை தொலைக்காமல் இரு. அது போதும். வருகிறேன்.

வணக்கம் மோகன்.

தங்கள் கூரும் கற்ப்பு பெண்களுக்கு மட்டும்தானா??? இது உங்க ஞானியின் கண்களுக்கு படவில்லையா இல்லை தெரியாதா???

leomohan
07-04-2007, 01:29 PM
வணக்கம் மோகன்.

தங்கள் கூரும் கற்ப்பு பெண்களுக்கு மட்டும்தானா??? இது உங்க ஞானியின் கண்களுக்கு படவில்லையா இல்லை தெரியாதா???

பெண்ணுக்கு எப்படி கற்ப்போ ஆணுக்கு மனசாட்சி. மேலும் பெண் தானாக நினைத்தாலும் கற்ப்பை இழக்க முடியாது. அங்கு மனசாட்சி இழந்த ஆணும் பாத்திரமாகிறான். அதையே இங்கு சொல்கிறான் ஞானி.

ஆதவா
07-04-2007, 01:40 PM
இரவு படிக்கிறேன் நண்பரே!

ஓவியா
07-04-2007, 01:47 PM
பெண்ணுக்கு எப்படி கற்ப்போ ஆணுக்கு மனசாட்சி. மேலும் பெண் தானாக நினைத்தாலும் கற்ப்பை இழக்க முடியாது. அங்கு மனசாட்சி இழந்த ஆணும் பாத்திரமாகிறான். அதையே இங்கு சொல்கிறான் ஞானி.

பெண்ணுக்கு கற்பு
ஆணுக்கு மனசாட்சி.


என்னமோ போங்க, உங்க ஞானியும் மானிடர்களை ஆண் பெண் என்று பிரித்துதான் பார்க்கிறார். :traurig001:

இளசு
07-04-2007, 09:29 PM
2. சோம்பேறித்தனம்

என்ன ஞானி. நம்ம வேலையை நாமே செய்யறது தப்பா?

- ரிமோட், கூட உன் மனைவியிடம் எடுத்து தர சொல்கிறாயே - .

6 முட்டை வாங்க கடைக்காரரை எடுத்து வர சொல்கிறாயே - .

ஓட்டல் சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு வரச் சொல்கிறாயே - .

தண்ணி குடிக்க கூட உன் மகனுக்கு குரல் கொடுக்கிறாயே
அதை நீயே செய்யலாம்.



ஞானி ஞானிதான்! நெத்தியடி!





விரைவாக விஷயம் கற்பவர்




இளசு:
மோகனுக்கு போன் போட்டு ஞானியை வரச்சொல்ல வேண்டும்
கற்று நடப்பவன் என ஞானி என்னைப்பற்றி சொல்லவேண்டும்..

(என் மகனிடம்) அந்த கார்ட்லெஸ்ஸை எடுத்துட்டு இங்க வாப்பா!

இளசு
07-04-2007, 09:33 PM
3. நரை


எதிர்வீட்டு பெண்மணி திடீரென்று உள்ளே நுழைந்தார். கட்டுக்கு அடங்காமல் வெளியே வந்து விழும் தொந்தியை மூச்சு பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டேன்.

விரைவாக சென்று தண்ணீர் குவளை எடுத்து வந்து அவர் முன் வைத்தேன்.

வயது. முப்பதததததததைந்து என்றேன்.

ஞானி: நான் இருக்கும் இடத்திலிருந்து நீ இருக்கும் இடம் ரொம்ப தூரம்

ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹா!

எல்லா 35+ ஆண்களும் உங்களுக்கு ரொம்ப பக்கம்தான் மோகன்!

இளசு
07-04-2007, 09:36 PM
4. வெளிநாட்டில் வேலை

நீ இருக்கும் இடமும் இருக்க விரும்பம் இடமும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இரண்டிலும் மாறாமல் இருப்பது நீ மட்டும் தான் - .

மாறாதது எனக்கு உள்ளிருக்கும் நான்.மட்டுமே!.
ஞானிக்கு நன்றி...

இளசு
07-04-2007, 09:38 PM
5. மனோவசியம்

போ, நீயே அதற்கு ஒரு வழி கண்டுபிடி.



மெய்ப்பொருள் காண்பதறிவு!

தேடி அடைவதுதான் நிலைக்கும்!

கட்டிய சோறு வழிப்பயணத்துக்கு எத்தனைநாள் தாங்கும்?

சபாஷ் ஞானி!

இளசு
07-04-2007, 10:06 PM
3. நரை

என்னங்க தலை நல்லா நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. போய் டை பண்ணிகிட்டு வாங்க என்று ஒரு நாள் மாலை நச்சரித்தாள் என் மனைவி.

அட டையெல்லாம் நான் பண்ணிக்க மாட்டேன். நான் இயற்கையா தான் இருப்பேன். நான் ஞானியோட சிஷ்யன். நாளைக்கு ஞானியாக போறவன். சே. போ என்றேன்.

.

மோகன்..

இதையொட்டி என் எண்ணங்கள் இங்கே
ஒரு வசனக்கவிதையாய் ---


பளிங்குத்தரை -என்
குளியலறை
முன்பெல்லாம் தெரியும்
முடி உதிர்ந்தால்..

சிகை திருத்தும் நிலையம்
கருப்பு அங்கி தோளில்
வெட்டி விழும் கேசம்
வெள்ளியாய் மின்னும்..

கோத்ரெஜ், கார்னியர் பக்கம் சாயாமல்
மனைவி தோளில் சாய்ந்தேன்..

'என் அப்பாவுக்கு ஐம்பதிலும்
இப்படி நரைக்கலியே
ஏன் எனக்கு மட்டும் இப்படி?'

''என் மாமா இளவயதில் இருந்தே பக்தர்..
என் புருஷன் இளவயதிலேயே பித்தர்?
பித்தத்தால் மொத்தமாய் இப்படி''
வாரினாள் அவள்!

பின்னொருநாளில்
என் மகள் அம்மாவிடம்-
''ரமீலா அப்பா முடி கருப்பு
நம்ம அப்பா மட்டும்..ஏம்மா?''

பதைத்தபடி கவனித்தேன் -

''அதுவாம்மா? அப்பாவுக்கு
அத்தனை அறிவு!''

வாஞ்சைச் சுனைகள்
வருட வெயிலில்
வற்றிப் போவதில்லை!

leomohan
08-04-2007, 05:32 AM
ஞானி ஞானிதான்! நெத்தியடி!




இளசு:
மோகனுக்கு போன் போட்டு ஞானியை வரச்சொல்ல வேண்டும்
கற்று நடப்பவன் என ஞானி என்னைப்பற்றி சொல்லவேண்டும்..

(என் மகனிடம்) அந்த கார்ட்லெஸ்ஸை எடுத்துட்டு இங்க வாப்பா!

ஹா ஹா.

leomohan
08-04-2007, 05:33 AM
ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹா!

எல்லா 35+ ஆண்களும் உங்களுக்கு ரொம்ப பக்கம்தான் மோகன்!

ஆம் ஆனால் ஞானியிடமிருந்து ரொம்ப தூரம் :sport-smiley-018:

leomohan
08-04-2007, 05:34 AM
மெய்ப்பொருள் காண்பதறிவு!

தேடி அடைவதுதான் நிலைக்கும்!

கட்டிய சோறு வழிப்பயணத்துக்கு எத்தனைநாள் தாங்கும்?

சபாஷ் ஞானி!

நன்றி இளசு

பரஞ்சோதி
08-04-2007, 05:36 AM
தங்கத்தை புடம் போட்டால் பொன் நகைகள் உருவாகும்.

மனிதன் தன்னையே புடம் போட்டால் ஞானி உருவாகிறார், இங்கே தான் மட்டும் ஞானியானால் போதாது என்று எல்லோரையும் ஞானியாக மாற்ற வந்திருக்கும் நல்லியதம் கொண்ட மோகனுக்கு என் நன்றிகள்.

நீங்க ஒரு தங்க ம(மோ)கன்.

leomohan
08-04-2007, 05:36 AM
''என் மாமா இளவயதில் இருந்தே பக்தர்..
என் புருஷன் இளவயதிலேயே பித்தர்?
பித்தத்தால் மொத்தமாய் இப்படி''

இளசு பஞ்ச்.

வாரினாள் அவள்!

பின்னொருநாளில்
என் மகள் அம்மாவிடம்-
''ரமீலா அப்பா முடி கருப்பு
நம்ம அப்பா மட்டும்..ஏம்மா?''

பதைத்தபடி கவனித்தேன் -

''அதுவாம்மா? அப்பாவுக்கு
அத்தனை அறிவு!''


இப்படியே சொல்லி எத்தனை நாள் மக்களை ஏமாற்றப் போகிறோமோ :music-smiley-012:

leomohan
08-04-2007, 05:38 AM
தங்கத்தை புடம் போட்டால் பொன் நகைகள் உருவாகும்.

மனிதன் தன்னையே புடம் போட்டால் ஞானி உருவாகிறார், இங்கே தான் மட்டும் ஞானியானால் போதாது என்று எல்லோரையும் ஞானியாக மாற்ற வந்திருக்கும் நல்லியதம் கொண்ட மோகனுக்கு என் நன்றிகள்.

நீங்க ஒரு தங்க ம(மோ)கன்.

நன்றி பரம்ஸ். இதில் வரும் பல விஷயங்களை மற்றவர்களை மாற்றுவதை விட என்னையே மாற்றிக்கொள்ளி விரும்பி எழுதுபவையே. ஒரு முயற்சி தானே. உணர்ந்துவிட்டால் உருவாவது சுலபம் அல்லவா.

ஆதவா
08-04-2007, 06:19 AM
வெளிநாட்டு வேலை..

நீ இருக்கும் இடமும் இருக்க விரும்பம் இடமும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இரண்டிலும் மாறாமல் இருப்பது நீ மட்டும் தான்

அருமையான ஞானம்..... வெளிநாட்டு வேலையா ? அல்லது உள்நாட்டு வேலையா? என்ற இரு அர்த்தக் கேள்விக்கு சரியான பொதுப்படையான பதில்.. நன்று...


மனோவசியம்

நீயே அதற்கு ஒரு வழி கண்டுபிடி

ஆமாம்.... எல்லாருமே ஏதாவது ஒருவகையில் நோண்டி கண்டிபிடிக்கத்தான் வேண்டும்... முடியாவிடில் கேட்பதில் தவறில்லை.. ஆனால் முடிந்தவரை நாம் நோண்டவேண்டும்.. அருமையான பாயிண்ட்... ஞானியின் ஞானச் சிதறல் பொறுக்க நானுண்டு..
---------------------------------------
ஓவியன் இன்னும் சிந்தித்துப்பாருங்களேன்...
-----------------------------------
தொலைந்துவிட்டவை

நல்ல கருத்துக்கள்... ஏதாவது ஒன்றை நாம் தொலைத்துவிடுகிறோம்.. ஆனால் பேனா ஒன்றும் முக்கியமில்லைதான்.. பிரமாதம்
----------------------------------------
ஓவியா அவர்களே!!... ஞானி என்றாலே பொதுவாக கண் கொண்டு பார்ப்பதுதான். நீங்கள் இப்படி கேட்டீர்களென்றால் நாங்கள் இன்னொரு வகையில் கேட்போம்?

ஆண்கள் மட்டுந்தானா மனசாட்சியைத் தொலைத்துவிட்டார்கள்?

இங்கே ஒவ்வொருவரும் ஒரு பண்பைத் தொலைத்துவிட்டார்கள்.. அதில் ஒன்றுதான் கற்பு..
பொதுவாக இரண்டு பாலருக்கும் பொருந்தும் கற்பு என்ற பண்பு. மனசாட்சியைவிட கற்பு கொஞ்சம் குறைவென்றுதான் நான் நினைக்கிறேன்... கற்பு அழித்தவன் குற்றவாளி. மனசாட்சியைக் கொன்றவன் மகா குற்றவாளி... இந்த இடத்தில் உயர்வாகத்தான் இருக்கிறது.
அதேசமயம் நீங்கள் சொன்னதுபோல போடவேண்டுமென்றால் மேற்கண்ட எல்லா பண்புகளையும் எல்லாரும் தொலைத்துவிட்டார்கள் என்று ஒரே வரியில் போடவேண்டியதுதான்....

புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

-----------------------------
இளசு அண்ணா மிக அருமையாக கவிதை படித்திருக்கிறார்.... கவிதைச் சுவை எங்குமே குறையவில்லை.. அத்துணை அழகு... ம்ம்ம்ம்ம் என்ன செய்ய? ஒரு மலையினுள் ஏற முயல்கிறேன்....
---------------------------------------------------

leomohan
08-04-2007, 10:01 AM
கருத்துக்கு நன்றி ஆதவா.

ஓவியா
08-04-2007, 01:35 PM
----------------------------------------
ஓவியா அவர்களே!!...

இங்கே ஒவ்வொருவரும் ஒரு பண்பைத் தொலைத்துவிட்டார்கள்.. அதில் ஒன்றுதான் கற்பு..
பொதுவாக இரண்டு பாலருக்கும் பொருந்தும் கற்பு என்ற பண்பு. மனசாட்சியைவிட கற்பு கொஞ்சம் குறைவென்றுதான் நான் நினைக்கிறேன்... கற்பு அழித்தவன் குற்றவாளி. மனசாட்சியைக் கொன்றவன் மகா குற்றவாளி... இந்த இடத்தில் உயர்வாகத்தான் இருக்கிறது.
அதேசமயம் நீங்கள் சொன்னதுபோல போடவேண்டுமென்றால் மேற்கண்ட எல்லா பண்புகளையும் எல்லாரும் தொலைத்துவிட்டார்கள் என்று ஒரே வரியில் போடவேண்டியதுதான்....புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...
---------------------------------------------------

சின்னா வாத்தியாரே,
என்னமா விமர்சனம் கொடுத்து இருக்கீங்க!!!! தூள்.
என் கேள்விக்கு அருமையான விமர்சனம்.
இப்ப நல்லாவே புரியுது, மிக்க நன்றி.

நாந்தான் மண்டு,, பரிட்சையில் முட்டை வாங்கும் கேஸ்,
இதெல்லாம் எங்கே புரியும்.
மோதிர கையால் குட்டு படுவதும் சந்தோஷம்தான். குட்டுங்க குட்டுங்க நல்லாவே குட்டுங்க :sport-smiley-018:

leomohan
18-04-2007, 04:00 AM
7. இருந்த இடம் நல்ல இடம்

கிழிசல் சட்டையுடன் பல நாள் வளர்த்த தாடியுடன் ஒருவனை கண்டேன். கிட்டத்தட்ட ஞானியை போல் இருந்தான். என்ன ஏதாவது டபுள் ரோலா என்று ஓடிச் சென்று பார்த்தேன்.

நீ ஞானியா.....

ஆம் ஞானி தான் என்றான்.

என்ன விளையாடுகிறாயா. ஏன் இந்த வேஷம் என்று அவனை கேட்கும் முன்பே உணர்ந்துவிட்டேன் அவன் நம்ம ஞானி இல்லை என்று.

அவனை பேசி சமாதானப்படுத்தி முடி திருத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கட்டிங் ஷேவிங் செய்ய சொல்ல அருகிலிருந்து துணி கடையில் கால் சட்டை மேல் சட்டை எல்லாம் வாங்கி கொடுத்து பிறகு அருகில் இருந்த ஆனந்த பவனில் முழு சாப்பாடு வாங்கி கொடுத்தேன்.

கை கால் நன்றாகவே இருந்தது அவனுக்கு. பேசுவதற்கு பதில் கொடுத்ததால் காதும் வாயும் நன்றாகவே இருக்கிறது என்பதையும் உணர்ந்தேன். வயது 35 இருக்கும் போல.

நீ ஏன் இப்படி திரிகிறாய் என்று கேட்டேன்.

மௌனமாக இருந்தான். சரி அவன் வாழ்வில் என்ன பிரச்சனையோ என்று தள்ளிவிட்டு பணம் கொடுத்தால் ஏதாவது செய்து பிழைத்துக் கொள்வாயா என்று கேட்டேன்.

அவன் பலமாக தலையாட்டினான். அருகிலிருந்து தானியங்கி வங்கிக்கு சென்று 5000 ரூபாய் எடுத்து அவனிடம் கொடுத்தேன். இனிமேலும் பிச்சைக்காரனாய் திரியாதே. நல்லபடியாக இரு என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றேன். ஒரு பெரிய திருப்தி மனதில் நிலவியது.

சில நாட்களுக்கு பிறகு மீண்டு அவனை வேறொரு இடத்தில் பார்த்தேன். மீண்டு வளர்ந்துவிட்ட தாடி. பழைய கிழிசல் சட்டையுடன் சிக்னலில் உட்கார்ந்திருந்தான். அருகில் இருந்த பையில் நான் வாங்கி தந்த கால் சட்டை தன் காலை நீட்டியிருந்தது கண்ணுக்கு பட்டது. பையில் நான் கொடுத்த பணத்தின் வீக்கம் தெரிந்தது. எனக்கு வந்தது கோபம். ஓடிச் சென்று ஒரு அறை விட்டிருப்பேன். ஆனால் வண்டியை நிறுத்தி இறங்கி போனால் பின்னால் உள்ளவர்கள் எனக்கு அறை விட்டிருப்பார்கள். நேராக ஞானியிடம் சென்றேன்.

நடந்ததை கூறினேன். ஏன் ஞானி இப்படி செய்கிறான் அவன் என்று வெறுத்துப் போய் கேட்டேன்.

முட்டாள் சிலவற்றை சாக்கடையி்லிருந்து குளிப்பாட்டி அலங்கரித்து வீட்டின் நடுவில் வைத்தாலும் அவை மீண்டும் சாக்கடைக்கு போகும் என்று கேள்விப்பட்டதில்லையா.

கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஏன் என்று புரியவில்லையே

மின்வண்டிகள் கண்டதுண்டா. சிலவற்றிற்கு முன்னால் இன்ஜின் இருக்கும். அதுவே பின்னுள்ள பெட்டிகளை இட்டு செல்லும். There are men who are self-motivated. அவர்கள் சுயமாக சிந்தித்து செயல்படும் திறன் கூடியவர்கள். தங்களுக்கு தாமாகவே உந்து சக்தியாக விளங்குபவர்கள்.

சில நேரம் இன்ஜின் பின்னாலிருந்து பெட்டிகளை தள்ளுவதை பார்த்திருப்பாய். These are the men who need motivation from outside, but they will deliver. இவர்கள் பிறர் பேச்சை கேட்டாலும் அது சரிவரி செய்து வெற்றி பெறுவர்.

ஆனால் நீ உதவினது போல் உள்ள சிலரோ சுலபமாக ஒன்றும் செய்யாமலேயே பணம் வரும்போது வாழ்கை ஓடும் போது நாம் எதற்காக என்ன செய்ய வேண்டும் என்று இருப்பவர்கள். இவர்களுக்கு பிச்சை எடுக்க ஊனம் வேண்டும் என்றில்லை. ஏனென்றால் இவர்களுடைய ஊனம் இவர்கள் மனதில். இவர்கள் இருந்தும் இறந்துவிட்ட மனிதர்கள்.

அப்ப நான் செய்தது வீணாக போனதா என்றேன் வருத்தத்துடன்.

முட்டாள் கைகளை மேலே தூக்கி உதவிக்கு ஏங்கும் பலருக்கு உன் கை கொடு. அவர்கள் உன் கை பிடித்து வாழ்வில் முன்னுக்கு வருவார்கள். அதைவிடுத்து புதைமணலில் உள்ளே போகும் இவன் போல் ஒருவனுக்கு உன் கையை கொடுத்தால் அவன் உன்னையும் உள்ளே இழுத்து சென்றுவிடுவான்.

ஓவியன்
18-04-2007, 04:08 AM
முட்டாள் கைகளை மேலே தூக்கி உதவிக்கு ஏங்கும் பலருக்கு உன் கை கொடு. அவர்கள் உன் கை பிடித்து வாழ்வில் முன்னுக்கு வருவார்கள். அதைவிடுத்து புதைமணலில் உள்ளே போகும் இவன் போல் ஒருவனுக்கு உன் கையை கொடுத்தால் அவன் உன்னையும் உள்ளே இழுத்து சென்றுவிடுவான்.

உண்மைதான் மோகன்!

நன்றிகள்

crisho
18-04-2007, 04:27 AM
காலத்துக்கு வேண்டிய படிப்பினை தான்..... நன்றி மோகன்

மனோஜ்
18-04-2007, 09:01 AM
உண்மையில் ஊனம் உற்றோருக்கு உதவுதல் நல்லது

leomohan
27-04-2007, 08:06 PM
நன்றி கிஷோர் ஓவியன் மனோஜ்.

crisho
28-04-2007, 03:43 AM
என்ன ஞானி இப்போ அடிக்கடி மன்றம் வரமாட்டேன்றாரு?? பிஸியா இருக்காரோ??

சுட்டிபையன்
28-04-2007, 03:56 AM
மோகன் அண்ணா தற்போதுதான் இந்த திரியை படித்தேன், வாழ்க்கையின் படிப்பினைகளை அழகான எடுத்துக்காட்டுகளோடு கதைகளாக சொல்லி இருக்கிறீர்கள், வாழ்க ஞானி...... வளர்க மோகன் அண்ணாவின் பணி

leomohan
28-04-2007, 04:36 AM
என்ன ஞானி இப்போ அடிக்கடி மன்றம் வரமாட்டேன்றாரு?? பிஸியா இருக்காரோ??

ரொம்ப இல்லை. கொஞ்சம்

leomohan
28-04-2007, 04:37 AM
மோகன் அண்ணா தற்போதுதான் இந்த திரியை படித்தேன், வாழ்க்கையின் படிப்பினைகளை அழகான எடுத்துக்காட்டுகளோடு கதைகளாக சொல்லி இருக்கிறீர்கள், வாழ்க ஞானி...... வளர்க மோகன் அண்ணாவின் பணி

நன்றி நண்பரே.

ஓவியா
28-04-2007, 02:41 PM
7. இருந்த இடம் நல்ல இடம்

அப்ப நான் செய்தது வீணாக போனதா என்றேன் வருத்தத்துடன்.

முட்டாள் கைகளை மேலே தூக்கி உதவிக்கு ஏங்கும் பலருக்கு உன் கை கொடு. அவர்கள் உன் கை பிடித்து வாழ்வில் முன்னுக்கு வருவார்கள். அதைவிடுத்து புதைமணலில் உள்ளே போகும் இவன் போல் ஒருவனுக்கு உன் கையை கொடுத்தால் அவன் உன்னையும் உள்ளே இழுத்து சென்றுவிடுவான்.

மோகன், பதிவு அருமை.

நல்லா யோசிக்கிறீர்கள்.

வாழ்கைக்கு தேவையான விசயாங்களை நன்கு அலசி காயப்போடுகிறீர்கள்.....பலே.

பாராட்டுகிறேன்.



பின் குறிப்பு:
என்னா சார் நீங்க, வர வர உங்க பதிவுகள் குறைந்துக் கொண்டே போகின்றன.
மோகன் டாவ்ன் டாவ்ன் இதை வண்மையாக கண்டிக்கிறேன். :violent-smiley-010:
ஆட்டோ அனுபுவதர்க்குள் அடுத்த படிவை கொடுங்கள் சார். இப்படியெலாம் மிரட்ட வைக்கதீங்க,
அப்புரம் நாங்க கோவத்தின் உச்சிக்கு சென்று பிலிஸ் பிலிஸ் என்று கெஞ்ச ஆரம்பித்து விடுவோம்.

leomohan
28-04-2007, 03:41 PM
மோகன், பதிவு அருமை.

நல்லா யோசிக்கிறீர்கள்.

வாழ்கைக்கு தேவையான விசயாங்களை நன்கு அலசி காயப்போடுகிறீர்கள்.....பலே.

பாராட்டுகிறேன்.



பின் குறிப்பு:
என்னா சார் நீங்க, வர வர உங்க பதிவுகள் குறைந்துக் கொண்டே போகின்றன.
மோகன் டாவ்ன் டாவ்ன் இதை வண்மையாக கண்டிக்கிறேன். :violent-smiley-010:
ஆட்டோ அனுபுவதர்க்குள் அடுத்த படிவை கொடுங்கள் சார். இப்படியெலாம் மிரட்ட வைக்கதீங்க,
அப்புரம் நாங்க கோவத்தின் உச்சிக்கு சென்று பிலிஸ் பிலிஸ் என்று கெஞ்ச ஆரம்பித்து விடுவோம்.

தினமும் மன்றம் வருகிறேன். எல்லா பதிவுகளையும் பார்வையிடுகிறேன். பின்னூட்டமும் இடுகிறேன். ஆனால் புதிதாக எதுவும் எழுதவில்லை. விரைவில் தருகிறேன். நன்றி ஓவியா.